எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, June 26, 2020

புதிய ப்ளாகரில் இருந்து கொடுக்கும் சோதனைப்பதிவு.

 
சற்று முன்னர் ஒரு தொலைபேசி அழைப்பு. ஆலம்பாக்கம் என்றார்கள். கேக் ஆர்டர் கொடுத்திருக்கீங்களே என்று கேட்டார்கள். ஆலம்பாக்கம் இங்கே சுற்று வட்டாரத்தில் உள்ள ஊர் தான் என்றாலும் அவங்க ஏன் இங்கே அழைக்கவேண்டும் என்று புரியவில்லை. திரும்பத் திரும்பத்திரும்ப அழைப்பு வந்து கொண்டே இருந்தது. பின்னர் நாங்க இல்லைனு சொல்லி அழைப்பை நிறுத்தினேன்.

நேற்று மாலை நல்ல மழை. நின்று நிதானமாக ரசித்து ரசித்து வருணன் நீரைப் பொழிந்தான். காலையில்  மொட்டை மாடிக்குப் போனப்போக் காவிரியைப் படம் எடுக்கக் காமிரா கொண்டு போகலையேனு நினைவில் வந்தது. இப்போத் தண்ணீர் நிறைய ஓடுகிறது. ஆங்காங்கே எச்சரிக்கைப் பலகைகள் வைத்திருக்கின்றனர்.  மொட்டை மாடியில் இன்னிக்குத் தான் மோர்மிளகாயைக் காய வைச்சிருக்கேன். நாலு மணிக்குப் போய் எடுத்துக்கொண்டு வரவேண்டும்.  

இன்னிக்குப் பல நாட்கள் கழிச்சு மசால் தோசை பண்ணலாம்னு ஒரு எண்ணம். சும்மாக் கொஞ்சம் போல் உ.கி. போட்டு! பண்ணினால் படம் எடுத்துப் போடறேன். காலையிலேயே இன்னிக்கு சாம்பார் வைச்சுட்டேன்.  ஆகவே சாயங்காலம் கிழங்கு மட்டும் பண்ணினால் போதும். சட்னியெல்லாம் அரைக்கப் போவதில்லை. செலவு ஆகாது! யாரானும் இருந்தால் அரைக்கலாம். 

இது நேரடியாகத் தட்டச்சும் பதிவு. சும்மா சோதனைக்காக எழுதுகிறேன். இதில் எழுதுவது ஒண்ணும் ரொம்ப வசதியாக எல்லாம் தெரியலை.  வேர்ட் டாகுமென்டில் கொடுத்திருக்காப்போல் நிறைய ஆப்ஷன்ஸ் இருக்கின்றன. இந்த மாதிரி மரபு விக்கியிலே இருக்கும். இது ஏற்கெனவே வேலை செய்தது தான். அங்கேயும் தேவைப்பட்ட இடங்களில் ஃஃபான்ட்ஸை மாற்றிக் கொள்ளலாம். தனிப்படத் தெரிய வேண்டும் எனில் ஃபான்ட்ஸை மாற்றிக் காட்டலாம். பத்திகளை ஒழுங்கு செய்யலாம். மார்ஜின்கள் கொடுக்கலாம்.  வரிகளுக்கு இடையில் உள்ள இடங்களை அதிகரிக்கலாம். ஒன்றின் மேல் ஒன்று வரி விழாது. ஆகவே இது ரொம்பவே புதுசெல்லாம் இல்லை. ஷெட்யூல் பண்ணும் வசதி இதில் கொஞ்சம் தெளிவாகவே இருக்கு. ஒண்ணும் பிரச்னை இருக்காது என்றே நம்புகிறேன். இதில் படங்கள் எல்லாம் எப்படிக் கொடுக்கிறது என்பதையும் பார்க்கவேண்டும். அது பின்னர். காவிரியை எடுத்துட்டு வந்ததும் பார்த்துக்கலாம். இப்போ இது போகுதானு பார்க்கணுமே! 

56 comments:

  1. ரொம்பக் கஷ்டப்பட்டேன் எனில் எங்கே இருந்து பதிவு வந்திருக்கானு பார்க்கணும்னு தெரியாமல் திரும்பத் திரும்ப மீண்டும் மீண்டும் ட்ராஃப்ட் மோடுக்கே போனது தான்! பின்னர் தான் புரிந்தது. இடது ஓரத்தில் view blogஇல் இருந்து பார்க்கணும் என்பது. ஒரு மாதிரியாப் புரிஞ்சு இருக்கு! போகப் போகச் சரியாகும்னு நினைக்கிறேன்.

    ReplyDelete
  2. கமென்டும் போகுது.

    ReplyDelete
  3. ஹா.. ஹா.. நானும் உள்ளே-வெளியே விளையாடி பழகி கொண்டு வருகிறேன் கருப்பாயியை வெளியேற்றுவதில் அதுவும் எனது திருப்திப்படி கஷ்டம்தான்.

    எல்லாமே ஸிம்பிலில்தான் கொடுத்து இருக்கிறார்கள். என்ன செய்வது பழகித்தானே ஆகணும்.

    வாழ்த்துகள்...

    ReplyDelete
    Replies
    1. வாங்க கில்லர்ஜி, நான் இன்னமும் மாற்றிக்கவோ/மாறவோ இல்லை. சும்மா, பழகிப் பார்த்து வைத்துக் கொண்டேன். திடீர்னு மாறும்போது பிரச்னையா இருந்தால்! :)))))

      Delete
  4. நீங்களும் மாறி ஆச்சா?
    நல்லது.

    நானும் காலையே சாம்பார் செய்து விட்டேன். இரவு இடலி.
    மசால் தோசை, காவிரி படங்கள் பார்க்க வருகிறேன்.
    சோதனைப் பதிவு வெற்றி.



    ReplyDelete
    Replies
    1. வாங்க கோமதி, மசால்தோசை படம் ராத்திரி எடுத்துடுவேன். காவிரியைக் காலம்பரப் போய்த் தான் படம் எடுக்கணும். இப்போப் போனேன்! வெயில் அதிகமா இருந்ததால் வந்துட்டேன். சோதனைப் பதிவு வெற்றி தான்.

      Delete
    2. மசால் தோசை மட்டும் படம் எடுத்திருக்கேன். செய்முறை எல்லாம் இருக்காது. தெரிந்தது தானே! :)

      Delete
  5. ஹா ஹா ஹா கீசாக்காவின் மைண்ட் வொயிஸ் எல்லாம் எழுத்து வடிவில் போஸ்ட்டாக வெளிவந்து விட்டதே...:)..

    எங்களுக்கும் நேற்று கொழுத்தும் வெயில், நைட்டிலிருந்து மழை காத்து நன்றாக இருக்கு.

    ReplyDelete
    Replies
    1. பிஞ்சு ஞானவில்லி/வல்லி! இஃகி,இஃகி, என்னோட பதிவுப் பக்கத்துக்குப் பெயரே "எண்ணங்கள்" தானே! அதான் மைன்ட் வாய்ஸ் எல்லாம் வருது!

      Delete
  6. wஈங்க இந்த புளொக் எப்போ ஓபின் பண்ணினனீங்க கீசாக்கா? ஏனெனில் நான் நினைக்கிறேன் 2010 இலிருந்து ஓபின் பண்ணியோருக்கே இப்போ புது ஸ்டைல் மாத்த முடியுது. நான் 2009 பெப்ரவரியில் திறந்தேன், எங்கள் புளொக்கும் அப்படித்தான் போலும், அதனாலதான் புதுசுக்கு மாத்தும் லிங் இல்லை, ஆனா யூன் எண்ட்டுடன் மாறிவிடும் எனும் மெசேஜ் மட்டும் இருக்குது.. பார்ப்போம் இன்னும் ஒரு கிழமையில் மாறிவிடும், என்னா பண்ணப்போகுதென பொறுத்திருக்கிறேன் ஹா ஹா ஹா.

    ReplyDelete
    Replies
    1. நான் 2005 ஆம் ஆண்டில் வலைப்பக்கம் திறந்தேன். ஆரம்பத்தில் ஒன்றோ, இரண்டோ தான். அப்போத் தான் பையர் கல்யாணம், என்னோட உடம்பு ரொம்ப மோசமாப் போனது எல்லாம் நடந்தது! ஆகவே அப்புறமாத் தமிழ் எழுதப் பழகிட்டு ஏப்ரல் 2006 இல் இருந்து தொடர்ந்து எழுதி வருகிறேன். வல்லியும், நானும் கிட்டத்தட்ட ஒண்ணா ஆரம்பிச்சோம். எங்களுக்குக் கொஞ்சம் முன்னர் துளசிதளம் "துளசி கோபால்" ஆரம்பிச்சாங்க.

      Delete
  7. புதிய ப்ளாக்கர் - சுலபம் தான். பழகப் பழக சரியாகிவிடும்.

    கேக் - :)

    ReplyDelete
    Replies
    1. வாங்க வெங்கட், கஷ்டமாய்த் தெரியலை. போகப் போகத் தெரியும்.

      Delete
    2. நீங்கள் கொடுத்த வழிமுறைப்படி இணைந்துவிட்டேன். இனி புத்தகம் தொகுக்கப்பட்டதை அனுப்ப வேண்டும். பின்னர் தொடர்பு கொள்கிறேன். நன்றி.

      Delete
  8. ஆமாம் கேக் ஆர்டர் கொடுத்திருந்தேன். எக்லெஸ். அதுக்கு பணமும் அப்போவே கட்டிட்டேனே என்று அவங்க வயத்துல புளியைக் கரைக்கவேண்டியதுதானே.... இந்த மாதிரி ராங் கால்களுக்குலாம் இதுதானே தீர்வு?

    ReplyDelete
    Replies
    1. ஹாஹாஹா, பாவம் யார் ஆர்டர் கொடுத்தாங்களோ! நமக்கு எதுக்கு அதெல்லாம். அதோடு இப்போ வெளியே இருந்து எதுவும் வாங்கறதில்லைனு வைச்சிருக்கோம். கேக் வேணும்னா நானே பண்ணிடுவேன் முட்டை சேர்க்காமலே!

      Delete
  9. மொட்டைமாடியில் மோர் மிளகாய் காயவைத்தாச்சா? நீங்க வடகம், அப்பளம் இதெல்லாம் ரெடி பண்ணுனீங்கன்னா காயறதுக்குள்ள மழை வரணுமே...மழை வந்துச்சா?

    ReplyDelete
    Replies
    1. என்ன போங்க நெல்லைத் தமிழரே, இதுக்குத் தான் முகநூலில் இருக்கணும்ங்கறது. 3 நாட்களாக முகநூலில் இதானே பேச்சே! இன்னிக்குத் தான் வெயிலில் வைச்சுட்டு எல்லோருக்கும் தகவல் சொன்னேன். :)))))

      Delete
  10. மசால் தோசைக்கு வெங்காயம் வேண்டாமா? உ.கி மட்டும் போட்டீங்களா?

    நான் சென்ற வாரம் மசால் தோசை செய்தோம் (ஹா ஹா.. நான் மசாலா செய்தேன். மனைவி, பெண் தோசை பண்ணி அதுக்குள்ள மசாலா வச்சாங்க. நான் தோசையை ரோஸ்ட் மாதிரி பண்ணமாட்டேன் என்பதால். ஹா ஹா)

    நேற்றைக்கு முந்தைய நாள், இரவு, நல்ல மழை... அப்போ அகால நேரத்துல (என் உணவு 6 1/2 க்குள் முடித்துவிடுவேன்.), அதாவது இரவு 9 மணிக்கு, வடா பாவ் விற்குப் பண்ணிய உருளை போண்டா, அப்புறம் பலதரப்பட்ட பஜ்ஜி செய்துதந்தாள்- பசங்களுக்குப் பண்ணினா. எனக்கு பாவ் லாம் ஒத்துக்கொள்வதில்லை. உருளை போண்டாவிற்கு வெங் போடணும்னு நான் நினைத்திருந்தேன். மனைவி அதுக்கு வெங் கூடாது என்றாள். ரொம்ப நல்லா இருந்தது.

    ReplyDelete
    Replies
    1. நெல்லைத்தமிழரே, இப்போ ஒண்ணும் விரத நாட்கள் இல்லையே! அதனால் வெங்காயம் உண்டு. கர்நாடகாவில் தான் வெறும் உருளைக்கிழங்கிலே மசால் தோசைனு கொடுக்கிறாங்க. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அந்த வடா பாவில் வைக்கும் போண்டோவிற்கு, சமோசாவிற்கு, நாம பண்ணும் உருளைக்கிழங்கு போண்டானு எதுக்குமே வெங்காயம் போடக் கூடாது! போட்டால் நன்றாக இருக்காது.

      Delete
  11. சிலர், கேமரா எடுத்துக்கிட்டு மாடிக்குப் போனால், மழை பெய்து காவிரியை படமெடுக்க முடியாமல் செய்யுது. இல்லைனா காவிரில தண்ணியே இருப்பதில்லை. கேமராவை மறந்துவிட்டுப் போனால் காவிரில வெள்ளம் பாயுது. இது என்ன மாதிரி டிசைன்?

    ReplyDelete
    Replies
    1. காமிராவை எடுத்துக்கொண்டு நான் இன்னும் போகலை. போனப்புறமா என்ன நடக்குதுனு பதிவிலே போடறேன். இப்போதைக்கு அன்னிக்குத் தண்ணீர் வரும்போது அலைபேசி வழியா எடுத்தது தான்.

      Delete
  12. நேற்று மதியம் சென்னையில் மழை பெய்தது.  அதே நேரத்துக்கு இன்றும் மழை வந்தது.  பெரிய அளவில் இல்லா விட்டாலும் பேரளவு வெப்பம் குறைந்து விட்டது.  இரண்டு நாட்களாக ஏ ஸி போட்டுக் கொள்ளவில்லை என்றால் பாருங்கள்!

    ReplyDelete
    Replies
    1. ஸ்ரீராம், இன்னைக்கு இங்கே நல்ல வெயில். ஆனாலும் மோர் மிளகாய் இன்னமும் காயணும்.

      Delete
    2. இங்கு வந்து 4 மாதங்களுக்குப் பிறகு, இரு நாட்கள் முன்புதான் ஏசியை ஃபிக்ஸ் செய்தோம் (சென்னையிலிருந்து கொண்டுவந்திருந்தது). ரொம்ப செலவாச்சு. இந்த ஊரில் ஏப்ரல், மே தான் கொஞ்சம் வெயில், சல்ட்ரியாக இருக்கு. அப்போ மட்டும் ஏசி அவ்வப்போது போடணும்னு நினைக்கிறேன்.

      Delete
    3. அங்கே ஏசியே தேவை இருக்காது. நாங்க அங்கே சுமார் பத்து நாட்கள் வரை தங்குவோம். எல்லாம் டிஆர்டிஓவின் கெஸ்ட் ஹவுஸில் தான்! சாப்பாடு எல்லாம் அறைக்கே அனுப்பிடுவாங்க.

      Delete
    4. இல்லை கீசா மேடம்... ஏப்ரல், மேல கொஞ்சம் சூடு இருந்தது. வருடங்கள் ஆக ஆக, பெங்களூரில் குளிர் குறைந்துகொண்டே வருகிறது. ஆட்கள் பெருகிக்கொண்டே போகிறாங்க இல்லையா? மரங்களும் அதற்கேற்றமாதிரி குறைகின்றன.

      Delete
    5. "பெண்"களூரில் சூடு என்றால் ஆச்சரியமே! கோவை சிநேகிதியும் இப்போல்லாம் கோவையிலும் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் சூடு தெரிகிறது என்கிறார். :(

      Delete
  13. நான் இன்னும் புதிய பிளாக்கருக்கு மாறவில்லை.  ஜூன் இறுதியில் அதுவே மாறிவிடும் என்கிறார்கள்.  ஆனாலும் இதுவரை மாறவில்லை!

    ReplyDelete
    Replies
    1. ஸ்ரீராம், நான் இரண்டு, மூன்று நாட்களாகவே அதையும் கொஞ்சம் கொஞ்சம் ஆராய்ந்து வந்தேன். இன்னிக்குத் தான் சோதனை பண்ணலாம்னு தோன்றியது.

      Delete
  14. சாப்பாட்டுக்கு செய்த சாம்பாரையே குழம்புக்கு தொட்டுக்கொள்வதில் எனக்கு 50% தான் சம்மதம்!  அதற்கென்று தனியாய்ச் செய்தால் நல்லாயிருக்கும்தான்.  ஆனால் நாங்களும் செய்வதில்லை!

    ReplyDelete
    Replies
    1. சாப்பாட்டுக்குனு அரைத்து விட்டெல்லாம் பாரம்பரியமான சாம்பாராகப் பண்ணலை. இதை இட்லி, தோசைக்கும் தொட்டுக்கறாப்போல் பண்ணி இருக்கேன். அதனால் பிரச்னை இல்லை.

      Delete
  15. கார் இன்ஷுரன்ஸுக்கு என்னை ஒரு மெசேஜ் இன்னமும் பாடாய்ப்படுத்துகிறது.   மிஸ்டர் பீட்டர் பெருமாள் என்று விளித்து இன்று ஒரு மெஸேஜ் வந்திருக்கிறது.   தமாஷாய்த்தான் இருக்கிறது!

    ReplyDelete
    Replies
    1. என்னை தினம் படுத்தறாங்க! அதோட கனடாவுக்கு சிடிசன்ஷிப்போடு வேலையும் தரேன் என்கிறாங்க. அந்தக் குளிரில் யார் போய் இருக்கிறது! :))))))

      Delete
  16. மனைவி ஃபோனை அரைமணியிலேயே கட் செய்துவிட்டாளாம்.  

    கணவன் ஆச்சர்யப்பட்டு போய் 'இன்றென்ன இவ்வளவு சீக்கிரம் வைத்து விட்டாய்?'  என்று கேட்டானாம்.  

    மனைவி சலிப்பாக 'ராங் கால்' என்றாளாம்!  

    சும்மா பழைய ஜோக் நினைவுக்கு வந்தது!

    ReplyDelete
    Replies
    1. ஹாஹா, ஸ்ரீராம், நானெல்லாம் சட்ட்னு பேசி முடிச்சுடுவேன்!

      Delete
    2. அடடே புது ப்ளாகர் நன்றாகவே வேலை செய்கிறது.

      படம் இணைப்பதற்கு மேலே உள்ள மூன்று புள்ளிகளில்
      ஆப்ஷன் இருக்கும் மா.
      நான் என் வீடியோக்களை அப்படித்தான் இணைக்கிறேன். இன்னும் நிறையப்
      பழக வேண்டும். கொஞ்சம் சலிப்பாய் இருக்கிறது.

      ஏன் இது போல ராங்க் கால் வருகிறது.?
      வேடிக்கையாக நீங்கள் அதைப் பற்றி எழுதுவதால்
      சமாதானம் தான். இதற்கெல்லாம் சுணங்கினால்
      வேலை ஆகாது:)

      Delete
    3. வாங்க வல்லி, படம் இணைப்பதற்கான ஆப்ஷனை எல்லாம் தேடிக் கண்டு பிடித்து வைத்துவிட்டேன். எனக்கும் கொஞ்சம் சலிப்பாய்த் தான் இருக்குப் பதிவுகள் போட. சலிப்பில் இருந்து மீளவே இம்மாதிரிப் பதிவுகளை எல்லாம் போடுகிறேன்.
      ராங்க் கால் எங்களுக்கு அடிக்கடி வரும். என்னனே தெரியலை. சென்னையில்/அம்பத்தூர் வீட்டிலும் வரும்.

      Delete
  17. மகிழ்ச்சி.மாற்றத்திற்கு வரவேற்பு.

    ReplyDelete
    Replies
    1. வாங்க முனைவர் ஐயா, நீண்ட நாட்களுக்குப் பின்னர் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      Delete
  18. படம், லேபிள் இணைப்பதில்தான் எனக்கு பிரச்சனை. மத்தபடி சமாளிச்சுட்டேன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க ராஜி, நான் லேபலே கொடுப்பதில்லை. கொடுத்துப் பார்க்கணும். படங்களும் நாளைக்கு இணைச்சுப் பார்க்கணும்.

      Delete
  19. ஆக,
    ஒருவழியாக மோர் மிளகாயைக் காய வைத்தாயிற்று...

    புதிய நடைமுறையில் பதிவும் போட்டாயிற்று...

    வாழ்க நலம்...

    ReplyDelete
    Replies
    1. மோர் மிளகாய் இன்னமும் காயணும் துரை! அநேகமா இன்னிக்கும் வெயில் தான் என நினைக்கிறேன். வாழ்த்துக்கு நன்றி.

      Delete
  20. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. ராங் கால் தொந்தரவுகள் எப்போதும் இருந்து கொண்டேதான் இருக்கிறது. ஆனாலும் நீங்கள் ஒவ்வொரு ராங் காலையும் சாதுர்யமாக பேசி ஜெயித்து வருகிறீர்கள்.

    புதிய பிளாக்கர் மாற்றம் உங்களுக்கு வெற்றியடைந்ததற்கு வாழ்த்துகள். வீட்டில் என்னையும் அதில் பழகிக் கொள்ளச் சொல்கிறார்கள்.உங்கள் அனைவரது பதிவுகளை படிக்கும் போதும் அது எனக்கு நினைவூட்டுகிறது. விரைவில் பழக வேண்டும்.

    விரைவில் காவிரி பதிவுடன் படங்களையும், நாளையே மசால் தோசை படங்களையும் காண ஆவலாக உள்ளேன். மசால் தோசைக்கு உ.கியில் வெங்காயம் போட மாட்டீர்களா? உங்களது மோர் மிளகாய் காய்ந்து விட்டதா?

    இங்கும் வெய்யில் சிலசமயம் வருகிறது. முக்கால்வாசி மேக கூட்டங்கள்தான். இரு நாட்களாக மாலை வருணன் ரசித்துத்தான் மழை தருகிறான்.இன்று மழை இல்லை. உங்கள் வர்ணனையை நானும் ரசித்தேன்.(கண்டிப்பாக வருணனும் ரசித்திருப்பான். ஹா ஹா) பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கமலா, புதிய ப்ளாகர் அவ்வளவு கஷ்டமாக எல்லாம் இல்லை. நீங்களும் சீக்கிரம் பழகிக்கொள்ளுங்கள். மொபைல் மூலமே அனைத்தும் செய்யும் உங்களுக்கு இதெல்லாம் ஒரு பிரச்னையே இல்லை. தோசை வார்க்கும்போது நேற்றுப் படம் எடுத்தேன். இனி தான் மொட்டைமாடிக்குப் போய்க் காவிரியைப் படம் எடுக்கணும். மாடிக்குப் போகையில் கையில் பெரிய தட்டு எடுத்துப் போவதால் கூடவே காமிராவோ, அலைபேசியோ எடுத்துப் போகப் பயம்! இதுக்குனு தனியாப் போய் எடுக்கணும். அப்போத் தான் நிம்மதியா எடுக்க முடியும்.

      Delete
  21. அக்கா புதிய ப்ளாகர் கஷ்டமாக ஒன்றுமில்லை ரொம்பப் புதியது போலவும் இல்லைதான் நீங்க சொல்லிருக்காப்ல. நானும் புதிய ப்ளாகரில்தான் எழுதுகிறேன். ஆனால் நேரடியாக ப்ளாகரில் எப்போதுமே எழுதுவதில்லை. வேர்டில் அடித்துவிட்டு அதைக் காப்பி செய்து ப்ளாகரில் பேஸ்ட் செய்துவிடுகிறேன். அதன் இன் படங்கள், லிங்குகள் சேர்ப்பதைச் சேர்ப்பது எல்லாம். ஷெட்யூல் செய்வது ரொம்பவே எளிதாக இருக்கிறது.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வாங்க தி/கீதா, கிட்டத்தட்ட இதே ஃபார்மட்டில் தான் மரபு விக்கியில் வேலை செய்திருக்கேன். சுமாராக ஏழெட்டு வருடங்கள் அதில் எக்ஸெல், இம்மாதிரி ஃபார்மட்டில் வேலை இருக்கும். தன்னார்வ வேலைதான். அப்போல்லாம் என்னமோ தெரியலை நேரமும் இருந்தது. இதைத் தவிர்த்தும் லினக்ஸிற்கு மொழிபெயர்ப்பு, தினத்தந்தி நூற்றாண்டு மலர் வேலைனு செய்து கொடுத்திருக்கேன். இதெல்லாம் 2014-2015 வரைக்கும். என்னனு தெரியலை! அதன் பின்னர் இப்போல்லாம் என்னோட வலைப்பக்கத்திலே பதிவு போடவே யோசிக்கும்படி ஆகி விட்டது.

      Delete
  22. இரண்டு மற்றும் நான்காவது ஐகான் மட்டுமே சிறிது கவனமாக சொடுக்க வேண்டும்... மற்றவை எளிதே...

    லேபிள் கொடுப்பது பல வகைகளில் நமக்கு உதவும் (PDF, புத்தகம், மின்னூல்...etc.,)

    ஒவ்வொரு பதிவையும் Edit செய்து லேபிள் கொடுக்காமல், வகை வாரியாக தேர்வு செய்து, லேபிள் இடலாம் + மாற்றவும் செய்யலாம்...

    ReplyDelete
    Replies
    1. வாங்க திரு தனபாலன், உங்கள் உதவிக்கு நன்றி. கவனத்தில் வைத்துக் கொள்கிறேன். லேபிள் கொடுப்பது என்னமோ வழக்கமே இல்லாமல் போய்விட்டது. இனியானும் கொடுக்கப் பழகிக்கணும். மிக்க நன்றி மீண்டும், மீண்டும்!

      Delete
  23. மசால் பண்ணீங்களா ?? புதுசா மாற்றங்களா .. மாற்றம் ஒன்றே மாறாத ஒன்னு .. காவிரியில் தண்ணீர் சந்தோஷமா இருக்கு

    ReplyDelete
    Replies
    1. வாங்க எல்கே. ஒரு காலத்தில் மசால் தோசை மாதம் ஒரு முறையாவது இருக்கும். இப்போப் பண்ணியே ரொம்ப மாதங்கள்! அம்பேரிக்காவிலும் பெண்ணோ, பிள்ளையோ மசால் தோசை தேடவில்லை. நேற்றுப் பண்ணினேன். காவிரித் தண்ணீரை நான் போய்ப் படம் எடுப்பதற்குள்ளாகத் தண்ணீர் வரத்து நின்னுடாமல் இருக்கணும்! :)))))

      Delete
  24. நடந்தாய் வாழி காவேரி இப்போது பாய்ந்து ஓடுகிறாள் வாழி காவேரின்னு படம் எடுத்துப் போடுங்க கீதாக்கா.

    மோர்மிளகாய் எல்லாம் முன்பே காயவைத்து எடுத்துவைத்துவிட்டேன். இப்ப மணத்தக்காளிக்காய் சும்மா இண்டு இடுக்கில் வளர்ந்த மணத்தக்காளிச் செடிகளில் காய்கள் நிறைய குலுங்கி நிற்கிறது அதைப் பறித்து வெயில் வரப்ப ப்ராசஸ் காய வைச்சு அல்மோஸ்ட் காய்ந்துவிட்டது. மழை அவ்வப்போது பெய்கிறது. மேகம் மூடி இருக்கும். மசால் தோசை படம் எடுத்திருப்பீங்க. அப்ப பதிவு அடுத்து எதிர்பார்க்கலாம்!! ஹா ஹா ஹா

    அக்கா எனக்கும் ராங்க் மெசேஜஸ், கால்கள் வருது. யாருக்கோ போக வேண்டிய ஸ்பீட்போஸ்ட் விவரங்கள் எனக்கு வருது. அப்புறம் டெலிவர்ட் நு வருது. நான் நமக்கு யார் அனுப்பிருப்பாங்கனு அந்த ட்ராக்கிங்க் நம்பர் போட்டு பார்த்தா வேற ஏரியா.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. காவிரி படம் எடுக்கணும் தி/கீதா, காமிரா எடுத்துப் போகணும்னு நினைப்பதால் கையில் பெரிய தட்டை வைத்துக்கொண்டு ஏறவோ இறங்கவோ யோசனை! கீழே விழுந்துடுத்துன்னா என்ன பண்ணறது! படம் எடுக்கவெனத் தனியாகப் போக வாய்க்கவே இல்லை. எங்களுக்கு இந்த மாதிரித் தொலைபேசி அழைப்புகள் நடு இரவில் கூட வரும்.

      Delete
  25. புதிய ப்ளாகர் வழி பதிவா. வாழ்த்துகள்.

    எங்கள்/என்பதிவுகள், என் கருத்துகள் எல்லாமே கீதாவின் மூலம் தானே வெளிவருகிறது அங்கு கணினியின் மூலம் என்பதால் நான் பதிவுகள், கருத்துகள் எல்லாம் பேப்பரில் எழுதி மொபைல் வழி ஃபோட்டோ எடுத்து அனுப்புவதோடு சரி. நன்றாகவே இருப்பதாகத்தான் கேள்விப்பட்டேன்.

    துளசிதரன்

    ReplyDelete
    Replies
    1. வாங்க துளசிதரன், நீங்க பேப்பரில் எழுதி அதைப் படம் எடுத்து அனுப்புவதை தி/கீதா பதிவு போடுகிறார் எனில் உங்க கையெழுத்து எவ்வளவு அழகாயும் தெளிவாயும் இருக்க வேண்டும்! இருவருமே திறமைசாலிகள் தாம். புது ப்ளாகர் அப்படி ஒண்ணும் பெரிய அளவில் பிரச்னையாகத் தெரியவில்லை.

      Delete