எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, March 02, 2020

ராமஜயம், ஸ்ரீராமஜயம், நம்பின பேருக்கு ஏது பயம்!

ஆறு மாச அம்பேரிக்க வாசம் முடிஞ்சு முந்தாநாள் சனிக்கிழமை காலை எட்டரை மணி அளவில் ஸ்ரீரங்கம் வந்தாச்சு. அம்பேரிக்காவில் வியாழன் அன்று மாலை ஏழு மணிக்கு விமானம். 3 மணிக்கெல்லாம் வீட்டை விட்டுக்கிளம்பிட்டோம். கிளம்பும் முன்னர் நான் பனிரண்டரை மணிக்கே புடைவை மாற்றித் தயார் ஆகிட்டேன். ஆனால் புடைவை மாற்றும்போதே மனசில் என்னவோ நெருடியது. அதையும் மீறி நான் தேர்ந்தெடுத்து வைத்திருந்த புடைவையையே கட்டிக் கொண்டேன். கொஞ்சம் விறைப்பாக வேறே இருக்கும். உடல், தலைப்பெல்லாம் ஜரிகையோ ஜரிகை. சாதாரணமாகக் கல்யாணங்கள், சின்னச் சின்ன விசேஷங்களுக்குக் கட்டிக் கொண்டு போவேன் இம்மாதிரிப் புடைவைகளை. விமானப் பயணங்கள், இன்னும் சொல்லப் போனால் ரயில், பேருந்துப் பயணங்களில் கூடக் கட்டிக்கொண்டதில்லை. காபினில் வைக்கும் பெட்டியில் இன்னமும் இரண்டு சாதாரணப் புடைவைகள் இருந்தன. ஆனாலும் நான் மாற்றிக்கொள்ளவில்லை. மருமகள் எப்போதுமே நான் புடைவை கட்டுவதற்கு ஆக்ஷேபணைகள் தெரிவிப்பாள். ஜீன்ஸ் போட்டுக்கோங்க, இல்லாட்டி சல்வார், குர்த்தா போடுங்க என்பாள். சல்வார், குர்த்தா கைவசம் ஒரே ஒரு உடுப்பு இருந்தது. அதையும் பெட்டியின் அடியில் போட்டுவிட்டேன். ஆனால் அன்னிக்குக் கிளம்பறச்சே அவள் ஒண்ணும் சொல்லலை. எனக்கு மட்டும் கொஞ்சம் யோசனையாகவே இருந்தது. ஏதோ நடக்கப் போகிறது என்று உள்ளுணர்வு சொல்லிக் கொண்டே இருந்தது.

எல்லோருக்குமாக 2 பெட்டிகள் என்பதாலும் பெரிய பெட்டிகள் என்பதாலும் எங்களை விமான நிலையம் அழைத்துச் செல்ல மாப்பிள்ளை வந்திருந்தார். பெண் வீட்டுக்கு வந்து பார்த்துட்டு நாங்க கிளம்பியதும் அவள் வீட்டுக்குப் போய்விட்டாள். அப்புவுக்குச் சில சிறப்பு வகுப்புகளுக்குக் கொண்டுவிட்டு அங்கேயே காத்திருந்து அழைத்து வரணும். நாங்க விமானநிலையம் கிளம்பி சௌகரியமா வந்துட்டோம். எமிரேட்ஸில் வந்ததால் அந்த இடத்துக்கு அருகேயே வண்டியை நிறுத்தி இறக்கி விட்டாங்க பையரும், மாப்பிள்ளையும். அவங்க காரைப் பார்க் செய்துட்டு வந்ததும் உடனே  போர்டிங் பாஸ் கொடுக்கும் இடத்தில் பையர் போய் நாங்க எல்லாம் ஒரே குடும்பம் என்பதால் உட்காரும் இருக்கையை ஒரே மாதிரி நான்கு இருக்கை கொண்ட வரிசையில் போடச் சொன்னார். ஏனெனில் மருமகள் பயணத்திட்டம் மிகுந்த யோசனையின் பேரில் ஏற்பட்டது. ஆகவே பயணச்சீட்டுத் தனித்தனியாகவே இருந்தது. அவங்களும் அப்படியே போட்டுத் தந்தாங்க. வீல் சேர் எங்க இரண்டு பேருக்கும் சென்னையில் இருந்து கிளம்பும்போதே சொல்லி இருந்தோம். ஹூஸ்டன் வரை வீல் சேர் கிடைத்திருந்தது. அதே போல் இங்கேயும், எதிரே உள்ள அலுவலகத்தில் போய்ப் பதிந்து கொண்டால் சற்று நேரத்தில் வரும் என்றார்கள். அதற்குள்ளாக அங்கேயே இருந்த ஸ்டார்பக்ஸில் "லாட்டே" காபியும் ஒரு பேகிள்ஸும் சாப்பிடுங்க என வாங்கித் தந்தார் பையர். விமானத்தில் உணவு கொடுக்க எட்டரை மணி ஆகிடும் என்பதால் வாங்கினார். ஆனால் நான் கையில் தயிர் சாதம் கொண்டு வந்திருந்தேன். நம்மவர் தான் அந்த சாதத்தைச் சாப்பிடுவதாகச் சொல்லிக் கொண்டிருந்தவர் அங்கே பேகிள்ஸ் வாங்கவும் வீணாகிடும் என அதைப் பாதி சாப்பிட்டுவிட்டுப் பாதியைக் குஞ்சுலுவுக்குக் கொடுத்தோம்.

bagel with butterக்கான பட முடிவுகள்


அதன் பின்னர் வீல் சேருக்காகப் போனோம். குழந்தைக்கு ஸ்ட்ராலர் கையில் இருந்ததால் குழந்தையை அதில் உட்கார்த்தி வைச்சாச்சு. மருமகள் குழந்தையைத் தள்ளிக் கொண்டு வர, நாங்கள் இருவரும் வீல் சேரில் பயணித்தோம். பிள்ளையும், மாப்பிள்ளையும் லிப்டில் பயணம் செய்யும் வாயிலுக்குச் செல்லும் முன்னர் அவர்களைப் பார்க்கச் சொன்னார்கள். சரினு செக்யூரிடி செக்கப்புக்கு எங்களை இரு பெண்கள் அழைத்துச் சென்றனர். செக்யூரிடியில் எல்லாம் சக்கரநாற்காலிப் பயணிகளுக்குத் தனி முன்னுரிமை உண்டு. ஆகவே நேரே உள்ளே அழைத்துச் சென்று விட்டார்கள். ஆண்கள் பகுதிக்கு நம்ம ரங்ஸும், பெண்கள் பகுதியில் நானும் மருமகளுமாகப் போனோம். மருமகள் பாஸ்போர்ட் அமெரிக்கன் என்பதோடு இந்தியா வருவதற்கான ஓசிஐயும் இருந்ததால் அவங்களுக்கு விரைவில் முடிந்து விட்டது.

சாதாரணமாக நம்மவர் தான் ஷேவிங் செட்டில் ஏதேனும் ஒன்றை கையில் கொண்டு செல்லும் பையிலோ, பெட்டியிலோ வைச்சுட்டு மாட்டிப்பார். ஆனால் இம்முறை எல்லாத்தையும் நினைவாகக் கார்கோவில் போட்டாச்சு. ஆகவே அவருக்கும் விரைவில் முடிந்து வெளியில் வந்திருக்கார். எனக்குத் தெரியாது. மருமகள் என்னோடூ இருந்ததால் அவள் சென்றது மட்டும் தெரியும். எனக்கு முன்னால் கிட்டத்தட்ட என் வயது ஒரு பெண்மணியைத் திரும்பத் திரும்ப ஸ்கான் செய்து பார்த்துப் பின்னர் உட்காரச் சொல்லி விட்டார்கள். என்னை அழைக்கவும் நான் போனேன். ஸ்கானிங் அறைக்குப் போகும் வழியிலேயே "கணகண்"வென்ற சப்தம் பேரொலியாகக் கிளம்பியது. உடனேயே அங்கே இருந்த அலுவலர் (ஆண்) என்னை மிஷினுக்கு நேரே நிறுத்தி ஸ்கான் செய்தார். எதுவும் அகப்படவில்லை. மீண்டும் அந்தக் கதவு வழியே போய்விட்டு வரச் சொன்னார். உள்ளே நுழையும்போது மணி அடித்தது. அவருக்கு சந்தேகம். மீண்டும் மீண்டும் ஸ்கான் செய்தாலும் எதுவும் கிடைக்கவில்லை. பாஸ்போர்ட்டையும் போர்டிங் பாஸையும் வாங்கி வைத்துக் கொண்டு ஓர் பெண் அதிகாரியை அழைத்தார்.

எனக்கு ஓரளவு விஷயம் என்னனு புரிஞ்சாலும் அவங்க கிட்டே இதெல்லாம் சொல்ல முடியாது. என்னோட புடைவையின் உலோக ஜரிகைக் கும்பலால் வந்த வினை! அவங்களுக்கு சந்தேகம் வந்து விட்டது. உடனே வாய்க்குள்ளாக ஸ்ரீராமஜயத்தைச் சொல்ல ஆரம்பித்தேன். இது எப்போவுமே மனசில் ஓடிக் கொண்டே இருக்கும். நிற்கையில், நடக்கையில், சமைக்கையில் என. ஆனால் சில சமயம் எங்கோ ஓடிப் போயிருப்பதைத் தேடிப் பிடித்து இழுத்து வரணும். அம்மாதிரி இப்போவும் இழுத்து வந்தேன். ஸ்ரீராமஜயம், ஸ்ரீராம ஜயம், ஸ்ரீராமஜயம்.

வந்த பெண் அதிகாரி என்னிடம் உனக்கு முழு உடல் பரிசோதனை செய்ய வேண்டும் என்றாள். தனி அறைக்கு அழைத்துச் செல்வாளோ என சந்தேகம். ஆனால் அதையும் அவளிடம் கேட்க முடியாது. நான் என்ன செய்யணும் என்று கேட்டேன். முழு உடல் பரிசோதனைக்கு ஒத்துக்கொள் என்றாள். நான் கொஞ்சம் யோசித்துவிட்டு நீங்க சொல்வது எனக்குப் புரியாததால் என் மருமகளை அழையுங்கள் என்றேன். நல்லவேளையாகப் பத்தடி தூரத்திலேயே மருமகள் இருந்தாள். அவளும் வந்து கேட்டுவிட்டு இதையே தான் சொன்னாள். நீங்க நகைகளை அவிழ்த்திருக்கலாமே என்றாள். கழுத்துச் சங்கிலியை ஒரே ஒரு முறை மெம்பிஸில் கழட்டி இருக்கேன். மற்றபடி இத்தனை முறை அம்பேரிக்கா போனதில் இப்படி எல்லாம் நடந்ததில்லை. ஆகவே நான் செய்வதறியாது விழித்துவிட்டு அவளைப் பரிசோதனை செய் எனச் சொல்லி விட்டேன். அவள் என்ன நினைத்துக் கொண்டாளோ தனி அறைக்கு அழைத்துச் செல்லாமல் அங்கேயே ஸ்கானிங் மிஷ்னை வைத்தும், கைகளாலும் ஒரு முறைக்கு 3 முறை சோதித்தாள். எதுவும் கிடைக்கவில்லை. பின்னர் என்னைப் போகச் சொன்னாள். நான் என் பாஸ்போர்ட்டும் போர்டிங் பாஸும் எங்கே எனக் கேட்கவும் எங்கேயோ  போய்விட்டிருந்த அந்த அதிகாரியை அழைத்து எதுவும் கிடைக்கவில்லை. அனுப்பிவிடலாம் என்றாள். அந்த அதிகாரி பாஸ்போர்ட்டையும், போர்டிங் பாஸையும் கொடுக்க நானும் நெடுமூச்சு விட்டுக்கொண்டு நம்ம உறவுகளிடம் வந்து சேர்ந்து கொண்டேன்.

41 comments:

  1. த்ரில் அனுபவங்கள்தான் எப்போதும் உங்களுக்கு!  எப்படியோ கடந்தாச்சு!   இவ்வளவு அனுபவம் வாய்ந்த உங்களுக்கே  இபப்டியா?!

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஸ்ரீராம், இது தெரிஞ்சே செய்த தப்புனு தான் சொல்லணும். எப்போவுமே நான் உள்ளுணர்வு சொல்லுவதைக் கேட்பேன். அன்னிக்கு என்னமோ! :( இப்படியும் ஓர் அனுபவம் பாக்கி இருந்திருக்கு! பொதுவாக சக்கரநாற்காலிப் பயணிகளை அதிகம் சோதிக்க மாட்டார்கள். இத்தனைக்கும் அன்னிக்கு நான் நடக்கவே முடியாமல் இருந்தேன். சக்கரநாற்காலியில் இருந்து எழுந்திருக்கவே உதவி தேவைப்பட்டது.

      Delete
  2. பேகிள்ஸ் என்றால் என்ன?

    ReplyDelete
    Replies
    1. என்ன சொல்ல? பன் மாதிரியாக மோல்டில் போட்டுப் பின்னர் நடுவில் ஓட்டை போட்டு அவனில் வைத்து பேக் செய்து எடுத்திருப்பார்கள். கிட்டத்தட்ட உளுந்து வடை மாதிரி. ஆனால் அது எண்ணெயில் பொரிப்பார்கள். இது அவனில் பேக் செய்வார்கள். நடுவில் கட் செய்து இரண்டு பக்கங்களிலும் ஜாம், பட்டர், அல்லது ஜாம், கெட்சப் தடவிக் கொண்டு சாப்பிடலாம். அநேகமாகப் பயணங்களில் விமானத்தில் கொடுக்கும் உணவில் இது இடம் பெறும். இன்னொன்று டோநட். கிட்டத்தட்ட நம்ம ஊர்ப்பேடா! எங்களுக்குப் பிடிக்காது. சாப்பிட மாட்டோம். croissant bread என ஒன்று. அதில் குழல் குழலாக உள்ளே வெண்ணெயுடன் இருக்கும். இம்மாதிரி ப்ரெட்களிலேயே எத்தனையோ விதங்கள் இருக்கின்றன.

      Delete
    2. நம் ஊர் bun க்கு நடுவில் ஓட்டையிட்டால் அது bagel:)....
      இப்பூடி சோட் அண்ட் சுவீட்டாக சொல்ல தெரியாது கீசாக்காவுக்கு கர்ர்ர்ர்ர்:)..
      ஆனா bun soft ஆக இருக்கும் இது கார்ட் ஆ இருக்கும்.

      Delete
    3. அதானே அதிரடி தான் இதைப் பலமுறை செய்து பார்த்துச் சொதப்பி இருப்பதால் நல்லா விளக்கமாகச் சொல்லுவார்.

      Delete
  3. ராம ஜெயம் ஸ்ரீராம ஜெயம்...

    ReplyDelete
  4. தங்களுக்கு நல்வரவு அக்கா...

    ReplyDelete
    Replies
    1. நன்றி, நன்றி. வந்து 3 நாட்கள் ஓடிவிட்டன.

      Delete
  5. அப்பாடா என் புடவையில் உள்ளது ஒரிஜினல் ஜரிகை என்று அம்பேரிக்காவில் போய் விளம்பரம் செய்தீர்கள்.இது யாருக்க்காக? போத்திஸ்க்கா ஆரம்கேவிகா Jayakumar

    ReplyDelete
    Replies
    1. Co-Optex. போத்தீஸுக்காவது சென்னையில் ஒரே ஒரு முறை யாரோ உறவினருடன் போனேன். ஆரெம்கேவியெல்லாம் எங்கே இருக்குன்னே தெரியாது. இங்கேயும் இரண்டும் இருக்கு. நல்லி கூட இருக்கு.

      Delete
  6. சில சமயங்களில் இப்ப்டித்தான். நல்லபடியாகவே பயணம் முடிந்தது. ஆண்டவனுக்கு நன்றி சொல்வோம்.

    ReplyDelete
  7. ஹா ஹா ஹா நல்ல அனுபவம்தான்... எப்படியோ கீசாக்கா தப்பிட்டா. எனக்கும் இப்படி இம்முறை நடந்தது, ஜீன்ஸ் இன் உள் பக்கமும் ஒரு ஸிப் இருக்கு, அதை யோசிக்காமல் போட்டுவிட்டேன்ன்..
    அது கீச்சோ கீச்செனக் கத்த, அங்கு லேடீஸ் மிரள, எனக்கு இப்படி இடங்களில் சிரிப்பாகவே வரும்.. சிரித்துக்கொண்டே சொன்னேன் உள்ளே ஸிப் இருக்கு என.....
    தடவோ தடவென அதில வச்சே தடவி மசாஜ் பண்ணி விட்டார்கள் ஹா ஹா ஹா...

    ReplyDelete
    Replies
    1. உண்மையிலேயே தப்பித்தேன் தான் அதிரடி. என்னவோ வெளியிலே தைரியமாகக் காட்டிக்கொண்டாலும் அங்கேயே உட்கார்த்தி வைச்சுடுவாங்களோனு ஒரு பயம் உள்ளூர இருந்தது என்னமோ உண்மை.

      Delete
  8. தலைப்புப் பார்த்ததும், பிளேனால இறங்கியதுமே சமயப் பதிவோ கடவுளே இப்போ நான் என்ன பண்ணுவேன் என நினைச்சுக்கொண்டே திறந்தேன்...கர்ர்ர்ர்ர்ர்ர்:)..

    ReplyDelete
    Replies
    1. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்,

      Delete
  9. என்நண்பன் ந்க்கிருண்டு கலைப்பொருளாகஒரு பிள்ளையார் சிலை வாங்கீருந்தான்கஸ்டம்சில் அதுபுராதன கலைப்பொருள் கடத்டபடுகிறது என்று சொல்லி அவனை தனிமைப்படுத்தி கேள்விகள்கேட்க ஆரம்பித்தார்கள்ஃநல்லகாலம் அதை வாங்கிய பில் அவனிடம் இருந்தது தப்பித்தான்

    ReplyDelete
    Replies
    1. நான் சின்னச் சின்ன பரிசுப் பொருட்கள் அடங்கிய பெட்டிகளைத் தபால் மூலம் கூடப் பெண்ணுக்கு அனுப்பி வைச்சிருக்கேன். அவற்றிலும் வெண்கலச் சிலைகள் தான் சின்ன அளவில். ஆனால் எதுவும் நேரவில்லை. இது கொஞ்சம் பயந்து தான் போனோம் எல்லோருமே!

      Delete
  10. ஸ்ரீராமஜெயம் ! ராமர் இருக்க கவலை என்ன!
    நல்லபடியாக வந்து விட்டீர்கள். பேத்தியும் உடன் வந்ததால் விட்டு பிரிந்து வரும் கவலை இல்லாமல் வந்து இருப்பீர்கள்.
    கவலை படாமல் வந்து விட்டதற்கு இப்படி ஒரு கவலை வந்து இருக்கு.

    எப்படியோ நல்லபடியாக ஊர் வந்து சேர்ந்தது நிம்மதி.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கோமதி, கைவலி பரவாயில்லையா? ஓய்வுனு சொன்னாலும் நமக்கெல்லாம் சில வேலைகள் செய்ய வேண்டியது அத்தியாவசியமாகவே இருக்கு! என்ன செய்ய முடியும்?

      ஸ்ரீராமன் நாமம் என்னைப் பல முறைகள் காப்பாற்றி உள்ளது. சில சமயங்களில் வீட்டுக்குள்ளேயே நிலைமை கொஞ்சம் சரியில்லை என்றால் ஸ்ரீராமஜயம் நாம ஜபம் தான். கண்கண்ட மருந்து!

      Delete
  11. கால்வலி எப்படி இருக்கிறது? தூக்கம் இல்லையென்றால் உடல் சோர்வு ஏற்படும். உடல் நலத்தை கவனித்துக் கொள்ளுங்கள். பேத்தியுடன் விளையாட வேண்டுமே.
    எனக்கும் ஒரு வாரமாய், கழுத்துவலி, கைவலி இவற்றால் தூக்கம் இல்லை.

    ReplyDelete
    Replies
    1. கால்வலியைப் பற்றிக் கேட்கவே கேட்காதீங்க கோமதி! உள்ளே உள்ள நரம்புகளெல்லாம் துண்டித்து விட்டனவோ என்று எண்ணும்படி வலி! படுத்தால் உட்காரத் தோன்றுகிறது. உட்கார்ந்தால் படுக்கச் சொல்லும். இதில் பயணத்தினால் வந்த பாதங்களின் வீக்கம் வேறே. கொஞ்சம் கொஞ்சமாகத் தான் சரியாகும். நாளை எப்படியும் மருத்துவரைப் பார்த்தாக வேண்டும்.

      Delete
  12. நாராயணா...

    நல்ல வேளை நல்ல படியா வந்தாச்சு..

    ReplyDelete
    Replies
    1. நன்றி அனு ப்ரேம்.

      Delete
  13. திக் திக் சுவாரஸ்யமாக இருந்தது படிக்க...

    ReplyDelete
  14. வணக்கம் சகோதரி

    தாங்கள் நல்லபடியாக இந்தியா வந்ததற்கு சந்தோஷம் அடைகிறேன். ஒரு புடவை கட்டியதற்கு இத்தனை பிரச்சனையா? அது ஜரிகை வேய்த பட்டுப் புடவையா? எப்படியோ மனக்கலக்கத்தை காண்பிக்காமல் இருந்திருக்கிறீர்கள். நானாக இருந்தால் அழுகை முட்டி விடும். தங்களுக்கு கிடைத்த அனுபவங்களில் இது ஒரு விதமாக அமைந்து விட்டது.

    பேகிள்ஸ் உணவு பார்க்க நன்றாக உள்ளது பன்னில் இந்த மாதிரி கட் பண்ணி விதவிதமாக வருகிறதே..! எப்படியோ நல்லபடியாக பிரயாணம் அமைந்து வந்ததற்கு அந்த ஸ்ரீ ராமருக்கு நன்றி சொல்வோம்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கமலா, ஒரு காலத்தில் எனக்கும் எதற்கெடுத்தாலும் அழுகை வரும். கல்யாணம் ஆனதுமே படிப்படியாக அழுகை குறைந்து விட்டது. எதுவந்தாலும் என்ன என்னும் எண்ணம் மேலோங்கி விட்டது. ஆனால் இது ஊர் திரும்பும் விஷயம் ஆச்சே. ஆகவே கவலை வந்து விட்டது என்றாலும் மூளையா, மனதா எதுவெனத் தெரியவில்லை, துடைச்சு வைச்சாப்போல் எந்த நினைவுகளும் வந்து தாக்காமல் இருந்தது ராமஜபம் தவிர வேறே நினைவில் வரலை. அவங்க கேட்ட கேள்விகளுக்கே ஒரு முறைக்கு இருமுறை கேட்டுக் கொண்டு தான் பதில் சொல்ல வேண்டி வந்தது.

      Delete
  15. அன்பு கீதா,
    பயம் தரக் கூடிய அனுபவம் தான்.
    அதற்காக ஜரிகை தங்கம் என்று சொன்னாலதற்கேதாவது கேட்பார்கள்.

    இந்தத் தடவை உள்ளே வரும்போது கடுகடு ஆபீசர்.
    என்னவோ நாம் போகிறோம்,வருகிறோம்.
    ஒரே வலிக்கதைதான். இந்தத் தடவை ஜெட்லாக்
    படுத்தல் அதிகம்.இரண்டு மூன்று மணிகளுக்கு மேல்
    தூக்கம் வருவதில்லை.

    நம் எல்லோரின் மனவலி,உடல்வலி இல்லாமல் பகவான் பார்த்துக்
    கொள்ளட்டும்.



    ReplyDelete
    Replies
    1. வாங்க வல்லி, ரொம்பவே பயமும் கவலையுமாகத் தான் இருந்தது. இங்கே எங்களுக்கு ஜெட்லாக் படுத்தல் அதிகம் இல்லை. மாட்டுப்பெண்ணிற்கும், குழந்தைக்கும் இப்போத் தான் சரியாகிக் கொண்டிருக்கிறது. நேற்று மருத்துவரிடம் போயிட்டு வந்தாச்சு. முழங்கால் ரொம்பவே விறைப்பாக இருப்பதாகவும், அடிக்கடி நீட்டி மடக்குங்க என்றும் சொல்றார். வலியை யார் அனுபவிப்பது? :(

      Delete
  16. பயணங்களில் எப்பவுமே உங்களுக்கு சுவையான அனுபவங்கள்

    ReplyDelete
    Replies
    1. ஹாஹாஹா, வாங்க ஜிஎம்பி சார், எங்க ராசி போல!

      Delete
  17. வெள்ளி ஜரிகையா அக்கா ? அது கூடவா இப்படி அலார்ம் அடிக்க வைக்குது !!
    நான் மோஸ்ட்லீ மாட்டுவது ஜீன்ஸ் ஜிப் சாண்டல்ஸ் மற்றும் ஒரு pin  பின் எதுக்கும் அவசரத்துக்கு உதவுமென்னு :) இதனால்தான் :) என் கணவருக்கு பெல்ட் மற்றும் ஷூ சரி சரி எல்லாம் நல்லபடியா முடிந்ததே .கால் வலிக்கு உங்க வீட்டில் recline சோபா இருந்த ஆதில் அமர்ந்து காலை உயர்த்தி வைங்க படுக்கும்போதும் ஒரு தலையணை கெண்டைக்கால் ஏரியாவில் வைத்து உயர இருக்கமாதிரி படுங்க  

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஏஞ்சல், முழுக்க வெள்ளினு சொல்ல முடியலை. என்றாலும் உலோக ஜரிகை தான். எங்க மருமகள் என்னை ஜீன்ஸ் அல்லது சல்வார், குர்த்தா தான் பயணத்தின் போது போடச் சொல்லுவாள். கால் வலி எனக்கு வருஷக்கணக்கா இருந்து வருது. காலை எப்போவும் உயர்த்தி வைத்துத் தான் படுப்பேன். ஆனால் நீங்க சொல்றமாதிரி சோபாவில் அல்லது சேரில் உட்கார்ந்து காலைத் தூக்கிப் போட முடியாது. கால் ஒரு அளவுக்கு மேல் உயராது! ஆட்டோவில் ஏறவே கஷ்டம்! :(

      Delete
  18. அடடா....இப்படியும் சில சந்தர்ப்பங்களில் திடுக்கிடும் நிகழ்வுகள்.
    கால்வலி விரைவில் நலமாகட்டும்.

    ReplyDelete
  19. இதை முன்னமேயே படித்துவிட்டேன். பயணத்தில் இருந்ததால் கருத்திடவில்லை போலிருக்கு.

    நலமாக வந்து சேர்ந்துவிட்டீர்கள். சொந்தச் சமையல் ஆரம்பித்தாயிற்றா இல்லை கேடரர்தானா?

    ReplyDelete
    Replies
    1. வாங்க நெல்லைத் தமிழரே, இப்போதெல்லாம் உங்களை எங்குமே காணமுடியலை எ.பி தவிர்த்து. சொந்தச் சமையல் தான் எப்போவுமே! வேலை அதிகம் இருந்தாலோ வெளியே போகவேண்டி இருந்தாலோ காடரர்.

      Delete
  20. வெளிநாட்டு விமான பயணங்களில் இப்படி ஏதாவது சில சமயம் நடக்கும். எங்களுக்கு தெரிந்த ஒருவர ஒருமுறை சுவீடனுக்கு அலுவலக பணிக்காக சென்ற பொழுது, அவர் மனைவி, அவருடைய பர்சில் விபூதி பொட்டலத்தை வைத்து கொடுத்திருக்கிறார். அங்கு அதை ஏதோ போதை மருந்து என்று நினைத்து அவரை  படுத்தி எடுத்து விட்டார்களாம். எப்படியோ நல்ல விதமாக முடிந்ததே, கடவுளுக்கு நன்றி.  

    ReplyDelete