எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, July 18, 2012

ஹிஹிஹிஹி! சினிமா விமரிசனம் படிங்க!

மத்தியானம் கணினியைக் கொஞ்ச நேரம் மூடும் நேரம்.  நம்ம ரங்க்ஸ் அவரோட வழக்கப்படி ஒவ்வொரு சானலா மாத்திட்டிருந்தார்.  விஜய் சானலிலே  ஏதோ சிவாஜி படம்.  சரிதான் வழக்கமான மசாலானு நினைச்சுட்டு இருக்கிறச்சேயே நம்பியார் கிட்டே வாதாடித் தோத்துப் போன சிவாஜி வீட்டுக்குப் போனார்.  அவர் மனைவியா யார் நடிச்சதுனு பார்த்தா.....................மயக்கமே வந்துடுச்சு எனக்கு!  அம்பிகா.  அம்பிகாவுக்கு வயசாய் குண்டாய்ப் போனதுக்கப்புறம் நடிக்கலைனு பார்த்ததுமே புரிஞ்சது.  நல்லாத் தான் இருந்தாங்க.  ஆகவே அவங்க நக்ஷத்திரம் கலை உலகிலே பெரிய அளவில் பேசப்பட்டப்போ வந்திருக்கணும். ராதாவோட சிவாஜி நடிச்சது  முதல் மரியாதை படத்தில் சிவாஜி தான் வயசானவரா இருப்பார். ராதா அவங்க வயசுக்கேத்த மாதிரி சின்னப் பொண்ணாவே நடிப்பாங்க.  இதிலே அம்பிகாவுக்குப் போட்டிருந்த மேக்கப் கோரம்.  அதையும் மீறி அவங்க உண்மையான வயசும், இளமையும் தெரியுது. :))))))

என்ன படம்?  தெரியாது!  அம்பிகா மனைவி.  சிவாஜி கார் மெகானிக்னு கொஞ்ச நேரம் படத்தைப் பார்த்ததும் புரிஞ்சது.  நம்பியார் பொண்ணு சில்க்.  அவங்களை சிவாஜி பையர் சின்னப் பையர் கல்யாணம் செய்துக்கறார்.  பெரிய பையர் நிழல்கள் ரவி. மருமகள் தீபா.  ஹிஹிஹி, படம் பார்க்கையிலேயே சிவாஜி உணர்ச்சி வசமா நடிக்கையிலே சிரிப்பு வந்தது.  கதை என்னமோ வழக்கமான கதை தான்.  இரண்டு மகன்களும் சிவாஜியையும், அம்பிகாவையும் ஓரம் கட்ட, கடைசியில் சிவாஜி ஜெயிச்சு முன்னுக்கு வரார். சிவாஜியாச்சே. வந்து தான் ஆகணும்.  :)))) இந்தக் கதையில் முதல்முறையா முதியோர் இல்லம் திறக்கறதைப் பத்திச் சொல்றாங்க.  அது படம் வந்த காலத்தில் புதுமையா இருந்திருக்கணும். போய்ட்டுப் போய்ட்டு வந்து படம் பார்த்ததாலே புரிஞ்ச வரைக்கும் சொல்றேன்.  நல்லவேளையா கிளைமாக்சிலே நெஞ்சு வலி வந்து ஆஸ்பத்திரியிலே இருக்கிற சிவாஜி முழ நீள வசனம் பேசலை.  கடிதமா எழுதிக் கொடுத்துடறார்.  அதுவும் நெஞ்சு வலியோடு எப்படியோ எழுதிடறார்.

அப்பாடா, கடைசியிலேயானும் கொஞ்சமானும் லாஜிக்கா இருந்ததேனு நினைச்சேன்.

இரண்டு நாட்கள் முன்னாடி பார்த்த இன்னொரு படம் நிஜம்மாவே நல்லாவே இருந்தது.  நடிச்சவங்க எல்லாரும் சீரியல் நடிகர்களா!  முதல்லே ஏதோ சீரியல்னே நினைச்சேன்.  அப்புறம் பார்த்தா விஜய் மாட்டினிங்கறாங்க. அதைச் சொல்றாங்களே படம் பேரைச் சொல்லக் கூடாதோ!  இன்னிக்குப் போட்ட சிவாஜி படமும் பேர் தெரியலை.  அந்தப் படமும் பெயர் தெரியலை.  அந்தப் படத்தில் ஒரு குழந்தையை எப்படியோ மெளலியின் விளம்பரக் கம்பெனி விளம்பரப் படத்தில் நடிக்க வைக்கிறது.  அந்தக் கம்பெனியில் வேலை செய்யும் ஒரு பெண்ணும், பையரும் சேர்ந்து அதைச் செய்யறாங்க.  அந்தக் குழந்தையோ யாராலோ பணத்துக்காகக் கடத்தப்பட்டிருக்கு.  கடத்தல் குழந்தை இவங்க கைக்கு வருது.  குழந்தையோட பெற்றோரை மெளலியின் ஊழியர்கள் இருவருமாத் தேட மெளலிக்கோ விளம்பரப் படத்தை ஒப்புக்கொள்ளப் போகும் கம்பெனி நிர்வாகி குழந்தையின் பெற்றோர் அக்ரிமென்டில் கையெழுத்துப் போட்டால் தான் விளம்பரத்தை வெளியிட முடியும்னு சொல்லவே அதுக்குத் தவிக்கிறார்.

கடைசியில் எல்லாத்தையும் கண்டு பிடிக்கிறாங்க.  கொஞ்சம் விறு விறு, கொஞ்சம் நகைச்சுவை, கொஞ்சம் த்ரில்னு படம் பார்க்கிறாப்போல் இருந்தது. படம் பார்த்தவங்க பெயர் தெரிஞ்சால் சொல்லுங்கப்பா. 

13 comments:

  1. நீங்கள் சொல்லியுள்ள சிவாஜி கணேசன் படம் வாழ்க்கை. அதில் 'காலம் மாறலாம்..' என்ற ஒரு நல்ல பாடல் உண்டு. வாழ்க்கை அவதார் என்ற ஹிந்திப் படத்தைப் பார்த்து எடுக்கப் பட்டது. அந்த அவதார் ஹிந்திப் படத்தில் நடித்த ஒரிஜினல் சூப்பர் ஸ்டார் ராஜேஷ் கன்னா இன்று மறைந்து விட்டது அவர் படங்களின் நினைவைக் கிளறி விட்டுள்ளது. இன்னொரு படம் என்னவென்று தெரியவில்லை. சிவாஜி படமாக இருந்தால் சொல்லியிருப்பேனோ என்னமோ....!! :))

    ReplyDelete
  2. வாங்க ஸ்ரீராம், உங்களை, அப்பாதுரையை, தி.வா.வை நினைச்சுட்டே தான் இதை எழுதினேன். தப்பாய் எடுத்துக்காதீங்க. என்னமோ சிவாஜின்னா அலர்ஜி! :)))))

    இன்னொரு படம் புதுசுனு நினைக்கிறேன். ஐந்து வருஷத்துக்குள் வந்திருக்கணும். குழந்தைதான் கதாநாயகன்/நாயகி. ஆண் குழந்தையா, பெண் குழந்தையானு தெரியலை! பாப்பா பாப்பானே சொன்னாங்க. :)))))

    ReplyDelete
  3. ராஜேஷ்கன்னா படம் அவ்தார் பாத்திருக்கேன் இது பாக்கலே.படம் பேரே தெரியாம படம் பார்ப்பது வேடிக்கைதான்

    ReplyDelete
  4. அவ்தார் பார்த்த மாதிரியும் இருக்கு; சரியாத் தெரியலை.

    அநேகமா நாங்க பாதிப் படத்திலே இருந்து தான் பார்ப்போம். பத்து நிமிஷம் பார்க்கிறச்சே ஓரளவு கதை ஓட்டம் புரியும் என்பதால் அதைப் பொறுத்துத் தொடர்வோம். இந்தப் படங்கள் மட்டுமல்ல, பல படங்கள் பெயர் தெரியாமலேயே பார்த்திருக்கேன்.

    ReplyDelete
  5. நான் ராஜபார்ட் ரங்கதுரைக்குப் பிறகு எந்த சிவாஜி படமும் (மெயின் ரோலில் சிவாஜி நடித்த படங்கள்) தியேட்டருக்குச் சென்று பார்த்ததில்லை. ஒரு காலத்தில் அவர் பைலட் பிரேம்நாத், இட்லர் உமாநாத், தோசை துவாரகாநாத், சட்னி சட்டநாத் என்றெல்லாம் 'நாத்'தப் படங்களில் நடித்து வெறுப்பேற்றிக் கொண்டிருந்தார்! ஆனால், அவர் அம்பிகாவோடு ஜோடியாக நடித்தது, வாழ்க்கை படம் மட்டும்தான் என்று நினைக்கின்றேன்.

    ReplyDelete
  6. முத படத்துல சிவாஜி ஒரு பஞ்ச் டயலாக் பேசுவாரே "வாழ்க்கை ஒரு சக்கரம்...."னு ஆரம்பிக்கும். :))

    ரெண்டாவது படம் பெயர் "திருதிரு துறு துறு" (ஆமா அது தான் படத்தின் பெயர்). :))

    ReplyDelete
  7. வாங்க கெளதம் சார், உங்களை வரவழைக்க வேண்டி சிவாஜியைத் திட்ட வேண்டியதாப்போச்சு!:))))) உங்களுக்கும் சிவாஜி படங்கள்னா அலர்ஜினு தெரிய சந்தோஷமா இருக்கு. :)))))) ஆஹா, நம்ம கட்சிக்குக் கொடி பிடிக்க ஆள் கூடிட்டே போகுதுனு ஆடிப்பாடிக் கொண்டாடறேன். :)))))

    ReplyDelete
  8. ஹை, அம்பி, என்ன இது? அதிசயமா இருக்கு? இந்தியா வந்தாச்சா? :P

    முதல்லே உங்க பதிவிலே கொசுத்தொல்லைகளையும் ப்ளேஸ்கூலையும் கமெண்ட் மாடரேஷன் பண்ணியாச்சா இல்லையா? எனக்குத் தொல்லை தாங்கலை. :P:P:P:P

    முதல் படம் வாழ்க்கைனு ஸ்ரீராம் சொல்லிட்டார். (நீங்க இல்லை, ஸ்ரீராம்னதும் உங்களைனு நினைச்சுக்க வேண்டாம்.) :D நான் பார்க்கிறச்சே அந்தப் படத்திலே பாட்டு சீனே இல்லை. அப்புறமா ஏதோ பாட்டு வந்தது. டப்பாங்குத்துப் பாட்டு! :)))))

    ரெண்டாவது படம் பேரு நிஜம்மா என்னனு கேட்டுட்டுச்சொல்றேன். :))))))

    ReplyDelete
  9. ஆஹா ஒரே பதிவில் ரெண்டு விமர்சனம்... நடத்துங்க...

    நமக்கும் சிவாஜின்னா கொஞ்சம் அலர்ஜி!

    ReplyDelete
  10. போல் பச்சன் பாருங்கோ மிசஸ் சிவம் . முதல் பாதி சிரிச்சு சிரிச்சு வயிறு வலிச்சது , ரெண்டாம் பாதி கொஞ்சம் சோ சோ தான் ரொம்ப நாளுக்கப்புறம் ஒரு காமெடி படம். டெல்லில தியேட்டர்ல பாத்தோம். டெல்லி மாறியே போச்!

    ஏம்ப்பா சிவாஜி தலையை உருட்டறீங்க?"" இந்திய
    சீன எல்லைனு"" தமிழ்ல எழுதியிருக்கற வாத்யார் படம் தேவலாமாக்கும் :))

    ReplyDelete
  11. வாங்க வெங்கட், ஶ்ரீரங்கம் வரப் போறதா உங்க பதிவிலே பார்த்த நினைவு. உங்க பதிவுக்கு வர முடியலை ஒருவாரமா. நாளைக்குவந்து பார்க்கணும். வாங்க இங்கே வந்தால் வீட்டுக்கு வாங்க.

    ஹிஹி, ஒரே பதிவில் பல சினிமா விமரிசனங்கள் போடுவோமுல்ல! :)))))

    ReplyDelete
  12. ஜெயஶ்ரீ, போல் பச்சன் இங்கே தொலைக்காட்சியிலே வந்தால் பார்க்கலாம். ஹூஸ்டனிலே என்றால் சினிமாக்குனே தனி சானல் இருந்தது. அதிலே தேவையான படத்தைத் தேடிப் பிடிச்சுப் பார்ப்போம். இங்கே கேபிள் கனெக்‌ஷன் தானே! :))))

    வாத்தியார் படமும் ஸோ, ஸோ தான். :)))))) என்றாலும் இங்கே சிவாஜி ரசிகர்கள் நிறைய இருக்கிறதாலே அவங்களைச் சீண்டலாம்! வம்பிழுக்கலாம்.

    அனைவரையும் வம்பிழுப்பதல்லாமல் வேறொன்றறியோம் பராபரமே! :))))))

    ReplyDelete
  13. அந்த குழந்தை படம் திரு திரு துரு துரு

    ReplyDelete