எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, July 22, 2007

நிச்சயமாய் இது "மொக்கை" இல்லை!

ரொம்ப அதிசயமாய் இன்னிக்கு ப்ளாக்கர் தலைப்புக் கொடுத்ததுமே ஏத்துக்கிட்டது. இந்தத் தலைப்புக் கொடுக்கிறது ஒரு கஷ்டமா அபி அப்பா, முத்துலட்சுமி, நுனிப்புல் உஷா போன்ற திறமைசாலிகளுக்கும் இருக்குங்கிறதிலே ஒரு அல்ப சந்தோஷம். அப்புறம் நான் ஒரு அறிவு ஜீவி! ஹிஹிஹி, ஆச்சரியமே வேண்டாம்! இந்த "ஜீவி"னு ஒரு பெண் எழுத்தாளர் சமீப காலங்களில் பதிவு எழுதவும் ஆரம்பிச்சு இருக்காங்க! அவங்க தப்பா நினைக்கப் போறாங்க! அந்த "ஜீவி" இல்லை, நான் அறிறிறிவு ஜீஈஈவி!"கமல்ஹாசன் படம் பார்க்கிறவங்களுக்குக் கட்டாயமாய்த் தெரியும் ஒரு சீரியஸ் படம் கொடுத்தால் அடுத்து ஒரு சிரிப்புப் படம்கிற பேரிலே ஒரு மொக்கைப் படம் கொடுப்பார்! அந்தமாதிரியான அறிவு ஜீவி நான்ன்னு சொல்றேன்! இப்போப் புரியுதா? ஆனால் இந்தப் பதிவு கொஞ்சம் ஒரு மாதிரியான அலசல்!
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

"பொன்னியின் செல்வன்" மறுபடியும் வரேன். அதிலே வரும் காதலர்களின் நிலையைக் குறித்து ஆராய்ச்சி செய்த "பாட்டியன்" (என்னங்க பேரு? ?) என்னும் பதிவாளர் எழுதி இருப்பதைப் படிச்சதும் ரொம்ப நாளாக எழுதவேண்டும் என்று தோன்றியதை எழுத எண்ணியதன் விளைவு தான் இந்தப் பதிவு!

பொன்னியின் செல்வனில் கதாநாயகன் ஆன வந்தியத் தேவனின் பாடே ரொம்பக் கஷ்டம், இதிலே காதல் வேறே வந்தாச்சு! அதுவும் யாரிடம் நாட்டின் இளவரசியிடம், இளவரசி அவனை விடச் சோழநாட்டைக் காதலிப்பதால் நாட்டை விட்டுப் பிரிய மனமில்லாமல் வந்தியத் தேவனை மணந்து கொள்கிறாளோ என்னமோ? இன்னொரு போட்டி பார்த்திபேந்திர பல்லவன், அவன் ஒரு நாளும் சோழநாட்டில் வந்திருக்கச் சம்மதித்து இருக்க மாட்டான். அதனால் கூட வந்தியத் தேவனை மணக்க இளைய பிராட்டி சம்மதிக்கிறாளோ என்ற எண்ணம் எழுவதைத் தவிர்க்க முடியலை. மணிமேகலையோ வந்தியத் தேவனைக் காணமலேயே காதல் கொள்கிறாள். அவனுடைய அகட, விகட சாமர்த்தியங்களில் பெருமையும் கொண்டு அவன் நினைவாகவே உயிரும் துறக்கிறாள். இது உயர்ந்த காதல் என்றாலும் ஒருதலைக் காதல்தான். ஒத்துக்கிறேன். அது போலவே நந்தினியிடம் ஆதித்த கரிகாலன் காதலும், பூங்குழலி, இளவரசரைக் காதலிப்பதும். ஆதித்த கரிகாலனும் நந்தினியின் அழகில் மயங்கினவனாகவே தான் தோன்றுகிறது. இருந்தாலும் அவளை இழக்கிறான், நாட்டுக்காக. நாடு தான் முக்கியம் என்றும் எதிரியை விடக் கூடாது என்றும் அரசகுலதர்மத்தைக் கைவிடாமல் வீரபாண்டியனைக் கொன்று விடுகிறான். பின்னர் அதற்காக வருந்துகிறான், உயிரோடு இருக்கும் வரையில்!


ஒரு கட்டத்தில் இளவரசன் ஆன பொன்னியின் செல்வன் பூங்குழலியைக் காதலிப்பதாகவே நமக்கும் தோன்றுமாறு, இரண்டாம் பாகம், மூன்றாம் பாகங்களில் கதை போகும் என்றாலும் பூங்குழலி பேரில் கோபம் ஒண்ணும் வரலை. அது போலவே சேந்தன் அமுதன், பூங்குழலியிடம் கொள்ளும் காதலும். அதுவும் தான் ஒரு இளவரசன் என்பது தெரிந்திருந்தும், அவன் பூங்குழலியை அவளுக்காகவே காதலிக்கிறான். சேந்தன் அமுதன் "இளவரசன்" என்பது தெரியும் முன்னரே பூங்குழலி கல்யாணத்துக்கு ஒத்துக் கொண்டாலும், அது காதலின் பேரிலா? அல்லது "பொன்னியின் செல்வன்" தனக்குக் கிடைக்க மாட்டார் என்பதாலா? யோசிக்க வேண்டிய விஷயம். பெரிய பழுவேட்டரையரோ, நந்தினியின் அழகில்தான் மயங்குகிறார். அவள் பேரில் உண்மையில் காதல் இருக்கவில்லை, அதுவும் நிஜம்தான். இப்போ மற்றக் கதைகளைப் பார்ப்போமா?

12 comments:

 1. அதான் கண்ணபிரான் நடத்தின குவிஜ்ல முட்டை வாங்கியாச்சு இல்ல! அப்புறம் என்ன சமாளிப்பு வேண்டி கிடக்கு? :p

  ReplyDelete
 2. திறமைசாலி ..அந்த லிஸ்ட் ல என் பெயர்..அய்யோ மேம் என்ன இது..
  சம்பந்தா சம்பந்தமில்லாம எழுதிக்கிட்டு.. :)

  ReplyDelete
 3. @ஆப்பு, யாரு சமாளிக்கிறாங்க, முழுசும் படிச்சுட்டுச் சொல்லுங்க, இன்னும் முடிக்கலை! :P

  ReplyDelete
 4. ஆனாலும் இவ்வளவு அவசரக்குடுக்கையா இருக்கக் கூடாது!

  ReplyDelete
 5. //நிச்சயமாய் இது "மொக்கை" இல்லை! //

  அதை நாங்கதான் சொல்லணும்!

  ஆமா!

  நிச்சயமாய் இது "மொக்கை" இல்லை!

  ReplyDelete
 6. ஹா,ஹா, முத்துலட்சுமி, சம்மந்தத்தோடு நான் என்னிக்கு எழுதி இருக்கேன்? இவ்வளவு அப்பாவியா நீங்க? :)

  ReplyDelete
 7. //ஹா,ஹா, முத்துலட்சுமி, சம்மந்தத்தோடு நான் என்னிக்கு எழுதி இருக்கேன்? இவ்வளவு அப்பாவியா நீங்க? :)
  //

  அதானே:-))

  ReplyDelete
 8. நானும் வந்துட்டேன் :) வருகை பதிவுல எழுதிக்கோங்க, எனக்கும் இந்த பதிவுக்கும் சம்பந்தமே இல்ல ஏன்னா பொன்னியின் செல்வன் ஒரு முறை தான் படிச்சேன் அதுவும் எப்பவோ அதனால நினைவுல இல்ல :) நீங்க கேட்ட பார்த்திபன் கனவு கல்கியின் ஆண்டு மலரில் ஆரம்பமாகிறது :)

  ReplyDelete
 9. // "நிச்சயமாய் இது "மொக்கை" இல்லை!"//

  யாருய்யா..??? இப்பிடியெல்லாம் பொய் பேசிட்டு திரியுறது????? :(

  ReplyDelete
 10. இதை மொக்கை போட்டிக்கான படைப்பா எடுத்துக்கலாமா?

  ReplyDelete
 11. வாங்க சிபி, ஏதோ "மொக்கை" எழுதறதிலேயாவது நினைவு வச்சுட்டு இருக்கீங்களே! சந்தோஷம்! :P

  அபி அப்பா, ஹிஹிஹி, அவங்களுக்கு எழுத்தின் வலிமை புரிஞ்சது அவ்வளவு தான்! அதுவும் என்னோட எழுத்தின் வலிமையும், சிறப்பும், தொண்டர் படை தலை தெறிக்க ஓடினது தான், திரும்பி வரவே இல்லை!

  ReplyDelete
 12. வாங்க வேதா, ரொம்ப நாள் கழிச்சு வரீங்க, சந்தேகத்துக்குப் பதில் கிடைக்கும்னு பார்த்தா இப்படிக் காலை வாரிட்டீங்களே! :))))))

  ராயல், ரஞ்சனி பத்தி ஒரு "உண்மை" தெரிஞ்சாகணும், இப்போ! அப்படின்னு நான் சொல்லலை, சிபி தனியா மெயில் கொடுத்துக் கேட்கச் சொல்லி இருக்கார்! :))))))

  ஜே.கே. முதல் பரிசு, எனக்குத் தானே! தாராளமாய்ப் போட்டிக்குன்னு வச்சுக்குங்க!

  ReplyDelete