எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, January 23, 2012

தாலாட்டுப் பாடவா!

அப்புதான் தினம் என்னைத் தூங்க வைக்கிறது. ராத்திரி வேலை எல்லாம் முடிச்சுட்டுப்படுக்க வந்தால் உடனே go, brush your teethனு சொல்லும். கொஞ்ச நேரம் உட்கார்ந்துக்கறேனே அப்படினு சொன்னால் உடனே ஓகே, ஜஸ்ட் டென் மினட்ஸ்னு சொல்லும். அப்புறமா உடனடியாகப் போ, பல்லைத் தேய்ச்சுட்டு வா னு பிடுங்கல் தான். விடாது. :)))) பல்லைத் தேய்த்துட்டு வந்ததும், உடனே வின்டர் லோஷனைக் கொடுத்துப் போட்டுக்கோனு சொல்லும். கூடவே you have to apply on your own, be carefulனு எனக்கு எச்சரிக்கையும் கிடைக்கும்.

அது முடிஞ்சதும் எனக்குத் தூக்கம் வருதோ இல்லையோ படுத்துண்டே ஆகணும். உடனே கம்ஃப்ர்டரை எடுத்துப் போர்த்திவிடும். கம்ஃபர்டரை அதால் தூக்கக் கூட முடியாது. முக்கி, முனகிக் கொண்டு எடுத்துப் போர்த்தும். அதன் நான்கு முனைகளும் சீராக இருக்கணும். கட்டில் மேல் ஏறி என்னை மிதித்துக்கொண்டு அந்தப் பக்கம் போய் கம்ஃபர்டரை ஒழுங்காய்ச் சீராகப் பரப்பும். என்னோட கைகள் வெளியே தெரிஞ்சால் போதும், உடனேயே cover your hands properly, or you'll get freezeனு சொல்லும். எல்லாம் முடிஞ்சாச்சு. இப்போ நான் தூங்கப் போயாகணும். கோ டு ஸ்லீப் னு சொல்லும்.

முழிச்சிண்டு இருந்தா உடனேயே போய் அதோட டே கேர் கதைப் புத்தகத்தை எடுத்துக்கொண்டு வரும். Listen, I am reading you bedtime storiesனு அந்தப் புத்தகத்தில் அது புரிந்து கொண்ட கதையைச் சொல்லும். அப்படியும் தூங்கறாப்போல் நான் பாவனை கூடச் செய்யலைனா, உடனே Ok, I'll sing you lullaby, do you like lullaby? னு கேட்டுக்கும். நான் சரினு சொன்னதும், ட்விங்கிள், ட்விங்கிள் லிட்டில் ஸ்டார் னு பாட ஆரம்பிக்கும். It is not a lullaby, it is rhyme னு சொன்னா கண்ணில் தண்ணீர் எட்டிப் பார்க்க ஆரம்பிக்கும். No, it is night time. see there are stars in the sky. so we have to sing twinkle twinkle little star onlyனு சொல்லும். அப்படியும் நாம தூங்கலைனா/தூங்கறாப்போல் பாவனை செய்யலைனா குழந்தைக்கு நிஜம்ம்மாவே அழுகை வரும். பாவம்! அழுது கொண்டே அவ அம்மா கிட்டேப் போய் ask patti to sleep. she is very naughty. னு சொல்லும். குழந்தைத்தனம் அப்போது தான் தன்னையறியாமல் வெளியே வரும். அதுவரைக்கும் பெரிய மனுஷத்தனமாக எனக்கு அம்மா போல் உத்தரவு போட்டுக்கொண்டிருந்தது. தன்னை அறியாமல் தான் குழந்தை என்பதை வெளிப்படுத்தும்.

ஆனால் இயற்கையின் இந்த அதிசயம் நினைத்தால் ஆச்சரியம். பெண் குழந்தைகள் மட்டுமே இப்படித் தூங்க வைப்பது; சாப்பிட வைப்பது என விளையாடுகிறது. எனக்குத் தெரிந்து இதை யாரும் சொல்லிக் கொடுத்ததாய்த் தெரியவில்லை. தங்களுக்கு அம்மா செய்வதை அப்படியே திரும்பச் செய்கின்றன. அதே ஆண் குழந்தைகளுக்கு இந்தப் பொறுமை இருப்பதில்லை. இன்றளவும் பார்த்து வியந்து கொண்டிருக்கும் ஒரு விஷயம் இது.

18 comments:

 1. வெள்ளை மனம் கொண்ட பிள்ளை ஒண்ணு...வேடிக்கை காட்டுது தூக்கமின்னு...' என்றொரு பழைய பாடல் ஒன்று நினைவுக்கு வருகிறது.

  // தங்களுக்கு அம்மா செய்வதை அப்படியே திரும்பச் செய்கின்றன. அதே ஆண் குழந்தைகளுக்கு இந்தப் பொறுமை இருப்பதில்லை. இன்றளவும் பார்த்து வியந்து கொண்டிருக்கும் ஒரு விஷயம் இது//

  ஜீன்களின் வேலை!?

  ReplyDelete
 2. //அதுவரைக்கும் பெரிய மனுஷத்தனமாக எனக்கு அம்மா போல் உத்தரவு போட்டுக்கொண்டிருந்தது. தன்னை அறியாமல் தான் குழந்தை என்பதை வெளிப்படுத்தும்.//

  மழலை உலகம் மகத்தானதுதான்.

  ReplyDelete
 3. பெண் குழந்தைகளுக்கு இயற்கையாகவே தாய்மை எண்ணங்கள் புலப்படுகின்றன.

  ReplyDelete
 4. பெண்குழந்தைகளுக்கு இயற்கையாகவே இந்த சீராட்டல் வந்துவிடுகிறது என்றே நானும் நினைக்கிறேன்.
  ஸோ ஸ்வீட் நினைவுகள். பகிர்வுக்கு நன்றி

  குட் நைட். :))

  ReplyDelete
 5. ஆமா நீங்க சொல்வது சரிதான் பெண்குழந்தைகள்தான் இந்தமாதிரி விஷயங்களை ஈசியா கத்துக்கராங்க.

  ReplyDelete
 6. வாங்க ஶ்ரீராம், ஜீன்களின் வேலையாக இருக்கலாம்! அதான் தோணுது! :)

  ReplyDelete
 7. வாங்க ராம்வி, குழந்தை உலகம் அற்புதமானது! எந்தவிதமான பொய்ம்மைக்கும் இடமில்லை.

  ReplyDelete
 8. வாங்க விச்சு, பெண் குழந்தைகளின் இயல்பான இந்தத் தாய்மை உணர்வு பின்னர் ஏன் மாறிவிடுகிறது எனப் புரியவில்லை! :(((((

  ReplyDelete
 9. வாங்க புதுகை, நல்வரவு. கருத்துக்கும் நன்றி. எனக்குக் காலை இப்போ. உங்களுக்கு குட் நைட், எனக்கு குட் மார்னிங். :)))))

  ReplyDelete
 10. ம்ம்...என்ஜாய் தலைவி மற்றும் குட்டி தலைவி ;-))

  ReplyDelete
 11. ம்ம்...என்ஜாய் தலைவி மற்றும் குட்டி தலைவி ;-))

  ReplyDelete
 12. அந்த காலத்து பாட்டிகள் தங்கள் பேத்தியை கொஞ்சும் போது என்னை பெத்த அம்மா என்று கொஞ்சுவார்கள்.


  இப்படி தன் பாட்டிக்கு தாயாகி தாலாட்டு பாடுவதால் தானோ!

  தன் பாட்டியை மடியில் போட்டு தட்டிக் கொடுத்து பாட்டு பாடும் தாய் குழந்தை அற்புதம்.

  குழந்தைகள், ஒரு சமயம் பெரியவர்கள் ஒரு சமயம் குழந்தைகள்.

  அருமையான பேத்தி, பாட்டி தாலாட்டு.

  ReplyDelete
 13. //ask patti to sleep. she is very naughty //

  பாட்டி ரெம்ப நாட்டினு எங்களுக்கு மொதலே தெரியும் பப்பு... சொன்னா உங்க பாட்டி நம்பறதே இல்ல...:) கியூட் பப்பு அப்டேட்ஸ்... தேங்க்ஸ்..:)  //அதே ஆண் குழந்தைகளுக்கு இந்தப் பொறுமை இருப்பதில்லை//

  குழந்தைல மட்டுமில்ல மாமி, எப்பவும் அவங்களுக்கு பொறுமை இல்லனு தெரிஞ்சுது தானே...;)

  ReplyDelete
 14. இந்த ஒரு விசயத்தில் அப்பாவிக்கு எனது ஆதரவை தெரிவித்து கொள்கிறேன்!!

  அப்பு சூப்பர் :) அப்புவோட ஆத்தா (பாட்டி:) ) அதை விட சூப்பர் என்று சொல்லி எனது பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறேன்

  இப்படியெல்லாம் அப்புவோட பெருமைகளை சொல்லி கொண்டே போனால் அப்புவை பார்க்க நேரிலேயே வந்து விடுவோமாக்கும் :)

  ReplyDelete
 15. வாங்க கோபி, ரொம்ப நன்றிப்பா.

  ReplyDelete
 16. வாங்க கோமதி அரசு, எல்லாப் பெண் குழந்தைகளும் இப்படி விளையாடறதில்லைனே நினைக்கிறேன். அப்புவோட அக்கா இப்படி எல்லாம் விளையாடலைனு அவ அம்மா சொல்றா. :)))))

  ReplyDelete
 17. குழந்தைல மட்டுமில்ல மாமி, எப்பவும் அவங்களுக்கு பொறுமை இல்லனு தெரிஞ்சுது தானே...;)//

  ஹிஹிஹி, ஏடிஎம், சந்தடி சாக்கிலே ஒரு போடு போட்டாச்சு. :)))))))

  ReplyDelete
 18. வாங்க ப்ரியா,

  இப்படியெல்லாம் அப்புவோட பெருமைகளை சொல்லி கொண்டே போனால் அப்புவை பார்க்க நேரிலேயே வந்து விடுவோமாக்கும் :)//

  வாங்க, வாங்க, அப்படியே எனக்கு எகானமி கிளாஸ் டிக்கெட்டை பிசினஸ் கிளாசுக்கும் மாத்திக் கொடுத்துடுங்க. :))))))))

  ReplyDelete