எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, February 12, 2020

தஞ்சையும் தமிழும்!

tanjore templeக்கான பட முடிவுகள்

தஞ்சைக் கோயில் குட முழுக்கு பற்றியும் அதைத் தமிழில் செய்ய வேண்டிய அவசியம் பற்றியும்   முகநூலில் "மத்யமர்" குழுமத்தில் ராஜ் ராஜேந்திரன்  என்னும் நண்பர் எழுதி இருந்தார். வடமொழி என்றால் வடக்கே இருந்து வந்த மொழி என்னும் கருத்தில் இருக்கிறார் போலும். வட மரம் என்றால் ஆலமரம் என்னும் பொருள்.  ஆல மரத்தின் பெயர் களுள் கோளி, பூதவம், கான் மரம், வட மரம், தொன் மரம், ஒதிய பழுமரம், கோளி, ஆலே என்றெல்லாம் அழைக்கப்படுவதாக திவாகர நிகண்டுவின் மரப்பெயர்த் தொகுதியிலும் சூடாமணி நிகண்டுவின் மரப்பெயர்த் தொகுதியிலும் குறிப்பிடப் பட்டுள்ளது. (நன்றி. விக்கிபீடியா).  ஆலமரத்தின் கீழிருந்து ஈசன் வாயால் வந்ததால் இது வடமொழி எனப்பட்டது. ஆனால் இதைப் புரிந்து கொள்ளாமல் இது பற்றிக் கூறும் நண்பர் மேலும் சொல்லுவதாவது!  அதில் அவர் வடமொழி பிழைப்புக்கான மொழி எனவும், ஆகமங்கள் ஈசனா ல் கொடுத்தவை அல்ல எனவும் விரைவில் அவை மறைய வேண்டும் எனவும் சொல்லி இருந்தார். தமிழில் படித்திருந்தாலும் ஆழமாய்ப் படிக்கவில்லையோ? திருமூலர் தனது திருமந்திரத்தில் "ஆகமச் சிறப்பு" என்னு பெயரிலேயே பாடல்கள் எழுதி இருக்கிறார். அது குறித்துத் தமிழ் விர்சுவல் பல்கலைக்கழகத்தில் சொல்லி இருக்கும் முன்னுரையைப் படித்தாலே போதுமானது. ஆகமங்கள் யாரால் கொடுக்கப்பட்டன என்பது.

2.4.3 வேத ஆகமச் சிறப்பு

வேதம், ஆகமம் என்ற இரண்டு நூல்களைப் பற்றியும் திருமூலர் குறிப்பிடுகிறார். இரண்டுமே இறைவனிடமிருந்து வந்தவை: வேதம் பொது; ஆகமம் சிறப்பு என்பதும் அவர் கருத்து. ஆகமம் என்ற சொல்லுக்கு ‘வந்தது’ என்பது பொருள். இச்சொல், சிவபெருமானிடமிருந்து இந்நூல்கள் வந்தன என்பதைக் குறிக்கிறது.

ஆகமம் என்ற சொல்லை மற்றொரு விதமாகவும் பிரித்துப் பொருள் காண்கிறார்கள். ஆ என்பது பாசம்; க என்பது பசு; ம என்பது பதி. எனவே இம்மூன்றையும் ஆகமம் கூறுகிறது.

திருமந்திரம் ஆகமத்தின் சாரமாக அமைந்திருந்தாலும் அனைவரும் உணரும் எளிமையும், இனிமையும் உடைய பாடல்கள் பலவற்றைத் தன்னகத்தே கொண்டுள்ளது. ‘

1 அஞ்சன மேனி அரிவை ஓர் பாகத்தன்

அஞ்சொடு இருபத்து மூன்று உள ஆகமம்

அஞ்சலி கூப்பி அறுபத்து அறுவரும்

அஞ்சா முகத்தில் அரும் பொருள் கேட்டதே.

2 அண்ணல் அருளால் அருளும் சிவா ஆகமம்

எண்ணில் இருபத்து எண் கோடி நூறு ஆயிரம்

விண்ணவர் ஈசன் விழுப்பம் உரைத்தனர்

எண்ணி நின்ற அப் பொருள் ஏத்துவன் யானே.

3 அண்ணல் அருளால் அருளும் திவ்யா கமம்

விண்ணில் அமரர் தமக்கும் விளங்க அரிது

எண்ணில் எழுபது கோடி நூறு ஆயிரம்

எண்ணிலும் நீர்மேல் எழுத்தது ஆகுமே.

4 பரனாய்ப் பரா பரம் காட்டி உலகில்

அரனாய்ச் சிவ தன்மம் தானே சொல் காலத்து

அரனாய் அமரர்கள் அர்ச்சிக்கும் நந்தி

உரன் ஆகி ஆகமம் ஓங்கி நின்றானே.

5 சிவம் ஆம் பரத்தினில் சத்தி சதாசிவம்

உவமா மகேசர் உருத்திர தேவர்

தவ மால் பிரமீசர் தம்மில் தாம் பெற்ற

நவ ஆகமம் எங்கள் நந்தி பெற்றானே.

6 பெற்ற நல் ஆகமம் காரணம் காமிகம்

உற்ற நல் வீரம் உயர் சித்தம் வாதுளம்

மற்று அவ் வியாமளம் ஆகும்கால் ஓத்தரந்து

உற்ற நல் சுப்பிரம் சொல்லு மகுடமே.

7 ஆகமம் ஒன்பான் அதில் ஆன நால் ஏழு

மேகம் இல் நால் ஏழு முப்பேதம் உற்று உடன்

வேகம் இல் வேதாந்த சித்தாந்த மெய்ம்மை ஒன்று

ஆக முடிந்த அரும் சுத்த சைவமே.

ஆகமங்கள் இறைவனால் கொடுக்கப்பட்டவை என்பதோடு தஞ்சைப் பெரிய கோயில் மகுடாகம முறைப்படி கட்டப்பட்டுக் குடமுழுக்கு நடத்தப்பட்ட கோயில் என்பதைப் பல கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன. மேலும் நீதிமன்றத்தால் ஆகம முறைப்படியான குடமுழுக்குச் செய்யலாம் என்று சொல்லப்பட்ட பின்னரும் இதைக் குறித்து விவாதிப்பதில் பொருள் இல்லை. வடமொழியில் கோயில்களில் வழிபாடு செய்வதன் மூலம் நாடு ஒருங்கிணைக்கப்படுகிறது. இமயம் முதல் குமரி வரை ஒரே மாதிரியான மொழியில் வழிபாடுகள் நடக்கின்றன என்பதால் மக்களுக்குப் புரிந்து கொள்ளவும் முடியும்.

tanjore templeக்கான பட முடிவுகள்

இங்கே தமிழில் செய்தால் வட நாட்டவர் இங்கே வந்தால் அவர்களுக்கு என்ன புரியும்? அவ்வளவு ஏன்? அண்டை மாநிலங்களில் கூட வடமொழியில் தான் வழிபாடுகள் நடக்கின்றன. அங்கெல்லாம் எந்தவிதப் பிரச்னையும் இல்லை. இங்கே தமிழ் நாட்டில் தான் தமிழ் ஆர்வலர்கள் எனச் சொல்லிக் கொண்டு வழிபாடுகளில் எல்லாம் அநாவசியமான தலையீடுகள்.  காஷ்மீர் முதல் கன்யாகுமரி வரையில் உள்ள அனைத்து இந்து சமயக் கோயில்கள் எல்லாம் வடமொழியில் வழிபாடுகள் செய்யப்படும் கோயில்களே! அதே போல் நம் சைவ சமயமும் இமயம் முதல் குமரி வரை பரவி இருந்தது. நேபாளத்தின் பசுபதிநாதர் கோயிலிலும் சம்ஸ்கிருத வழிபாடே. பத்ரிநாத்தில் நம் தென்னாட்டுத் தமிழர்களும், மலையாளத்துப் போத்திகளும் கோயில்களில் வழிபாடுகள் செய்கின்றனர். நம் தமிழகத்து ஆதிசங்கரர் சொன்ன விதிகளின்படி அங்கெல்லாம் வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. ஆனால் அங்கே எல்லாம் எந்தவிதமான தகராறுகளும் இல்லை. அவர்கள் இந்தக் கோயில் அர்ச்சகர்கள் தென்னாடு என்பதை நினைத்துக் கூடப் பார்ப்பதில்லை.

இது பொதுஜனங்களின் பொதுவான விருப்பம். தமிழ் வழிபாடு தேவை என்று சொல்லுபவர்களால் தேவார, திருவாசகங்களின் உட்பொருளை உணர்ந்து சொல்ல முடியுமா? அல்லது அவற்றைத் தடங்கல் இல்லாமல் படிக்கத்தான் முடியுமா? தமிழும், வடமொழியும் நம் நாட்டின் இரு கண்கள். நாட்டை ஒருங்கிணைப்பது அது தான். நாமும் அண்டை மநிலங்களுக்குப் போய் வழிபாடுகள் நடத்தவோ, அண்டை மாநிலத்தவர் இங்கே வந்து வழிபாடுகள் நடத்தவோ இது தான் ஏற்புடைய மொழி. என்னதான் சம்ஸ்கிருதம் செத்துவிட்டது எனக் கூறினாலும் இன்றளவும் உயிர்ப்புடன் இருக்கும் மொழி சம்ஸ்கிருதம். தமிழ் அதை வாழ வைத்துக் கொண்டு தான் இருக்கிறது. அதோடு இல்லாமல் சம்ஸ்கிருத  மந்திரங்கள் ஒலிக்கும் சப்தத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படுபவை. அவற்றில் ஒரு சின்ன ஒலி மாறுபாடோ சப்தத்தில் மாறுபாடோ இருந்துவிட்டால் விபரீத அர்த்தம் கொடுக்கும் என்பதோடு செய்யப்படும் கிரியைகளிலும் புனிதத்துவம் குறையும். கோயில்களின் இறைத்தன்மை, விக்ரஹங்களின் இறைத்தன்மை ஏற்றுவது எல்லாம் சிவாசாரியார்கள் சொல்லும் மந்திரங்களை அடிப்படையாகக் கொண்டே செய்யப்படுகிறது. பல்லாண்டுகள் மூடிக்கிடக்கும் ஒரு கோயிலைத் திறந்து எந்த சிவாசாரியாரும் உடனடியாக வழிபாடு செய்து விட முடியாது. அதைத் திறந்து வழிபாடு செய்வதற்கென உள்ள வழிமுறைகளின்படியே அவர்கள் செய்வார்கள். அதன் பின்னரே கோயிலைத் திறந்து உள்ளே செல்வார்கள். இங்குள்ள எந்த சிவாசாரியார்களும் எதுவும் தெரியாமல் கோயில்களில் வந்து வழிபாடு செய்வதில்லை. இதில் பிராமணர் என்ற ஜாதியினால் அவர்கள் சிவாசாரியார்கள் ஆவதும் இல்லை. பிராமணர் வேறு! சிவாசாரியார் வேறு. ஒருவருக்கொருவர் திருமண சம்பந்தம் செய்து கொள்வதும் இல்லை.


ஆகம மையம்

இந்தச் சுட்டியில் ஆகமங்கள் பற்றிய விரிவான தகவல்கள் கிடைக்கும். ஆனால் சில ஆகமங்கள் சம்ஸ்கிருதத்தில் அல்லது தேவநாகரியில் தான் படிக்கக் கிடைக்கும். நண்பர் ஒருவர் மகுடாகமம் புத்தகம் அனுப்புவதாகக் கூறி உள்ளார். அவரிடம் கேட்டு வாங்க வேண்டும்.

இங்கு நாத! நீ மொழிந்த ஆகமத்தின் இயல்பினால்
உனை அர்ச்சனை புரிய பொங்குகின்றது என் ஆசை'

இவை பெரிய புராணத்தில் சேக்கிழார் சொன்னது. ராஜராஜ சோழன் ஆகம முறைப்படி கோயில் கட்டவில்லை என்றாலோ ஆகம முறைப்படி வழிபாடுகளைச் செய்யச் சொல்லவில்லை என்றாலோ சேக்கிழார் இப்படிச் சொல்லி இருக்க மாட்டார் அல்லவா?  திருமூலர் ஆகமங்கள் ஈசன் வாயிலாக வந்ததாகவே சொல்லுகிறார். பின்ன நந்தி எம்பெருமான் ஈசனிடமிருந்து அறிந்து தன் சீடர்களுக்கு உபதேசித்ததாகக் கொள்வர். திருமூலர் நந்தி எம்பெருமானின் சீடர்களில் ஒருவர் ஆவார். ஆகவே ஆகமச் சிறப்பைப் பற்றி அவர் சொன்ன பாடல்களை மேலே பகிர்ந்திருக்கிறேன். ஆகமங்களையும், மறைகளையும் ஒதுக்கினால் அந்தக் கோயில்களில் இருந்து ஈசனே ஒதுங்கி விடுவார் என்றும் சேக்கிழார் சொல்லி இருக்கிறார். திருமுறையில் பெரிய புராணத்தில்

பொங்கு மாமறைப் புற்றிடங் கொண்டவர்
எங்கும் ஆகி இருந்தவர் பூசனைக்கு
அங்கண் வேண்டும் நிபந்தம் ஆராய்ந்துளான்
துங்க ஆகமம் சொன்ன முறைமையால்

சொல்லி இருப்பதோடு ஆகமங்களைத் "துங்க" என்றும் சொல்லி இருக்கிறார். "துங்க" என்றால் உயர்ந்த என்னும் பொருள் வரும். தஞ்சைப் பெரிய கோயில் ஆகம முறைப்படி கட்டப்பட்டிருப்பதை "தஞ்சாவூர்" என்ற கல்வெட்டு ஆராய்ச்சி நூல் கூறுகிறது. பின்னர் வந்த விஜயநகர சாம்ராஜ்யத்தின் ஆட்சியின் போதும், சரபோஜி மகாராஜா ஆட்சியின் போதும் எழுதப்பட்ட நூல்களான "ப்ருகதீஸ்வர மஹாத்மியம்" மற்றும் "தஞ்சைப் பெருவுடையார் உலா" போன்ற நூல்களில் இதற்கான குறிப்புகள் காணப்படுவதோடு "பெருவுடையார் உலா"வில்

'ஆதிசைவர் நீடு மகுடாகமத்தில் ஆட்டத்தில்
ஓதிசைவில் செய்பூசை உட்கொண்டு'

என்னும் வரிகள் இதை உறுதி செய்கின்றன. 28 ஆகமங்கள் உள்ளன எனச் சொல்லப்படும் சிவாகமங்களில் 17 ஆவது ஆகமம் மகுடாகமம். ஈசனின் உருவே ஆகமங்களால் ஆனது எனவும் அதில் மகுடாகமம் தான் ஈசன் தலை எனவும் கொள்வர். எல்லாவற்றிலும் சிறந்த மகுடாகம முறைப்படியே பெருவுடையாருக்குக் கோயில் எழுப்ப ராஜராஜன் நிச்சயித்திருக்கலாம். அதோடு அவன் தன் அரச வாழ்க்கையின் இறுதிப்பகுதியில் ஓர் யோகியாகத் தன்னை மாற்றிக்கொண்டு வாழ்ந்தான் எனவும் தன்னை அனைவரும் "சிவபாத சேகரன்" என்றே அழைக்க வேண்டும் என்றும் விரும்பினான். யோகங்களில் சிறந்ததாகக் கருதப்படும் இந்த மகுடாகமம் யோகிகள் தங்கள் தலை வழியாக இறை சக்தியோடு கலப்பதையும் குறிக்கும். தஞ்சைப் பெரிய கோயில் கருவறையும் அவ்வாறு ஏற்படுத்தப்பட்டதே!

ஒரு காலத்தில் தமிழ் படிப்பதெனில் இவை அனைத்தையும் அநேகமாகப் படிப்பார்கள் எனச் சொல்லிக் கேள்விப் பட்டிருக்கேன். குறைந்த பட்சமாகத் தேவார, திருமுறைகளோடு, கம்பராமாயணம், வில்லி பாரதம், சீவகசிந்தாமணி, மணிமேகலை, சிலப்பதிகாரம் ஆகியவற்றையும் முழுமையாக சங்கப்பாடல்களோடு கற்பார்களாம். அத்தோடு இல்லாமல் இவை அனைத்தையும் பண் அமைத்துப் பாடியும் மனனம் செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் ஆங்கிலேய ஆட்சி வந்து பள்ளிகளைத் திறந்து நம் கல்விக்கண் அவர்களால் திறக்கப்பட்டபோது இவை எல்லாம் காலப்போக்கில் மெல்ல மெல்ல நின்று போனது.,  நாங்கள் எல்லாம் படிக்கும்போது கூட ஔவையாரின் நீதி போதனைகள், நாலடியார், பதினெண் கீழ்க்கணக்கு, திரிகடுகம் என்றெல்லாம் ராமாயணம், பாரதத்தோடு படித்தோம். பெத்லகேம் குறவஞ்சி, சீறாப்புராணம் என்றெல்லாம் படித்தோம் ஆனால் சமீப காலங்களில் அதாவது கடந்த ஐம்பதாண்டுகளில் இவை எதுவுமே இல்லை என்பதோடு இப்போதெல்லாம் இத்தகைய இலக்கியச் சிறப்பு வாய்ந்த தமிழின் பக்கமே நம் மக்கள் போவதில்லை. ஆகவே அவர்கள் நாம் தமிழில் படிப்பதெனில் இவ்வளவு எளிதாகப் படிப்பது தான் என நினைத்துக்கொண்டு இருக்கின்றனர்.

அறிவியல் சொற்கள் தமிழில் குறைவு. நல்ல அறிவார்ந்த தமிழர்களால் தான் அத்தகைய சொற்களை ஏற்படுத்த முடியும். ஆனால் இந்தக் காலங்களில் அத்தகைய தமிழ்ச் சொற்கள் இல்லாததோடு எல்லாவற்றிலும் இந்தப் "பண்ணு தமிழ்" புகுந்து கொள்கிறது. அல்லது தமிங்கிலீஷில் எழுதிப் படிக்கின்றனர். என்னத்தைச் சொல்ல! எனக்குத் தெரிந்து தமிழ் மொழி இப்போது இணையத்தில் சந்தவசந்தம் என்னும் குழுமத்தின் மூலமும் அந்தக் குழுமத்தில் உள்ள தலை சிறந்த ஆசிரியரான திரு இலந்தை ராமசாமி அவர்களாலும் அவரின் சீடர்களாலும் இன்னமும் கொஞ்சம் உயிர் வாழ்கிறது. நல்ல விஷயங்களைப் படிக்கவும் கேட்கவும் முடியும்.  மரபு வழியிலான கவிதைகளை அங்கே மட்டும் பார்க்கலாம். முகநூலிலும் மாலா மாதவன், கீதா எம்.சுதர்சனம், சாந்தி மாரியப்பன், ஜேகே கண்ணன் போன்றோர் ஆசுகவிகளாக இருக்கின்றனர். இவர்களில் பெண்கள் மூவரும் இலந்தையாரின் சிஷ்யைகள்.  ஜேகே கண்ணன் அபிராமி அந்தாதியைப்போல் அபிராமி அம்மன் மேல் தானும் ஓர் அந்தாதியை இயற்றி வருகிறார். இவர்களை எல்லாம் பொறாமையுடன் பார்த்துப் பாராட்டுவதைத் தவிர நான் ஏதும் செய்வதில்லை. :(

இதில் முதல் பகுதி முகநூலின் "மத்யமர்" குழுமத்தில் என்னால் வெளியிடப்பட்டது. மற்றவை பிற்சேர்க்கை.

25 comments:

  1. அனைத்தையும் அரசியலாக்க முயற்சிக்கிறார்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க முனைவர் ஐயா, சரியாகச் சொன்னீர்கள்!

      Delete
  2. மிகச் சிறந்த கட்டுரை கீதாமா. யூடியூபில் சங்கரரே
    தன்னைத் திராவிட சிசு என்று சொல்லிக் கொண்டு தமிழில் இருந்து வந்த மொழியே சம்ஸ்கிருதம் என்று சொல்வதைப் படித்தேன்.

    நீங்கள் சொல்வது போல நானும் படிக்கும்போது
    எல்லாமே இருந்தது.தமிழில் மதிப்பெண் வாங்குவது அவ்வளவு கடினம்.
    அத்தகைய ஒழுக்கத்தோடு கற்றுக் கொடுத்தார்கள்.

    நம் தமிழ்த் தாத்தா செய்ததை விட இவர்கள் செய்துவிடப் போகிறார்கள என்று தெரிய வில்லை.
    எதையுமே பழிக்காமல் இருக்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வல்லி, அப்போல்லாம் பத்தாம் வகுப்பில் தமிழ்ச் சங்கம், சென்னைத் தமிழ் மன்றம் இரண்டும் சிறப்புத் தேர்வு தனியாக நடத்துவார்கள். இதை எழுதுவதும், எழுதாததும் நம் விருப்பம் என்றாலும் பெரும்பாலான மாணவர்கள் எழுதுவார்கள். நான் இரண்டிலும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றேன். சங்கத்தில் தேர்ச்சி பெறுவதே கடினம். கேள்விகள் அத்தனை கடினமாக இருக்கும்.

      Delete
  3. அங்கேயே படித்தேன்.

    ReplyDelete
  4. விரிவான நிறைய விடயங்கள் அறிந்தேன்.

    ReplyDelete
  5. வணக்கம் சகோதரி

    நல்ல விரிவான கட்டுரை. மிக அழகாக தொகுத்து எழுதியுள்ளீர்கள். தேவ பாஷை யான சமஸ்கிருதத்தின் தேவைகளையும், அது தமிழால் மேன்மைபடுவதையும் மிக அழகாக சுட்டிக்காட்டியுள்ளீர்கள். என் புகுந்த வீட்டு உறவுகள் சமஸ்கிருதம் கற்ற்றவர்கள். அதன் உச்சரிப்பு பிறழாமல் இருந்தால்தான் அதற்கு இனிமை.

    என் பெரிய மகன் சென்னை மைலாப்பூர் சாவித்தரி அம்மாள் பள்ளியில் சமஸ்கிருதம் முதல்பாடம் எடுத்து பயின்றவர். பத்தாவதில், மாநிலத்திலேயே சமஸ்கிருத பள்ளிகளில், முதலாவதாகவும்,படித்த பள்ளியில் முதல் மாணவராகவும் தேர்ச்சி பெற்று எங்களுக்கு பெருமை தேடி தந்தவர்.
    அதன் பின் என் கணவருக்கு அலுவலகத்தில் ஊர் மாற்றங்களினால் அவர் வாழ்க்கை முறையில் மாற்றங்கள் நிகழ்ந்து விட்டன.

    நீங்கள் மிகவும் அழகாக எழுதியுள்ளீர்கள். உங்கள் தெளிவான எழுத்து வன்மைக்கு என்னுடைய பணிவான நமஸ்காரங்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கமலா, சென்னை அஹோபில மடம் பள்ளியில் கட்டாயமாக சமஸ்கிருதம் உண்டு. ஒரு சில முஸ்லிம் மாணவ, மாணவிகள் அதிலே தங்கப்பதக்கம் வாங்கி உள்ளார்கள். எங்க பெண், பிள்ளை இருவரும் கேந்திரிய வித்யாலயாவில் படித்ததால் எட்டாம் வகுப்பு வரை சமஸ்கிருதம் கட்டாயமாய் உண்டு. இருவருக்கும் நன்றாகத் தெரியும். என் அப்பா குடும்பத்தில் அநேகமாக அனைவரும் அத்யயனம் செய்தவர்கள். என் அண்ணா பிள்ளையும் அத்யயனம் செய்திருக்கிறார். சென்னை சமஸ்கிருதக் கல்லூரியில் எத்தனையோ பெண்கள், ஆண்கள் இன்னமும் சம்ஸ்கிருதம் பயின்று கொண்டு வருகிறார்கள். ஒவ்வொரு உச்சரிப்பிலும் அந்தக் குறிப்பிட்ட வார்த்தையின் பொருளே மாறும். மற்றபடி உங்கள் பாராட்டுக்கு என்னை நான் தகுதியானவளாக மாற்றிக்கொள்ள முயற்சி செய்கிறேன்.

      Delete
  6. நான் காலையிலேயே வந்து படிச்சுப் பார்த்தேன் புரியவில்லை, விட்டுப்போட்டு மீண்டும் வந்தேன் இப்பவும் புரியவில்லை கீசாக்கா.. ஆனா பல விசய்ங்கள் அறிஞ்சு கொண்டேன்.

    ReplyDelete
    Replies
    1. அது ஒண்ணும் பெரிய விஷயம் இல்லை அதிரடி, தஞ்சைப் பெரிய கோயில் கும்பாபிஷேஹத்தில் தமிழில் தான் நடத்தவேண்டும் என இங்குள்ள சில தனித்தமிழ் ஆர்வலர்கள் கருத்து. அதைப் பற்றிய ஒரு வாத, விவாதத்தில் முகநூலில் ஒரு குழுமத்தில் நான் போட்ட இந்தப் பதிவை இங்கே என்னுடைய தனிப்பட்ட சேமிப்புக்காகப் போட்டேன். அவ்வளவு தான். கோயிலில் எப்போதும் போல் சம்ஸ்கிருதத்தில் மந்திரங்கள் சொல்லிக் கும்பாபிஷேஹம் நடைபெற்று முடிந்து விட்டது. கூடவே ஆதீனகர்த்தாக்களும், ஓதுவார்களும் தேவார, திருவாசகங்களையும் ஓதினார்கள்.

      Delete
  7. முக நூலில் படித்தேன். விரிவாக, தெளிவாக எழுதியிருக்கிறீர்கள். வாழ்த்துகள். 
    நாங்கள் படிக்கும் பொழுதும் நாலடியார், திரிகடுகம், பழமொழி, பக்தி இலக்கியங்கள், என்று எல்லாம் படித்தோம். சமீப காலத்தில் பக்தி இலக்கியங்களை அப்படியே ஓரம் கட்டி விட்டார்களாம். கடவுள் வாழ்த்து என்பது சுத்தமாக கிடையாதாம். பதினோராம் வகுப்பு துணைப்பாடத்தில் இசைத்தமிழர் இருவர் என்ற பகுதியில் இளையராஜாவைப் பற்றியும், ஏ.ஆர்.ரஹ்மானைப் பற்றியும் இணைத்திருக்கிறார்களாம். வெளங்கிடும்!

    ReplyDelete
    Replies
    1. வாங்க பானுமதி, இது சமீபகாலம்னு எல்லாம் இல்லை. எனக்குத் தெரிந்து சுமார் முப்பதாண்டுகளாக இவை எதுவும் இல்லை. 90களின் கடைசியிலும், 2000 ஆம் ஆண்டுகளிலும் அதன் பின்னர் சமீபத்தில் 2,3 ஆண்டுகளுக்கு முன்னரும் சில குழந்தைகளுக்குப் பாடங்கள் கற்பதில் அதிலும் மொழிப்பாடத்தில் உதவி செய்தப்போப் பார்த்து மனம் வெடித்து விட்டது! ஆனால் குழந்தைகள் அந்த எளிமையான பாடத்தைக் கற்கவே திணறினார்கள்! அவ்வளவு மோசமான கல்வி முறை!

      Delete
  8. தமிழ் நாட்டில்மந்திரங்கள் உச்சரிப்பும் வடநாட்டில் மந்திரங்கள் உச்சரிப்பு வெகுவாக் மாறி இருக்கும் மந்திரங்களி புனிதமே உச்சரிப்பில்தான் இருக்கும் என்பதைபுரிந்து கொள்வது கொஞ்சம் சிரமமே

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஜிஎம்பி ஐயா, உங்கள் கருத்துக்கு நன்றி. உச்சரிப்பு ஒன்றாகவே இருக்கும். அவர்கள் தொனிக்கும் நம்மவர்கள் தொனிக்கும் மாறுபாடு உண்டு. என் கணவர், பிள்ளை இருவரும் குஜராத்தில் ஆவணி அவிட்டத்தின் போது அங்கே உபாகர்மாவுக்குச் சென்றிருக்கின்றனர். எல்லாச் சடங்குகளும் தமிழ்நாட்டை விட விரிவாகவும் நன்றாகவும் செய்தார்கள் எனவும் மந்திரங்களில் சிறிது கூட வித்தியாசம் இல்லை எனவும் சொன்னார்கள்.

      Delete
  9. விரிவான கட்டுரை.

    இங்கே பல விஷயங்கள் அரசியலாக்கப் படுகின்றன. வேறொன்றும் சொல்வதற்கில்லை.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வெங்கட், நீங்க சொல்வது சரிதான்.

      Delete
  10. >>> ஆங்கிலேய ஆட்சி வந்து பள்ளிகளைத் திறந்து நமது கல்விக் கண் அவர்களால் திறக்கப்பட்ட போது -<<<

    வைரமுத்துவும் இப்படித்தான் சொல்லியிருக்கிறார்...

    ஆக, கண் - கல்விக்கண் நமக்கு இருந்தது என்பதாவது இங்கு ஒப்புக் கொள்ளப்பட்டிருக்கிறது...

    சிறப்பாக எழுதியிருக்கின்றீர்கள்...

    ReplyDelete
    Replies
    1. வாங்க துரை, அந்த வரிகளுக்குப் பின்னர் நான் போட்டிருந்த :))))) சிரிப்புக்கான அடையாளமும் :P இந்த அடையாளமும் பதிவாகாமல் விட்டுப் போயிருக்கு! இப்போதுள்ளவர்கள் ஆங்கிலேயன் வந்தே நம் கல்விக்கண்ணைத் திறந்ததாகச் சொல்லுவதைக் கிண்டல் செய்யவே அங்கே இப்படிக் குறிப்பிட்டேன். உண்மையில் அதைவிடவும் தொழில்நுட்பத்தில் சிறந்தவர்களாகவும் மொழிகளில் தேர்ச்சி பெற்றவர்களாகவும் இருந்த நம்மவர்கள் அதன் பின்னரே எல்லாவற்றிலும் தாழ்ந்தவர்கள் ஆனோம் என்பதே என் திட்டவட்டமான கருத்து.

      Delete
  11. தமிழ் நம் தாய்மொழி. நமக்கான அனைத்தும் தமிழில் தான் இருக்க வேண்டும். இந்த பதிவை நீங்கள் வட மொழியில் எழுதி இருந்தால் யாருக்குப் புரிந்திருக்கும்? தமிழில் அர்ச்சனை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையில் தவறில்லை. அதைப் புரிந்து கொள்வதில் தான் தவறு இருக்கிறது.

    நமது வலைத்தளம் : சிகரம்
    இலக்கியம் | அரசியல் | விளையாட்டு | பல்சுவை | வெள்ளித்திரை | தொழிநுட்பம் -அனைத்துத் தகவல்களையும் அழகு தமிழில் தாங்கி வரும் உங்கள் இணையத்தளம் - #சிகரம்

    ReplyDelete
    Replies
    1. தமிழில் வழிபாடு செய்வது வேறு, கோயிலின் கருவறையில் சொல்லப்படும் மந்திரப் பிரயோகம் வேறு. இந்த வேறுபாட்டைப் புரிந்து கொண்டாலே போதுமானது. அப்பர், சம்பந்தர், சுந்தரர் எனப் பல நாயன்மாரும் தமிழில் தான் பாடல்கள் பாடி வழிபட்டிருக்கின்றனர். அவர்களில் யாரும் எப்போதும் கோயிலின் கருவறையில் செய்யப்படும் சடங்குகள் விஷயத்தில் தலையிட்டதில்லை. சேர, சோழ, பாண்டிய,பல்லவ, நாயக்க மன்னர்களில் எவரும் தலையிட்டதும் இல்லை. தலையீடு கடந்த நூறு வருஷங்களாகத் தான்!

      Delete
  12. தமிழில் அர்ச்சனை புரிந்துகொள்ளக்கூடியது. ஆகம்ம் அதற்குரிய மொழியில்தான் இருக்கணும்.

    கோவில்களில் இறை பனுவல்கள் தமிழில் ஓதப்படுகின்றன.

    தமிழில் குடமுழுக்கு என்று சொல்பவர்களில் பெரும்பாலானவர்கள் மழைக்கு கோவிலுக்கு ஒதுங்கினவர்கள். ஏன் இஸ்லாமியர்கள் தமிழில் குரான் ஓதக்கூடாது, ஏன் லத்தீன் வார்த்தைகள், வடமொழி வார்த்தைகள் கிறித்துவ வழிபாட்டில் இருக்கணும் என்று கேட்காமலிருப்பதிலேயே இவர்களது தபிழார்வம் புலப்படும்.

    ReplyDelete
  13. விரிவாக தந்துள்ளீர்கள்.

    ReplyDelete