எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, August 22, 2014

சென்னைக்கு வயது 375

தென்னிந்தியாவின் நுழைவாயில் சென்னை.  எத்தனையோ தென்மாவட்ட இளைஞர்கள், நடுத்தர வர்க்கத்தினர், பெரியோர்கள் ஆகியோரின் கனவு நரகம்.  சேச்சே நகரம்! :) ஆனால் என்னை ஏனோ கவர்ந்ததே இல்லை.   ஆங்கிலேயரிடம் இதை ஒப்படைத்த வெங்கடபதி சகோதரர்கள் தங்கள் தந்தையின் பெயரால் இதைச் சென்னை என அழைக்கவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்ததால் சென்னை என அழைக்கப்பட்டதாக வரலாறு சொல்கிறது.  ஆனால் பெரும்பாலோருக்கு சென்னை என்பதை விட மெட்ராஸே எளிமை, இனிமை, அருமை.  வடக்கே சென்றால் அவர்கள் தெலுங்கரோ, மலையாளியோ, கன்னடரோ மதராசி தான். :)))) இது எழுதப்படாத சட்டத்தில் உள்ள ஒரு விஷயம்.




இந்தியாவின் நான்காவது மெட்ரோ நகராக விளங்கும் சென்னையை நான் முதல் முதலாகப் பார்த்தது 1963 ஆம் ஆண்டில் தான். அந்த வருஷம் தான் என் அண்ணாவுக்கும், தம்பிக்கும் திருப்பதியில் மைசூர் மஹாராஜா சத்திரத்தில் வைத்து உபநயனம் செய்வித்தார்கள்.  அதுக்கு நாங்க எல்லோரும் குடும்பத்தோடு திருப்பதிக்குப் போனோம்.  மதுரையிலிருந்து விழுப்புரம் வழியாகத் திருப்பதி சென்ற நாங்கள் திரும்பி வருகையில் எங்களுக்குக் காட்டுவதற்காக அப்பா சென்னை அழைத்து வந்தார்.  முதல் முதல் பார்த்த இடம் மெரினா பீச்.  பெரியப்பா திருவல்லிக்கேணி பெரிய தெருவில் அப்போது இருந்தார். என்னமோ காரணம் என்னவென்று தெரியவில்லை.  பீச்சைப் பார்த்ததுமே இவ்வளவு தானா எனத் தோன்றியது.



அதன் பின்னர் ஒவ்வொரு இடத்துக்கும் பயணம் செய்த போதெல்லாம் சே, இதுவே மதுரைன்னா எவ்வளவு சீக்கிரம் போயிடலாம்னு தோணும்.  இத்தனைக்கும் அப்போச் சென்னை இவ்வளவு நெரிசலாக இல்லை.  பாண்டி பஜாரில் மரங்கள் இருந்தன.  மாம்பலம் மட்டும் கொஞ்சம் வளர்ந்திருந்தது.  லேக் வியூ ரோடில் லேக்கின் மிச்சங்கள் இருந்தன. அயோத்யா மண்டபம்னா அப்போ என்னனே யாருக்கும் தெரியாது.  1688 ஆம் ஆண்டில் சென்னையில் முதல் நகர சபை தோற்றுவிக்கப்
பட்டதாகவும், இந்தியாவின் முதல் நகர சபை அதுதான் எனவும் சொல்கின்றனர்.  ராபர்ட் க்ளைவின் ராணுவ நடவடிக்கைகள் சென்னையை அடிப்படையாக வைத்தே அமைந்தன.  இதுவே பின்னர் பிரிட்டிஷாரின் இந்திய காலனிகளின் தோற்றத்துக்கு அடிப்படையாக அமைந்தது எனலாம்.  நான்கு இந்திய காலனி மாகாணங்களில் சென்னை மாகாணமும் ஒன்று என்னும் பெருமையை இது பெற்றது.

சென்னை மாகாணம் என்பது தமிழ்நாடு முழுவதும், கேரளப் பகுதியில் சிறிது, கர்நாடகத்தில் ஒரு பகுதி, ஆந்திரத்தில் ஒரு பகுதி அடங்கிய பெரிய மாகாணம் ஆகும். ஆங்கிலேயர் காலத்தில் சென்னை இந்தியாவின் முக்கிய நகரங்களுடன் இணைக்கப்பட்டது.  பல சிறு கிராமங்கள் இணைந்த சென்னை இப்போது தெற்கே தாம்பரம் வரையிலும் வடமேற்கே அம்பத்தூர் வரையும் விரிந்து பரந்துள்ளது.  சக்தி பீடத்தின் ஐம்பத்தி ஒன்றாம் ஊர் என்பதே அம்பத்தூர் எனப் பெயர் பெற்றதாகக் கூறுகின்றனர்.  தென்னைமரங்கள் நிரம்பிய பகுதி தென்னம்பேட்டையாக இருந்து பின்னர் தேனாம்பேட்டையாக மாறியுள்ளது.  குதிரைகள் லாயம் இருந்த இடமே கோடா பாக் என அழைக்கப்பட்டுக் கோடம்பாக்கமாக மாறியுள்ளது. (இது குறித்து ஏற்கெனவே எழுதியுள்ளேன்.)

ராஜாஜி அவர்களின் ஆலோசனையின் பேரில் நந்தன வருஷம் கட்டப்பட்ட காலனிக் குடியிருப்பு இப்போது நந்தனம் என்னும் பெயரில் பிரபலமாக விளங்குகிறது.  மஹாவில்வம் என அழைக்கப்பட்டு மாவில்வம் எனச் சுருங்கி பின்னர் மாம்பலம் என ஆகியதாக மாம்பலத்தைக் குறித்த கதை கூறுகிறது.  மயில் ஆர்ப்பரித்து விளையாடியதாலும் அன்னை கற்பகம் மயில் மீது தவம் செய்ததாலும் மயிலாப்பூர் என அழைக்கப்பட்ட ஊர் இன்றைய திருமயிலை.  அல்லிகள் பூக்கும் குளம் இருந்த ஊர் அல்லிக்கேணி எனப்பட்டு இப்போது திருவல்லிக்கேணியாக ஆகியுள்ளது.
பூவிருந்தவல்லி கதை தெரிந்திருக்கும் என நினைக்கிறேன்.  திருக்கச்சி நம்பிகள் இங்கிருந்து பூக்களைப் பறித்துக் கொண்டு காஞ்சிபுரம் போய் தினமும் வரதராஜப் பெருமாளை வணங்கி வந்தமையால் பூவிருந்தவல்லி என்னும் பெயர் பூந்தமல்லி, பூனமலி என அழைக்கப்படுகிறது.  பிரம்புகள் தயாரிக்கும் மூங்கில்கள் நிறைய இருந்தமையால் பெரம்பூர் என அழைக்கப்படும் ஊர் பெரம்பூர் ஆகும்.

சௌந்திரபாண்டியன் பஜார் என்னும் பெயரில் இப்போதும் பாண்டிபஜாரில் நுழையும் இடத்தில் பெயர்ப்பலகையைப் பார்க்கலாம்.  பனகல் மன்னரின் பெயரால் பனகல் பார்க்கும், தியாகராஜச் செட்டியார் பெயரால் தி.நகரும் அழைக்கப்படுகின்றன.  பல்லவர்கள் ஆட்சியில் இருந்த பல்லவபுரம் தான் இன்றைய பல்லாவரம் என்றும், முருகன் போருக்கு ஆயத்தமான இடம் தான் திருப்போரூர் எனவும் சொல்கின்றனர்.  க்ரோம் லெதர் கம்பெனிகள் இருந்த இடம் கிரோம்பேட்டை என அழைக்கப்பட்டது.



ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும்.......... :))))

14 comments:

  1. சென்னையின் பழைய மவுண்ட் ரோடையும் இன்றைய மவுண்ட் ரோடையும் ஒப்பிட்டுப் பார்த்தால் முதலில் முகத்தில் அறைவது அந்த நெருக்கடி. அழகான மரங்களைக் காணோம் என்பது ஒரு வருத்தம்!

    ReplyDelete
  2. சிங்கார சென்னையிலேயே, பிறந்து , வளர்ந்த எனக்கு சென்னை என்னும் வார்த்தையே இனிக்கும்.சென்னையின் பிறந்தநாளன்று பெயர்க் காரணங்கள் படிக்கக்கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது .

    ReplyDelete
  3. மெட்ராஸ் ஆன விவரம் மட்டும் தெரியும். மத்த விவரங்கள் அறியேன். கோடாவா.. அப்பவே இந்தி ஆதிக்கமா?

    ReplyDelete

  4. சென்னையின் நினைவு 1944-ம் ஆண்டு முதல் தொடர்கிறது. அப்போது திருவல்லிக்கேணி பைக்ராஃப்ட்ஸ் சாலையின் சந்து ஒன்றில் எங்கள் வீடு இருந்தது இன்னும் எட்டிப் போனால் ஒரு சேரி வரும். பசுக்களையும் எருமைகளையும் வீட்டின் முன் கட்டிப் பால் கறந்து தருவார்கள்காலையில் தயிர் விற்கும் பெண்கள் “ கூ” என்றுதான் கூவி விற்பார்கள். சென்னையில் ட்ராம் செர்வீஸ் இருந்தது. ஓ...! அது அந்தக் காலம்.

    ReplyDelete
  5. சென்னையை பற்றிய தகவல்கள் சுவாரஸ்யம்! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  6. நானும் ஒரு சென்னை வாசி. அதனால் சென்னை பற்றிய விவரங்கள் படித்திட எப்போதும் சுவாரசியம்தான்.

    ReplyDelete
  7. வாங்க ஶ்ரீராம், அப்போ 1963 ஆம் ஆண்டு மவுன்ட் ரோட் பார்த்தேனா இல்லையானு நினைவில் இல்லை. :)

    ReplyDelete
  8. ராஜலலக்ஷ்மி, நீங்க சென்னைவாசியா? சந்தோஷம்.

    ReplyDelete
  9. அப்பாதுரை, நவாப் ஆட்சிக்காலத்தில் உர்து கூட இங்கே பேசிட்டு இருந்திருக்காங்க. :)))) மாலிக்காஃபூர் காலத்திலேயே ஹிந்தி, உர்து பேசும் மக்கள் இங்கே வந்தாச்சே. :))))

    ReplyDelete
  10. வாங்க ஜிஎம்பி சார், ட்ராமை நான் இன்னி வரை பார்த்ததே இல்லை. :))) பார்க்கணும். :)

    ReplyDelete
  11. தளிர் சுரேஷ், வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  12. மாடிப்படி மாது, வரவுக்கு நன்றி. :)

    ReplyDelete
  13. ட்ராம் செர்வீஸ் இன்னும் கல்கத்தாவில் இருக்கிறதென்று நினைக்கிறேன்

    ReplyDelete
  14. நிறைவு தரும் நல்ல தகவல்

    ReplyDelete