எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, September 19, 2009

நவராத்திரியில் நவதுர்கைகள் - கால ராத்ரி / சித்தாத்ரி! 1.!

இன்றைய அலங்காரம் துர்கை.

நவராத்திரிகளில் துர்க்கையை நவதுர்க்கா வடிவாக வழிபடுதல் மிகச் சிறப்பான ஒன்றாகும். ஒவ்வொரு கிழமைக்கும் ஒரு துர்க்கையாக நவராத்திரி ஒன்பது நாட்களும் வழிபடவேண்டும். பக்தர்கள் துயர் தீர்க்கும் துர்க்கையை வழிபட்டால் நவகிரஹ தோஷங்களும் விலகும் என்றும் சொல்லுவார்கள். இந்த வருஷம் நவராத்திரி சனிக்கிழமை அன்று ஆரம்பிக்கின்றது. அன்று வழிபடவேண்டியவள் “காலராத்ரி” “காலி” என்றெல்லாம் அழைக்கப் படும் அம்பிகை ஆவாள். கால என்பது காலத்தை மட்டும் குறிக்காமல், கறுப்பு நிறத்தையும், காற்றையும் குறிக்கும். காற்றின் வேகத்தில் நம்மிடம் வந்தடைவாள் காலி என அழைக்கப் படும் மஹாகாளி. காலத்தை வென்றவளான இவள் இரவைப் போன்ற கரிய நிறத்துடன் சற்று அச்சம் தரும் கோலத்திலேயே காணப் படுகின்றாள். என்றாலும் அன்பர்களுக்கு அருளும் தயவான உள்ளம் படைத்தவள் இவள். கரிய நிறத்துடன் மங்களங்களை அள்ளித் தருவதாலேயும் இவளுக்குக் காலராத்ரி எனப் பெயர் ஏற்பட்டது. ராத்ரி என்னும் சொல்லுக்கு இரவு என்ற பொருள் மட்டுமில்லாமல் மங்களம் என்னும் அர்த்தமும் உண்டு. மங்களகரமான காலத்தை ஏற்படுத்துவதாலும் மங்களகாலி என்றும் அழைக்கப் படுவாள் இவள். நவராத்திரி சனிக்கிழமைகளில் இவளை வணங்கலாம். சனீஸ்வரனின் ஆதிக்கத்தின் வலிமை கொஞ்சம் குறையும் என்பதோடு அதைத் தாங்கும் மனவல்லமையையும் அளிக்க வல்லவள் இந்தக் காளி. ஈசன் தாருகாமுனிவர்கள் ஏவிய கஜாசுரனைக் கொன்று யானைத் தோல் போர்த்தி ஆடிய ஆட்டம் பூதத் தாண்டவம் எனப் படும் அந்தத் தாண்டவத்தின் போது தோன்றியவள் காலராத்திரி என்பார்கள்.

சித்தாத்ரி: இவளும் சனிக்கிழமைகளில் வழிபடவேண்டியவளே. கேதுவின் பார்வையால் தீது வருமோ என அஞ்சுபவர்கள் இவளை வழிபடலாம். சித்தர்களுக்கும், ரிஷி, முனிவர்களுக்கும், அஷ்ட சித்திகளும் அளிக்க வல்லவள் இவள். அணிமா, மகிமா, கிரிமா, லகிமா, ப்ராப்தி, பரகாம்யம், ஈஷித்வம், வாஷித்வம் என்னும் அட்டமாசித்திகளை அளிப்பதால் இவளுக்கு சித்தாத்ரி எனப் பெயர் ஏற்பட்டது. நினைத்த காரியங்களில் சித்தியடையவும் இவளை வழிபடலாம் என்று சொல்கின்றனர். நவரசங்களையும் வெளிப்படுத்து நவரச நாட்டியத்தை சிவ நடனம் அல்லது சிருங்காரத் தாண்டவம் என்பார்கள். ஈசன் இந்தத் தாண்டவம் ஆடும்போது தோன்றியவளே சித்தாத்ரி அல்லது சித்தி ராத்திரி.

நவராத்திரியில் முதல்நாள் பொட்டுக் கோலம் போட்டு அம்பிகையை பாலை எனக் கூறி வழிபடவேண்டும். சிலர் குமாரி எனவும் வழிபடுவர். இரண்டு வயதுப் பெண் குழந்தையை பாலையாக வழிபடுதல் நல்லது. அந்தக் குழந்தைக்குப் பிடித்த ஆகாரங்களைச் செய்து கொடுக்கலாம். பிடித்த உடையை வாங்கிக் கொடுக்கலாம் என்றாலும் மஞ்சள் நிறம் சிறப்பாகச் சொல்லப் படுகிறது. மஞ்சள் சாமந்திப் பூ விசேஷம் வழிபாட்டுக்கு. செவ்வரளியும் பயன்படுத்தலாம். நைவேத்தியம் எலுமிச்சை சாதம். மாலை நைவேத்தியம் வெல்லம், தேங்காய், ஏலக்காய் போட்ட பச்சைப் பயறுச் சுண்டல். வழக்கம்போல் சுண்டல் இரவல் தான். கூகிளார் கொடுத்தது. எல்லாருக்கும் தெரிஞ்ச துர்காஷ்டகத்தை இங்கே ஒவ்வொரு நாள் ஒன்றாகக் கொடுக்கிறேன். கடைசி நாள் எல்லாத்தையும் சேர்த்துக்கொடுக்க முயல்கிறேன்.

துர்கா அஷ்டகம்:

1. வாழ்வுமானவள் துர்கா வாக்குமானவள்
வானில் நின்றவள் இந்த மண்ணில் வந்தனள்
தாழ்வு அற்றவள் துர்கா தாயுமானவள்
தாபம் நீக்கியே என்னைத் தாங்கும் துர்கையே

தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே
தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே!

துர்காஷ்டகம் தொடரும்.


திருமதி ஜெயஸ்ரீ நீலகண்டனின் விருப்பத்தின் படி லலிதா நவரத்தினமாலையின் முதல் பாடல் கீழே இடம் பெறுகிறது. முதலில் வைரம் போல் ஜொலிக்கும் ஸ்ரீலலிதை!

மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே! மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே!
மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே! மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே!

கற்றும் தெளியார் காடே கதியாய் கண்மூடி நெடுங்கனவான தவம்
பெற்றும் தெரியார் நிலையென்னில் அவர் பெருகும் பிழை என பேசத் தகுமோ
பற்றும் வயிரப் படைவாள் வயிரப் பகைவர்க்கெமனாக எடுத்தவளே
வற்றாத அருட் சுனையே வருவாய் மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே!

10 comments:

 1. நல்லது அம்மா. விவரங்களுக்கும் துர்கா அஷ்டகத்துக்கும் நன்றி அம்மா. நவராத்திரி வாழ்த்துகள் :)

  ReplyDelete
 2. கீதா ரொம்ப ரொம்ப நல்ல பதிவு..எனக்கு ஒரு சந்தேகம்..வெளிநாடுகளிள் இருப்பவர்கள் கொலு வைக்க முடியாதே அப்போ கடைசியாக இருக்கின்ற வரிகளை மட்டும் சொல்லி வணங்கலாமா?நவராத்திரி வாழ்த்துக்கள்.

  ..  அன்புடன்,

  அம்மு.

  ReplyDelete
 3. வாழ்த்துகள் கவிநயா, உங்களுக்கும், உங்கள் வாழ்த்துகளுக்கும் நன்றி. எல்லாருக்கும் தெரிந்த தகவல்களே என்றாலும் நவராத்திரியில் எழுதுவதால் தனிச் சிறப்புப் பெறும் அல்லவா?

  ReplyDelete
 4. வாங்க அம்மு,

  வெளிநாடு என்றால் எந்த வெளிநாடுனு தெரியலை. அரபு நாடுகளில் கூட வைக்கிறாங்கனு சொல்லிக் கேள்வி. மற்ற நாடுகளிலும் தடை இல்லை. என்றாலும் நீங்கள் உங்கள் வசதிப்படி அம்பாளை வழிபடலாம், அதனால் ஒண்ணும் தவறே இல்லை. அம்பாளை மனதார நினைத்து விளக்கு ஏற்றி ஒரு பழமோ, பூவோ, சாதமோ கை காட்டினாலே போதுமானது.

  நவராத்திரி வாழ்த்துகள் உங்களுக்கும்.

  ReplyDelete
 5. நவராத்ரி வாழ்த்துக்கள்!! லலிதா நவரத்னமாலை ஸ்லோகமும் ஒவ்வொரு நாளுக்கும் ஒண்ணொண்ணா உண்டா?இது தான் பண்ணணும் என்று தெரியாமலே இன்னிக்கு ப்ரசாதம் அப்படியே அமைந்தது ரொம்ப சந்தோஷமா இருந்தது . நான் காலராத்ரையி ஏழாம் நாள் னு நினைத்தேன். இந்த அம்மா ஒட இன்னொரு பெயர் ஷுபங்கரின்னு நினைக்கிறேன். நீங்க சொன்னது போல் அவள் ரூபம் நிக்ரஹமா இருந்தாலும் அவள் அனுக்ரஹமே

  ReplyDelete
 6. கீதா சாம்பசிவம் அம்மா,
  எனக்கு ஒரு சின்ன சந்தேகம்,கொலுவில் விதம் விதமான பொம்மைகள் வைக்கிறார்களே.மஞ்ச துண்டு,சூரமணி,பெரிய தாடி வைத்த அய்யா போன்ற அரக்கர்களின் சாயலில் உள்ள பொம்மைகளை வைக்கலாமா?

  பாலா

  ReplyDelete
 7. திரு பாலா, வரவுக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 8. In Delhi Jandai valan mandhir we had a dharshan of KALARATHIRI

  but now I came to know that in south also we prayed her at navarathiri--durga as kalarathiri

  your blog is nice and all the content is good

  thanks for the pooja songs also

  ReplyDelete
 9. Thanks for sharing wonderful information about navarathri.

  ReplyDelete
 10. நன்றி கீதா அவர்களுக்கு,

  நவராத்திரி நாயகி தோன்றிய விபரங்களை விபரமாய் சொல்வதருக்கு.

  ReplyDelete