எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, May 01, 2012

அரங்கமாநகருளானே!பண்டை நான்மறையும் கேள்வியும் கேள்விப் பதங்களும்
பதங்களின் பொருளும்
பிண்டமாய் விரிந்த பிறங்கொளி அனலும்
பெருகிய புனலொடு நிலனும்
கொண்டல் மாருதமும் குரைகடல் ஏழும்
ஏழுமாமலைகளும் விசும்பும்
அண்டமும் தானாய் நின்ற  எம்பெருமான்
அரங்கமாநகர் அமர்ந்தானே!


பச்சைமாமலைபோல் மேனி பவளவாய் கமலச்செங்கண்
அச்சுதா அமரர் ஏறே  ஆயர் தம் கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர யான் போய் இந்திர லோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமாநகருளானே!

ஊரிலேன் காணி இல்லை உறவு மற்றொருவர் இல்லை
பாரில் நின் பாதமூலம் பற்றினேன் பரமமூர்த்தி
காரொளிர் வண்ணனே என் கண்ணனே கதறுகின்றேன்
ஆருளர் களைகண் அம்மா அரங்கமாநகருளானே!

நேற்றுத்தான் அரங்கன் தரிசனம் கிடைத்தது.

11 comments:

 1. Menu kuttikku kannalam nalaikku ! Pokalaiya? Pakkaththula thane:)knot tam than thin dada vachchudum

  ReplyDelete
 2. நலம்தானே ??? வெய்யில் எப்படி அரங்கத்தில் ??

  ReplyDelete
 3. பெருமாளை சேவிச்சாச்சா.......
  எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கட்டும். நல்லதே நடக்கட்டும்.

  ReplyDelete
 4. அரங்கன் தரிசனம் வாழ்த்துகள்..

  ReplyDelete
 5. வார நாட்களில், மத்தியான நேரத்தில் சென்றால் சுலபமாக தரிசனம் செய்யலாம் என்று ஸ்ரீரங்கம் வாழ் மக்கள் கூறுவார்கள்.

  ReplyDelete
 6. //காரொளிர் வண்ணனே என் கண்ணனே கதறுகின்றேன்//

  //இச்சுவை தவிர யான் போய் இந்திர லோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமாநகருளானே!//

  ஆஹா.... டி எம் எஸ் ஸின் குரல் மனதில் ஒலிக்கிறது!

  ReplyDelete
 7. "காவிரி சூழ்பொழில் சோலைகள் நடுவினில் கருமணி துயில்கின்றது.." பாடலும் நினைவுக்கு வருகிறது!

  ReplyDelete
 8. ரங்கப்ப்ரபோ உன்னைத் தரிசித்த கண்களுக்கு அநந்த கோடி நமஸ்காரம்.
  அதைச் சொன்ன அன்பு கீதாவுக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகளும் நன்றி.

  ReplyDelete
 9. அரங்கன் தரிசனம் ஆச்சா? நல்லது....

  பல சமயங்களில் திருவரங்கம் வரும்போது தாயாரை மட்டுமே சேவித்து திரும்ப வேண்டியிருக்கிறது. இந்த முறை தரிசிக்க வேண்டும்.... பார்க்கலாம்.

  ReplyDelete
 10. அரங்கன் தரிசனம் கிடைத்தற்கு வாழ்த்துகள்.

  ReplyDelete
 11. செட்டில் ஆயிட்டீங்களா? வெரி குட்.
  "ஆருளர் களைகண்" என்னை எப்பவும் தொந்தரவு செய்யும் சொல்லாட்சி. கண்ணனை அம்மா என்று அழைத்தது நாலாயிரத்தில் இந்த ஒரு பாடல் தான் என்று நினைக்கிறேன்.

  ReplyDelete