இந்தியாவில் கருத்துச் சுதந்திரம், எழுத்துச் சுதந்திரம், பேச்சுச் சுதந்திரமே இல்லை. ஹிட்லர் ஆட்சி. இது அனைவரும் சொல்லுவது/சொல்லிக்கொண்டு இருப்பதும் கூட. ஆனால் பிரதமரை எப்படி வேண்டுமானாலும் கேவலமாகப் பேசலாம். டிவிட்டர், முகநூல் போன்ற பொதுவெளியில் அவமானம் செய்யலாம். கொரோனாவைக் கொண்டு வந்ததே பிரதமர் தான் என்றும் இன்னமும் அதற்கு ஒரு முடிவைக் கொண்டுவர முடியாமல் திணறுகிறார் என்றும் குற்றம் சொல்லிக் கொண்டிருப்பார்கள்/சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். என்றாலும் இதைச் செய்பவர்கள் தங்களுக்குச் சுதந்திரமே இல்லை என்றே சொல்லுவார்கள். சுதந்திரம் இல்லாதபோதே இப்படி எல்லாம் செய்யறவங்களுக்குச் சுதந்திரமும் கொடுத்துட்டால்? அதிலும் எதிர்க்கட்சிகள்! பிரதமரை அவமானம் செய்வதே தங்கள் கொள்கை என வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தக் கடினமான நேரத்தில் அரசுக்குத் துணையாக நிற்க வேண்டும் என்னும் எண்ணம் கூட யாரிடமும் இல்லை. ஊடகங்கள் உள்பட!
சிங்கப்பூர்-இந்தியா விமானப் போக்குவரத்தே ஒரு வருஷமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. அவசரத் தேவைக்கான "வந்தே பாரத்" திட்டத்தின் விமானங்கள் மட்டும் தேவைக்கேற்பப் பறக்கின்றன. ஆனால் ஒரு மாநிலத்தின் முதல்வருக்கு இது கூடத் தெரிந்திருக்கவில்லை. இல்லாத விமானங்களுக்கான போக்குவரத்தை நிறுத்தச் சொல்லி ஊடகங்களில் கைகளைக் குவித்துக் கொண்டு கெஞ்சி வேண்டுகோள் விடுக்கிறார். ஏனெனில் பாமர ஜனங்களுக்கு இப்போதிருக்கும் அவசர கால நிலைமையில் இதெல்லாம் மறந்திருக்கும். விமான சேவை இருப்பதால் தானே சொல்லுகிறார் என்றே நினைப்பார்கள். அந்த முதல் அமைச்சர் மக்களிடம் "நான் சொன்னதை மத்திய அரசு கேட்கவில்லை. எனக்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்து தரவில்லை. சிங்கப்பூர் விமானங்களை அனுமதித்துவிட்டனர். அதனால் தான் கொரோனா பரவி விட்டது!" என்றும் சொல்லிக்கலாமே! தன் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க மற்றவர் மேல் பழி போட்டுடலாமே!
ஒருத்தர் அம்பேரிக்கக் குடிமகன்/சிங்கப்பூர்க் குடிமகன் எனில் அவங்க இந்தியாவில் தேர்தலில் நிற்க முடியாது/ நிற்கவும் கூடாது. ஓட்டுப் போடும் உரிமையும் அவங்களுக்குக் கிடையாது. ஆனால் இந்தியாவின் தேர்தல் கமிஷன் அதை எல்லாம் கண்டு கொள்ளாது. சென்ற தேர்தலில்/இடைத்தேர்தல்களில் சிங்கப்பூர்க் குடிமகன் ஒருத்தர் தேர்தலில் நின்றார். இப்போ அமெரிக்கக் குடிமகன் ஒருவர் இந்தியாவில் தேர்தலில் நின்று ஓர் மாநிலத்தின் அமைச்சராக ஆகி விட்டார். அவரால் இந்தியாவின் இறையாண்மையைக் கேலி செய்தும்/பிரதமரைக் கண்டபடி பேசவும் முடியும். யாரும் எதுவும் கேட்டுக்க மாட்டாங்க. இதை எல்லாம் தேர்தல் கமிஷனோ மத்திய அரசோ கண்டுக்கறதே இல்லை. அப்படி இருந்தும் இந்த அரசை/மத்திய அரசை ஹிட்லரின் ஆட்சி என்றே சொல்லுவாங்க.
இப்போது பரவிக்கொண்டிருக்கும் இரண்டாம் அலை மத்திய அரசின் அலட்சியப் போக்கால் பரவுகிறது என்கிறார்கள். சரி! அப்படியே இருக்கட்டும். மக்கள் எப்படி இருந்தார்கள்? இப்போது ஊரடங்கில் மட்டும் கட்டுப்பாட்டுடன் இருக்கிறார்களா எனில் இல்லையே! ஒரு மீன் வாங்கவும்/இறைச்சி வாங்கவும் தேர்த்திருவிழாவுக்குக் கூடும் கூட்டம் போல் இருந்தால்? அதுவும் எந்தவிதமான பாதுகாப்பு ஏற்பாடுகளும் இல்லாமல்! கொரோனா பரவாமல் என்ன செய்யும்? அரசு கண்டிப்பைக் காட்டினால் மட்டும் மக்கள் அடங்கவா செய்கிறார்கள்? அதான் உரிமை இல்லை, சுதந்திரம் இல்லை என்று அடங்க மறுக்கிறார்களே! ஹிட்லர் ஆட்சி என்கிறார்களே! பின்னே ஒரு அரசு என்னதான் செய்யமுடியும்? யாருமே மாஸ்க் அணியாமல் பொதுவெளியில் நடமாடுவதைக் குறைத்துக் கொள்கிறார்களா? இல்லையே!
130கோடி மக்கள் தொகை எனத் தெரிந்து/ ஆனால் தெரியாமல் 150 கோடிக்குக் குறையாத மக்கள் உள்ள ஒரு நாட்டில் இதை விட அதிகமாக/அல்லது இதைவிட நன்றாக எந்த அரசால் தேவைகளை நிறைவேற்ற முடியும்? ஒரே சமயத்தில் உத்திரப்பிரதேசம், மஹாராஷ்ட்ரா, கர்நாடகா, தில்லி என ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டால் இருக்கும் ஆக்சிஜனைப் பகிர்ந்து தானே தரணும். எந்த நோயாளிக்கு முதலில் கொடுக்கணும் என்பதை மருத்துவர் முடிவு செய்துக்கலாம். ஆனால் அதனால் இழப்புகள் நேரிடத்தான் செய்கின்றன/நேரிட்டன. இதுக்கு மத்திய அரசு என்ன செய்ய முடியும்? நீதிமன்றங்கள் அதிகாரிகளையும் அரசையும் கன்னாபின்னாவெனத் திட்டுகிறது! ஒரே சமயத்தில் நாலைந்து மாநிலங்களின் பிரச்னைகளைத் தீர்க்க வேண்டுமெனில் அந்த அதிகாரிகளும் மனிதர்கள் தானே! அவங்களுக்கும் கொரோனா பயம் இருக்காதா? எல்லாவற்றையும் மீறித் தானே அவங்களும் பணிகளில் ஈடுபட்டிருக்கின்றனர்? பேசாமல் இந்தக் கொரோனா காலத்து நிர்வாகத்தை நீதிமன்றங்களே ஏற்று நடத்தட்டும்னு விட்டுட்டால் நல்லதோ? போன கொரோனா அலையில் அம்பேரிக்காவில் ஒரு நாளைக்கு நாலாயிரம் பேர் இறந்ததே இதுவரை அதிகபட்சமாக (உலகளவில்) இருந்தது போய் இப்போது இந்தியாவில் நாலாயிரத்துக்கும் அதிகமாக வரவே அனைவரும் அதிலும்அதே அம்பேரிக்காவின் பத்திரிகை உட்பட இந்தியாவைக் கேவலமாய்ப் பேசுவது எந்த வகையில் நியாயம்? அம்பேரிக்காவின் மக்கள் தொகைக்கும்/இந்தியாவின் மக்கள் தொகைக்கும் மலைக்கும், மடுவுக்கும் உள்ள வித்தியாசம். அதோடு அப்போது இத்தாலி, ஜெர்மனி, ப்ரான்ஸ், இங்கிலாந்து ஆகிய நாடுகளும் தத்தளித்துக் கொண்டிருந்தன. ஆனால் அந்த நாடுகளின் எதிர்க்கட்சிகள் அரசோடு சேர்ந்து ஒத்துழைத்தார்கள். இந்தியாவின் எதிர்க்கட்சித் தலைவர்களைப் போல் அரசைக் கேலியோ/கிண்டலோ செய்யவில்லை. இவங்க ஆட்சியிலே இருந்திருந்தாலும் இப்படித் தானே நடந்திருக்கும்! இந்தச் சமயம் அனைவரும் ஒன்று சேர்ந்து நம் நாட்டையும் மக்களையும் காப்பாற்ற வேண்டிய நேரம். அதை மறக்கக் கூடாது அல்லவா?
இனி வரும் நாட்களில் கொரோனாவின் இழப்பு நாளுக்கு ஐம்பதாயிரம் ஆகும் என்று கணித்திருக்கின்றனர். நினைக்கவே கவலையும் பயமுமாக இருக்கிறது. அந்த அளவுக்கு இழப்பு நேரிடாமல் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒத்துழைத்தால் இதைப் பொய்யாக்கலாம். கொரோனாவின் தாக்கத்தைக் கட்டுப்பாட்டுடன் தகர்த்து எறிந்து விடலாம். அதற்கு ஆவன செய்வோம். அவரவர் அவரவர் மாநில/மத்திய அரசுடன் ஒத்துழைத்துப் பாதுகாப்பு ஏற்பாடுகளை முழுதாகக் கடைப்பிடிக்க முயல்வோம்.
முதலில் மே 20 தேதிக்கு மேல் மிக வேகமாக பாதிப்பு குறையும் என்றார்கள். இப்போது இப்படிச் சொல்கிறார்கள். கவலையாக இருக்கிறது.
ReplyDeleteஆமாம், இப்போதையச் செய்தியில் சென்னையில் குறைவதாகவும் மாநிலத்தின் உள் மாவட்டங்களில் அதிகரிப்பதாகவும் சொல்கின்றனர். சென்னை போன்ற பெரு நகரங்களே ஆக்சிஜனுக்குத் திண்டாடும்போது கிராமங்களில் உள்ள மக்கள் என்ன செய்வார்கள்? கவலையாகத்தான் இருக்கிறது.
Deletesangi?
ReplyDeleteதங்கள் கருத்துக்கு நன்றி அக்னிராமரே!
Deleteஎதுக்கு இப்படிப் புலம்பியிருக்கீங்க?
ReplyDeleteஉண்மையை எழுதுவதில்லை என்றும் எப்போதும் மோடி எதிர்ப்பு என்று நினைத்து எழுதுவோரையும் மாற்ற முடியாது. உண்மையைத் தெரிந்தவர்கள், நேர்மையாளர்கள், வெறும்ன அரசைக் குறைசொல்லி, தங்கள் கட்சி, தங்கள் ஆட்கள் என்று பச்சோந்தி வேஷம் போடப்போவதில்லை. அப்புறம் என்ன?
"டைம்ஸ் நவ்" சானல் இதைப் பற்றிய உண்மையைத் தோலுரித்துக் காட்டி இருக்கிறார்கள். ஆனாலும் இன்னமும் அரசும்/பிரதமரும் தான் பொறுப்பு என்பவர்களும் இருக்கிறார்கள். ஒவ்வொரு மாநிலத்திலும் பிரதமரும் அரசு அதிகாரிகளும் போய்த் திட்டமிட்டுக் கொரோனாவைப் பரப்பிட்டாங்கனு சொல்லலை! :)))))
Deleteகொரோனா குறையும்னு சொன்னாங்க...ஆனால் கூடிக் கொண்டே போகுது...ஒரு வேளை கொரோனா குறைந்திருக்குமாக இருக்கலாம் ஆனால் மக்கள் பாதுகாப்பு இல்லாததால் அது தொற்றிக் கொள்ளத்தானே செய்யும்...
ReplyDeleteநாங்கள் ஊசி போடப்போன தினத்தன்று அரசு மருத்துவமனையில் செம கூட்டம். என்னதான் முதலில் கட்டம் கட்டி சோசிய டிஸ்டன்ஸ் என்றாலும் அங்கிருந்த கூட்டம் அப்புறம் நெருங்கி நிற்கத் தொடங்கியது.
என்னதான் அரசு மருத்துவமனை நல்ல விஷயங்கள் நிறைய செய்திருந்தாலும்...
சூழல் கவலைக்கிடமாகத்தான் இருக்கிறது.
கீதா
வாங்க தி/கீதா, கூட்டத்தினாலும் காத்திருக்க முடியாது என்பதாலும் நாங்க அரசு மருத்துவமனையில் போய் ஊசி போட்டுக்காமல் தனியார் மருத்துவமனைக்குப் போனோம். அங்கே கொஞ்சமாவது சமூக இடைவெளி இருந்தது.
Deleteஇந்தியாவில் சுதந்திரம் இல்லையா? சிரிப்புதான் வருகிறது.
ReplyDeleteஇப்போதைய சூழல் கவலைக்கிடமாகத்தான் இருக்கிறது. அரசும் எவ்வளவோ செய்கிறது மக்கள் ஒத்துழைக்கவில்லை என்றால் யாரைக்குற்றம் சொல்ல இயலும்
நல்லது விரைவில் நடக்க வேண்டும்.
துளசிதரன்
ஆமாம், இந்தியாவில் பேச்சு சுதந்திரம், கருத்து சுதந்திரம், எழுத்து சுதந்திரம் இல்லைனு சொல்லிக் கொண்டே அத்து மீறிப் பேசுபவர்கள்/எழுதுபவர்கள் இருக்கத் தான் செய்கின்றனர். இப்போது அனைவரும் சேர்ந்து ஒத்துழைக்க வேண்டிய நேரம்.
Deleteநாட்டின் பிரதமரைத் திட்டித் தீர்த்து நரம்பில்லா நாக்கில் தழும்பேற்றிக் கொள்ள வேண்டும்.. அது ஒன்றே அவர்களுக்குக் குறிக்கோள்...
ReplyDeleteஆமாம், துரை! நாட்டின் மற்ற பாகங்களுக்குக் கொரோனா பரவலுக்குக் காரணமாகக் கும்பமேளா, தேர்தல்னு சொல்ல முடிந்தது. ஆனால் குஜராத், ஒரு வருஷத்துக்கும் மேலாகத் தத்தளிக்கும் மஹாராஷ்ட்ரா, ராஜஸ்தான், தில்லி ஆகிய மாநிலங்களுக்கு யாரைக் காரணமாகச் சுட்டிக்காட்டுவது?
Deleteஅன்புள்ள கீதாம்மா, தொற்று நீங்கி நாடு நலம் பெற பிரார்த்திக்கிறேன். மோடிஜி யை குறை கூறுபவர்கள், அவர் எடுக்கின்ற முயற்சிகளை பார்ப்பதில்லை. பொய்யுரைக்கும் ஊடகங்களையே ஒரு பக்கத்திலிருந்து கேட்டு பழகியவர்கள். நல்லதை, நிஜத்தை கூறினால் "சாங்கி" என்று கிண்டல் வேறு. இறைவனை வேண்டுவதை தவிர வேறு வழியில்லை.
ReplyDeleteவாங்க வானம்பாடி! தொற்று முற்றிலும் நீங்க வேண்டுமானால் முழு ஊரடங்கு நாடு முழுக்கக் கொண்டு வந்தால் தான்! அதுக்கும் தான் போன வருஷம் பொருளாதாரம் ஸ்தம்பித்துவிட்டது! ஏழை மக்கள் வாழ்வாதாரம் போய்விட்டது என்றார்கள். எதைத் தான் செய்வது! :( ரொம்பவே மோசமான சூழ்நிலை. இப்படி ஒரு நோயையோ, அதனால் ஏற்படும் மரணங்களையோ நாடு இதுவரை சந்தித்ததில்லை. அதே போல் நாமும் கண்டிருக்க மாட்டோம்.
Deleteஇதுவும் கடந்து போகும்.
ReplyDeleteவாங்க வெங்கட், நன்றி. ஶ்ரீரங்கம் தானா?
Deleteமக்களின் ஒத்துழைப்பு இல்லையெனில் எந்த அரசாலும் கொரோனாவை ஒழிக்க முடியாது.
ReplyDeleteவாங்க கில்லர்ஜி, எங்கே! மக்கள் ஒத்துழைக்கவில்லை என்பதால் திருச்சியில் வெங்காய மண்டியையே பத்து நாட்களுக்கு மூடி விட்டார்கள். ஒரு நாளைக்குச் சுமார் 2,000 பேருக்குக் குறையாமல் வந்து போவதால் கொரோனா பரவலைத் தடுக்க வேண்டி இப்படிச் செய்திருக்கின்றனர். அப்படியாவது குறையுமானு பார்ப்போம். போன வருஷம் இரட்டை இலக்க எண்ணிலேயே இருந்த கொரோனா நோயாளிகள் இந்த வருஷம் திருச்சியில் ஆயிரத்தைத் தாண்டிச் சென்று விட்டனர். :( இன்னமும் சிலர் தினமும் பையைத் தூக்கிக் கொண்டு காய்கள் வாங்கச் செல்கின்றனர். :(
Deleteமிக மிக சோதனையான காலம்.
ReplyDeleteஒரு நாளும் செய்தி பார்க்காமலேயும் இருக்க முடியவில்லை
கேட்டு வருந்தாமலும் இருக்க முடியவில்லை.
இதில் அரசின் மீது குறை கண்டு நாக்கைத் தடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இப்பொழுது பெய்யும் மழையினால்
நன்மை என்று யாரோ எழுதி இருந்தார்.
நலம் திரும்ப வேண்டும். அனைவரும் ஒத்துழைத்தால் தான்
நாடு நிலை பெறும்.
நன்றி கீதாமா.
சோதனை/அதனால் ஏற்படும் கவலை! எல்லாமே மனதைப் பல சமயங்கள் தளர வைக்கின்றன. என்றாலும் ஓர் மூலையில் நம்பிக்கை!
Deleteஇப்போது யாரும் யாரையும் குறை கூறாமல் எல்லோரும் ஒற்றுமையாக என்ன செய்ய வேண்டும், என்ன செய்ய கூடாது என்று கலந்து ஆலோசிக்கும் நேரம். எல்லோரும் கவனமாக இருந்து ஊசி போட்டுக் கொள்ள வேண்டும்.
ReplyDeleteஅவசியம் ஏற்பட்டால் மட்டும் வெளியில் போக வேண்டும் மற்றவர்கள் வீட்டில் இருக்கலாம்.
என் ஓர்ப்படியின் திருமணம் மே 24 ல் நடப்பதாக இருந்தது, இப்போது ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. நிலமை மோசமாக இருக்கிறது. யாரும் ஊரிலிருந்து வருவது கஷ்டம் என்பதால்.
இறைவன் அருளால் அனைத்தும் நலமாக வேண்டும்.
ஓர்ப்படியின் திருமணமா? சஷ்டி அப்த பூர்த்தி? நல்லபடி நடக்கப் பிரார்த்திக்கிறோம். வீட்டில் யார் இருக்காங்க? தேவையோ தேவை இல்லையோ வெளியே சுற்றுபவர்கள் சுற்றிக் கொண்டு தான் இருக்காங்க. ஆண்டவன் தான் கண் திறக்கணும்.
Deleteஓர்ப்படி மகனின் திருமணம்
Deleteமனம் ஒன்று நினைக்கிறது கை ஒன்று அடிக்கிறது. சாரின் தம்பி மகன் திருமணம்.
Deleteபுரிந்து கொண்டேன் கோமதி!
Deleteஊங்களுடைய ஆதங்கம், ஆத்திரமாக வெளிப்பட்டிருகிறது என்று நினைக்கிறேன். இந்த ஊடகங்கள் செய்யும் அழிச்சாட்டியத்தைப் பார்த்தால் அதற்கு தணிக்கை கொண்டு வரலாமோ என்று தோன்றுகிறது.
ReplyDeleteஆத்திரமா? அப்படியா தொனிக்கிறது? அப்படி எல்லாம் இல்லை. ஆதங்கம், வருத்தம் தான். என்ன தான் அரசு நடவடிக்கைகள் எடுத்தாலும் அதற்கு ஒத்துழைப்புக் கொடுக்க வேண்டிய மக்கள் ஒத்துழைப்புக் கொடுக்கவில்லை எனில் என்னதான் செய்ய முடியும்! போன வருடம் பாதிப்பு அதிகம் இல்லை. அப்போதும் குற்றம் தான் சொன்னார்கள். ஒரு மருத்துவர் சொன்ன மாதிரி ஒரு வீட்டில் பத்துப் பேர் இருக்கையில் அனைவருக்கும் வயிற்றுப் போக்கு வந்தால் பத்துக் கழிவறையா கட்ட முடியும்? கொஞ்சம் முன்னப் பின்ன சமாளித்துக் கொண்டு தானே ஆகணும்? இது மக்கள் தாங்களே தேடிக் கொண்டது/தேடிக் கொண்டிருப்பது.
Deleteஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன்.
ReplyDeleteவாங்க கோமதி, நன்றி.
Delete
ReplyDeleteஇதை இப்போதுதான் பார்க்கிறேன். பொதுவாக யாரும் வெளியே சொல்லாமல், தவிர்க்கும், பம்மும் ஒரு சப்ஜெக்ட்டை எடுத்து, விளாசியிருக்கிறீர்கள். Good show.
தினமும் வாய் கிழிய ஊளையிட்டுக்கொண்டு, கருத்துச் சுதந்திரம் பேசும் இவர்கள் என்ன, வட கொரியாவில், கிம் ஜாங் உன் -னின் சர்வாதிகாரத்தின் கீழா வசிக்கிறார்கள், அல்லது சீனாவின் உய்குர்களோடு சேர்ந்துகொண்டு உருக்குலைந்துவிட்டார்களா ஸி ஜின் பெங்கின் ஆட்சியில்.. கோமாளிகள்! Vested interests என்று சொல்வது இதுகளைத்தான். இவர்களின் ஒரே obsession, நரேந்திர மோதி, நாட்டின் பிரதமராக இருக்கக்கூடாது. தேசத்தைப்பற்றி உயர்வாகப் பேசும், உணரும், அதன் வலிமை, பாதுகாப்பிற்காக செயல்படும் ஒரு தலைவன் காணாமற்போய்விடவேண்டும்! எப்படியாவது, நாமே ஆட்சிக்கு வந்து உலகே வியக்கும், விஞ்ஞான ஊழல்கள் பல செய்யவேண்டும். நாட்டின் செல்வங்களை வழக்கம்போல் சுருட்டி, வெளிநாட்டில் சந்ததியருக்கு சொத்துபத்துக்கள் /பங்களாக்கள் மேலும், மேலும் வாங்கிப்போடவேண்டும்..
இத்தகைய இழியோருக்கு கொரொனாவினால் எத்தனை இந்தியர்கள் சாகிறார்கள், முடங்குகிறார்கள் என உண்மையில் கவலையில்லை. எதனாலேயோ, ஊர் ரெண்டு பட வேண்டும். அப்போதானே கூத்தாடிக்குக் கொண்டாட்டம்? இந்த வருடம் கொரோனா இந்தியாவில் பெரும் உயிர்நாசம் ஏற்படுத்தியதில், இவர்களுக்கு ஒரு வருத்தமுமில்லை. மாறாக, ஆனந்தமே இவர்களுக்கு : நாட்டில் நிறைய சாவு விழுகிறது. நிலமை சீர்குலைகிறது போலிருக்கிறது. மோதியின் பாப்புலாரிட்டி சரியும். அடுத்தமுறை வரமாட்டான். பிஜேபி காலி! நம்ப ஆட்டபாட்டம்தான் அடுத்த ஐம்பது வருசத்துக்கும் - எனப் பகற் கனவில் பல்லிளிக்கும் பரதேசிகள்.. Psychic cases .. பாவம்.
வாங்க ஏகாந்தன், உண்மையைச் சொல்வதற்கு என்ன தயக்கம்? இவர்கள் இப்படித்தான் என்பது தெரிந்தது தானே! பிரதமரைத் தாக்குவதாகவும், அவரைக்கீழ்த்தரமாகப் பேசி இன்பம் அடைவதன் மூலமும் தேசத்தின் கௌரவம் தான் நாசமாகிறது என்பதைப் புரிந்து கொள்ளாதவர்கள். தக்க யோசனைகளும் தர மாட்டார்கள். குற்றம் மட்டும் சுமத்துவார்கள்.
Delete