எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, January 13, 2009

பொங்கலோ பொங்கல் ! 2

கிருஷ்ணாவதாரத்தில் சூரிய வழிபாடு நதிக்கரையில் செய்யப் பட்டதாய்ச் சொல்லப் பட்டாலும், அதற்கும் முன்னரே ராமாயண காலத்தில் ஸ்ரீராமர், ராவணனை வெல்வதற்காக அகத்தியரின் அறிவுரைப்படி ஆதித்ய ஹ்ருதயம் படித்து சூரியனுக்காக விரதம் இருந்து, பின்னர் போருக்குப் புறப்பட்டதாய் வால்மீகி சொல்கின்றார். சூரியனை வழிபடுவது என்பது தொன்று தொட்டு இருந்து வந்திருக்கும் ஒரு வழிபாடு ஆகும். நம் கண்ணுக்கு அன்றாடம் தெரியும் நிதரிசனக் கடவுள் சூரியனே ஆகும். தென் திசையில் பயணித்துக் கொண்டிருந்த சூரியன் தன் பயணத்தை வடதிசைக்கு மாற்றும் நாளே உத்தராயன புண்ணியகாலம் என்றழைக்கப் படுகின்றது. இந்த வடதிசைக்கு சூரியன் மாறும் நாளே தை மாதம் முதல் தேதியன்று நம் தமிழ்நாட்டில் பொங்கலாகக் கொண்டாடப் படுகின்றது. சூரியன் இல்லையேல் மழையும் இல்லை, மண் வளமும் இல்லை, தட்பமும், வெப்பமும் இணைந்த சூழலில் தான், பயிர், பச்சைகள் செழிப்பாய் வளரவும் முடியும். ஆகவே விஞ்ஞான ரீதியாகவும் சூரிய ஒளி இன்றி எதுவும் செய்ய முடியாதல்லவா? அதற்கான நன்றி நவிலலே பொங்கல் என்றும் கூறலாம்.

போகி அன்று பழையன கழித்து, புதியன வாங்குவதையும், வீட்டில் உள்ள பழைய பொருட்களை எரித்தும் கொண்டாடுகின்றோம். இந்தப் பொருட்களை எரிக்கும்போது சிறு குழந்தைகள் "போகி மேளம்" என்றதொரு சிறு கருவியால் கொட்டி ஆடிப் பாடிக் குதிப்பார்கள். எங்க தெருவிலே இன்னிக்குக் காலை 3 மணியிலிருந்தே போகி கொட்ட ஆரம்பிச்சு, ஒருவழியா ஆறு மணியோட முடிஞ்சது. இதற்கான காரணம் என்ன என்று சொல்லுவதென்றால் அதற்கும் கண்ணனே வந்துடறான் முந்திக் கொண்டு. இந்திரனுக்கு மற்றொரு பெயர் போகி என்பதாகும். மழையைப் பொழிய வைக்க இந்திரனை வணங்குவதுண்டு. மழை பொழிய வைக்கும் இந்திரனுக்கு நன்றியாகவே தை முதல்நாள் அறுவடை ஆகும் பயிர்களை படையலாக வைத்து வணங்கும் வழக்கம் இருந்து வந்ததாய்த் தெரிய வருகின்றது. ஸ்ரீ கிருஷ்ணர் கோகுலத்தில் வளர்ந்து வந்தபோது இம்மாதிரி தை மாதம் இந்திரனுக்கு விழா எடுக்கும் நாள் வந்தபோது கிருஷ்ணர் கோகுலத்து மக்களை இந்த வழிபாட்டை நியாயமாய் கோவர்த்தனகிரிக்கும், அவற்றை எல்லாம் படைத்துக் காத்து ரட்சிக்கும் வாசுதேவன் ஆகிய ஸ்ரீமந்நாராயணனுக்கே செய்யவேண்டும் என்றும், ஆகையால் அவனின் அம்சம் ஆன சூரியநாராயணனுக்கு இந்த வழிபாட்டைச் செய்யும்படிக்கும் மாற்றத்தைக் கொண்டு வந்தார்.

ஆத்திரம் அடைந்த இந்திரன் கோகுலத்திலும், சுற்று வட்டாரத்தில் இதுவரை காணாத அளவுக்குப் பேய் மழையாகப் பொழிய, கோகுலமே நிலை குலைந்தது. கண்ணனோ சற்றும் கலங்காமல் கோவர்த்தனகிரியைக் குடையாய்ப் பிடித்து மக்களைக் காப்பாற்றினார். கோகுலத்தின் ஒரு ஈ, எறும்புக்குக் கூட துன்பம் நேராமல் பாதுகாத்தார். (இது பற்றி பின்னர் விரிவாய்ப் பார்ப்போம்). இந்திரன் வெட்கம் கொண்டு ஸ்ரீமந்நாராயணனைச் சரணடைய அவர் சங்கராந்திக்கு முதல்நாளை இந்திரன் பெயரால் போகிப் பண்டிகை எனக் கொண்டாடுவார்கள் என அவனை சமாதானம் செய்தாராம். காளிங்க மடுவில் குதித்துக் கண்ணன் காளிங்கனை வதம் செய்தபோதும் இந்த மாதிரி ஒரு போகி நாள் என்றும், அன்று கண்ணனுக்குக் காளிங்கனின் விஷம் ஏறாதபடிக்கு ஆயர்பாடிச் சிறுவர்கள் தீ மூட்டி, பறை கொட்டி இரவு முழுதும் தாங்களும் விழித்திருந்து, கண்ணனும் தூங்காமல் விழித்திருக்கும்படிச் செய்தனர் என்றும் அதன் காரணமாகவே போகியன்று பறை கொட்டும் வழக்கம் ஏற்பட்டதாயும் தெரிய வருகின்றது.

இனி பொங்கல் பற்றிய விபரங்களை நாளை பார்ப்போம்!

7 comments:

  1. மிகவும் அருமையான பதிவு. வாழ்த்துக்கள் !


    தமிழ்மணம் விருதுக்கான வாக்கெடுப்பில், என் படைப்புக்கள் தங்களுக்குப் பிடித்திருந்தால் வாக்களிக்குமாறு வேண்டுகிறேன்.

    கவிதை : " கரிசக்காட்டுப் பொண்ணு"
    சினிமா விமர்சனம் : விஜயின் "குருவி" படக் கதை - சிரிப்ப அடக்கிகிட்டு படிங்க


    உழவர் திருநாள் வாழ்த்துக்களோடு...
    உழவன்

    ReplyDelete
  2. அருமை.

    இனிய பொங்கல் வாழ்த்து(க்)கள்.

    ReplyDelete
  3. //நம் கண்ணுக்கு அன்றாடம் தெரியும் நிதரிசனக் கடவுள் சூரியனே ஆகும்//

    இந்த வரிகளுக்கு ஒரு 'ஓ' !

    ReplyDelete
  4. தலைவிக்கு இனிய பொங்கல் வாழ்த்துக்கள் ;))

    ReplyDelete
  5. வாங்க உழவரே, இத்தனை வேலையிலே பதிவும் உழுதிட்டு, சீச்சீ, எழுதிட்டு, இங்கேயும் வந்ததுக்கு நன்னிங்க! வாழ்த்துகள் தாமதமாய்ச் சொல்றேன்!

    ReplyDelete
  6. வாங்க துளசி, வாழ்த்துகள், அதென்னமோ தெரியலை, கொஞ்ச நாளா என்னைப் பின்னூட்டமே கொடுக்கவோ, பின்னூட்டங்களுக்குப் பதில் கொடுக்கவோ ப்ளாகர் விடறதில்லை, அதான் சரியா யாருக்கும் பின்னூட்டம் போட முடியலை கொஞ்ச நாளா! :(((((((

    ReplyDelete
  7. வாங்க கோவி, நிதரிசனம் நிதரிசனமாத் தெரியும்போது அதைச் சொல்லணும் இல்லையா?? நன்றிங்க, வந்ததுக்கு!

    வாங்க கோபி, விடாமல் படிக்கிறீங்கனு தெரியும்! நன்றிங்க!

    ReplyDelete