எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, June 10, 2007

நம்பினால் நம்புங்க! உங்க இஷ்டம்!

முதலில் கொஞ்சம் மொக்கை போடலாமான்னு தான் இருந்தேன். ஆனால் ரொம்ப நாளாக வெயிட்டிங்கில் இருக்கும் "பம்பாய் புரட்சி"யை முடிச்சுடலாம்னு திடீர்னு ஒரு நல்ல எண்ணம் வந்துடுச்சு. அதான் கிறுக்குத் தனம் பண்ணாமல் ஆரம்பிக்கலாம்னு ஆரம்பிச்சுட்டேன்,. முதலில் நாகை சிவா சொன்ன புகார்களுக்கு மறுப்பில் ஆரம்பிக்கலாம். பம்பாயில் இருந்த "ராயல் நேவி"யில் வீரர்கள் புரட்சிக்கு ஆரம்பித்ததும் அது மெதுவாக மூன்று படைகளுக்கும் பரவ ஆரம்பித்துப் பெரிய புரட்சியாக மாறவேண்டியதைத் தடுத்தவர் காந்தி தான். அவருக்கு பிரிட்டிஷாரிடம் இருந்த செல்வாக்கை அவர் முடிந்தால் அப்போதே பிரயோகித்து நாட்டுக்குச் சுதந்திரம் வாங்கி இருக்க முடியும். பாகிஸ்தான் பிரிவினையை ஓரளவு தடுத்திருக்கலாமோ என்னமோ! அதற்குப் பின்னர் வருகிறேன். ஆனால் காந்தி பலமுறை சிறைவாசம் செய்திருந்தாலும் நாடு கடத்தப் படவில்லை.

மாறாக உண்மையாக உழைத்த பலர் நாடு கடத்தப் பட்டனர். காந்தி அவர்களுக்காகக் கூட வாதாடியது இல்லை. இதுவும் ஒரு கசப்பான உண்மைதான். சுபாஷ் பலமுறை நாடு கடத்தப் பட்டார். அவர் காங்கிரஸில் தானே இருந்தார்! பர்மாவில் மாண்டலே சிறையில் பலமுறையும், நாடு விட்டு நாடும் கடத்தப் பட்டார். அம்மாதிரியான ஒரு சமயம் தானே காங்கிரஸ் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப் பட்டார். அப்போதும் காந்தி அவரின் விடுதலைக்காக ஒரு வார்த்தை கூட பிரிட்டிஷாரிடம் பேசவே இல்லை. இதுவும் ஒரு கசப்பான உண்மைதான். அப்படிப் பட்டவர் இந்த வீரர்களுக்காக ஏன் பேசுவார்? இது எதிர்பார்க்கக கூடியது தான். இந்த வீரர்களுக்கு ஆதரவு திரட்ட முயன்ற காங்கிரஸ் தலைவியான "அருணா அசஃப் அலி" காந்தியால் விமரிசனம் செய்யப் பட்டார். "இந்த வெட்டி வேலையை விட்டு விட்டு "இந்து, முஸ்லீம்" ஒற்றுமைக்குப் பாடுபடலாம்" எனக் கடுமையாக அவரிடம் காந்தி சொன்னார்.

"நாகைசிவா சொல்கிறார்: இந்த சிப்பாய்கள், சிப்பாய்கள் என்று சொல்கிறீர்களே, இவர்கள் எல்லாம் ஆங்கிலேயருக்குச் சேவகம் பார்த்துக் கொண்டு இருந்தவர்கள் தானே! ஏதோ ஒரு கால கட்டத்தில் தான் அவர்களுக்குச் சுய மரியாதை ஏற்பட்டு இந்தப் போராட்டம் நடந்திருக்கு!"

ஆம், உண்மைதான், அந்த சிப்பாய்கள் ஆங்கிலேயரிடம் வேலை பார்த்தார்களே தவிர, ஆங்கிலேய நாட்டிற்காக அல்ல! நம் நாட்டிற்காகத் தான் உழைத்தார்கள். நம் நாட்டு வீரர்கள் அவர்கள். சுபாஷ் அவர்களைத் திரட்டிச் சேர்த்து நம் பக்கம் திருப்பிப் போரடலாம் என்ற போது தான் காந்தி நடுவிலே குறுக்கிட்டார். சிப்பாய்கள் நம் பக்கம் இருந்தால் நமக்கு வெற்றி நிச்சயம் என்று சொன்னார் அவர். அதற்காகவும் பாடுபட்டார். ஆனால் காந்தியோ "அஹிம்சை" என்ற பெயரிலே தான் சுதந்திரம் வர வேண்டும் என விரும்பிபார். ஆனால் சுதந்திரம் அப்படியா வந்தது? அதனால் இம்சைப்பட்டவர்கள் எத்தனை பேர்? பொதுமக்கள் மட்டுமில்லாமல் தலைவர்களும் உயிர்த்தியாகம் செய்ய வேண்டி இருந்திருக்கிறது. தன்னுடைய "உண்ணாவிரதம்" என்னும் "எமோஷனல் ப்ளாக் மெயில்"னால் காந்தி அனைவரையும் கட்டிப் போட்டார். அது அவரின் சாமர்த்தியம் தானே தவிர அஹிம்சை வழி என்று சொல்ல முடியவில்லை. அவர்கள் தங்களை வழிநடத்த வேண்டிய ஒரு தலைமைக்குக் காத்திருந்தனர். அந்தத் தலைமை போஸ்தான் என்ற கசப்பான உண்மையைக் காந்தி புரிந்து வைத்திருந்து அதைத் தடுத்தார் என்றே சொல்ல வேண்டும்.

"சிவா சொல்கிறார்: அவர்கள் மனதில் நேதாஜி இருந்திருந்தால் (கண்டிப்பாக இருந்திருப்பார், ஆனால் காந்திக்கு அடுத்தபடி தான்) வேலையை விட்டு விலகி அவர் பின் சேர்ந்திருக்கலாம்."

வீரர்கள் தயாராக இல்லைனு சொல்லவே முடியாது. நேதாஜி எதிர்பார்த்ததும் அதுதான். ஆனால் அதற்குள் தான் அவரின் முடிவு என்று சொல்லப்படும் நிகழ்ச்சி நேர்ந்து விட்டது. அவரின் அடுத்த முயற்சி அதுவாகவே இருந்திருக்கலாம், ரஷ்யாவின் உதவியுடன் செய்ய நினைத்திருக்கலாம். ஜப்பான் உதவும் என நினைத்திருக்கலாம். ஆனால் பிரிட்டிஷாரின் ராஜ தந்திரம், அதுவும் காந்தியை அவர்கள் உபயோகித்த விதம் அலாதியானது. அவருக்கு மிகப் பெரிய மரியாதை கொடுத்து வந்ததின் மூலம் அவர் சொல்லுவதை மற்றத் தலைவர்கள் கட்டாயம் கேட்டே ஆக வேண்டும் என்ற நிலையை மிகச் சாமர்த்தியமாக உருவாக்கினார்கள். அவர்கள் நியாயமானவர்கள் என்றால் ஏன் ஒவ்வொரு முறையும் தலை மறைவாக இருந்த போஸைக் கொல்ல முயல வேண்டும்? போஸ் நாடு கடத்தப் பட்டு ஐரோப்பாவில் சுற்றிக் கொண்டிருந்த சமயம் கூட ப்ரிட்டிஷாரின் உளவாளிகள் அவரைக் கொல்ல முயன்றதும் ஹிட்லரின் உதவியுடன் அவர் தப்பியதும் சரித்திரம் மறைத்த உண்மை! இப்போது சமீபத்தில் நடந்த முகர்ஜி கமிஷனிடம் கூட அதற்கான ஆதாரங்கள் இருக்கின்றனவே! போஸின் அரசியல் வாழ்வை அவர்கள் விரும்பவில்லை. அவர்களின் கட்டுப்பாட்டுக்குள் இந்தியா இருக்கவேண்டும் என்றே நினைத்தார்கள். போஸ் இருந்தால், இந்தியா காமன்வெல்த்தில் கூடச் சேர்ந்திருக்காது என்று என் கருத்து!

15 comments:

  1. //அப்போதும் காந்தி அவரின் விடுதலைக்காக ஒரு வார்த்தை கூட பிரிட்டிஷாரிடம் பேசவே இல்லை. //

    ஏற்கனவே நான் சொன்னது மாதிரி மெல்ல மெல்ல காந்தி இன்னும் தனது நிலையை என் மனதில் இருந்து இழக்கிறார் மேடம்..

    ReplyDelete
  2. நீங்க சொன்னதுக்கெல்லாம் திரும்ப கேள்வி கேட்டாங்கன்னு இப்படி எல்லாம் தலைப்பு வைக்கலாமா மேடம்..


    பக்கத்துல இருக்க நாட்காட்டி நல்லாயிருக்குங்க மேடம்.. தெரியபடுத்தினதுக்கு நன்றி

    ReplyDelete
  3. மேடம் இன்னிக்கு உங்க வலை வீட்டுக்கு நான்தான் FIRST.

    காந்தியை பற்றி சொன்னது என்னை பொருத்தவரை நூத்துக்கு நூறு உண்மை.But for him succumbing to the emotional blackmail of Jinna, படேலும் நேருவும் பாக்கிஸ்தானை பிரிக்க கூட ஒத்துகொண்டிருக்க மாட்டர்கள்

    ReplyDelete
  4. வாங்க கார்த்திக், பலநாட்கள் கழிச்சு நினைவு வச்சுட்டு வந்திருக்கீங்க! :P நான் எழுதாம விட்டது இன்னும் எவ்வளவோ உள்ளது. அப்புறம் அந்த நாட்காட்டி உங்க வலைப்பக்கத்திலும் போடணும்னா சொல்லுங்க, தமிழ்ப்பயணி கிட்டே தெரிவிக்கிறேன், அவர் கொடுக்கும் யுஆரெல்லில் இருந்து நீங்களே போட்டுக்கலாம்.

    @மணிப்பயல் உங்களுக்கு முன்னாலேயே கார்த்திக் வந்துட்டார். ஜின்னா எமோஷனல் ப்ளாக் மெயில் செய்யலை. அவரும் தன்னுடைய அதிகாரத்தை நிலை நிறுத்திக்கணும்னா தனி நாடுதான் வேணும், இங்கே காந்தியின் முழு சப்போர்ட் நேருவுக்கு இருக்கிறதாலே ஆட்சியில் ஏதோ ஒரு மந்திரி பதவி தான் கிடைக்கும் என்பதை முழுதும் உணர்ந்து இருந்தார். அதைத் தவிரவும் அவர் தனிப்பட்ட சில காரணங்களாலும் தனிநாடு கேட்டுப் பிரிந்து போனார். ஆனால் இன்னும் சில மாதங்கள் சுதந்திரத்தைத் தள்ளிப் போட்டிருந்தால் ஜின்னா இருந்திருக்க மாட்டார். அவர் கட்சிக்குக் கொஞ்சம் வலு குறைந்திருக்கும் என்பதும் உண்மை!

    ReplyDelete
  5. இல்லீங்க நான் கமெண்ட் எழுதும்போது யாருமே இல்லை.அப்புறம் எப்பிடி? சரி அதுனால என்ன?

    ReplyDelete
  6. ரொம்பவே சுலபமான விஷயம் மணிப்பயல். நான் கமென்ட் மாடரேஷன் செய்திருப்பதால் கமென்ட் எல்லாம் நான் பார்த்து வெளியிட்டால் தான் நீங்கள் பார்க்க முடியும். நீங்கள் வந்தப்போ கார்த்திக் கொடுத்த கமென்ட் அதுக்கு முன்னாலேயே வந்திருக்கு. அவ்வளவுதான் விஷயம். உங்க பதிவிலேயும் கமென்ட் மாடரேஷன் செய்துடுங்க.

    ReplyDelete
  7. காந்தியை பற்றி கூறும் எந்த ஒரு வார்த்தைக்கும் நான் மறுப்பு கூற போவதில்லை. ஏற்கனவே தெரிந்த விசயம் தான்.....


    //ஆம், உண்மைதான், அந்த சிப்பாய்கள் ஆங்கிலேயரிடம் வேலை பார்த்தார்களே தவிர, ஆங்கிலேய நாட்டிற்காக அல்ல!//

    ஆங்கிலேய நாட்டுக்கு அல்ல. ஆங்கிலேயர்களுக்கு. நம் நாட்டை ஆண்ட ஆங்கிலேயர்களுக்கு.... இங்கு இருந்து செல்வங்கள் அனைத்தையும் ஆங்கிலேய நாட்டிற்கு அனுப்பும் ஆங்கிலேயர்களுக்கு... அவற்றை எதிர்க்கும் இந்தியர்களை அடக்கும் இந்தியர்களாக தானே வேலை பாத்தார்கள்?

    ReplyDelete
  8. காந்தியின் கோட்பாடு ரொம்ப சிம்பிள்... அஹிம்சை... இது ஆங்கிலேயர்களுக்கு ரொம்ப வசதியா போச்சு... என்ன செய்தாலும் பெரிசா ஏதும் நடக்காது என்ற தைரியம்.

    ஆனால் சுபாஷ், பகத்சிங் போன்றோர்களிடம் அது நடக்காது அல்லவா. என் மக்கள் மீது கை வைத்தால் வைத்தக் கை எடுப்பேன் என சீறியவர்கள் அவர்கள்...

    இந்த சமயத்தில் தான் ஆங்கிலேயர்களின் பிரித்தாளும் சூழ்ச்சி வென்றது. பலி ஆடு ஆனார்கள் நம் அரசியல் தலைவர்கள். அதற்கு காந்தியும் மவனமான உடந்தை. ஒன்றை எதிர்க்காமல் அமைதியாக இருந்தால் அதற்கு பேர் உடந்தை தானே....

    ReplyDelete
  9. I've heard about this before......can you tell me from which source you got this information(not that I dont believe you as u mentioned in your title)

    ReplyDelete
  10. நான் பேச நினைப்பதேல்லாம் புலி பேசிட்டு போயிடுச்சு. :p

    என்ன பாட்டி எல்லோரும் சவுக்கியமா?

    ReplyDelete
  11. புலி, ஒத்துக்க்கிறதைத் தவிர வேறே வழியே இல்லை. உங்களுக்கு இவ்வளவு நல்லாத் தெரிஞ்சு இருக்கிறது பத்தி ரொம்பவே சந்தோஷமா இருக்கு.

    @ஹாட்காட், ஏற்கெனவே சொன்ன மாதிரி நான் படித்த புத்தகங்கள், எங்களுக்குச் சரித்திரம் போதித்த ஆசிரியர், இப்படிப் பலர் காரணம். என் அம்மாவோட சித்தப்பா ஒரு சுதந்திரப் போராட்ட வீரார். அவன் மனம் நொந்துப் பல விஷயங்களை எங்களிடம் பகிர்ந்து கொண்டிருக்கிறார். புரட்சி பற்றிய சரியான தேதிகளுக்கு கூகிளாண்டவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்கிறேன். லட்சுமி என்றவர் குறிப்பிட்ட மாதிரி திரு கி.ராஜநாராயணன் தன்னுடைய "கோபல்ல கிராமம்" புத்தகத்தில் இந்த பம்பாய் ராயல் நேவியின் புரட்சியைப் பற்றி எழுதி உள்ளார். புத்தகம் கிடைத்தால் படியுங்கள். மேலும் திரு நரசையாவும் எழுதி இருக்கிறார். நான் முதலில் நரசையா மூலமும் அப்புறம் சில ஆங்கிலப் புத்தகங்கள் மூலமும் அறிந்தேன். தமிழில் இப்போது புதிதாய் ஸ்டாலின் குணசேகரன் எழுதி உள்ளார்.

    ReplyDelete
  12. வேதா, நான் குறிப்பிட்ட புத்தகங்களை முடிந்தால் படித்துப் பாருங்கள். பல உண்மைகள் புரியும். அதுவும் நவகாளி யாத்திரை பற்றிக் கட்டாயம் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டும்.
    @ஆப்பு, என்ன சும்மா இருக்கேன்னு நினைச்சீங்களா? இதுக்கு அர்த்தம் பெரிய அளவில் ஆப்பு தயாரா இருக்குன்னு புரிஞ்சுக்குங்க! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் கண்ணன் குறிப்பிட்ட மாதிரி பதில் கொடுக்கத் தெரியாமல் பேசாமல் போகலை. அப்போ நேரம் இல்லை. இனிமேல் இருக்கு ஆப்பு!

    ReplyDelete
  13. Thanks Geetha Madam, I'll surely try to get those books.....

    ReplyDelete
  14. சுவாரஸ்யம்.....

    ReplyDelete
  15. மிக அருமையான பதிவு.
    கோபல்ல புரம் பதிவுகள் இங்கே என்னிடம் இருக்கின்றன.
    மீண்டும் படிக்கிறேன்.
    அருமையாக எழுதுகிறீர்கள் கீதா. எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மை.

    இன்று என்ன வெல்லாமோ பேசி
    எதேதோ நடக்கிறது.
    உண்மையாகப் போராட்டம் செய்து வருந்தினவர்களைப்
    பற்றி யாரும் நினைக்கக் காணோம்.

    நன்றி மா.

    ReplyDelete