எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, January 05, 2012

"தங்கமா"ன ஒரு விமரிசனம்! :P

எல்லாரும் பெண்கள் முன்னேற்றம், பெண்கள் விடுதலைனு சொன்னாப் போதுமா? அதுக்காக என்ன செய்யறோம்? கவலையே வேண்டாம்; விடுங்க கவலையை. சன் தொலைக்காட்சியிலே வரும் "தங்கம்" சீரியலைப் பார்த்தால் போதும். பெண் விடுதலையாவது ஒண்ணாவது! அந்த சீரியலே வர கதாபாத்திரங்கள் அரைக்கிற மிளகாயிலே என்னோட தலையே எரியும் போலிருக்கு. இத்தனைக்கும் நான் தினசரி பார்க்கிறதில்லை. சில சமயம் தவிர்க்க முடியாமல் உட்கார்ந்திருக்கையில் வசனங்கள் காதில் விழும். காதைப் பொத்திக்க முடியலை! :))))

இன்னிக்குப் பாருங்க எங்க பொண்ணு கிச்சனை க்ளீன் செய்துட்டு இருந்ததால் சமையல் வேலையை அதுக்கப்புறம் ஆரம்பிக்கச் சொல்லவே வேறு வேலை இல்லாமல் உட்கார்ந்திருந்தேன். சீரியல் ரசிகரான நம்ம ரங்க்ஸ் ரசிச்சுப் பார்த்துட்டு ஊடே கமென்ட்ஸும் கொடுக்கவே என்னனு பார்த்தேன்! கலெக்டர் பரிக்ஷைக்கு எழுதப் போறாளாம் ஒரு பெண். கதாநாயகியின் தங்கையாம் இவள். ஊரிலே இருந்து சென்னைக்குக் கிளம்பி வரா. வரதே என்னமோ பிக்னிக் போறமாதிரி மாமியார், அண்ணி எல்லோரையும் அழைச்சிட்டு வரா. போனாப் போறதுனு பார்த்தா ஊரை விட்டுக் கிளம்பறச்சே கைப்பையை நல்லா சோதனை பண்ணி,அதிலே பரிக்ஷைக்கு வேணுங்கற முக்கியமான ஆவணங்கள், எல்லாத்துக்கும் மேலே உள்ளே நுழையும் ஹால் டிக்கெட் இருக்கானு பார்க்க வேண்டாமா? ம்ஹும் அந்த அம்மா அதை எல்லாம் பார்க்கவே இல்லை. இத்தனைக்கும் அவங்க பரிக்ஷை எழுதக் கூடாதுனே உடல் நலம் கெட்டுப் போன மாதிரி நடிச்ச மாமனாராம்; அவர் ஆஸ்பத்திரியிலே இருக்கையிலே அவர் பக்கத்திலேயே அழகாக் கைப்பையை வைச்சுட்டுத் திரும்ப அதைத் திறந்து பார்க்கவே இல்லையாம். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஜிப்பை ஒரு இழு இழுத்திருந்தால் போதும். ம்ஹும் கடைசி வரை செய்யவே இல்லை.

அதுவும் ஹாலில் உள்ளே விடத் தன்னுடைய முறை வரும்வரைக்கும் கைப்பையைத் திறக்கவே இல்லையாம். ஜெராக்ஸ் காப்பி வேறே எடுத்து வைச்சிருக்கணும்; அதுவும் எடுத்து வச்சிருந்தால் அதாவது இருக்குமே. அவங்க முறை வந்ததும் கைப்பையை அப்போத்தான் திறக்கவே திறக்கிறாங்க. ஹால் டிக்கெட் இல்லை; உடனே பதறுகிறாங்க; ஓடறாங்க; ஊருக்குத் தொலைபேசி அக்காவோட ஆலோசனை கேட்கிறாங்க. அன்னிக்குனு பாருங்க அவங்களுக்கு ஒரு ப்ரவுசிங் சென்டரும் திறக்கலையாம்; திறந்த ஒரே ஒரு ப்ரவுசிங் சென்டரிலும் கரன்ட் இல்லையாம். அவங்க அக்கா ஊரிலே இருந்து எக்சாமினரோட பேசறாங்களாம். அப்போப் பதட்டத்திலே ஃபோன் கீழே விழுந்து உடையுது. பாவமா இருக்கா எல்லாருக்கும்?

எனக்கு இல்லை. இவங்களை மாதிரித் திட்டம் போட முடியாதவங்கள்ளாம் கலெக்டரா வந்து என்ன கிழிக்கப் போறாங்க. ஐஏ எஸ் ஐ சிஎஸ் பரிக்ஷை எழுதறதெல்லாம் சாதாரண விஷயமா? எவ்வளவு தயாரிப்பு? எவ்வளவு திட்டம் போடணும்! ஹால் டிக்கெட் விஷயத்தில் கோட்டை விடறவங்க எல்லாம் எப்படி கலெக்டரா வந்து குப்பை கொட்ட முடியும்? முன் கூட்டியே திட்டம் போட்டுக்கொண்டு ஊரை விட்டுக் கிளம்பும் முன்னரே எல்லாத்தையும் சரி பார்த்திருக்கணும். ஒண்ணுக்கு மூணு காப்பி எல்லாத்துக்கும் எடுத்துத் தனித்தனி இடங்களில் பத்திரப்படுத்தணும். கைப்பையில் ஒரிஜினலை வைத்திருந்தால் கைப்பையை உங்க கணவரே கேட்டாலும் கொடுக்கக் கூடாது. அப்படியே கொடுக்க நேர்ந்தாலும் சரியா இருக்கானு பார்த்துக்கணும்.

அப்படியே மறந்து போய் தேர்வு நடக்குமிடம் வந்துட்டாலும் பதட்டமே இல்லாமல் தன்னுடைய விபரங்களைச் சொல்லி இங்கேயே இருக்கும் கணினியில் தன்னுடைய ஹால் டிக்கெட் கிடைக்கும் என்பதால் தான் இங்கேயே தரவிறக்கிக் கொள்ள அனுமதி கேட்டிருக்க வேண்டும். ஊரிலே இருக்கும் அக்காவை விட இங்கேயே இருக்கும் எக்சாமினர் தான் உதவுவார் என்ற எண்ணம் தோன்ற வேண்டாமா? ஒரு தவறு நிகழ்ந்து விட்டது என்றால் அடுத்தது என்ன? அதை எப்படித் திருத்த முடியும் எனப் பார்க்கிறதை விட்டுட்டு அழுதுட்டு நிக்கிறாங்களாம். இப்படி மனோதைரியம் இல்லாமல் என்னத்தைக் கலெக்டர் ஆகிறது? அரிசிக் கடத்தலையோ, மணல் கடத்தலையோ எப்படிப் பிடிக்கிறது? அங்கே போயும் அழுதே அதைத் தடுப்பாங்களோ என்னமோ!

தைரியம் இல்லாமல் இருக்கும் இம்மாதிரிப் பெண்களை அபலையாகச் சித்திரிப்பதும், அதை எல்லாரும் பார்க்கும்படியாக நெடுந்தொடர்களில் காட்டுவதும் அந்த சீரியலின் ரேட்டிங்குக்கு வேண்டுமானால் சரியாய் இருக்கும். ஆனால் சவால்களை எதிர்கொள்வதும், அதிலிருந்து மீண்டு வருவதுமே ஒரு கலெக்டராக ஆக நினைக்கும் பெண்மணிக்கு முக்கிய நோக்கமாய்க் காட்டி இருக்க வேண்டும். இப்படித் தன் சொந்த விஷயத்திலேயே கவனம் இல்லாத பெண்மணி எப்படி ஒரு கலெக்டராக ஆகி ஒரு மாவட்டத்தைக் கட்டி ஆள முடியும்?

எரிச்சல் வருகிறது. ஒரு அரை மணி நேரம் பார்த்ததுக்கே எனக்கு இப்படி இருந்தால் தினம் தினம் பார்க்கிறபேர் எத்தனையோ!

சிறுமை கண்டு பொங்குவோம் பெண்களே!

8 comments:

 1. Chill கீதா mam! :)
  உங்க feelings எனக்கு புரியறது! Afterall serial தானே... பொழச்சு போகட்டும்! விட்டுடுங்கோ, பாவம்! அவாள்லாம் IAS exam எழுதிட்டா serial கத எழுத வந்திருக்கா! Director எப்படி சொல்றாரோ அப்படி தானே எழுத முடியும்...
  Logic லாம் பாத்தா முடியுமா? Terrace லேர்ந்து தாவி helicopter அ புடிக்கறான்... சாமிய வேண்டிண்டு train அ நிருத்தறான்! இதவிட இன்னும் எத்தனையோ விஷயங்கள் இருக்கு... அதுக்கெல்லாம் tension ஆகிக்கலாம்...
  போனா போறது.. பாவம்...!

  ReplyDelete
 2. அழகா எழுதியிருக்கீங்க. சிறுமை கண்டு பொங்குவோம் என்று சீரியல் கண்டு பொங்கியிருக்கீங்க. நல்லவேளையா எனக்கும் சீரியல் பாக்கிற பழக்கம் இல்லையாதலால் தப்பிச்சேன். மக்களை முட்டாளாக்க என்னென்ன செய்ய முடியுமோ அத்தனையும் அதில் செய்யிறாங்க. பலபேர் ஒரு நாளைக்கு பல மெகா தொடர்கள் பார்க்கிறாங்க.. எப்படித்தான் முடியுதோ?

  ReplyDelete
 3. வாங்க மாதங்கி, வரவுக்கு நன்றிங்க. சீரியல்னு விடமுடியலை. அவ்வளவு ஈடுபாட்டோடு பார்க்கிறவங்களைக் கவனிச்சிருக்கேன். கொஞ்சமானும் காமன் சென்ஸ் வேண்டாமா? ஒரு முக்கியமான தேர்வுக்குப் போற பொண்ணு இப்படியா அலட்சியமா, கவனக்குறைவா இருப்பாங்க? :(((((

  ReplyDelete
 4. வாங்க கீதா, உங்க பையரோட டிராயிங் எல்லாம் அருமை. கணினியிலே வரைஞ்சதைப் போடுங்க. பார்க்கலாம். முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. இந்தியாவிலேன்னா பொதிகையும், சங்கராவும் காலையிலேயும், மாலையிலே எஸ்விபிசி சானலும் போட்டால் போதும். இங்கே சில சமயங்களில் தவிர்க்க முடியலை. :(((( நாம வேண்டாம்னு ஒதுங்கி உட்கார்ந்தாலும் காதிலே விழுந்து தொலைக்குது.

  ReplyDelete
 5. அரிசிக் கடத்தலையோ, மணல் கடத்தலையோ எப்படிப் பிடிக்கிறது? அங்கே போயும் அழுதே அதைத் தடுப்பாங்களோ என்னமோ!

  ""தங்கமா"ன ஒரு விமரிசனம்! :P"

  ReplyDelete
 6. அடடே...... இதையெல்லாம் சீரியசா எடுத்துக்காதீங்க கீதாமா :)

  இதையெல்லாம் பார்த்து யோசிச்சு இப்படியாவது சீரியல் பார்க்கும் பழக்கம் குறைந்தா சரி தானே :)

  ReplyDelete
 7. அட இவ்வளவு சீரியஸாகவா அந்த சீரியலைஎல்லாம் பாக்குறீங்க ...
  நா அத ஏதோ காமெடியால்ல பாக்குறேன் .
  தமிழக பெண்களை முட்டாள்கள்னு நெனச்சு தான் ரொம்ப சீரியல்கள் வந்துட்டிருக்கு ....

  ReplyDelete
 8. சரியாச் சொன்னீங்க....இவை சீரியல்கள் இல்லை. 'சிரி'யல்கள்!! கூல்!

  ReplyDelete