எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, February 26, 2014

சுடிதார் வாங்கப் போய்ப் பரிசு கிடைத்த கதை!

சுடிதார் வாங்கப் போறேன் கதையில் பாராட்டுக்கு ஏங்கும் மனித மனம்!      பாராட்டுக்கு ஏங்குவது கணவன்.   கடைத்தெருவுக்கே வராமல் இருக்கும்  மனைவியோ வாய் விட்டு எதுவும் சொல்வதில்லை     அவருக்குப் பிடித்ததா, பிடிக்கிறதா என்பதை விட மற்றவர்க்குப் பிடிக்கிறதா என்று பார்க்கிறார்.  அது தான் ஒத்த வயதுடைய சம்பந்தி அம்மாவின் ரசனையை அவர்கள் கேட்டு அறிவதிலிருந்து புரிகிறது.

திருப்தி அடையாத பெண்மனம்!   பெண்கள் உடைகளில் அவ்வளவு எளிதில் திருப்தி அடைய மாட்டார்கள்.  என்ன தான் நிறையப் பணம் போட்டுக் கடைகடையாய் ஏறி இறங்கி அலசி ஆராய்ந்து வாங்கினாலும் ஏதோ ஒரு குறை இருக்கத் தான் செய்யும்.  அது மனதின் ஓர் ஓரத்தில் ஒளிந்தும் இருக்கும்.  அதே துணியை மற்றவர் பார்த்துப் பாராட்டினால் அந்தத் தேர்வு அவங்க சொந்தத் தேர்வாக இருந்தால் பெருமிதம் கட்டாயம் உண்டாகும்.  கணவன் வாங்கியதை மற்றவர் பாராட்டுகையில் அந்த உண்மையைச் சொல்ல விடாமல் சுய கெளரவம் தடுக்கிறது!   திரு வைகோ அவர்கள் மனைவியின் சுயநலம், கணவன் தனக்கே உரியவன்,   மற்றவர் பாராட்டுக் கூடாது என்னும் எண்ணம் இருப்பதாகச் சொல்கிறார்.  இருக்கலாம்.  தன் கணவனின் தேர்வைத் தான் பாராட்டாத போது இந்த இளம்பெண் பாராட்டுகிறாளே என்ற குற்ற உணர்வாகவும் இருக்கலாம்.  வெளிப்படையாக உணர்வுகளைப் பகிராதவரால் அதை வெளிக்காட்ட முடியவில்லை.

 கடைகளுக்குச் சென்று பேரம் பேசிப் பொருட்களை வாங்கும் பெண்கள் மத்தியில் இவர் அதிசயமானவரே!    அந்தக் கணவன் கொடுத்து வைத்தவர் என்று சொல்ல முடியுமா என்றால் கணவன்  கோணத்திலிருந்து பாராட்டு எதுவும் மனைவியிடமிருந்து வராததால் மன உளைச்சலில் இருக்கிறார்.!  ஒரு தரமாவது மனைவி தான் செய்வதைப் பாராட்ட மாட்டாளா? என ஏக்கம்.  கடைசியில் எதிர்பாரா இடத்திலிருந்து வருகிறது அந்தப் பாராட்டு.

வரப் போகும் மருமகளின் பிறந்த நாளுக்கு எனத் துணி எடுக்கும் அந்த மாமனார் அதற்கும் அலைகிறார்.  உண்மையில் அவருக்குக் குழப்பமே.  இப்படி இந்த உடையைப் போடுவாங்களா? கை இப்படி இருக்கலாமா? எல்லாம் ஒரே நிறத்தில் அமைய வேண்டாமா என்றெல்லாம் குழம்பிக் குழம்பிக் கடைக்காரப் பெண்ணின் சொல்லை நம்பி வாங்கிச் செல்கிறார்.   ஆனால் அதைப் பார்த்ததுமே புன்னகைக்கும் மனைவியின் முகம் அது நல்ல தேர்வு என்பதைச் சொல்லாமல் சொல்லி விடுகிறது.   மனைவியை அணிந்து பார்க்கச் சொல்லியும்  மனைவி மறுக்கிறார். இந்த வயதிலும் மனைவியிடம் இவர் வைத்திருக்கும் பாசமும், அன்பும், காதலும் இங்கே போட்டி போட்டுக் கொண்டு வெளி வருகிறது.  ஆனால் மனைவியோ அதைப் புரிந்தும் புரியாதவளாகத் தன் வேலையே கண்ணாக இருக்கிறாள். மனைவி அலக்ஷியம் செய்வதாக எண்ணாமல் கணவனின் அன்பு தனக்கு என்றென்றும் மாறாமல் இருக்கிறது என்பதைப் புரிந்து கொண்ட மனம் என்று புரிந்து கொண்டேன். 

மருமகளிடம் போய்ச் சேர்ந்த அந்த உடை அவளுக்கும் மிகவும் பிடித்துவிட்டதோடு இல்லாமல் தன் வருங்காலக் கணவனுக்கு அதைப் போட்டு ஃபோட்டோ பிடித்து அனுப்பி அவன் மகிழ்ந்ததையும் கண்டு தானும் மகிழ்கிறாள்.  அதே மகிழ்ச்சியோடு தன் வருங்கால மாமனார் வீட்டுக்கும் வந்து உடை மிகவும் பிடித்திருப்பதாகச் சொல்லி மகிழ்கிறாள்.  எதிர்பாராமல் அவரின் மகனும் தொலைபேசியில் தன் வருங்கால மனைவிக்குத் தந்தை வாங்கித் தந்திருக்கும்  உடை மிகப் பொருத்தமாக அமைந்திருப்பதைச் சொல்லிப் பாராட்டவே அவருக்குத் திகைப்பு!  பின்னர்  தன் வருங்கால மருமகள் தன் மகனுக்குப் படம் எடுத்து அனுப்பி இருப்பதைத் தெரிந்து கொண்டு மகன், மருமகள் இருவரின் பாராட்டும் ஒருசேரக் கிடைத்த மகிழ்ச்சியில் மனம் திளைக்கிறார்.  இப்போது தான் அவருக்குத் தன் தேர்வில் ஒரு நம்பிக்கை பிறந்திருக்கிறது.  உள்ளரீதியாகத் தன் தேர்வெல்லாம் சரியில்லையோ என மனம் வருந்தியவருக்கு இளைஞர்களான மகன், வருங்கால மருமகள் மூலம் நம்பிக்கை என்னும் கீற்று ஒளி வீசிப் பிரகாசிக்க ஆரம்பித்துள்ளது. 

இந்தக் கதை சாமானிய மனிதமனத்தில் தோன்றும் ஆசைகளின் வெளிப்பாடுதான் என்றாலும் கடைசியில் பரமாசாரியாரின் அருள் வாக்கோடு முடிக்க எண்ணுகிறேன்.

"யாரையும் அவரவர்  நற்செயல்களுக்காகவோ, நற்குணங்களுக்காகவோ அதிகம் பாராட்டாதீர்கள்.  அவர்கள் நற்குணங்களையும், நற்செயல்களையும் மேலும் வளர்த்துக்கொள்ள விரும்புவார்கள் தான்.  ஆனாலும் பாராட்டு என்பது ஒரு போதை!ஈஸ்வரனும், குருவும் மட்டுமே நேரிடையாகப் பாராட்டத் தக்கவர்கள். நண்பர்கள், உறவினர்களை  முகத்துக்கு நேரே பாராட்டக் கூடாது.  மற்றவரிடம் அவர்களைக் குறித்து நல்லவிதமாகச் சொல்லலாம்.  நம் வீட்டில் வேலை செய்யும் ஊழியனைக் கூட அவன் நல்லவிதமாக வேலையை முடித்துத் தந்ததும் அதற்காகப் பாராட்டலாம். அதே சமயம் உங்கள் சொந்த மகனைப் பாராட்டாதீர்கள்!"

இது பரமாசாரியாரின் அருள் வாக்கின் உட்கருத்து மட்டுமே.  ஒருவேளை இந்தக் கதையில் வரும் அந்த மனைவி இதைப் படித்தவராய் இருப்பாரோ என்ற எண்ணம் ஏற்பட்டதையும் தவிர்க்க முடியவில்லை. :))))


திரு வைகோ அவர்கள் அறிவித்த விமரிசனப் போட்டியில் நான் கலந்து கொள்ளவில்லை, எனக்குப் போட்டியில் கலந்து கொள்ளும் வழக்கமே இல்லை என்று சொன்ன போதிலும் கட்டாயமாய்க் கலந்து கொள்ளச் சொல்லி ஊக்கம் கொடுத்தார்.  அது போலவே என்னிடமிருந்து விமரிசனம் வர தாமதம் ஆனாலும் நினைவு வைத்துக் கொண்டு கேட்டு வாங்குகிறார். அவரின் மூன்றாவது கதை சுடிதார் வாங்கப் போறேன் கதை விமரிசனத்தில் எனக்கு இரண்டாவது பரிசு கிடைத்துள்ளது. உண்மையில் அதிசயமே!  நான் எதிர்பார்க்கவே இல்லை.  இதை ஒண்ணும் பிரமாதமாய் விளம்பரம் செய்ய வேண்டாம்னு நினைச்சேன்.  ஆனால் பாருங்க, அடுத்த விமரிசனப் போட்டியிலே முதல் பரிசே கிடைச்சிருக்கு.  அந்த விமரிசனம் நாளைக்கு.  குறைந்த பக்ஷமாக வைகோ சாருக்கு நன்றியாவது தெரிவிக்க வேண்டாமா?  அதுக்குத் தான் இந்தப் பதிவு.  தொடர்ந்து முதல் பரிசை விடாமல் இருக்கும் திரு ரமணி அவர்களிடமிருந்து நிறையத் தெரிந்து கொள்ளவும் ஒரு வாய்ப்புக் கிடைத்துள்ளது.

19 comments:

 1. வாழ்த்துக்கள் அம்மா... தொடர்ந்து கலந்து கொண்டு வெற்றி பெறவும் வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 2. பிரார்த்தனை பண்றதுக்கோ, கடவுளை வணங்குறதுக்கோ ஒரு நாளைக்கு எத்தனை மணிநேரம் செலவழிக்கணும்...?

  இணைப்பு : http://dindiguldhanabalan.blogspot.com/2014/02/Prayer-Time.html

  ReplyDelete
 3. நானும் இந்தக் கதைக்கு விமரிசனம் எழுத நினைத்தேன்.. ஏனோ சரிப்படவில்லை. கதையின் நாயகன் பெண்களை மதிக்கத் தெரியாத பேர்வழி போல் தோன்றியது.

  ReplyDelete
 4. பரிசு பெற்றதற்கு இனிய வாழ்த்த்ய்கள்...

  //தொடர்ந்து முதல் பரிசை விடாமல் இருக்கும் திரு ரமணி அவர்களிடமிருந்து நிறையத் தெரிந்து கொள்ளவும் ஒரு வாய்ப்புக் கிடைத்துள்ளது.//

  விமரசனம் என்றால் என்ன என்றே விமர்சனம் எழுதி பாடம் ந்டத்தும்
  விமர்சனச்சக்ரவர்த்தி ஐயாஅவர்கள்!

  ReplyDelete
 5. வாழ்த்துகள். கலக்கறீங்க.

  ReplyDelete
 6. என் மனமார்ந்த பாராட்டுக்கள்.

  அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

  இதற்குப்போய் நன்றிகூறும் விதமான மேலும் ஒரு தனிப்பதிவு வெளியிட்டு சிறப்பித்துள்ளதற்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

  இதே போட்டியில் மேலும் மேலும் தொடர்ந்து கலந்துகொண்டு, மேலும் பல பரிசுகள் தாங்கள் பெற வேண்டும் என்பதே என் விருப்பம்.

  அன்புடன் கோபு

  ReplyDelete
 7. பரிசுக்கு வாழ்த்துக்கள் கீதா மேடம்.

  ReplyDelete
 8. தொடர் பரிசுகளுக்கு நல்வாழ்த்துகள்!

  ReplyDelete
 9. பெண்கள் பரிசு பெறட்டுமே என்று ஆண்கள் கௌரவமாக ஒதுங்கிக்கொள்ளக்கூடாதோ?

  ReplyDelete
 10. நன்றி டிடி, உங்க பதிவைக் கட்டாயமாய்ப் படிக்கிறேன். :))) நேரம் தான் இல்லை, என்பதோடு கணினி பிரச்னையும். :))))

  ReplyDelete
 11. அப்பாதுரை, பெண்ணை மதிக்கலை என்பது உங்கள் மாறுபட்ட கோணம். எழுதி இருக்கலாமே! எனக்கு என்னமோ அவர் மனைவி தான் கணவனை அலக்ஷியம் செய்கிறாரோ எனத் தோன்றியது. முதலில் அந்தக் கோணத்தில் தான் எழுத நினைத்தேன். :)))) ஆனால் ஒரு விஷயம், நீங்க மட்டும் எழுதி இருந்தால் எனக்கெல்லாம் ஒண்ணுமே கிடைச்சிருக்காது. :))))))

  ReplyDelete
 12. நன்றி ராஜராஜேஸ்வரி.

  ReplyDelete
 13. கலக்கல்லாம் இல்லை ஸ்ரீராம். நீங்க கலந்துப்பீங்கனு எதிர்பார்த்தேன். நேரம் இல்லையோ?

  ReplyDelete
 14. நன்றி வைகோ சார், இந்தப்போட்டி அறிவிச்சதில் இருந்து நீங்க பல பதிவுகளையும் படித்தாலும் பின்னூட்டம் போடுவதில் இருந்து விலகி இருப்பது பாராட்டுக்கு உரியது என்றாலும் உங்களுக்கே உரித்தான விமரிசனம் இல்லாததும் வருத்தம் தான். :)))) பின்னூட்டம் போட்டதுக்கு நன்றி.

  ReplyDelete
 15. தொடர்ந்து மூன்றாம் முறையாகப் பரிசு வாங்கி இருப்பதற்கு வாழ்த்துகளும், நன்றியும் ராஜலக்ஷ்மி மேடம்.

  ReplyDelete
 16. நன்றி ராமலக்ஷ்மி.

  ReplyDelete
 17. இது பெண்களுக்கான சிறப்புப் போட்டினு அறிவிப்பு இல்லையே செல்லப்பா ஸார்.

  ReplyDelete
 18. நல்ல விமர்சனம்.

  இரண்டாம் பரிசு பெற்றமைக்கு வாழ்த்துகள்.......

  ReplyDelete
 19. நன்றி வெங்கட்.

  ReplyDelete