எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, February 07, 2008

நல்லாக் கொண்டாடுங்க! வேணாம்னு சொல்லலை!


இரண்டு நாளா ஒரே தொல்லை மறுபடியும் இணையம் போயிடுச்சு. அவங்களாலேயும் கண்டு பிடிக்க முடியலை, கடைசியில் என்னனு பார்த்தால், செர்வரை இங்கே பக்கத்தில் ஒரு வீட்டில்(வாடகை கொடுத்துத் தான்) வச்சிருக்காங்க. அவங்களுக்கு வீட்டில் "ஃப்யூஸ்" போயிடுச்சாம். அதைச் சரி பண்ணறதுக்கு செர்வர் வச்சிருந்த பாக்ஸை எடுத்து, அதிலே அவங்க வீட்டுக் கனெக்ஷன் கொடுத்துக்கிட்டிருந்திருக்காங்க. ஆகவே செர்வர் டவுன், இங்கே கனெக்ஷன் கட். என்னத்தைச் சொல்றது! மக்கள் இப்படி அறிவுஜீவியா இருக்காங்க! மக்களுக்குப் பொதுச் சொத்து என்றால் எவ்வளவு இளக்காரமும், அலட்சியமும் வந்து விடுகிறது? அதே அவங்க சொந்தப் பொருள் என்றால் அப்படி இருக்க மாட்டாங்க இல்லையா?

நேற்றுத் தினசரியில் பார்த்தால் கல்லூரி மாணவர்கள் "பஸ் டே" என்ற பெயரில் பேருந்துகளை நாசம் செய்வதும், பயணிகளுக்குத் தொந்திரவு கொடுப்பதும் தான் தலைப்புச் செய்தி. எத்தனை பேருக்குத் தாமதம் ஏற்பட்டிருக்கும்? எத்தனை பேர் அவசரப் பயணம் மேற்கொண்டிருப்பார்கள்? பேருந்துக்கு நன்றி தெரிவிக்க வேறு வழிகளே இல்லையா என்ன? ஒவ்வொரு வருஷமும் பயணிகள் இருக்கும் பேருந்துகளே மாணவர்களால் ஆக்கிரமிக்கப் படுகின்றன. உயிரைப் பணயம் வைத்துப் பேருந்துகளின் மேல் ஏறி நின்று ஆடுகிறார்கள். இதுக்காக அவங்களுக்கு எந்தவிதப் பரிசும் கிடைக்கப் போவதில்லை. கஷ்டப் பட்டு உழைத்து ஓடாகிப் பணம் செலவு செய்து படிக்க வைக்கும் பெற்றோர், தங்கள் பையனை அந்தப் பேருந்துகளின் உச்சியில் பார்க்கும்போது மனம் வருந்துவது மட்டுமில்லாமல், பையனின் உயிரை நினைத்தும் கவலை அடைவார்கள். இதுக்காகவா படிக்க வைக்கின்றனர்? நன்றி தெரிவிக்க அமைதியான வழிகள் எத்தனையோ இருக்கின்றனவே!

குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட எண்ணுள்ள பேருந்துகளில் பயணிக்கும் மாணவ, மாணவிகள் ஒன்று சேர்ந்து அந்தப் பேருந்தை ஓட்டும் ஓட்டுநருக்கும், நடத்துனருக்கும் தங்களுக்குள் பணம் வசூலித்துப் பரிசுப் பொருள் வாங்கிக் கொடுத்து கெளரவிக்கலாம். அல்லது நல்ல ஓட்டலில் விருந்து கொடுக்கலாம், அல்லது அவர்களுடைய முக்கியத் தேவை என்ன என்று கேட்டறிந்து அதை நிறைவேற்றித் தரலாம். அல்லது ரத்த தானம் செய்யலாம். பேருந்து செல்லும் வழியில் போக்குவரத்தை ஒழுங்கு செய்து, பொது மக்களுக்கு உதவலாம். இப்படி எத்தனையோ ஆக்கபூர்வமான வழிகள் இருக்கின்றன. பொதுச் சொத்து நம் சொத்து, சொந்தச் சொத்தைவிட மேலானது. உங்கள் அப்பா, அம்மா கட்டும் வரியில் இருந்துதான் வாங்கப் படுகிறது. அடுத்து நீங்கள் சம்பாதித்துக் கட்டும் வரிப்பணத்தில் இருந்தும் வாங்கப் படும். இது நினைவு வைத்துக் கொண்டால் போதுமே! மாணவர்கள் யோசிக்க வேண்டும். இந்த மாதிரியான கொண்டாட்டத்தினால் அவர்களுக்கு என்ன நிறைவு கிடைக்கிறது? ஒன்றும் இல்லை. பொதுமக்களும், குறிப்பிட்ட பேருந்தின் ஓட்டுநரும், நடத்துனரும் திட்டுவது தான் மிச்சம்.

5 comments:

 1. romba correct..
  ana yaru idu ellam kepanga???

  ReplyDelete
 2. பஸ் டே அன்னிக்கு நான் படித்த கல்லூரிக்கு வர்ர அனைத்து தட பேருந்து ஓட்டுநர்கள்,நடத்துனர்களை கூப்பிடு கெளரவிப்பாங்க. ஆனா அன்னிக்கு பேருந்துல பசங்க அடிப்பாங்க பாருங்க ஒரு கூத்து சொல்றதுக்கே கேவலமா இருக்கும், இவங்கெல்லாம் என்னத்த படிச்சு என்ன பண்ணப்போறாங்கன்னு? :( ஓரளவு சேட்டைகள் பொருத்துக்கலாம் அதுவே அசிங்கமா போகும் போது ரொம்ப கோபமா வரும்.

  ReplyDelete
 3. சரியாகச் சொன்னீர்கள். ஒழுங்காக படிக்கும் எந்தவொரு மாணவனும் இப்படி செய்ய மாட்டான். (பெரும்பாலும்) தரமில்லாத கல்லூரிகளில் படிக்கும் தரமில்லாத மாணவர்கள் தான் இப்படி செய்வார்கள். பேருந்துக்குள் மகிழ்ச்சியை கொண்டாடலாம். சேட்டைகள் செய்யலாம். கல்லூரி பருவம் சேட்டைகளும் சந்தோசங்களும் நெகிழ்ச்சி களும் நிறைந்தது தான். ஆனால் பேருந்தில் மேல் ஏறி ஆரவாரம் செய்வது ஏற்றுக்கொள்ள முடியாதது. வருடா வருடம் இந்த கூத்து நடந்து கொண்டு தான் இருக்கிறது.

  ReplyDelete
 4. நியாயமான கோபம்தான்...

  ReplyDelete
 5. செவிடன் காதில் ஊதிய சங்கு.

  ReplyDelete