எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, April 14, 2016

எல்லோருக்கும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்!

 ஶ்ரீராமர் க்கான பட முடிவு
ஶ்ரீராமர் க்கான பட முடிவு


என்னத்தைச் சொல்றது?  என்னென்னமோ பண்ணிச் சாப்பிட்டுட்டு இப்போப் பாயசம் வைக்கவே யோசனை. :))) என்னோட பிறந்த வீட்டிலே நிபந்தனைகள் எதுவும் இல்லை.  எந்தச் சமையலும் ஓகே.  சில சமயங்களில் அவியல், சாம்பார் இருக்கும்.  பெரும்பாலும் பிட்லை, மோர்க்குழம்பு இருக்கும்.  பிட்லையை மதுரைப் பக்கம் கொஞ்சம் கெட்டியாகக் கூட்டும் இல்லாமல் குழம்புனும் சொல்ல முடியாமல் நிறையக் காய்களைத் தானாகப் போட்டுப் பண்ணுவாங்க.  முக்கியமாப்பாகற்காய் அல்லது கத்திரிக்காய்.  எப்போவானும் சேனைக்கிழங்கும், காராமணிக்காயும் போட்டுச் செய்வதுண்டு.  மற்றவற்றில் பிட்லை செய்வதில்லை.  பிட்லை செய்தால்   மோர்க்குழம்பு முக்கியமா வேணும்.  அப்புறமா வடை முப்பருப்பு வடை தான் தென் மாவட்டங்களிலேயே பிரபலம்.  வேப்பம்பூவைப் புதிதாகப் பறித்து வந்து நெய்யில் பொரித்து, (அப்ப்பா என்ன மணம் வீசும்) மாங்காய்ப் பச்சடி செய்து அதில் போடுவாங்க.  அதோடு கடலைப்பருப்பு, தேங்காய் சேர்த்தோ வெறும் தேங்காயிலோ அல்லது பால் போளியோ எதுவோ ஒண்ணு கட்டாயம் இருக்கணும்.  பாயசம்னா அது தேங்காய்ப் பால் விட்டுச் செய்யும் பாயசம் தான் அநேகமா.  செய்முறை தனியாத் தரேன்.

இதிலே யுகாதி வேறே அப்பா வீட்டிலே கொண்டாடும் வழக்கம் உண்டா!  அன்னிக்கும் போளி இருக்கும்.  யுகாதிக்குப் பால் போளின்னா சித்திரை வருஷப் பிறப்புக்குக் கடலைப்பருப்பு, தேங்காய் அல்லது வெறும் தேங்காய் மட்டுமே போட்ட போளி இருக்கும். முப்பருப்பு வடைக்கு து.பருப்பு, க.பருப்பு, உபருப்பு மூணையும் ஊற வைச்சு அரைப்பாங்க.


து.பருப்பு ஒரு கிண்ணம், க.பருப்பு அரைக்கிண்ணம், உ.பருப்பு இரண்டு டேபிள் ஸ்பூன் .  மூணையும் நல்லாக் களைஞ்சு ஊற வைக்கணும்.  ஊறினால் எண்ணெய் குடிக்கும்னு பயமே வேண்டாம்.  எண்ணெயெல்லாம் குடிக்காது.  நான் உறுதிமொழி கொடுக்கிறேன்.  அப்புறமா ஊற வைச்ச பருப்பை நீரை வடிகட்டிவிட்டு மி.வத்தல், நான்கு, ப.மிளகாய் இரண்டு, (காரம் கொஞ்சம் குறைச்சே போட்டுக்குங்க)உப்பு, பெருங்காயம் சேர்த்து அரைக்கணும். நைசா அரைக்கக் கூடாது.  பருப்பு ஒன்றிரண்டாக இருத்தல் நல்லது.  அப்புறமா அதை எடுத்து ஒரு வாயகன்ற பாத்திரத்தில் போட்டு. சின்னதாய் ஒரு பச்சை மிளகாயை நீள வாட்டில் நறுக்கி உள்ளே உள்ள விதையை எல்லாம் எடுத்துட்டுப் பொடியாக நறுக்கி வடைமாவில் சேர்க்கவும்.  இஞ்சி ஒரு அங்குலத் துண்டு தோல் சீவிப் பொடியாக நறுக்கிச் சேர்க்கவும்.  கருகப்பிலை, கொத்துமல்லி சேர்க்கவும். கொஞ்சம் போல் பாசிப்பருப்பு சுமார் ஒரு டேபிள் ஸ்பூன் எடுத்துக் களைந்து வடைமாவில் சேர்க்கலாம்.  வடை மொறு மொறுவென வரும்.  எண்ணெயைக் காய வைத்து வடைகளாகத் தட்டிச் சாப்பிடுங்க.  அப்புறமா போளி இதோ இங்கே சொல்லி இருக்கேன் பாருங்க.


http://tinyurl.com/c6src6k  இந்தச் சுட்டியிலே போய்ப்பாருங்க.  நம்மபேரிலே வந்திருக்கும். வேணும்னா அப்புறமாத் தனியாத் தரேன்.





இதுவே மாமியார் வீட்டில் சமையலில் மாறுதல் உண்டு.  அங்கே பாயசம் அநேகமாய்ப் பாசிப்பருப்புப் பாயசம் தான்.  தயிர்ப்பச்சடி, பாசிப்பருப்புக் கோசுமல்லி,(இது உப்புப் போட்டது), கடலைப்பருப்புக் கோசுமல்லி(இது சர்க்கரை சேர்த்தது) இரண்டும் கட்டாயம் இடம் பிடிக்கும்.  எங்க மதுரைப் பக்கம்  நாள், கிழமைக்குக் கோசுமல்லி செய்யும் வழக்கம் இல்லை.  மாமியார் வீட்டில் மாங்காய்ப் பச்சடிக்குப் பதிலாகப் புளியைக் கரைத்து உப்புச் சேர்த்துக் காரப்பொடி, வெல்லம் சேர்த்துக் கொதிக்க விட்டு அதிலே தான் வேப்பம்பூவை வறுத்துச் சேர்ப்பாங்க.  காய்கள் எது வேண்டுமானாலும் இருக்கும்.  முட்டைக்கோஸ், கொத்தவரை, அவரைனு கிடைக்கும் காயைச் செய்வாங்க.  இங்கே அநேகமாய் சாம்பார் தான்.  அரைத்துவிட்டாலே பிட்லைனு சொல்லுவாங்க.  வெண்டைக்காய் அரைத்து விட்ட சாம்பாரைப் பிட்லைனு சொல்வாங்க. மற்றபடி போளி, ஆமவடை உண்டு.  ஆமவடைன்னா இங்கே நிஜம்மாவே ஆமை ஓடு மாதிரி வடை கெட்டியாக இருக்கும்.  தனிக் கடலைப்பருப்பைக் கொஞ்ச நேரமே ஊற வைச்சு உப்புக் காரம் சேர்த்து அரைச்சுக் கெட்டியாக எடுத்து வடை தட்டுவாங்க.  வடையைக் கையால் கிள்ளிச் சாப்பிட முடியாது.  அதைப் பின்னர் வெந்நீரிலே ஊற வைச்சுச் சாப்பிடக் கொடுப்பாங்க அவங்க எல்லாருக்கும் அதனால் தான் பல்லெல்லாம் கெட்டியாக இருக்கும். :))) நம்மை மாதிரி இல்லை.

சரி இப்போத் தேங்காய்ப் பாயசம் செய்யும் விதம் பார்க்கலாமா?

பச்சரிசி அரிசி ஒரு சின்னக் கிண்ணம் எடுத்துக் களைந்து நெய்யில் பொரித்துக் கொண்டு குருணையாக உடைத்துக் கொள்ளவும். தேங்காய் நடுத்தர அளவில் ஒன்று. உடைத்துத் துருவிக் கொள்ளவும்.  கால் கிலோவுக்குக் குறையாமல் வெல்லம்(பாகு) வேண்டும்.  கூடவே இருந்தாலும் நல்லாவே இருக்கும்.  ஏலக்காய்த் தூள், முந்திரிப்பருப்பு, வறுக்க நெய் அரைக்கிண்ணம்.

குருணையாக உடைத்த அரிசியைத் தேவையான நீர் மட்டும் விட்டு  நன்கு கரைய விடவும்.  குழைய வேகும்போது துருவிய தேங்காயில் இரண்டு டேபிள் ஸ்பூன் எடுத்து வைத்துவிட்டு மிச்சத் துருவலை மிக்சியில் போட்டு நன்கு அரைக்கவும்.  பால் எடுக்கவும் தனியாக வைக்கவும்.  இரண்டாம் முறையும் இதே போல் அரைத்துப் பால் எடுக்கவும்.  அந்தப் பாலை வேகும் அரிசியில் சேர்க்கவும்.  மூன்றாம் பால் எடுக்க வருதானு பார்க்கவும். வந்தால் எடுத்து அதையும் வேகும் அரிசியில் சேர்க்கவும்.  நன்கு சேர்ந்து வரும்போது வெல்லத்தூளைச் சேர்க்கவும்.  வெல்ல வாசனை போகக் கொதிக்க விடவும்.  நன்கு கொதித்து வந்ததும், தனியாக வைத்திருக்கும் முதல் பாலைச் சேர்க்கவும்.  நெய்யில் முந்திரிப்பருப்பு வறுத்துப் போட்டுத் தனியாக வைத்திருக்கும் பச்சைத் தேங்காய்த் துருவலையும் ஒருமுறை நெய்யில் பிரட்டிவிட்டுப் பாயசத்தில் சேர்க்கவும்.  பால் எடுத்த சக்கைத் தேங்காய் பயன்படாது.  உங்களுக்குத் தேவையானால் அதையும் இந்தப் பாயசத்திலேயே சேர்க்கலாம்.  ஏலத்தூள் சேர்க்கவும்.  பாயசம் சூடாகச் சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.  அதோடு பாயசம் நீர்க்க இருக்கக் கூடாது.  கையால் எடுத்துச் சாப்பிடும் பதத்தில் கெட்டியாக, அதே சமயம் சர்க்கரைப் பொங்கல் போல் ரொம்பக் கெட்டியாகவும் இருக்கக் கூடாது.

இந்தப் பாயசம் தான் தமிழ் வருஷப் பிறப்புக்கு ஸ்பெஷல் பாயசம்னு செய்துட்டு இருந்தேன்.  இப்போ ஒரு ஸ்பூன் பாயசம் வைச்சாலே பெரிய விஷயம். :)))))

இதைத் தவிர வீடு சுத்தம் செய்து, மாவிலைத் தோரணங்கள் கட்டி, கதவுகள், நிலைக்கதவு, வீட்டின் பயன்பாட்டுக்கான முக்கியப் பொருட்கள் எல்லாத்துக்கும் சந்தனம், குங்குமம் வைச்சு, கூரையில் கூரைப்பூ வைச்சு, பானகம், நீர் மோர், சுண்டல், வடைப்பருப்பு வைத்து பஞ்சாங்கத்தோடு ஸ்வாமிக்கு சமைத்தவற்றையும் வைத்து நிவேதனம் செய்வார்கள்.  பெரிய பெரிய கோலங்களாகப் போடப்பட்டிருக்கும்.  புதுத்துணி உடுத்தலும் உண்டு.  கேரளாவில் விஷுக்கனிக்குப் பட்டாசு வெடித்தலும் உண்டு.


போளிகளும் வடைகளும் நம்ம கைவண்ணம் தான்.  நம்ம வீட்டிலே நான் செய்தவையே.  அதனால் எல்லாரும் வந்து எடுத்துக்கோங்க. :)))))  ஆனால் ஒரு விஷயம். எல்லாம் 2013 ஆம் வருடம் பண்ணினவை. பதிவே அப்போப் போட்ட பதிவைத் தான் மீள் பதிவாப் போட்டிருக்கேன். இந்த வருஷம் வெறும் பாயசமும், வடையும் தான்! படம் எடுக்கலை! போளி இல்லையா, படம் எடுக்கணும்னு தோணலை. பாயசம், மாங்காய்ப் பச்சடி, வாழைக்காய்ப் பொடிமாஸ்,  சாம்பார், ரசம், ஆமவடை. இவை தான் இன்றைய சமையலில் இடம்பெற்றவை. அதுவும் வடை  மொத்தமே எட்டு அல்லது பத்துக்குள் தான் வரும்படி மாவு அரைச்சிருக்கேன். நாளைக்கு வேறே ஶ்ரீராமருக்கு உளுந்து வடை பண்ணணுமே! மொத்தமா ஆறு அல்லது எட்டு வடை தான் இன்னிக்கு! காக்காய்க்குக் கூடப் போடலை, மறந்திருக்கேன். பாயசம் மட்டும் கொடுத்தேன் காக்காய்க்கு!

நாளைக்கு நிவேதனம் ஶ்ரீராமர் படத்தோடப் போட முயல்கிறேன். இன்று போட்டிருக்கும் ராமர் படம், கீழுள்ள விக்ரஹங்கள் எல்லாம் ஏற்கெனவே போட்டதில் இருந்து எடுத்தது. ஹிஹிஹிஹி!

அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்!

19 comments:

  1. எண்ணெயெல்லாம் குடிக்காது// வடைக்கு வாயா இருக்கு, குடிக்க?
    பதிவே அப்போப் போட்ட பதிவைத் தான் மீள் பதிவாப் போட்டிருக்கேன்.// அதானே எப்பவுமே வழக்கம்? :-))

    ReplyDelete
    Replies
    1. ஆஹா, தம்பி, முதல் போணியா? ஹிஹிஹி, தெரிஞ்சிருந்தால் புது வடையோட படமே போட்டிருப்பேனே! :)))
      //அதானே எப்பவுமே வழக்கம்? :-))//

      க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், அநியாயமா இல்லையோ! எத்தனை முறை சுடச் சுடப் பதிவு போட்டிருக்கேன். அப்போல்லாம் வரலையாம்! இன்னிக்குனு பார்த்து வந்துட்டு! ஹிஹிஹிஹி, உங்க அதிர்ஷ்டம்! :P :P :P :P

      Delete
  2. இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துகள்.

    பிட்லையில் இவ்வளோ காய் ஒருசேரப் போட்டா? முயற்சித்ததில்லை. பிட்லேன்னா பாகற்காய்தான் வாய் கேட்கும்!

    சமையல், போளி வடைகளில் இவ்வளவு நுண்ணிய வித்தியாசங்களா? நாங்கள் ஏதோ போளி வடை தட்டினோமா, பாயசம் செய்தோமான்னு விட்டுடுவோம்!!

    ReplyDelete
    Replies
    1. என்னோட பிறந்த வீட்டில் பிட்லைன்னா அது கூட்டாகவும் இல்லாமல், சாம்பார் மாதிரியும் இல்லாமல் இருக்கும். காய்கள் இருந்தால் தான் பிட்லைனே சொல்வோம். :) ஆமாம், நுண்ணிய வித்தியாசங்கள் தான். கொஞ்சம் மாறினாலும் "என்ன அங்கே சத்தம்!" னு குரல் வரும்! :)))))

      Delete
  3. SUPER VADAI. SOMEDAY I SHOULD COME AND HAVE THAT.

    ALL OUR BEST THAMIZH PUTHTHANDU VAAZHTHTHUKKAL.
    இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்!

    SUBBU THATHA

    ReplyDelete
    Replies
    1. ஹூம், திருச்சி வரை வந்துட்டு இங்கே வராமல் போயிட்டீங்க! ஒரு தொலைபேசி அழைப்புக் கொடுத்திருக்கலாம்! :( இனிமே எப்போ வருவீங்களோ!

      Delete
  4. தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள் சகோ...

    ReplyDelete
    Replies
    1. நன்றி அஜய் சுனில்கர்!

      Delete
  5. பதிவைப் படித்ததும், சுவையான பதார்த்தங்களுக்காக, அடிக்கடி வலைப்பதிவர் சந்திப்பு உங்கள் அபார்ட்மெண்டிலேயே வைத்தால் நல்லது போல் தோன்றுகிறது. மேடம் அவர்களுக்கு, எனது உளங்கனிந்த தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வாங்க வாங்க, உடல் நலம் மற்றும் மன உளைச்சல் இல்லாமல் இருந்திருந்தால் போளியும் செய்திருப்பேன். சாப்பிடத் தான் ஆளில்லை. அதுவே கொஞ்சம் அலுப்பாகி விடுகிறது! :(

      Delete
  6. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் அது சரி, தை மாதம் தான் வருடப் பிறப்பு என்று தமிழ் ஆர்வலர்கள் சிலர் கூறுகிறார்களே. எந்த நாளானாலும் சரி தின்பதற்குத்தான் முக்கியத்துவம் எங்கள் வீட்டில் நாளும் கிழமையுமானால் அவியல் இல்லாத சாப்பாடு எற்கப்படாதது, இந்தத் தேங்காய்ப் பாயசத்தை எங்கள் பக்கம் இடித்துப் பிழிந்த பாயசம் என்பார்கள்

    ReplyDelete
    Replies
    1. தை மாசம் புத்தாண்டு இல்லை. அதைக் குறித்துத் தனியாப் பார்க்கலாம் ஜிஎம்பிசார். மற்றபடி புத்தாண்டு வாழ்த்துகள் உங்களுக்கும். அவியல் எங்க வீட்டிலும் செய்வது உண்டு.

      Delete
  7. உங்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்து(க்)கள். ரங்க்ஸ் ஊரில் இல்லை. அதனால் ரொம்ப மெனக்கெடலை. மூணு போளி, பழங்கள் அம்புட்டுதான். வீட்டுலே காய்ச்ச கொய்யாவும் ராஸ்பெர்ரியும்தான் ஸ்பெஷல். சமையலும் எனக்குமட்டும் என்பதால் பருப்பு சாதம் & தயிர்.

    ராமநவமி எனக்கு ரொம்பப் பிடிக்கும். ரொம்ப சிம்பிள் & ஸ்வீட் நம்ம ராமர்:-)

    ReplyDelete
    Replies
    1. வாங்க துளசி, நாளைக்கு ராமர் வருவார். மத்தபடி போளியெல்லாம் பண்ணலை! உடம்பும் முடியலை! சாப்பிடறதுக்கும் யாரும் இல்லையே! :)

      Delete
  8. இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துகள் சகோ வடை இரண்டு மட்டும் எடுத்துக்கொண்டேன் தேங்காய்ப் பாயாசம் 2 தேக்கரண்டி டேஸ்ட் பார்த்தேன் நன்றி

    ReplyDelete
    Replies
    1. நல்லவேளையா வடை தீருமுன்னர் எடுத்துக் கொண்டீங்களே! :)

      Delete
  9. எங்கள் வீட்டில் கேரளத்து சத்யா...அவியல், சாம்பார்...என்று

    எங்கள் இனிய புத்தாண்டு விஷு வாழ்த்துகள்!

    கீதா: சேம்தான் எங்கள் வீட்டில்....போளி மங்களூர்/கேரளா போளி சர்க்கரைப் போளி...பருப்பு வடைதான்...கேரளத்து + தமிழ்நாட்டுச் சமையலாக இருக்கும் ஆனால் மாமியார் வீட்டில் வித்தியாசம் உண்டு...நான் இப்போது எல்லாம் க்லந்து கட்டி ஒவ்வொரு மாநிலத்து ஐட்டமும் ஆனால் மாங்காப்பச்சடி கண்டிபாக உண்டு..

    நல்ல விவராமாக மெனுக்களுடன் கருத்து அடித்து அது போகாமல் படுத்திட ...மீண்டும் அடிக்க முடியாமல் இதோ இப்போது இந்தக் கருத்து....

    ReplyDelete
  10. அருமையான பதிவு

    இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்

    ReplyDelete