எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, January 23, 2008

அருட்பெருஞ்சோதி! தனிபெரும்கருணை!


நானும் திவா சொன்ன மாதிரி "அனுபவம் புதுமை"யையாவது தொடரலாம் என்று நினைத்தால் என்ன செய்யறது? இன்னிக்குனு பார்த்து முக்கியமானவங்க எல்லாம் பிறந்திருக்காங்க! அதுவும் வள்ளலாரின் "அருட்பெருஞ்சோதி" என்னும் ஜோதி தரிசனம் காட்டும் நாள் இன்று தான். அதை விட முடியுமா?

//ஒருமையுடன் நினதுதிரு மலரடி நினைக்கின்ற (113)
உத்தமர்தம் உறவுவேண்டும் (114)
உள்ஒன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார் (115)
உறவுகல வாமைவேண்டும் (116)
பெருமைபெறு நினதுபுகழ் பேசவேண் டும்பொய்மை (117)
பேசா திருக்க்வேண்டும் (118)
பெருநெறி பிடித்தொழுக வேண்டும்மத மானபேய் (119)
பிடியா திருக்கவேண்டும் (120)
மருவுபெண் ஆசையை மறக்கவே வேண்டும்உனை (121)
மறவா திருக்கவேண்டும் (122)
மதிவேண்டும் நின்கருணை நிதிவேண்டும் நோயற்ற (123)
வாழ்வில்நான் வாழவேண்டும் (124)
தருமமிகு சென்னையில் கந்தகோட் டத்துள்வளர் (125)
தலம்ஓங்கு கந்தவேளே (126)
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி (127)
சண்முகத் தெய்வமணியே (128)//

மேற்குறிப்பிட்ட பாடலுடன் சேர்ந்த பாடல் தொகுப்பை எழுதும்போது வள்ளலாருக்கு வயது பத்துக்குள் தான் என்னும்போது அவரின் மெய்ஞானத்தை நாம் புரிந்து கொள்ள முடியும் அல்லவா? இன்று வடலூரில் வள்ளலாரின் "அருட்பெருஞ்சோதி" தரிசனம். அவர் தன் தவ வலிமையால் இரவில் எண்ணெய்க்குப் பதிலாய்த் தண்ணீரை ஊற்றியே விளக்கை எரித்தார் என்று சொல்லும் சம்பவம் ஒன்றும் உண்டு. தன்னுள்ளே உறையும் ஜோதியைக் கண்டதோடல்லாமல் தானே ஜோதிமயமாயும் இருந்தார் என்பதற்கு இதைவிடவும் அத்தாட்சி தேவை இல்லை. அதுவும் எளியவர்களின் பசியை அறிந்தவர். வள்ளலாரின் சமரச சன்மார்க்க சபையில் எப்போதும் அனைவருக்கும் உணவு அளிக்கப் படும். உணவுக்காக மூட்டப் படும் அடுப்பு அணைவதே இல்லை என்பார்கள்.

14 comments:

 1. ஆமாம் நானும் கேள்விபடிருக்கிறேன். அவர் கையில் வெள்ளி உலோகத்தை வைத்தால் அதுவே உருகி விட்டதாம். இதை பத்தி உங்களுக்கு ஏதாவது தெரியுமா?

  ReplyDelete
 2. பிறந்த நாள் வாழ்த்துச் சொல்லும் கீதாவுக்கு மீண்டும் வாழ்த்து..

  ReplyDelete
 3. உங்கள் வழக்கத்திற்கு மாறாக சிறுபதிவு என்றாலும் விஷயச் செரிவு மிகுந்த பதிவு என்பதில் ஐயமில்லை. நன்றி, வணக்கம்.

  ReplyDelete
 4. உங்க வலைப்பூல வலது பக்கம் முக்கியமான நாளெல்லாம் காட்டுற நாள்காட்டி ஒண்ணு இருக்குதானே? அதை பாக்காம பில்ட் அப் போட்டுட்டீங்களோ?
  :P

  திவா

  ReplyDelete
 5. naan vadalurla irukura anda anaiya jothi irukura idathuku poi iruken.. migavum arumai

  ReplyDelete
 6. //உங்கள் வழக்கத்திற்கு மாறாக சிறுபதிவு என்றாலும் //

  @M'pathi, ஹஹா! சிரிப்பை அடக்க முடியலை. வழக்கமான மொக்கைக்கு மாறானு எழுத வந்தீங்க தானே?
  இதுக்கு பேரு தான் உள்குத்தா? :)))

  ReplyDelete
 7. எல்லாருக்கும் தனித் தனியாப் பதில் சொல்ல முடியலை, மன்னிக்கவும், கொஞ்சம் உடல்நிலைக் கோளாறு, மற்றும் சில, பல வேலைகள்.
  அம்பி, என்னதான் இருந்தாலும் மதுரையம்பதிக்கு உ.கு. வைக்கத் தெரியாது. திவா, பக்கத்தில் உள்ள காலண்டரில் மட்டுமில்லை, வடலூரிலும் இன்னிக்குத் தான் ஜோதி தரிசனம்னு சொன்னாங்க! அதான் ஒரு சின்ன பில்ட்-அப். இன்னும் எழுதணும்னு தெரியும், முடியலை! :(

  ReplyDelete
 8. இந்த நல்ல நாளில்,வள்ளலாரின் வாக்குகளை ஞாபகப் படுத்தியதற்க்கு நன்றிகள்...

  ReplyDelete
 9. நீங்கள் எழுதியதில் உங்களுக்குப் பிடித்ததை ஊருக்குச் சொல்ல ஒரு அழைப்பு வைக்கிறேன் வாங்க..

  ReplyDelete
 10. வள்ளலார் மூட்டிய அடுப்பு 140 வருடங்களாக எரிகிறது

  ReplyDelete
 11. இங்கேயும் வள்ளலார் வந்துவிட்ட்டாரா?

  ReplyDelete
 12. @அம்பி,

  கீதாம்மா கூட கவனிக்காம போயிருப்பாங்க...நீ ஏம்பா எடுத்துக் கொடுக்கற?. ஏற்கனவே அவங்க எப்போ சென்னை வர்ரேன்னு கேட்டு மெரட்டறாங்க. :-)

  ReplyDelete