sahana.com இந்தச் சுட்டியில் இன்று ஏடிஎம் அறிவிப்புச் செய்துள்ளார்.
சஹானா இணைய இதழில் ஏடிஎம் தீபாவளிக்குப் பல போட்டிகள் வைத்திருந்தார். அதிலே தீபாவளி பக்ஷணம் செய்முறையில் எனக்கு முதல் பரிசு கிடைத்தது என்பது எனக்கே ஆச்சரியம். தீபாவளி நினைவுகள் பற்றி எழுதியதற்குப் பரிசு ஒண்ணும் கிடைக்கலை. மற்ற போட்டிகளில் நான் கலந்து கொள்ளவில்லை. முதல் பரிசு கிடைத்ததற்கு என்ன தருவாங்களோனு யோசனையில் இருந்தப்போ சனிக்கிழமை புடைவை அனுப்பப் போவதாக இந்தப் போட்டிக்கு ஸ்பான்சர் பண்ணிய "மதுரா பொடிக்" காரங்ககிட்டே இருந்து மெயில் வந்தது. இன்னிக்குப் புடைவையும் வந்து சேர்ந்தது. ஏடிஎம் அவங்க சார்பிலே ஒரு ட்ராஃபியும், இ-சான்றிதழும் அனுப்பினாங்க. எல்லாவற்றையும் இங்கே படம் பிடித்துப் போட்டிருக்கேன். ஏடிஎம்முக்குத் தனியா அனுப்பிட்டேன். அவங்க கொஞ்ச நேரம் முன்னர் வரை பார்க்கலை.
நான் போட்டினு கலந்து கொண்டதே முதல் முதலாக வைகோ சார் வைத்த விமரிசனப் போட்டியில் தான். ஒவ்வொரு போட்டியிலும் அவர் என்னைத் திரும்பத் திரும்பத் தொந்திரவு செய்து எழுத வைத்தார். அதிலும் முதல், இரண்டாம் பரிசுகள், மூன்று முதல் பரிசுகள் எனக் கிடைத்தது. அதன் பின்னர் எந்தப் போட்டியிலும் கலந்துக்காம இருந்தேன். இது நம்ம ஏடிஎம் ஆச்சேனு கலந்து கொண்டேன். முதல் பரிசே கிடைத்துவிட்டது.
கீழே படங்கள்.
மீதான் 1ஸ்ட்டூஊஊஊஊஊஊ:)
ReplyDeletegarrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr
Deleteவாவ்வ்வ்வ்வ் உண்மையாகவே நான் தான் 1ஸ்ட்டூஊஊ:)) இல்லை எனில் தேம்ஸ்ல தள்ள இருந்தேன் 1ஸ்ட்டா வருவோரை:)) நல்லவேளை தப்பிவிட்டினம்:))
Deleteஹாஹாஹா, அதிரடி, ரெண்டு பேருமே பர்ஷ்ட்ட்ட்ட்ட்ட்ட்டூ!
DeleteHappy to hear. Hearty congrats ❤️
ReplyDeleteBest Regards,
ATM for you as always 😄
நன்றி ஏடிஎம். வழக்கம்போல் இரட்டையராக வந்த கருத்தில் ஒன்றை எடுத்துட்டீங்க போல! இஃகி,இஃகி,இஃகி!
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteவாழ்த்துக்கள் கீதாக்கா .அந்த trophy யை புடவை மேலே வச்சும் ஒரு படம் எடுத்திருக்கலாம் .பளிச்சுன்னு தெரிஞ்சிருக்கும் .புடவை கலர் நல்லா இருக்கு
ReplyDeleteவாங்க ஏஞ்சல்!அப்படீங்கறீங்க? தெரியலை.மேலே வைச்சும் ஒரு ஃபோட்டோ எடுத்துடறேன்.
DeleteCongratulations!!
ReplyDeleteநன்றி மிகிமா.
Deleteவாழ்த்துகள்...
ReplyDeleteநன்றி திரு தனபாலன்
DeleteCongrats Geethamma!
ReplyDeleteநன்றி வானம்பாடி.
Deleteமிகச் சிறப்பு....அன்பு கீதாமா.
ReplyDeleteஅப்பாவி தங்கமணிக்கு நல்ல டேஸ்ட்.
புடவை மிக அழகு.
உங்களுக்கு மனம் நிறைந்த பாராட்டுகள்.
சஹானா இதழ் மேலும் மேலும் பரிமளிக்கப் போகிறது.
அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
ஹாஹாஹா, வல்லி, புடைவை ஏடிஎம் தேர்வு இல்லை. அவங்களுக்கே நான் படம் போட்டப்புறமாத்தான் என்ன புடைவைனே தெரியும். ஸ்பான்சர் செய்த மதுரா பொடிக் காரங்க அனுப்பினது. பாராட்டுகளுக்கும் வாழ்த்துகளுக்கும் மிகவும் நன்றி.
Deleteஅடடே... அசத்தறீங்களே...
ReplyDeleteஅடடே... அசத்தறாங்களே...
பாராட்டுகளும், வாழ்த்துகளும்.
ஹாஹாஹா, நன்றி ஶ்ரீராம்.
Deleteஆஆஆஆஆஆஆ இந்த சாறியைத்தான் சொன்னீங்களோ.. வாழ்த்துக்கள் கீசாக்கா... இது கொட்டின் சாறியோ? பார்த்தால் அப்படித் தெரியேல்லை எனக்கு...
ReplyDeleteவருடம் முடிவதற்குள் உங்களுக்குப் பரிசு பரிசா வருது.. இனிப் புது வருடத்திலும் நிறையப் பரிசுகள் கிடைக்க வாழ்த்துக்கள்.
வாங்க அதிரடி, இது கொட்டின் சாறி இல்லை. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் காட்டன் சாரி! பருத்திப் புடைவை. கைத்தறி! ஹாஹா, பரிசு பரிசா வந்தால் நல்லது தானே! வாழ்த்துகளுக்கும் நன்றி.
Delete//கொட்டின் சாறியோ?// - இந்த மாதிரி வித வித தமிழ் எழுத சிமியோன் டீச்சர் சொல்லித்தந்திருக்காங்க போலிருக்கு...ஹாஹா
Deleteகொட்டின் = cotton = பருத்தி.. பருத்தி. .. ஹா ஹா ஹா..
Deleteharton = காட்டன் ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
வாழ்த்துக்கள்!
ReplyDeleteபோட்டியில் வென்ற பட்சணம் பற்றி எழுதவில்லையே? இனிப்பா? காரமா?
வாங்க மனோ. போட்டியில் வென்ற பக்ஷணம் வரகு தேன்குழல்.
Deleteதலைப்பு சிரியல் பார்ப்பவர் என்று காட்டுகிறது வந்தச்சு நம்ம திருமதி ஹிட்லர்
ReplyDeleteவாங்க ஐயா! உங்க கருத்து உங்களுக்கு! எனக்கு அப்படி எல்லாம் தெரியலை. அப்படி ஒரு சீரியல் இருப்பதும் தெரியாது. யாரது திருமதி ஹிட்லர்? நானா? மகிழ்ச்சி, நன்றி.
Deleteவாழ்த்துக்கள்
ReplyDeleteநன்றி கடைசி பெஞ்ச்!
Deleteவாழ்த்துக்கள்! பட்சணம் செய்யத் தெரிகிறது, பரிசு வாங்கத் தெரிகிறது, புகைப்படம் மட்டும் எடுக்கத் தெரியவில்லை. tropyஐ சரியாக focus செய்யவில்லை.
ReplyDeleteவாங்க பானுமதி,செவ்வாய்க்கிழமை எ.பி.யி. உங்கள் விமரிசனத்தை மிகவும் எதிர்பார்த்தேன். பொதுவாக நீங்க என்னோட சில குறிப்பிட்ட பதிவுகளுக்குத் தான் வருவீங்கனு தெரியும். ஆனால் அன்று எபியில் வெளியானதால் உங்கள் வரவை எதிர்பார்த்தேன். தவிர்த்து விட்டீர்கள்! :))))) பரவாயில்லை. ட்ராஃபியை முதலிலேயே படம் எடுத்து அனுப்பச் சொல்லி ஏடிஎம் கேட்டதால் எடுத்து அனுப்பினேன். அந்தப் படம் தான் இது. அநேகமா எல்லோருக்கும் இப்படித் தான் வந்திருந்தது. எழுத்துக்கள் நேரில் பார்க்கவே கொஞ்சம் கஷ்டமாய்த் தான் இருக்கு. ட்ராஃபியின் நிறத்துக்கு மாறாக எழுத்துக்களைப் பொறித்திருக்கலாம். ஏஞ்சல் சொன்ன மாதிரி புடைவை மேல் வைத்திருந்தால் தெரிந்திருக்கும். ட்ராஃபி படம் இருந்ததால் புடைவை படம் தனியாக எடுத்தேன். நாலைந்து படங்கள் ட்ராஃபியை எடுத்ததில் இதில் தான் கொஞ்சம் சுமாராக வந்திரூந்தது.
Deleteஎன்னுடைய கருத்தை எதிர்பார்த்தீர்களா? ஆஹா! எனக்கு கிடைத்திருக்கும் பெரிய கௌரவம். மிகுந்த சந்தோஷம். தவிர்க்கவில்லை. ஒரு வாரமாக வீட்டில் விருந்தினர்கள் வருகை. அதனால் திங்கள்,செவ்வாய் இரண்டு நாட்களுமே நான் எ.பி.க்கு வரவில்லை.
Deleteஆமாம். நீங்கள் (என்னைப் போல்) பட்டென்று உடைத்து உண்மையைச் சொல்லிவிடுவீர்கள். மனதில் பட்டதைச் சொல்வது தான் நான் எதிர்பார்ப்பதும்.
Deleteநிஜமாக இந்த தீபாவளிக்கு வந்த பரிசா? மிக அருமை.
ReplyDeleteபொதுவாக நீங்க மூன்று தீபாவளிக்கு முன்பு நடந்ததை இப்போதானே எழுதுவீங்க என்பதால் கேட்டேன்.
க்ர்ர்ர்ர்ர்ர், பின்னே பொய்யாவா? ஆரம்பத்திலேயே சஹானா.காம் சுட்டி கொடுத்திருக்கேனே போய்ப் பாருங்க! புரியும்.
Deleteஆர்வத்துடன் போட்டியில் கலந்துகொண்டதற்குப் பாராட்டுகள்.
ReplyDeleteநானும் அடுத்த முறை வரகு அப்பளாம், ஆலிவ் பரோட்டா என்று ஏதேனும் எழுதினால் முதல் பரிசு கிடைத்துவிடும் போலிருக்கு.
நான் முதல்லே கலந்துக்கறதா இல்லை. சும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா தீபாவளி நினைவுகளை மட்டும் கொஞ்சம் எடிட் பண்ணி அனுப்பி இருந்தேன். அப்புறமாத் தான் தோன்றியது. ரெசிபி போட்டால் ஏதேனும் ஒரு பரிசு கிடைக்கும்னு நினைத்தேன். பார்த்தால் முதல் பரிசு! இஃகி,இஃகி,இஃகி!
DeleteCongrats
ReplyDeleteசட்டைத்துணி attached ஆ? நம்ப கவலை இப்படித்தேன் இம்புட்டுத்தேன் :)) நான் மதுரைக்காரியுந்தேன். இந்த சொல்லாடலும் நகைச்சுவைக்காகவே, சொல்லிப்புட்டேன் யாரும் கோவிக்காதீய :)))
புத்தாண்டு வாழ்த்துக்கள் அனைவருக்கும் .
வாங்க ஜெயஶ்ரீ, ஆமா, இல்ல! நான் இன்னமும் முழுசாகப் பிரிச்செல்லாம் பார்க்கலை. சில புடைவைகளில் ப்ளவுஸ் அட்டாச்ட் எனப் போட்டிருக்கும், அதிலும் கைத்தறிப் புடைவைகளில்! இதில் அந்த மாதிரிச் சீட்டு ஏதும் இல்லை. எடுத்திருப்பாங்க! பிரிச்சுப் பார்க்கணும். :)))))
Deleteவணக்கம் சகோதரி
ReplyDeleteமுதலில் பரிசு பெற்றதற்கு என் அன்பான வாழ்த்துக்கள்.உங்களுக்கு கிடைத்த பரிசை கண்டதும் எனக்கும் மகிழ்வாக உள்ளது. புடவையும் நன்றாக உள்ளது. சான்றிதழ்கள், புடவை என்ற பரிசுகள் நிச்சயமாக நம்மை மகிழ்விக்கும். இன்னமும் நிறைய எழுதி நிறைய போட்டிகள் கலந்து கொள்ள வேண்டுமென ஊக்கமும் தரும்..நீங்கள் இன்னமும் நிறைய போட்டிகள் கலந்து கொண்டு பரிசுகள் வாங்க நானும் பிரார்த்திக்கிறேன். போட்டிகளில் கலந்து கொண்டதையும், அதற்கு கிடைத்த பரிசுகளையும் நீங்கள் எங்களுடன் பகிர்ந்து கொண்ட பாங்கிற்கும் மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா, நன்றிங்க. எங்கள் ப்ளாகில் கூட ஆரம்ப காலங்களில் ஒரு சில போட்டிகள் வைச்சாங்க. அதிலே கன்னா பின்னாக் கதை ஒண்ணு எழுதிட்டுக் கடைசியிலே "அவரை"னு முடிக்கணும். முடிச்சுட்டுப் பரிசு வாங்கினேன். இன்னும் வேறு சில போட்டிகள்/புதிர்களில் புத்தகங்கள் கௌதமன் சாரும், ஶ்ரீராமுடைய அப்பாவின் புத்தகம் ஒண்ணும் வந்திருக்கு. ஒரு தரம் கௌதமன் 500 ரூபாய்க்குச் செக் அனுப்பி இருந்தார் பரிசுத் தொகையாக.
Deleteவைகோனு நம்ம நண்பர் ஒருத்தர் நடத்திய விமரிசனப் போட்டியிலும் பரிசுகள் (எல்லாமே பணமாக) கிடைத்தன. உண்மையில் மனதில் சந்தோஷமும் ஊக்கமும் தரத்தான் செய்கிறது இத்தகைய பரிசுகள். உங்கள் வாழ்த்துகளுக்கும் பாராட்டுக்கும் மகிழ்ச்சிக்கும் மனதார்ந்த நன்றி.
வாழ்த்துகள் பரிசுகள் தொடரட்டும்...
ReplyDeleteநன்றி கில்லர்ஜி! எல்லாப் பதிவுகளையும் பொறுமையாகப் படிச்சுக் கருத்துச் சொன்னதுக்கும் நன்றி.
Delete