எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, June 14, 2020

படித்த புத்தகங்களும் கடக்கும்/கடத்தும் நேரமும்!

ஏதோ பொழுது நகர்கிறது. உபயோகமான வேலைகள் ஏதும் செய்யலை.  வீட்டு வேலைகள் இருக்கவே இருக்கின்றன. எல்லாவேலைகளும் செய்தாலும் எதுவும் சரியாகச் செய்ய முடியாமல் மனமும் பதியவில்லை. எல்லாம் இந்தக் கொரோனா ஆட்டி வைப்பது தான். இங்கே திருச்சியில் இல்லாமல் இருந்தது! பசுமை மண்டலமாக மாறப் போகிறது என நினைக்கும் வேளையிலே ஆரஞ்சு மண்டலமாகி விட்டது. இப்போது 40க்கும் அதிகமான நோயாளிகள் எனச் சொல்கின்றனர்.  திருவானைக்கா, ஸ்ரீரங்கம் வரை கொரோனா பரவி விட்டது. சென்னையிலிருந்து ஓடி வரும் மக்கள் தான் காரணம் என்கின்றனர். மக்கள் இரு சக்கர வண்டிகள், ஆட்டோக்கள், குட்டி யானைப்படும் டெம்போக்கள் எனக் கிடைத்தவற்றில் ஏறிக்கொண்டு தெற்கு நோக்கிப் பயணிக்கின்றனர். அவர்கள் சென்னையிலிருந்து கொண்டு வரும் தொற்று விரைவில் தமிழ்நாடு முழுவதும் பரவி விடும் போல் அச்சமாக உள்ளது. சென்னையின் வழித்தடங்களை அடைத்துச் சோதனை செய்தால் தவிர இது தொடர்ந்து கொண்டே இருக்கும். ஈ-பாஸ் இல்லாமலேயே பலரும் வருவதாக தினசரிகள் கூறுகின்றன. இன்னும் சிலர் வாடகைக்கார் கொடுக்கும் ஏஜென்டுகள் மூலமாக ஈ பாஸும் பெற்றுக் கொண்டு வருவதாகச் சொல்கின்றனர். தினசரிகளைப் பார்த்தாலே விதம் விதமான கொரோனாச் செய்திகள். மதுரைக்கு மட்டும் பல வண்டிகளில் மக்கள் சென்றுள்ளனர் எனத் தொலைகாட்சிச் செய்தி கூறுகிறது.  ஒரு கட்டுக்குள் இருந்து வந்த தென் மாவட்டங்களில் இனி அது போல் நிலைமை இருக்குமா தெரியவில்லை.  இறைவன் திருவடிகளே சரணம்!
********************************************************************************

கடந்த நாட்களில், "திருவரங்கன் உலா" திரும்பத்திரும்பப் படித்தேன். சித்தப்பாவின் "ஒற்றன்" படித்தேன். சித்தப்பா முதல் முறை அம்பேரிக்கா போனப்போ அங்கே மினசோட்டா மாநிலத்தில்  சித்தப்பாவின் ஐயோவா வாழ்க்கையைப் பற்றியது "ஒற்றன்." இதைத் தவிர்த்து நண்பர் திரு திவாகர் அனுப்பிய, "ஹரிதாசன் என்னும் நான்!" என்னும் நாவலின் பிடிஎஃப் படித்து முடித்தேன். திவாகர் நான் எழுதத் தொடங்கிய ஆரம்ப காலத்தில் இருந்து நண்பர். என்னைப் பல விதங்களிலும் ஊக்கம் கொடுத்து எழுத வைத்தவர். ஒரு காலத்தில் என் விளம்பர மானேஜர் என்றே அவரைச் சொல்வேன். அந்த அளவுக்கு என்னைப் பற்றிப் பலரிடமும் சொல்லி என் எழுத்தைப் படிக்க வைத்திருக்கிறார். திவாகருக்குச் சரித்திரத்தில் மிகுந்த ஈடுபாடு உண்டு.  தமிழ்நாட்டின் சரித்திரத்தில் மட்டுமில்லாமல் பொதுவான சரித்திரத்திலேயே ஈடுபாடு கொண்டு பல கல்வெட்டுக்கள், ஆய்வுகள், சரித்திரத் தகவல்களைத் திரட்டித் தேடுதல் எனச் செய்து கொண்டிருப்பார். ஆய்வுகளின் அடிப்படையில் கிடைத்த உண்மையான தகவல்களைக் கருவாக வைத்துக் கதைப்பின்னல் போடுவதில் தேர்ந்தவர்.  தான் சேகரித்த தகவல்களின் அடிப்படையில் "வம்சதாரா", "விசித்திர சித்தன்",  "எஸ்.எம்.எஸ். எம்டன் போன்ற பல புத்தகங்களை எழுதி வெளியிட்டிருக்கிறார்.  அது மட்டுமல்ல.

இவரும் இவர் மனைவியுமாகப் பன்னிரு திருமுறையில் முதல் 3 திருமுறைகளை (திருஞானசம்பந்தர் அருளிச் செய்தது) தெலுங்கு மொழியில் மொழி பெயர்த்திருக்கின்றனர். முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம், 
136 பதிகங்கள், 1469 பாடல்கள்.

தெலுங்கு மொழிபெயர்ப்பு
விசாகப்பட்டினம் சசிகலா திவாகர். 
தமிழுக்கு இவர்கள் செய்த மாபெரும் தொண்டு இது. பக்தி இலக்கியங்கள் பலவும் இப்படி மற்ற மாநில மொழிகளுக்கு மொழி பெயர்க்கப்படுவதன் மூலம் தமிழ்நாட்டின் அன்றைய கால கட்டத்துச் சிறப்பான நிலையும், அரசர்கள் வரலாறும், மக்களின் பழக்கவழக்கங்களும் நிலையானதொரு இடத்தைப் பெற்று விடுகிறது. அதற்குத் திரு திவாகர் எப்போதுமே தன்னால் ஆன உதவிகளைச் செய்து வருகிறார்.  பன்னிருதிருமுறைகளில் மற்றவற்றையும் தேர்ந்த தமிழறிஞர்கள்  தருமை ஆதீனத்தின் மேற்பார்வையில் செய்து கொடுத்திருக்கின்றனர். மிகப் பெரிய பணி இது. இதை எடுத்துச் செய்தவர் தேவாரம் தளத்தின் நிர்வாகியான ஈழத்துப் பெரும் புலவர் ஐயா மறவன்புலவு சச்சிதானந்தம் அவர்கள்.

 திவாகர்  சமீபத்தில் எழுதிய இந்த "ஹரிதாசன் என்னும் நான்!" என்னும் புதினம் கிருஷ்ணதேவ ராயர் காலத்தில் நடந்த சம்பவங்களை வைத்து எழுதப்பட்டது. கிருஷ்ணதேவ ராயர் அரசனாக மகுடம் சூட்டும் முன்னர் விஜயநகர சாம்ராஜ்யத்தின் சூழ்நிலையும், வடக்கே பாமானி சுல்தான்களால் அவர்கள் எந்நேரமும் கண்காணிக்கப்பட்டதையும், அதைத் தவிர்க்க வேண்டி, ராயரின் தங்கையை பாமணி சுல்தானுக்கு மணம் செய்து கொடுக்க அனுப்பி வைக்கப்பட்டதையும் சொல்லுகிறது இந்தச் சரித்திர நாவல். ஹரிஹர புக்கர்களால் ஆளப்பட்ட இந்த விஜயநகர சாம்ராஜ்யத்தில் அவர்களுக்கு சுமார் 170 ஆண்டுகளுக்குப்பின்னர் வந்த நாயக்க மன்னர்களின் காலத்தையும் அவர்களில் சிறந்தவன் ஆன கிருஷ்ணதேவ ராயன் என்னும் துளு வம்சத்து இளவரசன் அரசனாக எப்படி முடிசூட்டிக் கொண்டான் என்பதையும் குறிப்பிட்டுச் சொல்லும் நூல் இது. திருப்பதி அருகே உள்ள சந்திரகிரி அரசர்கள் எப்போதும் விஜயநகர அரசர்களுக்குக் கட்டுப்பட்டவர்களாயும், நண்பர்களாயுமே இருந்துள்ளனர். அவர்களில் கிருஷ்ணதேவராயர் காலத்தில் இருந்த இளவரசன் ஆன ஹரிதாசன் என்னும் இளைஞன் கிருஷ்ண தேவராயனின் நண்பன்.

அவன் தானே தன் வாழ்வில் நடந்தவற்றைச் சொல்வதாக எழுதி இருக்கிறார் திவாகர். பொதுவாகச் சிறுகதைகள் மட்டுமே அப்படி எழுதுவார்கள். ஆனால் இதில் பதினைந்து நாட்கள் நடக்கும் விஷயங்களைப் பனிரண்டு  அத்தியாயங்களில் சொல்லி இருக்கிறார். கிருஷ்ண தேவராயர் இல்லை எனில் இன்று நம் நாட்டுக் கோயில்கள் எதுவும் இருந்திருக்காது.  நம் தென்னாட்டின் கோயில்களையும் அதன் ஆகம முறை வழிபாடுகளையும் கட்டிக்காத்தவர்கள் விஜயநகர சாம்ராஜ்யத்து அரசர்களே! அவர்கள் இல்லை எனில் இன்றைக்கு நமக்கு வழிபடக் கோயில்களே இருந்திருக்காது என்பதில் சிறிதும் கருத்து வேறுபாடு இல்லை. அத்தோடு இல்லாமல் நம் மொழியையும் கட்டிப் பாதுகாத்தவர்கள் நாயக்க வம்சத்து அரசர்கள் ஆவார்கள். அதிலும் கிருஷ்ணதேவராயர் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளின் கதையில் மிகுந்த ஈடுபாடு கொண்டு அவள் கதையை "ஆமுக்த மால்யதா" என்னும் பெயரில் தெலுங்கில் எழுதி உள்ளான். அத்தோடு இல்லாமல் நம் நாலாயிர திவ்யப் பிரபந்தங்களும் அங்கே தெலுங்கில் எழுதப்பட்டு வைணவக் கோயில்களில் படிக்கப்படுகின்றன. இதற்கெல்லாம் மூல காரணமே கிருஷ்ண தேவராயனும் அவனுக்குப் பின்னர் வந்த நாயக்க வம்சத்து அரசர்களும் ஆவார்கள். சுமார் 200 ஆண்டுகளுக்கு மேலாக அவர்கள் தென்னாட்டை ஆட்சி புரிந்து வந்திருந்தும் நம் தமிழ் மொழிக்கு எவ்விதமான ஆபத்தும் நேரவில்லை. கிருஷ்ணதேவ ராயன் காலத்தில் விஜயநகரப் பேரரசு புகழின் உச்சத்தில் இருந்தது. அத்தகைய ஓர் அரசன் எவ்வாறு அரியணை ஏறினான் என்பதே இந்தப் புதினத்தின் மையக்கருத்து.

ஆசாரியரான வித்யாரண்யரால் ஆரம்பிக்கப்பட்ட விஜயநகர சாம்ராஜ்யத்தில் கிருஷ்ணதேவ ராயரின் காலத்தில் இருந்த ஆசாரியர் வியாச ராய தீர்த்தர். இவர் கிருஷ்ண்தேவனைக் காப்பாற்றுவதற்காகச் சில நாட்கள் அரியணையில் அமர நேர்ந்தது. அதனால் வியாசராஜ தீர்த்தர் என்னும் பெயர் பெற்றார். அவர் அரியணையில் அமர நேர்ந்த நிகழ்வு இந்தக் கதையில் வேறுவிதமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் பொதுவில் அரசனைக் காப்பாற்றவே வியாசராயர் சிம்மாசனம் ஏறினார். கிருஷ்ண தேவராயனின் உயிரைக்  காப்பாற்ற எனச் சொல்லப் பட்டாலும் இந்தக் கதையின் படி அவர் கிருஷ்ணதேவராயனின் அண்ணனுக்குச் சமாதானம் ஏற்பட வேண்டி தானே அரசனாக சிம்மாசனம் ஏறுகிறார்.  பனிரண்டு அத்தியாயங்களும் விறுவிறுப்புடன் ஒரே ஓட்டமாக ஓடுகிறது. அந்தக் கால கட்டங்களில் துருக்கியரால் தூக்கிச் செல்லப்படும் பெண்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டிச் சுண்டுவிரலையும் மோதிர விரலையும் வெட்டிக் கொள்வார்களாம். அதைக் குறித்த கல்வெட்டு ஒன்று இலஹங்காவில் கிடைத்துள்ளது. அதுவும் இந்தக் கதையில் ஓர் ஆதாரமாக எடுத்துக் கொள்ளப் பட்டிருக்கிறது.

அந்தக் காலகட்டத்தில் கிருஷ்ணதேவராயனின் அண்ணனான வீரநரசிம்ம ராயன் தன் வாழ்நாளின் கடைசிக் கட்டத்தில் இருந்ததும், அவன் மனதை மாற்றிச் சூழ்ச்சி செய்து ராஜ்யத்தைப் பிடிக்கச் செய்த முயற்சிகளையும் அனைத்தையும் முறியடித்துக்  கிருஷ்ண்தேவராயனின் தங்கையின் மனதையும் வென்று அவளைக் கைப்பிடித்த ஹரிதாசனையும் இந்தக்கதையை எல்லாம் ஹரிதாசன் வாயிலாகவே சொல்ல வைத்திருக்கும் திவாகரையும் பாராட்டுவோம். இதற்கு மேல் கதையின் சம்பவங்களைக் குறிப்பிட்டால் கதையைப் படிக்கும் ஆவல் இல்லாமல் போய்விடும். ஆகவே அவற்றைக் குறிப்பிடவில்லை.

மனமார்ந்த பாராட்டுகள் திவாகர். படித்துச் சில நாட்கள் ஆகிவிட்டன என்றாலும் இன்றே இந்தப் புத்தகம் குறித்துக் கொஞ்சமானும் எழுத நேரம் வாய்த்தது. 

62 comments:

 1. தமிழகத்தின் மொத்த கொரோனா கணக்கில் பகுதி சென்னை என்றார்கள்.

  இப்பொழுது அவர்கள் சென்னையை கடந்து எல்லா ஊர்களுக்கும் பரவி விட்டதாக சொல்கிறார்கள்.
  இறைவனே துணை.

  விமர்சனம் அழகாக தொகுத்து இருக்கிறீர்கள். வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கில்லர்ஜி, பாராட்டுக்கு நன்றி. பலரும் ஊரை விட்டுச் செல்கிறார்கள். இதற்கெல்லாம் காரணம் முக்கிய வணிகப் பகுதிக்கடைகளைத் திறந்ததே என்றும் சொல்கின்றனர். என்ன ஆகுமோ ஒண்ணுமே புரியலை.

   Delete
 2. இப்பொழுது கொரோனாவை காரணம் காட்டி மக்களின் பணத்தை கொள்ளையடிக்க சில மருத்துவமனைகள் தயாராகி விட்டனர்.

  அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்தால் சான்றிதழை சம்பந்தப்பட்டவர்களிடம் தரமாட்டார்களாம். கொரோனா இருக்கிறது என்று சொல்லி குறிப்பிட்ட மருத்துவமனையில் சேரச் சொல்கிறார்களாம். குறைந்த பட்சம் ஆறு லட்ச ரூபாய் வேண்டுமாம்.

  ஆகவே இல்லாதவர்கள் கொரோனா இருந்தால் சாகவேண்டியதுதான். இருப்போரிடம் கொரோனா இருக்கிறது என்று சொல்லி பணத்தை கறக்கவும் வாய்ப்பு உள்ளது.

  அரசு கவனம் கொண்டால்தான் மக்களுக்கு வாழ்வு.

  ReplyDelete
  Replies
  1. கில்லர்ஜி, அம்பேரிக்காவில் ஒருத்தருக்கு இந்தியப் பணத்தின் மதிப்புப்படி ஒரு கோடி செலவு ஆகி இருக்காம். அரசு தான் மக்களுக்கு இதை ஒரு சேவையாக எடுத்துக்கொண்டு செய்யவேண்டும். எத்தனை பேரால் செலவு செய்ய முடியும்? பிரச்னைக்கு மேல் பிரச்னை தான். சித்த மருந்திலும் ஆயுர்வேத மருந்திலும் குணமடைய வைக்கலாம் என்கின்றனர். பார்க்கலாம்.

   Delete
 3. எங்கள் அலுவலகத்தில் உட்பட நிறைய பேர்கள் சென்னையை விட்டுச் சென்று கொண்டிருக்கிறார்கள்.  தங்களை, தங்கள் குடும்பத்தைக் காப்பாற்றிக் கொள்ள அவர்கள் செய்யும் இந்த முயற்சி மற்ற ஊர்க்காரர்களுக்கு ஆபத்தாகவும் முடிகிறது.  முந்தாநாள் இந்நடுங் பணிபுரியும் பெண்ணின் அம்மா, மாமியார், அக்கா ஆகியோர் சொந்தக்காரில் காரைக்குடி புறப்பட்டனர்.  வேலை முக்கியமில்லை, நீயும் வந்துவிடு என்று இவரையும் அழைத்ததாகக் கூறினார் இவர்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஸ்ரீராம், ஆமாம், சென்னையிலிருந்து மக்கள் கூட்டம் கூட்டமாகக் கிளம்பி வருவதே ஓர் ஆபத்துத் தான். ஆனால் அவங்க நிலையிலிருந்தால் நாமும் அப்படித் தான் செய்திருப்போமோ?

   Delete
  2. ஆனால் எங்களைப் போன்றவர்கள் சென்னையிலே இருந்திருந்தால் அங்கே தான் இருந்தாகணும். இங்கெல்லாம் யார் இருக்காங்க வரவேற்றுச் சாப்பாடு போட?

   Delete
 4. நூல் பற்றிய அறிமுகம் நன்றாய் எழுதி இருக்கிறீர்கள்.  இதுபோன்ற புதினங்கள் நானும் விரும்பிப் படிப்பேன்.  ஆனால் இப்போது எதிலும் மனம் செல்லவில்லை என்பதோடு, பி டி எப் வடிவில் படிக்க மனம் விழைவதும் இல்லை.

  ReplyDelete
  Replies
  1. ஸ்ரீராம், எனக்கும் மனசு பதியவில்லை. ஒரு நாளில் முடிக்க வேண்டிய இந்தப் புத்தகத்தை 5 நாட்களில் முடித்தேன். அதுக்கப்புறமா அதைப் பற்றி எழுத மேலும் பத்து நாட்கள். சூழ்நிலை அப்படி ஆகிவிட்டது. பிடிஎஃபில் படிப்பீர்களா என்று கேட்டுவிட்டே திவாகர் அனுப்பி வைத்தார்.

   Delete
 5. ரா கி ரங்கராஜன் எழுதிய நான், கிருஷ்ணதேவராயன் எனும் சரித்திரக்கதை கூட தன்னிலையில் எழுதப்பட்டது என்றே நினைக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம், இரண்டு பாகங்கள்னு நினைக்கிறேன். குமுதத்தில் வந்ததா? வந்தபோதும் படித்தேன். பின்னால் நூல் வடிவிலும் படித்தேன், ஹூஸ்டன் மீனாக்ஷி கோயில் நூல் நிலையத்தில் கிடைத்தது.

   Delete
  2. 'நான் கிருஷ்ண தேவராயன்' ஆனந்த விகடனில் வந்தது. 56 வாரங்கள். ஒரு பகுதிதான். இப்போது புஸ்தகாவில் படிக்க கிடைக்கிறது.

   Delete
  3. https://www.goodreads.com/book/show/22595883-naan-krishnadevarayan

   Delete
 6. மாதவ வித்யாரண்யரும், அவர் சகோதரர் சாயணரும் ஹரிஹரர் புக்கர் சகோதரர்களுக்கு உறுதுணையாக, வழிகாட்டியாக இருந்தனர்.  இதில் வித்யாரண்யர் நம் தமிழக வேதாந்த தேசிகருடன் பயின்றவர், இருவரும் நண்பர்கள் என்று படித்திருக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. வித்யாரண்யர் பற்றி நான் சில பதிவுகள் போட்டிருக்கேன். ஆனால் இந்த வலைப்பக்கம் இல்லை. பின்னர் சுட்டி தருகிறேன்.

   Delete
 7. திவாகர் அவர்களுக்கு வாழ்த்துகள். பகிர்ந்த உங்களுக்கு நன்றிகள்.

  ReplyDelete
 8. உண்மை தான்! மனசு எதிலும் பதியாமல் பெரும்பாலான நேரங்களில் சோர்வாக இருப்பதை தவிர்க்க முடியவில்லை! அதிலும் நாங்கள் குடும்பத்தை விட்டு வந்து இங்கு மாட்டிக்கொண்டு விட்டதால் தளர்ச்சி அதிகம் தான்! அங்கே துபாயில் வியாபாரம் மேலாளரின் மேற்பார்வையிலும் மகனின் மேற்பார்வையிலும் நடக்கிறது. என் கணவர் தினமும் தொழிலாளர்களிடம் இரவில் விசாரித்து பேசி வருகிறார்கள். துபாய்க்கு இதற்கு முன் விமானத்தில் சென்றவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு தான் அலுவலகத்திற்கோ வீட்டுக்கோ திரும்பியிருக்கிறார்கள். இப்போது வந்த அரசாணையில் பாதிக்கப்பட்டிருந்தாலும் பாதிக்கபடாமல் வயதாயிருந்தாலும் சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம் இருந்தாலும் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் தங்க வைக்கப்படுகிறார்கள் 14 நாட்களுக்கு [ எந்த செலவும் நாம் செய்ய வேண்டியதில்லை. அரசு நமக்கு செய்கிறது] அல்லது வீட்டில் வசதியிருந்தால் அங்கே தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.

  சென்னையிலிருந்து, சொல்ல சொல்ல மறுத்து அப்பா, அம்மாவைப் பார்த்தே ஆக வேண்டும் என்று ஈ பாஸ் வாங்கிக்கொண்டு வந்த உறவுப்பெண்மணி, மயிலாடுதுறையில் செக் போஸ்ட்டில் பரிசீலிக்கப்பட்டு அந்த ஊர் அரசு மருத்துவ மனையில் 14 நாட்களுக்கு கணவருடன் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

  என்று சீராகும் இந்த நிலை?

  ReplyDelete
  Replies
  1. கஷ்டமான சூழ்நிலைதான் மனோ! என்னதான் நம் நெருங்கிய சொந்தங்கள் மேற்பார்வை பார்த்தாலும் நாம் கிட்ட இருக்கும்படியான நிலைமை இருந்தால் அது தனி தான். அங்கே அரசு எல்லாச் செலவுகளையும் ஏற்கின்றது. இங்கே அது தான்பிரச்னை. அதனாலேயே மக்கள் அதிகம் தனிமைப் படுத்திக் கொள்ள மறுக்கிறார்களோ என்னமோ! ஆனால் அரசும் எவ்வளவு தான் செலவு செய்யும்! :( கோடிக்கணக்கான மக்கள். நெருக்கமான வாழ்க்கைச் சூழல். விரைவில் இது தீர்ந்தால் தான் நல்லது. அந்த ஆண்டவன் தான் மனசு வைக்கணும்.

   Delete
 9. வம்ச தாரா, விசித்திர சித்தன், ஹரிதாஸன் என்னும் நான் முதலிய நூல்கள் எங்கு கிடைக்கும்?

  ReplyDelete
  Replies
  1. மனோ சாமிநாதன், பழனியப்பா பிரதர்ஸ் வெளியீடு. பெரிய புத்தகக் கடைகள் இருந்தால் கேட்டுப் பார்க்கவும். அல்லது தஞ்சையில் எங்கு கிடைக்கும் என திவாகரிடமே கேட்டுச் சொல்கிறேன்.

   Delete
  2. Palaniyappa Brothers

   Address: Shop No, 17, NSB Rd, Singarathope, Tharanallur, Teppakulam, Tamil Nadu 620008
   Phone: 0431 270 2160

   இங்கு திருமந்திரம் உரையுடன் 3 பாகங்கள் 300 ரூபாய் வாங்கினேன். 

   Delete
 10. வணக்கம் சகோதரி

  இந்த வைரஸ் எப்போதுதான் முற்றுக்கு வருமோ? தெரியவில்லை.. அதனூடேயே வாழப் பழகிக் கொள்ளுங்கள் என்று கூறினாலும், உயிர்க் கொல்லியுடன் எப்படி சௌஜன்யமாக பழகுவது? இங்கும் ஆங்காங்கே சில இடங்களில் அதிகமாக உள்ளதாக கூறுகின்றனர். மக்களும் இந்த நேரத்தில் எப்படியும் தத்தம் வாழ்க்கைக்குதானே முதலிடம் தருவார்கள். தங்கள் பதிவை பார்த்ததும் மிகவும் கவலையாக உள்ளது. கடவுள் இன்னமும் என்னவெல்லாம் நினைத்திருக்கிறாரோ என்ற கவலை எப்போதும் இருந்தபடி இருக்கிறது. அவர்தான் மக்களை இந்த நோயிலிருந்து மீட்க வழி செய்ய வேண்டும்.

  நீங்கள் எழுதிய நூல் விமர்சனம் அருமையாக உள்ளது. எனக்கு சரித்திர கதைகள். விவரங்கள் படிக்க மிகவும் பிடிக்கும். ஒரு தடவை படித்தேன். இரவு டியூப்லைட் வெளிச்சத்தில் இந்த கைப்பேசியில் படிப்பது இப்போது கொஞ்ச நாட்களாக சிரமமாக உள்ளது. இன்னமும் பகல் வெளிச்சத்தில் விவரமாக படித்து ஆழமாக உணர வேண்டும். நாளை மறுபடியும் படிக்கிறேன். படித்ததை அழகாக விமர்சித்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கமலா, எப்படி இத்தகைய கொடிய அசுரனுடன் வாழ்க்கை நடத்துவது? இன்னிக்கும் அதிகமான மக்கள் நோயால் பாதிப்பு. தி.நகரையே மூடச் சொல்லி அரசுக்குக் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள். அங்கே கடைகளைத் திறந்ததும் தான் அதிகமாகி விட்டது என்பது சிலர் கருத்து.

   புத்தக விமரிசனம் நன்றாய் இருப்பது என்னும் பாராட்டுக்கு நன்றி. நீங்கள் இந்த வெளிச்சத்தில் கைபேசியில் படிக்க முடியவில்லை எனில் விட்டு விடுங்கள். கண்களுக்குப் பிரச்னை வந்துவிடப் போகிறது. எதற்கும் கண்களையும் சோதனை செய்து கொள்ளுங்கள். மெதுவாக நல்ல சூரிய வெளிச்சத்தில் படித்துவிட்டுச் சொல்லுங்கள். அவசரமே இல்லை.

   Delete
  2. வணக்கம் சகோதரி

   தங்கள் அக்கறையான பதிலுக்கு நன்றி சகோதரி. இன்று மறுபடியும் நீங்கள் எழுதியதை படித்தேன். உங்கள் நண்பர் திரு. திவாகர் அவர்களும், அவரது துணைவியாரும் தமிழுக்கு செய்த தொண்டு மிகப் பெரியது.

   அவர் எழுதிய புத்தகத்தை படித்து சிறப்பாக விமர்சனம் செய்துள்ளீர்கள். உங்கள் விமர்சனம் புத்தகத்தை முழுதுமாக படிக்க வேண்டுமென்ற ஆவலைத் தூண்டுகிறது.

   நண்பனின் கடமையை செய்த ஹரிதாசன்தான் எவ்வளவு உயர்ந்தவர். அந்த காலத்தில் மன்னர்களுக்கு, தன் சுக துக்கங்களையும் தியாகம் செய்து பக்கபலமாக இருந்து வழி நடத்தியவர்கள் இந்த மாதிரி அந்தரங்க நண்பர்கள்தான் என்பதை சரித்திரத்தில் படித்துள்ளோம். அவர்களே அந்நாட்டின் அமைச்சர்களாக இருந்து நாடு செழிப்புற காரணமாகவும் இருந்தார்கள். ஒரு சிலர் விதி விலக்காக மனம் மாறி போவதுமுண்டு.தாங்கள் கூறும் இந்தக்கதைகளும் படிக்க வேண்டும் போல் உள்ளது. நேரம் வாய்க்கட்டும். பகிர்வுக்கு மிக்க நன்றி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
  3. வாங்க கமலா, மறு வருகைக்கும் விரிவான கருத்துக்கும் நன்றி. புத்தகம் பிடிஎஃபாக என்னிடம் இருக்கிறது. உங்கள் மெயில் ஐடி தெரிந்தால் அனுப்புவேன்.

   Delete
 11. தென்னகத்து மன்னர்களுள் ஸ்ரீ கிருஷ்ண தேவராயரும் மனம் கவர்ந்தவர்...

  ரா.கி.ரங்கராஜனின் நான் கிருஷ்ண தேவ ராயன் தொடரை அப்போதே வாசித்து இருக்கிறேன்... மறுமுறை வாசிக்கக் கூடவில்லை..

  தமிழகம் கிருஷ்ண தேவராயருக்கு மிகவும் கடமைப்பட்டிருக்கிறது என்பது எனது தனிப்பட்ட கருத்தாகும்...

  ReplyDelete
  Replies
  1. ஆமாம், அந்தத் தெனாலி ராமனுக்காகவே கிருஷ்ணதேவராயர் பற்றி நிறையத் தேடித்தேடிப் படிச்சிருக்கேன். தமிழகம் முழுவதுமே கிருஷ்ணதேவராயருக்குக் கடமைப் பட்டது தான்! அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

   Delete
 12. பாரதத்தின் பொன்னையும் பொருளையும் பெண் பிள்ளைகளையும் குறி வைத்துத் தாக்கிய மிலேச்சர்களை இப்போது நினைத்தாலும் மனம் கொதிக்கிறது...

  அபடியான பாவிகளை அழிக்க எத்தனை அருந்ததிகள் தோன்றினார்களோ!?..

  ReplyDelete
  Replies
  1. ஆமாம், சில விஷயங்கள் எப்போப் படிச்சாலும் மனதை வருத்தும். வேதனையில் ஆழ்ந்துவிடும். விதி வலியது! வேறே என்ன சொல்ல முடியும்!

   Delete
 13. இன்று தினமலரில் படித்தேன்..

  கொரானா பிணியாளர்கள் 250 பேருக்கும் மேல் சென்னையிலிந்து தப்பி விட்டார்கள் என்று!...

  அத்தனை பேரும் பேசி வைத்துக் கொண்ட மாதிரி - பொய்யான முகவரி கொடுத்திருக்கிறார்கள்...

  அவர்கள் கொடுத்திருக்கும் முகவரியைச் சரிபார்க்காத அரசுப் பணியாளர்கள்...

  சென்னைவாசிகளின் மேதைமை மீண்டும் வெளிப்பட்டிருக்கிறது...

  ReplyDelete
  Replies
  1. @துரை, அப்படியா? இந்தத் தகவல் நான் கேள்விப் படாத ஒன்று. இவங்கல்லாம் ஏன் தான் இப்படிச் செய்கிறாங்களோ, தெரியலை. :(

   Delete
 14. வரகூர் எனும் உள்ளடங்கியுள்ள கிராமத்துக் கல்யாணத்தில் மணமகளை அலங்கரிக்க சென்னையிலிருந்து விஞ்சான (!) நிபுணியை வரவழைத்தார்களாம்...

  அந்தப் பெண் அங்கிருந்து கொரனாவையும் கொண்டு வந்து வரகூருக்கு வரவு வைத்து இருக்கிறாள்....

  ஸ்ரீமதி பானுமதி வெங்கடேஸ்வரன் தளத்தில் படித்தேன்...

  ReplyDelete
  Replies
  1. ஆமாம், நானும் படித்தேன். சில மணி நேரத்துக்காகப் பன்னாட்கள்/மாதங்கள் கஷ்டத்தை வரவழைத்துக் கொண்டு விட்டனர். பெற்றோராவது அறிவுரை சொல்லி இருக்கணும். யாருக்கும் தோன்றவில்லை போல!

   Delete
 15. கீதாக்கா, தென்னகம் கொஞ்சம் நிம்மதியாக இருந்ததே இப்போது மக்கள் செல்வதால் பரவத் தொடங்கிவிட்டது போல. என் அப்பாவிடமும் கவனமாக இருக்கச் சொல்லணும். மனம் ரொம்ப கஷ்டமாக இருக்கு.
  பானுக்கா கூட ஒரு நிகழ்வு எழுதியிருக்காங்க. தேவையில்லாமல் ரிஸ்க்.

  என்னவோ போங்க என்ன ஆகுமோ? தெரியலை.

  கீதா

  ReplyDelete
  Replies
  1. வாங்க தி/கீதா, மதுரை, திருநெல்வேலிப்பக்கம் நிறையப் போயிருப்பதாய்க் கேள்வி. திருநெல்வேலியில் எல்லாம் ஒற்றைப்படையில் இருந்தது. இனி என்ன ஆகுமோ?

   Delete
 16. ரொம்ப அழகா எழுதியிருக்கீங்க அக்கா புத்தக விமர்சனம். ரசித்து வாசித்தேன். நிறைய விஷயங்கள் இருக்கும் போலத் தெரிகிறது.

  கீதா

  ReplyDelete
  Replies
  1. தி/கீதா, ரொம்பப் பெரிதாகவெல்லாம் இல்லை. திவாகரின் புத்தகங்களிலேயே வர்ணனைகள் கொஞ்சம் குறைவாகவே இருக்கும். தேவையான இடங்களில் மட்டுமே வர்ணனை கொடுப்பார். மற்றபடி அநேகமாக உரையாடல்களிலேயே கதையை நகர்த்துவார். இது தானே சொல்வதாக அமைந்திருப்பதால் எண்ணங்களும் கொஞ்சம் சேர்ந்தே வரும்.

   Delete
 17. தடைகளின் தளர்வு அவசியம்தான் எனினும் முன்னேற்பாடுகளும் முறையான பரிசோதனைகளும். கள்ள E pass களின் ஒழிப்பும் மிக முக்கியம்.

  நீங்கள் சொல்வதுபோல் நாமும் இந்த நிலையில் இருந்தால் இப்படித்தான் செய்திருப்போம்.

  விரைவில் நிலைமை சரியாக இறைவனை வேண்டுவோம்.

  புத்தகங்களை தேடி வாங்கி வாசிக்கும் வழக்கமும் வசதியும் இல்லாத என்போன்றோர்க்கு உங்களின் விமர்சனங்கள் உதவுகின்றன

  ReplyDelete
  Replies
  1. நம் மக்கள் திருட்டுத்தனமாய்த் தப்பி ஓடுவதே முக்கிய நோக்கமாய்க் கொண்டிருக்கையில் திருட்டு ஈ பாஸ்களின் தேவையும் அதிகம் ஆகின்றனவே! மக்களாய்ப் பார்த்து மனம் திருந்தினால் தான் உண்டு. இல்லை எனில் மேலும் மேலும் கஷ்டம் தான், பிரச்னை தான். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கோயில் பிள்ளை.

   Delete
 18. விந்திய மலைத்தொடருக்கு வடக்கே, மராட்டிய சத்ரபதி சிவாஜி போல், தென்னாட்டிற்கு மன்னர் கிருஷ்ணதேவராயர் - சமீப நூற்றாண்டுகளில் வீர, தீரத்தினால் புகழ் தேடித்தந்தவர். நல்லாட்சி தந்ததோடு, மக்களின் ஆன்மீக வாழ்விற்கும் துணைபோனவர். தமிழ்மொழிக்கு கிருஷ்ணதேவராயர் செய்த தொண்டை -அவர் பக்தி ரூபத்தில் ஆற்றியிருப்பினும்- தமிழர்கள் பலர் முதலில் படித்துத் தெரிந்துகொள்ளவேண்டும்.

  இப்போதும்கூட தமிழ்நாட்டின் மொழி, கலாச்சார சார்ந்த அருமை, பெருமைகளை அயல் மாநிலத்தவர் சிலரும், அயல்நாட்டு மொழிவல்லுனர்கள், Indologists, தமிழ் ஆர்வலர்கள் பலரும், நம்நாட்டிலிருக்கும் ’சிலவிதமான தமிளர்களைவிட’ அதிகம் அறிந்திருக்கின்றனர் என்றால் அது மிகையில்லை!

  திவாகரின் புத்தகம்பற்றி எழுதியது நன்று. நான் இவரைப்பற்றி இப்போதுதான் கேள்விப்படுகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஏகாந்தன், திவாகர் இணைய உலகில் மட்டுமின்றிப் பத்திரிகை உலகிலும் நன்கு அறிமுகம் ஆனவர் பத்திரிகையாளரான அவர் விசாகப்பட்டினத்திலேயே பல ஆண்டுகள் இருந்தார். இப்போது சென்னையில் இருக்கிறார் என நினைக்கிறேன். சரித்திரத்தில், இந்திய சரித்திரத்தில் முக்கியமாகத் தென்னாட்டுச் சரித்திரத்தில் ஈடுபாடு அதிகம் உள்ளவர். இந்த அடிப்படையிலேயே அவர் நாவல்களும் அமைகின்றன.

   Delete
  2. Indian Express News Paper

   Delete
 19. கொரோனா செவி வழி செய்திகள், தொலைக்காட்சி செய்திகள் உறவினர்கள் ஒவ்வொரு ஊர்களிலும் மாட்டிக் கொண்டு ஊர் திரும்ப முடியாமல் இருப்பது எல்லாம் மனதை வேதனை படுத்துகிறது.
  அலுப்பும், சலிப்பும் ஏற்படுகிறது. வேலை எதும் ஓட மாட்டேன் என்கிறது.

  புத்தக விமர்சனம் நன்றாக இருக்கிறது.

  உலகம் மக்கள் அனைவரும் நலமாக இருக்க பிரார்த்தனை செய்வோம் அது ஒன்றே நம்மால் முடிந்தது.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கோமதி, ஆமாம், எங்க மருமகள்,குழந்தையுடன் மாட்டிக் கொண்டிருப்பது இன்னமும் கவலை அளிக்கிறதாகவே உள்ளது. ஒன்றும் நல்ல வழி பிறக்கவே இல்லை.

   புத்தக விமரிசனத்திற்குக் கொடுத்த பாராட்டுக்கு நன்றி. பிரார்த்தனைகள் செய்து கொண்டே தான் இருக்கோம்.

   Delete
 20. சூழல் விரைவில் சரியாக வேண்டும் - அனைவருடைய எண்ணமும் அதுவே. சென்னையை விட்டு விலகும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது - கூடவே பரவலும் அதிகரிக்கிறது. :(

  புத்தகம் பற்றிய அறிமுகம் நன்று.

  ReplyDelete
  Replies
  1. வாங்க வெங்கட், சூழல் எப்போத் தான் சரியாகுமோ? இங்கே ஸ்ரீரங்கத்தில் மூலத்தோப்பு வரை கொரோனா பரவி இருப்பதாய்த் தகவல்கள் கசிகின்றன. எவ்வளவு தூரம் உண்மை எனத் தெரியலை. ஆனால் சென்னையிலிருந்து மக்கள் வருவதால் இது நடந்திருக்கும் வாய்ப்புகள் உண்டு

   புத்தகம் நன்றாக இருந்தது பாராட்டுக்கு நன்றி

   Delete
 21. தலைப்பிலே பொருட் பிழை இருக்கிறது கீசாக்கா...:).. புத்தகங்களும்.. ம் க்குப் பக்கதில் ஒரு கொமா வந்திருக்கோணுமாக்கும் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. சே..சே... இதுக்குத்தான் அதிரா அடிக்கடி உலா வரோணும் புளொக் பக்கம்.

  ஏனோ கொஞ்சம் பிஸியாகிவிட்டதுபோலவும், வெளி வேலைகளை முடிக்கோணும் எனவும் மனதில தோன்றுவதால், இங்கின எட்டிப்பார்ப்பதைக் குறைக்க நினைக்கிறேன்.. அதுவும் முடியவில்லை:).. சரியில்லையே.. ஒருவர் போஸ்ட் போட்டால், முடிஞ்சவரை போகோணும் எனவும் மனம் என்னைப்பார்த்துப் பேசுது:))..

  கொரோனா ஹொலிடே முடிவதற்குள் வீட்டு வேலைகள் பலதை ஒழுங்கு பண்ணிடோணும் என்பதாலேயே இங்கின வருவதைக் குறைக்க நினைக்கிறேன்.

  இங்கு வந்திட்டால் பின்பு வீட்டு வேலைகளின் ஓட்டம் குறைவாகிடுது கர்ர்:))

  ReplyDelete
  Replies
  1. வாங்க அதிரடி வானவல்லி/வானவில்லி? இஃகி,இஃகி,இஃகி! ஏஞ்சல் இல்லையே இதைப் பார்க்க! :))))) எழுத்துப் பிழை கண்டு பிடிச்சதெல்லாம் சரி. வீட்டு வேலைகளை எல்லாம் முடிச்சுக்கொண்டு கணினியில் உட்காருங்க இனிமேலே! :))))) எனக்கும் வீட்டு வேலைகள் பலவும் ஒழுங்கில்லாமல் இருக்கு. ஒரு நாளைக்குக் கொஞ்சம்னு சரி பண்ணிட்டு இருக்கேன். :(

   Delete
 22. நான் இந்தக் ஹொலிடேயில் ஒரு புத்தகம் கூடப் படிக்கவில்லை கீசாக்கா.. வெயில் என்பதாலும், நேரமே போதவில்லை, கொஞ்ச நேரம் கிடைச்சால் அதில் ஏதும்ம் யூ ரியூப்பில் பார்க்கவே நேரம் சரியாகிடுது...

  நீங்கள் வாசியுங்கோ... படம் பாருங்கோ.. ரிவியூ எழுதுங்கோ..:)

  ReplyDelete
  Replies
  1. நானும் அதிகம் படிக்கவில்லைதான். குறிப்பாகச் சில புத்தகங்கள் மட்டும். படமெல்லாம் பார்ப்பதில்லை. அப்ப்ப்ப்ப்ப்ப்போ "பலேபாண்டியா!" பார்த்ததைச் சொல்றீங்க போல! இன்னும் முழுசா முடிக்கலை! இஃகி,இஃகி, படம் பார்த்து முடிச்சால் நெல்லைக்காக விமரிசனம் எழுதி இருக்க மாட்டேனே! உலக வரலாற்றிலேயே புத்தம் புதிய படம்னு!

   Delete
 23. அன்பு கீதாமா,
  எல்லோருடைய எண்ணமும் உங்கள் எண்ணங்களோடூ
  ஓத்துப் போகிறது.
  இப்போது விமானப் பயணங்கள் ஆரம்பித்துவிட்டதாகச் சொல்கிறார்களே.

  ஒரு நல்ல நேரம் இறைவனே
  காண்பித்துக் கொடுப்பான்.
  இவ்வளவு இந்த வைரஸ் பரவக் காரணமாக இருந்த அறியாமையை எப்படி நோவது.
  ஏதோ ஒருவர் தான் மீண்ட கதையைச் சொல்லி
  இருந்தார்.
  அவர் நோய் வந்து மருத்துவமனையில் சேருவதற்கு முன் யாருடன் எல்லாம் தொடர்பில் இருந்தாரோ.

  இது ஒரு உதாரணம் தான்.

  திவாகர் எழுதிய இரு புத்தகங்கள் நான் படித்திருக்கிறேன்.
  முன்பு போலத் தொடர்பு இல்லை.
  அவரதும் ,அவரது மனைவியினதும் ஆன தமிழ் சேவை
  மிகவும் மெச்சத்தகுந்தது.
  அவர் வழியாகத் தெரிந்து கொண்ட விஷயங்கள்
  பல.
  உங்களது நூல் அறிமுகம் மிக விளக்கமாக
  இருக்கிறது.
  சரித்திரம் எவ்வளவு முக்கியம் என்பது இது போன்ற எழுத்தினால்
  புரிகிறது.
  மிக நன்றி கீதாமா.

  ReplyDelete
  Replies
  1. வாங்க வல்லி, சென்னை இன்னும் விமானம், ரயில், பேருந்துகளை வரவேற்கச் சித்தமாகவில்லை. இன்னும் எத்தனை நாட்கள் ஆகுமோ தெரியலை. திவாகருடன் எனக்கு இப்போது மெயில் வழி/இணைய வழித் தொடர்பு தான். சென்னைக்கு வந்துட்டார்னு நினைக்கிறேன். தேவாரம் மொழிபெயர்ப்பு என்னும் எவ்வளவு பெரிய வேலையைச் செய்துவிட்டு அதற்கான பெருமை ஏதும் இல்லாமல் இருவருமே அடக்கமாக இருக்கின்றனர்.

   Delete
 24. நடக்கும் நிகழ்வுகள் கவலை தருவதாகத்தான் இருக்கின்றன. மக்களுக்கு பொறுப்பு வேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. நம்பிக்கையும் அவ நம்பிக்கையுமாக ஊசலாடும் மனங்கள்! :(

   Delete
 25. புத்தகம் படிக்க முடிந்தவர்கள்கொடுத்து வைத்தவர்கள் ஒரு காலத்தில் voracious reader ஆக இருந்த நான் எதையும் படிக்க முடிவதில்லை மிகுந்த சிரமத்துடன்கணினி வாசிப்பு

  ReplyDelete
  Replies
  1. இந்தப் புத்தகமும் கணினி மூலம் வாசித்தது தான் ஐயா!

   Delete
 26. புத்தக விமர்சனம் நல்லா எழுதியிருக்கீங்க. இந்த மாதிரி எழுதும்போது முழு இடுகையுமே அந்தப் புத்தக விமர்சனமாக இருந்திருந்தால் மிகவும் சிறப்பா இருக்கும்.

  திவாகர் அவர்களுக்குப் பாராட்டுகள். நல்ல திறமை. நம்ம ராகிர அவர்களும் 'நான் கிருஷ்ணதேவராயன்' என்ற புத்தகம் எழுதியிருக்கிறார் (கிருஷ்ணதேவராயனே தன் சரித்திரத்தைச் சொல்வதாக). முடிந்தால் உங்களிடம் பகிர்ந்துகொள்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. விமரிசன இடுகை தனியாத்தான் இருந்தது. நான் தான் இதில் சேர்த்தேன். "நான் கிருஷ்ண தேவராயன்" இரண்டு பாகங்களும் 2,3, முறை படித்துள்ளேன். தொடராக வந்தப்போவே படிச்சிருக்கேன். அதன் பின்னர் விரிவாக்கமும் படிச்சிருக்கேன்.

   Delete
 27. முன்னமேயே படித்துவிட்டேன். கருத்தெழுத விட்டுப்போய்விட்டது.

  மக்களுக்கு சீரியஸ்னெஸ் வராத வரை, அரசாங்கம் ஒன்றுமே செய்ய முடியாது. அரசாங்கம் இதுவரை செய்ததே நல்லாத்தான் செய்திருக்காங்க

  ReplyDelete
  Replies
  1. அரசையும் குறை சொல்லத்தான் வேண்டி இருக்கு. மக்களைக் கட்டுப்படுத்தத் தெரியவில்லை. ஆங்காங்கே கூடி இருக்கும் கூட்டத்தை அப்படியே விட்டு விட்டார்கள். இப்போதும் நான்கு நாட்கள் நேரம் கொடுத்து ஊரடங்கு! நான்கு நாட்களில் எவ்வளவு எகிறுமோ?

   Delete
 28. நாயக்கர்கள் தமிழகத்துக்கும், தமிழுக்கும், நம் கலாச்சாரத்திற்கும் பெரும் தொண்டை ஆற்றியிருக்கின்றனர். நூற்றுக்கணக்கான கோவில்களை புனரமைத்திருக்கின்றனர்.

  தென் தமிழகத்திலும்கூட, எந்த ஊருக்குப் போனாலும் (திவ்யதேசங்கள்) அங்கு ஒரு சத்திரம், மண்டபம் கட்டியிருப்பார்கள் தெலுங்கு இன மக்கள்.

  திவாகர் அவர்களின் மற்ற நூல்களையும் வாசித்துப்பார்க்கணும்.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம், நெல்லையாரே, பல தமிழறிஞர்கள் தெலுங்கைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள்.தற்காலத்தில் முக்கியமாய் சுத்தானந்த பாரதி வழி வந்த நம்ம எங்கள் ப்ளாக் ஆசிரியர்களைச் சொல்லலாம். எனக்குத் தெரிந்து பல தெலுங்கு தாய்மொழியைக் கொண்ட தமிழறிஞர்கள் தமிழுக்காக உழைத்திருக்கின்றனர்.

   Delete