கோகுலாஷ்டமி அன்று எடுத்த படங்கள் சிலவற்றைக் கணினியில் ஏற்ற முடியாமல் இருந்தன. அவற்றை நேற்றிரவு ஒரு வழியாய்க் கணினியில் ஏற்றினேன். ஶ்ரீராமர் படம் நெல்லை சொல்கிறாப்போல் ஒரே வெளிச்ச மயமாய் வந்திருக்கு. இந்த விளக்கை அணைச்சுட்டு இன்னொரு விளக்கைப் போட்டாலும் சரியாய் இல்லை. இடம் அப்படினு நினைக்கிறேன். வந்தவரைக்கும் இதான்!
கீழ்த்தட்டு, உம்மாச்சி எல்லாம் தெளிவாய் இருந்த படம் தற்செயலாய் அழிந்து விட்டது. சரினு இதையே போட்டுட்டேன். :( ஏதோ ஒரு சாக்கு! நொ.கு.ச.சா.
ஓரளவு பரவாயில்லையோ?
கீழே கோலம் போட்டுப் பலகை வைச்சிருக்கேன். சின்னப் பலகையில் கிச்சாப்பயல். படத்தில் நமக்கு இடப்பக்கம் பழங்கள், வெற்றிலை பாக்கு, தேங்காய் உடைத்தது. பக்கத்தில் சின்ன ப்ளாஸ்டிக் டப்பாவில் அவல். அது பக்கம் வடைகள், பால், பாயசம், தயிர் வெண்ணெய், மாமி கொடுத்த மனோஹரம், உப்பு, வெல்லச் சீடைகள், காடரரிடம் வாங்கிய கை முறுக்குகள்.
இந்தப் படம் வேறொரு கோணத்தில் எடுத்தது. முழுசும் வரலை.
அழகு. மனதில். விட்டுப்போனவைகள் அகப்பட்டுவிட்டது. ஸந்தோஷம். அன்புடன்
ReplyDeleteநன்றி அம்மா. நமஸ்காரங்கள்.
Deleteராமரை, கிச்சாவைப்பார்த்து விட்டேன்.
ReplyDeleteகிச்சா மீண்டும் வரம் கொடுக்க வந்து விட்டார்.
ஆமாம்,கிச்சா மீண்டும் வந்துவிட்டான். அழகுக் கிச்சா.
Deleteபடங்கள் - ம்ம்ம். தேடிப்பிடிச்சு போட்டாச்சு - நல்லது. பார்த்தேன் - ரசித்தேன்!
ReplyDeleteவாங்க வெங்கட், காலரியில் தான் இருந்தது. தேடவெல்லாம் இல்லை. கணினியில் என்ன காரணமோ அப்லோட் ஆகவே இல்லை. ஒருவழியாப் பண்ணினேன்.
Deleteகிச்சாவைப் பார்த்தேன். பட்சணங்கள் படத்தை ஜூம் செய்தால் சரியாக தெரிய மாட்டேன் என்கிறது!!!
ReplyDeleteவாங்க ஶ்ரீராம், கிச்சா தான் முகம் தெரியாமல் பூக்களால் மூடிக் கொண்டு விட்டான். மற்றவற்றை ஜூம் செய்து பார்த்தேன். பதிவில் தெரிவதை விட நன்றாகவே தெரிந்தது.
Deleteநன்றாக இருக்கிறது. மனோகரம் எப்படி இருந்தது?
ReplyDeleteவாங்க நெல்லை, மனோகரம் எல்லாம் எனக்கு எங்க பக்கம் பண்ணுவது தான் பிடிக்கும். நல்ல தடிமனாகக் கட்டைவிரல் பருமனுக்குப் பிழிவார்கள். ருசியே தனி. வெல்லம் அப்படியே பாகாக மினுமினுக்கும். கையாலும் பிய்க்கலாம். அது தான் மனோகரம். இங்கே எல்லாம் முக்கியமாய்த் தஞ்சாவூர்க்காரங்க எல்லோரும் அரிசி+உளுத்தமாவில் தேன்குழல் பிழிந்து அல்லது ஓமப்பொடி மாதிரி மெலிதாகப் பிழிந்து அதில் வெல்லப்பாகைச் சேர்த்துப் பிடித்து மனோகரம் என்கிறார்கள். இரண்டாம் பட்சம் தான் எனக்கு! :))) சில பக்ஷணங்கள் அம்மாவோடு போச்சு. முக்கியமாய் உக்காரை, மனோகரம் போன்றவை.
Deleteஎல்லாமே மிக அழகு.
ReplyDeleteஇதே மாதிரி சதுர்த்திப் பிள்ளையாரும் வரவேண்டும்.
எப்படித்தான் கோலம் எல்லாம் போட்டீர்களோ. பார்க்கவே பிரமிப்பாக இருக்கு.
நீங்கள் சொல்லும் மனோஹரம் சாப்பிட்டே நாளாகிறது.
நல்ல கிச்சா.சம்த்தா வந்திருக்கிறான்.
நலம் தருவான்.
வாங்க வல்லி. சதுர்த்திப் பிள்ளையாரும் வெளிவரத் தயார். கொழுக்கட்டை தான் சொதப்பி விட்டது இந்த வருஷம். என்னவோ போங்க. ரொம்ப முடியலை இரண்டு நாட்களாக! இவ்வளவு தூரம் முடியாமல் போய்விட்டதே என்று நினைத்து நினைத்து வருத்தமாகவும் இருக்கு.
Deleteநானும் தரிசித்துக் கொண்டேன் நன்றி வாழ்க நலம்.
ReplyDeleteஆஜர்! உங்க கால் வலி ஓகே வாக்கா?
ReplyDeleteஎல்லாமே நன்றாக இருக்கிறது கீதாக்கா. கிச்சாப்பயல் பூக்களுக்குள்!!! பூவுக்குள் ஒளிந்திருக்கும் கிச்சப்பயல் அதிசயம்!
கீதா
வாங்க தி/கீதா, நீண்ட நாட்களுக்குப் பின்னர் வருகை தந்தமைக்கும் கருத்துக்கும் நன்றி.
Deleteகீதாக்கா ஹைஃபைவ்! யெஸ்ஸு யெஸ்ஸு....தடிமனான பளப்பளப்பாக....அதே அதே அந்தப்பக்கம் தான் அது!!! எனக்கு மிகவும் பிடிக்கும்..!
ReplyDeleteஎன் மாமியார் செய்வது அரிசி உளுந்துமாவு பொட்டு...தேங்குழல் பிழிந்து...எனக்கு அதுவும் பிடிக்கிறது.
கீதா
தி/கீதா, இது தேன்குழலில் செய்த மனோகரம் தான். பரவாயில்லை ரகம். :)
Deleteவணக்கம் சகோதரி
ReplyDeleteநலமா? எப்படியிருக்கிறீர்கள்.?உங்கள் கால் வலிகளும், வீக்கமும் ஒரளவு குறைந்து இப்போது நல்லபடியாக நடமாட முடிகிறதா? உங்களை விசாரிக்க கூட முடியாமல் என்னை என் தொந்தரவுகள் இது நாள் வரை படுத்தி எடுக்கிறது. உங்கள் இதுவரையிலான பதிவுகளுக்கு இயல்பாக வராததற்கு என்னை மன்னிக்கவும். நானும் இப்போது இரண்டொரு நாட்களாக உடல்நலம் தேறி வருகிறேன். ஆனால், இன்னமும் நெஞ்சு முதுகு வலி, முழுதாக போக மறுத்து வருகிறது. முழுமையாக என் வலிகள் நீங்கி பழையபடி உடல் /மனம் நிம்மதியாக இருக்க இறைவனை பிரார்த்தித்துக் வருகிறேன். உங்கள் அனைவரின் அன்பான விசாரிப்புகளுக்கும், பிராத்தனைகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
நீங்கள் இத்தனை வலிகளையும் தாங்கிக் கொண்டு உங்களால் முடிந்த அளவுக்கு கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடி, கிருஷ்ணனை வரவேற்று பூஜித்தமை கண்டு மிகவும் சந்தோஷமடைந்தேன்.
தெய்வ படங்கள், பட்சணங்கள் கோலங்கள் என அத்தனையுமே அழகாக உள்ளது. கிருஷ்ணன் பூவுக்குள் ஒளிந்து கொண்டு நம்மை பார்க்கும் போது ஆனந்தமாக இருக்கிறது. "உலகத்தையே சுமப்பவனான எனக்கு இந்த பெரிய தாமரை மலர் அவ்வளவாக பார்மா?" என விஷமமாக கேட்பது போன்ற பார்வையுடன் அவ்வளவு அழகாக இருக்கிறான்.
நானும் இந்த தடவை சிறப்பாக வழிபட இயலவில்லை. அடுத்த தடவை சிறப்பாக கொண்டாட நம்மிருவருக்குமே அவன் நிச்சயம் அருள் புரிவான். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா. உங்களைப் பார்க்க சந்தோஷமாக இருக்கிறது. ஆனால் இன்னமும் உங்கள் உடல் நிலை பூரண குணமடையவில்லை என்பது தெரிந்து வருத்தமாகவும் இருக்கிறது. நோயின் அடிப்படைக்காரணம் என்ன என்பதைக் கண்டறிந்தாரா மருத்துவர்? இன்னும் சில நாட்கள் ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கலாமோ? என் கோலத்தையும் பக்ஷணங்கள் வாங்கி வைத்ததையும் பாராட்டியதற்கு மிக்க நன்றி. நிச்சயமாகப் பிழைத்துக் கிடந்தால் அடுத்த வருடம் இரண்டு பேரும் சிறப்பாகப் பண்டிகைகளைக் கொண்டாடுவோம். எல்லாம் கண்ணன் அருளால் நன்கு நடக்கும்
Deleteகிச்சாவை கண்டு கொண்டோம். உடல்நலமில்லாதபோதும் சிறப்பான வழிபாடு.
ReplyDeleteவாங்க மாதேவி. மிக்க நன்றி.
Delete