எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, March 31, 2020

வந்துட்டேன்!

நான் வரலைனு தேடியவர்களுக்கு என் நன்றி. இங்கே ஓர் இறுக்கமான சூழ்நிலையில் அனைவரும் இருந்தோம். சென்ற புதன் அன்று காரியங்கள் ஆரம்பிக்க இருக்கையில் மார்ச் 31 ஆம் தேதி வரையில் ஊரடங்கு அமல் ஆனது. ஆகவே மைத்துனரும், அவர் மனைவியும் திங்கள் அன்றே கிளம்பி வந்து விட்டனர். வாடகைக்காரில் தான் வருவதாக இருந்தனர். ஆனால் அவரால் சரியான நேரத்துக்கு வரமுடியாததால் சொந்தக் காரிலேயே மைத்துனரே ஓட்டிக் கொண்டு வந்து விட்டார். என் கணவரும் மைத்துனரும் மட்டும் போய் புதன்கிழமை ஒரு மாதிரிக் காரியங்களை ஆரம்பித்தாயிற்று. ஆனால் தொடர்ந்து நடக்க வேண்டும். நடுவில் நிறுத்தக் கூடாது. பத்தாம் நாள் காரியத்துக்கு நாங்களும் போகவேண்டும். ஆனால் எங்களை வரக்கூடாது எனச் சொல்லி விட்டார்கள். வெளி ஊர்களில் இருந்தோ அல்லது உள்ளூரில் இருக்கும் உறவினர்களோ வருவதற்கான போக்குவரத்து சாதனங்கள் ஏதும் இல்லாததால் வரமுடியவில்லை. அனைவரும் தொலைபேசியில் அழைப்பு விடுத்துப் பேசினார்கள். தங்கள் வருத்தங்களைத் தெரிவித்துக் கொண்டார்கள்.

பத்தாம் நாள் அன்று என் கடைசி நாத்தனார் மட்டும் சென்று காரியத்தை முடித்துவிட்டு வந்தார். 11 ஆம் நாள் காரியம் அண்ணன், தம்பி இருவரும் போய்க் காரியங்களை முடித்துக்கொண்டு திரும்புகையில் காவல்துறையினர் பார்த்துவிட்டு (2 நாட்களாகவே கவனித்திருக்கின்றனர்.) விசாரிக்கவும் இவர்கள் காரணத்தைச் சொல்லவும் விட்டு விட்டார்கள். அதன் பின்னர் 12 ஆம் நாள் காரியமும் அங்கே போய்ச் செய்துவிட்டுக் கடைசியில் 13 ஆம் நாள் சுபகாரியத்தை வீட்டில் வைத்துக் கொண்டோம். அதற்கும் வைதிகர்கள் வந்து கலந்து கொண்டு நவகிரஹ ஹோமம் செய்கையில் உலக க்ஷேமத்துக்கும் சேர்த்துப் பிரார்த்திக்கொண்டு ஹோமம் செய்தார்கள். மனதுக்கும் ஆறுதலாக இருந்தது.  எல்லாம் முடிந்து நேற்று மைத்துனர் அவருக்குத் தெரிந்த அதிகாரி மூலம் நகரை விட்டு வெளியேற உத்தரவு பெற்றுக் கொண்டு இன்று காலை கிளம்பிச் சென்று கொண்டிருக்கிறார். அவர் மனைவிக்கு நேற்றே மருத்துவரிடம் செல்ல வேண்டும். மருத்துவர் புதன் அன்று வரச் சொல்லி இருக்கிறார்.

இதற்குள்ளாகத் தமிழக அரசும், முக்கியமாக நிறுத்த முடியாத, ஒத்திப்போட முடியாத திருமணங்கள் நடத்தவும், இறப்பு, மருத்துவம் முக்கியமாகப் பார்க்கவேண்டியது ஆகியவர்களுக்குச் சிறப்பு அனுமதி கொடுப்பதாகச் செய்தி வெளியிட்டிருக்கின்றனர். அதனாலும் எங்களுக்குக் காரியங்கள் செய்ய முடிந்தது எனலாம்.  இங்கே எங்கள் வளாகத்திலும் அனைவரையும் சோதித்தே உள்ளே விடுகின்றனர். ரொம்ப உடல் நலம் முடியாதவர்களுக்கும், வயதானவர்களுக்கும் மட்டுமே வேலை செய்யும் பெண்மணி வந்து வேலைகளைச் செய்து கொடுக்கிறார். மற்றவர்களுக்கு வருவதில்லை. பாதுகாவலர்களுக்கு உணவு, தேநீர் போன்றவை இங்கேயே ஏற்பாடு செய்து ஒரு நாளைக்கு ஒருவர் என்னும் விகிதத்தில் செய்து கொடுத்து வருகின்றனர். சமையலுக்கு ஏற்பாடு செய்திருந்த மாமி முத்தரசநல்லூரில் இருப்பதால் அங்கிருந்து அவரால் வரமுடியவில்லை. குடமுருட்டிப் பாலத்தை இருபக்கங்களில் இருந்தும் மூடி விட்டார்கள். ஆனாலும் கடைசி 2 நாட்களுக்கு எங்கள் புரோகிதரே எப்படியோ ஆள் ஏற்பாடு செய்து கொடுத்தார். அவர் வந்து செய்து கொடுத்துவிட்டுப் போனார். மற்ற நாட்களில் வேலை சரியாக இருந்த காரணத்தாலும் மற்றத் துணிகள் சுத்தம் செய்வது, இறப்புத் தீட்டுக் கழிக்கவேண்டிய துணிகளைத் துவைப்பது என நேரம் போய்விட்டது.

இனி வரும் நாட்கள் நல்லபடியாகக் கழியவேண்டும் என்று பிரார்த்திக்கிறேன். 

40 comments:

 1. எப்படியோ நல்லபடியாய் காரியங்கள் முடிந்ததில் திருப்தி.   இதே நிலை எங்கள் உறவினர் சுகுமார் இல்லத்திலும், பாஸ் சித்தியின் சம்பந்தி இல்லத்திலும்...  ஆனால் அங்கு நடந்தவை வருஷாப்தீகம்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஸ்ரீராம், அங்கேயும் காரியங்கள் நல்லபடி முடிந்திருக்கும் என நம்புகிறேன்.

   Delete
 2. பேஸ்புக்கில் மட்டும் நீங்கள் அவ்வப்போது செய்யும் ஷேர் பார்த்து, என்ன பிளாக் பக்கம் காணோமே என்று யோசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. பேஸ்புக் மொபைல் மூலம் அவ்வப்போது பார்ப்பேன். ஆனால் வலைப்பக்கங்கள் பார்ப்பதில்லை. அது கணினி மூலமே பார்ப்பேன். அதான் வலைப்பக்கம் வரவில்லை. அதோடு நேரம் சரியாக இருந்தது.

   Delete
  2. ஓ அப்படியோ ஸ்ரீராம், அங்கின ஒழுங்கா வந்து கொண்டு, இங்கினதான் ட்றாமா பண்ணுறாவோ கீசாக்கா கர்ர்ர்ர்ர்:)) இது தெரியாமல் நானும் தேடிட்டேனே:))) தேடினதை வாபஸ் வாங்கப்போறேன் ஹா ஹா ஹா:)

   Delete
  3. மொபைலில் உறவினர் எல்லோருமே வாட்சப்பில் அழைப்பார்கள் பிஞ்சு! அப்போ அதை நான் தான் எடுத்து இணைக்கணும். மாமாவுக்குத் தெரியாது. அந்தச் சமயங்களில் மேலோட்டமாக பேஸ்புக் பார்ப்பேன்.

   Delete
 3. நல்லவேளை... எல்லாவற்றையும் ஓரளவு மனதிருப்தியுடன் செய்ய முடிந்ததே... அதுவே நன்று.

  உங்களுக்குத்தான் தளிகை வேலைகள் மிக அதிகமாக இருந்திருக்கும்.

  ரெஸ்ட் எடுத்துக்கொள்ளுங்கள்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க நெல்லைத் தமிழரே, வைதிகக் காரியங்கள் பரமதிருப்தியுடன் முடிந்தன. என்ன, உறவினர் யாரும் வரமுடியலை. அதான்! மற்றபடி எதையும் குறைக்கவில்லை. ஆமாம், எனக்கு என் சக்திக்கும் மீறிய வேலைகள்! எப்படியோ சமாளித்தாயிற்று!

   Delete
  2. ரெஸ்ட் எடுத்துக்கொள்ளுங்கள்.///

   கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நெ தமிழன் என்னா பேச்சுப் பேசுறீங்க:)).. இவ்ளோ நாளும் ரெஸ்ட் எடுத்திட்டுத்தானே இனி புளொக் பகம் போகலாம் என களம் குதிச்ச கீசாக்காவைப்பார்த்து உப்பூடிச் சொன்னால்.. பயந்திட மாட்டா:))

   Delete
  3. அதிரடி, இவ்வளவு நாட்களும் இவங்க அண்ணன், தம்பி இருவரும் கிளம்பியதும் திரும்பி வரும் வரை திக், திக், திக்! அதுக்கு நடுவிலே சமையல் வேலைகள். எங்கே ஓய்வு! எழுதித் தான்பார்க்கணும். :)

   Delete
 4. எல்லாம் நல்லபடியாக முடிந்ததுவரை நன்று. உலக அமைதிக்காகவும் ஹோமம் செய்தமைக்கு நன்றி.
  வாழ்க வையகம்

  ReplyDelete
  Replies
  1. ஆமாம், கில்லர்ஜி, குறிப்பாகக் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் உடல்நிலைக்கும் தனியாகச் சொல்லிப் பிரார்த்தனைகள் செய்தோம்.

   Delete
 5. அன்பு கீதாமா,
  எப்படியோ சமாளித்து எல்லா காரியங்களையும் பூர்த்தி செய்தது
  மகா நிம்மதி.
  ஒரு நல்ல ஜீவனைக் கரையேற்றிய நிம்மதி.
  நீங்களும் மாமாவும் ஓய்வெடுங்கள்.

  மிகச் சிரமமான காலம். மீண்டு வந்துவிடுங்கள்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க வல்லி, எப்படியோ காரியங்கள் பூர்த்தி ஆகிவிட்டன. மீண்டு வரப் பார்த்தாலும் மனம் இன்னமும் அமைதி அடையவில்லை. :(

   Delete
  2. எப்படி அவ்வளவு எளிதில் மனம் அமைதியாகும்.. காலம் ஒன்றே மருந்து..

   Delete
  3. இன்னமும் மனம் ஏற்கவில்லை எல்கே. சனி, ஞாயிறு எனில் அவரிடமிருந்து தொலைபேசி அழைப்பு வரும். இன்று மறந்து போய் இன்னமும் கூப்பிடவில்லையே என நினைத்தேன். பின்னர் தான் மனம் இன்னமும் வருந்த ஆரம்பித்து விட்டது!

   Delete
 6. அன்பு கீதாமா,
  எப்படியோ சமாளித்து எல்லா காரியங்களையும் பூர்த்தி செய்தது
  மகா நிம்மதி.
  ஒரு நல்ல ஜீவனைக் கரையேற்றிய நிம்மதி.
  நீங்களும் மாமாவும் ஓய்வெடுங்கள்.

  மிகச் சிரமமான காலம். மீண்டு வந்துவிடுங்கள்.

  ReplyDelete
 7. மச்சினர் காரியங்கள் இறைவன் அருளால் நல்லபடியாக நிறைவு பெற்றது மகிழ்ச்சி.

  எங்கள் வளாகத்தில் வீட்டு வேலை ஆள் எல்லாம் வரக்கூடாது என்று சொல்லி விட்டார்கள்.

  வயதானவர்கள் எல்லோரும் மிகவும் கஷ்டபடுகிறார்கள்.
  இனி வரும் நாட்கள் நல்லபடியாக இருக்க வேண்டி பிரார்த்திப்போம்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கோமதி, இங்கே எங்க வீட்டில் வேலை செய்யும் பெண் பக்கத்தில் இருக்கும் வீட்டிலேயே இருப்பதால் இன்று வரை வந்துவிட்டார். ஆனால் நாளையிலிருந்து வரப் போவதில்லை என அறிவிப்புச் செய்திருக்கிறார். போகப் போகத் தான் தெரியும்.

   Delete
  2. நல்ல வேளையாக இன்று வந்துவிட்டார் அந்தப் பெண்மணி. காய்களோ, பாலோ வேண்டுமானால் வாங்கித் தருகிறோம் எனவும் சொல்லி இருக்கார். இப்போதைக்கு எல்லாம் இருக்கு.

   Delete
 8. நல்லபடியாக எல்லாம் முடிந்தது... அதுவே இப்போதைய தேவை.

  தேவையான ஓய்வினை எடுத்துக் கொள்ளுங்கள்.

  ReplyDelete
 9. உங்களுடைய முந்தைய பதிவையும் படித்தேன். ஆனால் என்ன சொல்வது? என்று எதுவும் தோன்றாததால் பின்னூட்டம் இடவில்லை. உங்கள் மைத்துனரின் காரியங்கள் நல்லவிதமாக நடந்தது என்பதை அறிய நிம்மதி. 

  ReplyDelete
 10. எல்லாம் நல்லபடி நடக்கும் கீசாக்கா, எதையும் ஓவராக யோசித்து மனதைப் பாரமாக்கி வருத்தத்தைத் தேடிடாமல், மகிழ்ச்சியாக இருங்கோ.. என்ன பண்ணுவது இழப்பு என்பது நம்மை மீறிய செயல்.. ஏற்றுக்கொண்டே ஆகோணும்...

  ReplyDelete
  Replies
  1. எல்லாம் நல்லபடியா முடிந்து விட்டது தான் பிஞ்சு! இது மாதிரிப் பல இக்கட்டான சூழ்நிலைகளில் கடவுள் அருளால் தப்பிப் பிழைத்துள்ளோம் என்றாலும் இது முற்றிலும் வேறானது. மொத்த உலகையே ஆட்டிப் படைக்கிறதே! மற்றபடி மைத்துனர் மருத்துவமனைக்குப் போய்ப் போய்த் திரும்பியதுக்கு இது பரவாயில்லை என்றே சில சமயங்கள் தோன்றுகிறது. நல்லவேளையாய் மாமியார் இல்லை.

   Delete
 11. நல்லபடியாய் நடந்து முடிந்தது மனதுக்கு ஆறுதலை தந்திருக்கும்..

  துக்ககரமான நேரத்திலும் உலக ஷேமத்துக்காக வேண்டிக்கொண்டது பாராட்டு. நன்றிம்மா

  ReplyDelete
  Replies
  1. வாங்க ராஜி, இந்த துக்கம் அதிகரித்ததே உலக க்ஷேமம் கெட்டதினால் தானே! அது எப்படி நினைவில்லாமல் இருக்கும். முதலில் அதைத் தான் செய்தோம். நாளை முக்கியமான கோள்கள் ஒரே நேர்கோட்டில் வருகின்றன. அனைவரும் கோளறு பதிகம் படிப்போம்.

   Delete
 12. உங்கள் கணவர்தான் பெரியவர் என்று தெரியும் கீதா, பெரிய மைத்துனர் என்றது
  இறந்தவருக்கு மூத்தவர் என்ற அர்த்தத்தில் சொன்னேன்.

  இறந்தவருக்கு திருமணம் ஆகவில்லை என்பதால் வேறு மாதிரி சடங்குகள் செய்ய வேண்டும் இல்லையா?
  எல்லாம் இறைவன் அருளால் எத்தனையோ கஷ்டங்களுக்கு இடையில் முடித்து விட்டீர்கள்.

  ReplyDelete
  Replies
  1. ம்ம்ம்ம், இது முந்தைய பதிவில் உள்ளதோ? தெரியலை. ஆனால் இறை அருளால் மட்டுமே எல்லாக் காரியங்களையும் முடிக்க முடிந்தது. இலை கிடைக்கவில்லை, பழம் கிடைக்கவில்லை. எப்படியோ அன்றன்றைய காரியங்களுக்கு இடையில் இவற்றையும் தேடிப் பிடித்து வாங்கி! :( இறந்தவர் திருமணம் ஆனவர். மனைவி புற்று நோயால் கல்யாணம் ஆகி ஒன்றரை வருடத்திலேயே இறந்து விட்டார்.

   Delete
  2. நீங்கள் எங்கள் ப்ளாக்கில் பதில் சொன்னது.
   இறை அருளால்தான் காரியங்களை முடித்தீர்கள் இந்த காலகட்டத்தில் நல்லபடியாக.
   இறந்தவருக்கு திருமணம் ஆகி விட்டதா? மனைவி புற்று நோயால் இறந்தது வருத்தம் தருகிரது.

   Delete
 13. இதுவும் அவன் விட்ட வழி என்று ஆறுதல் அடையவும்...

  வரும் நாட்களிலும் இறைவன் துணையிருக்க வேண்டிக் கொள்வோம்...

  ReplyDelete
  Replies
  1. வாங்க துரை, இறைவன் துணை என்றென்றும் வேண்டும்.

   Delete
 14. வணக்கம் சகோதரி

  உங்கள் மைத்துனரின் காரியங்கள் அனைத்தும் இந்த ஊரடங்கு வேளையிலும் நல்லபடியாக நிறைவேறியது குறித்து மிக்க நிம்மதியடைந்தேன். நீங்களும் போன பதிவில் விசாரமடைந்து எழுதியிருப்பதினால் எப்படி காரியங்கள் நடக்கப் போகிறதோ என இருந்தது. இனி அவரின் ஆத்மா நல்லபடியாக சாந்தியடையும். கடவுளின் அருளால்தான் அனைத்தும் கை கூடி வந்துள்ளது. உலக மக்களையும் இறைவன் இந்த வைரஸிடமிருந்து தப்புவிக்க ஏதேனும் உபாயம் செய்து காத்தருள வேண்டுமென நானும் தினமும் இறைவனை வேண்டிக் கொண்டேயுள்ளேன். கொஞ்சம் தாமதமாக வந்தமைக்கு வருந்துகிறேன். நன்றி..

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கமலா, காவல்துறை கண்காணிப்பு இருந்தது. ஆனால் இம்மாதிரி அபர காரியத்துக்குப் போகிறோம் எனச் சொன்னதும், சென்றவர்கள் இரண்டே நபர்கள் தான் என்பதாலும் எளிதில் அனுமதி கிடைத்திருக்கிறது. நான்கைந்து பேர்கள் என்றால் விசாரணையிலேயே நேரம் ஆகி இருக்கும்.

   Delete
 15. பிரார்த்தனை சிறப்பு...

  பிரார்த்தனையால் அனைத்து மக்களும் விரைவில் நலம் பெற வேண்டுகிறேன்...

  ReplyDelete
 16. கீதாக்கா எப்படியோ இத்தனை நாட்டு அமளிகளுக்கு இடையிலும் காரியங்கள் நல்லபடியாக முடிந்ததே அதுவே பெரிய விஷயம் தான். வேறு வழியும் இல்லையே.

  உங்களுக்குத்தான் நிறைய வேலைகள் இருந்திருக்கும் என்று நான் நினைத்துக் கொண்டேதான் இருந்தேன்/. அதுவும் வந்த மச்சினர் எப்படிச் சென்றிருப்பார் அதனால்தான் கீதாக்காவைக் காணலை என்றும் பதிவும் தேடாமல் விட்டுவிட்டேன் அக்கா. ஸாரி. இனி ஒயிங்கா பார்த்த்டுவேன். அவர் நல்லபடியாக ஊர் போயிருப்ப்பார். இப்போது நல்லதும் சரி துக்க விஷயங்களும் சரி நடத்துவது கஷ்டம் தான்.

  எனக்கும் கணினி கிடைக்கும் நேரத்தில் மட்டுமே அதுவும் நெட் இருந்தால்தான் வலைப்பக்கம் வர முடிகிறது. கணவர் காலேஜோடு தொடர்பு கொள்வது, தீர்மானங்கள் எடுப்பது எல்லாமே கணினி வழி என்பதால் அவரது கணினியில் நான் அதிகம் இருக்க முடியாது. என் கணினி டாக்டர் மைத்துனர் இப்ப அம்பேரிக்காவில் மாட்டிக் கொண்டுவிட்டார் . மார்ச் 31 சென்னை வந்திருக்க வேண்டும்/. எல்லா ஃப்ளைட்டும் நிறுத்தப்பட்டுவிட்டதால் வர முடியலை. ஸோ என் கணினியும் அவர் வந்த பின் தான் சரியாகும். அவர் சரியாக்கிவிடலாம் நம்மால் முடியாதது என்று உண்டோ என்று வேறு நம்பிக்கை அளித்திருக்கிறார். பார்போம்

  ரெஸ்ட் எடுங்க கீதாக்கா. நல்லது நடக்க வேண்டும். உலகம் இயல்பு வாழ்க்கைக்கு வெகு விரைவில் திரும்ப வேண்டும். பிரார்த்திப்போம்.

  கீதா

  ReplyDelete
  Replies
  1. வாங்க கீதா, இப்போது சில நாட்களாகக் காலையில் கணினியில் உட்காருவதில்லை. மத்தியானம் தான் அதுவும் அதிகம் போனால் ஒன்றரை மணி நேரம் உட்காருகிறேன். அதற்குள்ளாகச் சில பதிவுகள் பார்த்துக் கருத்துச் சொல்வது மட்டுமே! இன்னமும் ஒன்றும் எழுதத் தோன்றவில்லை. மற்றபடி ஓய்வு தான். இந்தக் கொரோனா பிரச்னை வேறே! என்னவோ நாட்கள் நகர்கின்றன.

   Delete
 17. உங்கள் உடல்நலனையும் பார்த்துக் கொள்ளவும்

  ReplyDelete
  Replies
  1. ரொம்பவே நன்றி எல்கே

   Delete