எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, September 22, 2018

கோவிந்தா! கோவிந்தா! வெங்கடரமணா! கோவிந்தா!


இன்றைய சமாராதனையில் வைக்கப்பட்ட வெங்கடாசலபதி படம் பெரிய அளவில் இருப்பது யாரோ பரிசாகக் கொடுத்தது. சின்னப் படம் தான் ஒரிஜினல் படம் என்பார்கள். என் பிறந்த வீட்டில் இந்தப் படம் பெரிய அளவில் இருப்பதையே சமாராதனைக்கு வைப்பாங்க! இங்கே இரண்டையும் வைச்சிருக்கோம். எல்லோரும் உட்கார்ந்திருந்ததால் படம் எடுக்க முன்னால் போக முடியலை. அதோடு தீபாராதனை சமயம் வேறே!







அதுக்கு அப்புறமா மற்ற உம்மாச்சிங்களுக்கும் நிவேதனம். சாதம், பருப்பு, சர்க்கரைப் பொங்கல், எள் சாதம், உளுந்துவடை! 
*********************************************************************

20 ஆம் தேதியன்னிக்கு ஏடிஎம் (அப்பாவி தங்கமணி என்னும் பெயரில் வலைப்பக்கம் வைச்சிருக்கார்) தன் கணவரோடு வந்தாங்க!  முன்னரே ஒரு தரம் வந்தாங்க. ஆனால் அப்போ சஹானா பிறக்கலை. சஹானா பிறந்தப்புறமா வர முயன்று வர முடியலை. இப்போத் தான் வந்தாங்க. ஏற்கெனவே சொல்லி இருந்தும் மறந்திருக்கேன். நல்லவேளையாக் கிளம்பினதுமே வாட்சப்பில் தகவல் கொடுத்திருந்தாங்க! சரி, உடனே என்ன செய்யறதுனு யோசிச்சேன். அவங்க வரப் போறது மத்தியானம் என்று வேறே சொல்லி இருந்தாங்க. அன்னிக்கு யதேச்சையா நம்ம ரங்க்ஸோட ஆங்கிலத் தேதிப் ப்றந்தநாள். அதுக்கு சிம்பிளா ஏதேனும் இனிப்புப் பண்ண நினைச்சிருந்தேன். இப்போக் குழந்தை முதல் முதலா வராளேனு நினைச்சுத் தேங்காய் நிறைய இருந்ததால் பர்ஃபி பண்ணலாம்னு நினைச்சு பர்ஃபி பண்ணினேன். அதற்கான படங்கள் கீழே. பைன்டிங்குக்காகக் கொஞ்சம் போல் கடலை மாவு சேர்த்துக் கொண்டேன். ஆனால் ஏடிஎம் ஏற்கெனவே டயட்டில் இருக்கும் விஷயமும் எனக்கு மறந்து போச்ச்ச்ச்ச்! அவங்க சாப்பிடவே இல்லை. அவங்க ரங்க்ஸும் சஹானாவும் சாப்பிட்டாங்க. காரத்திற்கு வீட்டில் ஏற்கெனவே முதல்நாள் தான் வாங்கி வந்திருந்த காராசேவ் கொடுத்தோம். ஏடிஎம் அதையும் சாப்பிடலை. போனால் போகுதுனு காஃபி மட்டும் குடிச்சாங்க! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்  :)

எங்களுக்குப் பரிசெல்லாம் வாங்கிக் கொடுத்திருக்காங்க ஏடிஎம். யதேச்சையா அன்று அவர் பிறந்தநாள் என்பது தெரிந்து கொண்டு அவங்களுக்கு ரொம்ப சந்தோஷம். தாத்தாவுடன் நெருங்கிப் பழகினாள் சஹானா! ஐபாடில் அவளுக்கு விளையாட்டுகள் காட்டினார் தாத்தா! :) அந்தச் சில மணி நேரங்கள் மறக்க முடியாத நேரம். ஒரு குழந்தை வீட்டிற்கு வந்துட்டால் வீட்டின் சூழ்நிலையே மாறிப் போயிடுது.



நெய்யில் துருவிய தேங்காய்த் துருவல்



கடலைமாவையும் நெய்யில் தயிர் பதத்துக்கு பொரித்தேன். 


ஜீரா கொதிக்கிறது. 



கடலைமாவு, தேங்காய்க் கலவையைப் போட்டதும் எடுத்தது. கடலைமாவை முதலில் போட்டுக் கொண்டு கொஞ்சம் கிளறிய பின்னர் தேங்காய்த் துருவலைச் சேர்க்கலாம். அப்போத் தான் கடலைமாவும் தேங்காயும் நன்கு சேரும். 


கிளறும்போதெல்லாம் படம் எடுக்கமுடியலை! தட்டில் கொட்டினதும் தான் எடுத்தேன். சின்ன உருளியில் கிளறி இருந்திருக்கலாம். இந்த அலுமினியம் சட்டியில் அடியில் கொஞ்சம் சிவந்து விட்டது! உருளியில் பொங்கி வழியுமோனு சந்தேகமா இருந்தது. பெரிய உருளி இதுக்கு அதிகம்! :)




துண்டங்கள் போட்டதும் எடுத்த படம்!

இதைத் "திங்க"ற கிழமைக்கு வைச்சுக்கலாமோனு நினைச்சேன். அப்புறமாப் போட்டுட்டேன். அதுக்கு இன்னும் நிறைய இருக்கு! அவற்றைப் போடமுடியுமானு பார்க்கணும். எல்லோரும் பர்ஃபி, சர்க்கரைப் பொங்கல், வடை, எள் சாதம் எல்லாம் எடுத்துக்குங்க! 

62 comments:

  1. எல்லோரும் பர்ஃபி எடுத்துக்குங்க... எப்படி படத்தை செல்லில் எடுத்துக்கொள்ளவா ?

    ReplyDelete
    Replies
    1. இஃகி, இஃகி, கில்லர்ஜி, செய்ங்க! :))))))

      Delete
  2. கடலைமா பைண்டிங்க்கு சேத்தீங்களா? நான் ரவை சேர்த்திருக்கேன்.

    ReplyDelete
    Replies
    1. மாமியார் செய்வாங்க ரவை சேர்த்து நெல்லைத் தமிழரே. ஒருமுறை மாமியாருக்கும் ரவை சேர்த்தப்போ ரவை வெந்து போய் சொஜ்ஜி அப்பக் கேசரி போல வந்துடுத்து! நான் ரிஸ்கே எடுப்பதில்லை. ஒரு கரண்டி கடலைமாவு! :)))))

      Delete
    2. என் பாட்டி அம்மா ரவையும் சேர்த்துச் செய்திருக்காங்க அப்புறம் நானும் ரவை சேர்த்துச் செய்திருக்கேன். என் அம்மா கடலைமாவு சேர்த்தும் செய்வார் நானும். ரவை கொஞ்சம் கடலைமாவு கொஞ்சம் சேர்த்தும் செய்திருக்கேன்...இதில் கொஞ்சம் காஷ்யூ அரைத்துச் சேர்த்தும் செய்யலாம்...கடைசில அது தேங்காய் பர்ஃபினெ இல்லாம எல்லாம் கலந்த ஒரு கலவை ஸ்வீட்...ஹா ஹா ஹா

      கீதா

      Delete
    3. அதென்னமோ எனக்கு ரவை சேர்த்தால் வாயில் கடிபடுகிறாப்போல் தோன்றும். மற்றபடி தேங்காயோடு பாதாம், பிஸ்தா, முந்திரியையும் சேர்த்து அரைத்தும் செய்திருக்கேன். அதெல்லாம் தீபாவளி சமயங்களில்! என் தம்பி மனைவி எல்லாமும் சேர்த்துப் பாலும் விட்டு செவன் கப் கேக் என்று செய்வாள். :) அந்த கேக் நம்மவருக்குப் பிடிக்காது! :))))

      Delete
  3. நிவேதனம் செய்ததை ஜூம் பண்ணலையா? ஓ.. உங்களுக்கு அந்த தெக்கினிக்கு தெரியாதோ?

    ReplyDelete
    Replies
    1. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், நிவேதனம் பண்ணறச்சே உள்ளே போக முடியலை! 3,4 பேருக்கும் மேல் உட்கார்ந்திருக்காங்க. பின்னால் கணினி டேபிள் வேறே! அறைக்கு வெளியே தான் நின்னேன். பக்கவாட்டில் எடுத்த படம் தான்! நேரே எடுக்க முடியலை! அதே நிவேதனம் தானே வீட்டில் உள்ள உம்மாச்சிங்களுக்கும். அதனால் அங்கே எடுத்தேன். அப்படியும் பருப்புக் கிண்ணத்தைத் தூக்கி வைச்சப்புறமாத் தான் நினைவே வந்தது. :))))

      Delete
  4. ஏ டி எம்முக்கும் சஹானாவுக்கும் வாழ்த்துகள். அருமையான சிறுகதை எழுத்தாளர் ஏ டி எம்.

    முகநூலில் திருமதி வெங்கட் பக்கத்தில் அவர்களின் புகைப்படங்கள் கண்டேன்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், ஆதி போட்டிருந்தாங்க. நான் வெள்ளிக்கிழமை வேலைகளில் எப்போவும் போல் பிசி! அதோடப் பதிவு எழுத நேரம் வேறே இல்லை. அவங்களைப் படம் எடுக்கலாமா வேண்டாமானு யோசிச்சு எடுக்காமல் விட்டுட்டேன். அவங்களும் எடுக்கலை! மறந்துட்டாங்களாம். இத்தனைக்கும் போனமுறை மாதிரித் தலைவிரி கோலமா இல்லாமல் ஒழுங்காத் தலையெல்லாம் வாரிக் கொண்டு இருந்தேன். :))))))

      Delete
  5. பர்பி நன்றாக வந்திருக்கிறது போல.. பல வருடங்களுக்கு முன்னால் எங்கள் வீட்டில் செய்த பர்பியை டம்ளரிலும் கப்பிலும் ஊற்றிக் குடித்த அனுபவம் உண்டு எங்களுக்கு!

    ReplyDelete
    Replies
    1. ஸ்ரீராம், வெறும் தேங்காய் மட்டுமே போட்டுக் கூடப் பண்ணுவேன். ஆனால் இப்போல்லாம் கொஞ்சம் கடலைமாவு சேர்த்தே பண்ணறேன். :) நல்லாத் தான் இருந்தது, விநியோகம் ஆயாச்சு! :)))) கடலைமாவு சேர்த்தால் தம்பளரில் ஊத்திக் குடிக்க வேண்டாம். :)))) சில சமயம் வெறும் தேங்காய் மட்டும் போட்டுப் பண்ணினால் உதிர்ந்தும் போய் விடுகிறது. நான் தேங்காயை நன்கு அரைத்துப் பின்னர் நெய்யில் வதக்குவேன் என்றாலும் சில சமயங்களில் சரியா வரும்!

      Delete
    2. தேங்காயை அரைத்து விடுவீர்களா? நான் துருவலை அப்படியே போடுவேன். அப்படிப் போடக்கூடாதோ...

      Delete
    3. >>> எங்கள் வீட்டில் செய்த பர்பியை டம்ளரிலும் கப்பிலும் ஊற்றிக் குடித்த ... <<<

      திங்க பதிவில் போடலாம்!..ன்னு
      ஐடியா ஏதும் உண்டா அவ்விடத்தில்!...

      Delete
    4. கேட்க சந்தோஷமா இருக்கு. எனக்கு பர்பி பல சமயங்களில் உதிர்ந்துவிடும். கிராண்ட் ஸ்நாக்ஸ் போல ஏகப்பட்ட ஜீனியை நான் போடுவதில்லை, எக்மோர் நெல்லை ஸ்வீட்ஸ் போல ஜீனியை ஸ்பூனில் போடுவதுமில்லை. உங்களுக்கே சில சமயம் சொதப்பியிருக்கும்போது எனக்கு ஹேப்பிதான். ஹாஹா

      Delete
    5. ஶ்ரீராம், தேங்காயை அரைத்துக் கொண்டால் பைன்டிங்கிற்கு எதுவும் சேர்க்க வேண்டாம். தனித் தேங்காய் பர்ஃபி எனில் அரைத்தே பண்ணுவேன். சில தேங்காய் ரொம்ப முற்றலாக இருந்தால் அரைத்தால் எண்ணெய் கசிந்து கொண்டு என்னதான் கிளறினாலும் கொஞ்சம் உதிரத் தான் செய்யும். இது முத்தல் தேங்காய்த் துருவல்! ஆகவே பைன்டிங்கிற்காகக் கொஞ்சம் போல் கடலைமாவு சேர்த்தேன். பாலும் சேர்க்கிறார்கள். அதிலே தேங்காய் வெந்து விடுவது போல் எனக்குத் தோன்றும்.

      Delete
    6. நல்ல ஐடியா துரை! ஸ்ரீராம், யோசிங்க! இதுக்கு என் கிட்டே நிறையவே ஸ்டாக் இருக்கு!

      Delete
    7. நெல்லை, ரொம்ப ஓவரா இல்லையோ! நான் என்ன குக்கிங் அதாரிடியா? இதிலே எனக்குத் தெரியாத பல விஷயங்களை இப்போவும் கத்துக்க வேண்டி இருக்கு!

      Delete
    8. கடலைமாவு சேர்த்தும் செய்தால் நன்றாகவே இருக்கும் ஸ்ரீராம்....தேங்காய் மட்டும் செய்வதுண்டு என்றாலும் கடலைமாவு சேர்த்தால் சுவை தான்...

      கீதா

      Delete
    9. நிறையக்கடலைமாவு சேர்த்தால் அதைத் தேங்காய் மைசூர்ப்பாகு என்போம். அதுவும் 2016 தீபாவளிக்குச் செய்தேன்னு நினைக்கிறேன். இது சும்ம்ம்ம்ம்ம்ம்ம்மா ஒரு கரண்டி பைன்டிங்கிற்காக!

      Delete
    10. நீங்க சொல்றதைப் பார்த்தால் கீசா மேடம், ஒன்றைச் செய்துமுடித்துவிட்டு பிறருக்குத் தருவதற்கு முன்புதான் அதற்குப் பெயரே வைப்பீர்களா? அதனால்தான், இந்தத் தீபாவளிக்கு என்ன செய்யபோகிறேன் என்பதை, செய்து முடித்தபிறகுதான் சொல்கிறீர்களோ? அட இது புது தெக்கினிக்கா இருக்கே.

      Delete
    11. எழுதி இருப்பதை நன்றாகப் படியுங்க நெல்லைத் தமிழரே. செய்து முடிச்சுட்டுப் பெயர் வைப்பதாக எங்கே சொல்லி இருக்கேன்? :)))))

      Delete
  6. மாமாவுக்கு நமஸ்காரங்களுடன் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஸ்ரீராம், நக்ஷத்திரப் பிறந்த நாள் இனிமேல் தான்!

      Delete
  7. சனிக்கிழமைன்னதும் மாவிளக்கோ என்று நினைத்தேன். இது என்ன சமாராதனை
    கீதாமா. வெங்கடாசலபதி அழகா இருக்கார்.
    அப்பாவி வந்ததை ஆதியும் எழுதி இருந்தார்.
    குழந்தை சஹானாவுக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க ரேவதி, மாவிளக்கு என் பிறந்த, புகுந்த வீடுகளில் அம்மனுக்கு மட்டுமே. எங்க பொண்ணு வீட்டில் முருகனுக்குப் போடறாங்க! வாழ்த்துகளுக்கு நன்றி ரேவதி.

      Delete
    2. சமாராதனை என்பது சஹஸ்ரநாமம் சொல்லி வழிபட்டுப் பெருமாள் ப்ரபத்தி,மங்களம் சொல்லி, பஜனைகள் செய்துக் கடைசியில் பாடிக்கொண்டே ஆரத்தி எடுப்பார்கள். முன்னெல்லாம் எங்க வீடுகளில்/பிறந்த வீட்டில் தான் முடியவே பனிரண்டு மணி ஆயிடும். அதன் பின்னர் சாப்பாடு மூன்று மணி வரை நடைபெறும். எங்க சொந்தம், நட்புவட்டம் தெருக்காரங்க எனச் சுமார் நூறு பேர் வரை அப்போல்லாம் சாப்பிடுவாங்க. சமையல் அம்மா, பெரியம்மாக்கள், என் பாட்டி ஆகியோர், கூடக் குடியிருந்தோர் காய் நறுக்கிக் கொடுத்து, அரைத்துக் கொடுத்து உதவுவாங்க. பரிமாறவும் வருவாங்க! ஆட்கள் பஞ்சமே அப்போல்லாம் இல்லை.

      Delete
    3. சமாராதனை ஏதேனும் குறிப்பிட்ட நாளா இல்லை பிறந்த நாள் என்றெல்லாம் சமாராதனை செய்வீர்களா? எங்கள் பெரியப்பா வீட்டில், திருநக்‌ஷத்திரம் அன்று (ஆழ்வார்கள் அல்லது ஆச்சார்யர்கள்) கொண்டாடி, மாலையில் விருந்து படைப்பார்கள் (ப்ரபந்தம் போன்றவைகளைச் சொல்லுபவர்களுக்கு... எங்களைப்போன்ற சிறுவர்கள்லாம், அவங்க சாப்பிட்டு முடிக்கும்வரை காத்திருக்கணும் ஹாஹா)

      Delete
    4. புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் செய்யப்படுவது வருடாவருடம் செய்யும் சமாராதனை. இதைத் தவிர்த்தும் எங்க வீடுகளில் கல்யாணங்களுக்கு முன்னரும் ஒரு நாள் செய்வோம். அன்றைய தினம் அநேகமாய்ச் சனிக்கிழமையாய் வரும்படி பார்த்துக் கொள்வோம். சில சமயங்களில் சனிக்கிழமை

      கிடைக்கவில்லை எனில் புதன்கிழமையும் செய்வது உண்டு. திருப்பதி போய்விட்டு வந்தும் சிலர் செய்வது உண்டு. புரட்டாசி மாதம் சமாராதனை செய்கையில் அப்போது அது மஹாலய பக்ஷமாக
      இல்லாமல் இருத்தல் நல்லது. ஏனெனில் நாங்கல்லாம் பித்ரு காரியத்துக்குப் பின்னரே தெய்வ வணக்கம் என்று வைத்துக் கொள்வோம். உதாரணமாக ஸ்ராத்தம் அன்று மாலை கூடக் கோயிலுக்குப் போக மாட்டோம். ஸ்ராத்தம் முடிஞ்சதும் தான் ஸ்வாமிக்கு நிவேதனம். அன்றும் அநேகமாய்ப் பால், பழம்

      மட்டுமே! அல்லது ஸ்ராத்த சாப்பாடு சாப்பிடாதவர் யாரேனும் வந்திருந்தால் அவங்களுக்குத் தனியாய்ச்
      சமைத்து இருந்தால் அதை நிவேதனம் பண்ணலாம். ஆனால் காக்காய்க்கு அன்று ஸ்ராத்தம் பண்ணும்போது பிண்டம் போடுவதோடு சரி. இந்தப் புதுசாய்ச் சமைத்ததைப் போடுவதில்லை. மகாலயம் இல்லாமல் நவராத்திரிச் சனிக்கிழமைகள் புரட்டாசியில் வந்தாலும் சமாராதனை பண்ணுவது
      உண்டு. இந்த வருடம் முதல் சனிக்கிழமை புரட்டாசியிலே மஹாலயம் இல்லாமல் வந்திருக்கு. மற்றக் கிழமைகள் மஹாலயத்தில் வருது என்பதால் முதல் சனியன்றே சமாராதனை!

      Delete
  8. மனமும் நிறைந்தது அம்மா...

    ReplyDelete
  9. நமோ நாராயணா!..பெருமாள் தரிசனம் உங்க மூலம் இன்னிக்கு நடந்தாச்சு!.. ரொம்ப நன்றிம்மா!... தேங்காய் மைசூர்பாகுன்னு சொல்றதும், நீங்க பண்ணியிருக்கறதும் ஒண்ணா அம்மா?.

    ReplyDelete
    Replies
    1. வாங்க பார்வதி, உடல்நிலை தேறி இருப்பது குறித்து மகிழ்ச்சி. கடலைமாவு அதிகமாப் போடணும் நீங்க சொல்லும் மைசூர்ப்பாகுக்கு. கொஞ்சம் தேங்காய் இருந்தால் போதும். இது தேங்காய் தான் முழுக்க முழுக்க, நிறமும் வெள்ளையாகத் தான் இருக்கும். கடலைமாவு அதிகம் சேர்த்துத் தேங்காய் போட்டுப் பண்ணுவது நிறமும் மைசூர்ப்பாகு மாதிரி இருக்கும். ஒரு தீபாவளிக்குப் பண்ணிட்டுப் போட்டிருந்தேன். தேடிப் பார்க்கணும். :))))

      Delete
  10. படம் பார்த்தபின் ஒரு விள்ளல் எடுத்து வாயில் போட்டுக்கொண்டதாக பாவித்துக்கொண்டேன்! ஒரு பீஸ் ஸ்வீட்டோ அல்லது ரெண்டு துணுக்குக் காராசேவோகூட வாயில் போட்டுக்கொள்ளமுடியாதபடி அப்படி என்ன டயட்டிங்?

    எல்லாம் பயம் மயம். காலம் சிந்தனையை ரொம்பத்தான் மாற்றியிருக்கிறது..

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஏகாந்தன், நீங்க சொல்வது சரி தான். நான் இந்த டயட்டிங் எல்லாம் வைச்சுக்கறதில்லை. இதுக்கு மேலே கொஞ்சமாச் சாப்பிட முடியாது என்னும்படிக்குக் கொஞ்சம் சாப்பாடு தான் சமைக்கிறோம், சாப்பிடறோம். இதிலே டயட்டிங் என்ன தனியா? ஐஸ்க்ரீம் கொடுத்தால் கூட வாங்கிச் சாப்பிடுவேன். :)))))

      Delete
  11. சமாராதனைக்கு அக்கம் பக்கத்தில் உள்ளவர்களை கூப்பிட்டு இருந்தீர்களா?
    பஜனை உண்டா?
    பொங்கல், வடை, தயிர் சாதம் , கடலைப்பருப்பு சுண்டல், பூந்தி எல்லாம் கோவிலில் கிடைத்தது.
    உங்கள் வீட்டில் வடை, பொங்கல், எள்சாதம், எடுத்துக் கொண்டேன்.
    கோவிந்தனையும் வணங்கி கொண்டேன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கோமதி! இங்கெல்லாம் அக்கம்பக்கம் யாரும் அவ்வளவாக் கூப்பிட்டுக்கறதில்லை. ஆகவே நாங்களும் கூப்பிட யோசனை! :( பஜனை எல்லாம் மதுரையோடு போயாச்சு. மாமியார் வீட்டில் பஜனையே அவங்க செய்ய மாட்டாங்க! நாங்க தான் பஜனை பண்ணுவோம். :)))) இங்கே ப்ரபத்தி சொல்லி மங்களம் சொல்றதோடு சரி! எங்க அப்பா வீட்டில் ஆரத்தியின் போதும் பாடல்கள் எல்லாம் பாடச் சொல்லுவாங்க. இதுக்குனே தயார் பண்ணிப்போம். அதே போல் அங்கே குறைந்தது நூறு பேர் சாப்பிடுவாங்க! உறவினர் வட்டமே ஐம்பது இருக்கும்.

      Delete
    2. அம்பத்தூரிலாவது அக்கம்பக்கம் பிரசாதம் கொடுப்பேன். வாங்கிப்பாங்க! இங்கே! :(

      Delete
  12. வணக்கம் சகோதரி

    படங்கள் அருமை. ஏழுமலையான் படங்கள் மிகவும் அழகாக இருக்கிறது
    மற்ற தெய்வங்களுக்கு படைத்த பிரசாதங்களும் மிகவும் நன்றாக உள்ளது. இன்றைக்கு மா விளக்கு மா தீபம் ஏத்தி வழிபாடு முடிஞ்சாச்சா?

    இனிப்பு தேங்காய் பர்பி பார்க்க மிகவும் நன்றாக வந்துள்ளது. நீங்கள் தாராளமாக நிறைய செய்து வைத்திருந்ததால், வந்த விருந்தினர்களும் எடுத்துக் கொள்ளவேயில்லை என்று ஆதங்கப்பட்டதினாலும் நானும் கொஞ்சம் கூடவே கொஞ்சம் எடுத்துக் கொண்டேன். மிகவும் ருசியாக உள்ளது. நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கமலா, ஏழுமலையானுக்குப் படைத்த பிரசாதங்கள் தான் பின்னர் வீட்டு உம்மாச்சிங்களுக்கும்! தனித்தனியாக எல்லாம் பண்ணலை. இதுவே செலவாகவேண்டுமே எனக் கவலை! நல்லவேளையா எதிர்பாரா விருந்தினர் வந்ததால் கொஞ்சம் செலவாச்சு. உறவினர்களுக்குக் கொடுத்து அனுப்பினேன்.

      Delete
  13. தேங்காய் பர்பியை குழந்தை சாப்பிட்டாள் அல்லவா? அது போதும்.
    சாருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள், வணக்கங்கள்.
    வீட்டுக்கு வரும் குழந்தைகள் நம்முடன் ஒட்டிக் கொண்டால் அது சொர்க்கம்தான்.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கும், வணக்கத்துக்கும் நன்றி கோமதி. ஆம், குழந்தை எடுத்துக் கொண்டாள். அவளுக்காகப்பண்ணினது தானே. அவ அம்மா தட்டில் வைத்ததையும் கொஞ்சம் எடுத்துக் கொண்டாள். குழந்தை எல்லோரிடமும் ஒட்டிக் கொள்கிறாள்.

      Delete
  14. சிறந்த வழிகாட்டல்
    வரவேற்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. நன்றி காசிராஜலிங்கம்.

      Delete
  15. தரிசனத்துக்கு பெருமாள்...

    பிரசாதத்துக்கு பர்பி!..

    ஆகா... சுமமே.. சுகம்!..

    ReplyDelete
    Replies
    1. வாங்க துரை! நல்லா இருந்ததா?

      Delete
  16. அன்பின் ஐயா அவர்களுக்கு எனது அன்பான வணக்கத்தைச் சொல்லுங்கள்!...

    பல்லாண்டு பல்லாண்டு நலமுடன் வாழ்வதற்கு
    அன்னை அபிராமவல்லி அருள் பொழிவாளாக!...

    ReplyDelete
    Replies
    1. நன்றி துரை! கட்டாயமாய்ச் சொல்றேன்.

      Delete
  17. பெருமாளுக்கு அபிஷேகம் செஞ்ச மாதிரி
    அந்தத் தட்டுல குருவாயூரப்பன் திருவடிகள
    மறைச்சுக்கிட்டு தேங்காப் பூ!..

    அப்புறம் பார்த்தாக்க -

    கொதிக்கிற பர்பியும்
    கோவிந்தன் மேலேயே!...

    ஆகா.. இதல்லவோ வாத்சல்யம்!...

    ReplyDelete
    Replies
    1. ஹிஹிஹி, பார்த்தீங்களா! யாருமே சொல்லலையேனு நினைச்சேன். எப்போவும் கேக், பர்ஃபி, மைசூர்ப்பாகு கிளறிக் கொட்டும் தட்டைக் காணோம்! காக்கா கொண்டு போச்சோ என்னமோ! சரினு அவசரத்துக்கு மன்னாப்புக் கேட்டுக் கொண்டு எடுத்தேன். அவர் மன்னிச்சார் தான்! ஆனால் நம்மவர்! ஹிஹிஹி, வாங்கிக் கட்டிக் கொண்டேன். :))) அதான் ஒரு பக்கமாக் கொட்டினேன். பரத்தலை தட்டு முழுக்க! :))))

      Delete
  18. ஆஹா பர்பி செய்து வரவேற்பு அப்பாவித்தங்கமணிக்கு.. அருமை.

    நானும் முன்பு ஒரு தடவை செய்தேன், ஆனா எங்களுக்கு சுவை என்னமோ பிடிக்கவில்லை.. அதனால விட்டு விட்டேன்.

    ReplyDelete
    Replies
    1. அதிரடி, உங்களுக்கும் ஏடிஎம்மைத் தெரியுமா? எழுதும் போது இருக்கும் நகைச்சுவை அவங்களை நேரில் பார்க்கையில் இருக்காது. ஒரு விதத்தில் நானும் அப்படித் தான்! ஆனால் முன்னெல்லாம் ரொம்பவே கலாட்டா பண்ணிக் கொண்டு தான் இருந்தேன். :))) பர்ஃபி பொதுவாக அனைவருக்கும் பிடிக்கும். நீங்க செய்த முறை சரியா இருந்திருக்காது. ஶ்ரீராம் செய்தாப்போல் குடிக்கிற பர்ஃபியோ? :)))))))

      Delete
  19. துரைசெல்வராஜூ அவர்கள் சொன்ன பிறகுதான் பார்த்தேன்.
    குருவாயூர் கண்ணன் மேல் பர்பியா?
    குழந்தையை மன்னித்துவிடுவார்.

    ReplyDelete
    Replies
    1. ஹிஹிஹி, கோமதி அரசு, என்னைக் குழந்தைனு ஒத்துண்டதுக்கு நன்னி! நன்னியோ நன்னி! :))))

      Delete
  20. பெருமாள் ப்ரசாதம் எடுத்துக் கொண்டேன். சந்தோஷம். என் பிறந்த வீட்டில் பெருமாள் சமாராதனை என்று தீபம் வைத்து செய்வார்கள். ஒரு உரலுக்குள் வெங்கல உருளியை வைத்து அதில் ஒரு புது துணியில் பருத்திக் கொட்டை இன்னும் ஏதோ வைத்து முடிந்து நெய்யில் நனைத்து விளக்கேற்ற வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க பானுமதி, நீங்க சொல்றாப்போல் உரல் வைத்து தீபம் போடுவது என் மாமியாரின் பிறந்தகத்தில் உண்டு என்பார்கள். கணவனும் மனைவியும் கோவிந்தா பாடிக் கொண்டே தீபத்தை ஏந்திக் கொண்டு ஆடி ஆடிக்கொண்டு வந்து வைப்பார்களாம். மாவும் போடுவார்கள் போல! நான் ஒரு முறை கூடப் பார்த்தது இல்லை.

      Delete
  21. மாமாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்... பர்ஃபி பார்க்க நல்லா இருக்கு! :)

    ReplyDelete
  22. ஐ லவ் தேங்காய் பர்பி. ஆனா இதுவரை செஞ்சதில்லைம்மா

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப ஜிம்பிள், ஜீக்கிரம் பண்ணிடலாம்! அரைமணி நேரம் போதும். :)

      Delete
  23. துளசி: சாருக்கு எங்கள் மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துகள்! ஸ்வீட் பலகாரம் எல்லாம் பார்க்கவே சுவைஅயக இருக்கு. மிகவும் பிடிக்கும். (கீதாக்கா துளசி இந்தக் கருத்தை அன்றே அனுப்பிவிட்டார் நான் தான் போட முடியாமல் இன்றுதான் போடுகிறேன்..இன்னும் பலருக்கும் அவர் கொடுத்த கமென்ட்ஸ் இருக்கு பார்க்கணும்....ஹிஹிஹிஹி)

    கீதா: அப்பாவி தங்கமணி ப்ளாக் அறிவேன் ஆனால் அங்கு கருத்து இட்ட நினைவு இல்லை. ஆதியும் கதம்பத்தில் சொல்லியிருந்தார். புகைப்படங்கள் பார்த்தோம்.

    ஸ்வீட்டோ ஸ்வீட்டு....பிரசாதம் ஸ்வீட்டு எல்லாம் இன்னும் இருக்கோ? ஸ்வீட்டும் காலியா?!!!!

    மாமாவுக்கு வாழ்த்து தாமதமாகிவிட்டது. நமஸ்காரங்கள்! (இது எப்போது வேண்டுமானாலும் செய்யலாமே!)

    ReplyDelete
    Replies
    1. ஹாஹா, ஸ்வீட் எல்லாம் சொந்தக்காரங்களுக்குக் கொடுத்து அனுப்பிட்டேன். ரங்க்ஸ் சாப்பிடுவதில்லையா, நானும் அதிகம் எடுத்துக்கறதில்லை.

      நன்றி துளசிதரன் வாழ்த்துகளுக்கு. தி/கீதா, உங்களுக்கும் நன்றி.

      Delete