எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, December 03, 2020

என்னத்தைப் போற்றுவது போங்க! :(

 தமிழ்நாட்டின் தலையாய பிரச்னையே ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்பது தான் போல! தொலைக்காட்சி ஊடகங்களும், பத்திரிகைகளும் இணைய வெளியில் உள்ளவர்களும் பேசித் தீர்க்கிறார்கள். என்னவோ தெரியலை திரைப்பட நடிகர்கள் எனில் தமிழ்நாட்டு மக்களுக்கு தெய்வத்துக்கும்/அதைவிடவும் மேல் ஆனவர்கள்.

*************************************************************************************

பொதுவாகத் தமிழ்நாட்டிலே ராணுவத்திற்கு மதிப்புக்கிடையாது. அவர்களின் சேவை குறித்த புரிதலும் இல்லை. தமிழக மக்களைப் பொறுத்தவரை ராணுவம் எனில் அவசர காலத்திலும், மழை, வெள்ளக் காலத்திலும் பேரிடர்க்காலங்களிலும் வந்து உதவ வேண்டியவர்கள். அதற்கு மேல் அவர்களைக் குறித்த புரிதல் சுத்தமாக இல்லை. அதிலும் இந்தத் திரைப்படம் எடுக்கும் இயக்குநர்கள், நடிகர்கள், கதாசிரியர்கள் போன்றவர்களுக்குச் சுத்தமாகப் புரியவே இல்லை. சமீபத்தில் ஓர் படம் "ஓடிடி" எனச் சொல்லப்படும் தளத்தில் வெளியிடப்பட்டு அதைக் குறித்த விமரிசனம் எல்லாத் தளங்கள், தனியார் வலைப்பதிவுகள், முகநூல் எனப் பகிரப்பட்டது. அந்தக் கதை உயிருடன் இருக்கும் ஒருவரின் உண்மைக்கதையாம். திரைப்படத்திற்காக அந்தக் கதாநாயகரின் ஜாதியை மாற்றிக் குறிப்பிட்டிருக்கிறார்களாம். உண்மையில் முன்னேறிய சமூகத்தைச் சேர்ந்த அந்த மனிதர் திருமணம் செய்திருப்பதும் தன் சொந்த சமூகத்திலே தானாம். ஆனால் திரைப்படத்தில் அப்படிக் காட்டவில்லையாம். பாரம்பரிய முறைப்படி திருமணம் எனக் காட்டாமல் புரட்சித் திருமணமாகக் காட்டப்பட்டுள்ளது என்று எழுதி இருந்தனர். 

அதெல்லாம் எப்படியோ போகட்டும். எனக்கு அந்த விமரிசனத்தில் படித்த ஒரு முக்கியமான விஷயம் தான் உறுத்தலாகவே இருக்கிறது. அந்தக் கதாநாயகர் கதைப்படி/(அல்லது உண்மையான அந்த மனிதரும் அப்படித்தானோ என்னமோ) விமானப்படை ஊழியராம். உண்மைக்கதையிலும் அந்த மனிதர் விமானப்படை ஊழியராக இருந்திருக்கலாம். ஆனால் இங்கே சொல்லி இருப்பது திரைப்படக் கதாநாயகர் விமானப்படையில் காப்டன் என்று. உண்மையில் தரைப்படையில் தான் "காப்டன்" அந்தஸ்து உள்ள பதவி உண்டு. விமானப்படையிலும், கடல்படையிலும் காப்டன் என்ற பதவியே கிடையாது.  இது தான் போச்சு எனில் திரைப்படத்தில் அந்தக் கதாநாயகர் தன் தந்தை இறந்துவிட்டார் என்பதால் ஊருக்கு வர விமானம் மூலம் பயணச் சீட்டு வாங்க முயற்சித்து அவருக்குப் பயணச்சீட்டே கொடுக்கலையோ அல்லது இல்லை என்று விட்டார்களோ தெரியலை. அல்லது பயணச் சீட்டின் பணம் அவரால் கொடுக்க முடியலைனு சொல்லி இருக்காங்களோ தெரியலை. அவர் பயணச் சீட்டுக் கிடைக்காமல் அழுது புரண்டு அலறுகிறாராம். கடைசியில் பயணச் சீட்டுக்காகப் பிச்சை எடுக்கிறாராம். ராணுவ வீரனுக்கு இப்படி அழுவது என்பது கேவலமான ஒன்று. கொச்சைப் படுத்தி இருக்காங்க திரைப்படத்தில்.

இதைப் படித்ததும் சீத்தலைச் சாத்தனார் எழுத்தாணியால் குத்திக் கொண்ட மாதிரி எனக்குக் கையில் ஒண்ணும் கிடைக்கலை. வெறும் கையால் தலையில் அடித்துக் கொண்டேன். உண்மையில் முதல்லே எந்த ராணுவ வீரனும் அது எந்தப் படையைச் சேர்ந்தவர்கள் ஆயினும் இப்படி எல்லாம் அழுது புரள மாட்டார்கள். அடுத்தது பிச்சை எடுக்க மாட்டார்கள். ராணுவத்தில் அதிகாரியாகச் சேராமல் சாதாரண வீரனாகச் சேர்ந்தாலே நல்ல சம்பளம், உடை, உணவு, இருப்பிடம் எல்லாம் இலவசம். ரேஷன் இலவசம், பால், வெண்ணை, காய், கனிகள் இலவசம். இம்மாதிரிச் சமயங்களில் அல்லாமல் சாதாரணமாகத் தங்கள் சொந்த ஊருக்குச் செல்வதென்றாலே அவர்களுக்கு வாரன்ட் எனப்படும் சலுகைப் பயணச் சீட்டுக் கிடைக்கும். அரசு செலவில் தான்! அதோடு இல்லாமல் ரயில் பயணம் என்றாலும் சரி, விமானப் பயணம் என்றாலும் சரி ராணுவ வீரர்களுக்கு எனத் தனியாகப் பத்திலிருந்து இருபது இருக்கை வரை எப்போதும் தயார் நிலையில் வைத்திருப்பார்கள். இது எந்த வழியாகச் செல்லும் ரயில்கள், விரைவு வண்டிகள், ராஜ்தானி போன்ற சிறப்பு ரயில்கள் எல்லாவற்றிலும் உண்டு. விமானத்தில் செல்வதற்கும் அதே போல் உண்டு. தகுதிக்கு ஏற்ப எகானமி வகுப்போ, முதல் வகுப்போ கிடைக்கும்.  அழுது புரள்வது எல்லாம் எப்போவுமே இல்லை. ராணுவ வீரர்கள் யாரும் வரவில்லை என்பது தெரிந்தால் மட்டுமே அது சாதாரணப் பயணிக்குக் கொடுக்கப்படும்.  அதோடு இல்லாமல் இம்மாதிரி அவசர காலங்களுக்கு என அவங்களுக்கு ஓர் ராணுவ அதிகாரி ரயில் நிலையத்திலேயே/விமான நிலையத்திலேயே இருப்பார். அவரிடம் போய் விஷயத்தைச் சொன்னால் அவங்களுக்கு உள்ள சிறப்புச் சலுகை மூலம் பயணச் சீட்டுக் கிடைத்துவிடும். கிடைக்காது என்ற பேச்சே இல்லை.

சாதாரண ராணுவ வீரனுக்கே இத்தனை சலுகைகள் உண்டு எனில் விமானப்படை அதிகாரிக்கு விமானத்தில் செல்லப் பயணச் சீட்டுக் கிடைக்காமல் யாரும் உதவாமல் அழுது புரண்டாராம். ராணுவத்தில் இப்படி எல்லாம் நடக்காது. இம்மாதிரிச் செய்தி வந்து ஒரு வீரன் சொந்த ஊர் போக வேண்டும் எனில் அந்த யூனிட் முழுவதும் சேர்ந்து அவனுக்கு உதவி செய்யும். பண உதவி தேவை என்றாலும் அனைவரும் கையிருப்பிலிருந்து போட்டுக் கொடுத்து உதவுவார்கள். சாப்பாடெல்லாம் அவர்களே பார்த்துக் கொள்வார்கள். குறிப்பிட்ட வீரனை ரயில் அல்லது விமானத்தில் ஏற்றி அனுப்புவதை எல்லாம் அவர்கள் தங்கள் சொந்தப் பொறுப்பில் செய்வார்கள். மேல் அதிகாரிகளும் உதவுவார்கள். சாதாரண வீரனுக்கே இப்படி எனில் விமானப்படை அதிகாரிக்கு மட்டும் அந்தப் படத்தில் சொன்னாப்போலவா நடக்கும்! பேத்தல்! ராணுவத்தில் ஜாதி, மத பேதம் பார்க்காமல் அனைவருமே ஒருவருக்கொருவர் உதவிக் கொண்டு தான் இருப்பார்கள். 

நாங்க நேரடியாக சீருடை தரிக்கும் ராணுவம் இல்லை எனினும் எங்களுக்குக் கூட ராணுவ யூனிட்களில் இருந்து உதவிகள் கிடைக்கும். மாற்றல் ஆகிவிட்டதெனில் சாமான்களைப் பாக்கிங் செய்வதிலிருந்து ரயிலில் ஏற்று அனுப்புவது வரை ஆட்கள் மாறி மாறி வந்து உதவுவார்கள். சாப்பாடு ஒரு வேளைக்கு ஒருவர் வீட்டில் என்று போடுவார்கள். சொல்லப் போனால் மாற்றல் ஆகிப் போகும் ஊரில் ஒரு வாரத்துக்கு நாம் வீட்டில் சமைக்க வேண்டாம். அதே போல் எந்த ஊரில் இருந்தோமோஅந்த ஊரிலும் ஒரு வாரம் ஊருக்குக் கிளம்பும் நாள் வரை சமைக்க வேண்டாம். கையிலும் சாப்பிடக் கொடுத்துவிடுவார்கள்.  இது பற்றி எல்லாம் எந்தவிதமான அறிவும் இல்லாமல் ராணுவத்தையும், ராணுவ வீரனையும் அந்தப் படத்தில் கொச்சைப் படுத்தி எடுத்திருக்கிறார்கள். இதை எப்படிப் படத்தணிக்கைக் குழு அனுமதித்தது என்று புரியவில்லை. விமானப்படை அதிகாரிகள் நேரடியாக இந்தச் செய்திக்கு மறுப்புச் சொல்ல மாட்டார்கள். சொல்லவும் கூடாது. ஆனால் அதிகாரிகள் சிலரின் மனைவிமார்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து எழுதி இருந்தார்கள். இத்தனைக்கும் தாம்பரம் விமானப்படைத் தளத்திலே இந்தப் படம் எடுக்கப்பட்டதாகச் சொல்கின்றனர். தமிழ்ப்படம் என்றாலே இப்படித் தான் இருக்கும் என்று ஆகிவிட்டது.  

இதைப் பற்றிக் கேள்விப் பட்ட அந்த நபர் (உண்மை நாயகர்) திரைப்படம் தானே, அதனால் இப்படி எடுத்திருக்காங்க என்று பெருந்தன்மையுடன் சொல்லிவிட்டதாகவும் படித்தேன். தமிழகத்தில் ராணுவம் பற்றிய புரிதல் ஏற்படும் வரை இப்படித் தான்! என்ன செய்ய முடியும்!

24 comments:

 1. கிசுகிசு பாணியில் படத்திப் பற்றிச் சொல்லாமல் நேரடியாகச் சொல்லலாம்.  என்ன தயக்கம்?  நீங்கள் சொல்லும் விஷயங்களை நானும் பார்த்தேன்.  பொதுவாக அது நாடகத்தனமாக இருந்தது என்று நினைத்தேனே தவிர, இவ்வளவு விவரம் இப்போது தெரிந்து கொண்டேன்.

  ReplyDelete
  Replies
  1. அப்படி அர்த்தம் வந்துடுத்தா ஶ்ரீராம்? நான் என்னமோ அவர் பெயரைச் சொல்லிப் போட்டால் விளம்பரம் போல் ஆயிடும்னு பெயர், விபரங்களைத் தவிர்த்தேன். கடைசியில் வேறே மாதிரித் தோணி இருக்கு! இஃகி,இஃகி,இஃகி!

   Delete
 2. கடைசியில் ரஜினி அரசியலுக்கு வந்தே விடுவார் போல...  புலிவருது புலிவருது என்று கதை நிஜமாகி விடும் போல!

  ReplyDelete
  Replies
  1. வரட்டும் பார்க்கலாம். இதுவும் ஒரு கட்சிப் பின்னணினு சொல்றாங்க! :(

   Delete
 3. ஓ ...

  நானும் அந்த படம் பார்த்தேன் ..மிகவும் பிடித்தும் இருந்தது ...

  ஆனால் இன்று உங்கள் பார்வையில் காணும் போது பொது ஜனம் ஆன நம்மை எவ்வளவு எளிதாக நம்ப வைக்கிறார்கள் என புரிகிறது ... கதையின் கருவை மட்டும் கொண்டு சுற்றிலும் எத்தனை கற்பனை புனைவுகள் ஆனால் அது கற்பனை என்பது கூட எங்களுக்கு தெரியவில்லை ....ம்ம்ம்  அந்த தாத்தா பத்தி சொல்றதுக்கு ஒன்னும் இல்ல ...நம்ம தலையெழுத்து ...

  ReplyDelete
  Replies
  1. வாங்க அனு, என் பார்வையில் பார்க்காதீங்க. உண்மையைப் பாருங்க, உணர்ந்து கொள்ளுங்கள். உண்மையான கதை என்னவெனில் கோபிநாத் என்னும் வைணவ பிராம்மணர் தன் சுய சரிதையை எழுதி இருக்கார். ஏர் டெக்கான் என்னும் விமானக் கம்பெனியை ஆரம்பித்து நடத்தினார். அவர் விமானப்படையில் அதிகாரியாக இருந்திருப்பதாய்ச் சொல்கின்றனர். இப்போது பிரதமரின் அலுவலகத்தில் ஆலோசகர் என்கின்றனர். அவருடைய உண்மைக்கதையை அடிப்படையாக வைத்து இந்தப் படம் எடுக்கப்பட்டிருக்கிறது. அவர் மணம் புரிந்து கொண்டதும் சொந்த ஜாதியில் ஓர் பெண்ணை சாஸ்திரோக்தமாக வைதிக முறைப்படியே கல்யாணம் நடந்திருக்கு! அவருக்கு ஏர் டெக்கான் ஆரம்பிக்க எதிர்த்து நின்ற அரசியல்வாதிகளை எல்லாம் சொல்லாமல் படத்தில் ஓர் பிராமணர் எதிர்ப்பது போல் காட்டி இருக்காங்க. அதோடு கதாநாயகன் திருமணமும் புரட்சித் திருமணம் எனக் காட்டி இருக்காங்க. உண்மையைச் சொல்ல என்ன தயக்கம்?

   Delete
  2. தங்களின் நீண்ட மறுமொழிக்கு நன்றி மா ...

   உங்கள் பார்வையில் என்பது, பொதுவா எனக்கு அறிந்தவர்கள் யாரும் ராணுவத்தில் பணி புரிந்தது இல்லை அதனால் அவர்களின் நடைமுறை அன்பும்,உதவும் குணமும் தெரியாது அதேயே தங்கள் பார்வையில் என்றேன் ...

   அதே போல கல்லூரி காலத்தில் கேபிள் டிவியில் விடாமல் பல படங்கள் பார்த்தது உண்டு ..இன்று படங்கள் காண்பது என்பதே மிகவும் அரிது ...அதனால் கண்ட படத்தை கொண்டு மேலும் தகவல்கள் அறியும் ஆவலும் இல்லை ...

   இப்பொழுது வாசிப்பு மட்டுமே எனது பொழுது போக்கும் , எனர்ஜி டானிக்கும் ...


   உங்க பாரம்பரியச் சமையல்கள் மின்னூல் கூட தரவிறக்கி வாசித்தேன் ...நிறைய தகவல்களுடன் அருமையான, மிகவும் பயனுள்ள நூல் . ..

   Delete
  3. மீள் வருகைக்கும் விளக்கத்துக்கும் நன்றி அனு ப்ரேம். ராணுவ வீரர்கள் தமிழ்நாட்டில் மதிக்கப்படுவதே இல்லை. அதே அண்டை மாநிலங்களில் அப்படி இல்லை. பொதுவாக எல்லாமே தமிழ்நாட்டில் தனியாக இருக்கிறது. ஊரோடு ஒத்து வாழ் என்பதும் தமிழில் உள்ள வழக்குச் சொல்! அதை யாரும் நினைவு கூர்வதும் இல்லை.

   Delete
 4. ரஜினி தேர்தல்ல நிக்கப்போறேன்னு சொல்லிட்டாரு. (நிக்க இல்லை...போட்டி போடப்போறேன்னு). நடக்கும்கிறீங்க?

  சூர்யா படத்தைப் பார்ப்பதை நிறுத்தி சிலபல வருடங்கள் ஆச்சு. அதுக்கு கார்த்தி எவ்வளவோ பரவாயில்லை என்பது என் எண்ணம்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க நெ.த. நான் எந்தத் தமிழ்ப் படத்தையுமே அதிகம் பார்ப்பதில்லை. எப்போவானும் ஒன்றிரண்டு படங்கள்! அதிலும் தேர்வு செய்த நடிகர்கள் தான். சூரியாவோ, கார்த்தியோ நான் பார்ப்பதே இல்லை.

   Delete
 5. பேரரைப் போற்று (சினிமா விமர்சனம்)

  https://kgjawarlal.wordpress.com/2020/11/13/%e0%ae%aa%e0%af%87%e0%ae%b0%e0%ae%b0%e0%af%88%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%be-%e0%ae%b5%e0%ae%bf/

  ReplyDelete
  Replies
  1. வாங்க நன்மனம். கே.ஜி.ஜவர்லால் எழுதினது தானே. நம்ம ஶ்ரீராமின் குட்டி மாமா! அவருடைய பதிவுகள், முகநூல் பதிவுகள்னு எல்லாவற்றையும் விடாமல் படிக்கிறேனே. இதையும் படிச்சேன். சுட்டிக்கு நன்றி. உங்களைப் பற்றி விசாரித்தேன் பிரசன்னாவிடம்.

   Delete
 6. பொதுவாக இன்றைய சூழ்நிலையில்
  உண்மையைச் சொன்னால் கல்லா கட்ட முடியாதோ என்னவோ!..

  ReplyDelete
  Replies
  1. இருக்கலாம் துரை! ஆனால் அதற்காக மட்டமாகச் சொல்ல வேண்டாம் என்பதே என் கருத்து!

   Delete
 7. ராணுவம் பற்றிய புரிதல் நம் மக்களிடம் இல்லை என்பது உண்மை தான். அவர்களுக்கான மரியாதையும் நம் மக்கள் கொடுப்பதில்லை என்பது வேதனை. ஒரே ஒரு நாள் எல்லைப் பாதுகாப்புப் பணியில் - அதுவும் பனிஉறையும் நாட்களில் இருந்தால் அவர்கள் நம் நாட்டிற்காகவும், நம் மக்களின் பாதுகாப்புக்காகவும் எத்தனை அவதிப்படுகிறார்கள் என்பது புரியும் - என்னதான் வேலைக்கான சம்பளம் வாங்கினாலும் அதையும் மீறிய ஒரு உணர்வுடன் அவர்கள் பணிபுரிவது புரியும். எங்கே நம் மக்களுக்கு சினிமாக்காரர்கள் பின்னால் போகவே நேரம் போதாதே! என்னுடைய பயணங்களில் பல இராணுவ வீரர்களைச் சந்தித்து இருக்கிறேன் - பழகியும் இருக்கிறேன். நண்பர்களும் உண்டு என்பதால் நீங்கள் சொல்லும் விஷயங்களை நானும் உணர்ந்தேன்.

  ReplyDelete
  Replies
  1. தமிழ்நாட்டு மக்களே குண்டுச்சட்டியில் குதிரை ஓட்டுபவர்கள் தான்! திரைப்பட ஹீரோக்களைத் தான் நிஜமான ஹீரோக்களாக நினைக்கிறார்கள். நிஜ வாழ்விலும் அவங்க அப்படி வாழ்வதாக நினைப்பு இருக்கு! உண்மையைப் பார்க்க மறுக்கின்றனர்.அரசுக்கு எதிரான போராட்டங்களை அறிவிச்சு நடத்தினாலே வீரம் என நினைக்கிறார்கள்.

   Delete
 8. கீதாக்கா நீங்க எந்தப் படத்தைப் பத்தி சொல்றீங்கன்னு நல்லாவே தெரியுது.

  அந்தப் படம் பற்றி என் வட்டத்திலும் ஆஹா ஓஹோ என்று சொல்லி அப்படி இப்படின்னு நீ கண்டிப்பா பார்க்கணும் நு சொன்னாங்க. மிக மிக அரிதான ஒரு சில படங்களைத் தவிர நான் படம் பார்ப்பதில்லை. நல்ல படம் என்று என் மனதிற்குப் பட்டால்தான் பார்ப்பதுண்டு அதுவும் எனக்குச் சென்னையில் என் நெருங்கிய வட்டம் என் மச்சினர் எனக்குச் சொல்லி அங்கு வீட்டில் போட்டுக் காட்டிவிடுவார். இந்தப் படம் பத்தி வேறு ஒரு வட்டம் சொல்லி கண்டிப்பா பாருன்னு சொன்னாலும் முதலில் எனக்குப் பிடிக்க வேண்டும். இரண்டாவது அமேசான் கணக்கு எதுவும் கிடையாது. எனவே பார்க்க முடியாது.

  கதையை சும்மா பார்ப்போமே என்னதான் கதை என்று அப்புறம் பிடித்தால் மச்சினரிடம் சொல்லி அங்கு செல்லும் போது பார்க்கலாம்னு கதை வாசித்ததுமே சுத்தமாகப் பிடிக்கவில்லை. நல்ல காலம் படம் பார்க்கவில்லை என்று தோன்றியது. கதையில் பல பல ஓட்டைகள். உண்மைக் கதை வேறு அதுவும் தெரியும். ஆனால் படத்தில் எது அந்த உண்மைக் கதையில் முக்கியமோ அது சொல்லப்படவில்லை மாற்றி இருக்கிறது.

  நிறைய ஓட்டைகள் அதுவும் பொருந்தாத ஓட்டைகள் கதையில் இருக்குதான். அக்கா ஏர் மார்ஷல் சீஃப் என்றுதான் என்றாலும் க்ரூப் காப்டன் என்ற ஒன்று ஏர் ஃபோர்ஸில் உண்டு என்று நான் அறிந்தது. விங்க் கமாண்டெருக்கு ஒரு ஸ்டெப் மேலே உள்ள பதவி. NATO ரேங்க் ஆஃப் 5 மற்றும் ஏர் கமாண்டோர் க்குக் கீழான பதவி. உறவினர் ஒருவர் இருந்ததால் (இப்போது அவர் இல்லை) அறிந்தது.

  கீதா

  ReplyDelete
  Replies
  1. வாங்க தி/கீதா, எனக்கு ராணுவ அதிகாரிகளின் வரிசை தெரிந்த அளவுக்கு ஏர்ஃபோர்ஸ், நேவி அதிகாரிகள் குறித்து வரிசைப் பட்டியல் தெரியாது. ஆனால் விங் கமான்டர் பதவி என்பது ஏர்ஃபோர்ஸ் கல்லூரியில் படித்த பின்னர் சேரும் முதல் பதவி என நினைக்கிறேன். க்ரூப் காப்டன் என்பவர் விமானம் பறக்கும்போது தலைமைப் பொறுப்பில் இருப்பவர். ராணுவ காப்டன் பதவிக்கும் இதற்கும் சம்பந்தமே இல்லை.

   Delete
  2. இத்தனை ஊழலாக ஒரு படமா.
   மனம் கொதிக்கிறது. சினிமா என்றால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் போல. அதற்கு ராணுவத்தை எடுத்துக் கொண்டிருக்க வேண்டாமே.

   என்ன ஒரு அபத்தம்.
   நீங்கள் சொல்லியிராவிட்டால் தெரிந்திருக்காது.'
   நல்ல வேளை நான் படங்கள்,புதிதாகப் பார்ப்பதில்லை.

   ரஜினி அவர்கள் வந்துதான் நம் தலையெழுத்து மாற வேண்டுமா
   என்ன.

   Delete
  3. வாங்க வல்லி, ஊழலா? மஹா மட்டம், ஒரு ராணுவ வீரனை எவ்வளவு கேவலப்படுத்த முடியுமோ அவ்வளவு கேவலப்படுத்தி இருக்காங்க. பயணச் சீட்டு வாங்கப் பிச்சை எடுக்க வேண்டி இருந்ததாம். அவங்களுக்குப் பயணச்சீட்டே சலுகையில் தான் என்பது தெரியலை. பயணச் சீட்டு வாங்கக் காசெல்லாம் கொடுக்கணும்னு இல்லை. வாரன்ட் எனப்படும் மேலதிகாரியின் அனுமதிச் சீட்டு, எந்த யூனிட், எந்த ஊர் விமானப்படைத்தளம், அவர் என்ன பதவி வகிக்கிறார், என்ன காரணத்துக்கு ஊருக்குப் போகிறார் என்பது குறித்த ஒரு நிரப்பப்பட்ட ஃபார்ம் போதும். அதைக் காட்டினாலே போதும். பணம் கொடுத்து எல்லாம் டிக்கெட் வாங்கிக்கொண்டு போகணும்னு எல்லாம் இல்லை. எங்களைப் போன்றவர்களுக்கே இரண்டு வருஷங்களுக்கு ஒரு முறை சொந்த ஊருக்குச் சென்று திரும்பி வர அரசாங்கச் செலவில் போகலாம். ராணுவ வீரர்களுக்குச் செலவு செய்து கொண்டு போகணும்னு எல்லாம் இல்லை.

   Delete
  4. மாற்றல் ஆனால் பயணப்படியிலிருந்து கிடைக்கும் அலுவலருக்கு! குடும்பத்ஹ்டோடு போவதற்கும் அரசாங்கச் செலவு தான், சாமான்களை அனுப்புவதற்கும் உரிய தொகை கொடுத்து விடுவார்கள். பிச்சை எடுக்க அரசாங்கம் விடுவதில்லை.

   Delete
 9. வணக்கம் சகோதரி

  பதிவு அருமை. இந்தப் படம் வீட்டில் குழந்தைகள் பார்த்துக் கொண்டிருந்தனர். நான் கடைசியில் வந்து பார்த்து கதை தெரிந்து கொண்டேன். இது உண்மைக் கதையெனவும் கொஞ்சம் மாறுபாடாக படத்தில் எடுத்துள்ளனர் எனவும் தெரிந்து கொண்டேன்.

  இரு சகோதரர்கள் இந்த மாதிரி முயற்சியில் (குறைந்த கட்டணத்தில் விமான சேவை) இறங்கி பாடுபட்டு வெற்றி கண்டதாகவும், வேறு மாதிரி செய்தியும் ஒரு பதிவில் படித்தேன். இதில் எது உண்மையோ தெரியவில்லை? நீங்களும் மிக அழகாக நம் நாட்டு ராணுவ வீரர்களின் இயல்பான பண்பை விளக்கியுள்ளீர்கள்.நன்றி.

  நேற்று எ. பியில் நீங்கள் என்னைத் தேடி விசாரித்தமைக்கு மாலை அங்கு பதில் தந்துள்ளேன். உங்கள் அன்பான விசாரிப்புகளுக்கு மிக்க நன்றிகள். உங்கள் அனைவரின் அன்பும் என்னை நெகிழச் செய்து விட்டது.

  குழந்தை (என் பேத்தி) ஜீரத்துடனும், உடலெங்கும் தடிப்பு வீக்கத்துடன் மிகவும் சிரமபட்டதால், அவளை மாற்றி மாற்றி நானும், என் மகளும் பார்த்துக் கொள்ள வேண்டிய சூழலில், என்னால் எந்த பதிவுக்கும் வர இயலவில்லை. உங்கள் முந்தைய பதிவுகளையும் படிக்கிறேன். மீண்டும் உங்கள் அக்கறையான அன்புக்கு நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கமலா, வழக்கமான இணையப் பிரச்னை, வேலைப் பிரச்னை என நினைத்துக் கொண்டேன். நான்கைந்து நாட்களாகக் காணோம் என்றதும் கொஞ்சம் கவலை வந்தது. பேத்தி உடல் நலம் பூரணமாகத் தேறி சௌக்கியமாக இருக்கப் பிரார்த்திக்கிறோம்.
   அந்தப் படத்தில் கொஞ்சம் இல்லை, நிறையவே மாறுபாடு. ஆரம்பத்திலிருந்து முடிவு வரை. இரண்டு சகோதரர்கள் இல்லை. இவர் மட்டும் தான் கோபிநாத் என்று பெயர். ஏர் டெக்கான் ஆரம்பித்தார். அதைச் ச்ய சரிதையாக எழுதியும் வைத்திருக்கார். அதை வைத்துத் தான் எடுத்திருக்கிறார்கள். ஆனால் உண்மை என்பது கொஞ்சமும் இல்லை.

   Delete
 10. அது என்ன முயற்சித்து? கொஞ்சம் விளக்கமாச் சொல்லுங்க மதர்.

  ReplyDelete