எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, June 03, 2020

சில எண்ணப் பகிர்வுகள்!

மிக மோசமான புயல் மஹாராஷ்ட்ரா, குஜராத்தைத் தாக்குகிறது/தாக்கிக் கொண்டிருக்கிறது. கடந்த 140 வருடங்களில் மும்பை இப்படி ஒரு புயலைப் பார்த்தது இல்லையாம். ஏற்கெனவே கொரோனாவில் முன்னணியில் இருக்கும் மும்பை  இப்போப் புயல் தாக்கத்திலும் முன்னணியில் இருக்கிறது. ஆங்காங்கே பேரிடர் மேலாண்மைக்கான ஊழியர்கள் கடற்கரை எங்கும் நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். அவசர உதவிக்கு. மரங்கள் ஆடுவதும், கடலில் மிதக்கும் கப்பல்கள் அலைகளின் போக்குக்கு ஏற்ப ஏறி, இறங்குவதும் பார்க்கவே கவலை தருகிறது. என்றாலும் மஹாராஷ்ட்ரம், குறிப்பாக மும்பை இதையும் கடந்து வெளியே வரும் என எண்ணுகிறேன். ஏற்கெனவே அங்கே மாநிலமே தத்தளித்துக் கொண்டிருக்கையில் இப்போது இயற்கைச் சீற்றம் வேறே! இப்போத் தான் நாட்டின் கிழக்குப் பகுதியில் மேற்கு வங்கம் முழுவதையும் புயல் தாக்கியது. இப்போ மேற்குப் பகுதி! மக்கள் அனைவரும் பாதுகாப்பாக அவரவர் இல்லங்களில் இருக்கவும், ஒருவரும் இந்தப் புயலால் பாதிப்படையாமல் பாதுகக்கவும் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
*********************************************************************************

தமிழ்நாட்டில் எகிறிக்கொண்டிருக்கும் கொரோனா! இதில் பலரும் இன்னும் சரியாக அனைவரையும் சோதிக்கவில்லை. ஒரு வீட்டில் ஒருவருக்குக் கொரோனா எனில் அந்த வீட்டின் உறுப்பினர் அனைவரையும் சோதிக்க வேண்டும் என்கிறார்கள். அப்படிச் சோதிப்பதில்லை என்றும் சொல்கின்றனர். முறையான சோதனை இருந்தால் இன்னமும் நோயாளிகள் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்கிறார்கள். ஆனால் சுகாதாரத் துறையோ சரியான புள்ளி விபரங்களையே கொடுப்பதாகச் சொல்கிறது. ஆனால் ஊரடங்கு தளர்த்தப்பட்டதில் தொலைக்காட்சியில் பார்த்தவரையில் யாரும் வாயில், மூக்கில் மறைத்து முகமூடி போட்டுக்கொள்ளவே இல்லை. அனைவருக்கும் எது வேண்டுமானாலும் நடக்கட்டும். எத்தனை நாட்கள் தான் அடங்கிக் கிடப்பது என்னும் எண்ணம் வந்துவிட்டதோ என்னமோ!

*********************************************************************************

நான் எங்க குருநாதர் பற்றி எழுதினாலும் எழுதினேன்; எல்லோருக்கும் அவர் யார் எனத் தெரிந்து கொள்ள ஆவல். எங்களுக்கே கடந்த நான்கு வருடங்களாகக் கண்ணில் படவில்லை. மற்றவர்களுக்கு எங்கே இருந்து காட்டுவது? ஆனால் குரு எங்களைத் தேடி வந்தார். எங்களைப் பக்குவம் அடைந்தவர்களாக நினைத்தாரோ இல்லையோ அது தெரியவில்லை. ஆனால் எங்களிடம் மரியாதையும், பாசமும் மிகுதியாக இருந்தது./இப்போவும் இருக்கும். அவர் வந்துவிட்டுப் போனாலே எங்களுக்கு மனம் அமைதியாகவும், நிறைவாகவும் இருக்கும். இத்தனைக்கும் தனிப்பட ஏதும் சொல்லி இருக்க மாட்டார். நாங்களும் தனிப்பட எதுவும் கேட்டுக்கொண்டதில்லை. ஆனாலும் நம் மனதில் உள்ள பிரச்னைகளுக்கான தீர்வை அவர் பேச்சின் மூலமே தெரிந்து கொண்டு விடுவோம். அவரைப் பார்க்கணும்னு யார் ஆசைப்பட்டாலும் பார்க்க வேண்டும் என்றிருந்தால் மட்டுமே கண்களில் படுவார்.  ஆனாலும் பார்க்கவேண்டும் என்னும் ஆவல் விடவில்லை. அவர் வணங்கும் அம்பிகையே அவரை விரைவில் எங்களுக்குக் காட்டித் தரவேண்டும் எனப் பிரார்த்திக்கிறேன்.
*******************************************************************************





62 comments:

  1. இயற்கையின் சீற்றம் தணிய வேண்டுவோம்.
    உங்கள் குரூநாதரை வணங்குகிறேன். முன்பும் இவர் பற்றி குறிப்பிட்டதாக ஞாபகம்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க மாதேவி, முதல்வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. ஆம் பலமுறை குறிப்பிட்டிருக்கேன்.

      Delete
  2. இது என்ன இது?
    ஸ்ரீரங்கத்தில் இருந்து செய்திகள் வாசிப்பவர்: கீசாக்கா:))..

    இறைவனின் ருத்திர தாண்டவம் ஆரம்பமாகிவிட்டதைப்போல இருக்குது உலகில்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க பிஞ்சுப் பெதும்பை, ருத்திர தாண்டவமாய்த் தான் தெரியுது. இன்னும் பூகம்பம் வேறே வரப்போகுதாம். அதுவும் ஸ்ரீரங்கம், திருச்சியில்! சொல்றாங்க! :)

      Delete
    2. அதிரா அடுத்து உங்கள் ஊசி இணைப்பில் வரக்கூடியது :  !!!

      "ஏன் மகனைத் திட்டுகிறீர்கள்?  

      திட்டாம பின்னே?  கொரோனா லீவு முடிஞ்சு அடுத்தது வெட்டுக்கிளி லீவான்னு கேட்கறேன்"

      Delete
    3. * கேட்கறான்னு படிக்கவும்...  கிர்ர்ர்ர்...

      Delete
    4. பிரச்னைகள் வலுத்துக்கொண்டே போகின்றன. முடிவு தான் என்னனு தெரியலை. :(

      Delete
  3. அதுதான், கொரோனா இப்போ ஃபிர்ன்டாகிவிட்டது மக்களோடு:)).. நீ உன்பாட்டில் இரு நான் என்பாட்டில் இருக்கிறேன் எனும் மன எண்ண ஓட்டம்:))

    ReplyDelete
    Replies
    1. என்னவோ போங்க அதிரடி, மக்கள் இப்படிப் பொறுப்பில்லாமல் இருப்பதில் நியாயமே இல்லை.

      Delete
    2. போதாக்குறைக்குத் தொலைக்காட்சித் தொடர்கள் எடுக்க வேறே அனுமதி கொடுத்திருக்காங்க. 60 பேர் இருக்கலாமாம். கல்யாணம் எனில் 20 நபர்கள், மற்றவற்றிற்கும் 20 நபர்கள் மட்டுமே. ஆனால் தொலைக்காட்சித் தொடர்களுக்கு 60 நபர்களாம். ஒரு தொலைக்காட்சி சானலில் 10 தொடர்கள் வந்தால் 600 பேர்கள். இதெல்லாம் கூட்டம் இல்லையா? கொரோனா தமிழ்நாட்டில் இன்னும் பரவ வழி செய்திருக்காங்க. :(

      Delete
    3. நல்லவேளையாகத் தொழிலாளர் அமைப்பு (பெப்சி) தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு உறுதி செய்யப்படவில்லைனு மறுப்புத் தெரிவிச்சிருக்கு. எல்லோரும் மனிதர்கள் தானே!

      Delete
  4. கடசிப்பரா... என்ன எழுதி இருக்கிறீங்கள் என என் ஞானக் கண்ணுக்குப் புரியவில்லையே கீசாக்கா... எங்களைத்தேடி வந்தார் என்கிறீங்க, கடவுள் கண்ணில் காட்டவில்லை என்கிறீங்க... எழுத்துப் புரியவில்லை எனக்கு.

    ReplyDelete
    Replies
    1. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், ஞானமே இல்லை, அப்புறமா எப்பூடிப் புரியுமாம்? ஆரம்பத்தில் எங்களைத் தேடி வந்தார். இப்போச் சில ஆண்டுகளாகக் கண்களில் படவில்லை. செய்திகள் மட்டும் அவ்வப்போது வருகின்றன. என்னிக்கு எங்கள் முன் தோன்றுவாரோ எனக் காத்திருக்கோம்.

      Delete
  5. பாவம் மக்கள் எத்தனை சோதனைகள் ஒண்ணொண்ணா தொடருதே ..இறைவன் காக்கட்டும் வழி காட்டட்டும் .கொரோனா பரவகாரணம் தெரிந்தும் மக்கள் விட்டேற்றியா இருப்பது வேதனை.உங்கள் குருநாதரை சீக்கிரம் சந்திப்பீர்கள் என தோணுது ..நீங்க அவரை அடிக்கடி நினைக்கும்போது அவருக்கு தெரியும் .

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஏஞ்சல், ஆமாம் அவருக்கு நாங்கள் அவரை அடிக்கடி நினைப்பது தெரியாமல் இருக்காது. விரைவில் சந்திப்பு நடக்கும் என ஒவ்வொரு நாளும் காத்திருக்கோம்.

      Delete
  6. உலகை காக்க இறைவனால் மட்டுமே இயலும் அனைவரும் பிரார்த்திப்போம்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், கில்லர்ஜி, இறைவன் தான் அனைவரையும் காக்கவேண்டும். பிரார்த்தனை ஒன்றே வழி.

      Delete
    2. விரைவில் ஒரு அவதாரம் எடுக்கலாம்

      Delete
  7. நான் இரண்டு மூன்று நாட்களாக தொலைக்காட்சியே பார்க்கவில்லை. மும்பை எப்போதுமே ஜூன் மாதத்தில் பாதிக்கப்படும். மத்தளத்துக்கு இரு புறம் இடி என்பது போல கொரோனா, புயல். சரியாகிவிடும் என நம்புவோம்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க நெல்லைத்தமிழரே, மழை எப்போதும் வலுவாக இருக்கும் மும்பையில். என்றாலும் இம்மாதிரிப் புயல் தாக்கியதில்லை. சுமார் 130 ஆண்டுகளுக்குப் பின்னர் இப்போது வலுவான புயல்.

      Delete
  8. முகமூடி போட்டுக்கொள்ளாதது அவரவர் விருப்பம்தான், வீட்டுக்குள்ளேயே அடங்கிக்கிடக்கும் வரை. இல்லாவிட்டால் அவர்கள் மற்றவர்களுக்குத் தொந்தரவாகிவிடுவார்கள்.

    கொரோனா மறைய ஆரம்பித்துவிட்டதா?

    ReplyDelete
    Replies
    1. இன்னிக்கு இங்கே ரத்தப் பரிசோதனைக்கு வந்த பையர் எங்களை முகமூடி போட்டுக்கொள்ளச் சொல்லிப் பின்னர் தான் ரத்தமே எடுத்தார். இத்தனை நாட்களாகக் கூப்பிட்டும் வரவில்லை. வர மாட்டேன்னூ சொல்லிட்டார்.

      Delete
  9. "குருநாதர்" - ம்.... இதை உணர்வது அவரவர்களுக்குத்தான் முடியும். உங்களுக்குத் தேவையான போது (என்று அவர் நினைக்கும்போது) அவர் நிச்சயம் வருவார். உங்கள் ஆன்மா உயர் நிலையில் இருக்கிறது என்பதையே குருநாதரின் அறிமுகம் காட்டுகிறது. வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. நெல்லைத்தமிழரே, குருநாதர் இருப்பதால் எங்கள் ஆன்மா உயர்நிலையில் இருப்பதாகச் சொல்ல முடியாது. விரைவில் அவர் தரிசனம் கொடுக்கட்டும். அதுக்குத் தான் காத்திருக்கோம்.

      Delete
    2. அப்படி இல்லை கீசா மேடம். நிச்சயமாக என்னைவிட உயர்நிலைதான். அந்ந அந்த நிலைக்குத் தகுந்தவர்களுக்கு மட்டும் ஆன்மீகப் பெரியோர் காட்சியளிப்பர், வாழ்வில் வருவார். வாழ்த்துகள்

      Delete
    3. நெல்லைத்தமிழரே, நீங்க சொல்வது பார்த்தால் எனக்குள்ளே வெட்கமும், பயமும் வருகிறது. நீங்க சொன்ன அந்த உயர்நிலைக்குப் போக முயற்சியானும் செய்யணும் நான் இனிமேலாவது! :(

      Delete
  10. இயற்கையின் சீற்றத்துக்கு என்ன செய்யமுடியும்?...
    எல்லாம் வல்ல இறைவனைச் சரண் அடைவதை விட...

    ReplyDelete
    Replies
    1. வாங்க துரை, இயற்கை கடுமையான கோபத்தில் இருப்பதால் முழு வேகத்தோடு சீறிக்கொண்டிருக்கிறது. அந்த ஆண்டவன் தான் காப்பாற்ற வேண்டும்.

      Delete
    2. இயற்கையின் சீற்றத்துக்கு , மும்பை
      அதிகம் சேதம் இல்லாமல் தப்பட்டும்.

      இந்த ஊரிலேயே இன்னும் சரியாகச் சோதனைகள் நடக்கவில்லை
      என்றுதான் சொல்கிறார்கள்.
      நாளொரு சேதி வந்தவண்ணம் இருக்கும் போது
      இப்போது வன்முறைக்கு ஆளானவருக்காக
      எதிர்ப்புப் போராட்டங்கள் நில்லாமல் நடக்கின்றன.

      எல்லோரும் ஒன்று சேர்ந்து நடத்தினாலும் இந்த கொரோனா
      காலத்தில் இப்படி ஆயிரக்கணக்கில்,லட்சக்கணக்கில்
      ஒன்று சேருவது எத்தகைய விளைவுகளைக் கொடுக்குமோ.

      குருனாதர் பற்றி உங்களுக்குச் செய்திகள் வருகிறதா.
      எனக்கு ஒன்றும் தெரிவதில்லை.

      மனதில் அவர் கருணை நிறைந்திருப்பதும்,
      அந்த அருள் முகமும்தான் நினைவுக்கு வருகிறது..

      Delete
    3. வாங்க வல்லி, முத்துச்சாமிக்கு ஏதோ தெரியும், ஆனால் அதைச் சொல்ல அவரால் இயலாது. அவருக்குக் கிடைத்த உத்தரவு அப்படி. ஆனால் விரைவில் வருவார் என்றே சொல்கின்றார்கள். பார்ப்போம்.

      Delete
  11. மும்பைப்புயல், மும்பை மழை, மும்பை கொரோனா...   எல்லாமே ஸ்பெஷல்தான்.  எங்கள் உறவினர்களும் மும்பையில் இருக்கிறார்கள்.  நம் வலையுலக நட்புகளும் இருக்கிறார்கள்.  அனைவரும் பத்திரமாக இருக்க பிரார்த்தனைகள்.

    ReplyDelete
    Replies
    1. @ ஸ்ரீராம், மும்பையக் கடந்து விட்டது என்கின்றனர். புனேயில் இருக்கு என்கின்றனர். ஒண்ணும் புரியலை!

      Delete
  12. இத்தனை நாட்களில் இன்றுதான் எங்கள் வீட்டுக்கு மாநகராட்சி ஊழியர் வந்து விவரம் கேட்டுச் சென்றார்.  எங்கள் ஏரியாவில் எல்லோரும் முகக்கவசம் அணிந்தே நடமாடுகின்றனர்.  

    ReplyDelete
    Replies
    1. ஸ்ரீராம், முகக்கவசம் அணிந்தாலும் அதை நாகரீகமாகக் கழுத்தில் தொங்க விட்டுக்கறாங்களே! அதைப் போட்டுக்கொண்டே பேசலாம் என்பதே பலருக்குப் புரியலை.

      Delete
    2. ஆம்.  அது சிறிய அளவுதான்.  ஆனால் நான் சொல்லிப்புரிய வைப்பதுண்டு.  ஒரு தடவை என்னை நிறுத்திய போக்கு வாரத்துக்கு காவலருக்கே சொன்னேன்!

      Delete
  13. உங்கள் குருநாதர் பற்றி முன்னர் ஓரிருமுறை எழுதி படித்த நினைவு இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், நிறையச் சொல்லி இருப்பேன்.

      Delete
  14. இயற்கை சீற்றம் மக்களுக்கு இன்னலகள் இல்லாமல் அமைதியாக கடக்க வேண்டும்.

    தானே வருவார் குருநாதர்.உங்களுக்கு மன அமைதியும் , நிறைவும் கிடைக்கும்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி கோமதி! இறைவன் அனைவரையும் காத்து ரக்ஷிக்கட்டும்.

      Delete
  15. இயற்கைச் சீற்றம் - நிறைய அழிவுகள் இல்லாமல் தப்பித்திருக்கிறது மும்பை.

    கொரோனா - இன்னும் உச்சம் தொடவில்லை என்றே தெரிகிறது. இருந்தாலும் நம் மக்கள் எல்லாவற்றையும் அதன் போக்கில் எடுத்துக் கொள்ள பழகிவிட்டார்கள் என்றே தோன்றுகிறது.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வெங்கட், இதுவே உச்சம் தொடலைனா அப்புறம் உச்சம் தொட்டால் எப்படி இருக்குமோ? ஒண்ணும் புரியலை. மஹாராஷ்ட்ரா,குஜராத்தை இயற்கை அன்னை காப்பாற்றி விட்டாள்.

      Delete
  16. http://vamsadhara.blogspot.com/2009/05/blog-post.html என் இனிய நண்பர் ஆன திரு வி.திவாகர் அவர்கள் எங்கள் குருநாதரான காழியூரருடனான சந்திப்பைப் பற்றி எழுதிய சின்னப் பதிவு. இங்கே பார்க்கவும். இதைச் சற்று முன்னர் ஜேகே அண்ணா அவர்கள் எங்கள் ப்ளாகுக்கு அனுப்பி இருந்தார்.

    ReplyDelete
    Replies
    1. பார்த்தேன். படித்தேன். பிறகு திருப்பதி சம்பந்தமான பதிவுகளையும் படித்தேன். இப்போதெல்லாம் எழுதுவதில்லையோ?

      Delete
    2. அவ்வப்போது எழுதுவார் நெல்லை. அவரும் அவர் மனைவியுமாகச் சேர்ந்து தேவாரத்தைத் தெலுங்கில் மொழி பெயர்த்தனர். அதனால் சில ஆண்டுகள் ஆகிவிட்டன. என்றாலும் அவ்வப்போது தொடர்பில் இருக்கிறார்/இருப்பார். மிகப் பெரிய வேலைகளை எல்லாம் அநாயாசமாகச் செய்பவர். அதைப் பற்றித் துளியும் நினைக்கவும் மாட்டார். இப்போது கிருஷ்ணதேவராயர் பற்றி ஓர் நாவல் எழுதி இருக்கிறார். அதைத் தான் எனக்கு பிடிஎஃப் ஆக அனுப்பி விமரிசனமும் கேட்டிருக்கார். நெருங்கிய நண்பர்களில் அவரும் ஒருவர்.

      Delete
    3. அந்த பிடிஎஃப் எனக்கும் அனுப்பச் சொல்லலாமே.... நான் சமைக்கத் தெரிகிறதோ இல்லையோ, விமர்சனம் பண்ணுவதில் பெட்டர் (னு நான் நினைச்சுப்பேன். அதுவும் தவிர குறைகள் என் கண்ணில் சட்னு பட்டுடும்)

      Delete
    4. நான் அனுப்பி வைக்கிறேன். என்னிடம் அந்த மடல் இரு வேறு இமெயில் ஐடிக்களிலும் இருக்கு. திவாகர் இரண்டு ஐடிக்கும் அனுப்பி வைச்சிருக்கார். இது சரித்திர நாவல். வம்சதாராவும் சரித்திர நாவல். இது அம்பேரிக்காவில் மீனாக்ஷி கோயில் நூலகத்தில் கிடைச்சது. ஆனால் இரண்டாம் பாகம்! முதல் பாகம் யாரோ எடுத்துச் சென்றது திரும்ப வைக்கவே இல்லை. :(

      Delete
  17. வணக்கம் சகோதரி

    இந்த தொற்று உலகை பயமுறுத்துவது போதாதென்று இயற்கை சீற்றங்கள் வேறு மக்களை அலைக்கழிக்கிறது.

    உங்கள் குருநாதரைப்பற்றி நேற்று எ. பியில் நீங்கள் சொன்னதை படித்தேன். விரைவில் உங்கள் குருநாதர் உங்களுக்கு தரிசனம் தந்து நன்மைகள் நடக்க இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கமலா, உங்கள் கருத்துக்கும் பிரார்த்தனைகளுக்கும் நன்றி.

      Delete
  18. இயற்கை - பிதற்றுபவர்களை அதிகம் ஆக்குறதே தவிர, உணர வைத்து திருத்துவதில் சில காலம் ஆகலாம் அம்மா...

    பசித்தோர் முகம் பார் - நல்லறமும் நட்பும் நன்றென்றிரு... நடு நீங்காமலே நமக்கு இட்டபடி என்றென்றிரு மனமே - உனக்கு உபதேசம் இதே... பொம்மலாட்டமென்றேயிரு பொல்லாவுடலை - அடர்ந்த சந்தைக் கூட்டமென்றேயிரு - சுற்றத்தை - வாழ்வைக் குடங்கவிழ்நீர் ஓட்டமென்றேயிரு - நெஞ்சே உணர்த்துவதேசமிதே...

    ஒன்றென்றிரு தெய்வம் உண்டென்றிரு...
    உயர் செல்வமெல்லாம் அன்பென்றிரு...

    ReplyDelete
    Replies
    1. நன்றி திரு தனபாலன்.

      Delete
  19. வம்சதாரா சென்று ஒரு பித்தலாட்ட கதையையும் அறிந்தேன்...! நன்றி அம்மா... எனது தொகுப்பில் சேர்த்துக் கொண்டேன்...!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி திரு தனபாலன்.

      Delete
  20. மேற்கு வங்கம் புயலில் சிக்கி வெளியே வரும் சமயம் மும்பை குஜராத் புயலில். ஆனால் மும்பை தப்பித்துவிட்டதாகத்தான் அறிகிறேன் அக்கா. என் கோசிஸ்டர் புனேயில் இருக்கிறார். ஆமாம் இது 140 வருடங்களுக்குப் பிறகு...ஏற்கனவே தொற்றில் தத்தளிக்கிறது இந்தப் புயல் அதை அப்படியே லபக்கிக் கொண்டு கடலில் கரைத்துவிட்டால் நல்லது.

    சென்னை என்றில்லை அக்கா இங்கும் முகமூடி சும்மா நாம்கேவாஸ்தே தான். எல்லாம் நாடியில் தான் இருக்கும். மூக்கைக் கவர் செய்து இருக்கவே இருக்காது அப்புறம் எதற்கு மாஸ்க்? இனிதான் பீக் போகும் என்றும் சொல்கிறார்களே. இதுவே நமக்குப் பீக் என்று தோன்றுகிறது. ஆனால் மக்கள் யாரும் சீரியஸாக எடுக்கவில்லை என்றே தோன்றுகிறது எல்லோரும் ஜாலியாக எப்பவும் போல கடந்து சென்று வருகிறார்கள்.

    உங்கள் குருநாதரை நீங்கள் விரைவில் காண்பீர்கள் அக்கா.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. நன்றி தி/கீதா. இங்கே ஓரளவுக்கேனும் கடைப்பிடிக்கிறார்கள். கடைகளுக்குள் 5 நபர்களுக்கு மேல் விடுவதில்லையாம். வங்கியிலும் அப்படியே! காய்கறிச் சந்தையிலும் கூடியவரை இடைவெளி கடைப்பிடிக்கப்படுகிறது. அப்படியும் புதுசாகத் தொற்று தோன்றி வருகிறது. என்ன செய்ய முடியும்? :(

      Delete
  21. மேற்குவங்கம் போன்ற மாநிலங்கள் சரியாகச் சோதிப்பதில்லை. பாதிப்பு/இறப்பு விபரம் போன்றவற்றை அமுக்கிவிடுகிறார்கள். சரியான புள்ளிவிபரம் வெளிப்பட்டால் மாநிலத்தின் பெயர் கெட்டுவிடுமே என்றுபோலும். மத்திய அரசின் மதிப்பீடு: கொரோனாபற்றிய சரியான புள்ளிவிபரங்கள் தரும் தென் மாநிலங்கள்: கேரளா, கர்னாடகா, தமிழ்நாடுமட்டும்தான். வடக்கே டெல்லி, மஹாராஷ்ட்ராவிலெல்லாம் எல்லாம் மாளாத அபத்தக்காட்சிகள்.

    காழியூரர் பற்றி எபி-யில் கொடுக்கப்பட்ட லிங்க் பார்த்தேன். அதில் முக்கிய தகவல், விவரிப்பு என ஏதுமில்லை.

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஏகாந்தன், அவருடனான சந்திப்புப் பற்றி மட்டுமே எல்லோரும் எழுதி இருப்போம். படங்களோ அவரைப் பற்றிய சொந்த விபரங்களோ எழுதுவதற்கு அனுமதி இல்லை. மற்றச் சாமியார்கள் போல் ஆசிரமமோ அல்லது பணம் பிடுங்குவதோ இல்லை. இல்லாதவர்களுக்கு அவர் தான் உதவிகள் செய்வார். எங்க வீட்டுக்கெல்லாம் வரும்போது சொந்தச் செலவில் தான் வருவார். பார்க்கவும் துறவி மாதிரி இருக்கமாட்டார். எளிய வெள்ளை உடையிலேயே காட்சி அளிப்பார்.

      Delete
  22. அருமையான தொகுப்பு
    தொடருங்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி யாழ்பாவாணன்.

      Delete
  23. இயற்கை சீற்றம் முடிந்து விட்டது. கொரோனா சீற்றம் எப்போது முடியும் என்று தெரியவில்ல. உங்கள் குருநாதர் உங்களுக்கு  விரைவில் உங்களுக்கு தரிசனம் தருவார்.  

    ReplyDelete