எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, February 26, 2020

பொல்லாத விஷமக்காரக் குஞ்சுலு! 2

ஆயிற்று! நாளை (புதன்கிழமை) ஒரு நாள். வியாழனன்று இங்கிருந்து கிளம்பணும். விசா என்னமோ மார்ச் எட்டாம் தேதி வரை இருந்தாலும் நாங்க போன வாரம் போகவே நாள் முடிவு செய்திருந்தோம். ஆனால் பையர் கோபித்துக்கொண்டதால் ஒரு வாரம் முன்னாடி கிளம்பறோம். குட்டிக் குஞ்சுலுவும் அவ அம்மாவும் எங்களுடன் சென்னை வரை வருகிறார்கள் மருமகளுக்குப் பெற்றோரைப் பார்த்து 3 வருடம் ஆனதால் அவங்க வரமுடியாத நிலையில் எங்கள் துணையுடன் வருகிறாள். குஞ்சுலுவும் அவ அம்மாவும் நேரே அங்கே போய்விடுவார்கள். கிளம்பும் முன்னர் ஸ்ரீரங்கம் வருவார்கள். அப்போது நல்ல வெயில் வந்துடும். கவலையாத் தான் இருக்கு. இந்தக் குஞ்சுலு வேறே ஒரே ஆட்டம், பாட்டம், விளையாட்டுத் தான். இப்போ 2 நாட்களாக ஊருக்குப் போவதால் பள்ளிக்கு அனுப்பலை. அதுக்கே அதுக்குப் பொழுது போகாமல் எல்லோரையும் வேலை வாங்கிக் கொண்டு இருக்கிறது. நேற்று மதியம் என்னோடு உட்கார்ந்து கொண்டு எல்லாப் புத்தகங்கள்,படங்கள் பார்த்துப் பெயர் சொல்லிக் காட்டியது. ஒன்று, இரண்டு 30 வரை சரியாக எண்ணுகிறது. சில படங்களுக்கு வர்ணம் அடிப்பதாகச் சொல்லிக் கொண்டு தாறுமாறாக வர்ணம் அடிச்சு வைச்சிருக்கு!

தினம் தினம் ராத்திரி எங்க அறைக்கு வந்து கொட்டம் அடிச்சுட்டுத் தான் தூங்கவே போகும்.ஒன்பது மணிக்குத் தூங்கப் போகவே அதைக் கெஞ்சணும். இனிமேல் அது முடியாது. என்ன செய்யுமோ என நினைத்தால் கவலையும் வருத்தமுமாக இருக்கு. குழந்தை ஏங்கிப் போய்விடுவாளோ என்னும் கவலை பத்து நாட்களாகவே. ஓடி ஓடி வரும். நினைக்கவே கஷ்டமாக இருக்கிறது. இந்தியாவிலேயே எங்கேயானும் இருக்கக் கூடாதோ என்று தோன்றுகிறது. ஆனால் நம் கையில் என்ன இருக்கிறது? இந்தியாவில் அவ பாட்டி வீட்டில் எப்படிப் பொழுதைக் கழிக்கப் போகிறதோ! விஷமம் தாங்காது. எல்லா சாமான்களும் கீழே வந்துடும். நாற்காலி, பெஞ்ச் எல்லாவற்றையும் இழுத்துப் போட்டுக்கொண்டு ஏறி எல்லாவற்றையும் எடுக்கும். பபுள்ஸ் விடுவதற்கென பாதுகாப்பான சோப்பு நீர் இங்கே குழந்தைகளுக்கென அங்கீகரிக்கப்பட்டது விற்கிறார்கள். அதைப் பெண் வாங்கிக் கொடுத்தாள். குஞ்சுலுவுக்காக அதில் பபுள்ஸ் விட்டுக்கொண்டு காட்டிக் கொண்டிருப்பேன். சும்மாத் தொந்திரவு செய்கிறது என்பதால் இப்போ அதை ஒளிச்சு வைச்சிருக்கோம்.

எங்க பெண் வந்தால் குஞ்சுலுவுக்குக் கோபம் வந்துடும், எங்களை அழைத்துச் செல்லத் தான் வந்திருக்காள் என. ஆகவே உள்ளே போய்க் கோவித்துக்கொண்டு உட்கார்ந்துக்கும். கூப்பிடக் கூப்பிட வெளியே வராது. பையரோ, மருமகளோ உள்ளே போய் அதோடு பேசித் தாத்தா, பாட்டி இங்கே தான் இருக்கப் போறாங்க, அத்தையோடு போகப் போவதில்லைனு எல்லாம் சொல்லி இப்போ அத்தை கிளம்பப் போறாங்கனு சொன்னப்புறமா வந்து ஓரக்கண்ணால் என்னைப் பார்த்துக்கும், வேறே புடைவை மாத்தி இருக்கேனானு! இல்லைனு தெரிஞ்சதும் சிரித்துக்கொண்டே இரண்டு கைகளாலும் அவங்களுக்கு "பை" சொல்லி கட்டிக்கொண்டு வழி அனுப்பும். :))))) பெண்ணுக்குக் கொஞ்சம் வருத்தமாக இருந்தாலும் குழந்தையின் மனதைப் புரிந்து கொள்வதால் அதை நாம் துன்புறுத்துகிறோமேனு வருத்தப்படுவாள். இனி என்ன செய்யப் போகிறதோ தெரியலை. ஏற்கெனவே ஒன்பது, பத்து மாசத்தில் விட்டுவிட்டு வந்தது அதுக்கு இன்னமும் நினைவில் இருக்குப் போல! கொஞ்ச நாட்கள் ஸ்கைபில் எங்களைப் பார்க்கவே மறுத்துக் கொண்டு இருந்தாள். சரியாக நாளானது. இனி எப்படியோ தெரியலை. அது திரும்பி இங்கே வந்ததும் ஸ்கைபுக்கு வந்தால் தான் தெரியும். பார்ப்போம். இறைவன் விட்ட வழி!

39 comments:

  1. குழந்தைக்கு உங்கள் மீதான அன்பு நெகிழ வைக்கிறது.  பாவம்தான்.   அந்தக் காலங்கள் நினைவுக்கு வருகின்றன.  ஒரே வீட்டில் கூட்டுக்குடும்பமாய்...    இனி திரும்பி வரவே முடியாத நாட்கள் அவை.  மக்கள்தொகை, வேலைவாய்ப்பு, பிழைப்பு என்று எங்கோ வெகு தூரம் சென்றுவிட்டோம் நாம்.

    ReplyDelete
    Replies
    1. விஷமம் செய்துவிட்டு அம்மா பிடிக்க வருவது தெரிந்தால் ஓடி வந்து காலைக் கட்டிக்கும். இல்லைனா தோளில் சாய்ந்து கொண்டு முகத்தை மூடிக்கொண்டு சிரிக்கும். என்ன செய்வது? எல்லாவற்றையும் நினைத்து ஆறுதல் அடைய வேண்டியது தான்.

      Delete
    2. எங்க பெண் கல்யாணம் ஆகும் முன்னரே நிச்சயம் செய்யும்போதே மாப்பிள்ளை சொல்லிவிட்டார். பாஸ்போர்ட் இல்லைனா எடுத்துடுங்க. சீக்கிரம் அமெரிக்கா போயிடுவோம்னு. அதனால் அவள் அமெரிக்கா செல்வது அவள் கைகளில் இல்லை என்பது தெரியும். ஆனால் பையர் போவார்னு நாங்க நினைச்சுக் கூடப் பார்க்கலை. காம்பஸில் எல்&டியில் தேர்வு ஆகி அங்கே வேலை பார்த்தவர் தான். 3 வருஷங்களிலே அமெரிக்கா கிளம்பியாச்சு. இனிமேல் எங்கே திரும்ப வருவது? எல்லோரும் அமெரிக்கக் குடிமக்கள் பெண், பிள்ளை இருவருடைய குடும்பத்திலும்! எங்களுக்கும் பச்சை அட்டை வாங்கணும்னு சொல்லிட்டு இருக்காங்க. பத்துவருஷமாக நாங்க மறுத்துக் கொண்டு இருக்கோம்.

      Delete
  2. இன்று நான் ஸ்ரீரங்கத்தில் இருந்திருக்கவேண்டும் நான்.  ஆரோக்கிய சமையல் ஹேமாவின் மகனுக்குத் திருமணம். என்னால் செல்ல முடியவில்லை.  வாழ்த்து மட்டும் அனுப்பி இருக்கிறேன்.  சென்னை ரிஷப்ஷனில்தான் அவர்களை வாழ்த்தவேண்டும்.  நீங்கள் இந்நேரம் ஸ்ரீரங்கத்தில் இருந்திருந்தால் ஒரு டபிள் உற்சாகமாக வந்திருப்பேனோ என்னவோ!

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஸ்ரீராம், நாங்க ஸ்ரீரங்கம் வந்ததும் அங்கே வீட்டுக்கு வரவேண்டியவர்கள் பட்டியலில் உங்கள் பெயரும் உள்ளது. கட்டாயமாய் வாருங்கள். உங்கள் சிநேகிதி ஹேமாவுக்கும் அவர் குடும்பத்துக்கும் பையருக்கும் எங்கள் ஆசிகள், வாழ்த்துகள்.

      Delete
  3. குழந்தையின் விளையாட்டுகள் மனதை நிறைக்கின்றன.   உங்கள் ஏக்கமும், வருத்தமும் புரிகிறது. ஸ்கைப்பே கதி...

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், என்ன செய்ய முடியும்? மார்ச்சில் நேரம் வேறே கோடைகாலம் என்பதால் மாற்றி வைப்பார்கள். நமக்கு மாலை 3 மணி எனில் அவங்களுக்குக் காலை நாலரை ஆகி விடும். இப்போக் காலை மூன்றரை மணி என்று குளிர்கால சேமிப்பு நேரம்.

      Delete
  4. வணக்கம் சகோதரி

    பதிவை படித்தேன். தங்களுடைய இந்தியா பயணம் சிறக்க வாழ்த்துக்கள். நீங்கள் கூறுவது போல தங்கள் பேத்தியின் விஷமங்கள் நன்றாக இருந்தாலும் பாவம்..! உங்கள் பிரிவை அவர் எப்படி தாங்கப் போகிறாரோ என எனக்கும் வருத்தமாக உள்ளது. குழந்தையின் விஷமங்கள் சுவாரஸ்யமாக இருக்கின்றன. உங்களுக்கும் அதெல்லாம் கண்ணிலேயே இருக்கும். மனசுதான் ரொம்பவே கஸ்டப்படும். என்னதான் ஸ்கைபில் பார்த்து பேசினாலும் நேரில் பார்ப்பது போன்ற மகிழ்வு வருவதில்லை. என்ன செய்ய?

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கமலா, நீங்க சொல்லுவது உண்மைதான். நேரில் குழந்தையைப் பார்த்துக் கைகளில் தொட்டுக் கட்டிக்கொண்டு கொஞ்சுவது போல் வருமா?

      Delete
  5. குஞ்சுலுவின் நினைவுகளை சொல்லியது ரசிக்க வைத்தது.

    ReplyDelete
    Replies
    1. நன்றி கில்லர்ஜி, இன்னும் சில நாட்களில் உங்கள் பேத்தியும் விளையாட ஆரம்பித்துவிடுவாள்.

      Delete
  6. நாமல்லாம் கூட்டுக்குடும்பத்தில் வளர்ந்ததால்  ஏக்கம் தெரியலை ஆனா குஞ்சுலு போன்ற குழந்தைகள் பாவம் .என் மகளும் எங்கப்பாம்மாவை விட்டு ஏற்போர்ட் போகும்போதே அழுவா .குழந்தையை கூடுமானவரை சந்தோஷமா வச்சிக்கோங்க .மகளின் புரிதல் அருமை .

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஏஞ்சல், அப்பா வீட்டில் கூட்டுக்குடும்பம்னு இல்லைனாலும் எங்க தாத்தா வீட்டில் (அம்மாவின் அப்பா) கூட்டுக் குடும்பம். கல்யாணம் ஆகிவந்தும் கூட்டுக்குடும்பம். அதனால் எப்போதும் மனிதர்கள்! இங்கே குழந்தைகள் தானாகத் தனியாகத் தான் விளையாடிக் கொள்ளும். இப்போ நாங்க இருப்பதால் அதோடு விளையாடுவோம்.

      Delete
  7. நாளைக்கு புறப்பட வேண்டும் - விட்டு விலகி வருவது கடினம் தான். ஆனாலும் சூழ்நிலை இப்படித்தான்! வேறொன்றும் செய்வதற்கில்லை.

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் வெங்கட். பிரிவு என்பது தவிர்க்க முடியாதது!

      Delete
  8. குஞ்சுலு மிஸ் பண்றதோ இல்லையோ
    நீங்கள் அதை மிகவும் மிஸ் பண்ணுவேள்.
    இங்கே பேத்திக்குப் பழகி விட்டது.
    பேரன் சொன்னாலே கண்ணைக் கசக்குகிறான். பாவம் குழந்தைகள்.

    பெண் நன்றாகப் புரிந்து கொண்டிருக்கிறார். குழந்தைகள் யார் நிறைய விளையாடுகிறார்களோ
    அவர்களிடம் ஒட்டிக் கொண்டுவிடும்.
    அதுவும் பெற்றோரைவிடத் தாத்தா பாட்டியின் அன்யோன்யம்
    மிக அருமை.
    ஏதேதோ பழைய நினைவுகள் வருகின்றன.

    நல்ல படியாக இந்தியப் பயணம் அமைய என் பிரார்த்தனைகள்.
    குழந்தையும் கூட வருவதால் வருத்தம் அவ்வளவு தெரியாமல் இருக்கட்டும்.

    ஸ்ரீரங்கம் வெய்யில் இல்லாமல் இருக்கட்டும்.
    ரங்கன் உங்களை வரவேற்கக் காத்திருப்பான்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் வல்லி, எனக்குத் தான் கை ஒடிந்தாற்போல் இருக்கும் கொஞ்ச நாட்கள்! சமாளிச்சுப்பேன்/சமாளிச்சுக்கணும்! வேறே வழி! பெண்ணும் 2 குழந்தைகள் பெற்றிருக்கிறாளே, குழந்தையின் மனசு புரியாமல் இருக்குமா?

      Delete
  9. குழந்தைகளை பிரிவது கடினம்தான். அதுவும் பேரக் குழந்தைகள் மீது பாசம் அதிகமாகத்தான் இருக்கிறது. ஆனால் இப்போது ஸ்கைப், வாட்ஸாப் கால் போன்றவை இருப்பதால் கொஞ்சம் பரவாயில்லை. 

    ReplyDelete
    Replies
    1. வாங்க பானுமதி! என்னதான் ஸ்கைப், வாட்சப்னு இருந்தாலும் கிட்ட இருக்காப்போல் வராதே!

      Delete
  10. Welcome back to India, Srirangam! Have a safe journey!

    ReplyDelete
  11. எங்கும் அப்படித்தான் கீசாக்கா, யாரும் வீட்டுக்கு வராமலே இருக்கலாம் வந்து தங்கிப் போனால் சரியான கஸ்டமாக இருக்கும், அம்மா வந்து நின்றுவிட்டுப் போனால், கொஞ்ச நாட்கள் அவவின் அறைக்குள் போக மாட்டேன்.. நெஞ்செல்லாம் அடைக்கும்.
    இது உங்களுடனேயே அவர்களும் வருவது நல்ல விசயமே... மாற்றம் இருந்தால் பின்பு விளங்காது, பெரிய கவலை வராது.

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஸ்வீட் 16, உங்களை மாதிரி வயசு ஆகி இருந்தால் ஞானியாக ஆகி இருக்கலாம். நான் சின்னப் பொண்ணு தானே! அதான் பிரிவைத் தாங்க முடியறதில்லை. எல்லோரும் வந்தால் அது ஒரு மாதிரி. வரலைனா அது ஒரு மாதிரி! வருந்தும்படி இருக்கும். வந்துட்டுப் போனால் வேறே மாதிரி வருத்தம்.

      Delete
    2. வருத்தம் மட்டும் மாறது. வருந்தும் காரணம் மட்டும் வேறு மாதிரி.
      அனுபவித்து இருக்கிறேன்.

      Delete
    3. ஆமாம் கோமதி! வருத்தம் மட்டும் மாறாதது.

      Delete
  12. ஓ அப்போ இனிக் கீசாக்காவை ஶ்ரீரங்கத்தில் சந்திக்கிறோம். நலமே வந்து சேரப் பிரார்த்திக்கிறேன் அனைவருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், ஸ்வீட் 16. அநேகமாக நாளைக்குக் காலம்பரக் கூட கணினிக்கு வருவது சந்தேகம். பாக்கிங் முடிஞ்சுவிட்டாலும் வீட்டில் வேறு சில வேலைகள். எல்லாம் முடித்துக்கொண்டு சாப்பாடு முடிந்து மதியம் கிளம்பணும். இப்போதைக்குக் குஞ்சுலு கூடவே வருதுனு ஒரு ஆறுதல்! அம்புடுதேன்! உங்கள் பிரார்த்தனைகளுக்கு நன்றி.

      Delete
  13. மிகவும் நெகிழ்ச்சி ஊட்டும் உறவு.

    உறவு என்றொரு சொல் இருந்தால் பிரிவு என்றொரு பொருள் இருக்கும்

    ReplyDelete
    Replies
    1. நன்றி நெல்லைத் தமிழரே!

      Delete
  14. சொந்தம் எப்போதும் தொடர்கதைதான் முடிவே இல்லாதது...

    இங்கும் அப்படியே...
    நம்முடைய மனதை நாமே தேற்றிக் கொள்ள வேண்டியது தான்...

    இரண்டாவது பேத்தியைஅலைபேசி வழியாகப் பார்த்துக் குரல் கொடுத்தால் தூக்கிக் கொள் என்று கையையும் காலையும் ஆட்டுகிறாள்...

    இவ்வுலகில் மிகப்பெரிய துன்பங்களாவன பந்தமும் பாசமும் தான்...

    இந்த நினைப்பு நள்ளிரவில் வந்து விட்டால்!?...

    ReplyDelete
    Replies
    1. ஹையோ, இப்படிப் பார்க்கும் ஓர் விதம் இருப்பதால் தான் குழந்தைகளின் முகம் நமக்கும், நம் முகம் அவர்களுக்கும் பரிச்சயம் ஆகிறது. விரைவில் தாத்தா தூக்கிக் கொண்டு குழந்தையைக் கொஞ்சப் பிரார்த்திக்கிறேன்.

      Delete
  15. அக்கா, என்னுடைய தளத்தில் where can we get wisdom? என்ற தலைப்பில் விநாயகர், அம்மையையும், அப்பனையும் வளம் வந்து ஞானப் பழத்தை பெற்ற கதையைப் பற்றி நான் புரிந்து கொண்ட வகையில் விளக்கியிருக்கிறேன். கேட்டு விட்டு தங்கள் கருத்தை கூறுங்கள். உங்கள் அபிப்ராயத்தை தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன். நன்றி. 

    ReplyDelete
    Replies
    1. வாங்க பானுமதி! மீள் வருகை. உங்களோட வேண்டுகோளை இப்போத் தான் கவனிச்சேன். கிளம்பும் அவசரத்தில் மெயிலில் இருந்து கருத்தை வெளியிட்டதோடு சரி.கட்டாயமாய்ப் போய்ப் பார்க்கிறேன். நன்றி தகவலுக்கு.

      Delete
  16. குழந்தையின் குறும்பு மகிழ்வு, பின் குழந்தையை விட்டு பிரிந்து வருவது எல்லாம் வருத்தமான நிக்ழ்வு.
    என்ன செய்வது தவிர்க்க முடியாதுதான்.

    குழந்தையும் கூட வந்தது மகிழ்ச்சியாக இருக்கும். அந்த பாட்டி வீட்டுக்கு போய் விட்டு இங்கு வரும் போது விளையாட உடம்பை தெம்பாக வைத்துக் கொள்ளுங்கள்.
    அடுத்து விட்டு விட்டு ஊருக்கு போய்விடுவாளே என்று வருத்தப்பட்டுக் கொண்டு இருக்காமல் இருக்கும் வரை குழந்தையுடன் மகிழ்ந்து இருங்கள்.

    ReplyDelete
    Replies
    1. குழந்தை கூட வந்தது சந்தோஷத்தை அளிக்கத் தான் செய்தது. விட்டு வந்தது தான் கொஞ்சம் வேதனை. மருமகளுக்கும், குழந்தைக்கும் ஜெட்லாக் அதிகமாக இருப்பதாக சம்பந்தி சொன்னார்.

      Delete
  17. இம்முறை குஞ்சுலுவும் உங்களுடன் வந்தது மகிழ்ச்சியாக இருந்திருக்கும்.இனிய தருணங்கள் தொடரட்டும்.

    ReplyDelete
  18. குழந்தைகள் வள்ர்ந்து விட்டால்மிகவும் மாறுவார்கள் பின் நாம்தான்வருத்தப்படுவோம்

    ReplyDelete