எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, July 18, 2012

இந்தக்கதையை எப்படி முடிக்கிறது? சொல்லுங்கப்பா! :))))

தினம் தினம் ஹிட் லிஸ்ட் என்னமோ எகிறுது;  ஆனால் கமென்டைத் தான் காணோம். :))))) போகட்டும்.  இந்தக் கதைங்கற பேரிலே நான் எழுதற அறுவையைச் சகிச்சுட்டுப் பின்னூட்டம் போடறவங்களைப் பார்த்து சில பேருக்கு அதிசயமா இருக்கு.  இன்னும் சிலர் கதையை எப்படிக் கொண்டு போகணும்னு ஐடியா கொடுத்திருக்காங்க.  சிலருக்கு அகிலாண்டத்தை நான் கொடுமைக்காரியாக் காட்டறது பிடிக்கலை!  வருத்தப்படறாங்க. இப்போ இதை இரண்டு பதிவுகளில் முடிக்கணும்னு நினைக்கிறேன்.  ஆனால் எங்கே கொண்டு விடுமோ தெரியாது.  என்றாலும் நான் ஒரு முடிவை யோசித்து வைத்திருக்கிறேன்.  அதை நோக்கிக் கதையை நகர்த்தணும்.  நகர்த்தறதா நினைச்சுட்டும் இருக்கேன். அதுக்குள்ளே ஏகப்பட்ட கருத்துப் பரிமாற்றங்கள். :))))

படிக்கும் வாசகர்கள் என்ன நினைக்கறீங்க?  எப்படி முடிக்கணும்? அவங்க அவங்க ஐடியாவைப் பகிர்ந்துக்குங்க எல்லாரும்.

ம.சா:  உன்னோட பதிவுக்கு வந்து படிக்கிறதே போனாப் போகுதுனு ஸ்ரீராம் ஒருத்தரும், லக்ஷ்மியும் தான்.  இதிலே படிக்கும் வாசகர்கள்னு பில்ட் அப் வேறேயா?

ஹிஹிஹி, இந்த ம.சா. நேரம் காலம் தெரியாமல் வந்து தொந்திரவு செய்யும். வேறே வேலையே இல்லை அதுக்கு.  அதை உதறித்தள்ளிட்டுத் தான் எழுத வேண்டி இருக்கு.

20 comments:

  1. பழய கால குடும்ப வழக்கங்களை தெரிஞ்சுக்க வேனாமா இந்தக்கால தலை முறை அதுக்கு இப்படி கொண்டு செல்வதுதான் சிறந்த உத்தி.னீங்க என்ன யோச்சிச்சு வச்சிருக்கீங்களோ அதையே தொடருங்க.

    ReplyDelete
  2. ம சா ன் னா என்ன. கதை படிக்க ஆரம்பிக்கல மெதுவா படிக்கிறேன் .

    ReplyDelete
  3. படிக்கறவங்க எல்லாம் பின்னூட்டம் போட்டா நல்லாத்தான் இருக்கும். நிறையப் பேர் படிச்சுட்டு 'கம்'முனு போயிடறாங்க! சில பேருக்கு ப்ளாக் கமெண்ட் செய்ய வசதி அளிப்பதில்லை, அல்லது எப்படி கமெண்ட் செய்வது என்று அவர்களுக்குத் தெரிவதில்லை!

    ReplyDelete
  4. அப்புறம், இன்னும் இரண்டு பதிவுகள்ள முடிச்சுடணும்னு நினைச்சுருக்கீங்களா.... தந்தி பாஷைல சொல்வீங்களோ... அல்லது கொசுவர்த்தி டெக்னிக்கா?

    ReplyDelete
  5. முடிக்கணும்னு என்ன கட்டாயம்? பார்வைகள் பலவிதம்! நிதானமா யோசிச்சு கொஞ்சம் கொஞ்சமா எழுதிகிட்டே வாங்க... எல் கே மாதிரி தொடர்கதையைப் பாதியில நிறுத்திடாதீங்க! ஜீவி சார் மாதிரி நிறுத்தி நிதானமா தொடருங்க...

    ReplyDelete
  6. அகிலாண்டம் கேரக்டரைப் புறக்கணிச்சுடுங்க!! திருந்தவும் வேணாம், அழ வைக்கவும் வேணாம்! இந்த மாதிரி ஜென்மங்கள் திருந்தறதெல்லாம் தமிழ் சினிமாலயும் சன் டிவி சீரியல்லயும்தான் சாத்தியம்! மறைபொருளா நிகழ்ந்ததைச் சொல்லி அடுத்த கட்டத்துக்கு நகர்ந்துடுங்க!

    நீங்க யோசனை கேட்டதை நம்பி சீரியஸா யோசனை எல்லாம் வேற சொல்றேன்... சிரிக்காதீங்க!

    ReplyDelete
  7. வாங்க லக்ஷ்மி, இன்னிக்கு வடை உங்களுக்கா? :))) உங்க யோசனை நல்லாத்தான் இருக்கு. கவனத்தில் வைக்கிறேன்.

    ReplyDelete
  8. ஜெயஸ்ரீ, பல மாதங்கள் கழிச்சு வந்திருக்கீங்க. கதையைப் படிச்சு அதிர்ச்சி எல்லாம் அடைய வேண்டாம். :))))
    ம.சா.=மன சாட்சி. அப்போ அப்போ வந்து, உனக்கு நீயே பில்ட் அப் கொடுத்துக்காதே" னு மிரட்டிட்டு இருக்கு. என்னத்தைச் சொல்றது! :))))))

    ReplyDelete
  9. வாங்க ஸ்ரீராம், உங்க ஆறுதலான வார்த்தைகளுக்கு நன்றி. படிக்கிறாங்க என்பது தெரிகிறது. ஒரு சில தனி மடல்கள் மூலம். :))))))

    ReplyDelete
  10. ஹிஹிஹி, நானும் கிட்டத்தட்ட ஐந்து பதிவா இரண்டு பதிவிலே முடிக்கிறேன்னு பூச்சாண்டி காட்டிட்டு இருக்கேனே, அதைப் பாருங்க. :)))))

    ReplyDelete
  11. முடிக்கணும்னு என்ன கட்டாயம்? பார்வைகள் பலவிதம்! நிதானமா யோசிச்சு கொஞ்சம் கொஞ்சமா எழுதிகிட்டே வாங்க... எல் கே மாதிரி தொடர்கதையைப் பாதியில நிறுத்திடாதீங்க! ஜீவி சார் மாதிரி நிறுத்தி நிதானமா தொடருங்க...//

    எல்லாத்துக்கும் ஒரு முடிவு வேணும் இல்லையா? அதோடு எல்கேக்குப் பல வேலைகள். முக்கியமாய் அலுவலகத்தில் பிசியா இருக்கார். அதனால் அவரால் தொடர முடியலை.

    ஜீவிசார் எங்கே? நான் எங்கே? அவர் ஜாம்பவான். ம்ம்ம்ம் பார்க்கலாம்.

    ReplyDelete
  12. அகிலாண்டம் காரக்டரை உள்ளது உள்ளபடிச் சொல்லித் தானே ஆகணும். இப்படியும் சிலர் இருக்காங்க. எனக்குத் தெரிந்து மருமகளுக்குக் குழந்தை பிறக்கக் கூடாதுனு சொன்ன மாமியார்களைப் பார்த்திருக்கேன். :(((( உண்மை சில நேரங்களில் கொடியது.

    ReplyDelete
  13. நீங்க யோசனை கேட்டதை நம்பி சீரியஸா யோசனை எல்லாம் வேற சொல்றேன்... சிரிக்காதீங்க!//

    சிரிக்காதீங்கனு சொல்லி இருக்கிறதைப் பார்த்துச் சிரிச்சேன். யோசனை என்னமோ சீரியஸாத் தான் கேட்டேன். மற்றபடி உங்கள் ஆலோசனைகளுக்கு நன்றி.

    ReplyDelete
  14. உங்கள் தொடர் முடியக் காத்திருக்கிறேன்! எதுக்கு தெரியுமா? மொத்தமா படிக்கத்தான்... மொத்தமும் படிச்சுட்டு திரும்ப வரேன்... :)

    ReplyDelete
  15. வாங்க வெங்கட், சரியாப் போச்சு போங்க. நீங்க இனிமேப் படிச்சு, எப்படி முடிக்கிறதுன்னு எப்படி ஆலோசனை சொல்வீங்க? என்னையே முடிங்கன்னா என்ன அர்த்தம்? :))))))

    ReplyDelete
  16. முடிக்கவே முடிக்காதீங்க.. தொடரச்சொல்லி வாசகர்களை அழையுங்கள்..

    கன்னித்தீவு - சிந்துபாத் கதை மாதிரி முடிவுக் காலமில்லாமல் தொடரட்டும் !

    ReplyDelete
  17. சரியாப் போச்சு ராஜராஜேஸ்வரி, தினத்தந்தி சிந்துபாத் மாதிரியா? :)))) அப்புறமாப் பதிவிலே பின்னூட்டம் போட ஆளைத் தேடணும்; இல்லைனா ஐடியை மாத்திட்டு நானே வந்து போட்டுக்கணும். :)))))))

    ReplyDelete
  18. //அகிலாண்டம் காரக்டரை உள்ளது உள்ளபடிச் சொல்லித் தானே ஆகணும். இப்படியும் சிலர் இருக்காங்க.//

    ஒரு பக்கத்தில் 'காரணம் இல்லாமல் காரியம் இல்லை; காரியம் இல்லாமல் காரணம் இல்லை' என்று சகுனி உதாரணம் எல்லாம் சொல்கிறீர்கள்.
    இன்னொரு பக்கம் அகிலாண்டம் மாதிரியான கேரக்டர்களை அந்தரத்தில் உலாவ விடுகிறீர்கள்.

    ஆக, அகிலாண்டம் நடவடிக்கைகளு க்கும் ஏதாவது காரணம் சொல்லவில்லையென்றால் எடுபடாது. மணல்கயிராக முடியும். வழக்கமான ரூட்டில், மாமியார்கள் என்றாலே இப்படித்தான் என்கிற மாதிரி ஆகிவிடும்.

    மருமகள்கள் உசத்தி, மாமியார்கள் மட்டம் என்று இல்லை. இன்றைய மருமகள்களே நாளைய மாமியார்கள்.
    அதாவது மருமகளாய் இருந்த பொழுது தங்கத் தாம்பாளாங்களாய் இருந்தவர் கள், மாமியாராய் இருக்கும் பொழுது தகரத் தாம்பாளங்களாய் மாறுவது எப்படி என்பதற்கு ஏற்றுக் கொள்கிற மாதிரி காரணம் சொல்ல வேண்டும்.
    ஒரு பெண் எழுத்தாளரே எழுதும் பொழுது பெண்களின் மருமகள்- மாமியார் என்ற இருவேறு ஸ்டேஜ்களை துல்லியமாக எடுத்துச் சொல்லலாம்.

    இல்லையென்றால் அகிலாண்டம் அவள் மாமியாரிடம் இப்படித்தான் படாதபாடு பட்டாள். இப்பொழுது அவள் மாமியாராய் ஆகும் பொழுது தன் மாமியாரிடம் கற்றுக்கொண்டதை தன் மருமகளிடம் காட்டுகிறாள் என்று ஆகிவிடும்.

    பூவும், நாறும் ரெடி. மாலை கட்டுவது உங்கள் பொறுப்பு.

    ReplyDelete
  19. வாங்க ஜீவி சார், இந்தியா வந்தாச்சா? :))))))

    வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

    அகிலாண்டத்திடம் உங்களுக்கு ஒரு சாஃப்ட் கார்னர் இருக்கு! :)))) ஆனால் உண்மை அப்படி இல்லை என்பதே திரும்பவும் சொல்ல வேண்டி இருக்கு. சகுனி காரக்டருக்கு நான் காரணம் சொல்லவில்லை. மஹாபாரதத்தில் கூட அப்படி இருக்கிறதாய்த் தெரியலை. செவிவழிச் செய்திகள் என்றே குறிப்பிட்டிருப்பேன். பல இடைச்செருகல்கள்; ஆனாலும் யது குலத்தோடான பகைமைக்குக் காரணம் ஆழமாகவே உள்ளது இல்லையா?

    இதற்கும் , அகிலாண்டத்தின் காரக்டருக்கும் சம்பந்தம் இல்லை. மாமியார்களைத் தாழ்த்திப் பேசுவது என் நோக்கமும் இல்லை. நானும் ஒரு மாமியாரே! :)))))) வயது நாற்பதுக்கும் மேல் ஆகிக் குழந்தை பெற்றுக் கொண்ட பல பெண்களும் அந்தக் கடைசிக் குழந்தையை அவர்கள் வளர்ப்பதில்லை என்பதும் சுடும் உண்மை. அக்கம்பக்கம் பல வீடுகளில் பார்த்திருக்கிறேன்.

    மூத்த குழந்தைகளை வளர்க்கப்பொறுமையும், வயதும் உடல் ஆரோக்கியமும் இருந்த மாதிரி இந்தக் குழந்தை பிறக்கும் சமயம் இல்லாமல் போவதும் காரணம். இது அவர்களை உடல், உள்ள ரீதியாக நிறையவே பாதிக்கிறது. இதிலே ஏற்றுக்கொள்ளக் கூடிய காரணம்னு எதைச் சொல்ல முடியும்?

    உடலாலும், உள்ளத்தாலும், பணத்தாலும் எல்லாம் செய்யும் மருமகள்களையே ஆட்டிப் படைக்கும் மாமியார்களும் இருந்திருக்கிறார்கள் தான். இப்போது தான் நிலைமை கொஞ்சம் பரவாயில்லை என்று சொல்ல வேண்டும். மாமியாரும் சக மனுஷி தான் என்பது மாமியார்களாலேயே புரிந்து கொள்ளப் பட்டிருக்கிறது. :)))))))

    ReplyDelete
  20. //அகிலாண்டத்திடம் உங்களுக்கு ஒரு சாஃப்ட் கார்னர் இருக்கு! :)))) //

    தப்பு. இந்தக் கதைக்கான என்னுடைய முந்தைய பின்னூட்டங்களும் இதற்கு அத்தாட்சி.

    அகிலாண்டம் ஒரு கேரக்டர். அவ்வளவு தான். இந்தக் கதையை எப்படி முடிக்கிறது என்று கேட்பதால், தெரிந்த நிறைவாக முடிப்பதற்கான வழிவகைகளை யோசிக்கிறோம். அவ்வளவு தான்.

    அகிலாண்டம் ஒரு பெண் என்பதால், இப்படியாக இவர்கள் இருப்பதற்கு பெண்மனத்தால் கண்டுபிடித்து ஒரு காரணத்தைச் சொல்லலாமே என்று கேட்கிறேன். அவ்வளவு தான். அப்படிச் சொல்வதால் கண்ணுக்குத் தெரியாத ஒரு பயன் உண்டு. அதனால் தான்.

    கதைகளில் சொல்கிற கதை, எழுதுகிற கதை என்று இருவகை இருக்கின்றன.
    சொல்கிற கதையில் இவர்களெல்லாம் இப்படி இப்படி என்று சொல்கிறவரின் அந்த நேர எண்ணப்படி சொல்லிக் கொண்டே போகலாம். அதற்கு அப்பீலே கிடையாது. ஏன், எதலால், எதற்காக என்று எதுவும் இருக்காது. ஒன்றுக்கு ஒன்று பொருந்தி வர வேண்டுமே என்கிற அவசியம் கூடக் கிடையாது. சொன்னதெல்லாம் காற்றோடு போய்விடும். கதை முடிஞ்சதாம், கத்திரிக்காய் காச்சதாம் என்று சொல்லி முடித்து எழுந்து விடலாம்.

    ஆனால், எழுகிற கதை, அதுவும் தொடராக எழுகிற கதை அப்படி இல்லை. நம் மனசைப் பதித்து எழுத நிறைய இடம் இருக்கிறது. பிரச்னையை அலசலாம். தீர்வு சொல்லலாம். அது யாருக்கானும் பயனாகவும் போகலாம். இப்படியான அகிலாண்டம் என்கிற ஒற்றை மனுஷியை விட்டுத் தள்ளுங்கள். இன்னொரு மனுஷியிடம் நீங்கள் கண்ட இன்னொரு காரணத்தை அகிலாண்டத்தின் பாத்திரத்தில் அடக்கி அகிலாண்டம் இப்படி இருப்பதற்கு காரணம் கண்டு பிடிக்க்லாம். எதற்காக இந்த வேலை என்றால், நாம் சொல்லும் எதற்கும் ஒரு அர்த்தமும், காரணமும் இருக்க வேண்டுமே, அதற்காகத் தான். இதெல்லாம் தான் தொடருக்கான விஷயங்கள்.

    மனிதர்களின் குண நலன்களில் எத்தனையோ குறைபாடுகள் இருக்கின்றன. குறைகளை அடுக்குவதோடு நிறுத்திக் கொள்ளாமல், குறைகளுக்கான காரணங்களைக் கண்டுபிடித்துச் சொன்னால், அவற்றிற்கு தீர்வு காண்பது சுலபமாக இருக்கும். அது தான் இந்த மாதிரியான கதைகளால் ஆய பயன்.

    இந்த விஷயத்தில் நம் முன்னோர்கள் கில்லாடி. இராமயணத்திலும் சரி, மஹாபாரத்திலும் சரி-- இதனால் தான் இது, இந்த விளைவு என்று ஒவ்வொரு செயலுக்கும் ஒரு கிளைக் கதையைச் சொல்லி நிறைவாகச் சொன்ன திருப்தியை ஏற்படுத்தியிருப் பார்கள். முடிக்கும் பொழுது இந்த நிறைவு படிப்பவர்களுக்கு அவசியம். அதனால் தான் சொன்னேன்.

    அதுமட்டுமல்ல, எது ஒன்றையும் எழுத தேர்ந்தெடுப்பதும் அதனால் தான். இந்தக் கதையின் மூலம் வாசிப்பவர்களுக்கு இதையெல்லாம் சொல்லலாம் என்கிற எண்ணத்திற்கு எழுதுபவர் முன்முடிவுக்கு வருகிற காரணத்தினால் தான்.

    ReplyDelete