எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, February 11, 2008

உலகின் முதல் பிச்சைக்காரர்கள்


உலகத்தின் முதல் இரண்டு பிச்சைக்காரர்களே அந்த அரியும், அரனும் தான், இதுக்கு ஏன் எல்லாரும் இவ்வளவு வருத்தப் படறீங்கனு புரியலை! நாம எல்லாம் பிச்சை எடுக்கக் கத்துக்கும் முன்னேயே அந்த அரி, மகாபலி கிட்டேயும், அந்த அரன் சொந்தப் பெண்டாட்டி கிட்டேயும் பிச்சை எடுத்திருக்காங்க, ஆகவே நான் எழுதினதில் தப்பு இருக்குன்ற எண்ணமோ, அதுக்காக வருத்தப் படணும்னோ எனக்குத் தோணலை. யாரையாவது வருத்தி இருக்குன்னா, அது நான் புரிகிறாப்பலே எழுதலைங்கறதாலேத் தான் இருக்கணும். அதுக்கு நானே முழுப் பொறுப்பு ஏத்துக்கறேன். யாரும் வருத்தப் படவேண்டாம்.

13 comments:

  1. அவங்க எடுத்து இருக்கலாம், எல்லாத்துக்கும் ஒரு காரண காரியம் இருந்தது.

    அதுக்காக, காரக்கால் அம்மையாராகிய நீங்க, "பித்தா! பிறை சூடிய பெருமானே!"னு சுந்தர மூர்த்தி நாயனார் ரேஞ்சுக்கு பதிவுக்கு தலைப்பு வைத்திருக்க வேண்டாம் என்பது தான் கேஆரெஸ், மதுரையம்பதி போன்றவர்களின் வாதம். :))

    (ஹிஹி, அவங்க வாதம் செய்லைனாலும், கோர்த்துவிடுவோம் இல்ல) :p

    ReplyDelete
  2. //உலகத்தின் முதல் இரண்டு பிச்சைக்காரர்களே அந்த அரியும், அரனும் தான், இதுக்கு ஏன் எல்லாரும் இவ்வளவு வருத்தப் படறீங்கனு புரியலை!//

    கீதாஜி,

    ஹரியும் ஹரனும் எபக்டிவ் டெக்னாலஜிக்காக Conglomerate-Merger-takeover நடந்தி "Combo" வாகி ஹரிஹரனான என்னோட தொழில் ரகசியத்தை பேடண்ட் செய்ய வேண்டுமா என்று சிந்திக்க வைத்திருக்கின்றீர்கள்!

    உலகில் இருக்கும் எல்லா மனிதர்களுமே பிச்சைக்காரர்கள் தானே?

    பிச்சை கேட்கும் ஐட்டம் தான் அன்பு, அதிகாரம், பணம், பாசம் அறிவு, சொத்து என்று வேறுபடுகிறது!

    ReplyDelete
  3. அது எப்படி நீங்க மாத்திரம் மூன்று கால்கள் உள்ள முயலாக பார்த்துப் பிடிக்கிறீர்கள்

    ReplyDelete
  4. "பிச்சை எடுக்கும் பெருமாள் " என வெகுளியின் உச்சிக்குச் செனற போதும்
    " பட்டினி கிடக்கும் பெருமாள்" என பாசமுடன் இரங்கி நீர் வடித்த போதும்
    "பிச்சைகளே முதன் முதலில் அவ்விரு ஹரி ஹரன் தான்" எனப்
    பக்குவமாய், பாங்காய் தன் முடிவைச் சொன்னபோதும் = அந்தப்
    பச்சைமா மலை போல் மேனியவன் பவள வாய் திறந்து
    ஒரு வார்த்தை சொல்லாது ஓங்கி உலகளந்தவன்
    ஊமை போல் நிற்கின்றான்...இல்லை..
    உற்றுப்பாருங்கள் !
    நமைப் பார்த்து நகைக்கின்றான்.
    சுப்பு ரத்தினம்.
    தஞ்சை.
    பி.கு: லைட்டர் வீனில்:
    விடியற்காலைலே தூக்கம் வராம எழுந்துகொண்டு, இந்தக் கிழவி எப்ப எழுந்துண்டு
    ஒரு வாய் காபி தருவான்னு ஏங்கும் நானே உலகில் முதல் பிச்சைக்காரனாக
    தோன்றுகிறது. (அங்கே எப்படியோ?)
    அது சரி, தஞ்சாவூர் வரை வந்தவர் எனது வீட்டில்
    ஒரு டிகிரி காபி சாப்பிட வந்திருக்கக் கூடாதா ?
    அடுத்த தடவை அவசியம் வரவும்.

    ReplyDelete
  5. // பிச்சை கேட்கும் ஐட்டம் தான் அன்பு, அதிகாரம், பணம், பாசம் அறிவு, சொத்து என்று வேறுபடுகிறது!// WOW!
    !

    ReplyDelete
  6. //வைத்திருக்க வேண்டாம் என்பது தான் கேஆரெஸ், மதுரையம்பதி போன்றவர்களின் வாதம். :))

    (ஹிஹி, அவங்க வாதம் செய்லைனாலும், கோர்த்துவிடுவோம் இல்ல) :p//

    ஏதேது அம்பி விஷமத்திற்கு எல்லையே இல்லை போல. கே.ஆர்.எஸ் என்ன சொன்னாரோ தெரியாது, நான் ஒண்ணுமே சொல்லையப்பா.

    சூரி சார், என்னது கீதாம்மாகிட்ட காப்பி பற்றி பேசறீங்களா?..

    கீதாம்மா, உங்க காபி பிரதாபம் தெரியாம இருக்கார் சூரி சார். கொஞ்சம் ஜி-டாக் / ஈமெயில் -ல எடுத்து விடுங்க.

    ReplyDelete
  7. @ambi, அதான் நாரதர்னு தெரியுமே, இன்னும் சபையிலே வச்சு வேறே பீத்திக்கணுமா என்ன? :P

    @வேதா, ஹிஹிஹி, நன்னி, நன்னி, நன்னி!

    @ஹரிஹரன், வாங்க, வாங்க, ரொம்ப நாளாச்சு பாத்து, அது எப்படி உங்க பேர் போட்டதைத் தெரிஞ்சு வச்சு வந்திருக்கீங்க?

    //ஹரியும் ஹரனும் எபக்டிவ் டெக்னாலஜிக்காக Conglomerate-Merger-takeover நடந்தி "Combo" வாகி ஹரிஹரனான என்னோட தொழில் ரகசியத்தை பேடண்ட் செய்ய வேண்டுமா என்று சிந்திக்க வைத்திருக்கின்றீர்கள்!//

    வித்தியாசமாச் சிந்திக்கிறீங்க! :P

    ReplyDelete
  8. @திராச, சார், அதெல்லாம் ஒரு டெக்னிக் தான் வேறே என்ன? தவிர, நான் தனிப்பெரும் தலைவி இல்லையா? அதான், மூணு கால் முயலா வந்து மாட்டிக்குது! :P

    சூரி சார், காஃபி தானே, அதான் மெளலி சொல்லி இருக்காரே! நேத்துக் கூட அவர் வீட்டிலே காஃபி எல்லாம் போட்டு வச்சுட்டுத் தான் ஆஃபீஸ் வந்தேன்னு சொன்னார்.Of Course, சமையலையும் முடிச்சுட்டுத் தான், மெளலி, நீங்க சொல்லச் சொன்னதைச் சொல்லிட்டேன், சரியா?

    எங்க வீட்டிலே நான் உடம்பு சரியில்லைனாக் கூட நானே எழுந்து காஃபி சாப்பிட்டுட்டு, அவருக்கும் கொடுத்துட்டுத் திரும்பி படுத்துக்கணும், ஒரு காலத்திலே, இப்போப் பரவாயில்லை சார், எழுப்பினா எழுந்து காஃபி போட்டுக் கொடுப்பார், முடியலைனா! :))))))) ஆனால் இந்த்க் காலைத் தூக்கம் இருக்கு பாருங்க, அதிலே அவரை பீட் செய்ய நம்மளால் முடியாது. நானெல்லாம் கோழித் தூக்கம் தான், காலம்பர 4 மணிக்கு முழிப்பு வரும்! கொட்டுக் கொட்டுனு உட்கார்ந்திருப்பேன், காவல் வேண்டாம்னு அவர் சொல்லுவார்! :P

    @திவா, நமக்கு நாமே மான்யம் கொடுத்துக்கறோம்னு திராச சார் சொல்லப் போறார்! :))))

    ReplyDelete
  9. ஹிஹிஹி, மெளலி, காஃபி பத்தி சொல்லச் சொன்னீங்களே, சொல்லிட்டேன், போதுமா, இன்னும் வேணுமா? :P

    ReplyDelete
  10. நானெல்லாம் கோழித் தூக்கம் தான், காலம்பர 4 மணிக்கு முழிப்பு வரும்! கொட்டுக் கொட்டுனு உட்கார்ந்திருப்பேன், காவல் வேண்டாம்னு அவர் சொல்லுவார்! :P
    ஆமாம் ரொம்ப கஷ்டம்தான். வீட்டுக்கு மட்டுமா/ அம்பத்தூருக்கே காவல் தெய்வமாச்சே:P

    ReplyDelete
  11. நான் வருத்த படவில்லை அக்கா..

    நட்போடு
    நிவிஷா

    ReplyDelete
  12. கீதாம்மா, ஏதேது, "தன்னைபோல் பிறரை நினை" அப்படிங்கறத நல்லா பின்பற்றுகிற மாதிரி இருக்கு? :-)

    ReplyDelete
  13. @திராச, சார், என்ன தவறாமல் வரீங்களேன்னு பார்த்தால் உ.கு. எல்லாம் பலமா இருக்கு, அப்புறம் நீங்க உங்க அருமைத் தங்கையைக் கூப்பிட்டு விருந்து போட்ட கதையை அவிழ்த்து விடலாமானு யோசிக்க வேண்டி இருக்கும். எஸ் கே எம், நீங்க சொல்லச் சொன்னதைச் சொல்லியாச்சு, வந்து பாருங்க, சீக்கிரமா! :P

    நிவிஷா, நன்றி.

    @மதுரை, என்ன காலங்கார்த்தாலே இந்தப் பக்கம் விஜயம்? இன்னிக்கு லீவா எல்லாத்துக்கும்? :P

    ReplyDelete