மார்கழி மாசத்திலே ஏன் வீடு மாறக்கூடாது? அந்த மாதம் திருமண நிச்சயதார்த்தம் பண்ணுவார்களா? மார்கழியில் என்னென்ன உற்சவங்கள் நடைபெறுகின்றன?
சாம்பார் பரிபூர்ணா, மற்றும் கறி பருப்பு இரண்டுக்கும் என்ன வித்தியாசம்? (யாருக்குத் தெரியும்?) சாம்பாருக்கு தேசிய உணவு என்ன? ஹிஹிஹி, சாம்பார் தேசிய உணவானு கேட்க நினைச்சிருப்பாங்களோ? அடுத்த கேள்வி சில ஓட்டல்களில் கொஞ்சூண்டு, சாம்பார், கொஞ்சூண்டு ரசம் தராங்களே அதைப் பத்தி யாரிடம் புகார் செய்வது?
அடுத்து மந்திரங்கள் பற்றியாம்! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், நாயைத் தானாக வீட்டை விட்டு வெளியேற்ற என்ன மந்திரம்? அடுத்து பவித்ர மந்திரா என்றொரு ஹாலிவுட் படத்தின் உண்மையான பெயராம். மந்திரங்களிலேயே ஆச்சரியமும் மந்திர சக்தி அதிகம் உள்ளவையும் அவற்றைப் பேசும் நாடுகளும்.
***********************************************************************************
என்ன? முழிக்கிறீங்களா? இதெல்லாம் என்னோட டாஷ்போர்டில் பதிவு எழுதக் கொடுக்கப்பட்டிருக்கும் யோசனைகள்! நல்லா இல்லையா? விடுங்க. இந்தியாவில் கொரோனா நிலைமை ரொம்ப மோசமாக ஆகிக் கொண்டிருக்கு. பலரும் சிரமப்படுகின்றனர். நோயால்/மருந்துகள் சரிவரக் கிடைக்காமல்/மருத்துவமனைகளில் இடம் இல்லாமல்! அன்புக்குரியவர்களை இழந்து கொண்டிருக்கிறார்கள் பலரும். என்ன செய்வதுனு புரியவில்லை. ஆனால் எதிர்க்கட்சிகளுக்கும் ஒரு சில மாநில அரசுகளுக்கும் இதெல்லாம் மத்திய அரசின் தவறு எனச் சொல்ல முடிகிறது. ராஜஸ்தானிலும், தில்லியிலும் ஆக்சிஜனைப் பயன்படுத்தத் தெரியவில்லை. ஒரு ஓரமாக வைச்சிருக்காங்க என்று செய்திகள் கூறுகின்றன. இதுக்கு மாநில அரசோ, மத்திய அரசோ என்ன செய்ய முடியும்? வெளிநாடுகளில் இருந்து உதவிக்கரங்கள் வந்து கொண்டே இருக்கின்றன. அவையும் விநியோகம் செய்யப்படுகின்றன. மத்திய அரசு பண உதவி மட்டுமின்றி ஆக்சிஜன் சிலிண்டர்கள், ஜெனரேட்டர்கள், மருந்துகள் எனக் கொடுத்துக் கொண்டு தான் இருக்கிறது. ஆனால் நோயின் தாக்கம் அதிகம். அதற்குக் காரணம் இன்னமும் மக்களின் பொறுப்பின்மை. நேற்று இங்கே திருச்சியில் மீன்/மாமிசம் விற்கும் கடைகளில் கூட்டம். டாஸ்மாக்கில் கூட்டம் அதிகாலையில் இருந்தே! சாமானிய மக்களால் இவற்றை வாங்கவெல்லாம் பணம் இருக்கு! ஆனால் அரசோ மேலும் மேலும் நிவாரணம் என்னும் பெயரில் பணத்தைக் கொடுக்கிறது. ஒரு பக்கம் பணத்தைக் கொடுத்துவிட்டு அதை டாஸ்மாக் மூலம் அரசே திரும்பப் பெற்றாலும் இலவசத்தை ஊக்குவிக்கலாமா? நம் தமிழர்கள் இதற்கு அடிமையாகி இருக்கிறாப்போல் வேறே மாநிலங்களில் பார்க்க முடியாது.
தினம் தினம் காலை எழுந்ததில் இருந்து வேலைகளை ஆரம்பித்தால் நேரம் சரியாய் இருக்கு. அதிகமாகவோ/கூடுதலாகவோ வேறே எந்த வேலையும் செய்ய முடியறதில்லை. அது ஏன்? புரியவில்லை! எனக்கு முடியலையா? புரியலை. வேலை செய்யும் வேகம் குறைந்து விட்டதோ? தெரியலை. முன்னெல்லாம் வேலைக்காரப் பெண்மணி இல்லாதப்போ நானே எல்லாவற்றையும் செய்தப்போக் காலையில் சிறிது நேரம் கணினியில் உட்கார்ந்துட்டுத் தான் வீட்டு வேலைகளைக் கவனிக்கப் போவேன். இப்போதெல்லாம் அப்படி உட்கார முடிவதில்லை. வேகம் குறைந்து விட்டதுனு நினைக்கிறேன். அதே போல் முன்னெல்லாம் மத்தியானங்களில் எப்போவானும் படுப்பேன். இப்போது தினமும் சிறிது நேரமாவது படுக்க வேண்டி இருக்கு. கண்களுக்கு ஓய்வு கொடுக்கத் தான்! அது போக மிகுந்த நேரத்தில் தான் எல்லாமும் செய்யணும். பதிவுகள் பார்ப்பது/பதில் கொடுப்பது/பதிவு எழுதுவது என! அதனாலேயே இப்போதெல்லாம் பதிவு எழுதுவதைக் குறைத்துவிட்டேன்.
பி.வி.ஆரின் "ஆடாத ஊஞ்சல்" கதையைப் படிச்சதில் இருந்தே அந்தக் கதாநாயகி அடுத்து என்ன முடிவு எடுப்பாள் நம் யூகத்துக்கே விட்டுவிட்டாரே ஆசிரியர் என்று தோன்றியது. பாலக்காட்டுக் கல்பாத்தியில் வக்கீலின் பெண்ணான/ஐந்தாவது பெண்ணான துளசிக்குப் படிப்பு வரலை. அவள் அக்கா/தங்கைகள் கல்லூரிப் படிப்புப்படித்து மேல் நிலையில் இருக்க இவளோ வீட்டில் சமையல் பொறுப்பை எடுத்துக்கொள்ளும்படி ஆகிறது. வீட்டில் அப்பாவைத் தவிர்த்து அவள் நிலையைப் புரிந்து கொண்டவர் யாரும் இல்லை. அவள் அம்மாவும் தன் பெண்ணின் நிலையைப் புரிந்து கொள்ளவில்லை. இந்நிலையில் திருமணமே தனக்கு ஓர் விடுதலை என நினைக்கும் துளசி தானாக வந்த வரன் கீர்த்தியைத் திருமணம் செய்து கொண்டு சென்னை போகிறாள். அங்கே அவளுக்கு நேர்ந்த அனுபவங்கள்! அதன் பின்னர் அவள் எடுத்த முடிவு. அதனால் ஏற்பட்ட தாக்கங்கள்! கீர்த்தியை விட்டுவிட்டு மறுபடி கல்பாத்திக்கே வரும் துளசி கடைசியில் கீர்த்தியோடு சேர்ந்தாளா? புத்தகத்தில் படியுங்கள்! ரசிக்கும்/ருசிக்கும். ஆனால் முடிவை நாம் தான் யூகிச்சுக்கணும்.
தலைப்பு, 'என்ன என்ன வார்த்தைகளோ..சின்ன விழிப் பார்வையிலே' என்ற பாடலை நினைவுபடுத்தியது. ஆனால் அந்தப் பாட்டெல்லாம் உங்களுக்குத் தெரியுமான்னு தெரியலை
ReplyDeleteக்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், ஶ்ரீதர் படம், நான் பார்க்காமலா?அநியாயமா இல்லையோ?
Delete//கொஞ்சூண்டு சாம்பார், கொஞ்சூண்டு ரசம்// நீங்க எனக்கு ரெண்டு கொண்டுவந்துடுங்க என்று சொன்னால் ரெண்டு கிண்ணம் தருவாங்க, இல்லை அதிகமாத் தருவாங்க. ஆனால் ஸ்பெஷல் ஐட்டம் மட்டும் அதிகமாத் தரமாட்டாங்க.
ReplyDeleteஉங்க டேஷ் போர்ட் தலைப்புல்லாம் தலைசுற்ற வைத்துவிட்டது
ஹிஹிஹி, நெல்லையாரே, இதை விட விசித்திரமான தலைப்புகள் எல்லாம் வருகின்றன. எழுதத் தான் நேரம் இல்லை. நான் பொதுவாக ஓட்டலில் மதியச் சாப்பாடு விரும்ப மாட்டேன். கல்யாணங்களுக்குப் போனாலும் அப்படித் தான். மதியச் சாப்பாட்டைத் தவிர்ப்பேன். எங்க பையரோடு போனால் சாப்பிட்டே ஆகணும் என்பார். வேறே வழியில்லாமல் சாப்பிடுவேன். அதனால் ஓட்டலில் எப்படிக் கொடுப்பாங்கனு புரியறதில்லை.
Deleteஅத்திமலை விமர்சனமே பாதியில் நிற்குது. இதில் பிவிஆர் கதையின் விமர்சனமா? நடத்துங்க நடத்துங்க
ReplyDelete//அன்புக்குரியவர்களை இழந்திருக்கிறார்கள்// - ஆமாம்... நிறைய சம்பவங்கள் நடக்குது. ரொம்பவே கவலை தருது. யார் வீட்டிற்கும் போகவும், அல்லது அவங்களைக் கூப்பிடவும் பயமாகவும் இருக்கு.
க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், நீங்க தானே அத்திமலை விமரிசனம் வேண்டாம்னு சொன்னீங்க. ஆனாலும் எழுதிடுவேன். எழுதி முடிப்பதாகவே எண்ணம். தொற்று நிலைமை பயங்கரமாக இருக்கு. நாங்க வீட்டிலேயே இருந்தாலும் பால்காரர், காய்கள் கொண்டு வருபவர்னு வராங்க! அதன் காரணமாய் ஏதானும் வந்துடுமோனு கவலை/பயம். :(((((
Deleteஅன்பின் கீதாமா,
ReplyDeleteபத்திரமாக இருங்கள்.
இந்தக் காலத்தின் அலுப்பு உடலையும் பாதிக்கிறது.
புத்தகங்கள் தான் ஏதோ சமப் படுத்துகின்றன.
பிவிஆருக்கே மலையாள வாசனையோடு பெண்களை வர்ணிக்க மிகப்
பிடிக்கும். ஆடாத ஊஞ்சல் நீங்கள் சொன்னதும்
நினைவுக்கு வருகிறது.
கண்முன் அந்த ஊஞ்சலும் துளசியும் வந்து போகிறார்கள்.
யாருக்குப் பாதிப்பு இருக்கோ அவர்கள் தான் நிலைமையை உணர முடிகிறது.
மற்றவர்கள் மறுப்பதிலேயே இருக்கிறார்கள்.
செய்தித் தாளைப் பார்க்கவே முடிவதில்லை.
ப்ளாகர் சொல்லும் யோசனைகள் விந்தையானவை. நாம் எழுதுவதில்
கண்ணாக இருக்கும் போது
அவர்கள் நம் எழுத்தில் கண்ணாகப் பார்வையிடுகிறார்கள்.
வேடிக்கைதான்:)
நல்ல வேளை நாம் ஒருவருக்கொருவர் சொல்லிக் கொள்ள
முடிகிறது. வேறு யாருக்கும் இது புரியாது.
வாங்க வல்லி, ப்ளாகர் விசித்திரமான யோசனைகள் எல்லாம் சொல்லும். ஆடாத ஊஞ்சல் "ஆனந்த விகடனில்" வந்ததாமே! எனக்கு நினைவில் இல்லை. விறுவிறுப்பாக இருந்தாலும் முடிவு சோர்வைக் கொடுத்துவிட்டது. பி.வி.ஆர் மாதிரியே தோணலை.
Deleteதொற்றுக் குறையப் பிரார்த்தனைகள் செய்யலாம். வேறே என்ன செய்யறது?
//பி.வி.ஆருக்கே மலையாள வாசனையோடு பெண்களை வர்ணிக்க பிடிக்கும்.// அவர் பாலக்காட்டுக்காரராச்சே? கல்பாத்திதான் அவருடைய சொந்த ஊர் என்று நினைக்கிறேன்.
Deleteபிவிஆர் இருந்தது இப்போதைய மும்பை எனப்படும் அந்தக் கால பாம்பேனு நினைக்கிறேன்.மற்றபடி பாலக்காட்டுப் பக்கம்னு தெரியும். அவர் கதைகள் நாம் பக்கத்து வீட்டை நேரில் பார்க்கிறாப்போன்ற உணர்வை ஏற்படுத்தும். உரையாடல்கள் அப்படியே அந்த அந்தக் கதாபாத்திரங்களின் குரலாகக் காதுகளில் ஒலிக்கும்.
DeleteDash board suggestions - you can keep it off! :) There is an option for it.
ReplyDeleteமற்ற விஷயங்கள் - என்ன சொல்ல! தீநுண்மி குறித்த பயம் மக்களிடையே இல்லை. இன்றைக்கு முழு ஊரடங்கு என்றாலும் சாலையில் நடமாட்டம் இல்லாமல் இல்லை. வீட்டிலிருந்து பார்க்கும்போதே நடமாட்டம் தெரிகிறது.
ஆமாம், வெங்கட், தெரியும், என்றாலும் ஓர் ஆவல், அடுத்து என்ன வரும்னு! இன்னிக்கு தோசை பற்றியும் தோசைக்கற்கள் பற்றியும் தில்லியின் மீன் சந்தை பற்றியும் வந்திருக்கின்றன. :)))) இங்கே நாங்க வெளியே போகாததால் ஊர் நிலவரம் தெரியலை. ஆனால் தினசரியில் தெப்பக்குளம், ஜங்க்ஷன் பக்கம் கூட்டம் அதிகம் என்று படம் பிடித்துப் போடுகின்றனர்.
Deleteஅநேகமாக நான் அவற்றை நீக்கிடுவேன் வெங்கட்! ஆனாலும் திரும்பத் திரும்ப வரும். நிரந்தரமாக நீக்க மனசு வரலை. என்னதான் சொல்றாங்கனு பார்த்துக்கலாமே! வம்பு தான்! :)))))
Deleteஇன்னும் மக்கள் திருந்தாமல் பிரதமர் அவர்களைக் குறை கூறிக் கொண்டு இருக்கின்றனர்... ஊடகச் செய்திகளில் எது உண்மை எது பொய் என்று புரியவில்லை..
ReplyDeleteமக்கள் திருந்தவே மாட்டார்கள். தங்கள் தவறை/குற்றத்தைச் சுமத்தத் தானே அரசுகள் இருக்கின்றன. நிவாரணம் என்ற பெயரில் தொகை கிடைக்குமே! பிரதமரைக் குறை கூற அவசியம் இல்லை என்பது தெரிந்தாலும் அதை எடுத்துச் சொல்ல முடியவில்லை. ஏனெனில் நீதிமன்றங்கள் அந்த அளவுக்குக் கடுமை காட்டி வருகின்றன. அவங்களுக்கு உண்மை நிலை தெரியாமலா இருக்கிறது?
Deleteநமது மக்களிடம் (நிச்சயமாக அடித்தட்டு மக்களே) ஒரேநாளில் டாஸ்மாக்கில் ஐநூறு கோடி செலவு செய்ய பணம் இருக்கிறதே இலவசங்கள் எதற்கு ?
ReplyDeleteவாங்க கில்லர்ஜி, இலவசத்தைத் தான் டாஸ்மாக் மூலம் அரசு திரும்பப் பெற்றுக்கொள்கிறதே!
Deleteஏகப்பட்ட கேள்விகள். கோரா என்றொரு தளம். அங்கு கேள்விகளாகக் கேட்பார்கள். நீங்கள் பதில் சொல்லலாம். நானும் சொல்லி இருக்கிறேன், சில கேள்விகளுக்கு. அது ஞாபகம் வருகிறது!!!
ReplyDeleteவாங்க ஶ்ரீராம், கோராவிடமிருந்து விசித்திரமான கேள்விகள்/பதில்கள் எல்லாம் வருகின்றன. பலரும் என்னை அதில் பதில் சொல்லச் சொல்லிக் கேட்டார்கள். எனக்கும் பல கேள்விகள்/பதில்கள் வருகின்றன. ஆனால் அந்தத் தளத்தில் எனக்கு அவ்வளவாக ஈடுபாடு இல்லை.
Deleteஆக்சிஜன் விநியோகம் பற்றியெல்லாம் நீங்கள் எழுதி இருப்பதைப் படித்ததும் சுவாசிக்கப்போறீங்க தளத்தில் கிருஷ் ஸார் கொடுத்திருந்த லிங்க் நினைவுக்கு வந்தது...
ReplyDelete"நரேந்திர மோடியை வெறுப்பவர்கள் தெரிந்து கொல்வதற்காக சில தகவல்களை இங்கே சொல்கிறார்கள்"
https://threadreaderapp.com/thread/1391305159523794946.html
ஶ்ரீராம், இன்னும் எவ்வளவோ தெரிந்திருந்தாலும் எல்லாவற்றையும் வெளியில்/பொது வெளியில் சொல்ல முடியலை. சொன்னாலும் நமக்குக் கிடைக்கப் போவது "சங்கி" "பக்தாள்" என்னும் பெயர் தான். உண்மையை ஒத்துக்கவும் தைரியம் வேண்டுமே!
Deleteஅதே..அதே... சபாபதே!..
Delete:)))))) Thanks Durai!
Deleteஎன்னால் காலை மட்டும்தான் கணினியில் அமர முடிகிறது. சரியான வெக்கை. ஏதாவது ஏ ஸி இருக்கும் ரூமில் கணினியை வைத்திருக்கலாம் என்று தோன்றுகிறது! பகலில் மாறவே முடிவதில்லை. இரவு கொஞ்ச நிறம் அமர்ந்தாலும் உடனே படுக்கைக்குச் செல்லத்தான் தோன்றுகிறது!
ReplyDeleteஇப்போதெல்லாம் காலை தினம் வரமுடியறதில்லை. இன்னிக்குக் கொஞ்சம் வரலாமே என வந்தேன். நேரம் ஆகிவிட்டது. பகலில் உங்களுக்குக் கொஞ்ச நேரம் கிடைத்தாலும் ஓய்வு எடுக்கத் தானே தோணும். நான் ஏ.சி.யில் எல்லாம் உட்காருவது இல்லை. என்றாலும் பகலில் தான் குறைந்தது இரண்டு மணி நேரம் உட்காரலாம். இரவில்/சொல்லப் போனால் மாலை ஆறுமணிக்கப்புறம் எப்போவானும் தான் கணினி.
Deleteபி வி ஆர் கதைகள் ரொம்ப சுவாரஸ்யமாய் இருக்கும். இந்தக் கதை நான் படித்த நினைவில்லை.
ReplyDeleteநானும் இதைப் படிச்சதில்லை ஶ்ரீராம். இத்தனைக்கும் ஆனந்த விகடனில் வந்ததாம். முடிவு தான் எனக்குப் பிடிக்கலை.
Deleteவித்தியாசமான தலைப்புகள்...
ReplyDeleteநன்றி திரு தனபாலன்.
Deleteஆடாத ஊஞ்சல் கதை வாசித்திருக்கிறேன் கீதாக்கா. ஆம் முடிவு வாசகர் யூகத்திற்கு..
ReplyDeleteபானுக்கா இரண்டு கதைகள் சொல்லி கிடைக்கிறதா என்று பார்க்கச் சொன்னாங்க இதுவரை கிடைக்கவில்லை மிலார்ட், கிண்டி ஹோல்ட் ஆன்
இப்போதைய சூழல் பத்தி என்ன சொல்ல இங்கும் லாக் டவுன். என்னவோ போங்கக்கா...எப்போ எல்லாம் சரியாகுமோ?
கீதா
வாங்க தி/கீதா, பிவிஆர் கதைகள் தேசியமயமாக்கப்பட்டதாய்த் தெரியலை. ஆகவே தேடித்தான் பார்க்கணும். மிலாட், கிண்டி ஹோல்ட் ஆன் இரண்டும் படிச்சிருப்பேன்.மறுபடி புரட்டினால் புரியும்.
Deleteஅக்கா என் டேஷ் போர்ட் வலது புறத்தில் ஐடியாஸ் என்று இவற்றைக் கொடுத்திருந்தது. இதைத்தான் நீங்க சொல்றீங்களஆ?
ReplyDeleteCan a contractor be local body member in Tamilnadu?
What is the record of 100 metres race in Tamilnadu for girl?
Can common people purchase from police canteen in Tamil Nadu?
இது சென்சிபிளா இருக்கு இல்லையா?!!! ஹாஹாஹா
கீதா
அதே தான் தி/கீதா! எனக்கு ஆரம்பத்தில் ராமாயணம், மஹாபாரதம், பாகவதம் ஆகியவற்றிலிருந்து வந்து கொண்டிருந்தன. இப்போதெல்லாம் கொஞ்சம் சமையல், கொஞ்சம் வம்பு, இந்த மாதிரி வருகின்றன.
Deleteஇன்னைக்குப் பிள்ளையார்! பிள்ளையார் பண்ணும்போது என்ன நிறத்தில் ஆடை அணியணும்? முதல் முதல் பிள்ளையார் சிலையை யார் வடித்தார்கள்? தோசையை எப்படிக் கல்லில் ஒட்டிக்காமல் எடுக்கிறது? புடலை விதை, குடல் எல்லாமும் போட்டு தோசைமாவுக்குக் கர்நாடகத்தில் அரைப்பாங்களாமே! கேட்டிருக்கு என்னை! :)
Deleteஅன்புள்ள கீதாம்மா, வீட்டிலேயே பாதுகாப்பாக இருங்கள். வெளியாட்கள் வந்து என்ன கொடுத்து சென்றாலும் வாங்கிக்கொண்டு, கைகளை சுத்தம் செய்து கொள்ளுங்கள். பின் காய்கறியானால் தண்ணீரில் கல்உப்பு போட்டுவைத்து , நன்கு கழுவி எடுத்து வையுங்கள். வீட்டிற்கு முன்புறமும் வாளியில் தண்ணீரும் சோப்பும் வைத்துக் கொள்ளுங்கள். தோற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. தினமும் படுக்க செல்லும் முன்பு மஞ்சள் சேர்த்து நீராவி பிடியுங்கள்.
ReplyDeleteஅத்திமலை தேவன் பதிவிற்காக காத்திருக்கிறேன்! நீண்ட நாட்களுக்கு பின் நேற்று இந்துமதியின் "தரையில் இறங்கும் விமானங்கள்" படித்தேன். எத்தனை முறை படித்தாலும் பிடிக்கும்! லக்ஷ்மியின் நாவல்களும் பிடிக்கும்.
வாருங்கள் வானம்பாடி. நீங்க சொல்வது எல்லாவற்றையும் கடைப்பிடிக்கிறோம். இதுக்காகப் பயந்துண்டே எரிவாயு தீர்ந்ததும் மறு சிலிண்டருக்கு இன்னமும் விண்ணப்பிக்கவில்லை. ஒரு சிலிண்டர் எனக்கு 60 நாட்களுக்குக் குறையாமல் வரும் என்பதால் கொஞ்ச நாட்கள் கழிச்சுக் கொடுக்க யோசனை. அக்கம்பக்கம் சிலிண்டர்கள் வந்து கொண்டிருக்கின்றன. நாங்க யாரையும் உள்ளே வர விடுவதில்லை என்பதால் யோசிக்கிறோம். அத்திமலைத் தேவன் விரைவில் வருவான். இந்துமதியின் "தரையில் இறங்கும் விமானங்கள்" தொடராக வந்தப்போப் படிச்சது தான். லக்ஷ்மி எல்லாம் நிறையப் படிச்சாச்சு.
Deleteஆரம்பத்தில் இருந்த "யோசானகள்" பார்த்து ஜெர்க் ஆகிட்டேன் ஒரு நிமிசம் 😄. திருடனாய் பார்த்து திருந்தினா தான் corona ஒழியும், இல்லேனா இன்னும் காவு வாங்கிட்டு தான் இருக்கும். என்ன சொல்றதுன்னு தெரியல, நிலமை கை மீறி போயாச்சு. இனி விதி விட்ட வழி 😒
ReplyDeleteஹாஹாஹா, ஏடிஎம், இன்னிக்கு யோசனைகள் ஸ்டெனோகிராஃபர்கள் பற்றி, பாலிடெக்னிக் கட் ஆஃப் மதிப்பெண்கள் பற்றி, முறுக்கு மிஷின் சரியாச் சுத்தலைன்னா என்ன பண்றது? மதுரை ஹைகோர்ட் கார்ப்பரேஷன் லிமிட்டில் இருக்கா! இப்ப்ப்ப்ப்ப்படி! :)))) வேண்டாம்னு அவற்றை நிறுத்தினாலும் மறுபடி வரும்.
Deleteதலைப்பு அருமை. யோசனைகள் நிறைய தான் வருகிறது.
ReplyDeleteஎப்போது சரியாகும் என்ற கேள்வியும், விரைவில் சரியாக வேண்டும் எண்ணமும் வருகிறது.
எவ்வளவு பத்திரமாக கவனமாக இருந்தாலும் வருகிறதே என்ன செய்வது என்ற கவலையும் வருகிறது.
ஆடாத ஊஞ்சல் படித்த நினைவு இல்லை .
வாங்க கோமதி! ஆடாத ஊஞ்சல் நானும் இப்போத் தான் முதல்முறையாப் படிச்சிருக்கேன்னு நினைக்கிறேன். இன்னொன்றும் படிச்சேன் பிவிஆரோடது. சுமாரிலும் ரொம்ப சுமார்! ஏதோ சின்ட்ரெல்லா கதை போல் இருந்தது. இந்தக் கொரோனா பயம் மனதை விட்டு அகல வேண்டும். எப்போ இதுக்கு முடிவு பிறக்குமோ!
Deleteஎன் திருமணத்திற்கு முன் ஆனந்த விகடனில்,'ஆடாத ஊஞ்சல்' தொடராக வந்த பொழுது ஒரே பாலக்காட்டு பாஷையாக இருந்ததால் தொடரவில்லை. அதிகமாக வட்டார வழக்கு பயன்படுத்தினால் ஒன்ற முடியாமல் போய் விடும். பின்னால் நான் ஒரு பாலக்காட்டுக்காரருக்கே வாழ்க்கைப் படப்போகிறேன் என்பது அப்போது தெரியவில்லையே. அதுவும் அந்தக் கதையில் வந்த கல்பாத்தியை ஒட்டிய ஊர்தான் என் கணவரின் சொந்த ஊர். கல்பாத்தி,கோவிந்தராஜபுரம் இரண்டையும் பெரிய கிராமம்,சின்ன கிராமம் என்பார்கள்.
ReplyDeleteவாங்க பானுமதி, எந்த வருஷம் வந்ததோ! தெரியலை. ஏனெனில் நான் நடுவில் சில வருடங்கள் எந்தப் புத்தகங்களும் வாங்க முடியாதபடி இருந்தேன். தமிழ்ப் புத்தகங்கள் கிடைப்பதே பிரம்மப் பிரயத்தனமாக இருக்கும். பின்னர் ஜாம்நகர் வந்ததும் சென்னை ஸ்டோர்ஸ் என்னும் கடையில் தமிழ்ப் புத்தகங்கள் கிடைக்க ஆரம்பித்தன.
Delete