எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, July 03, 2013

தாரி தேவிக்கு வந்த கோபம்! :(



எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும்.  இது இணையத்தில் சில நாட்களாக அனைவருக்கும் ஃபார்வர்ட் செய்யப்பட்டு வருகிறது. பத்ரி-கேதார்நாத் வழிப்பாதையில் உள்ள தாரி தேவி கோயிலை அவசரம் அவசரமாக, மின் திட்டத்திற்காக வேண்டி ஜூன் 16-ஆம் தேதியன்று கோயில் பூசாரிகளிடம் வெள்ள அபாயம் இருப்பதாகப் பொய் கூறி அகற்றிய பின்னரே உத்தராகண்டில் பனிச்சிகரம் உடைந்து , மேகம் உடைந்து வெள்ளப் பெருக்கு எடுத்ததாகக் கூறுகின்றனர்.  ஏற்கெனவே ஆங்கில அரசின் ஆட்சியின் போது 1882-83 ஆம் ஆண்டுகளில் இதே முயற்சி மேற்கொள்ளப்பட்டுத் தோல்வியில் முடிந்ததோடு அல்லாமல் இதே போன்றதொரு பேரழிவு ஏற்பட்டிருக்கிறது என்கின்றனர்.  ஆகவே இப்போதும் தாரி தேவி கோயிலில் இருந்து அம்மன் சிலையை எடுத்ததே முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.

இந்த தாரி தேவி காலை வேளையில் சிறு பெண்ணாகவும், மதிய நேரத்தில் நடுவயதுப் பெண்மணியாகவும், மாலை ஆனதும் வயது முதிர்ந்த பெண்ணாகவும் தோற்றம் கொடுப்பாளாம்.  ஒரே சிலையாக இருந்த இது ஒரு சமயம் வெள்ளப் பெருக்கில் அடித்துச் செல்லப்பட்டுச் சிலை அழ ஆரம்பித்துத் திகைத்த மக்கள் என்ன செய்வதெனத் தெரியாமல் திகைக்க, தன்னை முன்பிருந்த இடத்திலேயே பிரதிஷ்டை செய்யும்படி கூறினாளாம்.  ஆனாலும் இவளின் மேல் பாதி ஶ்ரீநகர்(காஷ்மீர் ஶ்ரீநகர் இல்லை) பத்ரி பாதையிலும் கீழ்ப்பாதி காளி மடம்(ஆதிசங்கரர் ஸ்தாபித்த மடம் எனப்படுகிறது) என்னும் இடத்திலும் உள்ளதாம்.  இதன் நேர் எதிரே தான் கேதார்நாதர் கோயில் அமைந்திருப்பதாகவும், இங்கிருந்து தாரி தேவியை அப்புறப்படுத்தியது தான் ஈசனின் ருத்ரதாண்டவத்துக்குக் காரணம் என்றும் கூறுகின்றனர்.



ஏற்கெனவே பலரும் இந்தக் கோயிலை அப்புறப்படுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொண்ட பின்னரும் மாநிலத்தின் மின் தேவையைப் பூர்த்தி செய்ய வேண்டிப் பல இடங்களிலும் ஆறுகள் திசை மாற்றப்பட்டிருக்கின்றன.  எல்லாம் சேர்ந்து கொண்டது.  என்னதான் மனிதன் ஆற்றை அணை போட்டுத் தடுத்தாலும் ஆறு பெருகி வந்தால் மனிதன் அவற்றிற்கு முன் துரும்பு மாத்திரம் என்பது தெள்ளத் தெளிவாகி விட்டது.  இயற்கைக்கு மாறாக ஏதேனும் செய்தால் இயற்கை அதைப் பொறுக்காது என்பதும் புரிந்து விட்டது.  இனியானும் நாம் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும்.  அதிலும் தாரி தேவி கோயில், காளி மடம், கேதார்நாத் கோயில் மூன்றும் ஒன்றுக்கு ஒன்று நெருங்கிய சம்பந்தம் கொண்டவை.   பாகவதத்தில் சொல்லப்பட்ட 108 சக்தி பீடத்தில் இதுவும் ஒன்று எனப்படுகிறது.

எப்போது கட்டப்பட்டது என்பதே தெரியாமல் மிகப் பழமையான இந்தக் கோயிலுக்கு தாரி கிராமத்திலிருந்து தொங்கு பாலத்தின் மூலவே வரவேண்டும்.  காளியானவள் படுத்திருக்கையில் அவள் தலைப்பாகம் உள்ள இடத்தை மாற்றியதே இந்தப் பேரழிவுக்கும், காளியின் சீற்றத்துக்கும் காரணம் என்கின்றனர். ஏனெனில் உடலில் இடுப்புக்கு மேலான பாகமே தாரி தேவி கோயில். அவள் படுத்திருக்கும் விதத்திலான நேர் கோணத்திலே காளி மடம் இருக்கிறது.  அங்கே சங்கரர் பிரதிஷ்டை செய்த ஶ்ரீயந்திரம் இருப்பதாகவும், அம்மனின் யோனி பீடம் இது எனவும் சொல்லப்படுகிறது.  காளிமடம் கவி காளிதாஸன் பிறந்த ஊர் என விக்கி சொல்கிறது.  ஆசுவாசமாகப் படுத்திருந்த அன்னையை எழுப்பிவிட்டதே கோபத்துக்குக் காரணம் எனச் சொல்லப் படுகிறது.  தற்போதைய அரசு இம்முயற்சியை எடுக்கும்போது உள்ளூர்வாசிகளில் இருந்து அரசியல்வாதிகள் வரை தடுத்திருக்கின்றனர்.  இப்போது உத்தராகண்ட் மக்களின் வேண்டுகோள் எல்லாம் மீண்டும் தாரிதேவியைப் பழைய இடத்திலேயே நிறுவ வேண்டும் என்பதுவே.  இல்லை எனில் இந்திய வரலாற்றில் இந்த ஆண்டு மிக மோசமான ஆண்டாக இருக்கும் என்று அவர்களுக்கு அச்சம்.

இந்தச் செய்தி கிட்டாதவர்களே இருக்க மாட்டார்கள் என எண்ணுகிறேன்.  இன்றைய துக்ளக்கிலும் வந்திருக்கிறது.  இதை நம்பாவிட்டாலும் ஆற்றின் போக்கை மாற்றியது சரியல்ல எனப் பலரும் கூறுவதை ஒத்துக்கொள்ளலாம்.

26 comments:

  1. மின் தேவைகளுக்காக ஆற்றின் போக்கை ஆங்காங்கே மாற்றியதே முக்கிய காரணம் என்று தெரிகிறது! எங்களுக்கு துக்ளக் நாளைதான் கைக்குக் கிடைக்கும்! காளி மட்டும் கோபமாகவே இருப்பது ஏன்?

    ReplyDelete
  2. வாங்க ஶ்ரீராம், இது wrath of dhari devi என்ற பெயரில் இந்தியா டிவைன்.ஆர்க் தளத்தில் வந்துள்ளது. எனக்கு அவங்க அனுப்பிய சுட்டி டெலீட் பண்ணாமல் இருந்தால் தரேன். :)))) அது தவிர நண்பர்கள் சிலரும் அனுப்பி இருந்தனர்.

    ReplyDelete
  3. http://www.indiadivine.org/content.php/1090-Dhari-Devi-s-Wrath-The-Cause-of-Kedarnath-Destruction

    லிங்க் சரியாப் போகலை, அதனால் அப்படியே கொடுத்திருக்கேன். :(

    ReplyDelete
  4. ஏற்கெனவே பலரும் இந்தக் கோயிலை அப்புறப்படுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொண்ட பின்னரும் மாநிலத்தின் மின் தேவையைப் பூர்த்தி செய்ய வேண்டிப் பல இடங்களிலும் ஆறுகள் திசை மாற்றப்பட்டிருக்கின்றன. எல்லாம் சேர்ந்து கொண்டது.

    நல்லது செய்தல் ஆற்றாவிட்டாலும் அல்லது செய்யாதிருந்தாலே போதும் இயற்கை காப்பாற்றப்படும்..!

    ReplyDelete
  5. இணைப்பில் பார்க்கிறேன்... நன்றி...

    ReplyDelete
  6. தாரி தேவி கருணையற்றவர் என்பது இப்போதாவது புரிந்தால் சரிதான்.

    ReplyDelete
  7. வாங்க வா.தி. படிச்சிருப்பீங்க ஏற்கெனவே!:(

    ReplyDelete
  8. வாங்க ராஜராஜேஸ்வரி,கோயிலை அப்புறப்படுத்தியது மட்டுமே காரணமாய்ச் சொல்ல முடியாட்டாலும் நதிகளின் போக்கைச் செயற்கை முறையில் திசை திருப்பியது முக்கியக் காரணம் என புவி இயலாளர்கள் கூறுகின்றனர். :(

    ReplyDelete
  9. வாங்க டிடி, நன்றிப்பா.

    ReplyDelete
  10. ஹாஹா அப்பாதுரை, உங்களுக்கு சான்ஸ் கிடைச்சதுனு நான் எழுதும்போதே நினைச்சுட்டேனே! :))))

    ReplyDelete
  11. மேல்நாடுகளில் பழமையைப் போற்றுவது உங்களுக்குத் தெரியும் தானே! அப்படிப் பார்த்தாலும் இந்தக் கோயில் மிகப் பழமையானது. ஒரு குறிப்பிட்ட கோணத்தில் அமைந்தது. அதோடு ஊர் மக்களின் நம்பிக்கையும் இருக்கிறது. பழமையான நினைவிடங்களைத் தகர்ப்பதிலும், கல்வெட்டுக்களை அழிப்பதிலும், இயற்கையை ஒட்டுமொத்தமாகச் சீரழிப்பதிலும் இந்தியர்களை மிஞ்சியவர்கள் யாரும் இல்லை என்றே நினைக்கிறேன். இதே பகுதிக்கு நாங்கள் பத்துப் பனிரண்டு வருடங்கள் முன் சென்றபோது இருந்த இயற்கையான சூழ்நிலை இப்போது இல்லை என்றே படங்களைப் பார்க்கையில் தெரிகிறது. அதோடு ப்ளாஸ்டிக் குப்பைகள் வேறே. பாட்டில்கள், மலையின் இயற்கையான மணம் மறைந்து ப்ளாஸ்டிக்கின் துர்நாற்றம் தான் அங்கே மிஞ்சும் போலிருக்கு! :((((((

    ReplyDelete
  12. தெய்வ கோபமோ மனித தவறோ, கடைசியில் துயரத்தில் ஆழ்ந்தது மக்களே.
    நானும் இதைப் பற்றிப் படித்தேன்.

    ReplyDelete
  13. தவறு செய்வதும் மக்கள் தானே வல்லி. இயற்கைக்கு விரோதமாகக் கட்டக்கூடாது என்று சொன்ன இடத்தில் எல்லாம் வீடுகள் கட்டி மலைப்பாறைகளை வெடி வைத்துத் தகர்த்து........இனியானும் திருந்துவாங்களா? சந்தேகமே!

    ReplyDelete
  14. இதே இடத்தில் கோவிலுக்குப் பதில் ஒரு பள்ளிக்கூடம் இருந்திருந்தால் தொன்மையென்று கொடி பிடிப்போமா? காளி தாரி என்று புருடா கிளப்பி விட்டால் ஜனங்கள் நம்பும் வரை செப்படிக்காரர்களுக்குக் கொண்டாட்டம் தான்.

    ReplyDelete
  15. உடனே அம்மன் உக்கிரத்தைத் தணிக்க ஒரு பரிகாரம் ஏற்பாடு செய்திருப்பார்களே?

    ReplyDelete
  16. அப்பாதுரை, முதலில் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் ஆழ்மனதில் இருக்கும் நம்பிக்கையினால் தானே தாரி தேவி கருணையற்றவர் என்பதையும் ஒப்புக் கொண்டிருக்கிறீர்கள்! இல்லாத ஒன்றுக்குக் கருணை இருந்தால் என்ன, இல்லாவிட்டால் என்ன என்று ஒதுக்க முடியலை அல்லவா? உங்களையும் அறியாமல் கடவுளின் மேல் உங்களுக்கிருக்கும் கோபத்தை வெளிக்காட்டுகிறீர்கள். நாம் செய்யும் தவறுக்குக் கடவுள் எப்படிப் பொறுப்பு என யோசிக்க வேண்டாமா?

    ReplyDelete
  17. எல்லாரிடமும் நல்லதும், கெட்டதும் கலந்து தானே இருக்கு! கெட்டது அதிகமானால் தான் அசுரத்தனம் அதிகம் என அர்த்தம். அதைத் தான் காளி அழிக்கிறாள். நிஜமான அசுரனை கோரைப்பற்களோடும்,நீண்ட நகங்களோடும், தொங்கும் நாக்குகளோடும் கற்பனை பண்ணினால் எப்படி? அசுரனோ, தேவனோ, மனிதனோ நம்முள்ளே தான் இருக்கிறான். சந்தர்ப்பங்களுக்கு ஏற்ப அவன் வெளிப்படுகிறான்.

    ReplyDelete
  18. இப்போ உங்க கேள்விக்கு பதில்: அந்த இடத்தில் பள்ளிக்கூடம் இருக்க முடியாது. அப்படிப்பட்ட ஒதுக்குப்புறமான ஆபத்தான இடம். அந்தக் கோயிலுக்குச் செல்வதற்கே தாரி கிராமத்திலிருந்து தொங்கு பாலத்தில் தான் செல்ல வேண்டும். நதியின் போக்கை இந்தப் பக்கம் திருப்புவதற்காக ஆட்கள் அதுவும் அந்த மின் திட்டத்துக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த தனியார் கம்பெனி ஆட்கள் சென்று கோயிலில் பூஜை செய்து கொண்டிருந்த பூசாரிகளிடம் வெள்ளம் வரப் போகிறது எனப் பயமுறுத்தி, பாதி வழிபாட்டில் பலத்த எதிர்ப்புக்கு இடையே அங்கிருந்து அம்மன் சிலையை அப்புறப்படுத்தி இருக்கிறார்கள். இது தப்பாய்த் தெரியவில்லையா உங்களுக்கு? நம்புகிறவர்களின் நம்பிக்கையைக் குலைக்கும் விதம் செயல்படலாமா?

    ReplyDelete
  19. ஒரு காலத்தில் பசு வதையைப் பாவமாக நினைத்த இந்தியா இன்று உலகிலேயே மாட்டு மாமிசம் ஏற்றுமதியில் இரண்டாவது இடத்தைப் பிடித்திருக்கிறது. இது எப்போது ஆரம்பித்தது எனச் சொல்ல வேண்டாம். கர்நாடகாவில் இப்போதைய அரசு பதவிக்கு வந்ததும் போட்ட முதல் கையெழுத்தே பசுவதைத் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்து தான். :(((( இவர்களிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்????????

    ReplyDelete
  20. இயற்கைக்கு எதிராக எது செய்தாலும் நாம் தான் பாதிக்கப்படுவோம் என்று என்று தெரிந்து கொள்ளப் போகிறோமோ தெரியவில்லை....:((


    மாமி இன்று என் பதிவில் உங்களை வம்புக்கு இழுத்திருக்கிறேன். பார்த்து சரியா இருக்கா சொல்லுங்கோ...:)

    ReplyDelete
  21. இயற்கைக்கு முன் மனிதர்கள் எல்லாம் சிறு துரும்பு... புரிந்து கொள்ளத்தான் நம்மால் முடியவில்லை. தொடர்ந்து எதிர்த்துக் கொண்டிருக்கிறோம்....

    ReplyDelete
  22. வாங்க கோவை2தில்லி,அது என்ன இரண்டு பேரும் சேர்ந்து பேசி வைச்சுக்கொண்டு வரீங்க போல! :)))))))உங்கள் பதிவைப் படிச்சுப் பின்னூட்டமும் போட்டுட்டேன். :)))) விளம்பரம் கொடுத்ததுக்கு நன்றி.

    ReplyDelete
  23. வாங்க வெங்கட், இயற்கை நமக்கு அளித்திருக்கும் செல்வங்களை இயன்றவரை அழிக்கிறோம். அதான் நம்மால் முடிந்தது. :(((

    ReplyDelete
  24. தாரி கோயில் சம்பவம் இப்போதுதான் அறிகின்றேன்.

    இயற்கையை அதன் போக்கில் விடாது எங்கள் வசதிக்காக பலவழிகளில் தடுத்து அழித்து வருகின்றோம்.

    ஆறுகளின் போக்கை மாற்றியது அழிவுக்கு வழிவகுத்தது.

    ReplyDelete
  25. வாங்க மாதேவி, உண்மைதான், ஆறுகளின் போக்கை மாற்றியதே அழிவுக்குக் காரணம். அது எப்போதும் நினைவில் இருக்கணும்.

    ReplyDelete