எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, September 29, 2018

அஷ்டபந்தனம் என்றால் என்ன?

கொம்பரக்குச் சுக்கான்தூள் குங்கிலியம் கற்காவி
செம்பஞ்சு சாதிலிங்கம் தேன்மெழுகு - தம்பழுது
நீக்கி எருமைவெண் ணெய்கட்டி நன்கிடித்து
ஆக்கல் அட்டபந்தனம் ஆம்

அஷ்டபந்தனம் - சுக்கான்கல், கொம்பரக்கு, சாதிலிங்கம், செம்பஞ்சு, தேன்மெழுகு, எருமை வெண்ணெய், குங்கிலியம், நற்காவி ஆகிய எட்டுப் பொருட்களைக் கொண்டு செய்த சாந்து.

சுக்கான்கல் என்பது வெள்ளை அல்லது கபில நிறத்துடன் கூடியது தேர்ந்தெடுக்கப்படும். அடுப்பில் இரும்புச் சட்டியில் இட்டு வறுத்தால் வெடிக்காத வகையே சிறப்பானது என்கின்றனர்.

கொம்பரக்கு என்பது மரப்பட்டையுடன் ஒட்டிக் கொண்டிருக்க வேண்டும். இதுவே தூய்மையானது என்கின்றனர்.

சாதிலிங்கம் என்பது வைப்புப் பாஷாண வகை எனத் தெரிய வருகிறது. நவ பாஷாணத்திலும் ஒன்று என அறிகிறோம். அஷ்டபந்தனத்தில் இது மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

குங்கிலியம் தூசு, தும்பு இல்லாமல் இருக்க வேண்டும்.

செம்பஞ்சு வாதாங்கொட்டையைப் போல் இருக்கும் எனவும் பிஹாரில் இருந்து வருவதாகவும் "கோக்தி" என்னும் பெயர் எனவும் தெரியவருகிறது.

தேன்மெழுகு, இது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே எனினும் இதில் மஞ்சள் நிறத்தை விட வெண் மெழுகே அஷ்டபந்தனத் தயாரிப்பில் முக்கியமானது.

எருமை வெண்ணெய் புத்தம்புதியதான மண்பாண்டத்தில் போட்டு வைத்தால் வெண்ணெயின் ஈரப்பசையை அது உறிஞ்சி எடுத்து விடும். பின்னர் பயன்படுத்துவார்கள்.

கற்காவி அல்லது நற்காவி அழுக்குச் சிவப்பாகக் கட்டியாக இருக்கும் என்கின்றனர்.  கட்டிப்பட்டிருப்பதையே சிறப்பானதாகவும் கருதுகின்றனர்.

இதில் ஒவ்வொன்றுக்கும் குறிப்பிட்ட அளவு முறை இருக்கிறது. அந்த அளவில் சேர்த்து மர உரலில் போட்டு மர உலக்கையால் இடிக்க வேண்டும். கல்லுரலில் போடக் கூடாது.  வெண்ணெயைத் தவிர்த்து மற்றவற்றைப் போட்டு வெண்ணெயைச் சிறிது சிறிதாகச் சேர்த்து இடிக்க வேண்டும்.

முதலில் இடும்போதும் ஒவ்வொன்றாகத் தான் மர உரலில் போட வேண்டும். இடிப்பவர்கள் மனத்தூய்மை, உடல் தூய்மையுடன் இருக்க வேண்டும். சிவ நாமத்தையோ நாராயண நாமத்தையோ உச்சரித்த வண்ணம் இடிக்க வேண்டும். பண்டங்களும் தூய்மையாக இருக்கவேண்டியதோடு அல்லாமல், பண்டங்களைச் சேர்க்கும் அளவும் மாறக்கூடாது. இடிப்பதற்கும் கால அளவு உண்டு.  இதன் பின்னர் பிரதிஷ்டை செய்கையில் முக்கியப் பீடத்திற்கும் துணைப் பீடத்திற்கும் சேர்க்கைக்காகத் திரிபந்தனம் என்பதைச் சேர்ப்பார்கள்.

 திரிபந்தனம்:

சுக்கான் தூள், சர்க்கரை, தொல் பேயான் நற்கனியும்
ஒக்கக் கலந்தமைத்தல்  உற்றதிரி பந்தனம் ஆம்

இதற்குச் சுக்கான் தூள், கருப்பட்டிக் கசிவு, முற்றிக் கனிந்த பேயன்பழம் ஆகியவை தேவை. சுக்கான் கற்களை நன்கு பொடித்துக் கொண்டுக் கொஞ்சம் பெரிய சல்லடையால் சலித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.  வாயகன்ற மண் சட்டியில் அந்தப் பொடித்த சுக்கான் தூளைப் போட்டுச் சூடேற்ற வேண்டும்.  சிறிது சிறிதாகக் கருப்பட்டிக் கசிவையும், பேயன் பழத்தையும் போட்டுக்கொண்டு கிளறிக் கொடுத்துக் கொண்டே வர வேண்டும். கைச்சூடு தாங்க முடியாத அளவுக்குப் பதம் வர வேண்டும். அப்போது பெரிய மர மத்துக் கொண்டு நன்கு மசித்துக் கூழாக்குவார்கள். பின்னர் கற்களுக்கு இடையே அவற்றைப் பயன்படுத்துவார்கள்.  கலவை செம்மையாக இருந்தால் தான் பிடிமானம் உறுதியாக இருக்கும்.

இத்தனையையும் முறையாகச் செய்து பின்னரே பீடத்தில் கடவுள் சிலைகளை முறைப்படி பிரதிஷ்டை செய்வார்கள். இவைகளைப் போட்டுப் பிரதிஷ்டை செய்தாலே அவை உறுதியுடன் பீடத்தில் நிற்கும்.

உதவியவை: விக்கி பீடியா, தமிழ் விர்சுவல் பல்கலைக்கழக நூலகம் மேலும்
(காரைக்குடி- கம்பன் அடிப்பொடி அமரர் சா.கணேசன் அவர்களின் 'கட்டுரைக் களஞ்சியம்’ நூலில் இருந்து...)

34 comments:

  1. அஷ்டபந்தன கும்பாபிஷேகத்தின் விளக்கம் அறிந்தேன் நன்றி சகோ

    ReplyDelete
    Replies
    1. வாங்க கில்லர்ஜி நன்றி.

      Delete
  2. விளக்கம் மிகவும் அருமை அம்மா...

    ReplyDelete
  3. தெரிந்து கொண்டேன். நன்றி. ஆமாம், என்ன திடீரென்று?

    ReplyDelete
    Replies
    1. விஷய தானத்திற்கு நன்றி! ஸ்ரீராமுக்கு வந்த சந்தேகம் எனக்கும் வந்தது. ஹி ஹி.

      Delete
    2. @ஸ்ரீராம், @பானுமதி, பரவாக்கரைப் பதிவில் நான் அஷ்டபந்தனம் பெருமாள் கோயில் கும்பாபிஷேஹத்துக்காக இடித்ததைப்பற்றிப் போட்டிருந்தேன். அதில் ஜிஎம்பி ஐயா அஷ்டபந்தனம் என்றால் என்ன எனக் கேட்டிருந்தார். மருந்துகள் கலந்த சாந்து என்றும் பீடத்தில் கடவுள் விக்ரஹத்தை உறுதியாகப் பிடிக்க வைக்கப் போடுவது என்பது தெரியும் எனினும் முழு விபரங்கள் தெரியாது. நேற்றுத் தான் தெரிந்து கொண்டேன். பகிர்ந்தேன்.

      Delete
    3. ///அதில் ஜிஎம்பி ஐயா அஷ்டபந்தனம் என்றால் என்ன எனக் கேட்டிருந்தார். //

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) அப்போ அதைச் சொல்லி எல்லோ போஸ்ட் போட்டிருக்கோணும்.. நேக்கு போஸ்ட் படிச்சு கீசாக்காவுக்கு திடீரென என்னமோ ஆச்சு என லெக்கும் ஆடல்ல காண்ட்டும் ஓடல்ல:))

      Delete
  4. ஒருத்தரிடம் விளக்கம் சொல்றேன் என்று சொன்னதால், முயற்சி எடுத்து அறிந்து இடுகை போட்டுள்ள உங்களைப் பாராட்டறேன். இது எல்லோருக்கும் (தெரிந்துகொள்ள நினைக்கும் எல்லோருக்கும்) உபயோகமா இருக்கும்.

    இத்துடன், நீங்க அட்டபந்தனத்துக்கு இடிக்கும் படத்தை (வேறொருவர் இடிக்கும்போது எடுத்த படத்தை) சேர்த்திருக்கலாம். மற்றும் அட்ட பந்தனம் இடப்பட்ட மூலவர் படத்தை நெட்டில் சுட்டாவது இங்கு போட்டிருக்கலாம். மிகப் பொருத்தமா இருந்திருக்கும்.

    பழைய காலத்தில் எதையும் வெண்பா அல்லது தமிழ்க் கவிதை மூலம் சொல்லும் திறன் (அப்போதான் வழிவழியா இது மறையாமல் போய்ச்சேரும் என்று) பாராட்டத்தக்கது.

    ReplyDelete
    Replies
    1. வாங்க நெல்லைத் தமிழன்! வேறொருவர் இடிக்கும் படத்தை நான் போட்டு அதை அதிரடி பார்த்துக் கமென்டி எல்லாம் ஆயிடுச்சு! http://sivamgss.blogspot.com/2018/09/blog-post_19.html இந்தச் சுட்டியில் பார்க்கவும். நீங்க ஆஞ்சிக்குச் சாத்திய வடைமாலையின் எண்ணிக்கை பத்திக் கவலைப்பட்டதாலே மறந்திருக்கும்! :P :P :P

      Delete
    2. //நீங்க ஆஞ்சிக்குச் சாத்திய வடைமாலையின் எண்ணிக்கை பத்திக் கவலைப்பட்டதாலே மறந்திருக்கும்//

      ஹா ஹா ஹா ..எண்ணிக்கை கரீட்டா இருக்கோணுமெல்லோ:)..

      Delete
  5. சிறப்பான தகவல்கள். தில்லியில் எங்கள் பகுதி கோவில் கும்பாபிஷேகம் சமயத்தில் நானும் பங்கேற்று இவை பயன்படுத்தி இருக்கிறேன்.

    ReplyDelete
  6. ஹையோ கீசாக்காவுக்கு என்னமோ ஆச்சூஊஊஊஊஊஊ... எல்லோரும் ஓடி வாங்கோ.. இருந்தாற்போல புரியாத பாஷையில பேசுறா:)).. என்ன கீசாக்கா இது.. ஒண்ணுமே பிரியுதில்லை...

    ReplyDelete
    Replies
    1. அதிரடி, நீங்க மட்டும் இல்லை! எல்லோருமே ஒரு பதிவைப் படிச்சுட்டு அடுத்த பதிவுக்கு வந்ததும் முன் பதிவை மறந்துடறீங்க! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் மேலே ஸ்ரீராமுக்கும், பானுமதிக்கும் சொல்லி இருக்கும் பதிலைப் படிங்க!

      Delete
  7. அஷ்டபந்தனம் என்பது கும்பாபிசேகமோ? கில்லர்ஜி சொல்றார்??

    ReplyDelete
    Replies
    1. அதிரடி, கும்பாபிஷேஹத்துக்கு முதல்நாள் அஷ்டபந்தனக் கலவையை இடிக்கச் சொல்லிப் பீடத்தில் இட்டு விக்ரஹங்கள் (மூல விக்ரஹம்) பிரதிஷ்டை செய்து நன்றாகப் பிடித்துக் கொள்ள வைப்பார்கள். அதற்கும் முன்னர் உள்ளே நவரத்தினங்கள், நவதானியங்கள், குறிப்பிட்ட தெய்வத்திற்கான சில யந்திர, தந்திரங்கள் போன்றவையும் இருக்கும். மூலஸ்தானத்துக்கு மேல் அமைக்கும் விமானக் கலசங்களில் வரகு அரிசியை நிரப்புவார்கள். வரகு இடிதாங்கி!அதோடு எந்தக் காலத்திலும் பயன்படும். ஆயிரம் வருஷங்கள் ஆனாலும் பயன்படக்கூடிய தானியம். ஆனால் ஆடு, மாடுகள், பறவைகளுக்கான உணவாகப் பயன்படாது. எந்த நிலத்திலும் வளரும் தன்மை உள்ளது. நீரே இல்லாட்டியும் வளரும்.வரகுத்தாளை முன் காலத்தில் வீட்டுக்கூரை வேயப் பயன்படுத்துவார்கள் என என் அப்பா சொல்லுவார். குளிர்ச்சியாக இருக்குமாம்.

      Delete
  8. //இத்தனையையும் முறையாகச் செய்து பின்னரே பீடத்தில் கடவுள் சிலைகளை முறைப்படி பிரதிஷ்டை செய்வார்கள். இவைகளைப் போட்டுப் பிரதிஷ்டை செய்தாலே அவை உறுதியுடன் பீடத்தில் நிற்கும்.
    //

    கீசாக்கா.. கோயிலுக்கு சிலை வைக்கமுன் பீடம் கட்டுவார்கள்.. அந்த பீடத்தில் சிலை வைக்கமுன்.. இந்த அஷ்டபந்தனம் எனப்படும் சாந்தைப் பூசுவார்களோ? இவ்ளோ விசயம் இருக்கா? ஆனா சிலைகளைப் பார்த்தால்ல்.. பீடத்தின் மேல் இருப்பதுபோலதானே இருக்கும்.. நம் கண்ணுக்கு எதுவும் தெரிவதில்லை.. அப்போ இது பீடத்தில் சுவாமி சிலையை ஒட்டுவதற்கான பசையோ?

    ReplyDelete
    Replies
    1. ஆம், அதிரடி. இது ஸ்வாமி சிலை பீடத்தில் இறுகப் பிடித்துக் கொள்வதற்கான பசை தான்! முற்காலத்தில் சாந்து என்பார்கள். கீழே துரை அவர்கள் இன்னும் விளக்கமாகச் சொல்லி இருக்கார் பாருங்க!

      Delete
  9. துளசிதரன்: விளக்கம் அறிந்தோம். அருமை. எல்லா கடவுளர்க்கும், எல்லா கோயில்களிலும் இப்படித்தான் செய்கிறார்கள் இல்லையா? இல்லை என்றால் பழமைவாய்ந்த கோயில்களில் மட்டுமோ? இப்போது எழுப்பப்படும் கோயில்களிலும் இம்முறையில்தான் செய்கிறார்களா?

    கீதா: அதே கருத்துடன், அக்கா இது மூலவருக்கா இல்லை உற்சவருக்கா? மூலவர் என்றுதான் புரிந்து கொண்டேன். அதனாலதான் மூலவர் அபிஷெகம் செய்யறது அந்த நீர் மருத்துவகுணம் உள்ளதுனு சொல்றாங்களோ?

    ஆனா எங்கள் ஊர் இறைவன் திருவாழ்மார்பன் மூலவருக்கு அபிஷேகமே கிடையாது. அவர் கடு சர்க்கரை யோகம் ன்ற ஒருவகையான கூட்டுப் பொருளாள் ஆனவர்...சுண்ணாம்பும் கல்லும் சேர்த்து செய்யப்பட்டவர் மேல் கடுகும் சர்க்கரையும் கலந்து பூசப்பட்டவர் என்பதால் அவருக்கு அபிஷேகம் கிடையாது.

    ReplyDelete
    Replies
    1. வாங்க துளசிதரன், எல்லாக் கோயில்களிலும் மூலஸ்தானத்திற்கு அஷ்டபந்தனம், திரிபந்தனம் இல்லாமல் விக்ரஹப் பிரதிஷ்டை இல்லை. இப்போது எழுப்பப்படும் புதிய கோயில்களும் இதற்கு விலக்கல்ல.

      Delete
    2. தி/கீதா, உங்களுக்கு இரு முறைபதில் கொடுத்தும் போகலை! க்ர்ர்ர்ர்ர்ர்ர்! ஏதோ எரர் காட்டியது. இங்கே ஶ்ரீரங்கம் கோயில் ரங்கநாதரும் இப்படித் தான்! அவருக்கும் அபிஷேஹம் கிடையாது. உற்சவருக்குத் தான் திருமஞ்சனம். அதற்காகத் தான் வருஷத்துக்கு இரு முறை ஆனி மாதம் கேட்டை நக்ஷத்திரத்தில் ஜ்யேஷ்டாபிஷேஹம் போதும் அதன் பின்னர் ஆவணி மாதம் பவித்ரோத்சவம் போதும் தைலைக்காப்பு நடைபெறும். இனி தீபாவளியின் போது தான் ரங்கநாதரின் பாத தரிசனமும் கிடைக்கும். அது வரை பெருமாள் முகம் தவிர்த்து மற்ற இடங்கள் மெல்லிய வஸ்திரத்தால் போர்த்தப்பட்டு இருப்பார்.

      Delete
  10. >>> எல்லா கடவுளர்க்கும், எல்லா கோயில்களிலும் இப்படித்தான் செய்கிறார்கள் இல்லையா? இல்லை என்றால் பழமைவாய்ந்த கோயில்களில் மட்டுமோ? இப்போது எழுப்பப்படும் கோயில்களிலும் இம்முறையில்தான் செய்கிறார்களா? ... <<<

    அஷ்டபந்தனம் எல்லா தேவ மூர்த்திகளுக்கும் ஒன்று போலத்தான்..

    எனினும்,

    சிலா மேனியைப் பொருத்தும் பீடம் எழுப்பு முன் - அதற்குள் குழிவாக அமைத்து அதனுள் அந்த பீடத்தில் அமர இருக்கும் தெய்வத்திற்குரிய யந்த்ரம், நவரத்தினங்கள், பொன் வெள்ளி காசுகள் மேலும் சில ரகசியங்களை வைத்து (மூடி) விட்டு அதன் மேல் திருமேனியை இருத்தி அஷ்டபந்தனத்தைத் தடவி விடுவார்கள்..

    அது சில மணி நேரத்தில் இறுகி சிலையையும் பீடத்தையும் சேர்த்து இறுக்கிப் பிடித்துக் கொள்ளும்...

    இடிக்கப்பட்ட அஷ்டபந்தனம் இறுக வில்லையெனில்!?...

    உடனடியாக பரிகார பூஜைகள் மேற்கொள்ளப்படும்!...

    ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுப்பப்பட்ட திருக்கோயில் ஒன்றில் மூல மூர்த்திக்குச் சாற்றப்பட்ட அஷ்டபந்தனம் இறுகாமல் போயிற்று..

    அதைக் கட்டியவன் பரிதவித்து நின்றான்..

    சிக்கலை உணர்ந்த சித்தர்கள் உடனடியாக அதற்கு மாற்று மருந்தினை உருவாக்கி
    அதைத் தாம்பூலத்தினுள் வைத்து வேறொரு சித்தரிடம் கொடுத்து வாயினுள் அடக்கிக் கொள்ளும்படிச் செய்து அனுப்பினார்கள்...


    சூழ்நிலையை அறிந்த அவர் வான்வழியாக விரைந்து வந்து
    அஷ்ட பந்தனத்துடன் மருந்தினைக் கலந்து இறுகச் செய்தார்...

    அஷ்டபந்தனம் இறுகாததால் தவித்திருந்தவன் - மாமன்னன் ராஜராஜன்..

    அஷ்ட பந்தனத்தை இறுகச் செய்தவர் - ஸ்ரீகருவூரார்..
    கருவூராருக்கு மாற்று மருந்தினை வழங்கியவர் - ஸ்ரீபோகர்..
    பழனியில் இருந்த போகருக்குச் செய்தி சொல்லியவர் - கயிலைமாமலையில் இருந்த ஸ்ரீ காகபுஜண்டர்..

    இப்படி சித்தர் பெருமக்களால் நிறுவப்பட்டது தான்
    தஞ்சை பெரியகோயிலில் விளங்கும் மகா லிங்கமான
    ஸ்ரீ பெருவுடையார் திருமேனி...

    ReplyDelete
    Replies
    1. நன்று துரை. நல்ல விளக்கமான பதிலுக்கு நன்றி.

      Delete
  11. >>> எல்லா கடவுளர்க்கும், எல்லா கோயில்களிலும் இப்படித்தான் செய்கிறார்கள் இல்லையா? இல்லை என்றால் பழமைவாய்ந்த கோயில்களில் மட்டுமோ? இப்போது எழுப்பப்படும் கோயில்களிலும் இம்முறையில்தான் செய்கிறார்களா? ... <<<

    அஷ்டபந்தனம் எல்லா தேவ மூர்த்திகளுக்கும் ஒன்று போலத்தான்..

    எனினும்,

    சிலா மேனியைப் பொருத்தும் பீடம் எழுப்பு முன் - அதற்குள் குழிவாக அமைத்து அதனுள் அந்த பீடத்தில் அமர இருக்கும் தெய்வத்திற்குரிய யந்த்ரம், நவரத்தினங்கள், பொன் வெள்ளி காசுகள் மேலும் சில ரகசியங்களை வைத்து (மூடி) விட்டு அதன் மேல் திருமேனியை இருத்தி அஷ்டபந்தனத்தைத் தடவி விடுவார்கள்..

    அது சில மணி நேரத்தில் இறுகி சிலையையும் பீடத்தையும் சேர்த்து இறுக்கிப் பிடித்துக் கொள்ளும்...

    இடிக்கப்பட்ட அஷ்டபந்தனம் இறுக வில்லையெனில்!?...

    உடனடியாக பரிகார பூஜைகள் மேற்கொள்ளப்படும்!...

    ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுப்பப்பட்ட திருக்கோயில் ஒன்றில் மூல மூர்த்திக்குச் சாற்றப்பட்ட அஷ்டபந்தனம் இறுகாமல் போயிற்று..

    அதைக் கட்டியவன் பரிதவித்து நின்றான்..

    சிக்கலை உணர்ந்த சித்தர்கள் உடனடியாக அதற்கு மாற்று மருந்தினை உருவாக்கி
    அதைத் தாம்பூலத்தினுள் வைத்து வேறொரு சித்தரிடம் கொடுத்து வாயினுள் அடக்கிக் கொள்ளும்படிச் செய்து அனுப்பினார்கள்...


    சூழ்நிலையை அறிந்த அவர் வான்வழியாக விரைந்து வந்து
    அஷ்ட பந்தனத்துடன் மருந்தினைக் கலந்து இறுகச் செய்தார்...

    அஷ்டபந்தனம் இறுகாததால் தவித்திருந்தவன் - மாமன்னன் ராஜராஜன்..

    அஷ்ட பந்தனத்தை இறுகச் செய்தவர் - ஸ்ரீகருவூரார்..
    கருவூராருக்கு மாற்று மருந்தினை வழங்கியவர் - ஸ்ரீபோகர்..
    பழனியில் இருந்த போகருக்குச் செய்தி சொல்லியவர் - கயிலைமாமலையில் இருந்த ஸ்ரீ காகபுஜண்டர்..

    இப்படி சித்தர் பெருமக்களால் நிறுவப்பட்டது தான்
    தஞ்சை பெரியகோயிலில் விளங்கும் மகா லிங்கமான
    ஸ்ரீ பெருவுடையார் திருமேனி...

    ReplyDelete
  12. சிறப்பான தகவல்களுடன் பதிவு..

    வாழ்க நலம்..

    ReplyDelete
    Replies
    1. பாராட்டுக்கு நன்றி

      Delete
  13. எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள்
    மெய்ப்பொருள் காண்பது அறிவு.

    தெரியாததை தெரிந்துகொள்ள முயற்சிக்கும் ஆர்வம் நன்று. பாராட்டுக்கள்.
    Jayakumar

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஜேகே அண்ணா!

      Delete
  14. கருவறையில் அஷ்டபந்தனம் சாற்றுதல்
    கும்பாபிஷேகத்திற்கான முதல் நாள் இரவு தான் நடைபெறும்...

    சாயங்காலத்திலிருந்து இடிப்பார்கள்...
    கோயிலுக்கு வருவோர் யாராக இருந்தாலும் அஷ்டபந்தன கலவையினை இடித்துத் தரலாம்...

    அஷ்டபந்தனம் சாற்றியபின் அந்த ஒரு பொழுதில் மட்டும் யார்வேண்டுமானாலும் கருவறைக்குள் சென்று மூல மூர்த்தியை வணங்கி வரலாம் என்பார்கள்...

    பழைய கோயிலுக்குத் திருப்பணி செய்தாலும் சரி..
    புதிதாகக் கோயிலை எழுப்பினாலும் சரி - அஷ்டபந்தனம் திரிபந்தனம் நடைமுறைகள் மாறவே மாறாது...

    ReplyDelete
    Replies
    1. ஆமாம். துரை சொல்வது போல் தான் எல்லாக்கோயில்களிலும் நடைபெறும். அன்று மட்டும் கருவறைக்குள் போகலாம்.

      Delete
  15. ஹோமத்துல, சாம்பிராணி கூட போடுவாளா? குங்குலியம் வாசனைன்னு அம்மா சொல்ல கேட்டிருக்கேன் எப்பிடி இருக்கும்? சாம்பிராணி மாதிரி ரெசின் ஆ ?

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஜெயஶ்ரீ, குங்கிலியம் கிட்டத்தட்டச் சிவப்புச் சாம்பிராணி போல் தான் இருக்கு!

      Delete
  16. அஷ்டபந்தனத்திற்கு தேவையான மருந்து கலவையை தர்மபுரம் ஆதீனம் பல கோவில்களுக்கு கொடுக்கும்.
    அதை வாங்கி வந்து இடித்து வைத்து விடுகிறார்கள்.

    பீடத்திற்கு அடியில் நவரத்தினம் மற்றும் சில வற்றை போடுவதற்கு வயதானவர்கள் உள்ளே போவார்கள்.

    மருந்து சாத்த போகிறோம் மருந்து இடிக்க வாருங்கள் என்று அழைப்பார்கள்.

    கலவையில் கலக்கப்படும் பொருட்களைப் பற்றிய விவரம் அருமை.
    சிறப்பான பதிவு.
    தெரியாதவர்களுக்கும் உதவும் பதிவு.

    ReplyDelete