எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, February 09, 2014

மோதியோட நினைவுகள்!

விஷயம் என்னன்னா, கீழ்ப்பாக்கத்தில் எங்க பையருக்கு எடுக்க வேண்டிய ஸ்கான் வசதி இல்லாததால் நுங்கம்பாக்கம் தாண்டி ஓர் இடத்திற்கு அனுப்பி இருக்காங்க.  அது எங்களுக்குத் தெரியலை.  நாங்க கீழ்ப்பாக்கத்தில் இருந்தே வரதாத் தான் நினைச்சோம்.  என் தம்பியும், அவர் தம்பியும் வந்து விஷயத்தை விளக்கியதும் தான் தெரிந்தது என்றாலும் ஏழரை மணி வரை என்ன ஆச்சு? கடைசியா ஏழே முக்காலுக்கு இனி காத்திருக்க முடியாது, கிளம்பவா, நிச்சயம் முடிச்சுக்கலாமானு புரோகிதர் கேட்க, எங்கள் மாப்பிள்ளை மச்சினன் வரணும்னு சொல்ல, அந்த நேரம் வாசலில் ஒரே சப்தம். எல்லாருமே அதோ, அதோ வந்துட்டான் என்று ஒரே குரலில் கூவ சற்று நேரம் குழப்பமான சப்தங்கள்.

ஏன் இத்தனை நாழி?

எங்கே போனீங்க?

வண்டியிலே வரதுக்கு இவ்வளவு நேரமா?

ஒருத்தருக்கும் ஒண்ணும் ஆகலையே?

சரி, சரி, சீக்கிரமாக் கைகால், அலம்பிட்டு வா, நிச்சயதார்த்தம்உனக்காகக் காத்துட்டு இருக்கு.

அவங்க இரண்டு பேரும் வண்டியில் வந்தும் ஏன் தாமதம் ஆச்சுன்னா. நுங்கம்பாக்கம் டாங்க்பன்ட் வரும்போது வண்டியின் ஸ்பார்க் ப்ளகில் ஏதோ பிரச்னை.  அங்கே இருக்கும் ஏதாவது ஒரு மெகானிக் கிட்டே காட்டித் தாற்காலிகமாக ஏற்பாடு செய்யலாம்னு பார்த்தால் டாங்க்பன்டில் இருந்து ஆரம்பிச்சு, லயோலா காலேஜும் தாண்டி, நெல்சன் மாணிக்கம் சாலை வரை ஒரு மெகானிக்கும் இல்லை.  இதே மாதிரி நாங்களும் ஒரு முறை தி.நகரில் ஸ்கூட்டரிலேயே கல்யாணம் ஒண்ணு முடிந்து திரும்பி வரச்சே அவதிப்பட்டோம்.  டாங்க்பன்டில் இருந்து நெல்சன் மாணிக்கம் ரோடு வரை வண்டியைத் தள்ளிக் கொண்டு ரங்க்ஸ் வர, நானும் விதியேனு கூட நடந்து வந்திருக்கேன்.  அவங்களுக்கும் அதே போல் நடந்திருக்கு.  வண்டியை இரண்டுபேருமாக மாத்தி, மாத்தித் தள்ளி இருக்காங்க.  பெரிய வண்டி.

பையரால் அதிகமாத் தள்ளவும் முடியலை.  ஆகவே அவங்க நெல்சன் மாணிக்கம் சாலை வரச்சே ஆறு மணி ஆகி இருக்கு.  அதுக்கப்புறமா வண்டியைச் சரி செய்து கொண்டு அங்கிருந்து கிளம்ப ஏழு மணி ஆகி இருக்கு. அதான் நேரம் ஆகி இருக்கு.  மொத்தத்தில் விஷயம் ஒண்ணும் இல்லை என்பது எங்களுக்கு எல்லாம் ஆறுதல்.

யாருமே எதுவுமே பேசாமல் அடுத்து நடக்கவேண்டிய நிச்சயதார்த்தத்தையே நினைக்க, எல்லாரும் திட்டப் போறாங்கனு நினைச்சுட்டு வந்த பையர் தனக்குக் கிடைத்த திடீர் முக்கியத்துவத்தில் மனம் மகிழ்ந்து போய் உடனடியாக உடை மாற்றிக் கொண்டு வர, நிச்சயம் நடந்து முடிந்தது. அன்று இரவுப்பொழுது நல்லபடியாகக் கழிந்து மறுநாள் கல்யாணமும் அன்று மாலை வரவேற்பு நிகழ்ச்சியும் விமரிசையாக நடந்தது.

ஆனால் மோதிக்கு எங்க பொண்ணு கல்யாணம் ஆகிப்போனதிலிருந்து ஒரே கவலை.  அவள் படுக்கை அருகே சென்று முகர்ந்து முகர்ந்து பார்க்கும். எங்க வீட்டில் தொலைபேசி அப்போது தான் இணைப்பு வாங்கி இருந்தோம். பலரிடமிருந்தும் தொலைபேசி அழைப்பு வரும்.  அப்போதெல்லாம் எங்கேயோ இருக்கும் மோதி, எங்க பொண்ணு கிட்டே இருந்து அழைப்பு வருகையில் எப்படித் தான் தெரிஞ்சுக்குமோ, உடனே தொலைபேசியில் நாங்க பேசிட்டு இருக்கிற இடத்துக்கு வந்துடும்.  குழைவாகக் குரல் கொடுக்கும். செல்லமாகக் குலைக்கும்.  தொலைபேசிக் கருவியை அதன் வாய்க்கு நேரே பிடிப்பார் ரங்க்ஸ். உடனே அங்கிருந்து கேட்கும் பெண்ணின் குரலை அடையாளம் கண்டு கொண்டோ என்னமோ மகிழ்ச்சிக் குரல் கொடுத்துக் கொண்டே சுற்றிச் சுற்றி வரும்.  எல்லாம் சுமுகமாத் தான் போய்க் கொண்டிருந்தது.

வாசலுக்கு அதை வாக்கிங் அழைத்துச் சென்றால் கூட அக்கம்பக்கம் வீடுகள் அருகே அசிங்கம் செய்யாது.  தூரமாகத் தள்ளிப் போய்த் தான் இயற்கை உபாதைகளை முடித்துக் கொள்ளும்.  அப்படி இருந்தும் ஒரு முறை பக்கத்து வீட்டு மாமி அதை மிக மோசமாகக் கடிந்து கொண்டார். அவங்களுக்கு நாங்க நாய் வளர்ப்பது ஆரம்பத்தில் இருந்தே பிடிக்கலை. அதுக்கப்புறமா நாங்க அந்தப்பக்கமாக் கிழக்கே செல்லாமல் மேற்கே எங்கள் பாதையை மாற்றிக் கொண்டோம். தெருவுக்கே ஒரு கிலியைக் கொடுத்து வந்தது.  யாருமே எங்க வீட்டருகே வரவே பயப்படுவாங்க.  ரொம்பத் தெரிந்தவர்கள் கூட வாசலில் தள்ளி நின்று கொண்டே கூப்பிடுவாங்க.  நவராத்திரி சமயம் அதை உள்ளே இருக்கும் இரண்டாவது படுக்கை அறையில் கட்டிப் போட்டுக் கதவை மூடிவிட்டே இங்கே வரவங்களை வரவேற்பேன்.

மத்தியானமெல்லாம் என்னருகேயே படுத்துக்கும்.  என் கணவர் அலுவலகத்திலிருந்து வரச்சே தெரு முக்கில் திரும்புகையில் ஸ்கூட்டர் ஹார்ன் கொடுப்பார்.  அதை  இங்கிருந்தே கேட்கும்.  காதுகளைத் தூக்கிக் கொண்டு கேட்டுவிட்டுக் குதித்துக் கொண்டு வாசலுக்கு ஓடி வாசல் கதவு அருகே கால்களைத் தூக்கி வைத்துக் கொண்டு வாலாட்டிக் கொண்டு நிற்கும். கதவைப் பிறாண்டும்.  நடுவே நம்மையும் உள்ளே வந்து அழைத்து வாசலுக்கு வரச் சொல்லும்.

ஸ்வாமி அலமாரி, சமையலறைக்கு உள்ளே வரக் கூடாதுனு அதுக்குத் தெரியும்.  அதே போல் ஆசாரம் பார்க்கும் என் மாமியார் கிட்டே கூடப்போகாது. எதிரே உட்கார்ந்து கொண்டு பார்த்துக் கொண்டிருக்கும்.  தப்பித் தவறிக் கூட மேலே படாது. ரொம்பச் சமர்த்தாக இருக்கும். திடீர்னு ஒரு நாள் 1998 ஆம் வருஷம் டிசம்பர் மாதம் பதினாறாம் தேதி விடியற்காலை அன்னிக்கு மார்கழி முதல் தேதி, நான் வாசலில் கோலம் போடனு வந்தப்போப் பார்த்தா இது மாடிப்படி அருகே ஒரு மாதிரியாகப் படுத்துக் கிடந்தது.  கிட்டப் போய் மோதி, மோதி னு கூப்பிட்டா ரொம்பச் சிரமப்பட்டு அரைக்கண்ணைத் திறந்து பார்த்தது.  நான் உடனே உள்ளே போய் ரங்க்ஸை அழைத்து வந்தேன்.


அவரும் அருகே உட்கார்ந்து என்னடானு விசாரிச்சார்.  அவரையும் ஒரு பரிதாபப் பார்வை பார்த்துவிட்டு உடனே கண்ணை மூடிவிட்டது.  என்ன ஆச்சுனு தெரியலை.  பத்து நாள் முன்னே தான் மருத்துவர் வந்து பார்த்துச் சென்றிருந்தார். முதல்நாள் இரவு கூடச் சப்பாத்தி சாப்பிட்டது. எப்போவும் இரவில் அவிழ்த்து விடுகிறாப்போல் அன்னிக்கும் அவிழ்த்து விட்டிருந்தோம். நல்லா இருந்தது திடீர்னு போனது எங்க அனைவருக்கும் அதிர்ச்சி.  அப்போத் தான் பொண்ணுக்குக் குழந்தை பிறந்திருந்தது.  அவ கிட்டே ரொம்ப நாட்கள் விஷயத்தைச் சொல்லவே இல்லை.  மெதுவா மாப்பிள்ளை கிட்டேச் சொல்லி அவரை விட்டுச் சொல்லச் சொன்னோம். :(

அதுக்கப்புறமா அதே பக்கத்துவீட்டுப் பையர் இன்னொரு நாய் கொண்டு வந்தார்.  ஆனால் ரங்க்ஸ், என் மாமியார் இருவருமே அதனால் எனக்கு உடம்பு பாதிக்கிறதுனு சொல்லி வேண்டாம்னு சொல்லிட்டாங்க. அதுக்கப்புறமா வேறே செல்லமே வைச்சுக்கலை. விட்டுட்டோம். :(


வேறே படம் எடுக்க முடியலை.  அதே படம் திரும்பப் போட்டிருக்கேன்.

12 comments:

 1. மறைந்தபோது என்ன வயது அதற்கு? சாதாரணமாக 15 வயது வரை ஆரோக்கியமாக இருக்கும் என்பார்கள். பிரிவு கஷ்டமானதாகத்தான் இரு(ந்திரு)க்கும்.

  ReplyDelete
 2. 95 September தான் அது பிறந்த மாதம். நாலு வருஷம் கூட இருக்கலை! :(

  ReplyDelete
 3. இதே போல் அனுபவம் வீட்டிலும்... நானும் எனது சகோதரியும் அழுததை சொல்லி மாளாது....

  ம்... இப்போது நினைத்தாலும் கண்கள் கலங்குகிறது அம்மா...

  ReplyDelete
 4. ஏன் தான் இப்படி ஆகுமோ. நாலு வயசில் வேண அன்பைக் கொட்டிவிட்டுப் போயிருக்கிறது. ஜீரணிப்பது கஷ்டமே. ஏதாவது விஷப்பூச்சி கடித்துவிட்டதோ. வருத்தமாக இருக்கிறது கீதா. அழகா இருக்கான் மோதி.

  ReplyDelete
 5. வாங்க டிடி, எங்க வீட்டிலும் அப்படித் தான். பதினைந்து வருஷம் கழிச்சும் மனதில் வேதனை பொங்கும்.:(

  ReplyDelete
 6. வாங்க வல்லி, சுப்புக்குட்டிங்க எதுனா கடிச்சிருக்குமோனு சந்தேகம். என்ன செய்ய முடியும்! :(

  ReplyDelete
 7. நல்ல வேளை எல்லாம் நல்லபடியாக நடந்தது.....

  மோதியின் மறைவு உங்கள் அனைவரையும் பாதித்திருக்கும் என்பது புரிகிறது.

  ReplyDelete
 8. செல்வங்களைபிரிவதென்பது தாங்கமுடியாத துயர்.

  ReplyDelete
 9. //மோதி, எங்க பொண்ணு கிட்டே இருந்து அழைப்பு வருகையில் எப்படித் தான் தெரிஞ்சுக்குமோ, உடனே தொலைபேசியில் நாங்க பேசிட்டு இருக்கிற இடத்துக்கு வந்துடும். குழைவாகக் குரல் கொடுக்கும்//
  அப்படியே என் BABLU நினைவுக்கு வாரான் ..
  மோதி பற்றி அடிக்கடி சொல்லியிருக்கீங்க இப்போதான் படம் பார்க்கிறேன் ..
  எத்தனை அன்பான ஜீவன் ..எனக்கும் ஊர்நினைவுகள் நான் வளர்த்த விக்கி ஆடு எல்லாம் நினைவுக்கு வந்துபோனாங்க பதிவை வாசித்தபோது ..

  ReplyDelete
  Replies
  1. அதான் இப்போ வளர்க்கவும் வேண்டாம், மனம் வருந்தவும் வேண்டாம்னு விட்டுட்டோம். :( இங்கே குடியிருப்பு வளாகத்தில் வைச்சுக்கவும் முடியாது.

   Delete
 10. https://kaagidhapookal.blogspot.com/2013/01/blog-post_21.html

  ஜிம்மி என்ற பப்லு பத்தி எழுதின கதை

  ReplyDelete
  Replies
  1. பார்த்தேன், படித்தேன் அதிரா. அப்புறமா பப்லுவுக்கு என்ன ஆச்சு?

   Delete