எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, December 02, 2011

புரட்சி முடிந்தது! விடுதலை கிடைத்தது!

அரவை இயந்திரம்












டெக்ஸாஸின் தனிக்கொடி. இன்றும் டெக்ஸாஸ் மாநிலத்திற்கு ஒற்றை நக்ஷத்திரத்துடன் கூடிய தனிக்கொடி அந்தஸ்து உண்டு. ஐக்கிய அமெரிக்கக் குடியரசின் இரண்டாவது பெரிய மாநிலம் டெக்ஸாஸ்.
கொண்டாட்டங்கள் குறித்து அறிந்து கொண்ட மெக்சிகோ அதிபர் (படைகளுக்கும் தலைமை வகித்து ஆலோசனைகள் கூறினார்) சான்டா அன்னா, தளபதி ஜோக்வின் என்பவரிடம் உடனடியாக அலமோவை முற்றுகை இட்டுப் பிடிக்கச் சொன்னார். ஆனால் திடீரெனப் பெய்த மழையால் அவர் எண்ணம் ஈடேறவில்லை. சான் அன்டானியோ நகரத்தின் (அப்போதைய பெயர் வேறு) குடிமக்கள் மெக்சிகோவின் வீரர்கள் படை எடுப்பைப் பற்றிக் கேள்விப்பட்டு ஊரை விட்டு ஓட ஆரம்பித்தனர். டெக்ஸாஸின் தளபதி தன் வீரர்களை மெக்சிகப்படைகள் வருவதைக் கண்காணிக்க அங்கிருந்த உயரமான சர்ச்சின் உச்சிக்கு அனுப்பி வைத்தார். படைகளும் மெக்சிகப் படை நெருங்குவதைத் தெரிவித்தனர். கிடைத்த இடத்தில் அனைவரும் தஞ்சம் புகுந்தனர். அலமோ கோட்டையில் முடிந்தவர்கள் அடைக்கலம் புகுந்தனர். இதில் சில பெண்கள், குழந்தைகள் அடைக்கப்பட்டுக் கிடந்த பெரிய கூடம் கோட்டையினுள் உள்ளது.

முதல் நாளிரவு அமைதியாக முற்றுகை சென்றது. மெக்சிகப் படைகளின் பலத்தோடு ஒப்பிட்டால் டெக்ஸாஸின் படைபலம் கம்மி. மெக்சிகப் படைவீரர்கள் சான் அன்டானியோ நதியைக் கடந்து அலமோவின் சுற்றுச்சுவர் அருகே வந்துவிட்டனர். மார்ச் 4-ஆம் தேதி வரையிலும் மெக்சிகோவிற்குச் சாதகமாகவே நிலைமை இருந்தது. சான்டா அன்னா அலமோவைத்தாக்க இதுவே சரியான தருணம் என நினைத்தார். ஆனால் படைத்தளபதிகள் சில நாட்கள் பொறுத்திருக்க வேண்டும் என நினைத்தனர். அன்றே ஒரு அரசியல் தலைவரின் உறவுப்பெண்மணி சான்டா அன்னாவைச் சந்தித்துச் சரணடையப் போவதாய்த் தெரிவித்தாள். .ஆகவே அலமோவில் தஞ்சம் புகுந்திருப்பவர்களைக் காக்கவேண்டிப் பேச வேண்டும் என்றும் கூறினாள். ஆனால் சான்டா அன்னா மார்ச் ஆறாம் தேதி கோட்டையைத் தாக்கப் போவதாய்த் தெரிவித்தார். ஆனால் அதற்குள்ளாக டெக்ஸாஸ் தன் பலத்தை ஓரளவு அதிகரித்துக்கொண்டது. கோட்டைச் சுவர்களில் ஓட்டையிட்டு அதன் மூலம் உள்ளிருந்து சுட ஆரம்பித்தனர். ஆனாலும் பல டெக்ஸாஸ் குடிமக்கள் மெக்ஸிகப் படைகளால் சுடப்பட்டனர். இறந்த பின்னரும் இறந்த பிணங்களைச் சுட்டதாகச் சொல்கின்றனர்.
இறந்தவர்கள் அறுநூறுக்கும் மேல் என சான்டா அன்னா கூறிக் கொண்டு, இந்தப் போர் தூசு மாத்திரம் எனவும் விமரிசித்தார். ஆனால் உண்மையில் இறந்தவர் குறைவு என்கின்றனர். ஆனால் இந்த முற்றுகைக்கு முன்பே டெக்சாஸின் முக்கியத் தலைவர்கள் கூடி டெக்ஸாஸைச் சுதந்திர நாடாக அறிவித்தனர்.

இங்கே பார்க்கவும்இங்கே பார்த்தால் ஒளிக்காட்சி பார்க்கலாம். அலமோ மெக்சிகன்களுக்கும், அதே சமயம் இங்கே வந்து குடியேறிய டெக்சியன்கள் எனப்படும் வெள்ளையர்களுக்கும் பொதுவான ஒரு அடையாளமாக இருந்து வந்தது. உள்ளிருந்துபோராடிய டெக்சியன்களுக்குக் கிட்டத்தட்ட எட்டு நாள் முற்றுகைக்குப் பின்னரும் போதிய உதவி கிடைக்கவில்லை. அலமோ அவர்களின் உயிர்நாடியாக ஆனது. சரணடைவதற்குப் பதிலாகப் போராடவே நினைத்தனர். அந்நாளையில் கத்திச்சண்டையில் பிரபலம் ஆன ஜிம் போவி, டெனிசியிலிருந்து வந்த அரசியல்வாதியும், எல்லைகளின் பாதுகாவலராக இருந்தவருமான டேவிட் க்ரோக்கெட் முன்னணியில் இருந்து அலமோவைக் காக்கச் சண்டை போட்டனர். ஆனால் இத்தகைய முயற்சிகளுக்குப் பின்னரும் மார்ச் ஆறாம் தேதி காலை விடிவதற்குள்ளாக மெக்சிகன் துருப்புக்கள் கோட்டையின் மேலேறி உள்ளே வந்துவிட்டனர். அங்கிருந்த பெரிய முகாம் ஒன்றின் மேலும், சர்ச் ஒன்றின் மேலும் குண்டுமாரி பொழிந்தனர். இந்த முகாமில் இருந்த மருத்துவசாலை ஒன்று டெக்ஸாஸின் முதல் மருத்துவசாலை எனப்படுகிறது.


ஆனால் அனைத்து அரசியல்வாதிகளும் டெக்சாஸின் வாஷிங்க்டன் ஆன் தி ப்ரேஸோஸ் என்னுமிடத்தில் கூடிப் பேசி டெக்ஸாஸை சுதந்திர நாடாக அறிவித்த பின்னர் மெக்சிகோவில் இருந்து அது பிரிந்துவிட்டதாக ஐக்கியஅமெரிக்க நாடு அங்கீகரித்தது. ஆனாலும் மெக்சிகோ அங்கீகரிக்கவில்லை. தேர்தல்கள் மூலம் தக்க ஆட்களையும் தேர்ந்தெடுத்தது. என்றாலும் மெக்சிகோவின் தொந்திரவு நீடித்தது. ஜெனரல் ஹூஸ்டன் அலமோவின் முற்றுகைக்குப் பின்னர் டெக்ஸியன்களின் பெரும்படை ஒன்றைத் தயார் செய்து தலைமை வகித்து நடத்தினார். தோல்வி அடைந்த பல வாரங்களுக்குப் பின்னர் ஹூஸ்டனின் தலைமையில் வந்த பெரும்படை சான்டா அன்னாவைச் சிறையெடுத்து சுதந்திரப் பிரகடனத்தை ஒப்புக்கொள்ள வைத்து ஒப்பந்தத்திலும் கை எழுத்துப் போட வைத்தது. சான் ஜசின்டோ என்னும் இடத்தில் நடந்த அந்த யுத்தத்தின் மூலம் டெக்ஸாஸ் புரட்சி முடிவுக்கும் வந்தது.


ஆயுதங்களின் ஒரு பகுதி. இவை அனைத்தும் முக்கியக் கோட்டையின் வெளிச்சுற்றுக்களில் வைக்கப்பட்டுள்ளது. கோட்டையை உள்ளே படம் எடுக்க இயலாது.

9 comments:

  1. ஹி ..ஹி... நான் கொஞ்சம் ஹிஸ்டரிலே வீக் .
    இந்த அன்னா வும் நம்ம நாட்டு அன்னாவும்
    ஏதாவது சித்தப்பா புள்ள, பெரியப்பா புள்ள யாக இருக்குமோ !!

    சுப்பு தாத்தா.
    Are you presently at TEXAS ? Where exactly?

    ReplyDelete
  2. நிறைய விசயங்களை தெரிந்து கொள்ள முடிந்தது .,பதிவுக்கு நன்றி கீதாமா .

    ReplyDelete
  3. சூரி சார், திடீர் வரவுக்கு நன்றி. ஹிஸ்டரி எனக்குப் பிடிக்கும்; ஆனால் எழுத உதவி செய்தவை சுற்றிப் பார்க்கச் சென்ற போது திரட்டிய தகவல்கள், விக்கிபீடியா போன்றவையே காரணம்.

    நம்ம நாட்டு அன்னாவுக்குப் பல நூற்றாண்டுகள் முன்னரே இந்த அன்னா! :))) மறு பிறப்பாய் இருக்கலாம்.

    ம்ம்ம்ம் இப்போ டெக்ஸாசில் தான் இருக்கோம். ஷுகர்லான்ட்(ஹூஸ்டன் அருகே)

    ReplyDelete
  4. வாங்க ப்ரியா, நேரம் எடுத்துக்கொண்டு வந்ததுக்கு நன்றி.

    ReplyDelete
  5. இப்பதான் பையனுக்காக டெக்ஸாஸ் வரலாறு படிக்கிறேன்.

    நாங்க ஆஸ்டின்ல இருக்கிறோம். வீட்டுக்கு வாங்க!!

    ReplyDelete
  6. தெய்வசுகந்தி, முதல்வரவுக்கு நன்றி. உங்க சமையலறைக்கு வந்திருக்கேன். உங்க பெண்ணிற்காகக் குறிப்புகள் எழுதி வைக்கறீங்க இல்லையா? நல்லவேளையா ஆங்கிலத்திலும் எழுதறீங்க.

    ReplyDelete
  7. தெய்வசுகந்தி, நான் முழு வரலாறும் விபரமாய் எழுதலை; நீண்டு போகும். ஏற்கெனவே என்னோட பதிவுகள் ரொம்பப் பெரிசுனு பலரும் புகார் கொடுத்துட்டு இருக்காங்க. :)))))) முக்கியமான குறிப்பு மட்டுமே கொடுத்திருக்கேன்.

    ReplyDelete
  8. நாங்க இருப்பது ஷுகர்லான்ட், ஹூஸ்டன் அருகே. யாராவது அழைத்துவரணும்; எல்லாரும் பிசி! :)))) என்னோட மெயில் ஐடிக்கு மெயில்பண்ணுங்க. :)))))

    ReplyDelete