எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, January 23, 2009

நான் ஒரு வியர்டு????

தெரியலைங்க, கொஞ்ச நாட்களாகவே,2 மாசமா???? கமெண்ட்ஸுக்கு பதில் கொடுத்தாலோ, அல்லது நான் யாரோட பதிவிலேயாவது போய் கமெண்ட்ஸ் போட்டாலோ, அது பப்ளிஷ் கொடுத்ததும், பப்ளிஷ் ஆகிறதுக்கு பதிலாய், Are you sure you want to navigate from this page? அப்படினு கேட்குது மெசேஜ். நான் என்னமோ இல்லைப்பா, நான் போகலை, இந்தப் பதிவிலே எனக்கு வேலை இருக்குனு சொல்லி, No தான் கொடுப்பேன். ஆனாலும், உடனேயே பக்கமே காணாமல் போயிடுது! about:blank அப்படினு வரதோட, address bar, task bar, tabs எல்லாமே நடுங்க ஆரம்பிச்சுடுது. (குளிர்காலம்கிறதாலேயோ??, எனக்கு ஒண்ணும் குளிரலை!:P)

அப்புறமா கணினியை ஷட் டவுன் பண்ண ஜன்னலைத் திறந்தா அது கைக்கே மாட்டிக்கிறதில்லை. ஒரு பத்து நிமிஷமாவது ஆகவேண்டி இருக்கு, நடுக்கம் நின்னு, ஜன்னல் திறக்க. அதுக்கு அப்புறமா திரும்ப re-start கொடுத்து மறுபடி வரவேண்டி இருக்கு. இதுக்கு என்ன காரணம்?? சிலபேர் கிட்டே கேட்டேன், அவங்களுக்கும் ப்ளாகர் பிரச்னை இருக்குனு சொல்றாங்க. ஆகவே இது பற்றி என்ன செய்யணும்னு தொழில் நுட்ப நிபுணர்கள் எல்லாம் கலந்தாலோசித்து ஒரு நல்ல முடிவாச் சொல்லுங்க. 2,3 நாளைக்கு இருக்க மாட்டேன், அதனால் நீங்க போடற கமெண்ட்ஸை எல்லாம் அப்புறம் தான் பார்ப்பேன். (என்னமோ கமெண்ட்ஸ் மழை பொழியறாப்போல, அப்படினு மன சாட்சி அதட்டுது! அது கிடக்கடும்.)

யாரும் நான் வரலை, கமெண்டலைனு கோவிச்சுக்காதீங்க, கமெண்டறதுக்காகவே ஒவ்வொருத்தர் பதிவுக்கும் 3 முறையாவது போகவேண்டி இருக்கு! :))))))) அப்புறம் நாம எங்கே பதிவு எழுதறதும், கமெண்ட்ஸுக்கு பதில் சொல்றதும்??? சொல்ல மறந்துட்டேனே, கமெண்ட்ஸ் போடறப்போ மட்டும் தான் இந்தப் பிரச்னை! ஒருவேளை அ.பி.னு சொல்லுதோ ப்ளாகர்?? :P:P:P:P

12 comments:

  1. நாலு பேர் நல்லா(மகிழ்ச்சியா) இருப்பாங்க என்றால் நாலு தடவை முயற்சி செய்து ஒரு கமெண்ட் போடுவது தப்பு இல்லை. ;)

    ReplyDelete
  2. வயசானாலே இந்த மாதிரி பிரச்சினைகள் வரத்தான் செய்யும்!

    ReplyDelete
  3. என்னால ஈசியா கமெண்ட் போட முடிகிறது!

    ReplyDelete
  4. ப்லாக்ர் பிரட்சனை அல்ல

    உங்கள் உலவி அல்லது நெட்வொர்க்

    நீங்கள் வந்த பின் தொடர்பு கொள்ளுங்கள்.

    ReplyDelete
  5. // Are you sure you want to navigate from this page? அப்படினு கேட்குது ///

    எனக்கும் கூட சில தடவைகள் இப்படி கேக்கும் ஆனா நான் “இல்ல முடியாது நான் இங்க இப்ப கும்மி அடிக்கணும்ன்னு முடிவு பண்ணிட்டேன் விடாப்பிடியா சொல்லிடுவேன் அப்புறம் ஒழுங்கா இருக்கும்! நான் கமெண்டிட்டு எஸ்ஸாகிடுவேன் :)))))

    ReplyDelete
  6. You are using optical mouse which needs cleaning. Because of dust particle or malfunctioning, this is continuously giving click messages.

    This is a common issue. Easy to resolve. Good luck!

    Jay

    ReplyDelete
  7. எல்லாருக்கும் என்னென்னவோ ப்ரச்சனை. உங்களுக்கு கணினிதானே ப்ரச்ச்னை? இதுக்கெல்லாம் புலம்பறீங்கன்னா நீங்க குடுத்து வச்சவங்கதான் கீதாம்மா :)

    ReplyDelete
  8. கணினிக்கு ஸ்வெட்டர் தெச்சுப் போடுங்க. - குளிரால் நடுக்கம் என்றால் இதமாக இருக்கும்.

    கணினிக்கு ஒரு குவாட்டர் வாங்கி ஊத்துங்க - குடிப்பழக்கத்தால் வந்த நடுக்கம் என்றால் நிற்கும்.

    கணினிக்கு முதுகு காமிச்சு உட்காருங்க - உங்க முகத்தைக் கண்டு வந்த பயத்தினால் ஏற்படும் நடுக்கம் என்றால் நிற்கும்.

    இன்னும் ஒரு கணினி வாங்கிப் போடுங்க - தனிமையால் வந்த பயத்தினால் ஏற்பட்ட நடுக்கம் என்றால் நிற்கும்.

    கொஞ்ச நாள் பதிவு போடாதீங்க - இப்படி மொக்கைப் பதிவாப் போட்டு உலக மக்களை வதைக்கும் வஞ்சகத்திற்குத் துணை போகிறோமே என்ற உணர்வால் வந்த நடுக்கம் என்றால் நிற்கும்.

    ReplyDelete
  9. // Are you sure you want to navigate from this page?//

    இது Explorer-ல் வர்ற பிரச்சனை. அப்போ No குடுக்கக் கூடாது. yes குடுக்கணும். :)

    நான் Fire fox பயன்படுத்த ஆரம்பிச்ச காரணமே இதனாலத் தான். Explorer settings உள்ள போய் மாத்ற மாதிரி ஏதாவது இருக்கும். விஷயம் தெரிஞ்சவங்க சொல்லட்டும். தெரிஞ்சுக்குவோம் :))

    ReplyDelete
  10. \\அ.பி.னு சொல்லுதோ ப்ளாகர்?? :P:P:P:P
    \\

    அ.பி.னு?? புரியல??

    ReplyDelete
  11. கபீரன்பன் சொன்னது போல are yoou sure you want to navigate from this page ன்னு கேட்டா ஆமாம் ன்னு சொல்லனும்.
    இவங்க பிரச்சினை எல்லாம் பாத்து சிரிச்சுகிட்டு இருந்தேன். எனக்கும் அதே பிரச்சினைகள் வந்தாச்சு. என்னமோ இணையத்துக்கு உடம்பு சரியில்லை போல இருக்கு. இப்ப பறக்குது.;-)

    ஆப்டிகல் சொடுக்கி அதாங்க மௌஸ் பயன்படுத்தினா கீழே வைக்கிற mouse pad வெள்ளையா இருக்கணும். கலர் கூடாது. அப்பதான் அது சரியா வேலை செய்யும். அதில அழுக்கு படிஞ்சாக்கூட பிரச்சினை பண்ணும். துணிகள் கூட வர வெள்ளை அட்டையை வெச்சாக்கூட போதும்.

    ReplyDelete
  12. பதில் சொன்ன அனைவருக்கும் நன்றிகள்.

    நட்புடன் ஜமால், இப்போ கொஞ்ச நாட்கள் நான் இருக்க மாட்டேன், ஆனால் கட்டாயமாய் உங்களைத் தொடர்பு கொள்கின்றேன்.

    ReplyDelete