எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, May 24, 2012

ஆண்டாளுக்கு, சர்க்கரை நோய், ரத்த அழுத்தமாம்!

ஆண்டாள் நல்ல சுறுசுறுப்பானவள்.  ஒரு சில தொலைக்காட்சித் தொடர்களின் ஆரம்பத்தில்  வரும் பாடல் காட்சிகளில் இவள் இல்லாமல் ஆரம்பிக்காது.  அது அவங்களுக்கு ஒரு ராசி. தினம் தினம் தலையில் தங்கக் குடத்தில் நீர் சுமந்து கொண்டு வருவாள்.  வருடத்தில் பதினொரு மாதங்கள் வடக்கே இருந்தும், ஐப்பசி மாதம் மட்டும் தெற்கே இருந்தும் நீர் சுமப்பாள். (வருடத்தில் பதினொரு மாதங்கள் கொள்ளிடத்திலும், துலா மாசம் எனப்படும் ஐப்பசியில் காவிரியிலிருந்தும்)  நவராத்திரியில் கேட்கவே வேண்டாம்.  ரங்கநாயகியோடு நல்ல விளையாட்டுத் தான்.  ரங்கநாயகியும் இவளுக்குச் சரிசமமாக விளையாடுவாள். ரங்கநாயகியின் கால்கொலுசோடு ஆண்டாளின் கால் கொலுசை ஒப்பிட்டுப்பார்த்தால் ஆண்டாளுடையது பிரம்மாண்டமாய் இருக்கும்.  என்றாலும் ரங்கத்துக்குக் கோபமே வராது.

அந்தக் காலில் கொலுசைப் போட்டுக் கொண்டு ஆண்டாள் நொண்டியடித்து விளையாடுவதைப் பார்க்கப் பெரும் கூட்டம் கூடுமாம்.  நொண்டியடித்து விளையாடுவதோடு மட்டுமின்றி ரங்கநாயகிக்காக ஆண்டாள் பாட்டெல்லாம் பாடிக் காட்டுவாளாம்.  அதுவும் மெளத் ஆர்கனில். ஆண்டாள் வாசிக்கும் மெளத் ஆர்கன் இசையைக் கேட்கவே கூட்டம் கூடுமாம்.  எல்லாம் கேட்டுப் பார்த்து, விளையாடிக் களைத்துப் போகும் ரங்கநாயகிக்கு ஆண்டாள் வெண் சாமரம் வீசி ஆசுவாசப் படுத்துவாளாம்.

ஊர்க்காரர்கள் அனைவருக்கும் ஆண்டாளின் மேல் பிரியம் அதிகம்.  தினம் காலை ஒரு பெரிய வாளி நிறைய ஆண்டாளுக்குக் காஃபி தயாராக இருக்குமாம்.  ஆண்டாளுக்குக் காஃபி என்றால் உயிராம்.  அதோடு நாமெல்லாம் சாப்பிடும் எல்லாவற்றையும் ஆண்டாளும் சாப்பிடுகிறாள். இட்லி,காஃபி தான் காலை டிபனாக இருந்திருக்கிறது.  இப்போக் கொஞ்ச நாட்களாக ஆண்டாள் தேநீருக்கும் பழகிக் கொண்டிருக்கிறாள்.  ஆனால் காஃபியோ, தேநீரோ எதானாலும் ஆண்டாளுக்கு வாளியில் தான்.  குறைந்தது ஐந்து லிட்டராவது வேண்டும்.  அதுக்குக் குறைச்சு நோ தான்.

இதனால் தானோ என்னமோ ஆண்டாளுக்கு திருஷ்டிப் பட்டு விட்டது.  இப்போ ரத்த அழுத்தமும் கூடிப் போய் சர்க்கரையும் வந்து விட்டது.  ஆனாலும் காஃபிக்கோ, தேநீருக்கோ சர்க்கரை இல்லாமல் குடிக்க ஆண்டாளுக்குப் பிடிக்க வில்லை.  எப்படியோ ஒப்பேற்றுகிறாள் என்றால் அதுக்குக் காரணம் ஆண்டாளைக் கவனித்துக் கொள்ளும், ஸ்ரீதர் என்னும் பாலக்காட்டுப் பாகனும், அவருடைய தம்பியும் தான்.  இருவரும் தங்கள் சொந்தப் பெண்ணைப்போல் ஆண்டாளைக் கவனித்துக் கொள்கிறார்கள்.


 ஆண்டாளுக்கு உடம்பு சரியாகப் பிரார்த்தித்துக் கொள்ளுங்கள்.
தகவல்கள் உதவி: வெங்கட் நாகராஜ், கோவை2தில்லி (ஆதிலக்ஷ்மி)

9 comments:

 1. பாவம் யானை. மனித உணவை அதுக்குக் கொடுத்துப் பழகிவிட்டு வியாதியை உண்டாக்கிட்டமே! அறிவில்லாம நடக்குறதுக்கு ஒரு அளவே இல்லையா! வாயில்லா பிராணி அவஸ்தைப் படுவது very sad. ரங்கநாயகியை நம்பினால் இப்படித்தான் :)

  ReplyDelete
 2. //ரங்கநாயகியை நம்பினால் இப்படித்தான் :)//


  அப்பாதுரை, "இ" சார் பாஷையில் பாயிண்ட் மேட். நோட்டட்! :))))))

  ReplyDelete
 3. பாவம் ஆண்டாள்.

  காவேரி காவிரி ஆனது சந்தோஷம்!! :)

  ReplyDelete
 4. ஆண்டாளைப்பற்றி படித்து வரும்போது கோதை நாச்சியார்பற்றிதான் சொல்கிரீர்களோ என்று நினைத்தேன். கடைசியில் தான் விஷயமே புரிஞ்சுது.

  ReplyDelete
 5. அடப் பாவமே.... திருக்கடையூரில் அபிராமியைப் பார்க்க எனக்கு ரொம்பப் பிடித்திருந்தது. அருகிலேயே அமர்ந்து ரொம்ப நேரம் ரசித்தேன். ஓயாத உழைப்பு அவளுக்கு! ஆண்டாள் குணமாக ரங்கன் அருள் புரியட்டும்.அது சரி...மனிதர்கள் சாப்பிடும் தீநியைச் சாப்பிட்டு வியாதி வரவழைத்துக் கொண்ட ஆண்டாளுக்கும் அல்டோமேட்டும், அம்லோடிபினும் டயோனிலும் தருவார்களோ...!!

  ReplyDelete
 6. இ.கொ. நோ பேச்சு! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

  ReplyDelete
 7. வாங்க லக்ஷ்மி, ஆண்டாள்ங்கறது ஸ்ரீரங்கம் கோயில் யானையோட பெயர். வெங்கட் நாகராஜும், ஆதிலக்ஷ்மியும் வந்தப்போ யானையின் உடல்நலம் குறித்து சொன்னாங்க

  ReplyDelete
 8. ஆமாம். மனுஷங்களைப் போல காஃபி, டீ, இட்லினு பழக்கி இருக்காங்க. யார் சொல்றது. இன்னம்புரார் என்னன்னா என்னைக் கோயில் அதிகாரிகளோடு போய்ப் பேசுனு சொல்லிட்டு இருக்கார். பார்க்கலாம், பாகனிடமாவது பேச முடியுதானு. :))))

  ReplyDelete
 9. நான் college படிக்கும் போது veereswaram bus stand வழியா ஆண்டாள் அ walking நடத்தி போவார்கள்... ஜல் ஜல் நு சத்தத்தோட அழகா நடப்பா... சாயந்தரம் ஸ்ரீரங்கம் market area ல ஒரு சில சமயம் பார்க்கலாம்... ஒரு தடவ 20 Fanta bottle அ ஒவ்வொண்ணா குடிக்கறத முழுசா நின்னு பார்த்தோம்! Sugar வராம பின்ன!
  Missing those days ... இப்போவே போய் பாக்கணும் போல இருக்கு!

  ReplyDelete