எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, July 06, 2007

அமெரிக்கா - கண்டு பிடிச்சது யாரு?

எல்லாரும் பொதுவாய் அமெரிக்கான்னு சொன்னதும் நினைச்சுக்கறது யு.எஸ். என்னும் நாட்டைத் தான் என்றாலும், மிகப் பெரிய இந்தக் கண்டம் ஆனது வட அமெரிக்கா, தென் அமெரிக்கா என்ற இரு பகுதிகள் கொண்டது. நான் எழுதப் போறதும் என்னமோ யு.எஸ். என்னும் நாட்டைப் பத்தித் தான் என்றாலும் கொஞ்சம் இதன் பூகோளமும் ரொம்ப லேசாய்த் தொடுகிறேன். வடக்கே கனடா, மத்தியில் யு.எஸ்., தெற்கே மெக்ஸிகோ,தென் அமெரிக்காவில் பிரேஸில் அர்ஜென்டினா, சிலி, வெனிஜூலா, பெரு, போன்ற நாடுகள் இருக்கின்றன, என்றாலும் உலக மக்களில் பெரும்பான்மையானவர்கள் அதிகம் விரும்பி வருவது இந்த யு.எஸ்ஸுக்குத் தான். விசாவுக்கு விண்ணப்பிக்காமல் திருட்டுத் தனமாய் வருபவர்களும் அதிகம். சென்னையில் யு.எஸ். கான்சலேட் அலுவலகம் யு.எஸுக்கு வர விசா கேட்டு வரும் விண்ணப்பங்களால் திணறுகின்றது. ஆன்லைனில் கூட விசா நேர்முகத் தேர்வுக்கான விண்ணப்பங்களும், தேதிகளும் கிடைப்பது கஷ்டமாய் இருக்கிறது. அப்படி என்னதான் இருக்கிறது இந்த நாட்டில்? அனைவரையும் கவரும் இந்த நாட்டில் கிடைக்காதது என்று ஒன்றுமே இல்லை. எல்லாவிதமான வளங்களும் நிரம்பப் பெற்றது. தேவைக்கு மீறியோ என்று கூட நான் எண்ணுவது உண்டு. இப்போது சற்றுப் பின்னோக்கிப் போய்ப் பார்ப்போமா?
*************************************************************************************

இறைவனால் படைக்கப் பட்ட கண்டங்களும், அதில் மனிதன் வாழ்வதும் இருந்து வந்திருந்தாலும் பெரும்பாலும் மற்றக் கண்ட மனிதர்கள் இன்னொரு கண்டத்திற்குக் குடி பெயரும்போது தான் அது கண்டறியப் பட்டதாய்ச் சொல்லுகிறோம். அந்த வகையில் இந்தக் கண்டம் "கிரிஸ்டோபர் கொலம்பஸ்" என்னும் ஸ்பெயின் நாட்டுக் கடலோடியால் கண்டு பிடிக்கப் பட்டாலும், அவர் நினைத்தது என்னமோ இந்த நாடுதான் "இந்தியா" என. ஆகவே தான் இங்கே இருந்து வந்த "பூர்வ குடிகள்" இந்தியர் எனவே அழைக்கப் பட்டு வருகின்றனர். இது இவ்வாறிருக்க உலக நாடுகளில் பெரும்பான்மையான நாடுகளைத் தன் ஆதிக்கத்துக்குள் வைத்திருந்த பிரிட்டனின் கூற்று என்னவென்றால் கொலம்பஸ் கண்டு பிடிப்பதற்கு ஒரு நூற்றாண்டுக்கு முன்னரே பிரிட்டனின் "பிரிஸ்டல்" என்னும் இடத்தைச் சேர்ந்த மீனவர்கள் இந்தக் கடலையும், கண்டத்தையும் கண்டறிந்ததாகச் சொல்கிறார்கள். பிரிஸ்டலில் இருந்த ஒரு வியாபாரியான Richard Amerike இவர் John Cabot என்பவருக்குப் பண உதவிகள் செய்து புதிய நாடு கண்டுபிடிக்க உதவியதாக Alfred Hudd என்பவர் சொல்கிறார். இதற்கான ஆதாரங்கள் பிரிட்டனின் Westminister Abbey யில் இருப்பதாகவும் சொல்கிறார். மேலும் இவர் கூறுவது அதற்கான படங்களை Waldsmuller போட்டிருப்பதாகவும் ஒரு பழைய ஆங்கிலேயப் படத்தை முன் மாதிரியாக வைத்துத் தான் இது வரையப் பட்டதாகவும் சொல்கிறார். இவரின் கூற்று அந்த வியாபாரியின் பெயரில் இருந்துதான் அமெரிக்கா என்று இந்தக் கண்டம் பெயர் சூட்டப் பட்டது என்பதாகும்.

கொலம்பஸ் முதன் முதல் இறங்கியது தற்சமயம் யு.எஸ். என்று அழைக்கப் படும் நாட்டில் இல்லை. அது பற்றிப் பின்னர் வரும்.

10 comments:

 1. //தெற்கே தென் அமெரிக்காவில் மெக்ஸிகோ//

  மெக்ஸிகோ இருப்பது வட அமெரிக்க கண்டத்தில்தானே...

  அமெரிக்கா என்று பெயரிட்டது Amerigo Vespucci என்றுதானே படித்திருக்கிறோம்? புதுக் கதையாக இருக்கிறதே...

  விக்கி பீடியாவும் அதையேதான் சொல்கிறது பாருங்கள்...

  ReplyDelete
 2. காலனியாதிக்கம் துவங்கும் முன்பு, இந்தியாவில் செல்வம் கொழித்து கிடந்தது.. இந்திய கண்டத்தில் அமைந்திருந்த தேசங்களோடு கடல் வழி வர்த்தகத்திற்கு ஒரு குறுக்கு பாதை கண்டு பிடிப்பது தான் பல கடலோடிகளின் குறிக்கோளாக இருந்தது... அதன் படி வழி தேடி சென்ற கொலம்பஸ்.. வழி தவறி அமெரிக்காவிற்கு சென்று இறங்கினார்..

  சரி அமெரிக்காவுக்கு ஏன் கொலம்பஸின் என்று பெயர் வராமல் போனது? கொலம்பஸின் சொந்த நாடான ஸ்பெயின் நாட்டின் ராணி இசபெல்லாவின் அரசவையில் இருந்த அமெரிகோ வெஸ்பூசி என்பவரின் பெயர் தான் கொலம்பஸ் கண்டுப்பிடித்த புதிய நிலப்பகுதிக்கு அமெரிக்கா என்பதாய் வைக்கப்பட்டது என்று ஒரு கதை சொல்கிறார்கள்.... காரணம்.. காலம் காலமாய் வாழ்ந்து வரும் அரசியல் தான் என்று சொல்ல கேள்வி..

  ReplyDelete
 3. வரலாற்று ரீதியாகவும் ஆதாரப்பூர்வமாகவும் பார்த்தால் கொலம்புஸ் அமெரிக்காவிற்கு வந்த முதல் அன்னியர் ஆனால் அவர் அதனை இந்தியா என்றே நம்பினார் எனவே தான் அங்குள்ள பூர்வ குடிகளுக்கு இன்றும் செவ்விந்தியர்கள் என்கிறார்கள், அமெரிக்காவை மட்டும் அல்லாது , கரிபியன் தீவுகள் எனப்படும் மேற்கு இந்திய தீவுகளையும் இவர் தான் கண்டறிந்தார் இந்தியாவை கண்டு பிடிக்கும் ஆசையில் அத்தீவுகளையும் இந்தியா என்றே பெயரிட்டார் அதனால் தான் மேற்கு இந்திய தீவுகள் என்று பெயர்.

  பின்னர் அமெரிக்கோ வெஸ்புகி தான் கொலம்பஸ் செய்த தவறை கண்டு பிடித்து அது இந்தியா அல்ல வேறு ஒரு புதிய நாடு என நிறுபித்தார். எனவே அவர் பெயரால் அமெரிக்கா என அழைக்கப்படுகிறது.

  இப்பொழுது ஆதாரமற்ற ஆனால் வரலாற்று ஆசிரியர்களால் விவாதிக்கப்படும் கண்டு பிடிப்பாளர்களை பார்ப்போம்.

  1) வைக்கிங் எனப்படும் நார்வே நாட்டை சேர்ந்த கடல் கொள்ளையர்கள் 10 ஆம் நூற்றண்டில்யே அமெரிக்காவிற்கு போய் உள்ளதாக பல நூல்கள் சொல்கின்றன. இவர்கள் மூலம் தான் பிரிட்டனிலும் மக்கள் குடியேறினர்.

  2) ஏசுநாதர் சாவுக்கு யூதர்கள் தான் காரணம் என அப்பொழுது அவர்களை எல்லா நாடுகளும் துறத்தியதால் ,யூதர்களின் முதல் டயாஸ்போரவின் போது சில யூதர்கள் அமெரிக்காவிற்கு குடியேறியதாக ஒரு கூற்று உண்டு.

  3) இப்பொழுது சீன மாலுமி ஒருவர் கொலம்புஸுக்கு முன்னரே அமெரிக்காவை கண்டறிந்தார் என வரைப்படம் ஒன்றை காட்டுகிறார்கள்.

  ReplyDelete
 4. கொஞ்சம் பொறுமையா இருங்க எல்லாரும், இது இன்னும் தொடரும்.

  ReplyDelete
 5. மன்னிக்கணும், யு.எஸ்ஸுக்குத் தெற்கேன்னு எழுதறதுக்குப் பதிலா தென் அமெரிக்கான்னு எழுதி இருக்கேன். நான் எழுதப் போறது யு.எஸ். பத்தி மட்டும்தான். :D

  ReplyDelete
 6. புது புது கதையா சொல்றீங்க மேடம்.. கேட்க சுவரஸ்யமா இருக்கு.. இன்னும் நிறைய சொல்வீங்கன்னு எதிர்பார்க்கிறேன்

  ReplyDelete
 7. சரிவர, அடிக்கடி என்னால வரமுடியல உங்க பதிவுக்கு.. இனிமேல் வர முயற்சிக்கிறேன் மேடம்

  ReplyDelete
 8. கீதா எழுதுங்க. நல்லா இருக்கு. வந்த நாள் முதல் இந்த நாள் வரை படிக்க ஆர்வமாய் இருக்கேன்...

  ReplyDelete
 9. கீதா மேடம்!
  ஜியோகிரபி க்ளாஸில் உக்காந்தா மாதிரி இருக்கு.
  அமெரிக்காவை கண்டுபிடித்தது யாராவேணா இருக்கட்டும். நீங்கள் சொல்லப்போகும்
  யூ.எஸ் பத்தி அதன் நல்லது கெட்டது
  எல்லாம் சொல்வீர்கள் என்று எதிர்ப்பார்க்கிறேன்.

  ReplyDelete