எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, June 06, 2020

எங்கும், எதிலும் ஏமாற்றம் தான்!

நேற்றுக் காலை  9-42 க்கு ஒரு தொலைபேசி அழைப்பு. என்னோட மொபைலில் தான். 98516 47899 என்னும் எண்ணில் இருந்து. யாரு இது புது நம்பரா இருக்கேனு நினைச்சுட்டு எடுத்தா, "வணக்கம், சார், நான் உங்க பாங்க் மானேஜர் சார், முத்துக்குமார் சார்!" என்று ஒரு ஆண் குரல். "யாரு நீங்க? எந்த பாங்க்?" என்று கேட்டதுக்கு, "உங்க மானேஜர் தான் சார் பேசறேன். முத்துக்குமார் சார் நான்! உங்க ஏடிஎம் நம்பரையும் பின் நம்பரையும் கொஞ்சம் சொல்றீங்களா? சரி பார்க்கணும்!" என்றார். நான் உடனேயே அவரிடம் எனக்கு பாங்கில் அப்படி ஒரு கணக்கு இல்லவே இல்லைனு சொல்லிட்டுத் தொலைபேசியை வைச்சுட்டேன். பின்னர் அந்த எண்ணை கூகிளில் போட்டுத் தேடினால் விசித்திரமான முடிவுகள் எல்லாம் வந்தன. சரிதான் போ! என நினைத்துக் கொண்டேன். வங்கிகளிடமிருந்து இப்படி ஒரு அழைப்பு வரும். அதற்கு நீங்க எந்த பதிலும் சொல்லாதீங்கனு தொலைபேசி எண்ணுக்குச் செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன. நாங்க யாரும் மானேஜர் என்னும் பெயரில் ஏடிஎம் எண்ணோ, க்ரெடிட் கார்ட் எண்ணோ, டெபிட் கார்ட் எண்ணோ கேட்க மாட்டோம். அது எங்க வேலை இல்லை. என்று சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். அப்படி இருந்தும் இப்படி!

முன்னெல்லாம் உங்க எண்ணுக்குப் பரிசு விழுந்திருக்கு. இந்த ஓட்டலில் இந்த நடிகருடன் விருந்து சாப்பிடலாம். நீங்க கட்ட வேண்டியதெல்லாம் 5000 ரூ மட்டுமே/அல்லது வேறே தொகை ஏதானும் சொல்லிக் கட்டச் சொல்லி நடிகருடனான உங்க விருந்து சாப்பிடும் நிகழ்வைப் படம்பிடித்துத் தொலைக்காட்சியில் போடப் போறோம். அதுக்கு உங்களுக்குப் பரிசு உண்டு என்றெல்லாம் சொல்லுவாங்க.  நான் ஓட்டலிலேயே சாப்பிடமாட்டேன் என்றும் நடிகருடன் எல்லாம் சாப்பிடுவது பிடிக்காது என்றும் பதில் சொல்லிடுவேன்.  இன்னும் சிலர் முத்துமாலை பரிசு உங்களுக்கு விழுந்திருக்கு. நீங்க இந்த இடத்துக்கு வந்து உங்க தொலைபேசி எண்ணைச் சொல்லிட்டு, ஆயிரமோ, இரண்டாயிரமோ கட்டினால் பத்தாயிரம் மதிப்புள்ள நகை உங்களுக்குக் கிடைக்கும் என்பாங்க. எனக்கு நகையே வேண்டாம்னு சொல்லிடுவேன். நடுவில் கொஞ்ச நாட்களாக நின்று போயிருந்தது. இப்போ மறுபடி ஆரம்பிச்சிருக்காங்க போல! பாவம்!
*********************************************************************************

கொஞ்ச நாட்களாகச் செய்திகளே மோசமாக வந்தால் கேரளத்தில் இருந்து வரும் செய்திகள் அதை விட மோசமாக இருக்கின்றன. இன்னிக்குத் தொலைக்காட்சிச் செய்தியில் கேரளத்தில் ஓர் இளம் கணவன் தன் மனைவியியும் ஐந்து வயதுப் பையரையும் வெளியே கடற்கரைக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி அழைத்துச் சென்றுவிட்டுக் கடைசியில் யாரோ நண்பன் வீட்டுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். அங்கே ஏற்கெனவே நான்கைந்து நபர்கள் குடிபோதையில். இவரும் அங்கே சென்ற உடனே குடித்ததோடு அல்லாமல் மனைவியையும் வலுக்கட்டாயமாகக் குடிக்க வைத்திருக்கிறார். பின்னர் அனைவருமாகச் சேர்ந்து அந்தப்பெண்ணை பலவந்தமாகச் சின்னாபின்னமாக்கி இருக்கிறார்கள். தடுக்கப் போன ஐந்து வயதுக் குழந்தையை அடித்துத் தூக்கி வீசி இருக்கிறார்கள். அந்தப் பெண்ணை சிகரெட்டால் சுட்டுக் கொடுமை! அவர்களின் குடிபோதை அதிகம் ஆனதும் அந்தப் பெண் எப்படியோ தப்பிக் கிழிந்த ஆடைகளோடு குழந்தையையும் தூக்கிக் கொண்டு தெருவுக்கு வந்து உதவி கேட்டிருக்கிறாள். யாரோ புண்ணியவான் அவள் நிலையைப் பார்த்துவிட்டுக் காவல் துறையை அழைக்க அனைவரும் கையோடு பிடிக்கப்பட்டிருக்கின்றனர். நல்லவேளையாக அந்தப் பெண்ணுக்கு மகளிர் பாதுகாப்பு ஆணையம் பாதுகாப்புக் கொடுத்திருக்கிறது.

கொரோனாவினால் வரும் துயர் போதாது போல! பெண்களுக்கு எப்படி எல்லாம் கஷ்டம் வருகிறது! அதிலும் கட்டிய கணவனே. ஐந்து வயதுக் குழந்தை இருப்பதால் திருமணம் ஆகி ஆறேழு ஆண்டுகள் ஆகி இருக்கும்! ஏன் இந்த வக்கிர புத்தி! பெண் என்பவள் ஆண் தேவைப்படும்போது உபயோகிக்கும் பொருளா? இயந்திரமா? அவளுக்கும் உணர்ச்சிகள் இல்லையா?  தொலைக்காட்சிச் செய்திகள் எங்கு பார்த்தாலும் கடத்தல், கொலை என்றே வருகின்றன. அதிலும் கடவுளின் நாட்டில் நடக்கும் நிகழ்வுகள் எதுவும் மகிழ்ச்சி அடைய வைக்கவில்லை! 

53 comments:

  1. கேரளத்தின் நிகழ்வு - வேதனை. அந்த கொடூரன்களை தண்டிக்காமல் விடக்கூடாது.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வெங்கட், யானை ஒரு வேதனை அதுவே இன்னமும் மனசு ஆறலை. இப்போ இது! இதை விட மோசமாக டிக் டாக் என்னும் சானல்(?) மூலம் காட்டுவது. செல்லப்பிராணிகளை எல்லாம் கொடுமை செய்து படம் எடுத்து வெளியிட்டுச் சிரிக்கிறாங்க! வர வர எங்கே போய்க் கொண்டிருக்கிறோம் என்பதே புரியலை!

      Delete
    2. அன்பு கீதாமா, இதென்ன பகல் கொள்ளையாக இருக்கிறதே.
      நல்ல வேளையாக அந்த அழைப்பை சமாளித்தீர்கள்.
      கேரளாவைப் பற்றி வர செய்திகள் பயங்கரம். இத்தனைக்கும் அங்கே ஆட்சி நன்றாக இருக்குன்னு சொல்கிறார்கள்.

      குடி எல்லாக் குடியையும் கெடுக்கும். ரொம்பப் பாவம் அந்தப் பொண்ணு.:(

      Delete
    3. வல்லி, வங்கிகள் எச்சரித்துக் கொண்டே இருக்கின்றன. ஆனாலும் ஏமாற்றுபவர்கள் ஏமாற்றுகிறார்கள். ஏமாறுகிறவர்கள் ஏமாறுகின்றனர். முகநூல் மூலம் நட்பு ஆகி ஒருத்தர் இன்னொருத்தரின் நெருங்கிய நண்பர்னு சொல்லிக் கொரோனா சிகிச்சைக்குப் பணம் தேவைனு கிட்டத்தட்ட 3 லக்ஷம் வரை சுருட்டி இருக்கார். அன்னிக்குத் தொலைக்காட்சியில் காட்டினாங்க.

      Delete
    4. கேரளத்தில் ஆட்சி நன்றாக இருக்காமா? இஃகி,இஃகி, இஃகி!

      Delete
  2. உங்களை ஏமாற்ற முயற்சி செய்கிறார்களே முடியுமா அதென்ன கூகிளில் கண்டு பிடிக்க முடியுமா

    ReplyDelete
    Replies
    1. நமக்கு எந்த எண்ணிலே இருந்து அழைப்பு வருதோ அந்த எண்ணை கூகிள் தேடலில் போட்டால் நம்பர் உண்மையா இல்லையா என்பது தெரிந்து விடும்.

      Delete
    2. நானும் எனக்குத் தெரியாத நம்பர் வந்தால் முதலில் அதை அட்டென்ட் செய்வதில்லை. அதை என் மொபைலில் சேவ் செய்வேன் சும்மா எ1 எ2 இப்படி ஏதாவது. அது வாட்சப்பில் இருக்கிறதா என்றும் பார்த்துக் கொள்வேன். வாட்சப்பில் இருந்தால் அதில் ஐடி பிக்சர் என்னவாது இருக்கா என்று பார்ப்பேன். அது சில சமயம் நமக்குத் தெரிந்தவராக இருந்தால் புரிந்துவிடும். அப்படிப் படம் எதுவும் இல்லை என்றால் கடைசியாகப் பார்த்த டைம் ஏதேனும் இருக்கா என்று மேலே பார்ப்பேன். அப்புறம் கூகுளில் தேடினால் பெயர் உண்மையாக இருந்தால் தெரிந்துவிடும். அல்லது எந்த ஏரியா எந்த ஃபோன் கனெக்ஷன் தெரியும்..

      அப்படி வாட்சப்பிலும் இல்லை என்றால் கூகுளில் போட்டுத் தேடுவேன். பெரும்பாலும் தெரிந்து கொள்ளலாம் ஆனால் சில நம்பர்கள் தெரியவராது...அப்புறம் சேவ் செய்த நம்பரை டெலிட் செய்துவிடுவேன்.

      என் உறவினர்கள் மற்றும் நட்புகள் சிலர் கூட ஃபோன் சிம் மாற்றிக் கொண்டே இருந்தாலோ அல்லது வீட்டில் நாலைந்து மொபைல் வைத்துக் கொண்டு ஏதேனும் ஒரு சிம்மில் இருந்து கூப்பிடுவார்கள் அப்படி என்றால் வாட்சப்பில் தெரிந்து விடும் அப்புறம் அவர்களிடம் சொல்லியிருப்பது இப்படி வேறு வேறு நம்பரிலிருந்து அழைத்தால் தெரியாத நம்பரை நான் எடுப்பதில்லை. ஒரு வேளை நீங்கள் என்னிடம் இல்லாத நம்பரிலிருந்து அழைத்தால் நான் எடுக்கவில்லை என்றால் உடனே எஸ் எம் எஸ் அல்லது வாட்சப் இருந்தால் அதில் மெசேஜ் கொடுங்கள் உங்கள் பெயரையும் சொல்லி. நான் உங்களைத் திரும்ப அழைக்கிறேன் என்று சொல்லி யிருக்

      கீதா

      Delete
  3. கேரளா சே...

    நீங்கள் சொன்னது போல் கைப்பேசியில் தொடர்பு கொள்வது அல்லாமல், மின்னஞ்சலில் இது போல பலமுறை பலவிதமாக... இணைப்பைக்கூட தொடாமல், உடனே delete...!

    ReplyDelete
    Replies
    1. நன்றி திரு தனபாலன். மின்னஞ்சல்கள் பல விதங்களில் வருகின்றன. நல்லவேளையாய் அவற்றை எல்லாம் பார்க்காமலேயே அழித்துவிடுவேன்.

      Delete
  4. கேரள சம்பவம் ஆச்சர்யம் இல்லை. மது/போதை மருந்து போன்றவை ஒருவனை எந்த நிலைக்கும் செல்ல வைக்கக்கூடியது. அந்தப் பாவத்தைச் செய்தவன் கணவன். போதை, குழந்தையை அடிக்கவைக்கிறது. என்ன கொடுமை இது.

    ReplyDelete
    Replies
    1. கொடுமை தான் நெல்லைத் தமிழரே! கட்டின மனைவியை இப்படியா கொடுமைப்படுத்துவது?

      Delete
  5. //உங்க மேனேஜர் தான் சார் பேசறேன்// தட்டச்சு மிஸ்டேக்கா இல்லை கூப்பிட்டவனுக்கு பெண் குரல்னு தெரியலையா?

    ReplyDelete
    Replies
    1. அதெல்லாம் இல்லை, சரளமாக தைரியமாகத் தடங்கல் இல்லாமல் பேசுவதாக நினைத்திருக்கலாம். ரொம்பவே நெருங்கியவர்கள் பேசுவது போன்ற தொனி!

      Delete
    2. வணக்கம் சகோதரி

      காலம் மோசமான சூழ்நிலையில் உள்ளது.அந்த காலத்திலிருந்தே இந்த மாதிரி ஏமாற்று வேலைகள் நடந்து வருகின்றன. எனக்கும் இந்த அனுபவம் ஒரு தடவை வந்துள்ளது. எங்கள் வீட்டிலுள்ளவர்களிடம் கொடுத்துப் பேசச் சொன்னேன். அதிலிருந்து அடையாளம் தெரியாத நம்பர்களில் கால் வந்தால் எடுக்க மாட்டேன். பல சமயம் அது ராங் நம்பராகவும் இருக்கும்.

      நீங்கள் உங்களுக்கு வந்த எல்லா ஃபோன் கால்களையும் தைரியமாக தனியே எடுத்துப் பேசி சமாளித்துள்ளீர்கள். உங்கள் தைரியத்திற்கு வாழ்த்துகள்.

      கேரளா சம்பவம் நானும் ஏற்கனவே படித்தேன். மனதுக்கு கஷ்டமாக இருந்தது. அந்த கணவனை கடுமையாக தண்டிக்க வேண்டும்.ஆனால் இந்த ஒருவனை தண்டித்தால் மட்டும் போதுமா? இதுபோல் வெளியே தெரியாமல் எத்தனையோ படுபாதக செயல்களை மக்கள் செய்கிறார்கள். காரணம் அவர்களின் தீய செயல்களின் ஆசையால் மனிதாபிமானம் மக்களிடையே அகன்று விட்டது. என்ன செய்வது? பகிர்வுக்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
    3. வாங்க கமலா, இதை விட மோசமாக வீட்டுக்கே வந்து ஏமாற்றியவர்களும் இருக்காங்க. இதிலே ஏமாறுவதில் என் மாமனார், மாமியார் முதல் இடத்தில் இருப்பாங்க. யார் எது சொன்னாலும் உடனே உருகிக் கொண்டு பணமோ, பொருளோ அள்ளிக் கொடுப்பாங்க. நான் தடுத்தால், "மனசு ஆகலை! ஸ்வாமி பக்தி கிடையாது!" என்றெல்லாம் சொல்வாங்க. பின்னால் ஏமாந்தது தெரிய வரும்போது வாயே திறக்க மாட்டாங்க. ஆனால் கொஞ்ச நாட்களில் மறுபடி அதே!

      Delete
  6. வங்கியிலிருந்து அழைப்பதாகச் சொல்லி எனக்கும் முன்பு இது மாதிரி அழைப்புகள் வந்திருக்கிறது.  வடஇந்திய உச்சரிப்புடன் ஒருவன் பேசுவான்.   அவனை  விளையாட்டுக்கு காட்டிப் பேசி இருக்கிறேன்!  நாம்தான் உஷாராய் இருக்கவேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஸ்ரீராம், எங்களுக்கு இது முதல்முறை. முன்னெல்லாம் நடு இரவில் வெளிநாட்டு அழைப்புகள் வரும். எடுத்து ஹெல்லோ என்றால் போதும்! நான் இங்கே மாட்டிக்கொண்டு கஷ்டப்படுகிறேன். திரும்ப இந்தியா வரப் பணம் இல்லை. இந்தக் கணக்கிற்குப் பணம் அனுப்புங்க என்பார்கள். பதிலே சொல்லாமல் வைச்சுடுவோம்.

      Delete
  7. கேரளா இது மாதிரிச் செய்திகளுக்கு பேர்போனதாகி விட்டது போலும்.  என்ன கொடுமை.  இப்போதுதான் பேஸ்புக்கில் கொரோனாவால் இறந்த ஒரு பாதிரியார் உடலை நல்லடக்கம் செய்ய விடாமல் தடுத்த மக்கள் பற்றியும் படித்து விட்டு வருகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. கேரளத்தில் படிப்பு விகிதம் அதிகம் என்பதால் இம்மாதிரி விஷயங்களிலும் முன் மாதிரியா இருக்காங்க போல! மோசமான மனிதர்கள்!

      Delete
    2. கேரளாவில் படிப்பறிவு அதிகம் என்பது ஒரு மாயை. கையெழுத்து மட்டும் போட தெரிந்திருப்பது கல்வியறிவு பெற்றதாக ஆக முடியுமா?

      Delete
    3. அப்படீங்கறீங்க? நான் என்னமோ குறைந்த பக்ஷம் பள்ளி இறுதியானும் முடிச்சிருப்பாங்கனு நினைச்சேன்.

      Delete
  8. மனிதநேயம் அழிந்து போய் விட்டது.
    இறைவன்தான் தீர்வைக் கொடுக்கணும்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கில்லர்ஜி, நீங்க சொல்வது உண்மைதான். இறைவன் தான் இவற்றை எல்லாம் சரி செய்யணும்.

      Delete
  9. மோசடிகளும் கொடூரங்களும் இந்த கொரோனா காலத்தில்கூட அரங்கேறுவது பகீரென்கிறது!

    ReplyDelete
    Replies
    1. வாங்க மனோ, அக்கிரமக்காரங்களுக்குக் கொரோனா காலம்னு ஒண்ணு தனியா எல்லாம் இல்லை. எப்போதும் அக்கிரமங்கள் தான்.

      Delete
  10. கேரளா சம்பவம் என்ன சொல்வது குடியின் கொடுமை .
    ஏமாற்றுக்காரர்களின் புதுப்புது வழிகள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க மாதேவி, எடுத்த எடுப்பில் ஏடிஎம் எண்ணைக் கேட்டால் சந்தேகப்படுவாங்கனு புரியலை போல!

      Delete
  11. இப்போ கொரோனாவால் நம் நாடுகளில் மக்கள் வருமானமின்றிக் கஸ்டப்படுகிறார்கள் அதனால களவுகள் அதிகரிச்சிருக்கிறதாம்...
    ஊரில் எங்கள் வீட்டிலும் ஓடு கழட்டி உள்ளே இறங்கி, அங்கிருந்த ஒரு சைக்கிளைத் திருடிச் சென்று விட்டனர்...

    இங்கும் குறுஞ்செய்திகள் வருகின்றன கீசாக்கா, பாங்கிலிருந்து நமக்கு எந்தக் கோலும் வராது என, அத்துடன் கிரடிட் கார்ட்களை ஒன்லைனில், தெரியாத பகுதிகளில் பாவித்து ஷொப்பிங் செய்ய வேண்டாம் எனவும்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க அதிரடி, இங்கே இம்மாதிரிக் கொள்ளைகள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன. மக்கள் தெரியாமல் போய் வலையில் மாட்டிக்கொள்கின்றனர்.

      Delete
  12. இரண்டாவது செய்தி, குடிக்கிறவர்கள் யாரையும் திருமணம் முடிக்கக்கூடாது, முடித்தபின் குடித்தால் உடனே விவாகரத்து எடுத்திடோணும்.. அப்படி எனில்தான் இது சரியாகும்...

    ReplyDelete
    Replies
    1. கல்யாணத்துக்கு முன்னாடி எவனும் தான் குடிப்பவன் என ஒத்துக்கொள்ள மாட்டானே அதிரடி! ஏமாற்றத் தான் செய்வான். மாட்டிக்கொள்ளும் பெண் தான் விழிப்புடன் இருக்கணும். ஆனால் ஐந்தாறு வருடங்கள் கழிச்சு இப்படி இருப்பவனை என்ன செய்ய முடியும்?

      Delete
    2. அதிரடியின் ஐடியாக்கள் எல்லாம் பிரமாதம்!...

      அக்காவின் கருத்துக்களே எனதும்!...

      மணமகன் மதுபோதையுடன் மணமேடைக்கு வரும் காலம் இது...

      பள்ளி/ கல்லூரி மாணவிகளும் மது விருந்து நடத்துகிறார்கள் - செய்திகள் வெளியாகின்றன...

      Delete
    3. வாங்க துரை! எந்த மாப்பிள்ளை தான் குடிகாரன் என ஒத்துக்கொள்வான்? இப்போதெல்லாம் மது அருந்தவில்லை என்றால் தான் ஏதோ மாதிரிப் பார்க்கிறார்கள். இதன் விளைவுகளை அனுபவித்தவர்களுக்கே இதன் துன்பம் புரியும்.

      Delete
  13. ஏமாறுபவர்கள் இருக்கும் வரை
    ஏமாற்றுபவர்கள் இருப்பார்கள் - நாம்
    எதற்கும் விழிப்பாக இருப்போம்!

    ReplyDelete
    Replies
    1. நன்றி யாழ்பாவாணன். மக்களுக்கு விழிப்புணர்வு தேவை.

      Delete
  14. எல்லாம் இருக்கட்டும்...
    எனது தேசம் இது தான்.. என்று இறைவன் சொல்லியிருக்கின்றானா?...

    கல்வியில் சிறந்த கேரளம்
    அறிவிலும் சிறந்ததாக இருக்க வேண்டுமா!?..

    யானைக்கு வெடியுணவு கொடுத்தவர்கள்
    மது என்ற ஏழையை அரிசித் திருடன் என்று அடித்துக் கொன்றது தவறு என்று தெரிந்தும் மருத்துவக் கழிவுகளை நமது எல்லைக்குள் கொட்டுவது - என, இன்னும் சில நினைவுக்கு வருகின்றன....

    ReplyDelete
    Replies
    1. துரை! அது என்னமோ அவங்க அப்படித்தானே விளம்பரம் செய்துக்கறாங்க? "கடவுளின் தேசம்!" என. கல்வியில் சிறந்தவர்களுக்கு அறிவு என்பது குறைவாகத் தான் இருக்கிறது. மருத்துவக் கழிவுகளைக் கொட்டுவதை வீடியோக்களிலேயே பார்க்கலாம். கேரள மக்களுக்குத் தாங்கள் தான் உயர்ந்தவர்கள் என்னும் எண்ணம் நிறையவே இருக்கு!

      Delete
    2. அவ்வளவும் அகம்பாவம்...

      இங்கே நிறைய பார்க்கலாம்...

      பெரிய வணிக வளாகங்களில்
      மலையாளம் பேசிக் கொண்டிருப்பவர்கள்
      நம்மை அருகில் கண்டதும் ஆங்கிலத்தில் சம்சாரிப்பார்கள்..

      பாண்டிகள் இங்கிலீஷ் அறியாதல்லோ!.. - என்று...

      தெலுங்கர், தமிழர் போல துப்புரவு வேலைக்கு இவர்கள் வருவதே இல்லை..

      வேண்டாம்... இதற்கு மேலும் இங்கே எழுதிக் கொண்டு இருந்தால் தேவை இல்லாததும் சொல்ல வேண்டியிருக்கும்...

      Delete
    3. உண்மை. வடமாநிலங்களில் இருந்தப்போ எனக்கும் அந்த அனுபவங்கள் நிறையவே உண்டு. நம்மை எல்லாம் சுத்தம் இல்லாதவர்கள் என்று பேசிச் சிரிப்பார்கள்.

      Delete
  15. பாவம் அந்தப் பெண்ணும் அவளது குழந்தையும்...

    அந்தக் கொடூரர்கள் கடுமையாகத் தண்டிக்கப் படவேண்டும்..

    இனியாவது அவர்களுக்கு நல்வாழ்வு கிடைக்கட்டும்....

    ReplyDelete
    Replies
    1. அந்தப் பெண்ணை நினைத்தால் தான் மனசு ஆறவே இல்லை. அந்தக் குழந்தைக்கும் பாவம், இத்தனை சின்ன வயசிலே மோசமான அனுபவங்கள். இதனால் அது மனம் பாதிக்கப்படாமல் படிப்பு போன்றவைகளை நிறைவு செய்யணும்.

      Delete
  16. தொழில் நுட்பம் எல்லா வகையிலும் அறிவு / ஆக்க பூர்வமான அழிவை நோக்கித் தள்ளிக் கொண்டிருக்கிறது...

    வாழ்க ஆக்கமும் அழிவும்...

    இருப்பவனிடம் பிடுங்கி இல்லாதவனிடம் கொடுப்பது என்றொரு தத்துவம் உதிர்க்கப்பட்ட நவீன யுகத்தில் தான் இருப்பவர்களை அறிவு பூர்வமாக ஏமாற்றி அவர்களது அழிவுக்கு வித்திடுவதும் நடக்கின்றது...

    நம்மை நாம் காத்துக் கொள்வோம்...

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் துரை, தொழில் நுட்பம் அதிகம் ஆக ஆக மனிதன் அழிவில் மேல் நோக்கிப் போய்க் கொண்டே இருக்கிறான். ஆக்கபூர்வம் என்பதே இல்லை. அதிலும் இந்த டிக் டாக் என்னும் ஒன்று! அது என்ன எங்கே கிடைக்குது என்றே புரியவில்லை. ஆடு, மாடு, நாய், பூனைகளை வைத்து டிக்டாக்கில்போட்டவர்கள் இப்போச் சின்னக் குழந்தை ஆறுமாதக் குழந்தையைக் கொடுமைப்பட்டுத்திப் போட்டு மகிழ்ந்திருக்கிறார்கள்.இதற்கெல்லாம் விமோசனமே கிடையாதா?

      Delete
  17. போனில், மெயிலில் நாள் தோறும் வருகிறது . நானும் அழித்துக் கொண்டே இருக்கிறேன்.
    ஏமாற்ற என்ன வழி உண்டோ அவ்வளவும் செய்கிறார்கள்.

    தொழில்நுட்பத்தால் நல்லது, கெட்டதும் நடந்து கொண்டு இருக்கிறது.

    கேரளா செய்திகள் மனதை கனக்க வைக்கிறது.
    இறைவனிடம் எல்லோருக்கும் மன அமைதி, நிம்மதி தர வேண்டிக் கொள்வோம் நம்மால் முடிந்தது அதுதான்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கோமதி. எங்களுக்கு மெயிலில் நிறைய வரும். அதுக்கே பிள்ளைகள் பயப்படுவாங்க. அப்பாவும், அம்மாவும் ஏமாறப் போறாங்களேனு. சரினு இப்போல்லாம் சொல்றதில்லை. நானே அழிச்சுடுவேன். கேரளச் செய்தி மிக மிக மோசம். அந்தப் பெண் குழந்தையோடு நல்லபடியா இருந்தால் போதும்.

      Delete
  18. மொபைலில் எச்சரிக்கை வந்து கொண்டே இருக்கிறது பாங்க் கொள்ளை பற்றி.

    முன்பு எப்போதோ ஒரு முறை பாங்கிலிருந்து கால் என்று யாரோ அழைக்க நான் உஷார்...என் பேர்ல அக்கவுண்டே கிடையாது அப்புறம் எப்படி நீங்க கூப்பிடறீங்க என்று சொல்லி போலீஸிடம் சொல்லுவேன் என்று சொல்லி விட்டேன். அப்புறம் உங்களுக்கு ஒரு லக்கி ப்ரைஸ் அடிச்சிருக்கு என்றும் வரும்.....அதுவும் அப்படியே. மொபைலில் எஸ் எம் எஸ் கூட வரும் உடனே டெலிட். இப்போதுதான் வருவது இல்லை.

    கேரள விஷயம் ச்சே...என்னத்த சொல்ல? இந்தக் குடி இருக்கு பாருங்க...வாயில் என்னென்னவோ வருது..அந்தக் குழந்தையும் பெண் குழந்தையாக இருந்திருந்தால்? நெஞ்சம் நடுங்குது..அவர்கள் அனைவரும் கோர்ட் அது இதுன்னு எதுவும் போகாம உடனே த்ண்டிக்கப்பட வேண்டும்..

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வாங்க தி/கீதா, எங்களுக்கு இம்மாதிரி ஏமாற்றும் அழைப்புகள் நிறைய வரும் முன்னெல்லாம். ஆனால் பேசும்போதே புரிஞ்சுடும். ஏமாந்தது இல்லை இதுவரையிலும்.

      Delete
  19. அப்பெண் பாவம் அக்கா...அந்தக் குழந்தையைப் பாருங்கள்...பாவம் ...என்ன ஒரு வாழ்க்கை இதெல்லாம்...ஆனால் இப்படியான குழந்தைகளுக்கு நல்ல சூழல் அமையவில்லை என்றால் மனம் பாதிக்கப்பட்டு படிப்பும் வராமல்...கெட்டுச் சீரழிகிறார்கள். பொதுவாகத் தெருவில் திரியும் பையன்களை எல்லோரும் காவாலிப் பசங்க என்பார்கள் ஆனால் இவர்களின் பின்புலத்தைக் கேட்டால் நாம் நொந்து போவோம் ...

    இக்குழந்தை அப்படி ஆகாமல் நல்லப்டியாக வளர்ந்து தன் அம்மாவைக் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக் கொண்டு காப்பாற்ற வேண்டும்.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் தி/கீதா, அந்தப் பையன் மனநிலை பாதிக்கப்படாமல் நல்லபடியாக வளர்ந்து அம்மாவைக் கவனிச்சுக்கணும்.

      Delete
  20. போலி வங்கி அழைப்பை திறமையாக சமாளித்திருக்கிறீர்கள். கீதா அக்காவா கொக்கா? யார் கிட்ட?
    கேரளீயர்களைப் பற்றி துரை செல்வராஜு சார் சொல்லியிருப்பது 100% உண்மை.

    ReplyDelete
    Replies
    1. வாங்க பானுமதி, எடுக்கும்போதே பேசும் தோரணையே காட்டிக் கொடுத்துடுமே! கேரளாக்காரங்களைப் பற்றி நானும் அறிந்திருக்கிறேன்.

      Delete
  21. உங்கள் அனுபவம் நமது இல்லத்தரசிகளுக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. எனக்கும் ஒருமுறை இதேபோன்ற அழைப்பு வந்தது. ஓர் இளம்பெண்ணின் இனியகுரலில் வந்தது. எனது டெபிட் கார்டின் பின்புறமுள்ள CVV நம்பரை update செய்யவேண்டுமாம். அதற்குப் பழைய நம்பரை அவளுக்குக் கூறவேண்டுமாம். விடாமல் பத்து நிமிடம் என்னோடு வாதாடினாள் அந்தப் பெண். கடைசியில் அவளுடைய பிறந்த தேதியைக் கேட்டேன். உடனே போன் நின்றுவிட்டது!

    ReplyDelete