எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, August 17, 2014

கண்ணன் வந்துட்டான்! :)இந்த வருஷம் கண்ணனை ஆறரைக்கே அழைத்தாச்சு.  அவனும் வந்துட்டான்.  கூப்பிட்ட குரலுக்கு வருபவன் அன்றோ!  உடம்பு இன்னும் ஒழுங்குக்கு வரலை.  ஆகையால் இம்முறை மாவு திரிச்சது/அரைச்சது மெஷினில். பயந்ததுக்கு நல்லாவே அரைச்சுக் கொடுத்தாங்க.  மிக்சியில் கஷ்டப்படலை. பக்ஷணங்களும் பேருக்குத் தான். மற்றபடி கொஞ்சம் போல் பாயசம், வடை, வெண்ணெய்,, தயிர், அவல், வெல்லம், பால் , வெற்றிலை,பாக்கு, பழங்கள், தேங்காயுடன் கண்ணனுக்குக் கொடுத்தாச்சு. பக்ஷணம் சீக்கிரம் தீர்ந்து போறதுக்குள்ளாக எல்லோரும் வந்து எடுத்துக்குங்க.உப்புச் சீடை, வெல்லச் சீடை கொஞ்சம் போல, பலகையில் இருக்கு. தட்டை, முறுக்கு, சீப்பி, கோளோடை ஆகியன.  எல்லாம் ஒரு கைப்பிடி இருக்கும் அளவே. முறுக்கு மட்டும் கொஞ்சம் கூட. :)  அதுவும் கோணிக்கொண்டிருக்கு. :)))))  கண்ணன் பரவாயில்லைனு சொல்லிட்டான். :)))))

இவ்வளவு நேரம் கணினியில் உட்கார்ந்திருந்தது இந்தப் படங்களை அப்லோட் செய்யத் தான்.  இனிமேல் நாளைக்காலை பார்க்கலாம்.  எல்லோரும் பக்ஷணம் எப்படி இருந்ததுனு வந்து மறக்காமல் சொல்லிடுங்க. :)))))

15 comments:

 1. பட்சணங்கள் அருமை. உடல் சிரமத்திலும் விட்டுக் கொடுக்காது செய்து விட்டீர்கள். சீடை நாள் வாழ்த்துகள்!

  ReplyDelete
 2. வெல்லசீடை போதுமான அளவு வைக்காததை கண்டனம் செய்கிறேன்!

  ReplyDelete
 3. வாங்க ஶ்ரீராம், பக்ஷணம் நல்லா இருந்ததா? தட்டையில் தான் கொஞ்சம் உப்பு தேவை! :)

  ReplyDelete
 4. வா.தி. வெல்லச் சீடை ஜாஸ்தி பண்ணலை. இருக்கிறதை எடுத்துக்குங்க. :)

  ReplyDelete
 5. ஸ்ஸ்ஸ்ஸ்... இப்பவே சாப்பிடனும்போல இருக்கு. உப்பு சீடை, முறுக்கு கொஞ்சம் எடுத்துக்கொண்டேன்.

  ReplyDelete
 6. ஏன் காரம் ஜாஸ்தி? இனிப்பு கம்மி? அதுவும் ஒண்ணே ஒண்ணு வெல்லச் சீடை மட்டும்!(நான் பாயசத்தை லிஸ்டுல சேக்கறதில்லை :)))!).. அப்புறம் கோளோடை ரெசிப்பி வேணும். பழசுல இருந்தாலும் சொல்லுங்க பாக்கறேன்.. சீப்பி அப்படித்தான் பாத்து தெரிஞ்சுக்கிட்டேன் :)))!!

  ReplyDelete

 7. கண்ணன் பேரைச் சொல்லி சொல்லி பிரசாதங்கள் புகைப் படங்களில் இருந்து கண்ணன் போல் நாமும் உண்பதாகப் பாவனை செய்வோம். சிரமப் பட்டும் செய்ததற்கு பாராட்டுக்கள்.

  ReplyDelete
 8. விச்சு, வரவுக்கும் பக்ஷணங்கள் சாப்பிட்டதுக்கும் நன்றி.

  ReplyDelete
 9. பார்வதி, தித்திப்பு பக்ஷணங்கள் பிடிக்கும் தான். ஆனால் உடம்பிலே சர்க்கரை ஆலை இருக்கிறச்சே சாப்பிட முடியாது. :))) கர்ச்சிக்காய் என்னும் தஞ்சை ஜில்லா ஸ்பெஷல் பக்ஷணம் ஒண்ணும், திரட்டுப்பாலும் பண்ணுவேன். இப்போ நாலைந்து வருடங்களாக அதெல்லாம் இல்லை. நிறுத்தியாச்சு. :))))

  ReplyDelete
 10. ஜிஎம்பி சார், இறைவன் பெயரைச் சொல்லித் தான் தினமும் சாப்பாடே. அவன் பிறந்த நாளில் அவனுக்கு இல்லாமலா? :))))

  ReplyDelete
 11. பார்வதி, கோளோடை ஒண்ணும் பெரிய விஷயமே இல்லை. சீடை மாவில் கடலைப்பருப்போ, தேங்காய்க் கீற்றுக்களோ சேர்க்காமல் வெறும் உளுத்தமாவு, உப்பு, பெருங்காயம், வெண்ணெய் சேர்த்துப் பிசைந்து மோதிரம் மாதிரி வளைத்து இரு நுனிகளையும் சேர்க்கணும். ரொம்ப சிம்பிள். :)))))

  ReplyDelete
  Replies
  1. ஓஹோ... கர்னாடகா கோடுபளே வை நீங்கள் கோளோடை என்று சொல்கிறீர்களா. நான் இதை யாரும் செய்து பார்த்ததே இல்லை.

   Delete
  2. நான் எங்கே கர்நாடகா பக்ஷணங்களைப் பார்த்தேன்! :) இங்கே ஒருத்தர் இருக்காங்க, அவங்க செய்வாங்களா என்னனு தெரியாது! இப்போல்லாம் முன்னை மாதிரிக் கொடுத்து வாங்குவதில்லையே! நான் கொண்டு கொடுத்தால் கூடக் கொலை செய்துட்ட மாதிரிப் பார்ப்பாங்க! பயம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா இருக்கும்! :)

   Delete
 12. நிறைய இல்லாவிட்டாலும் நிறைவாக பூஜை செய்தமைக்கு வாழ்த்துக்கள்! எனக்கு பிடிச்ச பட்சணங்களை கொஞ்சம் எடுத்துண்டேன்! நன்றி!

  ReplyDelete
 13. வாங்க சுரேஷ், தாமதமா வந்தாலும் பக்ஷணங்கள் கிடைத்தமைக்கு சந்தோஷம். :)

  ReplyDelete