எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, April 11, 2015

அனைவருக்கும் விருப்பமான விருப்பன் திருநாள்!








விருப்பன் திருநாள்  சுட்டி இங்கே!



பனிரண்டு மாதங்களும் திருவிழாக்காணும் ரங்குவுக்கு இந்த விருப்பன் திருநாள் எனப்படும் சித்திரைத் திருநாள் மிக முக்கியம்.  அதைக் குறித்த சுட்டி மேலே கொடுத்திருக்கேன்.  ஆன்மிகப் பயணம் பக்கத்தில் போய்ப் பார்க்கவும்.:) இப்போ இங்கே விருப்பன் திருநாள் ஆரம்பிச்சு இன்னிக்கு நம்ம ஊர் சுத்தி நம்பெருமாள் கொடியாலம் சேஷாத்ரி ஐயங்கார் கல்யாண மண்டபத்தில் மண்டகப்படி கண்டருளினார். (இந்தக் கல்யாண மண்டபத்தில் தான் நம்ம "எங்கள்" ஆசிரியர்கள் கல்யாணத்துக்கு வந்திருந்தனர்.) காலையிலே இருந்து போக எண்ணம்.

ஒரு வழியா சாயந்திரமாக் கிளம்பிப் போய்ப் பார்த்துட்டு வந்தோம்.  செல்லில் முடிந்தவரை படங்கள் எடுத்தேன்.  மார்பில் நீலக்கல் ஆபரணம் அணிந்திருக்கிறார்.  தாயார் இருப்பதாக ஐதீகமாம். கிரீடம் சூட்டிக் கொண்டு நின்ற திருக்கோலம். நன்றாக நிதானமாகப் பார்த்தோம்.நிறைய மண்டகப்படி போயிருக்கார் நம்ம ரங்கு.  ஆனாலும் இந்த கிரீடம் காரணமாகவோ என்னமோ தெரியலை, ஒல்லியாய் இளைச்சுப் போய்க் காட்சி அளித்தார். பார்த்தாலே பாவமா இருந்தது.  சாயங்காலம் ஆறுமணிக்கு  கற்பக விருக்ஷம் வாஹனம்னு நினைக்கிறேன். அலங்கரித்த பல்லக்கு வெளியே நிற்கிறது.  நான் நினைத்தபடி கூட்டம் அதிகம் இல்லை. நல்ல சுவாமி தரிசனம் ஆனதோடு துளசி, தீர்த்தம், சடாரிப் பிரசாதங்களும் கிடைத்தன.  அடுத்த சனிக்கிழமை தேர். பார்ப்போம் இந்தத் தேராவது பார்க்க முடியுமானு! தெரியலை! 

11 comments:

  1. தேரத்திரு நாளுக்குக்காலங்காரத்தாலே போயவிடுங்கோ.விருப்பன நாளைப்போயப பாரக்கிறேன.

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம்ம், 18 ஆம் தேதி தேர்னு சொல்றாங்க. அன்னிக்கு அமாவாசை! பித்ரு தர்ப்பணம் முடியும் முன்னே போக முடியாது! பார்ப்போம், நமக்கு என்ன கொடுக்கணும்னு ரங்குவுக்குத் தெரியுமே! :)

      Delete
  2. திருவிழா! கொண்டாடுங்கள்.

    அடேடே! அந்தத் திருமண மண்டபமா? ஆம். இதுபோல மண்டகப்படி நடத்தும் அளவுதான் இருக்கும் அந்த மண்டபம்.

    ReplyDelete
    Replies
    1. இங்கே மாசாமாசம் திருவிழா தான்! :) அதிலும் தை மாசம் ஒரு தேர், மாசியிலே தெப்பம், பங்குனியிலே ஒரு தேர், சித்திரையிலே சித்திரைத் தேர்னு மார்கழி மாசத்திலே வைகுண்ட ஏகாதசியிலே இருந்து அமர்க்களப்படும். மண்டகப்படி நடத்தும் மண்டபங்கள் பெரிதாகவும் இருக்குமே! :)))) பணம் கட்டி அழைத்தால் ரங்கு நம்ம வீட்டுக்குக் கூட வருவார். இந்த வருஷம் சித்ரா பௌர்ணமிக்கு அழைக்கலாமோனு ஒரு எண்ணம். குடியிருப்பு வளாகத்திலே எல்லோரும் ஒத்துக்கணும். பக்கத்திலேயே ஒரு வீட்டில் மண்டகப்படிக்கு வரார். ரங்குவைக் கிட்டே நின்னு பார்க்கலாம். நேத்தியும் அப்படித் தான் பார்த்தோம்.

      Delete
  3. நேற்று கற்பக விருக்ஷம் மாமி.

    இங்கே வீதியில் ஒரு மட்டை... அதனால் புறப்பாடு இல்லை என்று கேள்விப்பட்டேன்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், கற்பக விருக்ஷம் தான். யாரோ சேஷ வாஹனம்னு சொல்லிட்டிருந்தாங்க. ஆனால் அங்கே கற்பக விருக்ஷம் தான் வைச்சிருந்தது. :)))) புறப்பாடு இல்லையா? :( அப்புறமா எப்போ எப்படி ரங்கு உள்ளே வந்தார்?

      Delete
  4. தேரை பார்த்து விட்டு பதிவு செய்யுங்கள்... காத்திருக்கிறோம்...

    ReplyDelete
    Replies
    1. பார்க்கலாம் டிடி, தேர் பார்க்க ரங்கு அழைக்கணுமே! :)

      Delete
  5. விருப்பன் திருநாள்......

    சித்திரைத் தேர் ஓரிரு முறை பார்த்ததுண்டு....

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம்ம்ம், இந்த வருஷமாவது பார்க்கணும்!

      Delete
  6. தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்!

    ReplyDelete