எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, December 05, 2007

சிஷ்ய கோடிகளுக்காக ஒரு "மொக்கை"

கைப்புள்ளயை என்ன என்னோட பதிவுக்கே வரதில்லைனு கேட்டால், ரொம்பவே "ஆன்மீகமா" இருக்குனு சொல்லறார். :P, இதிலே நாகை சிவா தான் ரொம்பவே கடமை உணர்ச்சியோட ஆன்மீகம் ஆனாலும் சரி, மொக்கை ஆனாலும் சரி, தவறாமல் வந்து ஒரு வரிப் பின்னூட்டம் போட்டுடறார். அம்பி, மொக்கைக்குத் தான் தவறாமல் பின்னூட்டம் போடுவார்னாலும், நடுநடுவில் இந்த மாதிரி ஆன்மீகப் பதிவுகளும் ஏதோ புரிஞ்ச மாதிரி எழுதிட்டு, தேவையில்லாமல் ஒரு கேள்வியும் கேட்டுட்டு, எல்லாமும் படிச்சேனாக்கும்னு சொல்லிட்டுப் போயிடுவார். அப்புறம் வரவே மாட்டார். கார்த்திக் முத்துராஜன் சுத்தம், இந்த வம்பே வேணாம்னு ஒதுங்கிட்டார். வேதா, தினமும் பதிவு போட்டால் என்னால் படிக்க முடியாதுனு சொல்லிட்டு, ஒண்ணொண்ணாப் படிச்சு, மெதுவாப் பின்னூட்டம் கொடுப்பா. திராச. சார் வரதே இல்லை. மதுரையம்பதிக்கு "உள்ளேன் அம்மா" போடவே நேரம் இல்லை. அநேகமாய் எல்லாப் பதிவிலேயும் இதையே போடறதால் ஜி3 பண்ணினால் போதுமே. மணிப்பயல் ஊருக்குப் போற குஷி! ரசிகன், என்னமோ ரொம்ப சீரியஸாப் பேசிட்டு இருக்கார். இரண்டு முறை அங்கே போயிட்டு, மண்டையில் ஒண்ணுமே ஏறலைனு வந்துட்டேன். :D கோபிநாத் அப்போஅப்போ வரார். அபி அப்பா ஆளே காணோம். போர்க்கொடிக்கு ரங்குவோட போர்க்கொடி தூக்கவே நேரம் இல்லையாம். :P வல்லி சிம்ஹனுக்கு வீட்டில் விருந்தாளி, இருந்தாலும் அவங்க ரெகுலர் விசிட்டர் இல்லையே! முடிஞ்சப்போ தான் வராங்க. மத்தவங்களும் முடிஞ்சப்போ தான் வராங்க. இலவசம் 100வது பதிவு கொண்டாடறதிலே ரொம்ப பிசி. சரி, யாருமே இல்லைனு நினைச்சப்போத் தான், வந்தது ஒரு தொலைபேசி அழைப்பு. நேற்று வந்தது. பேசியது யார் தெரியுமா? "தம்பி" கணேசன் தான்.

நேத்து தம்பி கணேசனோட பேசிட்டு இருந்தேன். இந்தப் பதிவே அதுக்குத் தான். கணேசனுக்கு நன்றி சொல்லத் தான். கணேசனுக்குத் தனியா ப்ளாக் இல்லைங்கறதாலேயும், நான் என்னோட வலைப்பக்கத்திலே அனானியை அனுமதிக்கிறதில்லைங்கறதாலேயும், அவரால் என்னோட பதிவுகளுக்குப் பின்னூட்டம் கொடுக்க முடியலை. அதான் தொலைபேசிச் சொன்னார். என்னோட பதிவுகளைப் படிச்சேன்னு சொன்னார். தம்பி கணேசன் யாருன்னு யோசிக்கிறவங்களுக்கு, அவர் ஒண்ணும் புதுசு இல்லை! "அம்பி"யோட கோஸ்ட் ரைட்டர். அம்பி எழுதறது எல்லாம் இவர் எழுதிக் கொடுக்கிறது தான். அதையும் நேத்து என் கிட்டே பேச்சோட பேச்சாச் சொன்னார். இப்போ கணேசனுக்கு ஆப்பீச்ச்சிலே வேலை அதிகம், ஆணி ஜாஸ்தியாயிடுச்சாம், அதனாலே தான், முன்ன மாதிரி அம்பிக்கு எழுதிக் கொடுக்க முடியலையாம். சொன்னார். இன்னிக்குப் போய் எழுதிக் கொடுக்கணும்னு சொன்னார். சரியாப் போய்ப் பார்த்தால் இன்னிக்கு வந்திருக்கு கணேசன் எழுதின விஷயம். யார் இந்த கணேசன்கிறவங்களுக்கு, கணேசன், அம்பியோட சொந்தத் தம்பி. கண்ணபிரான் கே.ஆர்.எஸ்., மதுரையம்பதி இவங்களோட பதிவிலே "தம்பி"ங்கற பேரிலேயே பின்னூட்டம் போடுவார். அம்பிக்குக் கவிதை, மற்றும் ஆன்மீகத் தகவல்கள் கொடுத்து எழுதித் தரது இவர் தான், இவரே தான். வேறே யாருமில்லை! என்ன அம்பி இது எப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்படி இருக்கு???????????


அப்புறம் என்னோட "மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்" பதிவுக்காக இன்னும் பின்னூட்டங்கள் வந்துட்டு இருக்குச் சென்னைக் காதலர்கள் கிட்டே இருந்து. நான் என்னமோ சென்னையை ரொம்பவே மட்டமாச் சொல்றதாய் அவங்க எண்ணம்.இன்னிக்கு ஒரு பின்னூட்டத்திலே, 25 வருஷமா இருக்கேன், இந்த ஊரிலே, எந்தத் தெருவில் மழை பெய்தால் தண்ணீர் தேங்காமல் இருக்கு, சொல்லுங்க, பார்ப்போம்னு இன்னிக்கு ஒருத்தர் கேள்வி. என்னோட புகாரே அது தானே? தெரு எங்கே இருக்கு? ஒரே மேடும், பள்ளமுமா, மேடு எதுனு தண்ணீர் இருக்கும்போது தெரியாது. பள்ளம் எதுனு புரியாது. வண்டியை எடுத்துட்டுப் போனால் பின்னால் உட்காரக் கூட முடியாது. தண்ணீர் வாரி அடிக்கும். தண்ணீர் இருக்கும் இடங்களில் கீழே இறங்கி வண்டியைத் தள்ளிட்டே போகணும். தெருவாய் இருந்தால் பரவாயில்லை. இல்லைனா மழை பெய்து குறைந்த பட்சம் ஒரு நாளிலாவது தண்ணீர் எல்லாம் வடிஞ்சாலாவது பரவாயில்லை. எதுவும் இல்லை. ஆகஸ்ட் மாத மழைத் தண்ணீரே இன்னும் வடியலை எங்க தெருவிலே, இதிலே கொசு உற்பத்தி வேறே. அங்கங்க பிரசாரம் பண்ணினால் போதுமா, தண்ணீரைத் தேங்க விடாதீங்கனு. தண்ணீரை முனிசிபாலிட்டி இறைக்க வேணாமா? அவங்க கடமை இல்லையா இது? ரோடு போட்டதாய் 25 வருஷமாக் கணக்குக் காட்டி இருக்காங்க எங்க முனிசிபாலிட்டியிலே! சொத்துவரி மட்டும் வாங்கறாங்க. பாதாளச் சாக்கடைக்கு முன் பணம் கட்டி இருக்கோம் பத்து வருஷம் ஆகப் போகுது. இன்னும் பாதாளச் சாக்கடைக்குக் குழாய் போடவே ஆரம்பிக்கலை. மற்ற இடங்களில் வேலை செய்து விட்டுக் கமிஷன் வாங்குவாங்க! இவங்க கமிஷன் மட்டும் வாங்கிட்டு வேலை செய்துட்டோம்னு கணக்குக் காட்டறாங்க. என்னத்தைச் சொல்றது? இன்னிக்கு வந்த பின்னூட்டத்தாலே இதை எழுதும்படியா ஆச்சு. ஏற்கெனவே அரசாங்கத்துக்கு நிறையவே எழுதிப் போட்டிருக்கோம்!

34 comments:

  1. பஸ்டு...........................

    ReplyDelete
  2. கோடில மொதல் நாந்தேன்..ஹிஹி..

    ReplyDelete
  3. // ரசிகன், என்னமோ ரொம்ப சீரியஸாப் பேசிட்டு இருக்கார். இரண்டு முறை அங்கே போயிட்டு, மண்டையில் ஒண்ணுமே ஏறலைனு வந்துட்டேன//

    அவ்வ்வ்வ்வ்... கீதா அக்கா இங்க நா போட்ட பின்னூட்டத்தயெல்லாம் படிச்ச பின்னாடியும் இப்பிடி பழிபோடறதெல்லாம் அநியாயம்.. அங்க சீரியஸா இருந்துட்டதால, ஒரு பேலன்ஸ்க்கு(?), இப்பத்தானே இங்க வந்து உங்க கடந்த நாலு பதிவுலயும் மொக்க போட்டுப்புட்டு போனேன்..அந்த பின்னூட்டத்தையெல்லாம் மறைச்சு வைச்சதோட இல்லாம் இப்படி அபாண்டமா பழிபோட்டதால இனிமே கொஞ்ச நாளைக்கு ஸ்கூலுக்கு ஸ்டெய்க்கு .....ஏலே கட்றா வண்டிய.. பூட்டுறா ஸ்கூல...:p

    ReplyDelete
  4. ஸ்கூலுக்கு "இலியானா"விசிட் செய்யப்போவதாய் குசும்பனிடமிருந்து ஒரு நியுஸ் வந்திருக்கறதால ஸ்டெய்க் வாபஸ் செய்யப்படுகின்றது..ஹிஹி..:

    ReplyDelete
  5. //கணேசனுக்கு ஆப்பீச்ச்சிலே வேலை அதிகம், ஆணி ஜாஸ்தியாயிடுச்சாம், அதனாலே தான், முன்ன மாதிரி அம்பிக்கு எழுதிக் கொடுக்க முடியலையாம். சொன்னார். இன்னிக்குப் போய் எழுதிக் கொடுக்கணும்னு சொன்னார்.//
    // என்ன அம்பி இது எப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்படி இருக்கு???????????//

    கீதா அக்கா..என்ன இது?.. சூப்பர்ர்ர்ர்ர் வேட்டு... (ஆனா அம்பி ரொம்ப பாவமில்ல... )

    ReplyDelete
  6. // இவங்க கமிஷன் மட்டும் வாங்கிட்டு வேலை செய்துட்டோம்னு கணக்குக் காட்டறாங்க. என்னத்தைச் சொல்றது?//

    ஹலோ..என்னிய சீரியஸ்ன்னு சொல்லிப்புட்டு இங்க மட்டும் என்னவாம்?..

    ReplyDelete
  7. இந்து ஒரு அபாண்டமான குற்றசாட்டு. அம்பியின் எழுத்து ஸ்டெயில் என்ன? என்பதை நாடறியும். :p

    அதனால் தனியாக நான் வேறு விளக்கம் அளிக்க தேவையில்லை.

    *ahem, அம்பத்தூர் எல்லாம் எப்போ மெட்ராஸ் கூட சேர்த்தாங்க? ஊருக்கு 20 கிமீ தள்ளி இருக்கற எடத்துக்கெல்லாம் ரோடு போட முடியாது. :)))

    ReplyDelete
  8. "இந்து" ஒரு அபாண்டமான குற்றசாட்டு. அம்பியின் எழுத்து ஸ்டெயில் என்ன? என்பதை நாடறியும். :p

    யார் இந்த இந்து? பதிவு எழுதித் தரப் புது ஆள் பிடிச்சாச்சா? அதான் ஸ்டைலே மாறி இருக்கா? தங்கமணிக்கு உடனே விஷயம் தெரிவிக்கப் படும்!

    ரசிகரே, ரொம்பவே நன்றி, உங்க பின்னூட்ட மழைக்கு! பாருங்க, "மொக்கை" போட்டால் பின்னூட்டம் வருது, இல்லாட்டி எங்கே வருது? அம்பிக்காக ரொம்பவே உருகாதீங்க. உங்களைப் பிரதான சிஷ்யனாக மாற்ற யோசிச்சிட்டிருக்கிற வேளையில். சொ.செ.சூ. வச்சுக்காதீங்க!! :P

    ReplyDelete
  9. @அம்பி, இதான் உங்களுக்கு எதுவுமே புரியலைன்னு மறுபடி, மறுபடி நிரூபிச்சுட்டே போகணுமா? சென்னையை அம்பத்தூரோட இணைச்சிருக்குனு எங்கே சொன்னேன்? அம்பத்தூர் முனிசிபாலிட்டி, திரும்பவும் கவனிக்கவும், சென்னை கார்ப்பொரேஷன், அம்பத்தூர் முனிசிபாலிட்டி, ரெண்டுக்கும் வித்தியாசம் புரியுமா? :D அதைப் பத்தி மட்டுமே சொல்லி இருக்கேன். சும்மா ஒரு வரி மட்டும் படிச்சால் இப்படித்தான்!!!!!

    ReplyDelete
  10. ஹையா...தலைவி மொக்கை பதிவு போட்டுட்டாங்க. எல்லாரும் ஓடியாங்க.

    //கைப்புள்ளயை என்ன என்னோட பதிவுக்கே வரதில்லைனு கேட்டால், ரொம்பவே "ஆன்மீகமா" இருக்குனு சொல்லறார். :P//
    எங்கே டோட்டல் டேமேஜ் பண்ணிடுவீங்களோன்னு பயந்துக்கிட்டே இருந்தேன். தலைவியின் தாய்மை உள்ளம் யாருக்கு வரும்?
    :)

    ReplyDelete
  11. //மதுரையம்பதிக்கு "உள்ளேன் அம்மா" போடவே நேரம் இல்லை. அநேகமாய் எல்லாப் பதிவிலேயும் இதையே போடறதால் ஜி3 பண்ணினால் போதுமே.//

    ஆமா ஒரு வாரத்துக்கு 1 பதிவு என்பதே கஷ்டமா இருக்கு...நீங்க ஒரு நாள்-ல 2-3 பதிவு போட்டா நான் G3 தவிர என்ன செய்ய....

    (பாவம் சாம்பு மாமா நீங்க காலையிலிருந்து சாயங்காலம் வரை கம்யூட்டர தட்ட உங்களுக்கு, காபி, சாப்பாடு, டீபன்ன்னு பண்ணி அலுத்துப் போயிட்டார்).

    ஆமா உங்க கிட்ட யாராவது பிளாக் சர்வீஸ் க்ளோஸ் ஆக போகுதுன்னு எதுவும் சொன்னாங்களா?...இப்படி வீட்டு வேலையெல்லாம் விட்டுட்டு மாஞ்சு-மாஞ்சு எழுதறீங்க?...

    ReplyDelete
  12. இதுக்கும் ஒரு வரியில் ஒரு பின்னூட்டம் போட்டா போதுமா?

    மொக்கையோ மொக்கை :)

    ReplyDelete
  13. @கைப்புள்ள, அந்த இட்டிலிக்கு மாவு அரைக்கும் விஷயம் தானே? அது தான் தனியா ப்ளாக் யூனியனிலே பதிவு போட்டுட்டேனே? பார்க்கலை? அதான் இங்கே வேறே தனியா எதுக்குனு விட்டுட்டேன். அதெல்லாம் யாரையும் சும்மா விடறதே இல்லையே! நம்ம கிட்டே பாரபட்சமே கிடையாது!

    ReplyDelete
  14. @மதுரையம்பதி, என்ன? பின்னூட்டம் போட்டிருக்கிறது நீங்களா? அம்பியா? ஒரே புகை வாசனை வருது. கொஞ்சம் முன்னாலே இதுக்குப் பதில் பின்னூட்டம் கொடுத்தால் ப்ளாகர் ஏத்துக்கவே இல்லை, அவ்வளவு புகை வந்துட்டு இருந்தது, அதான் அடங்கினப்புறம் மெதுவா வந்து பதில் கொடுக்கிறேன். ஹிஹிஹி, என்னோட தட்டச்சுத் திறமையைப் பாராட்டாமல் இப்படியா புகை விடறது? :))))))))))))))))

    புலி, அதான் ரெகுலரா வந்துட்டு இருக்கீங்களே, அதனால் சும்மா விடறேன். அது சரி, கடைசிப் பத்தி ஒண்ணும் மொக்கை இல்லையே, அது பத்தி ஏதாவது எழுத வேணாமா? :D

    ReplyDelete
  15. இந்து இல்ல, இது! கர்ர்ர்ர்ர்ர்.

    @மதுரையம்பதி, ஆகா! ஒரு வாசகம் சொன்னாலும் திருவாசகமா சொன்னீங்க போங்க. :p

    ReplyDelete
  16. //அவ்வளவு புகை வந்துட்டு இருந்தது, அதான் அடங்கினப்புறம் மெதுவா வந்து பதில் கொடுக்கிறேன். ஹிஹிஹி, என்னோட தட்டச்சுத் திறமையைப் பாராட்டாமல் //

    ஓ! தட்டச்சி, தட்டச்சி புகையே வந்திடுச்சா?....ஹிஹிஹி

    ReplyDelete
  17. // ரசிகரே, ரொம்பவே நன்றி, உங்க பின்னூட்ட மழைக்கு! பாருங்க..மொக்கை" போட்டால் பின்னூட்டம் வருது, இல்லாட்டி எங்கே வருது? //

    கீதா அக்கா போன பதிவுல பின்னூட்டம் பாத்துப்புட்டு மார்க் போடவும்..சொல்லிப்புட்டேன்..ஹிஹி..:)

    ReplyDelete
  18. திராச. சார் வரதே இல்லை

    வந்தப்பறம் நீங்க யாருன்னு தெரியலைன்னு சொல்லிட்டா அதான் பயமா இருக்கு.

    @அம்பி அம்மம்மா அவன் தம்பி என்று அம்பி வளர்த்தான் அவன்எதிர்கட்சியில் சேருவான் என்று நினைக்கவில்லை

    ReplyDelete
  19. //தெரு எங்கே இருக்கு? ஒரே மேடும், பள்ளமுமா, மேடு எதுனு தண்ணீர் இருக்கும்போது தெரியாது. பள்ளம் எதுனு புரியாது.//

    இது!

    ReplyDelete
  20. கலக்கலா இருக்குங்க.

    ReplyDelete
  21. கீதா,

    சுவாரசியமான மொக்கை...கலக்கல்ஸ்

    ReplyDelete
  22. @அம்பி, விடுவேனா உங்களை? "இந்து" யாரு? சொல்லிடுங்க, சீக்கிரம், இல்லாட்டி ப்ளாக் யூனியனிலே பப்ளிஷ் ஆகும்!!!! :P

    @மதுரையம்பதி, எல்லாம் இந்த அம்பியோட சேர்ந்ததாலே தான் இப்படி எல்லாம் யோசிக்கத் தோணுது! என்ன செய்ய? நீங்க பங்களூரில் இருக்கிறது அம்பிக்கு ரொம்ப வசதியாப் போச்சு, அவர் பக்கம் இழுத்துட்டார்! :P

    ReplyDelete
  23. "வந்தப்பறம் நீங்க யாருன்னு தெரியலைன்னு சொல்லிட்டா அதான் பயமா இருக்கு."

    என்னவோ போங்க தி.ரா.ச. சார், எல்லாப் பின்னூட்டத்திலேயும் இதே தான் சொல்றீங்க! நான் தான் போற இடத்திலே எல்லாம் உங்களைப் பார்க்கிறேனே! :P சும்மா வரலைங்கறதுக்கு ஒரு நொண்டாத சாக்கு! (எத்தனை நாளுக்கு நொண்டிச் சாக்குனு சொல்றது?)

    ReplyDelete
  24. @காட்டாறு, ரொம்ப நாள் கழிச்சு வரீங்க? சென்னை மழை தினம் இருக்கே, ஏற்கெனவே தண்ணீரில் இருக்கோம்னு நல்ல உள்ளத்தோடா?

    பாசமலர், வாங்க, என்னத்தைக் கலக்கினேன் போங்க, இப்படி ஒரு மொக்கை போட்டால் தான், எல்லாம் கழுகுக்கு மூக்கிலே வேர்த்தாப்பலே ஓடி வராங்க, அதான் நீங்களே பார்க்கிறீங்களே? :))))

    புதுகைத் தென்றல், நல்லா தென்றலாவே இருக்கீங்க, வந்து பார்த்தேன், உங்க வீட்டுக்கும். வரவுக்கு வாழ்த்துக்களும், கருத்துக்கு நன்றியும்.

    ReplyDelete
  25. மதுரையம்பதி, எல்லாம் இந்த அம்பியோட சேர்ந்ததாலே தான் இப்படி எல்லாம் யோசிக்கத் தோணுது! என்ன செய்ய? நீங்க பங்களூரில் இருக்கிறது அம்பிக்கு ரொம்ப வசதியாப் போச்சு, அவர் பக்கம் இழுத்துட்டார்!

    அதுசரி நான் இந்த ஊர்லேதான் இருக்கேன் என்னை ஏதாவது பக்கமிழுக்கலாமே.

    ReplyDelete
  26. @ampi*ahem, அம்பத்தூர் எல்லாம் எப்போ மெட்ராஸ் கூட சேர்த்தாங்க? ஊருக்கு 20 கிமீ தள்ளி இருக்கற எடத்துக்கெல்லாம் ரோடு போட முடியாது. :)))
    அம்பி உனக்கு விஷ்யம் தெரியாதா?அம்பத்தூர் பேரையே பள்ளத்தூர்னு மாத்திட்டாங்க.ஊரேமழைக்கப்பரம் பள்ளத்தில்லே இருக்கு

    ReplyDelete
  27. @திராச, சார், என்னத்தைச் சொல்றது? எல்லாருமே மொக்கை போட்டால் தான் வந்து எட்டியானும் பார்க்கிறீங்க! இல்லைனா வரதே இல்லை, கொஞ்சம் பின்னோக்கிப் போய்ப் பாருங்க சார்! :P

    ReplyDelete
  28. "அம்பத்தூர் பேரையே பள்ளத்தூர்னு மாத்திட்டாங்க.ஊரேமழைக்கப்பரம் பள்ளத்தில்லே இருக்கு"

    ஒத்துக்கிறதைத் தவிர வேறே வழி? இப்போ 2 நாளாக் கொஞ்சம் பரவாயில்லை! :((((((((((

    ReplyDelete
  29. @கீதா மேடம் எல்லா மொக்கைக்கும் நாங்க போவோமா? உங்களுக்குத்தான் வருவோம். ஏன்தெரியுமா அம்பி எங்கிட்டேசொன்னாமதிரி பிரிக்கமுடியாதது:- மேடமும் மொக்கையும்
    சேர்ந்தே இருப்பது:- மேடமும் மொக்கையும்):-

    ReplyDelete
  30. @திராச சார்,ஆஹா, உங்க அம்பி பெரிய "தருமி" போங்க! :P :P

    ReplyDelete
  31. ரொம்ப லேட்டு தலைவி...;))

    மொக்கை....வழக்கம் போல மொக்கை தான் ;)

    ReplyDelete
  32. "மணிப்பயல் ஊருக்குப் போற குஷி!"

    ஊருக்கு போகல்லை. வருகிறேன், வருகிறேன். வந்து கொண்டே இருக்கிறேன்

    ReplyDelete
  33. சொந்த பிளாகுக்கே டைம் இல்ல மேடம். கச்சேரி ஸீசன்ல ரொம்ப பிஸி. அப்பப்ப ஆபிஸ் வேலை வேற பாக்கணும். ஷபாஆஆஆஆஆஆஆஆஆ முடியல்லடா சாமி

    ReplyDelete
  34. //
    "சிஷ்ய கோடிகளுக்காக ஒரு "மொக்கை""
    //
    ப்ரெசண்ட்டு

    ReplyDelete