எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, September 24, 2009

நவராத்திரியில் நவ சக்திகள் - அன்னையின் சேனையில்-

. நவராத்திரி ஆரம்பத்தின்போது தங்கள் சக்திகளை எல்லாம் அம்பாளிடம் ஒப்படைக்கும் தேவாதிதேவர்கள் சக்தியை இழந்து ஒரு பொம்மையைப் போல் இருப்பார்கள். அதை நினைவூட்டும் விதத்திலேயே பொம்மைக்கொலு வைக்கும் வழக்கம் ஏற்பட்டது என்பார்கள். மேலும் அன்னைக்கு உதவிய அனைவரும் பெண்களே. அன்னையின் சேனையில் சேனாபதிகளாகவும், தளபதிகளாகவும், அன்னைக்கு மந்திரியாகவும் பணி புரிந்த அனைவரும் பெண்களே. அதனாலேயும் நவராத்திரி பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதமாய்ப் பத்து நாட்கள் கொண்டாடும் பண்டிகையாய் உள்ளது.

சப்தகன்னியர்கள்:
ப்ராம்மி: நான்முகனின் அம்சமாய்த் தோன்றியவள். நான்கு முகங்கள், நான்கு கரங்கள். மஞ்சள் வண்ணம் பிடித்த வண்ணம். கமண்டலம், அக்ஷமாலையைப் பின்னிரு கரங்களில் ஏந்தி முன்னிரு கைகளில் அபயவரதம் காட்டுவாள். ருத்திராக்ஷமால தரித்து ஹம்ஸவாகனத்தில் வீற்றிருப்பவள். இவளை வணங்கினால் சகல கலைகளும் சித்திக்கும்.

வாராஹி: திருமாலின் வராஹ அவதாரத்தின் வடிவாய்த் தோன்றியவள். மேகநிறத்தினள். கரிய வண்னமே பிடிக்கும். வராஹமுகத் தோற்றம் உடையவள். கலப்பை, உலக்கை ஆகியவற்றைப் பின்னிரு கரங்களில் தாங்கி அபயவரதம் காட்டுவாள். லைதாம்பிகையின் படைத்தலைவி இவளே. தண்டினி என்ற பெயருடன் சிம்ஹ வாஹினியாய்க் காட்சி கொடுப்பாள். இவலை வணங்குவோர்வாழ்வில் சிக்கல்கள், தடைகள், தீராத பகைகள் தீரும்.

மகேஸ்வரி: மகேசனின் சக்தி இவள். முக்கண் படைத்தவள். ஜடாமகுடத்துடன் காட்சியளிப்பாள். மான், மழு ஏந்தி, அபயவரதம் காட்டி நான்கு கரங்களுடன் இருப்பாள். தூய வெண்ணிறமே பிடித்த வண்ணம். ரிஷபவாஹனத்தில் காட்சி கொடுக்கும் இவளை வழிபட்டால் மங்களங்கள் வந்தடையும்.

இந்திராணி: இந்திரனின் சக்தியான இவள் ரத்ன மகுடம் தரித்தவள். பொன்னிற மேனி உடையவள். நாற்கரத்தினள். சக்தி ஆயுதமும், வஜ்ராயுதமும் தாங்கி அப்யாரதம் காட்டுவாள். வெண்ணிற யானை வாஹனம் சத்ரு பயம் போக்குபவள். மாகேந்திரி என்ற பெயரையும் கொண்டவள்.


நவராத்திரியின் எட்டாம் நாளான இன்று ரக்தபீஜனை வதம் செய்த திருக்கோலத்தில் அம்பிகை காக்ஷி கொடுப்பாள். இன்று பத்மக் கோலமிட்டு அம்பிகையைப் பீடத்தில் அமர வைத்து அலங்கரிக்க வேண்டும். எட்டுச் சக்திகள் புடைசூழ, அபய வரதம் காட்டிய வண்ணம் மலர் அம்பு ஏந்திய கோலத்தில் வீற்றிருக்கும் இந்த துர்கையை வணங்கி வழிபட்டால் பகை அழியும். செயற்கரிய செயல்கள் அனைத்தையும் செய்து முடிக்கும் திறன் ஏற்படும் வண்ணம் மனதில் தைரியம் ஏற்படும். வல்லமை தருவாள் மஹா சக்தி! வாழியென்றே துதிப்போம். இந்த நாளில் ஒன்பது வயதுள்ள பெண் குழந்தையை துர்கையாகப் பாவித்து வழிபடவேண்டும். இன்றும் வழிபாட்டுக்கு முல்லை மலர்களும், வெண் தாமரை மலரும் பயன்படுத்தலாம். இன்றைய நிவேதனம் தேங்காய் சாதம். இந்த வருஷம் எட்டாம் நாள் சனிக்கிழமை வருவதால் ஒரு சிலர் எள் சாதமும் செய்கின்றனர். என்றாலும் அம்பிகை வழிபாட்டுக்குத் தேங்காய் சாதமே சிறந்தது.

வெள்ளிக்கிழமைகளில் ஒரு சிலர் புட்டுப் போடுவார்கள். நேற்றே எழுத நினைச்சு மறந்துட்டேன். அவசரம்! என்றாலும் இந்த எட்டாம் நாளும் சிலர் போடுகின்றார்கள்.அஷ்டமி திதியான இன்றே சரஸ்வதி ஆவாஹனம் செய்யப் படுவதால் சிலர் இன்றும் போடுவர். கடலைப்பருப்புச் சுண்டலும் செய்யலாம். இனி துர்காஷ்டகம்.

கன்னி துர்கையே இதயக் கமல துர்கையே
கருணை துர்கையே வீர சுகன துர்கையே
அன்னை துர்கையே என்றும் அருளும் துர்கையே
அன்பு துர்கையே ஜெயதுர்கை துர்கையே
தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே
தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே


லலிதா நவரத்ன மாலையின் இன்றைய ரத்னம் புஷ்பராகம்

ரஞ்சனி நந்தினி அங்கணி பதும ராக விகாஸ வியாபினி அம்பா
சஞ்சல ரோக நிவாரணி வாணி சாம்பவி சந்த்ர கலாதரி ராணி
அஞ்சன மேனி அலங்க்ருத பூரணி அம்ருத ஸ்வரூபிணி நித்ய கல்யாணி
மஞ்சுள மேரு ஸ்ருங்க நிவாஸினி மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே

மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே
மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே

5 comments:

 1. லலிதா சஹஸ்ரநாமத்தில் மா ப்ண்டசுரவதத்துக்கு போஹும் போது அவளுடைய சேனையை யார் யார் எப்படி அணிவகுத்தார்கள் என்று வரும்.அதுல இவர்கள் எல்லொரும் எந்த எந்த இடத்துல இருந்து வ்யூஹம் வகுத்திருந்தார்கள் என்றும் வரும்.காமேஸ்வரரோட அனுக்கிரஹத்தில் விக்னெஷ்வரரை கல்பித்து, நாராயணணின் பத்து கால்விரல் நகங்களில் இருந்து அஸ்த்ரங்களையும், காமேஸ்வரரின் ஆசிர்வாதத்துடன் பாசுபதாசஸ்த்ரத்தை பெற்றும் போருக்கு எப்படி கிளம்பினானு வரும். அந்த lines ஐ உண்ர்ந்து படிக்கும் போது அவளுடைய majesty உணர முடியும் இல்லையா?
  துர்காஷ்டமி நாளில் நம்ப மனசிலும் இருக்கும் அரக்கன் மடிந்து நல்லது எல்லோருக்கும் நடந்து சந்தோஷமா இருக்கணும் நு என்னுடய ஆத்மார்தமான வேண்டுதல்கள்

  ReplyDelete
 2. நவராத்ரி ப்ரசாதம் இந்த தடவை ஒவ்வொருனாளும் உங்க தயவால.எள்ளு சாதம் ரொம்ப பாப்புலர் ஆச்சு எங்க குடும்பத்தில்!! TIT BIT, QUICK RECIPIES இன்னமுமே ரொம்ப HANDY. புட்டு எப்படி பண்ண? இங்க srilankan friend பண்ணி தருவர்கள் savoury. நன்னா இருக்கும். என் பாட்டி திதிப்பா SOFT ஆ பண்ணுவா அது வேற மாதிரி (உட்காரை மாதிரி ஆனா அது இல்லை) இருக்கும். அதுவா?RECIPE PLEASE? மீனாக்ஷி அம்மாள் ல இருக்கானு தேடணும்

  ReplyDelete
 3. //அன்னைக்கு உதவிய அனைவரும்
  பெண்களே//

  பெண்ணின் பெருமை,பெண்ணின் பலம்
  தெரியாமல் பெண்கள் இருக்கிறார்கள்.
  சின்ன விஷயத்திற்க்கும் துவண்டுப் போகிறார்கள்.

  அன்னையின் கதைப் படித்து தங்கள் பலம்,மனபலம், உடல்பலம் பெறட்டும்.
  நன்றி கீதா.

  தேவீ மாகாத்மியச் சுருக்கம் தினம்
  படிப்பேன் நான்.

  உங்கள் எண்ணங்கள் மூலம் விரிவாக
  படித்து விட்டேன்,மீண்டும் நன்றியை
  கூறிக்கொள்கிறேன்.

  ReplyDelete
 4. ரொம்ப நன்றி ஜெயஸ்ரீ, புட்டு செய்முறை இருவிதமாய் இருக்கு. பதிவாவே போடறேன். :))))))))

  ReplyDelete
 5. நன்றி கோமதி அரசு, உண்மைதான் பெண்கள் தங்கள் பலத்தை அறியாமல் அறியாமையிலேயே மூழ்கி இருக்கின்றனர். என்ன செய்ய முடியும்னு புரியத் தான் இல்லை. சில சமயம் கோபம் கூட வருது.

  ReplyDelete