எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, August 04, 2013

ஊருக்குப் போயிட்டு வந்தேன்! :))))

இன்னிக்குக்காலையிலே நாலு மணிக்கே எழுந்து குளிச்சுட்டுக் குலதெய்வம் கோயிலுக்குப் போனோம்.  கும்பகோணத்தை நெருங்கியதும், சில சாமான்கள் வாங்க வேண்டி பெரிய கடைத்தெருவிலே இறங்கினோம்.  அங்கே இருந்த பொதுக் கட்டணக் கழிப்பறை மூடி இருக்கவே என்ன ஆச்சுனு விசாரிச்சோம். அதை வேறே தெருவுக்கு மாத்தி இருப்பதாச் சொன்னதும், ஒரு ஆவலுடன் எங்கேனு பார்த்ததில் என்னத்தைச் சொல்றது! :( சார்ங்கபாணி கோயில் மதில் சுவரில் அதை ஒட்டி அமைக்கப்பட்டிருக்கிறது. ரொம்ப மனசுக்கு வேதனையாப் போச்சு.  இங்கே தான் அப்படின்னா நாகேஸ்வரர் கோயில் வழியாப் போனப்போ அங்கேயும் இப்படி ஒண்ணு கட்டி விடப்பட்டிருப்பது தெரிஞ்சது.  பெரிய கடைத்தெருவில் தெருவின் நடுவே இருந்தாலும் யாருக்கும் தொந்திரவில்லாமல் இருந்த கழிப்பறைகள் இப்படிக் கோயில்களின் மதில் சுவரை ஒட்டிக் கட்டப்பட்டிருப்பதைப் பார்த்தும் ஊர் மக்கள் ஏதும் சொல்லலையேனு தோன்றியது.  கோயிலைச் சுத்தமாக வைத்திருக்கச் சொல்றாங்க.  ஆனால் கழிவறை இருக்கலாமா என ஏன் தோன்றவே இல்லை??????? 

கிராமத்துக்குப் போகும்போது பார்த்தால் புதூர் என்னும் கிராமம் வரையிலும் அரசலாற்றில் தூர் வாரும் பணி நடைபெறவே இல்லை எனப் புரிந்தது.  மக்கள் தான் எல்லாமும் அரசே செய்து கொடுக்கணும்னு எதிர்பார்க்கிறாங்களே.  அவங்க பக்கத்து ஆற்றின் மாசுகளை குறிப்பிட்ட கிராமங்களைச் சேர்ந்தவங்களே நீக்கலாம். :( தண்ணீர் வரலைனு சொன்னால் மட்டும் போதுமா?  வர நீரைப் பாதுகாப்புடனும், சுத்தமாகவும் வைச்சிருக்க வேண்டாமா?  புதூர் தாண்டி எங்க ஊரான கருவிலி வரையிலும் சுத்தமாகத் தூர் வாரி இருந்தாலும், ஆற்றில் இறங்கும் கரைக்கருகேயே ஊற்றுத் தண்ணீருக்காக மக்கள் தோண்டுவதைப் பார்த்தோம்.  இப்போ இன்னும் அந்தப் பகுதி வரையிலும் காவிரி நீர் வரவில்லை.  நீர் வந்துவிட்டால் அந்தப் பள்ளம் நிரம்பிவிடும்.  பள்ளம் இருப்பது தெரியாமல் கரையோரமாக ஆற்றில் இறங்கும் நபர்களைப் பள்ளத்தில் இழுக்கும் அபாயம் இருக்கிறது.  கிட்டத்தட்ட ஒரு மைல் தூரம் பயணத்திலும் இப்படி ஆங்காங்கே நடப்பதைப் பார்க்க முடிந்தது.  வண்டியில் போனதாலும் காமிரா எடுத்துப் போயும் படங்கள் எடுக்க முடியவில்லை. :(எடுத்தாலும் நடு ஆற்றில் பள்ளம் தோண்டுபவர்களை எடுக்க வழியில் நிறுத்தி இறங்கணும்.  அந்தக் குறுகலான பாதையில் வண்டியை நிறுத்தினால் எதிரே வரும் பேருந்துகள், கனரக வண்டிகள் கடக்கையிலே சிரமம்!  ஆகவே அந்த ஆசையை விட்டுவிட்டேன்.  பாலத்துப்பக்கம் ஒண்ணும் இல்லை.  சுத்தமாகவே இருந்தது.

வயல்கள் எல்லாம் உழுது போட்டுவிட்டு நீருக்காகக் காத்திருக்காங்க.  இன்னும் கல்லணை திறக்கலை.  கல்லணைத் தண்ணீர் அங்கே போனால் தான் கடைமடைப் பாசனம். 


(இந்தப் படம் இன்னிக்கு எடுக்கலை;  கும்பாபிஷேஹம் நடக்கும் முன்னர் திருப்பணிக்காக எப்போவோ எடுத்தது.  நடுவில் உற்சவரைத் திருடிக் கொண்டு போயிட்டுப் பின்னர் திலகவதி ஐபிஎஸ்ஸிடம் தனிப்பட வேண்டுகோள் விடுத்து மீட்டோம். இப்போ உற்சவர் இன்னமும் கோர்ட்டின் பாதுகாப்பில் தான் இருக்கார்)


பரவாக்கரையில் பெருமாள் கோயிலில் பெருமாளைத் தரிசனம் பண்ணினால் அவர் நின்ற கோலம் வலக்காலைத் தூக்கிக் கொண்டு ஆடும் வெள்ளியம்பல நடராஜர் போலவே தோன்றியது.  இரண்டு மூன்று முறை உற்றுப் பார்த்தும் மீண்டும் மீண்டும் அப்படியே தோற்றம்.  
(அப்பர் தேவாரத்தில் 5 ஆம் திருமுறை(?) கருவிலிக் கொட்டிட்டை எனக்குறிப்பிடப் பட்டுள்ள ஊர் இது தான்.  நாச்சியார் கோயிலில் இருந்தும் வரலாம்.  காரைக்கால் வழியில் வந்து வடமட்டத்தில் திரும்பி பரவாக்கரையைக் கடந்தும் வரலாம். திருச்சியில் இருந்து கும்பகோணம் வந்து  கும்பகோணத்தில் இருந்து பரவாக்கரை செல்லப் பேருந்துகள் இருக்கின்றன. அவை வடமட்டம் வரையிலும் செல்லும்.  அங்கிருந்து நடந்தோ ஆட்டோவிலோ பரவாக்கரை போகலாம்.  மினி பேருந்து பரவாக்கரைக்குச் சில குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே வருகின்றன.  அவை குறித்த தகவல் தெரியாது.  நண்பர் ஒருத்தர் கேட்டிருப்பதால் இந்தத் தகவலைப் பகிர்ந்து கொண்டுள்ளேன்.)

இங்கே கருவிலியில் சற்குணேஸ்வரரோ, அப்படியே தும்பிக்கையோடு கூடிய கணபதி போல் காட்சி அளித்தார்.  என் கண்ணுக்குத் தான் அப்படி எல்லாம் இருந்ததோ என்னமோ!   ஒன்றரை மணிக்கு வந்தோம்.  வந்து சாப்பிட்டுக் கணினியிலே உட்காரலாம்னு பார்த்தால் திடீர் மின் வெட்டு.  அப்போ அப்போ நான் இன்னும் போகலையாக்கும்னு சொல்லிட்டு இருக்கு.  மூன்றரை மணிக்குத் தான் வந்தது.  இப்போ இணையம் சொதப்பல் பண்ணிட்டு இருக்கு. :(

21 comments:

 1. //நடுவில் உற்சவரைத் திருடிக் கொண்டு போயிட்டுப் பின்னர் திலகவதி ஐபிஎஸ்ஸிடம் தனிப்பட வேண்டுகோள் விடுத்து மீட்டோம். இப்போ உற்சவர் இன்னமும் கோர்ட்டின் பாதுகாப்பில் தான் இருக்கார்)//

  அடப்பாவமே !

  பகவான் இன்னும் கோர்ட்டு பாதுகாப்பிலா ! ;)))))

  ReplyDelete
 2. //கிட்டத்தட்ட ஒரு மைல் தூரம் பயணத்திலும் இப்படி ஆங்காங்கே நடப்பதைப் பார்க்க முடிந்தது. வண்டியில் போனதாலும் காமிரா எடுத்துப் போயும் படங்கள் எடுக்க முடியவில்லை. :(எடுத்தாலும் நடு ஆற்றில் பள்ளம் தோண்டுபவர்களை எடுக்க வழியில் நிறுத்தி இறங்கணும். அந்தக் குறுகலான பாதையில் வண்டியை நிறுத்தினால் எதிரே வரும் பேருந்துகள், கனரக வண்டிகள் கடக்கையிலே சிரமம்!

  ஆகவே அந்த ஆசையை விட்டுவிட்டேன். //

  அந்த ஆசையை விட்டு விட்டீர்களா ? ஆச்சயமாக உள்ளது. ;)

  ReplyDelete
 3. //ஒன்றரை மணிக்கு வந்தோம். வந்து சாப்பிட்டுக் கணினியிலே உட்காரலாம்னு பார்த்தால் திடீர் மின் வெட்டு. அப்போ அப்போ நான் இன்னும் போகலையாக்கும்னு சொல்லிட்டு இருக்கு. மூன்றரை மணிக்குத் தான் வந்தது. இப்போ இணையம் சொதப்பல் பண்ணிட்டு இருக்கு. :(//

  பல்வேறு பிரச்சனைகளுக்கிடையேயும் சுடச்சுட பதிவு கொடுத்து அசத்தி விட்டீர்கள். பாராட்டுக்கள்.

  அதற்காக உங்களுக்கு ஒரு பரிசு காத்திருக்கிறது, என் லேடஸ்டு பதிவில்.

  http://gopu1949.blogspot.in/2013/08/35.html

  வாங்கோ, வந்து ஆசீர்வாதம் பண்ணுங்கோ.

  ReplyDelete
 4. ஊருக்குப் போய் வந்து சுடச்சுட ஒரு பகிர்வு....

  கிராமத்துக் கோவில்களுக்குச் சென்று வருவதில் ஒரு அலாதியான இன்பம் இருக்கத்தான் செய்கிறது......

  ReplyDelete
 5. // நடுவில் உற்சவரை.. மீட்டோம்.. //

  இந்த வரியில் வார்த்தை அமைப்பு சரியாக இல்லை, பாருங்கள்..

  ReplyDelete
 6. கருவிலிக் கொட்டிட்டை எனக்குறிப்பிடப் பட்டுள்ள ஊர் இது தான். //
  அடிக்கடி ஜெயா தொலைக்காட்சியில் இந்த கருவிலி கோவிலை காட்டுவார்கள்.
  நேற்று நியூஜெர்சியில் ஆடி பெருக்கிற்கு காவிரி அம்மனை கும்பிட்டேன். போனமுறை ஆடிபெருக்கு சமயம் மயிலாடுதுறைக்கு காவிரி தண்ணீர் வரவில்லை, இந்த முறையும் வரவில்லை. அடுத்த ஆண்டாவது காவிரி ஏமாற்றாமல் எங்கள் ஊர் மக்களுடன் ஆடிபெருக்கு மகிழ்ச்சியாக கொண்டாட வரவேண்டும்.

  ReplyDelete
 7. அதற்குள் பரவாக்கரைக்குப் போய் வந்தாச்சா.

  மூலவராவது இருக்கிறாரே.

  இப்படிப் பள்ளம் தோண்டித்தானே சென்னையில் மூன்று குழந்தைகள் (ஒரே குடும்பம்) மூழ்கி இறந்து விட்டார்கள்:(

  ReplyDelete
 8. NJ வேலன்டைனம்மன் உண்டு தெரியும், காவிரியம்மன் வந்துட்டாங்களா இப்போ?

  ReplyDelete
 9. /இங்கே கருவிலியில் சற்குணேஸ்வரரோ, அப்படியே தும்பிக்கையோடு கூடிய கணபதி போல் காட்சி அளித்தார்./ -ஒரு வேளை லிங்கத்தைச் சுற்றி இருக்கும் ஆடையால் முகம் முக்கோண வடிவில் தெரிந்து அதுவே தும்பிக்கையுடன் கூடிய விநாயகர் போல் தோற்ற மளித்திருக்கக் கூடும்.?முந்தின ஆண்டு போய்வந்தோம். பதிவும் எழுதி இருந்தேன். கும்பாபிஷேகம் நடத்தக் காரணமாயிருந்த சகோதரர் இருவரில் ஒருவர் பிரபல மேலாளர் திரு.V கிருஷ்ணமூர்த்தி எங்கள் பழைய boss.

  ReplyDelete
 10. வாங்க வைகோ சார், கோயிலுக்குத் திரும்பக் கொண்டு வரதுக்காக முயன்றோம். பல பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யச் சொல்றங்க. அதுக்காகப் பணம் தேவை. எப்படியும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யணும். எப்போ நடக்குமோ தெரியலை. :(

  ReplyDelete
 11. ஆமாம், வைகோ சார், படம் எடுக்கக் கீழே இறங்கினால் வண்டியை நிறுத்த முதலில் இடம் வேணும். அப்புறமா நாம படம் எடுக்கிறச்சே எதிரே வர வண்டிங்க உரசாமல் செல்லும்படியா நிற்கணும். கொஞ்சம் வீதி அகலமா இருந்தா அங்கே வேறு விதமான பிரச்னைகள்! :((( ஆனால் பாதை இப்போ வண்டிகள் செல்லும் அளவுக்குச் சீரமைக்கப்பட்டிருப்பதே பெரிய விஷயம். மேலும் அங்கே எல்லாம் இன்னும் தண்ணீர் வரவில்லை. நேத்துக் கல்லணை திறந்ததாலே அநேகமா நாளைக்குள் தண்ணீர் அங்கே போய்ச் சேரலாம்.

  ReplyDelete
 12. உங்க பதிவுக்கு வந்து பரிசை எடுத்துக் கொண்டேன். நேற்றைய மின்வெட்டுக்குக் காரணம் இறுதி ஊர்வலத்தில் வெடிக்கப்பட்ட பட்டாசை நம்ம குடிமகன்கள் மின் கம்பியில் தூக்கி எறிந்து விளையாடினாங்களாம். அதனால் ஶ்ரீரங்கம் சில பகுதிகள், திருவானைக்காவில் மின் தடை! :((((

  ReplyDelete
 13. வாங்க வெங்கட், ஆமாம், கிராமத்துக் கோயில்களூக்குச் செல்வது தனி இன்பம் தான்.

  ReplyDelete
 14. வாங்க ஜீவி சார்,

  அதுக்கு நடுவிலே என வந்திருக்கணும். அதுக்கு என்னும் வார்த்தை விடுபட்டிருக்கு. இம்மாதிரிப் பதிவுகளை எழுதி வைச்சுக்காமல் நேரடியாகவே எழுதுவதால் ஏற்பட்டதாக இருக்கலாம். ஆனாலும் பொதுவாக எடிட் செய்வதோ, பிழை திருத்தம் பார்ப்பதோ கிடையாது. நானும் ஒவ்வொரு முறையும் நினைச்சுப்பேன். பிழை திருத்தமாவது பார்க்கணும்னு! எங்கே, மறந்து போயிடும். :)))))

  ReplyDelete
 15. வாங்க கோமதி அரசு, கும்பகோணத்திலும் இன்னும் தண்ணீர் வரவில்லை. நாளைக்குப் போகலாம். வரவுக்கு நன்றிங்க.

  ReplyDelete
 16. @கோமதி அரசு,
  அடுத்த வருஷம் மாயவரம் காவிரியிலும் தண்ணீர் வந்து மகிழ்வாகக் கொண்டாட முன் கூட்டிய வாழ்த்துகள்

  ReplyDelete
 17. வாங்க வல்லி, ஆமாம், மூலவர் இருக்கார். அவர் தான் வேட்டி கட்டி இருக்கிறமாதிரியிலோ என்னமோ வலக்காலைத் தூக்கிக் கொண்டு நடராஜர் ஆடறாப்போல தெரிஞ்சார். :))))

  ReplyDelete
 18. அப்பாதுரை,வேலன்டைனம்மன் தெரியாதே எனக்கு! காவிரியம்மன் எப்போவுமே இருக்காங்களே! :)))

  ReplyDelete
 19. வாங்க ஜிஎம்பி சார், அந்தப் பதிவை நானும் படிச்சிருக்கேன். இந்தக் கிருஷ்ணமூர்த்தி என் மாமனாரின் சொந்தம். சகோதரர் முறை! இன்னொருவர் தான் கல்கி வைத்தியநாதன். நன்றி சார்.

  ReplyDelete
 20. பரவாக்கரை தர்சனம் கிடைத்தது.

  ReplyDelete
 21. கேள்விப்படாத ஊர். நம் நாட்டில் தான் எத்தனை கோவில்கள்! நம்மூர் கோவிலுக்குப் போய்விட்டு வந்தாலே மனம் நிறைந்து விடுகிறது, இல்லையா?

  ReplyDelete