எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, February 19, 2008

தமிழ்த் தாத்தாவின் பிறந்த நாள்


இன்று மகா வித்துவான் உ.வே.சுவாமிநாத ஐயரவர்களின் பிறந்தநாள். பல சுவடிகளையும், ஏடுகளையும் தேடிக் கண்டு பிடித்து நமக்கெல்லாம் இவர் அளிக்கவில்லை எனில், பல நூல்கள் பற்றியும் நாம் அறிய முடியாமலே போயிருக்கும். வாழ்நாள் முழுதும் தமிழுக்காகவே வாழ்ந்தவர் தமிழ்த் தாத்தா அவர்கள். திருவாடுதுறை ஆதினத்தின் மகா வித்துவான் ஆன ஸ்ரீமீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களிடம் பாடம் கேட்டவர். அந்தக் கால கட்டத்தில் ஆங்கில மோகமே அதிகமாய் இருந்து வந்தாலும் இவர் தமிழின்பால் மிக்க ஆசையுடனும், அன்புடனும், ஆர்வத்துடனும் பாடம் கேட்டவர். பின்னர் கும்பகோணம் கல்லூரியிலும், சென்னைக் கல்லூரியிலும் தமிழாசிரியராகப் பணியாற்றி வந்தார். திருவாடுதுறை ஆதீனத்தின் மடத்தில் தமிழ் மற்றும் வடமொழி பயின்று வந்த பலரும் இருந்தனர்.அவர்களில் சில தம்பிரான்களும் இருந்திருக்கின்றனர். அவர்களிடையே பதவிகளில் மட்டுமில்லாமல் உணவு பரிமாறுவதிலும் தார, தம்மியம் இருந்து வந்திருக்கிறது. மாணாக்கர்கள் உணவுச்சுவையிலே கருத்தை ஊன்ற ஆரம்பித்தால் பாடம் கேட்பதிலே கருத்துக் குறைந்துவிடும் என்ற எண்ணமே காரணம். எது கிடைத்தாலும் அருந்தித் தேர்ச்சி பெற்றவர்கள் பின்னாட்களில் நல்ல நிலைமையை அடைவார்கள் என்ற எண்ணமும் காரணமாய் இருக்கலாம். என்றாலும் அப்படி ஒன்றும் அப்போது நல்ல உணவு என்பது அனைவருக்கும் கிடைக்கவில்லை.

ஒரு முறை மிக்க பசியோடு ஆசிரியர் ஆன மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களும், சுவாமிநாத ஐயரவர்களும் மகா ஆதீனத்த்தைப் பார்த்துவிட்டுத் திரும்புங்காலையில், ஆதீனம் அவர்கள், இருவரிடமும், தன்னுடனேயே சேர்ந்து உணவருந்திவிட்டுச் செல்லுமாறு வேண்டுகோள் விடுக்கவே இருவரும் மகா ஆதீனத்துடனேயே உணவு அருந்தினார்களாம். அப்போது உணவில் நெய்யும், தயிரும் பரிமாறப் படவே, மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள், சுவாமிநாத ஐயரவர்களிடம், சுவாமிநாதா, நமக்கு இன்று அதிர்ஷ்டகரமான நாள், நெய்யும், தயிரும் கிடைக்கிறது எனச் சொன்னாராம்.

இப்படி உணவில் கூட நெய்யையும், தயிரையும் எப்போதாவது மட்டுமே பார்த்து தமிழ் மொழியை மட்டுமே நினைத்துக் கொண்டு, இவர்கள் உடல் வருந்தித் தொண்டாற்றிய தமிழ் மொழியை வளர்க்கப் பாடுபடுவோம்.

12 comments:

  1. ப்ளாகர் திடீர்னு "தமிழ்த் துரோகி"யாக மாறிக் காலம்பரத்திலே இருந்து இதைப் பப்ளிஷ் பண்ண மாட்டேன்னு அடம் பிடிச்சது. ஒரு வழியாத் தாமதமாகவாவது பப்ளிஷ் பண்ணிட்டேன். என்னவோ போங்க, நான் தமிழ்த் தொண்டாற்றுவது ப்ளாகருக்குக் கூடப் பிடிக்கலை, இதிலே மின் தடை வேறே! :(((((((

    ReplyDelete
  2. வாழ்க உவேசா புகழ்!
    வளர்க தமிழ் ஆய்வு!

    நன்றி,
    நா. கணேசன்
    http://nganesan.blogspot.com

    ReplyDelete
  3. //நான் தமிழ்த் தொண்டாற்றுவது ப்ளாகருக்குக் கூடப் பிடிக்கலை//
    வேறு யாருக்கு பிடிக்கவில்லை?
    தமிழ் தாத்தாவை நினைத்து ஆறுதல் பட்டுக்கொள்ளலாம். அவர் பட்ட கஷ்டத்தில் இது கொஞ்சம்தானே.

    ReplyDelete
  4. தமிழ்த்தாத்தா உ.வே.சுவாமினாத ஐயர் பற்றிய தகவல்களை அவர்தம்
    பிறந்த நாளன்று நீங்கள் எடுத்துசொல்வதன் வாயிலாக, இன்று தமிழ் மக்கள் அவருக்கு செலுத்தவேண்டிய‌
    நன்றிக்கடனை தங்கள் பதிவு மூலம் செலுத்தியுள்ளனர். இதுவும் தமிழ்த்தொண்டேயாம். தமிழ் நாட்டின் தவப்புதல்வர் உ.வே.சு. அவர்கள்.அவர் சென்னை கல்லூரியில் உரையாசிரியராகப் பணி புரிந்த காலத்தில், காலையிலும் மாலையிலும் தம் வீட்டுத்திண்ணையிலே குழந்தைகளுக்கு ஆத்திசூடி, கொன்றைவேந்தன், அறனெறிச்சாரம் ஆகியவற்றினைச்சொல்லிக்கொடுப்பாராம். அந்த திண்ணைப்பள்ளி மாணவர், மாணவிகளிலே தானும் ஒன்றாக இருந்திருக்கிறேன் என (அண்மையிலே தனது 87 வயதில் காலமான ) என் அன்னை கூறியதை நினைவு கூறுகிறேன்.
    சுப்புரத்தினம்
    தஞ்சை.
    http://vazhvuneri.blogspot.com

    ReplyDelete
  5. //வாழ்க உவேசா புகழ்!
    வளர்க தமிழ் ஆய்வு!//
    naanum sollikiren..

    natpodu
    nivisha

    ReplyDelete
  6. வாழ்க உவேசா புகழ்!
    வளர்க தமிழ் ஆய்வு!

    //என்னவோ போங்க, நான் தமிழ்த் தொண்டாற்றுவது ப்ளாகருக்குக் கூடப் பிடிக்கலை,//

    பிளாக்கருக்கு கூட உங்க தமிழ் தொண்டு பத்தி தெரிஞ்சு இருக்கு. :p

    ReplyDelete
  7. தமிழ் தாத்தாவைப் பற்றிய தமிழ்------யின் பதிவு ஜோர். எல்லோராலும் மறந்தவர். அவர் பண்ண தப்பு ஒன்னே ஒன்னுதான் அதே தப்பைத்தான் பாரதியாரும் செய்தார்

    ReplyDelete
  8. @நா,கணேசன், வாங்க, முதல் வரவுக்கு நன்றி. உங்க பதிவிலேயும் போய்ப் பார்த்தேன்,

    @திவா, நறநறநறநறநறநற, என்னனு சொல்றது? நான் கஷ்டப் படறதிலே அவ்வளவு சந்தோஷமா? இந்த லட்சணத்திலே "தம்பி"னு வேறே எழுதிக்கணுமா? :P :P

    ReplyDelete
  9. @சூரி சார், ரொம்ப நன்றி, உங்க அம்மா பத்தின நினைவுகளைப்பகிர்ந்து கொண்டதற்கு. தமிழ்த் தாத்தா பற்றி இன்னும் ருசிகரமான தகவல்கள் சொல்லி இருந்தா அதையும் எழுதுங்க சார், நன்றி.

    @நிவிஷா, நன்றிம்மா.

    @அம்பி, நீங்க செய்யற தொண்டை விட நான் செய்யறது எவ்வளவோ மேல். நீங்க மண்டபத்திலே எழுதி வாங்கற மாதிரியா நான் எழுதி வாங்கறேன். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :P

    ReplyDelete
  10. //தமிழ் தாத்தாவைப் பற்றிய தமிழ்------யின் பதிவு ஜோர். //

    திராச, சார், என்னவோ இடிக்குதே? ஏதோ உ.கு.மாதிரித் தெரியலை? இல்லை, புகை வாசனை வருதோ? :P :P

    ReplyDelete
  11. //
    @திவா, நறநறநறநறநறநற, என்னனு சொல்றது? நான் கஷ்டப் படறதிலே அவ்வளவு சந்தோஷமா? //
    அக்கா எப்படி தம்பி அப்படி! நீங்க அதுக்கெல்லாம் பதிவே போடறீங்களே?

    //இந்த லட்சணத்திலே "தம்பி"னு வேறே எழுதிக்கணுமா? :P :P//

    ஏன் கவலை? அப்படி எனக்கு என்ன வயசாச்சு? ஒரு 15 இருக்குமா?

    :-))))

    ReplyDelete
  12. @திவா,
    //ஏன் கவலை? அப்படி எனக்கு என்ன வயசாச்சு? ஒரு 15 இருக்குமா?

    :-))))//

    இல்லை, இல்லை, நீங்க இன்னும் பிறக்கவே இல்லை, ஓகேயா? போய் உங்க மனைவி கிட்டேயும் சொல்லி வைக்கிறேன். :P :P

    ReplyDelete