எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, August 13, 2013

என் கேள்விக்கு என்ன பதில்???

ஹிஹிஹி, ஒண்ணுமில்லை.  முந்தாநாள் காரைக்குடிக்கு இன்னம்பூராரைப் பார்க்கப் போனோம்.  போறது தான் போறோமே, சுற்றுவட்டாரக் கோயில்களையும் பார்த்துடலாம்னு முடிவு பண்ணிட்டுப் போனோம்.  திருமயம், திருப்பத்தூர், திருக்கோஷ்டியூர், வைரவன் பட்டி, பிள்ளையார் பட்டி பார்த்துட்டுக் காரைக்குடி போய் இன்னம்புராரைப் பார்த்துப் பேசிட்டுத் திரும்பி வரும் வழியில் புதுகையில் திருக்கோகர்ணம் பார்த்துட்டு வீட்டுக்கு வந்தோம்.  நேற்றுக் கொஞ்சம் வேலை இருந்தது.  ஆகவே மடல்கள் பார்த்ததோடு சரி. படங்கள் எல்லாம் இனிமேல் தான் ஏற்றணும்.  அதுவேறே எப்படி வந்திருக்கோ தெரியலை! :))))

இப்போ என்னோட தலையாய பிரச்னை என்னன்னா, போயிட்டு வந்த ஊர்களைப் பத்தி எழுதி வைச்சுட்டு,  கல்யாணப் பதிவுகள் முடிஞ்சப்புறமா இங்கேயே போடலாமா, இல்லை ஆன்மிகப் பயணங்கள் பக்கத்திலே போடலாமா இல்லை என் பயணங்களில் பக்கத்திலே போடலாமாங்கறது தான்.  எங்கே போட்டாலும் போணியாகணுமே!  எண்ணங்களில் போட்டால் கொஞ்சமாவது போணி ஆகும்.  அதான் யோசிக்கிறேன்.  ஆனால் இப்போப் போட்டால் கல்யாணப் பதிவுகள் தாமதம் ஆகும்.  தொடர்பு விட்டுப் போகும்.  ஹிஹிஹி, நம்ம வழக்கப்படிப் பார்த்தா ஒரு கோயிலுக்கு இரண்டு பதிவுனு வைச்சுண்டாக் கூட பத்துப் பனிரண்டு தேத்திடுவோமே!  :))))) அதனால் யோசனை. எங்கே கொடுத்தால் வரவேற்பு இருக்கும்னு ஒரு சின்ன வாக்குப் பதிவு!  கருத்துகள் பின்னூட்டங்களாகவே கொடுக்கலாம்.  வாக்குப் பெட்டியெல்லாம் வைக்கலை! :)))))))


ஜனநாயக முறைப்படியான நம் ஆட்சியில் வாசகர்களாகிய உங்கள் கருத்துகளும் வரவேற்கப் படுகின்றன.  நாம யாரு? ஒன் அன்ட் ஒன்லி வலை உலகத் தலைவியாச்சே!  நம்ம தொண்டர்களை அடக்கி ஆளப் பார்க்கிறோம்னு நாளைக்கு யாரானும் நம்மைப் பார்த்துச் சொல்லிடக் கூடாதில்லை! உலகெங்கும் இருக்கும் தொண்டர்கள் அனைவரும்  பெருந்திரளாக வந்து கலந்து கொண்டு சிறப்பிக்கும்படிக் கேட்டுக் கொள்கிறேன்.  நன்றி.


வணக்கம். 

31 comments:

 1. எங்கே வேண்டுமானாலும் போட்டு அசத்துங்கோ.

  எப்போ வேண்டுமானாலும் போட்டுக்கோங்கோ.

  எப்படியும் போணி ஆகாமல் போகாது.

  எங்களைப்போல நீங்க என்ன ஒரே ஒரு தளமா வெச்சுருக்கேள் ????? ;)))))

  ...... உள்ள சீமாட்டி ..... .......
  ன்னு ஏதோ பழமொழி சொல்லுவா.

  சரியாக ஞாபகம் வரவில்லை.

  ReplyDelete
 2. இந்த ஊர்களுக்கு
  போனியா(க)இல்லையா-?

  ReplyDelete
 3. //ஒன் அன்ட் ஒன்லி வலை உலகத் தலைவியாச்சே..

  adhaane?!
  ingeye ezhudhunga..

  ReplyDelete
 4. மாத்தி மாத்தி - கலந்து போடுங்க.

  ReplyDelete
 5. ஹை எங்க ஊருக்கு போயிட்டு வந்திருக்கீங்க. புவனேஸ்வரியை தரிசனம் செஞ்சீங்களா??

  ReplyDelete
 6. யாராவது ஏதாவது சொல்லியிருப்பாங்களே... என்ன சொல்லியிருக்காங்கன்னு பார்க்கலாம்னா ஒரு பின்னூட்டத்தையும் காணோம்!

  ReplyDelete


 7. என் வோட்டு, இங்கேயே அந்தப் பதிவையும் போடலாம். வெவ்வேறு தளங்கள் சென்று வெவ்வேறு பதிவுகள் படிப்பதை விட இங்கேயே படித்து விடலாம். ஒரே சப்ஜெக்டில் தொடர்ந்து படிப்பதை விட, மாற்றி மாற்றிப் படிக்கலாம் பாருங்கள்...!

  ReplyDelete

 8. / கோபாலகிருஷ்ணன்....”... உள்ள சீமாட்டி ..... .......
  ன்னு ஏதோ பழமொழி சொல்லுவா.சரியா ஞாபகம் வரலை/
  அது” கூந்தல் இருக்கும் மகராசி அள்ளிமுடிந்தால் என்ன , கொண்டை போட்டால் என்ன “என்பதுதானே சார். திருமணப் பதிவுகளுக்கு கோயில்கள் பற்றிய பதிவுகள் மேலாயிருக்கும் என்பது என் எண்ணம். ஏதோ ஜனநாயகப் படி என்றதால் என் வோட்டு இப்படி. !

  ReplyDelete
 9. இங்கயே எழுதுங்கோ கீதா. அலையாமப் படிக்கலாம். என் மாதிரி சோம்பேறிகளுக்குச் சௌகரியம்.:)

  ReplyDelete
 10. கல்யாணம் ஆவணியில் செய்யலாம், கோவில் பதிவை முடித்து விடுங்கள்.எண்ணங்கள் தான் நினைவுக்கு வருகிறது.
  அதனால் இத் தளத்தில் தொடருங்கள்.

  ReplyDelete
 11. எல்லோருக்கும் ஒரு க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் சொல்லிக்கறேன். அப்புறமா பதில் கொடுக்கிறேன்.

  ReplyDelete
 12. இங்கேயே எழுதுங்கம்மா...

  ReplyDelete
 13. அட! எங்கூர் பக்கம் போனீங்களா! கோவில் பதிவுகளை இங்கேயே பார்க்க ஆவல்.

  ReplyDelete
 14. ஒரு வாரத்துலயே ஒரு நாள் கல்யாணம், இன்னொரு நாள் கோயில்ன்னு குறிப்பிட்டு வெச்சுக்கிட்டு மாத்திமாத்திப்போடுங்க கீத்தாம்மா.

  ReplyDelete
 15. இங்கே பதியுங்கள். படிக்க வருகின்றோம்.

  ReplyDelete
 16. இந்த தளத்திலேயே எழுதுங்கோ. நானும் இதைத்தான் வரிசையாக படித்து வருகிறேன்.

  ReplyDelete
 17. வாங்க வைகோ சார், நீங்க ஒருத்தர் தான் போணி பண்ணறேன்னு சொல்லி இருக்கீங்க, எல்லாரும் பாருங்க, க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இங்கேயே போடச் சொல்றாங்க! :))))

  ReplyDelete
 18. விக்னேஷ் சார், போனேனே!:)))

  ReplyDelete
 19. அப்பாதுரை, நீங்களுமா?

  ReplyDelete
 20. கெளதமன் சார், காக்டெயில்???? :))))

  ReplyDelete
 21. புதுகை, புவனேஸ்வரியை இன்னொரு சமயம் தான் தரிசிக்கணும், உங்க ஊர் வழியா எத்தனையோ முறை போயாச்சு! :)))) கோகர்ணமே இன்னும் சரியாப் பார்க்கலை. ரொம்பவே களைச்சுப் போனதினாலே அவசரமா ஒரு பார்வை பார்த்துட்டு வந்துட்டோம். :)))

  ReplyDelete
 22. ஶ்ரீராம், நான் கமிட்டல்?? ஹிஹிஹிஹி!

  ReplyDelete
 23. ஶ்ரீராம், அடுத்துப் பார்த்தால் க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்இங்கேயே போடச் சொல்லி இருக்கீங்க! :)

  ReplyDelete
 24. வாங்க ஜிஎம்பி சார், மயிருள்ள சீமாட்டினு தாராளமாச் சொல்லலாம், ஆனானப்பட்ட திருஞானசம்பந்தரே தன்னோட பதிகத்திலே சொல்லி இருக்கார். பதிகம் நினைவில் வரலை. வந்ததும் எடுத்துப் போடறேன். :)))) காதல், நாற்றம் போன்றவற்றின் பொருள் இப்போ எப்படி மாறிச்சோ அது போல இதுவும் மாறி விட்டது. :))))

  ReplyDelete
 25. வாங்க வல்லி, நீங்களுமா?? ஹிஹிஹி!

  ReplyDelete
 26. கோமதி அரசு, ஆவணி பிறந்தாச்சே! :)))) இப்போ என்ன செய்வீங்க? இப்போ என்ன செய்வீங்க? இப்போ என்ன செய்வீங்க? :)))

  ReplyDelete
 27. வெங்கட், யூ டூ ப்ரூட்டஸ்??? ஹிஹிஹிஹி, No hard feelings, just for joke! :)))))

  ReplyDelete
 28. கவிநயா, உங்க ஊருக்குப் போனோம். ஆனால் கொப்புடைய நாயகியைப் பார்க்கலை. இன்னொரு முறை போகணும். :))))

  ReplyDelete
 29. அமைதி, எல்லாரும் அதான் சொல்லி இருக்காங்க. :)))

  ReplyDelete
 30. மாதேவி, நீங்களும்!!! :))))

  ReplyDelete
 31. ரஞ்சனி, சரியாப் போச்சு போங்க! :))))

  ReplyDelete