எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, August 03, 2013

தேரி மெஹர்பானியா, தேரி கஜர்தானியா!


பல வருடங்கள் கழிச்சு நேத்துத் தற்செயலாக தேரி மெஹர்பானியா படம் பார்த்தேன்.  ஹிஹிஹி, வழக்கம்போல் படம் ஆரம்பிச்சப்புறமாத் தான்.  பூனம் தில்லான் சாகிற காட்சிக்கு முன்னாலே இருந்து.  இந்தப் படத்தை முதல் முதலே நசிராபாதில் (ராஜஸ்தான்) தோப்சி தியேட்டரில் (திறந்தவெளி) பார்த்தோம். { டிக்கெட் எவ்வளவுனு தெரியுமா?  ஒண்ணரை ரூபாய்!  நகரத்துத் தியேட்டருக்குப் போனாலும் இதான்!  ராணுவ சேவையில் இருப்பவங்களுக்குக் கிடைக்கும் சலுகை இது! :))))))))}குடும்ப சகிதமாகத் தான் பார்த்தோம். அப்போவே மனதைக் கவர்ந்தது இந்த மோதி தான்.  நம்ம வீட்டுச் செல்லத்துக்கும் இந்தப் பெயர் தான் வைக்கணும்னு அப்போவே பேசிப்போம்.  எங்க செல்லம் அப்போ வரலைனாலும் வந்தால் இந்தப் பெயர்தான் என முடிவு செய்யப்பட்டது.  


நசிராபாதில் இருந்தவரைக்கும் அங்கே வசித்த முயல்களுக்கும் மயில்களுக்கும் சாப்பாடு போட வேண்டி இருந்தது.  அதுங்களைக் கவனிக்கவே தனியா ஆளைப் போடவேண்டி இருக்கும்.  போதாததுக்கு வீட்டின்

ஓட்டுக்கூரை முழுதும் வந்து குடியிருந்த கொத்துக் கொத்தான பச்சைக்கிளிகள்,  அதிலே ஒரு பச்சைக்கிளி, நாங்க முதல்முறை வந்தப்போவும் இருந்தது.  எட்டு வருடங்கள் கழிச்சுத் திரும்பி வந்தப்புறமும் இருந்தது, கொஞ்சம் வயசானது மட்டும் தெரிஞ்சது!  எப்படி அடையாளம் கண்டு கொண்டேன்னு யோசிக்கிறீங்களா! அதன் அலகிலே ஒரு தனி அடையாளம் இருக்கும்.  அதை வைச்சுக் கண்டு பிடிச்சேன். :))))) கிளிக்குஞ்சு வீட்டுக்குள்ளே தவறிப் போய் வந்து வளர்க்கக் கூடாதுனு பறக்க விட்டுட்டோம்.  சிட்டுக்குருவிங்களோட ஏற்பட்டவை எல்லாம் தனிக்கதை.  அந்தக் கூரையிலேயே குடியிருந்த மாடப்புறாக்கள், மணிப்புறாக்கள்னு எல்லாத்துக்கும் சாப்பாடு நம்ம வீட்டிலே தான்.   சரியா மத்தியானம் ஒரு மணியிலே இருந்து 2, 3 மணி வரை நம்ம மரங்கொத்தியார் மரத்தைத் துளைப்பார்.  அந்த சத்தம் இருக்கே, அதிலே தச்சு ஆசாரி கெட்டார் போங்க! இத்தனை பெரிய குடும்பஸ்தியா இருந்ததிலே  செல்லம் வைச்சுண்டால் கஷ்டம்னு வைச்சுக்கலை. :))))

அதுக்கப்புறமா குஜராத் போய் அங்கே வீதி உலா வந்து கொண்டிருந்த அனைத்து பைரவ இனத்தினருக்கும் உணவு கொடுத்துப் பிரசவம் பார்த்துத் திரும்பச் சென்னை வந்ததும் வந்தவன் தான் எங்கள் மோதி. :( இந்தத் தேரி மெஹர்பானியிலே காட்டறாப்போல அவனும் சின்னக் குட்டியாக் கண்ணே திறக்காமல் வந்தான். பஞ்சில் பாலை நனைச்சு வாயில் விடுவோம்.  இந்த சினிமா மோதிக்கு வந்த ஃப்ளாஷ் பாக்  மாதிரி அவனுக்கும் அதெல்லாம் ஃப்ளாஷ் பாக்கா வந்திருக்குமானு தோணிச்சு.  நேத்திப் பூரா மோதி நினைவு தான். நண்பர்கள் வாரம்னு சொல்றாங்களே. மனிதனின் சிறந்த நண்பன் பைரவர் தானே.  அதான் போல!  மோதியே நினைவா இருந்தது.  எங்க மோதியின் படம் கூட இருக்கு; பின்னால் ஒரு நாள் பகிர்ந்துக்கறேன். 

17 comments:

 1. நன்றிக்கு சிறந்த நண்பர் பைரவர் தான்...

  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 2. //அந்தக் கூரையிலேயே குடியிருந்த மாடப்புறாக்கள், மணிப்புறாக்கள்னு எல்லாத்துக்கும் சாப்பாடு நம்ம வீட்டிலே தான். சரியா மத்தியானம் ஒரு மணியிலே இருந்து 2, 3 மணி வரை நம்ம மரங்கொத்தியார் மரத்தைத் துளைப்பார். அந்த சத்தம் இருக்கே, அதிலே தச்சு ஆசாரி கெட்டார் போங்க! இத்தனை பெரிய குடும்பஸ்தியா இருந்ததிலே செல்லம் வைச்சுண்டால் கஷ்டம்னு வைச்சுக்கலை. :))))//

  நல்லதொரு அனுபவம். படிக்க மகிழ்ச்சியாக உள்ளது. பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
 3. நிஜமாவே உங்களுக்குப் பெரிய குடும்பம்தான்!

  அதென்னமோ இந்த pet என்றாலே வேண்டாம் என்று தோன்றிவிடுகிறது. ஒருவேளை நகரத்திலேயே வாழ்ந்துவிட்டதாலோ என்னவோ.

  இந்த மாதிரி யாராவது எழுதுவதைப் படித்தால் நிறைய மிஸ் பண்ணிட்டோமேன்னு தோணும். கொஞ்ச நேரத்துக்குத்தான்!

  இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 4. யாரது? குஜராத் சீஃப் மினிஸ்டர்தானே?

  ReplyDelete

 5. நாங்கள் நாய் வளர்த்த கதையை ‘செல்லி எங்கள் செல்லம்’ என்று பதிவு எழுதி இருக்கிறேன். செல்லி என்றால் தெலுங்கில் தங்கை என்று பொருள். எங்கள் வீட்டில் பெண் இல்லாத குறையை செல்லி பூர்த்தி செய்திருக்கிறாள்.

  ReplyDelete
 6. எங்கள் வீட்டிலும் பல செல்லங்கள் இருந்தன. மோதி உட்பட. என் அப்பா ஒரு கிளி வளர்த்தார். நாலுகால் செல்லம் வளர்க்கத் தொடங்கியது சிறுவயதிலேயே. கார்ப்பரேஷன் வண்டி வந்து பிடித்துப் போகும். ஸ்கூல் விட்டு வரும்போது வண்டி பார்த்ததுமே .பகீர் என்று இருக்கும். அவைகளும் என்னை அடையாளம் கண்டு காப்பாற்றச் சொல்லி அழுவது மனதைப் பிசையும்.

  ஒன்றிரண்டு சமயம் வீட்டில் அழுது புரண்டு இருபது ரூபாய், முப்பது ரூபாய் என்று வாங்கித் தந்து (வண்டிக்காரனுக்கு லஞ்சம்!) என் அப்போதைய செல்லங்களைக் காத்திருக்கிறேன்! என் அம்மாதான் எனக்கு இதுமாதிரி விஷயங்களில் சிபாரிசு. ஒருமுறை நான் வளர்த்த செல்லம் ஒன்று குரல் கொடுத்து குரல் கொடுத்து கூப்பிட்டதை நான் கவனிக்காமல் செல்ல, வண்டிக்காரன் கூப்பிட்டுக் காட்டி விட்டு, அப்புறம் எங்கள் அன்புப் பிணைப்பைக் கண்டு அதை மட்டும் லாவகமாக வெளியில் விட, என் தோழன் என்னிடம் கூடச் சொல்லாமல், எனக்காகக் காத்திராமல் எங்கோ மின்னலென ஓடி மறைந்தவன், இரண்டு நாள் கழித்துதான் என் கண்ணில் பட்டான்! இதெல்லாம் பெரிய கதைகள்!

  பூனை நான் வளர்த்ததில்லை. ஆனால் என் அக்கா வளர்த்திருக்கிறாள்.

  ReplyDelete
 7. வாங்க டிடி, இப்போ இங்கே வைச்சுக்க முடியாது. அடுக்குமாடிக் குடியிருப்பு! :)))))

  ReplyDelete
 8. வாங்க வைகோ சார், சென்னையிலே இருந்தப்போ எல்லாப் பூனையும், அல்லது ஒரே பூனை??? தெரியலை, குட்டி போட எங்க வீடு தான். நாய்களும் அப்படியே! :)))))

  ReplyDelete
 9. வாங்க ரஞ்சனி, இதெல்லாம் இயல்பா வரதுனு நினைக்கிறேன். நகரத்து வளர்ப்பிலும் பலர் செல்லங்கள் வளர்ப்பது உண்டு. என்னோட நாத்தனார் பொண்ணு பூனை வளர்த்து வந்தாள். இத்தனைக்கும் அடுக்குமாடிக் குடியிருப்புத் தான். பூனை என்பதால் வைச்சுக்க முடிஞ்சது.

  ReplyDelete
 10. வாங்க வா.தி. புரியலையே?? யாரைச் சொல்லறீங்க????????????????????

  ReplyDelete
 11. வேறே எங்கேயோ போடவேண்டிய கமென்டோ????????

  ReplyDelete
 12. வாங்க ஜிஎம்பி சார், நேரம் இருக்கையில் படிக்கிறேன். நன்றி.

  ReplyDelete
 13. வாங்க ஶ்ரீராம், நிறையச் செல்லங்கள் இருந்திருக்கின்றன. மோதிக்குத் தான் ராஜ உபசாரம் பண்ணினோம். மத்தது எல்லாம் அதுங்க பாட்டுக்கு இருந்துட்டுப்போயிடுத்துங்க!

  ReplyDelete
 14. செல்லச் செல்வங்கள்......

  ReplyDelete
 15. உங்கள் மோதி எங்கள் றீட்டா,ஜொனி இருவரையும் ஞாபகத்துக்கு கொண்டுவந்துவிட்டது.

  மாடப்புறாக்கள், மயில்கள், கிளிகள், குருவிகள் அருமையான குடும்ப அங்கத்தவர்களுடன் உறவாடி மகிழ்ந்திருக்கின்றீர்கள்.


  ReplyDelete
 16. வாங்க வெங்கட், செல்லங்கள் என்றுமே செல்லங்கள் தான்!:)))))

  ReplyDelete
 17. வாங்க மாதேவி, உங்கள் செல்லங்களைக் குறித்தும் பகிர்ந்து கொள்ளுங்கள். எனக்கு நினைவாச் சுட்டி கொடுத்துடுங்க. :)))

  ஆமாம், உண்மையில் ராஜஸ்தானில் நாங்க இருந்ததை எங்களால் மறக்கவே முடியாது. :))) மயில் அழகாக நடனம் ஆடும். பறவைகள் எல்லாம் அங்கே இருக்கிறாப்போல் புஷ்டியாக இங்கே இருப்பதும் இல்லை. அதோடு பறவைகளும் நிறைய. பல்வகைப் பறவைகளைப் பார்க்கலாம். என்னோட முக்கியப் பொழுது போக்கே பறவைகளைப் பார்த்து ரசிப்பது தான். வாசலிலே ஒரு பெரிய லான் இருக்கும். அங்கே ஒரு நாற்காலியைப் போட்டு அமர்ந்து கொண்டால் போதும். கையிலே ஒரு புத்தகமும் இருக்கும். ஒரு கண் அதிலும், ஒரு கண் தோட்டத்திலுமாகப் பொழுது கழியும். அருமையான நாட்கள் அவை.

  ReplyDelete