எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, March 15, 2020

தொலைந்து போன பாரம்பரியங்கள்!

பாரம்பரியத் தொழில் அந்த அந்தக் குடும்பத்து வாரிசுகளால் கடைப்பிடிக்க வேண்டும் என்னும் பொருளில் வந்த ஒரு வீடியோவில் அதைச் சொன்னவரைப்  பற்றி ஒரு பதிவு முகநூலில் பார்த்தேன்.  பி.ஏ. எம்.ஏ. எனப் படித்தால் மட்டும் வேலை கிடைத்து விடுமா என்றும் சொல்லி இருந்தார். ஏனெனில் இவை இரண்டுமே வெறும் பட்டமே. இதை வைத்துக் கொண்டு அரசு உத்தியோகத்தில் எழுத்தராகப் போகலாம். ஆனால் வாழ்க்கையில் முன்னுக்கு வர முடியாது. ஆகவே தச்சர் பரம்பரை வாரிசுகள் தச்சுத் தொழிலிலும், நாவிதப் பரம்பரை அவங்க பரம்பரை வைத்தியத் தொழிலும், வண்ணார்கள் பரம்பரையும் அவங்க பரம்பரையான துணிகளைப் பராமரிப்பது பற்றியும் தெரிந்து வைத்துக் கொண்டால் அவர்கள் படித்த படிப்பை வைத்துத் தொழில் ஆரம்பித்து மேம்பட்டுக் கொள்ளலாம் என்பது தான் அவர் சொல்ல வந்தது. ஆனால் வழக்கம் போல் நம் மக்கள் குலத்தொழில் கல்வியைக் கற்கச் சொல்கிறார் என அவரைக் குற்றம் சொல்லிவிட்டு பிராமணர்கள் மட்டும் படிக்கலாமா, அவங்க மட்டும் ஏன் வேத அத்யயனத்தோடு நிறுத்தக் கூடாது என்றெல்லாம் கேட்டிருந்தனர். அதற்கு நான் எழுதிய பதில்/விளக்கங்களும் அதற்கான எதிர்வினைகளும். "கீதா" என்னும் பெயரில் என்னுடைய கருத்துகள். பெயர் குறிப்பிடாமல் பதிவரின் கருத்துகள்.  இப்போதைய காலகட்டத்தில் பல பாரம்பரியத் தொழில்கள் முற்றிலும் நசிந்து விட்டன. நடுவில் வந்த ஆங்கிலேய ஆட்சி அனைத்துப் பாரம்பரியங்களையும் அழித்து ஒழித்துவிட்டது. பூக்கட்டுவது கூட ஒரு பாரம்பரியம் தான். எல்லோருக்கும் அப்படி அழகாகப் பூக்கட்ட வராது.  மதுரையில் இன்றளவும் பூக்காரத் தெரு, வளையல்காரத் தெரு (இப்போப் பெயர் மாறி இருக்கோ) என்றெல்லாம் உண்டு. பிராமணர்களில் பல சமையல் வல்லுநர்கள் அந்தக் காலங்களில் ஓட்டல் வைத்து நடத்திக் கொண்டிருந்தனர். இப்போதைய காலங்களில் அவர்களின் வாரிசுகளே பெருமளவு சமையல் ஒப்பந்தக்காரர்களாகக் கல்யாணங்கள், பெரிய விசேஷங்கள், அரசு விழாக்கள் எனக்  கோலோச்சிக் கொண்டிருக்கின்றனர். இதை மறுக்க முடியாது.

கீதா There are so many doctors and engineers who are still practicing veda parayana and doing agnihothram daily. So many efficient persons are in this field. And nowadays in veda patasalas they also teaching in normal education system. It includes veda adyayanam.

சிநேகிதி  LB வேத பாராயணத்தை மட்டும் பார்ட் டைமா பண்ணுவாங்க, ஆனா தச்சனும், வண்ணானும் மட்டும் ஃபுல் டைமா அவங்க குலத் தொழிலையே பண்ணனும், பி.ஏ எம்.ஏ பண்ணக் கூடாதுன்ற செலக்டிவ் வர்ணாசிரமத்தைத்தான் கேள்வி கேட்கிறோம்

கீதா  you are totally wrong and diverting the main message

சிநேகிதி அந்த வீடியோ பாத்தீங்களா?

கீதா   Lakshmi Balakrishnan No need. You people are seeing things. Not looking into it.

சிநேகிதி அந்த வீடியோவ பாக்காம, அதைப் பத்தின என் கருத்துக்கு நீங்க ஒரு பதில் சொல்வீங்க. அதுக்கு நான் பதில் சொன்னா நான் விஷயத்தை திசை திருப்பறேன்னு வேற சொல்வீங்க. இது என்ன மாதிரியான விவாதம்?

கீழே இருப்பவை வேறொருத்தரின் பதிலைப் பார்த்துட்டுச் சொன்னதுஎன் கருத்து.  .

நடுவில் ஆசான் (ஐயப்பன் கிருஷ்ணன்) வந்து வேறொரு வீடியோவைக் காட்டினார். அதில் பட்டமேல்படிப்புப் படித்த பெண் கழிவறையைக் கழுவதற்குத் தேர்ந்தெடுக்கப் பட்டதற்கான கருத்து ஸ்ரீநிவாசன் ஐயர் என்பவரால் பதிவிடப்பட்டிருந்தது. அந்தப் பெயர்/ அடையாளம் தவறென முகநூல் சுட்டிக் காட்டிவிட்டது.

கீதா ஆசானே, தில்லியில், மற்றும் உத்தரப்பிரதேசத்தில் சுலப் இன்டர்நேஷனல் மூலம் கட்டப்பட்ட கழிவறைகளைச் சுத்தம் செய்வது பிராமணர்களே! அவர்களில் பலரும் நல்ல படிப்புப் படித்தவர்களே!

கீதா வேத பாராயணத்தைப் பகுதி நேரத் தொழிலாக வைத்துக்கொள்ளுவதில்லை. ஆசான் நன்கு அறிந்த மருத்துவர் வாசுதேவன் அவர்களின் மகன் சம்ஸ்கிருதம் மற்றும் இன்னும் சில விஷயங்களில் குறிப்பிடத்தக்க அளவுக்குப் படித்தவர். தமிழிலும் வல்லவர். வான சாஸ்திரத்திலும் வல்லவர். அவர் நெரூரில் காஞ்சி மடம் நடத்தும் பாடசாலையில் தான் வேதம் கற்பிக்கிறார். முழு நேரமாக. மற்றவை தான் அவருக்குப் பகுதி நேரத் தொழில்கள். அவரைப் போல் இன்னும் சில இளைஞர்களும் எங்கள் சொந்தத்தில் இருக்கின்றனர். அதில் ஒருவர் இஞ்சினியர், இன்னொருவரும் மருத்துவர்.காஞ்சி மடம் நடத்தும் கல்லூரிகளில் கற்பிக்கின்றனர்.

மேலும் வர்ணாசிரமத்துக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. உண்மையில் வர்ணாசிரமம் என்றால் என்ன என்பதே யாருக்கும் புரியலை. வர்ணாசிரமப்படி யார் வேண்டுமானாலும் பிராமணன் ஆகலாம். அதே போல் ஓர் மஹரிஷியின் மகனாக இருந்தாலும் வைசியன் ஆகலாம். அது அவர் செய்யும் தொழிலைப் பொறுத்து. விசுவாமித்திரர் ஓர் அரசர். தவம் செய்து அதன் மூலம் பிராமணர் ஆனவர். அவரால் உபதேசிக்கப்பட்ட காயத்ரி ஜபமே இன்றைக்கும் இந்தியா முழுவதும் ஒவ்வொரு பிராமணர்களின் வீடுகளிலும் எதிரொலிக்கிறது. வேதங்களைத் தொகுத்து அளித்தவரும் இன்றைக்கும் அனைவருக்கும் குருவாக வணங்கப்படுபவரும் ஆன வேத வியாசர் ஓர் மீனவப்பெண்ணின் வயிற்றில் பிறந்தவர். பீஷ்மரால் விஷ்ணு சஹஸ்ரநாமம் போதிக்கப்பட்டது.  வர்ணாசிரமத்தில் ஜாதி வேறுபாடு கிடையாது. ஜாதி வேறுபாடுகளே கடந்த 200, 300 வருடங்களில் உருவாக்கப்பட்டவை.


கீதா குறிப்பிட்ட வீடியோ எனக்கும் வந்து நானும் பார்த்துவிட்டேன். ஆதலால் தான் இப்போது தேவை இல்லை என்றேன். அதோடு நீங்கள் என்னமோ எல்லோருக்கும் பிராமணர்கள் சேர்ந்து அநீதி இழைத்துவிட்டதாக ஒரு மாற்றமுடியாத எண்ணத்தில் இருப்பதால் உங்களிடம் எதுவும் எடுத்துச் சொல்லுவதில் பலனில்லை. அதனாலும் விலகிப் போனேன். முடிந்தால் தரம்பால் அவர்களின் புத்தகம் The Beautiful Tree தரவிறக்கிப் படித்துப் பாருங்கள். பதினெட்டாம் நூற்றாண்டில் தமிழ்நாட்டில் கல்வி கற்றவர்களில் பெரும்பாலும் நாவிதர்களே அதிகம் என்பது புரியவரும்.

சிநேகிதி  நீங்க சொல்ற புத்தகத்தை நிச்சயம் நான் படிக்கறேன். அதே போல எனக்கு முன்முடிவுகள்னு சொல்லிட்டே நீங்க முன்முடிவுகளோடு உழலாம, நான் சொல்வதில் இருக்கும் அடிப்படை உண்மையை எதிர்கொள்ள முயலுங்கள்.

கீதா அடிப்படை என நீங்கள் சொல்லுவதே தப்பு! நீங்க பொங்கும் அளவுக்கு என்னால் பொங்கவெல்லாம் முடியாது. ஏனெனில் கடந்த காலச் சரித்திரம் என நீங்கள் கற்றது உங்களை அப்படிப் பேச வைக்கிறது. அது சரித்திரமே அல்ல என்பது தெரியும்போது ஒருவேளை மாறலாம். இதிலே ஒரு அடிப்படை உண்மையும் இல்லை. இந்தக் காலத்தில் எவருக்கும் அடிப்படைக் கல்வியோ, பள்ளிக் கல்வியோ, பட்டக் கல்வியோ யாரும் இல்லை என மறுப்பதில்லை. கிராமப்புற மாணவர்கள் படிப்பில் சர்வதேச அளவுக்குத் தரமான படிப்பைப்பெறவேண்டும் என்பதற்காகவே "நவோதயா" பள்ளிகள் தமிழ்நாட்டுக்கு வரவேண்டும் என விரும்புகிறோம். அந்தப்பள்ளிகள் வந்துவிட்டால் எந்த கிராமப்புற மாணவனும் "நீட்" என்ன சர்வதேசக் கல்வித் தேர்வுகளிலும் போட்டி இட முடியும். முதலில் அதைப் புரிந்து கொண்டு செயல்படுங்கள். நாவிதன் மகனோ, வண்ணான் மகனோ, தச்சன் மகனோ அவரவர் விரும்பிய கல்வியைக் கற்க முடியும்.  அவர்கள் கவைக்கு உதவாத வெறும் பட்டப்படிப்போடு நிறுத்திக்கொள்ள வேண்டாம் என்னும் எண்ணத்தைப் புரிந்து கொள்ளவேண்டும். நாம் மட்டும் நவோதயாப் பள்ளிகளை ஆதரித்தால் கிராமத்துச் சிறுவர்கள் அனைவரும் உயர்கல்வி பெறுவார்கள். இதைச் சிந்திக்க நாம் மறுப்பதோடு அல்லாமல் அவர்களைக் குலத் தொழிலைக் கற்கச் சொல்லுவதற்கும் எதிர்ப்புத் தெரிவிக்கிறோம். இது நாம் அவர்களுக்குச் செய்யும் பெரிய துரோகம் என்பதை உணராமல் அவர்களை உயர்த்துவதாக நினைத்துக்கொண்டு மேலும் மேலும் தாழ்ந்து போகும்படி செய்கிறோம். முதலில் இதை அந்த இளைஞர்கள் உணர வேண்டும்.

 சிநேகிதி  ஒகே, உங்களுக்கு இந்த ஒரு பார்ட்தான் சிக்கல்னா அதை விட்ருவோம். சரி, எல்லாரும் ஏன் வேதம் *மட்டுமே* படிக்காம, வேறு விஷயங்களை படிச்சு, வருமானத்துக்காக வேறு தொழில் செய்யணும்? ஏன் வேதபரிபாலனம் மட்டுமே போதும்னு இருக்கக் கூடாது? வண்ணானுக்கு பிஏ எம் ஏ சோறு போடாதுன்னா, பிராமணனுக்கு மட்டும் எப்படி எம்.பி.பி.எஸ் சோறு போடலாம்? எம்.பி.பி.எஸ் நாவிதர்களுக்குத்தானே சோறு போடணும்? இதான் என் கேள்வி. அதை விட்டுட்டு நீங்க எவ்ளோதான் சுத்தி சுத்தி அடிச்சாலும் உண்மை அப்படியே நிக்கும்.

கீதா இதிலே ஒரு உண்மையும் கிடையாது. சும்மா வளைச்சு வளைச்சுப் பேசினா அது உண்மை ஆகவும் ஆகாது. வேதம் படிச்சு எல்லோருமே வைதிகர்களாக அன்றும், இன்றும், என்றும் போனதில்லை. அதோடு முன்னெல்லாம் வேத பரிபாலனம் செய்பவர்களுக்குப் பாதுகாப்பு, உணவுக்கு உத்தரவாதம் எல்லாம் இருந்தன. இப்போது அவை எதுவும் இல்லை. நான் சொல்பவர்களில் பலரும் வேத பரிபாலனம் மட்டுமே போதும் என இருப்பவர்களே! வண்ணான் ஆகட்டும், பிராமணன் ஆகட்டும், நாவிதன் ஆகட்டும், இந்தக் காலத்தில் பி.ஏ. எம்.ஏ. எல்லாம் வெறும் பட்டம் தான். சோறு போடாது. தொழில் கற்றுக்கொண்டால் சோறு போடும். அதைத் தான் அந்த வீடியோவில் சொல்லி இருக்கிறது. புரிந்து கொள்ள முடிந்தால் புரிந்து கொள்ளுங்கள். இங்கே யாரும், யாரையும் படிக்க வேண்டாம் என்றோ பட்டம் பெற வேண்டாம் என்றோ சொல்லவில்லை. அது மட்டும் போதாது என்றே சொல்லப்படுகிறது.

சிநேகிதி தொழிற் பயிற்சி வேணும்னு சொல்றதுக்கும், அவனவன் குலத்தொழில அவனவன் செய்ய வேண்டியதுதானேன்னு சொல்றதுக்கும் நிறைய வித்யாசம் இருக்கு. தனக்கிருக்கும் ஆன்மீக அதிகாரத்தின் மமதையோடு இதை சொல்வதற்கும், வேலையில்லா இளைஞர்களின்பாற் கொண்ட உண்மையான அக்கறையோடு தொழிற்பயிற்சியின் முக்கியத்துவம் பற்றி பேசுவதற்குமான வேறுபாடு ஒருபோதும் உங்களுக்குப் புரியப் போவதில்லை

மேலும் இதற்கு மேல் இந்த விஷயத்தை உங்களோடு விவாதிப்பதில் பொருளிருப்பதாக நான் நினைக்கவில்லை. lets agree to disagree.

//ஆன்மீக அதிகாரத்தின் மமதையோடு//

கீதா   நம்  சிநேகிதி அந்த வீடியோவில் உள்ளவர் ஆன்மிக அதிகாரத்தின் மமதையோ
டு குலத்தொழிலைக் கற்கவேண்டும் என்று சொல்லி இருப்பதாகச் சொல்கிறார். அது எனக்குப் புரியவில்லை. முதலில் ஆன்மிக வாதிகளே வெகு குறைவு. ஆனால் இப்போதெல்லாம் பக்தியை ஆன்மிகம் எனத் தவறாகப் புரிந்து கொள்கின்றனர். நான்கைந்து கோயில்கள் பற்றியும், வேறு சில பக்திக் கதைகளையும் பகிர்ந்து கொண்டால் "ஆன்மிக எழுத்தாளர்" பட்டம் எளிதாகக் கிடைத்து விடுகிறது. எனக்கும் அப்படி ஒரு பெயர் இருக்கிறது. ஆனால் ஆன்மிகத்துக்கும் எனக்கும் ஏணி வைத்தால் கூட எட்டாது! எங்கோ தொலைவில் இருப்பதைப் பார்த்துப் பெருமூச்சு விடுவதோடு சரி.

கீதா முக்கியத்துவம் பற்றி பேசுவதற்குமான வேறுபாடு ஒருபோதும் உங்களுக்குப் புரியப் போவதில்லை.// இதைத் தான் முன்முடிவு என்றேன். என்னைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? :)))) குலத் தொழில் பரம்பரையாக வருவது. ஆகவே அதைத் தன் தகப்பனிடமிருந்தோ, பாட்டன், மாமனிடமிருந்தோ எளிதாகக் கற்கலாம். அந்த நுணுக்கங்களைத் தங்கள் வாரிசுகளுக்கு பெரியவர்களும் கற்பிப்பார்கள். அதுவே வெளியிலிருந்து வந்த மாணவன் எனில் தொழில் கற்றுக் கொடுப்பார்களே தவிர்த்து நுணுக்கங்கள்? எதிர்பார்க்கவே முடியாது!

கீதா எனக்கு ஒன்றும் நஷ்டம் இல்லை. நீங்கள் ஏற்கவில்லை எனினும் மன வருத்தம் இல்லை.

 கீதா சிற்பியின் மகனுக்குத் தான் சிற்பக்கலையின் நுணுக்கங்கள் தெரியும். பரம்பரையாக வந்த தொழில் ரகசியங்களைத் தங்கள் வாரிசுகளுக்குத் தான் சொல்லிக் கொடுப்பார்கள். இது மனித மனத்தின் போக்கு. இதில் தவறும் காண முடியாது! நாதஸ்வரத்தை நாம் ஆதரிக்காமல் விட்டதால் எத்தனை நாதஸ்வர வித்வான்கள் தங்கள் தொழிலைத் தங்கள் பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுக்காமல் விட்டுவிட்டார்கள் என்பது தெரியுமா? இன்று அந்தத் தொழிலே நசிந்து வருகிறது. ஒரு நாதஸ்வர வித்வானிடம் பேசிப்பாருங்கள் ஏன் என்று! அவர் சொல்லுவார் காரணங்களை.

சிநேகிதி நான் பொங்கறேன், வளைச்சு வளைச்சு பேசறேன், அடிப்படையே எதுவுமில்லை, நான் பேசுவதில் உண்மையே இல்லை, நான் வரலாறு என்று கற்றிருப்பது எதுவுமே வரலாறு அல்ல.. இவ்வளவும் நீங்க எனக்கு கொடுத்த சர்டிஃபிகேட்ஸ். இதெல்லாம் என்னை எவ்வளவு தூரம் தெரிஞ்சுகிட்டப்புறம் நீங்க எடுத்த முடிவுகள்? சரி விடுங்க, இதோடேனும் நிப்பாட்டிடலாம்

கீதா உண்மையான சரித்திரம் கடந்த ஐம்பது வருடங்களில் யாருமே படித்தது இல்லை. நானும் சில வருடங்கள் குழந்தைகளுக்குப் பாடம் கற்பித்திருக்கிறேன். முக்கியமாகத் தமிழ், வரலாறு, பூகோளப் பாடங்கள். அவற்றை எல்லாம் பார்த்துவிட்டுத் தான் சொல்கிறேன். கோபம் இல்லாமல் நிதானமாக யோசித்தால் புரியும். ஆதரிக்க பிராமணர்கள் இல்லாமல் அதுவும் கிராமங்களில் பிராமணர்களே அற்றுப் போனதால் கோயில் திருவிழாக்களில் இருந்து, அனைத்துக்கும் மூடுவிழா ஏற்பட்டதால் பல நாதஸ்வர வித்வான்கள் ஊரை விட்டுச் செல்லும்படியான நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். இதை மாயவரத்துக்கு அருகே உள்ள ஊரைச் சேர்ந்த ஓர் நாதஸ்வர வித்வான் எங்களிடம் சொன்னது. நாதஸ்வரக் கலை ஆதரிப்பவர்கள் இல்லாமல் இன்றைய திருமணங்களில் செண்டை மேளம் இடம் பெறுகின்றது. இது யார் குற்றம்?

கீதா பிராமண வெறுப்பு என்பது அடிப்படைக் கலாசாரத்தையே மாற்றி மக்களை எங்கோ கொண்டு போய்விட்டது. இறைவன் மனம் வைத்தால் எல்லாம் மாறலாம். இறைவனைப் பிரார்த்திக்கிறேன். தவறாகவோ உங்கள் மனம் புண்படும்படியோ சொல்லி இருந்தால் மன்னிக்கவும். என் கருத்து என்னோடு, உங்கள் கருத்து உங்களுக்கு! அதில் தலையிடும் எண்ணம் எனக்கு இல்லை. நன்றி என்னைப் பொறுத்துக் கொண்டதற்கு.

கீதா எங்க வீட்டிலேயே ஆயுர்வேத வைத்தியப் பரம்பரை. ஆனால் பின்னாட்களில் என் அப்பாவிடம் இருந்து ஆரம்பித்து அதைத் தொடராமல் விட்டதால் அது குறித்த ஓலைச்சுவடிகள், மருந்து செய்யும் முறைகள், உணவுக்குறிப்புகள் எனப் பலவும் தூக்கிக் கொடுத்து விட்டார்கள். இப்போ யாரிடம் இருக்கோ? குலத் தொழில் என்பதால் எங்களில் ஓரிருவருக்குச் சொல்லிக் கொடுத்திருக்கலாம். அது அந்தக் காலத்தில் யாருக்கும் புரியவில்லை. இதில் எங்களுக்கு எல்லாம் மிகவும் வருத்தம் தான். இயல்பாக ரத்தத்தில் ஊறி ஒரு விஷயம் வருவதற்கும், கற்றுக்கொண்டு வருவதற்கும் வேறுபாடு உண்டு என்பது என் கருத்து.

கீதா About carpentry it is a traditional work. The technical secrets are in the jenes. And it suits for the sthapathies also.

ரொம்பச் சரி. தச்சுத் தொழிலை விடவும் மருத்துவம் மிகவும் முக்கியமான தொழில் அல்லவா? பேசாமல் முதலில் அதை திரும்பவும் நாவிதர்கள் கையில் கொடுத்துவிடலாமா? அவர்களை மருத்துவர் என்றே அழைப்பதும் உண்டே? அவர்களுக்கே மருத்துவக் கல்லூரிகளில் 100% இடஒதுக்கீடு தந்து, அவர்களின் மரபுச் செல்வத்தை இந்த சமூகம் பயன்படுத்திக் கொள்ளட்டுமே...

கீதா திருமதி லக்ஷ்மி, நேற்று இணையம் சரிவர இயங்காததால் உடனே பதில் சொல்ல முடியவில்லை. நீங்கள் ஓர் முன் முடிவுடன் இருப்பதால் இது குறித்த விரிவான விளக்கம் தேவை இல்லை என்றே சென்றுவிட்டேன். அதோடு நாவிதராக இருந்தாலும் சரி, தச்சராக இருந்தாலும் சரி, அந்தத் தொழில் அவர்கள் பரம்பரையிலேயே தொடர்ந்து வரும். ஆகவே நாவிதரின் பிள்ளைக்கும் நல்லபடிப்புக் கொடுத்து மருத்துவமும் கற்பித்தால் நல்ல மருத்துவராகப் பரிமளிப்பார். இதைத் தான் முன்னர் ராஜாஜி கொண்டு வந்தார். காலையில் படிப்பு, மாலையில் தொழில் என. அது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு ராஜாஜி அவமானப் பட்டது தான் மிச்சம். இது குறித்து நிறைய எழுதலாம் என்றாலும் அதற்கான இடம் இது இல்லை.
 எங்கள் மாமனார் ஊரில் பல சித்த மருத்துவர்களும் நாவிதர்களே!

சிநேகிதி நான் சொல்ல வருவது அந்த வீடியோவில் உள்ளவர் சொல்வது போல் அவரவர் குலத்தொழிலை அவரவருக்கு மட்டுமே உரிமையாக்குவது பற்றி. அதாவது நாவிதர் தவிர்த்து மற்றவங்கல்லாம் ஏன் மருத்துவம் படிக்கணும்? இப்ப மேல ஒரு எடுத்துக்காட்டு சொல்லிருக்கீங்களே, அவங்கல்லாம் ஏன் வேதபாராயணம் மட்டுமே பண்ணக் கூடாது? எதுக்காக நாவிதர்களின் தொழிலில் தலையிட்டு ஸ்வதர்மத்தை விட்டு விலகணும்னு கேக்கறேன்

கீதா Lakshmi Balakrishnan இந்தக் கேள்வியை இப்போத் தான் பார்க்கிறேன். அந்தணர்களில் வேத அத்யயனம் செய்தவர்கள் தனி, போர்ப்பயிற்சி செய்து போர் வீரர்களாக இருந்தவர்கள் தனி,மருத்துவர்களாக இருந்தவர்கள் தனி, சாதாரணக் குடும்பம் நடத்துபவர்களாக இருந்தவர்கள் தனி எனப் பல்லவ ராஜா காலத்திலேயே, அதற்கும் முன்னால் இருந்தே இருந்திருக்கிறது. போர்ப் பயிற்சி செய்பவர்களை அமைச்சராகவும் ஆக்கி இருப்பார்கள். அவர்கள் அமாத்ய பிராமணர் எனப்படுவார்கள். ஆகவே அந்தணர்களில் எவரும் நாவிதர்களின் தொழிலில் எல்லாம் தலையிட்டு ஸ்வதர்மத்தை விட்டு விலகவெல்லாம் இல்லை. இதற்கான சான்றுகளை இப்போத் தேடி எடுப்பது கஷ்டம். ஆனால் விரைவில் தருகிறேன். ஆனால் சோழ நாட்டில் அப்படி ஓர் அமைச்சர் குலோத்துங்க சோழன் காலத்தில் இருந்திருக்கிறார். பிரமராயன் என்றோ என்னமோ பெயர் வரும்.

திரு P L Bhargava எழுதிய India in the Vedic age என்ற நூலில் படித்த ஞாபகம்; பிராம்மணர்களில் போர்செய்யும் ஜாதியைச் சேர்ந்தோர், வாணிகம் செய்யும் ஜாதியைச் சேர்ந்தோர், வேலைசெய்யும் சாதியைச் சேர்ந்தோர் ஒரு காலத்தில் இணைந்ததாகப் படித்த நினைவு. அதே போல் வழிவழியாக எழுத்தாணி பிடிக்கும் ஜாதிகளைச் சேர்ந்தோர் க்ஷத்திரியர்களில் சேர்ந்ததாகவும் குறிப்புகள் இருக்கின்றன.

அந்தக்காலங்களிலும் பிராமணர்கள் வெறும் வேத அத்யயனத்தோடு நிறுத்திக் கொண்டதில்லை. குறிப்பிட்ட சிலர் மட்டும் வேதம் கற்றுக்கொடுத்து வந்தார்கள். மற்றவர்கள் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டே வந்தார்கள். வணிகம் கூடச் செய்திருக்கின்றனர். முதலில் ஸ்வதர்மம் என்றால் என்ன என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். வேதம் கற்றுக் கொண்டு வேத அத்யயனம் செய்து கொண்டு ஒதுங்கி இருப்பது ஸ்வதர்மமே அல்ல. அவனுக்குரிய கடமைகளைச் செய்ய வேண்டும். அது கற்பித்தலாகவோ, மருத்துவம் பார்ப்பதாகவோ, அல்லது வேறு முறையில் போர்ப்பயிற்சி கொடுப்பதாகவோ கூட இருக்கலாம். இப்போதும் இந்திய ராணுவத்தின் உயர் அதிகாரிகளில் பலர் தமிழ்நாட்டு பிராமணர்கள்.

குலத்தொழிலைக் கற்பதோ, கற்பிப்பதோ, கற்கச் சொல்லுவதோ அவமானத்துக்கு உரிய விஷயமாக நினைப்பதாலேயே இத்தகைய தவறான புரிதல்கள்!


போடலாமா வேண்டாமா என யோசித்து யோசித்து 3 நாட்கள் ட்ராஃப்ட் மோடிலேயே வைத்திருந்து மிகுந்த யோசனைக்குப் பின்னர் பகிர்கிறேன். யாரையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை.

50 comments:

 1. காலையிலேயே அக்கப்போரா? இந்தக் கருத்துகளுக்கெல்லாம் கடினமான எதிர்வினைகள் வரும் என்று தெரிந்தும் பதிவிடுகிறீர்களே... அந்த தைரியத்தைச் சொல்லணும்

  ReplyDelete
  Replies
  1. அக்கப்போரெல்லாம் இல்லை. இதைச் சாதாரணமாகக் கருதி ஒதுக்கினால் நஷ்டம் நமக்கும் வருங்காலத் தலைமுறைக்கும் தான். ஏற்கெனவே பல பாரம்பரியங்கள் அழியத் தொடங்கி விட்டன. மிகவும் எளிமையான மருத்துவம் ஜாதிக்காய்+மாசிக்காய்ப் பொடி செய்து இரவில் பாலில் ஒரு சிட்டிகை போட்டுச் சாப்பிட்டால் நன்றாகத் தூக்கம் வரும். பக்க விளைவுகள் இல்லாதது! ஆனால் இன்றோ விதம் விதமான வீரியங்களில் ஆங்கில மருத்துவ மாத்திரைகள்! :(

   Delete
  2. எதிர்க் கருத்துகள் வந்தாலும் தன் கருத்தை தெளிவாகச் சொல்லி விடுவார் கீதா அக்கா.

   Delete
  3. இன்றைய தினமலரில் மதுரை மாநராட்சியில் வேளையில் சேர்ந்திருக்கும்  சையத் முக்தார் அகமது   என்பவரும் வேலையில் சேர்ந்து பணியாற்றுகிறாராம்.  எம் பி ஏ படித்திருக்கும் அவர் முன்னதாக 35,000 சம்பளத்துக்கு ஹைதராபாத்தில் வேலை செய்து கொண்டிருந்தாராம்.  அதை விட்டு விட்டு இங்கே வந்து 15, 000 ரூபாய் சமபலத்தில் சேர்ந்திருக்கிறாராம்.

   https://www.dinamalar.com/news_detail.asp?id=2501369 

   Delete
  4. யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் படிக்கலாம், எந்த வேலைக்கு வேண்டுமானாலும் போகலாம்.   கூடவே அவரவர்கள் குலத்தொழில் என்று ஒன்று இருந்தால் அதையும் கற்று வைத்திருப்பது நல்லது.  அப்போதுதான் அந்தக் கலை அழியாமல் தொடரும்.  அதை தவறாகவே புரிந்துகொண்டு சொல்லி வருவது வருத்தத்துக்குரியது.

   Delete
  5. எல்லாத்துக்குமே இரண்டு உண்டே ஸ்ரீராம், அது போல் என் கருத்துக்கு எதிர்வினையும் கட்டாயம் இருக்கத் தான் செய்யும்! இதை விட மோசமான நிலைமைகள் எல்லாம் எழுத வந்தப்போ வந்துட்டு ஓடிவிட்டன! ஆகவே இப்போதெல்லாம் அப்படி இல்லை. நாகரிகமாகவே கருத்துகள் சொல்லப்படுகின்றன.

   Delete
  6. நீங்கள் சொல்லி இருப்பது நானும் கேள்விப் பட்டேன் ஸ்ரீராம். அம்பேரிக்காவில் வேலை செய்து அங்கேயே குடிமகன் ஆன இரு வைணவர்கள் திரும்ப ஸ்ரீரங்கம் வந்து கோயில் மடப்பள்ளியில் வேலை செய்கின்றனர். வைணவ வழக்கப்படி சங்கு, சக்ர முத்திரை குத்திக்கொண்டு அரங்கனின் பிரசாதத்தைத் தோள்களில் தூக்கிக் கொண்டு வருகின்றனர். அவர்கள் மனைவியரும் இங்கேயே வந்து விட்டனர். இருவரும் ஐயங்கார்ப் பாணி மடிசாரில் காட்சி அளிக்கின்றனர். அவ்வளவு ஏன்? நம் வேளுக்குடி சி.ஏ. ஏ.சி.எஸ். விசாகா ஹரி சி.ஏ. ஏ.சி.எஸ். வேளுக்குடியின் இரண்டாவது பிள்ளை திருப்பதி பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார். வேளுக்குடியைப் பார்த்தால் இவரைப் பார்க்க வேண்டாம். அச்சு, அசல் அப்படியே!

   Delete
  7. ஆமாம், யார் வேண்டுமானாலும் எது வேண்டுமானாலும் படிக்கலாம் தான். ஆனால் அது எதிர்கால வாழ்க்கைக்குப் பயன்படுமா என்றும் யோசிக்கணும் இல்லையா? என் மகனும் கல்லூரிப் படிப்புப் படித்தான் என்னும் பெயரில் வெறும் பி.ஏ. அல்லது எம்.ஏ. படித்தால் அவர்கள் வாழ்க்கையில் குறைந்த பட்சம் பள்ளி ஆசிரியர் அல்லது அதிக பட்சம் கல்லூரி ஆசிரியர் ஆகலாம். ஆனால் அவர்கள் கனவு என்னவோ! அதுவாக ஆக முடியாது. இதற்கு கிராமத்து இளைஞர்களில் சிலர் பி.எஸ்ஸி, விவசாயம் அல்லது அது சார்ந்த உப படிப்புகள் தேர்ந்தெடுத்துப் படித்தால் சொந்தக் கிராமத்திலேயே தங்கள் சொந்த வயலிலேயே மேம்பாடுகள் பலவற்றைக் கொண்டு வரலாம். அப்படிச் செய்த வாலிபர் ஒருவரைப் பற்றிப் படித்திருக்கிறேன். ஆனால் இதையும் சொன்னால் அதற்கும் ஏன் கிராமத்திலே தான் இருக்கணுமா என்பார்கள்!

   Delete
  8. கீசா மேடம்... நான் ஆண்டவன் (ஜீயர் மாதிரி) ஸ்வாமிகளை பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீரங்கத்தில் சந்தித்தேன் (மாமனார் குடும்பம், என் குடும்பம் எல்லோரும்). அப்போ அவர் சொன்னார், ஒரு வீட்டில் மூன்று குழந்தைகள் இருந்தால் ஒரு குழந்தையை நம் சம்ப்ரதாயத்துக்குத் தத்துக் கொடுத்து, அவனுக்கே சொத்தில் பெரும் பங்கை எழுதிவைக்கணும் என்றார். நல்ல யோசனைதான், ஆனால் எனக்குச் செய்ய மனம் வருமா என்று தெரியலை. (அந்தக் குழந்தை, ஏம்பா.. என்னையும் அண்ணனைப்போல் படிக்கவைத்திருக்கலாமே.. நான் இப்போ கஷ்டப்படறேனே என்றெல்லாம் சொன்னால்?)

   வேளுக்குடி சொல்வது, தைரியமாக் நம் சம்ப்ரதாயத்தில் இறங்கினால், அதிலும் நல்ல வருமானம் வரும், யாரும் சோடை போகமாட்டார்கள் (ஆனால் ஒழுங்காக் கத்துக்கணும், அதிலும் எக்ஸ்பெர்ட் ஆக இருக்கணும்..மற்ற படிப்புகள் போலவே)

   Delete
  9. வாங்க நெல்லைத் தமிழரே, பரமாசாரியாரும் இதே கருத்தைச் சொல்லி இருக்கிறார். ஆனால் இப்போதெல்லாம் எங்கே! ஒரே குழந்தை! யார் கொடுப்பார்கள்? வேளுக்குடி சொல்வது உண்மையே! இப்போதெல்லாம் புரோகிதர்கள் தைரியமாக சம்ப்ரதாய முறையில் இறங்கி தெளிவாக எடுத்துச் சொல்லி நல்ல வருமானமும் பார்க்கின்றனர். இப்போ சமீபத்தில் ஒரு செய்தியில் திருப்பதியில் எம்பிஏ படித்துப் புரோகிதமும் செய்யும் ஓர் பையரை உச்சநீதிமன்றப் பெண் வழக்கறிஞர் சாஸ்திர சம்பிரதாயப்படி விரும்பிக் கல்யாணம் செய்து கொண்டிருக்கிறார். இது மாதிரி ஆங்காங்கே ஒரு சில காணப்படுகின்றன.

   Delete
 2. வணக்கம் சகோ பதிவை மன்னிக்கவும் வாதத்தை மிகவும் சிரத்தையோடு ரசித்து படித்தேன் பல உண்மைகளும் கண்டேன் பதிவின் தலைப்பு அபாரம் நானும் இவ்வகை ஜாதி என்பது தாங்கள் அறிந்ததே நான் மிகவும் ரசித்த வரிகளை கீழே தொகுத்து இருக்கிறேன்.

  //குலத் தொழில் பரம்பரையாக வருவது. ஆகவே அதைத் தன் தகப்பனிடமிருந்தோ பாட்டன், மாமனிடமிருந்தோ எளிதாகக் கற்கலாம். அந்த நுணுக்கங்களைத் தங்கள் வாரிசுகளுக்கு பெரியவர்களும் கற்பிப்பார்கள். அதுவே வெளியிலிருந்து வந்த மாணவன் எனில் தொழில் கற்றுக் கொடுப்பார்களே தவிர்த்து நுணுக்கங்கள் எதிர்பார்க்கவே முடியாது//

  //பிராமண வெறுப்பு என்பது அடிப்படைக் கலாச்சாரத்தையே மாற்றி மக்களை எங்கோ கொண்டு போய் விட்டது//

  //சிற்பியின் மகனுக்குத் தான் சிற்பக்கலையின் நுணுக்கங்கள் தெரியும். பரம்பரையாக வந்த தொழில் ரகசியங்களைத் தங்கள் வாரிசுகளுக்குத்தான்  சொல்லிக் கொடுப்பார்கள். இது மனித மனத்தின் போக்கு//

  //நாதஸ்வரக் கலை ஆதரிப்பவர்கள் இல்லாமல் இன்றைய திருமணங்களில் செண்டை மேளம் இடம் பெறுகின்றது. இது யார் குற்றம் ?//

  - கில்லர்ஜி

  ReplyDelete
  Replies
  1. வாங்க கில்லர்ஜி, உங்களை நினைத்துக் கொண்டேன் நானும். உண்மையில் எங்க குடும்பத்தில் பெரியவர்கள் அனைவருமே வேத அத்யயனம் செய்தவர்கள் தான். ஆனால் தொடர்ந்து வந்த பிரச்னைகளால் ஊரை விட்டுக் கிளம்ப வேண்டி வந்ததால் என் புக்ககத்தில் என் கணவரில் இருந்தும், என் பிறந்தகத்திலும் எங்க அப்பா காலத்திலும் இவற்றை நிறுத்தி விட்டனர். ஆனால் அப்பா பின்னாட்களில் அதற்காக வருந்தியதோடு அல்லாமல் என் அண்ணா பையருக்கு வேத அத்யயனம் செய்து வைத்தார். அவரும் பள்ளிப்படிப்போடு இதையும் சுமார் 12 வருடங்கள் படித்தார். ஆனால் நாங்க ஊர் ஊராகப் போனதால் எங்க குழந்தைகளுக்கு எதுவும் செய்ய முடியலை! :(

   Delete
 3. சாதி எனும் சொல்லே தமிழ் கிடையாது... சரி, அதை விடுங்கள்... அனைத்திற்கும் மேலே முதன்மை கடவுள் இருக்கின்றான்... அவன் பெயர் விவசாயி...

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு தனபாலன் அவர்களே! இன்றைய நாட்களில் களை எடுக்கவும், நாற்று நடவும், பின்னர் கதிர் அறுக்கவும் ஆட்கள் கிடைப்பதில்லை. எல்லோராலும் இயந்திரத்தின் உதவியோடு இத்தகைய வேலைகளுக்கான செலவு செய்ய முடிவதில்லை. அதிலும் வட மாநில ஆட்கள் செல்ல ஆரம்பித்து விட்டனர்! :( இது எப்போது மாறுமோ? என் அப்பா குடும்பம், மாமனார் குடும்பம் எல்லாமே விவசாயம் செய்து வந்த குடும்பம் தான். அப்பா வீட்டில் மருத்துவம் குலத்தொழில். மாமனார் வீட்டில் பாடகர்கள்! ஆனால் இப்போது எல்லோரும் குலத்தொழிலை மறந்தாச்சு! :))))

   Delete
 4. உங்களிடம் எனக்குப் பிடித்ததே இம்மாதிரி அதாரிடேடிவாக நினைப்பதுதான்

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஜிஎம்பி ஐயா! அது உங்கள் தனிப்பட்ட கருத்து. என்னைப் பொறுத்தவரை பல புத்தகங்களையும் படித்து, நேரிலும் ஊர்ப் பக்கம் செல்லும்போது மக்களிடம் பேசி, பிரயாணங்களில் ஆட்டோ ஒட்டுநரில் இருந்து எல்லோரிடமும் பேசித் தகவல்கள் சேகரிப்போம். ஒரு ஊருக்குச் சென்றால் அங்கே ஆட்டோ ஓட்டுபவரில் இருந்து ஓட்டலில் உணவு பரிமாறுபவர் வரை எல்லோரிடமும் பேசுவோம். அவங்க கருத்துகளைத் தெரிந்து கொள்வோம். நாதஸ்வர வித்வான் பற்றி நான் சொன்னது பொய்யல்ல. மாயவரத்தில் இருந்து மும்பை சென்று கொண்டிருந்த இரு நாதஸ்வர வித்வான்கள் சொன்னது தான். கோயில்களில் அவ்வளவு பணம் வசூல் ஆகியும் கால பூஜைக்கு வாசிக்கும் நாதஸ்வர வித்வானுக்கோ, அல்லது தீபாராதனைக்கு முன்னர் பதிகம் பாடும் ஓதுவாருக்கோ கொடுக்க அரசிடம் பணம்/மனம் இரண்டும் இல்லை. இம்மாதிரி நலிந்த நிலையில் இருப்பவர்களும் சொல்லுவார்கள். சென்னையின் ஒரு பிரபலப் பெருமாள் கோயிலிலும் இதே நிலைமை.

   Delete
  2. என்றாலும் உங்கள் உயர்ந்த கருத்துக்கு என் நன்றி. :)))) நான் சொல்வதெல்லாம் உண்மைனு 3 தரம் கூவணுமோ? :)))))

   Delete
  3. கீசா மேடம்... நாதஸ்வரக் கலை ஆதரிப்பவர்களின் குறைவு காரணமாக தன் வசீகரத்தை இழந்து நிற்கிறது. பெங்களூர் திருமணத்துக்கு ஒரு வருடத்துக்கு முன்பு, சென்னையிலிருந்து வித்துவான் வந்து வாசித்தார் - அருமை என்று சொல் அதனைச் சரியாக விளக்காது. பல கோவில்களில் ரொம்ப சுமாராக வாசிக்கிறார்கள் (காரணம் அதற்குப் பணம் தரப்படுவதில்லை. அடுத்த தலைமுறை கற்றுக்கொள்வதில்லை). நமக்குச் சம்பந்தமில்லாத செண்டை மேளத்தை பல விழாக்களில் தமிழகத்தில் உபயோகிக்கிறார்கள். இது காலக் கொடுமை என்றுதான் சொல்லணும்.

   Delete
  4. வாங்க நெல்லைத் தமிழரே, இப்போதும் ஆங்காங்கே இந்தக் கலையை உயிர்ப்பவர்கள் இருந்தாலும் பெரும்பாலும் திருமலா திருப்பதி தேவஸ்தானமே இவர்களை ஆதரித்து வருகிறது. நம்ம மக்கள் தான் புதுமைனு எதை வேண்டுமானாலும் செய்வார்களே! பாண்ட் வாத்தியம் போய் இப்போச் செண்டை மேளம்வந்துள்ளது. அதில் என்ன, திருமணத்துக்கான ராகங்களோ, தாளங்களோவா வாசிக்கின்றனர்? எல்லாம் ஒரு பெருமை தான்!

   Delete
  5. திருமணத்துக்கான ராகமோ தாளமோவா? - அந்தத் திருமணத்தின்போது அவர்களின் நாதஸ்வர இசையில் மயங்கி, ஒரு சில பாடல்கள் வாசிக்கச் சொன்னேன். அதற்கு அவர்கள் சொன்னது, இந்த இந்த ராகம், பாடல், இந்த இந்த நிகழ்வுகளின்போதுதான் வாசிக்க முடியும். முகூர்த்தம் முடிந்த பிறகு இந்த லிஸ்ட், அதற்கு முன்னால் இது என்றுதான் நாங்கள் வாசிப்போம் என்றார்.

   Delete
  6. ஆமாம், நெல்லைத் தமிழரே, திருமணத்துக்கு என உள்ள ராகங்களைத் தான் வாசிப்பார்கள். ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ஒவ்வொரு ராகங்கள், பாடல்கள்! ஊஞ்சலின் போது ஊஞ்சல் பாட்டு வாசிக்காமல் சினிமாப் பாட்டா வாசிக்க முடியும்? அவர்கள் சொல்வதில் தவறே இல்லை.

   Delete
 5. அருமையான பதிவு பல விஷயங்களை தெரிந்துகொண்டேன் நன்றி

  விஸ்வநாதன்

  ReplyDelete
  Replies
  1. நன்றி விஸ்வா. அடிக்கடி வாருங்கள்.

   Delete
 6. அன்பு கீதாமா. கரடியாகக் கத்தினாலும் புரிந்து கொள்ள
  மறுப்பவர்களுக்குச் சொல்லியும் பயனில்லை.
  நீங்கள் இத்தனை கைவலி கால்வலியிலும், தொடர்ந்து வாதம் செய்தது
  உங்களுக்கு நம் சமுதாயத்தின் மேல் வைத்திருக்கும் பூரண நம்பிக்கையினால் தான்.
  யார் இந்த சினேகிதி. தெரிந்தவரா.

  எதற்கும் அசர வேண்டாம். வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி வல்லி, உங்களுக்கும், எனக்கும் துளசிக்கும் நன்கு தெரிந்த பெண் தான். நான் தான் அப்படி லேசில் விட்டுக்கொடுக்கும் சுபாவம் இல்லாதவள் ஆச்சே! :)))))

   Delete
 7. உண்மையான சரித்திரம் இதுவரை எழுதப்படவில்லைன்னு எப்பவும் நினைக்கிறேன். அந்தந்த சமயம் ஆண்ட மன்னர்/ அரசு பக்கம் சார்பு ஆகிப் போகுது. விதண்டா வாதத்துக்குப் பதில் சொல்லி விளக்கமுடியாது...

  ReplyDelete
  Replies
  1. வாங்க துளசி, உண்மையான சரித்திரம் இதுவரை எழுதப்படவில்லை தான். முக்கியமாகப் பதினெட்டாம் நூற்றாண்டின் இந்தியா/ முக்கியமாகத் தமிழகம் இருந்த நிலைமை! அதைப் படித்தாலே போதும். தவறெல்லாம் யார் மீது என்பது புரியவரும். மற்றபடி இப்போதெல்லாம் விதண்டாவாதம் தான்.

   Delete
 8. அன்பு கீதாமா. கரடியாகக் கத்தினாலும் புரிந்து கொள்ள
  மறுப்பவர்களுக்குச் சொல்லியும் பயனில்லை.
  நீங்கள் இத்தனை கைவலி கால்வலியிலும், தொடர்ந்து வாதம் செய்தது
  உங்களுக்கு நம் சமுதாயத்தின் மேல் வைத்திருக்கும் பூரண நம்பிக்கையினால் தான்.
  யார் இந்த சினேகிதி. தெரிந்தவரா.

  எதற்கும் அசர வேண்டாம். வாழ்த்துகள்.

  ReplyDelete
 9. வணக்கம் சகோதரி

  நல்ல பதிவு. மிகவும் தைரியமாக தங்கள் கருத்துக்களை முன் வைத்தமை கண்டு வியக்கிறேன். அறிவு பூர்வமான வாதங்கள். "குலத்தொழில் கல்லாமல் வரும்." என்பார்கள். முறையாக கல்லாமல் எதுவும் சாத்தியபடுமா? ஆனால் விருப்பங்கள் என்ற ஒன்று ஒவ்வொரு மனிதருக்குள்ளும் இருக்கிறதல்லவா! மற்றொரு முறை நிதானமாக படித்து வருகிறேன். நிறைய விஷயங்களை உங்களுடமிருந்து தெரிந்து கொள்கிறேன். நாங்கள் அறியாத நிறைய விஷயங்கள் இன்னமும் உங்களிடம் உள்ளன. அதைக் கண்டு ஆச்சரியப் படுகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கமலா, நடந்ததையும் நடப்பதையும் குறித்த நம் கருத்தைப்பகிரக் கூட தைரியம் வேண்டி இருக்கிறது பாருங்கள்! :( "குலத்தொழில் கல்லாமல் வரும்" எனச் சொல்லி வைத்ததில் தவறேதும் இல்லை. விருப்பங்கள் என்பது உண்டு தான். ஆனால் குலத்தொழிலை விடாமல் தெரிந்து வைத்துக் கொள்வதில் தவறேதும் இல்லையே! ராஜாஜி முதல் மந்திரியாய் இருந்த போது ஆறாயிரம் பள்ளிகள் மூடப்பட்டன என்கின்றனர். இதில் உண்மையே இருக்க வாய்ப்பில்லை என்பதைக் கூட யாரும் புரிந்து கொள்ளவில்லை. அப்போத் தான் சுதந்திரம் வந்து 2,3 ஆண்டுகளுக்குள் ஆகி இருக்கின்றன. அந்தச் சமயம் அரசுப் பள்ளிகள் ஆறாயிரம் இருந்து அவை அனைத்தும் ராஜாஜியால் மூடப்பட்டதெனில் அதற்கான ஆதாரங்கள் அரசு ஆவணங்களில் பதியப்பட்டிருக்க வேண்டும் இல்லையா? அதெல்லாம் எங்கே?

   Delete
 10. விருப்பம் போல படிக்கலாம் தமது குலத்தொழிலையும் அறிந்திருத்தல் வேண்டும்.பெரும்பாலான கலைகள் அழிந்தே போய்விட்டன.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம், பெரும்பாலான கலைகள் அழிந்து விட்டன. அதில் முக்கியமான ஒன்று தெருக்கூத்து! தெருக்கூத்து என்னும் பெயரில் இக்காலத்திலும் அறிவு ஜீவிகள் கூத்தாடுகின்றனர் தாம்! ஆனால் அந்தக் காலத்திய தெருக்கூத்துக்கும், இந்தக் காலத்திய இந்த நாகரிகத் தெருக்கூத்துக்கும் மலைக்கும், மடுவுக்கும் உள்ள வித்தியாசம்!

   Delete
  2. தஞ்சை ஜில்லா மெலட்டூரில் "பாகவத மேளா" அரும்பாடு பட்டு அழியாமல் பாதுகாத்து வருகின்றனர்.

   Delete
 11. அஆவ் அங்கே முகப்புத்தக war ? விஷயம் முழுதா புரியலை .என்ன காணொளி ?
   .இங்கே வெளிநாடுகளில் சின்ன வயது முதலே எல்லாருக்கும் எல்லாம் தெரிஞ்சிருக்கணும் ஸ்கூலிலேயே கற்றுக்கொடுப்பாங்க வொகேஷனல் க்ளாஸ் .இங்கே பிளம்பருக்குத்தான் நிறைய வருமானம் மருத்துவரை விட .

  ReplyDelete
  Replies
  1. ஹாஹா, அதெல்லாம் இல்லை ஏஞ்சல். எல்லோருக்கும் எல்லாம் தெரிஞ்சிருக்கணும் என்பது வேறு. இது பாரம்பரியக் குலத்தொழில் பற்றியது. நம் நாட்டில் மருத்துவர்கள், சிற்பிகள், ஆசாரிகள், தச்சர்கள் எனத் தனியாகத் தொழில் செய்து கொண்டிருந்தவர்களைப் பற்றியது.

   Delete
  2. ஹாஹா நான் கு.கு வாச்சே :) ஐ மீன் அவசர குழந்தைன்னு அதிரடி அடிக்கடி சொல்வாங்க :) அதான் லேட்டா புரியுது 

   Delete
 12. மருத்துவர் பிளம்பர் சேலரி ஒரு metaphor போல தோணினாலும் .இங்கே எல்லாருக்கும் எல்லாரும் சமம் .இதை படிச்சே ஆகணும்னு வெளிநாட்டினர் பிள்ளைகளை வற்புறுத்துவதில்லை பெரிய டாக்டர்ஸின் பிள்ளைங்க அக்கவுன்டிங் பிசினஸ்னு அப்புறம் ஆர்ட் இப்படி துறைகளை எடுப்பாங்க .

  ReplyDelete
  Replies
  1. சம்பளம் பற்றியெல்லாம் பேசலை. ஒருத்தர் சொல்லி இருந்தது என்னவெனில் நாவிதர்களோ, தச்சர்களோ, ஆசாரிகளோ அந்தப் பாரம்பரியத்தில் வந்த இளைஞர்கள், இளம்பெண்கள் ஆகியோர் வெறும் பி.ஏ. எம்.ஏ. எனப் படிச்சால் போதாது. கூடவே பாரம்பரியத் தொழிலும் கற்று வைச்சிருக்கணும் என்பதே!அதற்குத் தான் இத்தனை எதிர்ப்பு!

   Delete
 13. பிரயாணம், இணைய படுத்தல், எனக்கு என்னவோ பின்னூட்டம் இட சுணக்கம். இன்றுதான் எல்லா பதிவுகளையும் படித்துக் கொண்டு வருகிறேன். உங்களுக்கும், உங்கள் தோழிக்கும் நேரில் நடந்த விவாதமா? சில விஷயங்களை விவாதிக்காமல் விடுவதே நலம். விவாதத்தை கிளப்பிய வீடியோவின் லிங்க் கிடைக்குமா? 

  ReplyDelete
  Replies
  1. சுட்டி தேடணும் பானுமதி. கிடைத்தால் பகிர்கிறேன். நேரில் எல்லாம் இல்லை. முகநூலில் நடந்தது. வயதில் இளையவர்.

   Delete
 14. அதுசரி ஸ்நேகிதி தமிழில தானே பேசுகிறா.. அப்போ எதுக்கு கீசாக்கா இங்கிலீசில அடிச்சு விடுறா?:)) அதுவே எனக்கு டவுட்டாக இருக்குது:)) அப்போ போஸ்ட் எப்பூடிப் புரியும்?:)) ஹா ஹா ஹா..

  இந்தக் காலத்தில குலத்தொழில் என்பதெல்லாம் இல்லை கீசாக்கா.. ஆருக்கு என்ன பிடிக்குதோ அதைப் படிச்சு தொழில் புரிகின்றனர்ர்.. பிள்ளைகள் விருப்பம்போலதான் அனைத்தும்...

  நம் நாடுகளில் தலைமயிர் வெட்டுவதற்கென ஒருவர் இருப்பார்ர். ஆனா இப்போ ஹெயார் ஸ்டைல்... என கோர்ஸ் செய்துபோட்டு எல்லோருமே வெட்டுகின்றனர்.. இப்படித்தான் எல்லாமே மாறிப்போச்சூ..

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான் அதிரடி, யாரும் எந்தத் தொழில் வேண்டுமானாலும் செய்யலாம் தான். ஆனால் பாரம்பரியமாக ஒரு தொழில் செய்த குடும்பத்தில் இருந்து வந்தவர் அந்தக் குறிப்பிட்ட தொழிலைச் செய்வதற்கும், கற்றுக்கொண்டு செய்பவர் செய்வதற்கும் வேறுபாடு உள்ளது. பாரம்பரியத்தில் உள்ள தொழில் நுட்பங்கள் கற்றுக்கொள்பவருக்கு எளிதில் வராது; புரியாது! புரிந்து கொண்டு செய்தாலும் வித்தியாசம் இருக்கும்.

   Delete
  2. நான் மொபைலில் இருந்து பதில் கொடுத்தால் தமிழ்ப் பயன்பாடு செய்வதில்லை. அப்போ ஆங்கிலத்தில் தான் பதில் கொடுப்பேன். கணினி எனில் தமிழ்.

   Delete
  3. தம் குலத்தொழிலைப் பழகுவதற்கு, அவர்களுக்கே விருப்பம் வரவேண்டுமே தவிர, அடுத்தவர் சொன்னால் அது தப்பாகும், ஏனெனில், எல்லோருக்கும் படிச்சு முன்னேற வேண்டும் எனும் விருப்பம் இருக்கையில், குலத்தொழிலையும் பழகு என்றால், தம்மை முன்னேற விடாமல் தடை போடுகிறார்கள் என நினைப்பார்கள்.

   ஒரு 24 வயசுப் பொம்பிளைப்பிள்ளை, எஞ்சினியரிங் படித்துப் பட்டம் பெற்றபின், வேலை செய்யப் பிடிக்காமல், தன் தந்தையின் தொழிலையே செய்வேன் என காணி வாங்கி, விவசாயமும், கால் நடைகளும் வளர்க்கிறா.. தமிழ் நாட்டில் தான் யூ ரியூப்பில் பார்த்தேன்.. இப்படி தாமாக விரும்பினால் மட்டுமே தம் தொழிலைப் பழக முடியும்.. அது என்ன தொழிலாக இருந்தாலும்.

   Delete
 15. பாரம்பர்யத்தில் உள்ள தொழில் நுட்பங்கள் கற்றுக் கொள்பவருக்கு எளிதில் வராது... புரியாது!..

  உண்மைதான்...

  ReplyDelete
 16. உங்களுடைய கருத்துக்களே முன்னுக்கு பின் முரணாக உள்ளது. பிறப்பால் வருவது இல்லை குலம் அல்லது ஜாதி, என்று துணைக்கு விஸ்வாமித்ரரையும் அழைக்கிறீர்கள். அதற்குப் பின் எல்லோரும் குலத்தொழில் கற்றால் நல்லது என்கிறீர்கள். குலம் தொழிலால் வருவது எனின் தொழில் கற்று தேர்ந்த பின் தானே அது குலத்தொழில் ஆகும்? 
  தற்போது உங்கள்  பையருடைய குலத்தொழில் என்ன? அவர் தற்போது செய்யும் தொழிலா? அல்லது அவருடைய முப்பாட்டன் செய்த தொழிலா? எல்லோரும் எல்லாமும் செய்யும்போது குலத்தொழில் என்பது இல்லை. 
  பாரதியார் அரிஜனங்களுக்கு பூணூல் இட்டு காயத்ரி சொல்லிக் கொடுக்க வில்லையா?
  படகோட்டி, வேத விற்பன்னர் கதை போன்று ஏட்டுப் படிப்புடன் நில்லாது தொழில் கற்றலும் அவசியம் என்று வேண்டுமானால் கூறலாம். அல்லாமல் குலம் இல்லை என்று சொல்லி விட்டு குலத்தொழில் கற்றுக்கொள் என்று கூவக் கூடாது. மன்னிக்கவும்  கூவுதல் உங்கள் உரிமை. மறுத்தல் எனது உரிமை. Jayakumar

  ReplyDelete
  Replies
  1. ஜெயகுமார் சார்.... நான் நினைப்பது... ஓரிரு தலைமுறையாக ஒரு தொழில் செய்கிறோம் என்றால் அது குலத் தொழில் என்றாகிவிடும். உதாரணமா, என் மூன்று தலைமுறையாக கேடரிங் தொழிலில் ஈடுபட்டிருக்கிறோம் என்றால், அந்தத் தொழிலின் நெளிவு சுழிவுகள் எனக்கு அத்துப்படியாகியிருக்கும் அல்லது ரகசியங்கள் தெரிந்திருக்கும். நடிகனென்றால், யாரை எப்படி அப்ரோச் செய்வது, என்ன என்ன வித்தைகள் செய்து வாய்ப்புகள் வாங்கமுடியும், அரசியல் என்றால், யாருடன் சேரணும் யாரைக் கவிழ்க்கணும் என்பதையெல்லாம் கற்றுக்கொள்வது. அந்த அளவுதான் 'குலத் தொழில்' என்பதற்கு கடந்த ஒரு சில நூற்றாண்டுகளாக இருக்கும் அர்த்தம். அதற்கு முந்தைய காலத்தில் படகோட்டி என்ற தொழில் பரம்பரை பரம்பரையாக வருவது (பொதுவாக)

   அதில் நாம் வெற்றி பெறுவது, பல்வேறு காரணிகளால் அமைவது. ஆனால் 'குலத் தொழிலாக' உள்ளதை நாம் தொடர்வது என்பது, 100 மீட்டர் ரேசில், 20 மீட்டர் தாண்டி நாம் ஓடுவதற்குத் தயாராக இருப்பது போன்றது. அரசியல்வாதிகளின் பரம்பரை, அரசியல்வாதிகளாக இருப்பது, டாக்டர் பரம்பரை, நடிகர் பரம்பரை என நாம் இதற்கு நேரடியாகவே உதாரணங்கள் பார்க்க முடியும்.

   ஆனால் குலத்தொழிலைக் கற்றுக்கொள் என்று யாரையும் நிர்பந்திக்க முடியாது, அதில் ஆர்வம், அதற்குரிய பக்குவம் போன்றவற்றைக் காட்டினால் ஒழிய. எந்தத் தொழிலிலும் ஆர்வம் இருந்தால் எவரும் முன்னேற முடியும்.

   Delete
  2. ஆனோதிக்கிறேன்.
    Jayakumar

   Delete