எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, July 10, 2013

சமரசம் பண்ணித்தான் ஆகணுமா?

//தஞ்சாவூர்காரர் திருநெல்வேலியில் சம்மந்தம் கொண்டாலோ. அல்லது வேறு வேறு பழக்க வழக்கங்கள் உறவு நாடிச் சென்றாலோ கன்ஃப்யூஷன் ஏற்படாதா. ? எந்த ஊர் வழக்கம் செல்லுபடியாகும். இது சுமங்கலிப் பிரார்த்தனைக்கு அல்ல. மற்ற நடைமுறைகளுக்காக என்று கொள்ளும்போது யார்காம்ப்ரமைஸ் செய்வது.? எனக்கும் இது எல்லாம் தேவையா என்று கேள்வி உண்டு.//

ஜிஎம்பி சார் கேட்டிருக்கும் கேள்வி இது. ஒரு மாவட்டம் விட்டு இன்னொரு மாவட்டத்திலே திருமணம் செய்து கொண்டாலே குழப்பம் ஏற்படுமே என்று சந்தேகம் கொள்கிறார். முன்னெல்லாம் அருகிலுள்ள கிராமங்களிலேயே சம்பந்தம் செய்து கொள்வார்கள் தான்.  இல்லை என்று சொல்லவில்லை.  ஆனால் அதே சமயம் மிக அபூர்வமாக வேறு மாவட்டங்களிலும் திருமணம் செய்து வைக்கும் வழக்கம் இருந்து வந்திருக்கிறது.  என்னோட பெரியம்மா (அம்மாவின் அக்கா) தஞ்சை ஜில்லாக்காரர்களுக்குத் திருமணம் செய்து வைக்கப்பட்டார். அதற்கும் முன்னரே திருநெல்வேலிக்காரர்கள் பெண்ணை என்னோட பெரியப்பா ஒருத்தர் (அப்பாவின் அண்ணா) திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.  இதிலே எந்த ஊர் வழக்கம் செல்லுபடியாகும் என்பதற்கான கேள்வியே எழாது. பெண் எந்த ஊர்க்காரர்களின் மருமகளாகப் போகின்றாளோ அந்த ஊரின் , அந்த வீட்டின் வழக்கங்களும், நடைமுறைகளுமே அவள் வாழ்க்கையில் கடைப்பிடிக்கப்படும்; கடைப்பிடிக்கப்பட வேண்டும். 

தினசரி சமையலில் வேண்டுமானால் பிறந்த வீட்டுப் பழக்கப்படி ஒரு நாள், புகுந்த வீட்டுப் பழக்கப்படி இன்னொரு நாள்னு சமைச்சுக்கலாம்.  தப்பில்லை.  ஆனால் முக்கியமான சிராத்தம், சமாராதனை, சுமங்கலிப் பிரார்த்தனை, ஶ்ரீமந்தம் போன்றவற்றில் புகுந்த வீட்டு நடைமுறைகளையே கடைப்பிடிக்க வேண்டும். அது தான் முறை. நான் பிறந்தது, வளர்ந்து படித்தது எல்லாம் மதுரை.  திருமணம் ஆகிப் போனதோ பழைய தஞ்சை மாவட்டத்துக் கும்பகோணம் அருகிலுள்ள கிராமம்.  பட்டிக்காடு என்றால் பட்டிக்காடு.  மின்சாரமே வரலை அப்போது.  கை விளக்குகள் தான்.  விறகு அடுப்பு தான்.  அதுவும் தென்னை ஓலை, மட்டைகளைப் போட்டு எரிப்பார்கள்.  ஏனெனில் அது தான் சுலபமாகக் கிடைக்கும்.  விறகுகள் இருந்தாலும் அதிகம் தென்னை மட்டைகள் தான். இதுதான் இப்படி என்றால் பேச்சிலும் நிறையவே மாறுதல்.  பள்ளிக்கூடத்தை, "பள்டம்" என்று சொல்வார்கள். கற்றுக்கொள்கிறேன், என்பதை, "கத்திக்கறேன்" என்பார்கள்.  இதெல்லாம் என்னனு புரியவே எனக்கு ஆறு மாசமாச்சு. ஆனால் இதெல்லாத்தையும் விடப் பழக்கங்கள் முற்றிலும் மாறுபட்டவை. அதுக்காகவெல்லாம் பயந்தால் முடியுமா? 

முக்கியமான சமயங்களில் புக்ககத்துப் பழக்கத்தையே கடைப்பிடிப்பேன். கடைப்பிடிக்கிறேன்.  இப்போது எனக்குப் புகுந்த வீடு, பிறந்த வீடு இரண்டு பக்கத்துப் பழக்கமும் நன்றாகவே தெரியும். ஆனால் இரண்டுக்கும் எக்கச்சக்கமாக வித்தியாசம்.   இதுக்காக யார் சமரசம் பண்ணிக்கிறது என்ற போட்டியெல்லாம் நினைச்சுக் கூடப் பார்த்ததில்லை.  முக்கியமான நேரங்களில் புக்ககத்து வழக்கப்படி செய்துவிட்டால் அப்புறம் நான் இருக்கிறபடியே இருக்கலாம் என்பதே  என் கருத்து. குல தெய்வ ஆராதனை, சிராத்தம், சமாராதனை, சுமங்கலிப் பிரார்த்தனை போன்றவற்றில் என் பிறந்த வீட்டு வழக்கத்தைக் கொண்டுவர மாட்டேன்.  இப்போதெல்லாம் நாடு விட்டு நாடு, மாநிலம் விட்டு மாநிலம் என்றெல்லாம் திருமணம் செய்து கொள்ளும் காலமாகி விட்டது.  உலகம் மிகக் குறுகி வருகிறது. கொஞ்சம் ஈகோவைக் கைவிட்டால் போதும்.  எல்லாம் நம் வசமே. 

மற்றபடி சுமங்கலிப் பிரார்த்தனை தேவையா என்ற கேள்விக்கு என்ன பதில் சொல்வது எனப் புரியவில்லை.  எத்தனையோ தலைவர்களின் நினைவு நாட்கள், மதத் தலைவர்கள் நினைவு தினங்கள், அரசியல்வாதிகளின் நினைவு தினங்கள், சினிமா நக்ஷத்திரங்களின் நினைவு தினங்கள் கடைப்பிடிக்கப்படுகிறது.  இது நம் நாட்டில் மட்டுமல்ல.  உலகம் முழுதும்.  அப்படி இருக்கையில் நம் குடும்பத்தில் பிறந்து மறைந்த அல்லது நம் குடும்பத்தில் வாழ்க்கைப்பட்டு வாழ்ந்து மறைந்த சுமங்கலிப் பெண்களை நினைவு கூர்தல் எந்த விதத்திலும் தவறில்லை என்பது என் கருத்து.  இவ்வளவு விமரிசையாகப் பெரிதாகப் பண்ண முடியாவிட்டாலும் அவர்களை நினைத்துக் குறைந்த பக்ஷம் ஒரே ஒரு பெண்ணிற்காவது சாப்பாடு போட்டுத் துணிகள் வாங்கித் தரலாம்.  நமக்கு இஷ்டமில்லை எனில் அத்தைகளுக்குக் கொடுக்காமல் வேறே யாரானும் ஏழை அந்நியப் பெண்ணிற்குக் கொடுக்கலாம்.  துணி கொடுத்தால் பிணி தீரும் என்பார்கள்.

18 comments:

  1. //இவ்வளவு விமரிசையாகப் பெரிதாகப் பண்ண முடியாவிட்டாலும் அவர்களை நினைத்துக் குறைந்த பக்ஷம் ஒரே ஒரு பெண்ணிற்காவது சாப்பாடு போட்டுத் துணிகள் வாங்கித் தரலாம். நமக்கு இஷ்டமில்லை எனில் அத்தைகளுக்குக் கொடுக்காமல் வேறே யாரானும் ஏழை அந்நியப் பெண்ணிற்குக் கொடுக்கலாம். துணி கொடுத்தால் பிணி தீரும் என்பார்கள்.//

    பதிவுக்கு நன்றி.

    ”நம் ஆத்துக்கு ஒரு பெண் பிறந்தால் அத்தை அசலார்” என்று ஒரு பழமொழியே உள்ளது.

    சொந்த அத்தை, வயதில் பெரியவர்களாகவும், அனுசரணையாகவும் இருந்தால் அத்தைக்குக் கொடுப்பதே நல்லது.

    இதைப்பற்றி நான் இரு கதைகள் எழுதியுள்ளேன். முடிந்தால் வாசித்துக் கருத்துச் சோல்லுங்கோ.

    1]மடிசார் புடவை

    http://gopu1949.blogspot.in/2011/06/1-of-2.html

    http://gopu1949.blogspot.in/2011/06/2-of-2.html

    2] மாமியார்
    http://gopu1949.blogspot.in/2011/10/blog-post_18.html

    அன்புடன் கோபு

    ReplyDelete
  2. அத்தை அந்நியம்னு சொன்னாலும், அத்தைக்குத் தான் புடைவை வைத்துக் கொடுப்பார்கள். என் கல்யாணத்திலேயும் என் மாமியார் பண்ணிய சுமங்கலிப் பிரார்த்தனையில் அவங்க நாத்தனாருக்குத் தான் புடைவை கொடுத்திருக்கிறார்கள். எங்க வீட்டிலே அத்தை இல்லாததால் என் பெரியப்பா பெண்ணிற்குக் கொடுத்தார்கள். அத்தை இருந்தால் அத்தைக்குத் தான் முதல் மரியாதை. :)))))

    ReplyDelete
  3. அத்தை உறவைப் பற்றி அருமையான ஒரு பின்னூட்டம் போட்டேன். நெட்டுக்கே பொறுக்கவில்லை போலிருக்கு. பணால். மீட்டெடுக்கும் முயற்சியில் 'wait'.. 'wait' .. எவ்வளவு காலம் காத்திருப்பது. ஹூம்.. போனது தான். மறுபடியும் எழுதலாம்ன்னா, நிச்சயம் அந்த நேர்த்தி வராது.

    ReplyDelete
  4. பொதுவாகவே புகுந்த வீட்டு வழக்கம் தான் எல்லாவற்றிற்கும்.....

    அது ஏனோ பெண் கல்யாணம் ஆன பின் அவர்கள் வீட்டு வழக்கம் எல்லாவற்றையும் விட்டுவிட வேண்டியிருக்கிறது!

    ReplyDelete
  5. சில வழக்கங்களை விடாமல் செய்வதுதான் நல்லது. வீட்டு வழக்கங்கள் இளைய தலைமுறைக்கு தெரியவாவது தெரிந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். பழக்கத்தில்தான் அது வரும்.

    ReplyDelete
  6. நல்ல கேள்வி. நயமான பதில். (கிர்ர்ர்ரா சும்மாவா?)

    என்னைக் கேட்டிருக்கக் கூடாதோ? சட்னு ஒரே வார்த்தையில் பதில் சொல்லியிருப்பேனே?

    நீங்க கல்யாணம் செஞ்சுட்டு வந்தப்ப கூட அங்கே கரன்ட் கிடையாதா? 'கத்திக்கிறேன்' என்பது பிராமண வழக்கு என்று நினைக்கிறேன்.

    இறந்தவர்களை நினைப்பதால் இருப்பவர்களுக்கு ஒரு பயனும் இல்லை - there!

    ReplyDelete
  7. தினசரி சமையலில் வேண்டுமானால் பிறந்த வீட்டுப் பழக்கப்படி ஒரு நாள், புகுந்த வீட்டுப் பழக்கப்படி இன்னொரு நாள்னு சமைச்சுக்கலாம். தப்பில்லை. ஆனால் முக்கியமான சிராத்தம், சமாராதனை, சுமங்கலிப் பிரார்த்தனை, ஶ்ரீமந்தம் போன்றவற்றில் புகுந்த வீட்டு நடைமுறைகளையே கடைப்பிடிக்க வேண்டும்.//

    அப்படித்தான் காலம் காலமாய் கடைபிடித்து வருகிறோம்.
    பதிவு நன்றாக இருக்கிறது.

    ReplyDelete
  8. ஜீவி சார், திரும்பப் போடுங்க, அந்தப் பின்னூட்டத்தை. நான் எப்போவுமே பின்னூட்டம் போடறச்சே காப்பி, பேஸ்ட் பண்ணி வைச்சுடுவேன். :)) ஏன்னா எனக்கும் ப்ளாகருக்கும் ஏழாம் பொருத்தம். காலை வாரிடும். திரும்பப் போட்டால் முன்னை விட நேர்த்தியாகவும் அமையலாம் இல்லையா? ஆவலைத் தூண்டி விட்டீர்கள். :)))

    ReplyDelete
  9. வெங்கட், இதிலே வருத்தப்பட ஏதுமில்லை. ஆண் மூலம் தான் வம்சம் விருத்தியடைகிறது. குலம் தழைக்கிறது. இதைக் குறித்து ஏற்கெனவே ஒரு பதிவு போட்டிருக்கேன். லிங்க் தேடித் தரேன். :)))) இதனால் நான் பெண்ணுரிமைக்கு எதிர்னு சொன்னாலும் விஞ்ஞான ரீதியாகவே இது தான் நிரூபிக்கப்பட்ட உண்மை. அதோடு பெண் வீட்டு வழக்கங்களை ஏன் மறக்கணும்?

    என் அம்மா சமையல் செய்த முறைகள் எல்லாமும் எனக்கு இன்னமும் நினைவில் இருக்கு. மாத்தி, மாத்தியே இங்கே செய்யற வழக்கம். ஒரு நாள் தஞ்சாவூர்ப் பழக்கத்து ரசவாங்கி எனில் வேறொரு நாள் எங்க வீட்டு வழக்கப்படி பண்ணுவேன். ஆனால் பண்டிகை மற்றக் குலதெய்வ ஆராதனை, சிராத்தம், கல்யாணம் போன்றவற்றில் புகுந்த வீட்டு வழக்கம் தான்.

    என்னோட நண்பர் பிள்ளையாருக்குத் (இஷ்ட தெய்வ ஆராதனை) தனி. அதுக்குக் கணக்கே இல்லை. இதை எல்லாம் கெளரவப் பிரச்னையாக எடுத்துக்காமல் இருந்தாலே போதும். இல்லையா! :))))))))

    ReplyDelete
  10. அதே போல குழந்தைகளுக்கு மொட்டை போடுவது கூட முதலில் புகுந்த வீட்டுக் குலதெய்வத்துக்குச் செய்த பின்னர் பிறந்த வீட்டுக் குலதெய்வத்துக்கும் செய்யலாம். அதில் தப்பே இல்லை. எங்க அப்பா குலதெய்வ ஆராதனை செய்யாமல் பின்னர் யாரோ சொல்லிச் செய்ய ஆரம்பித்ததும், எங்களையும் செய்யச் சொல்லி நாங்களும் சில வருடங்கள் முன்னர் போய்ச் செய்துவிட்டு வந்தோம். எல்லாக் கடவுளும் ஒண்ணுதான். பெயர் தான் வெவ்வேறு என்றாலும் வழக்கங்கள் மாறுபடும் இல்லையா!

    ReplyDelete
  11. //நல்ல கேள்வி. நயமான பதில். (கிர்ர்ர்ரா சும்மாவா?)//

    ஹிஹிஹி, தாங்கீஸ்ஸ் அப்பாதுரை!

    //என்னைக் கேட்டிருக்கக் கூடாதோ? சட்னு ஒரே வார்த்தையில் பதில் சொல்லியிருப்பேனே?//

    இப்போக் கேட்கறேன் சொல்லுங்க, ஒரே வார்த்தையிலே! :)))))

    //நீங்க கல்யாணம் செஞ்சுட்டு வந்தப்ப கூட அங்கே கரன்ட் கிடையாதா? //

    இல்லை, எழுபதுகளின் கடைசியில் தான் வந்தது. :))))


    //'கத்திக்கிறேன்' என்பது பிராமண வழக்கு என்று நினைக்கிறேன்.//

    தஞ்சை ஜில்லாவில் மட்டுமே பார்த்திருக்கேன். :))))


    //இறந்தவர்களை நினைப்பதால் இருப்பவர்களுக்கு ஒரு பயனும் இல்லை - there!//

    ஹாஹாஹா, பல தலைவர்களின் நினைவு நாளன்று சொல்லிப் பாருங்க! அதுவும் இந்தியாவில்! ஹிஹிஹி! சும்மா விட மாட்டாங்க. இதுக்காக அடிதடியெல்லாம் நடக்குது இங்கே! நீங்க வேறே!:))))

    ReplyDelete
  12. வாங்க கோமதி அரசு,

    நன்றி. பலரும் அப்படித் தான் செய்யறாங்க. :))))

    ReplyDelete

  13. புகுந்த வீட்டு பழக்க வழக்கங்களை பெண்கள் கட்டாயத்தின் பேரில்தான் கடைப் பிடிக்கிறார்கள். எப்பவுமே பெண்களுக்கு பிறந்த வீடுதான் பிரியம் பிறந்த வீட்டு உறவுகள்தான் முக்கியம். அதுவும் அத்தை என்றால் ( நாத்தனார்) எட்டிக்காய்தான். தாலாட்டுப் பாடலிலும் ” அத்தை வீட்டு வாசலிலே நித்தம் நித்தம் போகாதே: படுபாவி அத்தையவள் பாம்பெடுத்து மேலிடுவள்......” என் உறவுகள் எனும் பதிவில் பெண்களின் குணாதிசயங்கள் குறித்து எழுதி இருக்கிறேன். பார்க்க
    gmbat1649.blogspot.in/2011/06/blog-post_22.html

    ReplyDelete
  14. //புகுந்த வீட்டு பழக்க வழக்கங்களை பெண்கள் கட்டாயத்தின் பேரில்தான் கடைப் பிடிக்கிறார்கள். எப்பவுமே பெண்களுக்கு பிறந்த வீடுதான் பிரியம் பிறந்த வீட்டு உறவுகள்தான் முக்கியம். அதுவும் அத்தை என்றால் ( நாத்தனார்) எட்டிக்காய்தான். //

    பொதுவாக ஸ்வாமிக்குச் செய்யும் பிரார்த்தனைகளிலும், சிராத்தம் போன்றவற்றிலும் புகுந்த வீட்டு நடைமுறைகளையே கடைப்பிடிப்பார்கள் அவர்கள் என்னதான் பிறந்த வீட்டுப் பாசம் மிகுந்திருந்தாலும். ஏனெனில் தவறு நேரக் கூடாது என்று உள்ளூர பலருக்கும் பயம் இருக்கும்; இருக்கிறது. கல்யாணம் ஆகி வந்துவிட்டால் பிறந்த வீட்டின் மேல் பெண்கள் பாசம் வைக்கக் கூடாதா என்ன? அது அளவுக்கு அதிகமாய்ப் போனால் தான் பிரச்னையே! பிறந்த வீட்டை ஏற்றுக்கொண்டு, புகுந்த வீட்டை ஒதுக்கினால் தான் பிரச்னையே தோன்றும். இருவரையும் சமமாகப் பார்க்கும் திறமை வேண்டும்.

    ReplyDelete
  15. எங்க சொந்தங்களிலே அத்தைக்குத் தனி மரியாதை உண்டு. மேலும் மாமியார் இல்லாத வீட்டு மருமகள்கள் அந்த வீட்டில் பிறந்து வளர்ந்து கல்யாணம் ஆகிப் போன அத்தையைத் தான் தங்கள் புகுந்த வீட்டுப் பழக்கங்களில் வரும் சந்தேகங்களுக்குக் கேட்டுக் கொள்வார்கள். இது எங்க வீடுகளில் இன்றும் பார்க்கலாம்.எல்லாமே மனசைப் பொறுத்தது.

    பொதுவாக அநாவசியமான விஷயங்களில் மூக்கை நுழைக்காமல் இருந்தாலே தேவையான மரியாதை கிடைக்கும். எனக்குத் தெரிந்த ஒரு பெண் தன் அண்ணாவிற்குக் கல்யாணம் ஆகி 40 வருடங்களுக்கு மேல் ஆன பிறகும் கூட என் அண்ணாவுக்கு இப்படித் தான் சமைக்க வேண்டும் என்று அந்த அண்ணன் மனைவியிடம் வற்புறுத்துவார். அதோடு அவர் அண்ணன் வீட்டுக்கு வரும்போது எல்லாம் அண்ணனுக்குச் சாப்பாடு போடுவது தான் தான் போட வேண்டும் என்றும் சொல்லுவார். இப்படிக் கணவன், மனைவிக்கு இடையே புகுந்தால் பிடிக்காமல் தான் போகும். இது இப்போதும் நடக்கிறது. அந்த அண்ணன் மனைவி மறுத்து ஏதேனும் சொன்னால், "எங்க அண்ணா, எனக்குத் தெரியுமா, உனக்குத் தெரியுமா?" என்று பதில் வரும். :(

    நாற்பது வருடங்களுக்கு மேல் குடித்தனம் பண்ணிய பெண்ணுக்குத் தன் கணவனின் விருப்பு, வெறுப்பு தெரியாதா? ஆகையால் அவர்களுக்கிடையே இடைஞ்சலாக இல்லாமல் இருந்தாலே போதும்.

    ReplyDelete
  16. தாலாட்டுப் பாடலில் நீங்க சொன்னாப்போல் கேட்டதில்லை ஜிஎம்பி சார்,

    அத்தை அடிச்சாளோ அல்லிப் பூச் செண்டாலே என்றும்

    அத்தை மடி மெத்தையடி என்று ஒரு சினிமாப் பாடலும் தான் கேட்டிருக்கேன். அதோடு அண்ணன், தங்கைகள் பாசமலராக இருக்கையிலே இப்படி ஒரு பாட்டு தன் சகோதரியைக் குறித்து இருந்தால் யாருக்கும் பிடிக்காது. அந்த அண்ணன் மனைவியும் அவள் பிறந்த வீட்டில் ஒரு அத்தை தானே. அவளுக்கும் இந்தப் பாடல் பொருந்துமல்லவா? :))))))

    ReplyDelete
  17. /// நம் குடும்பத்தில் வாழ்க்கைப்பட்டு வாழ்ந்து மறைந்த சுமங்கலிப் பெண்களை நினைவு கூர்தல் ///

    பல நல்ல பழக்க வழக்கங்கள் காணாமல் போய் விட்டன...

    ReplyDelete
  18. வாங்க டிடி, சில வீடுகளில் இன்னமும் கடைப்பிடிப்பதை நினைத்து சந்தோஷப் படணும். :)))

    ReplyDelete