எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, September 11, 2009

இறவாத் தமிழன்!


"என்றுமிருக்கவுளங்கொண்டாய்
இன்பத் தமிழுக்கிலக்கியமாய்
இன்றுமிருத்தல் செய்கின்றாய்
இறவாய் தமிழோடிருப்பாய் நீ!"


கவிதையும் பாரதியுடைய கவிதையே. இறவாமை என்ற தலைப்பில் தாயுமானவரை வாழ்த்தி எழுதிய கவிதையின் முதல் நான்கு வரிகள். அம்பியோட பின்னூட்டத்தைப் பார்த்ததுமே இதைக் குறிப்பிடாததால் எல்லாரும் எழுதினது நான் தான்னு நினைச்சுக்கப் போறாங்களேனு பயம்! :)))))) கவிதை எல்லாம் எழுதி யாரையும் பயமுறுத்தறதா இல்லை. பாரதிக்கு அஞ்சலி!

13 comments:

 1. நினைவு நாளா?

  வழக்கம் போல உங்க ஸ்டையிலுல சின்னதா ரெண்டு பாரா எழுதி இருக்கலாம். :))

  ஆமா இது உங்க சொந்த சரக்கா? :p

  ReplyDelete
 2. கடமை ஆவன: தன்னைக் கட்டுதல்
  பிறர் துயர் தீர்த்தல் பிறர் நலம் வேண்டுதல்
  விநாயகத் தேவனாய் வேலுடைக் குமரனாய்
  நாராயணனாய் நதிச்சடைமுடியனாய்
  பிற நாட்டிருப்போர் பெயர் பல கூறி
  அல்லா யெஹோவா என தொழுது இன்புறும்
  தேவரும் தானாய் திருமகள் பாரதி
  உமையெனும் தேவியர் உகந்த வான் பொருளாய்
  உலகெங்கும் காக்கும் 'ஒருவனை'ப் போற்றுதல்
  இந்நான்கே இப்பூமியில் எவர்க்கும்
  கடமை எனப்படும் பயன் இதில் நான்காம்
  அறம் பொருள் இன்பம் வீடு எனும் முறையே
  தன்னை ஆளும் சமர்த்து எனக்கு அருள்வாய்
  மணக்குள விநாயகா வான்மறைத் தலைவா
  தனைத் தான் ஆளும் தன்மை நான் பெற்றிடில்
  எல்லாப் பயன்களும் தாமே எய்தும்
  அசையா நெஞ்சம் அருள்வாய் உயிரெலாம்
  இன்புற்றிருக்க வேண்டி நின் இருதாள்
  பணிவதே தொழில் எனக் கொண்டு
  கணபதி தேவா வாழ்வேன் களித்தே! I like this one Mrs Sambashivam.My grandma had collection of Bharathyar's unpublished poems too.He was my gran's அம்மான் சேய்.

  ReplyDelete
 3. @அம்பி, திருத்திட்டேன், சொந்தச் சரக்கு இல்லை, பாரதியின் சரக்குத் தான். அதைக் குறிப்பிட்டிருக்கணும், திருநெல்வேலிக்காரங்க எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும்னு நினைச்சுட்டேன்! :P:P:P:P

  ReplyDelete
 4. அட, ஆஹா, ஜெயஸ்ரீ! எவ்வளவு அருமையான செய்தி கொடுத்திருக்கிறீர்கள்? இந்தக் கவிதையை நான் படிச்சிருக்கேன். உண்மையிலே பிள்ளையார் தொடரில் போடறதுக்காகத் தேடினேன், கிடைக்கலை. ரொம்ப நன்றிம்மா.

  அப்புறம்?? அந்த வெளியிடாத கவிதைகள் இன்னமும் இருந்தால் சொல்லுங்க, தமிழ்மரபுலே சேர்க்கலாம், பதிவுகளிலே போட்டுடலாம். எவ்வளவு அருமையான பொக்கிஷம்??? இருக்கா இல்லையா?????? :(

  ReplyDelete
 5. இந்தக் கவிதையை எங்கே படிச்சேன்னு நினைவில் இல்லை. பாண்டிச்சேரி சிறப்பிதழ் கல்கி??? ஹூஸ்டனில்??? சரியா நினைப்பில்லை! ஆனால் படிச்சிருக்கேன் ஒரு முறை மட்டுமே!

  ReplyDelete
 6. I don't remember the correct year and the magazine. I think it was Rani muthu in middle nineties published a collection of poems Mr Bharathy wrote during Mahathmaji's uppu sathyagraham/ non cooperation movement. I need make enquiries within my family whether anyone has that treasure.

  ReplyDelete
 7. ராணி முத்து?? இல்லாட்ட்டி ராணி??? ராணி முத்து பிரபலங்களின் கதைகளின் சுருக்கங்களை மட்டுமே மறு வெளியீடு செய்து வந்தது. அப்புறமாச் சில பிரபலங்களைப் புதுசாவும் எழுத வச்சது. போகட்டும், எங்கே இருக்கீங்க நீங்க? உங்க பதிலைத் தான் ஆர்வத்தோடு எதிர்பார்த்துட்டு இருந்தேன். கேட்டுச் சொல்லுங்க, முடிஞ்சால்! நினைக்கவே ஆச்சரியமாவும், சந்தோஷமாவும் இருக்கு. அந்தக் கவிதைகள் மட்டும் கிடைச்சால்!!!!!!!!

  ReplyDelete
 8. //திருநெல்வேலிக்காரங்க எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும்னு நினைச்சுட்டேன்!//

  தெரிஞ்சு தான் கேட்டேன் (அதான் ஸ்மைலி போட்ருக்கேனே!).

  கொஞ்சம் ஏமாந்தா மதுரை காரங்க மண்டபத்துல எழுதி குடுத்ததை கூட என்னுடையது தான் ஐயா!னு பாண்டிய மன்னன் காதுலயே பூ சுத்திடுவாங்க இல்ல, அதான் உங்க வாயில இருந்து என்ன வருது?னு கொஞ்சம் கிண்டி பாத்தேன். :))

  நின் தமிழோடு விளையாடவே யாம் இங்கு வந்தோம்.

  //He was my gran's அம்மான் சேய்.
  //

  @Jayshree, புதசெவி.

  ReplyDelete
 9. பாட்டி 7 /8 வயசுல படிச்சு காண்பித்த போது அதன் அருமை புரியலை.ஏன் பாட்டிக்கு அத்தனை பெருமைனும் புரியல்ல. இப்பொ புரிஞ்சது.3 இல்லைனா 4 பாட்டு தான்னு ஒர்மை.ஒரு சின்ன டப்பா ல சாமி பூஜை ரூம்ல வெச்சுருப்பா.
  me? enga irukken? ADHWANATHTHULA:)) Vera enga NZ Bharathiyar kitta sollidatheengo:))

  ReplyDelete
 10. //தான்னு ஒர்மை//

  ஜெயஸ்ரீ, நீங்க பாலக்காடு????? மேல்மங்கலம்னு சந்தோஷப் பட்டேனே! :))))))))))

  ஓகே, நியூசியிலே இருக்கீங்களா?? ம்ம்ம்ம்ம்ம்??? சரி, என்னோட அதிர்ஷ்டம் என்னனு தெரியலை! பார்க்கலாம்.

  ReplyDelete
 11. //நின் தமிழோடு விளையாடவே யாம் இங்கு வந்தோம்.//

  க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் பெரிசா முருகன்னு நினைப்பு>???? சகிக்கலை! :P:P:P:P

  ////He was my gran's அம்மான் சேய்.
  //

  @Jayshree, புதசெவி.//

  அசட்டு அம்மாஞ்சி அம்பியே, நீங்க அம்மாஞ்சினு எழுதி இருக்கிறதைத் தான் அவங்க அழகாச் சுத்தத் தமிழிலே அம்மான் சேய் அப்படினு சொல்றாங்க. புரிஞ்சுதா? பாரதி பிறந்த மண்ணுனு வெளிலே சொல்லிடாதீங்க! மானம் போயிடும்! :P:P:P:P

  ReplyDelete
 12. தமிழனுகே உண்டான அசை சீர் தொடை முரண்.நேர் நேர் தெமா நிரை நேர் புளிமா அப்படினு மரபுவழி கவிதை எழுதி திரியதில்லை எனக்கு தெரிந்து மரபு வழி கவிதை(செய்யுள்)படைத்த கடைசி புலவன் அவர்தான்..இங்கே அவனவன் புதுகவிதை பின்நவீனத்துவம் முன் நவீனத்துவம் ரசம் சாம்பார் மோர் அப்ப்டினு திரியிறான்.. அந்த கடைசி தமிழ் புலவனுக்கு என் அஞ்சலிகள்

  ReplyDelete