பிள்ளையார் சதுர்த்திப் படங்கள் கொஞ்சம் தாமதமாக. எங்க வீட்டுப் பிள்ளையாருக்கு இந்த வருஷம் என்னோட கொழுக்கட்டை சாப்பிட்டதில் ஜீரணம் ஆகலையாம். அதான் கொஞ்சம் ஓய்வு எல்லாம் எடுத்துக் கொண்டு தாமதமாய் வந்திருக்கார். பிள்ளையார் சதுர்த்திக்கு முதல் நாள் எங்க ஆவணி அவிட்டம். வெறும் பாயசம், வடை மட்டும் தான் பண்ணினேன். சமாளிச்சுட்டேன். அன்னிக்கே சமைச்ச கையோட பிள்ளையாருக்குப் பச்சரிசி இட்லிக்கும் அரைச்சு வைச்சுட்டேன். மறுநாள் காலை சீக்கிரம் வேலை ஆரம்பிக்கணும்னு நினைச்சால் வேலைகளில் உதவும் பெண்மணி கொஞ்சம் தாமதமாக (அதிகமில்லை, ஒரு மணி நேரம்! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்) வேலைக்கு வந்தார். அவர் வந்து வேலைகளை முடிச்சுட்டுப் போனதும் குளிச்சுட்டு வந்து மாவு அரைச்சு, உளுந்துப் பூரணம், வடை, பாயசம், அதிரசம் ஆகியவற்றிற்கு எல்லாம் அரைச்சு வைச்சுட்டுச் சமையலைத் தொடங்கினேன். சமைத்துக் கொண்டே தேங்காய் உடைச்சுத் துருவிப் பூரணம் கிளறியாச்சு. பூரணம் கொஞ்சம் பாகு ஜாஸ்தியாயிடுச்சு!
அதற்குள்ளாகப் பச்சரிசி இட்லியும் உளுந்துப் பூரணத்துக்கும் இட்லிப் பாத்திரத்தில் வேக விட்டு எடுத்துக் கொண்டு, உளுந்துப் பூரணத்திற்குத் தேங்காய், கருகப்பிலை, கடுகு, உபருப்பு தாளித்து உதிர்த்துத் தயாரானது. சாம்பார், ரசம் வேலை முடிந்து விட அதையும் எடுத்துத் தனியாய் வைச்சாச்சு. சாதம் ஆனதும் ஒரு கிண்ணத்தில் பருப்புடன் அதையும் தனியா மூடி வைச்சாச்சு. இனி கொழுக்கட்டை பண்ணிக்கொண்டே வடை எல்லாம் தட்டறாப்போல் இப்போ உடம்பு இல்லை. ஆகவே முதலில் கொழுக்கட்டையை முடிச்சுப்போம் என அதை ஆரம்பிச்சேன். வெல்லப் பூரணத்தில் 21 கொழுக்கட்டை பண்ணி எடுத்துக் கொண்டு உளுந்துப் பூரணத்திலும் அதே போல் 21 பண்ணினேன். பார்க்க என்னமோ நன்றாகவே வந்திருந்தது. அதற்குள்ளாக நம்ம ரங்க்ஸ் பூஜையை முடிச்சுட்டு நிவேதனத்திற்குக் காத்திருந்தார். எல்லாம் ஆச்சு, வடையும் அதிரசமும் தவிர்த்து. கொழுக்கட்டை அடுப்பை அணைச்சுட்டு இன்னொரு பக்கத்து அடுப்பில் எண்ணெயை வைத்து அதிரசம் கரண்டியால் எடுத்துப் போட்டால் க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் விதவிதமான உருவங்களில்! சரினு அதை வேக விட்டு எடுத்துத் தனியாய் வைச்சுட்டுக் கொஞ்சம் கோதுமை மாவு சேர்த்துக் கொண்டு கனிந்த வாழைப்பழங்களைப் போட்டுப் பிசைந்து அப்பமாக வார்த்தேன். சரியாக வந்தது.
அதன் பின்னர் வடைக்கு மாவை எடுத்தால் மாவு ஓடிக் கொண்டிருக்கு. எப்படிப் பிடிக்கிறது. ஏற்கெனவே உனக்கு உளுந்து வடையே தட்டத் தெரியலைனு சான்றிதழ்ப் பத்திரமெல்லாம் கொடுத்தாச்சு. இன்னிக்கு எப்படி வருமோ தெரியலை. யோசிச்சேன். அப்படியே மாவைக் கையால் எடுத்துத் தட்டி போண்டா போல் போட்டு எடுத்துட்டேன். இன்னிக்கு இதான். பின்னர் நிவேதனம் முடிஞ்சு, காக்காய்க்கு எல்லாம் கொடுத்துட்டுச் சாப்பிட்டுப் பாத்திரங்களை ஓரளவுக்கு ஒழிச்சுட்டுப் போய்ப் படுத்துட்டேன். கொழுக்கட்டை வாயில் ஒட்டிக் கொண்டது. என்னனு தெரியலை. அது கிடக்கட்டும் போ என்று படுக்கப் போயிட்டேன். அப்போப் பதினொன்றரை மணி. சாயந்திரமா நாலு மணிக்குத் தான் எழுந்து வந்து மிச்சம் மாவை எடுத்து நன்றகப் பிசைந்து மிச்சம்கொழுக்கட்டையைப் பண்ணினால் ரொம்ப நன்றாக வந்தது. காலம்பர ஏன் சரியா வரலை? தெரியலை. நம்மவர் அதைப் பார்த்துட்டுப் பயந்துட்டார். அப்புறமா சமாதானமா நல்ல வார்த்தை சொல்லிச் சாயந்திரமாப் பண்ணின கொழுக்கட்டைகளைக் கொடுத்தேன். நல்லா இருக்கு எப்போவும் போல என்று சொல்லிவிட்டுச் சாப்பிட்டார்!
காலம்பர ஏன் சரியா வரலை? மில்லியன் டாலர் கேள்வி!
கீழே இரண்டாவது தட்டில் பெருமாள், ஶ்ரீதேவி, பூதேவிக்கு முன்னால் பிள்ளையார் உட்கார்ந்துட்டார். அவரைக் கீழே வைச்சால் இவரால் உட்கார்ந்து பூஜை பண்ண முடியாது. ஆகவே இரண்டாவது தட்டில் வைச்சுட்டு ஸ்டூலில் உட்கார்ந்து பூஜை பண்ணினார்.
வணக்கம் சகோதரி
ReplyDeleteபதிவு அருமையாக உள்ளது. விநாயகர் படங்களும், பதிவுமாக உங்கள் வீட்டு விநாயக சதுர்த்தி கொண்டாட்டத்தைப் பற்றி அருமையாக எழுதியிருக்கிறீர்கள். விநாயகரை நீங்கள் சொன்னபடிக்கு படத்தை பெரிதாக்கி நன்றாக மனமுருக தரிசித்து கொண்டேன்.தங்கள் வீட்டு பிள்ளையார் வாசம் மிகுந்த பூக்களும்,தனக்கு முன்னால் படைக்கப்பட்டிருக்கும் தனக்கு பிடித்தமான பிரசாதங்களுமாக அழகாக இருக்கிறார்
நாம் பால் பழம் நிவேதனம் வைத்து, "பாலும் தெளித்தேனும்" என்றபடி என்னால் முடிந்தது இவ்வளவுதானப்பா.. இந்த தடவை பொறுத்துக் கொள். இதுவே உன்னருளினால்தான்.. "என்று வேண்டினால்,மனமுவந்து விக்கினங்களை களைந்து வேண்டும் வரம் தருபவனில்லையா அவன்...! பிரசாத குறைபாடுகளை பெரிதாக எடுத்துக் கொள்ளவே மாட்டான். எனினும் பூஜை செய்யும் படங்களும் பிரசாதங்கள் அனைத்தும் நன்றாகத்தான் வந்துள்ளது பிறகு என்ன கவலை உங்களுக்கு.? உங்களை சிரமபடுத்தும் கால் வலிகளில் பொறுமையாக இந்தளவிற்கு செய்து அவனை வழிபட்டதற்கு அவன் மிகுந்த சந்தோஷம் அடைந்திருப்பான். உங்களுக்கு வேண்டும் வரங்களையும் மகிழ்வோடு தந்திருப்பான்.
கொழுக்கட்டைகள், வடை, பாயாசம் என அனைத்தும் நன்றாக வந்துள்ளது நீங்கள் கூறியபடி ஜீரணம் ஆகாமல் அவர் தாமதமாக வரவில்லை.. தங்களின் அருமையான தயாரிப்பான தித்திப்பான வெல்லப்பூரண கொழுக்கட்டை, மற்றும் பாயாசம் சாப்பிட்ட ஆயாசத்தில் சற்று நித்திரை வயப்பட்டிருக்கலாம்.) அவர் அருள் நமக்கு எப்போதும் உண்டு. அடுத்த தடவை கண்டிப்பாக சிறப்பான முறையில் அவரை பூஜிக்க அவன் அருள் புரிவான். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா. பாராட்டுகளுக்கு நன்றி. பிள்ளையார் அருகம்புல் வைத்தால் கூடப் போதும்னு தான் சொல்லுவார். நமக்குத் தான் மனசே கேட்பதில்லை. என்னமோ படத்தில் கொழுக்கட்டை நன்றாகத்தெரிந்தாலும் சாப்பிடும்போது வித்தியாசம் தெரிந்தது. அதே மாவில் சாயங்காலமாப் பண்ணினப்போச் சரியா இருந்தது. ஏன் என்று தெரியலை. !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
Deleteநன்று தேவகோட்டைக்கு கொழுக்கட்டை ரெண்டு பார்சல்....
ReplyDeleteநெய்யில் பொரித்து எடுத்துச் செய்து அனுப்புகிறேன் கில்லர்ஜி. ஒரு மாசம் வைத்துச் சாப்பிடலாம். இது ஊசிப் போயிடும். :))))
Deleteபிள்ளையார் சதுர்த்தி நல்லபடியாக முடிந்தது அறிந்து மகிழ்ச்சி. திப்பிச வேலைகள் செய்யாமல் இருக்கணும்னா முடியாது இல்ல! ஹாஹா....
ReplyDeleteஹாஹாஹா, வெங்கட், வாங்க திப்பிசம் தானே கை வந்த கலை! :))))
Deleteகொஞ்சம் முடியாத போதும், மிகச் சிறப்பாகச் செய்திருக்கீங்க. பாராட்டுகள். இன்னும் விரைவில் எல்லாப் பிரச்சனைகளும் தீர்ந்து, படத்தையும் பளிச்சுன்னு எடுத்துப் போடுவீங்க என்று நம்புகிறேன்.
ReplyDeleteபிரசாதங்கள் அருமை.
ஸ்ரீஜெயந்தி கொண்டாடிய நாளிலிருந்து உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் காணணும் என்று ப்ராத்திக்கிறேன்.
வாங்க நெல்லை. உங்க வாயால் பாராட்டு. கூடவே படங்களுக்கு ஒரு ஷொட்டு/கொட்டு! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
Deleteபிள்ளையார் சதுர்த்தி, ஸ்ரீஜெயந்தியைவிடச் சிறப்பாக வந்திருக்கு. அதுவே பெரிய முன்னேற்றம்னு மனசுல தோன்றிவிட்டது. மென்மேலும் நலம் பெறுக
ReplyDeleteமிக்க நன்றி நெல்லை. பிரார்த்தனைக்கு.
Deleteசிறப்பாக பூஜைகள் முடிந்து விட்டன. பாராட்டுகள். படங்கள் நன்றாய் வந்திருக்கின்றன.
ReplyDeleteநன்றி ஶ்ரீராம்.
Deleteவடையை ஒருவர் இலையிலோ, பிளாஸ்டிக் பேப்பரிலோ தட்டாமல் கையிலேயே உருட்டி, லேசாக அமுக்கு அஃட்டைவிரலால் நடுவில் துளையிட்டு போட்டு எடுத்ததை யு டியூபில் பார்த்தேன். நல்ல வடிவத்தில் வந்திருந்தது. எங்களுக்கென்னவோ வருவதில்லை!
ReplyDeleteஆமாம், ஶ்ரீராம், எங்க வீட்டுக்கு சமைக்க வரும் மாமிகள் அப்படித்தான் வடை தட்டுகிறார்கள். எனக்கும் ஓட்டை போட முடியாவிட்டாலும் நன்றாகவே வந்தது. மிச்சம் மாவை நேற்றுத் தான் தீர்த்தேன்.
Deleteஸ்ரீராம் நான் வடையைக் கையில்தான் தட்டுவேன். ஒன்று பந்து போல் உருட்டி இடது கையில் போட்டு ஓட்டை போட்டு அல்லது வலது கையிலேயே எடுத்து கட்டை விரலால் நடுவில் ஓட்டை போட்டு செய்வது வழக்கம்.
Deleteசமீபத்தில் மகனுக்காக ஒரு வீடியோ எடுத்தேன் உங்களுக்கு அனுப்ப நினைத்து மறந்துவிட்டேன். அது முதலில் சொன்னது இரு கைகளும் பயன்படுத்தி. அவனுக்கு முதலில் அதுதான் ஈசியா இருக்கும் என்று சொல்லி வீடியோ எடுத்தேன்.
மொபைலில் இருக்கும் என்று நினைக்கிறேன் இருந்தால் அனுப்புகிறேன்.
கீதா
வாயால் வடை சுடுகிற்வர்கள் இருக்கும் பொழுது கையால் வடை சுடுகிற்வர்களை ஆசர்யமாக பேசுகிறீர்களே? நானும் கையில்தான் வடை தட்டுவேன். சுட்ட எண்ணை மீந்து போகக் கூடாது என்பதால் கொஞ்சமாகத்தான் எண்ணை வைப்பேன். அதனால் ஒரு ஈடில் இரண்டு அல்லது மூன்று வடைகள்தான் தட்டுவேன், அதற்கு கையில் தட்டினால் போதாதா?
Deleteநான் பொதுவாக வாழை இலை தான். எப்போவானும் ப்ளாஸ்டிக் பேப்பர். அபூர்வமாக. இம்முறைதான் கைகளால்!
Deleteஎன் அம்மா மாவு கிளறிக் கொடுக்கும்போது ஒருதரம் கூட தப்பியதில்லை. அழகாய் கப் வைக்க வரும். எங்களுக்கு பெரும்பாலும் சொதப்புகிறது!
ReplyDeleteஹாஹாஹா, கிண்ணம் போல் சொப்பு வந்ததில் ஒண்ணும் குறையில்லை. வேகவிட்டு எடுக்கையில் சொதப்பி இருக்கேன். வெந்தது போதாமல் முன்னாடியே எடுத்துட்டேன் போல!
Deleteமாவு கிளறியானதும் கொஞ்சம் அதிகமாகவே நேரம் கழித்து செய்தால் சரியாய் வருமோ என்னவோ... எங்களுக்கும் இதேபோல ஆகி, மாலை சரியாய் வந்தபோது தோன்றியது!
ReplyDeleteசூட்டோடு எல்லாம் மாவைப் பிசைந்து பண்ணி இருக்கேன் ஶ்ரீராம். ஒண்ணும் பிரச்னை இல்லை. இம்முறை தொடர்ந்து இரு நாட்களாக அதிகப்படி வேலை.உட்காரமுடியாத பிரச்னை. சாப்பிடாமல் இருந்ததால் ஏற்பட்ட களைப்புனு எல்லாம் சேர்ந்து விட்டது. இவ்வளவு தூரம் உடம்பு முடியாமல் போகும்னு நானே எதிர்பார்க்கலை. முன்னை மாதிரிச் செய்ய முடியுமானும் புரியலை. :(
Deleteகீதாக்கா மாவு கிளறும் பக்குவம் தான் என்று தோன்றுகிறது. உங்களுக்கு உடம்பு முடியாததால் கொஞ்சம் அப்படியும் இப்படியும் ஆகியிருக்கிறது என்று தோன்றுகிறது. பரவாயில்லை அக்கா அதற்கு நடுவிலும் எல்லாம் செய்திருக்கீங்களே அதுவே பெரிய விஷயம்! எல்லாம் நன்றாகத்தான் இருக்கிறது. இறைவனுக்கு நன்றி!
ReplyDeleteகீதா
வாங்க கீதா, அதே மாவு தான். சாயந்திரம் பண்ணறச்சே நன்றாக வந்ததே! :))) என்னவோ போங்க. ஏதோ ஒப்பேத்திட்டேன்.
Deleteவடை தட்டினால் என்ன உருட்டிப் போட்டால் என்ன? எல்லாம் ஒன்றுதான். சுவை மாறுபடப் போவதில்லை. வயிற்றுக்குள் தான் போகப் போகுது! எல்லாம் நன்றாகவே உள்ளது கீதாக்கா.
ReplyDeleteஉங்கள் உடல் நலம் சீக்கிரம் சரியாகிடும் பாருங்க! அப்புறம் மீண்டும் கீதாக்கா முன்பு போல் செய்யத் தொடங்கிடுவீங்க!
கீதா
அதானே, தட்டையான வடையை விட உருண்டையான போண்டா எளிதில் வாய்க்குள் போச்சே! அதான் சரி! முன்னை மாதிரி முடியுமா இப்போனு சந்தேகமாவே இருக்கு. போகப் போகப் பார்க்கலாம்.
Deleteகொஞ்சம் உடம்பு சரியானதுமே வேலை செய்யத் துவங்கி விட்டீர்களே? பழங்களை மட்டும் நிவேதனம் செய்தால் பிள்ளையார் என்ன கோபித்துக் கொள்ளவா போகிறார்?
ReplyDeleteஅதெல்லாம் கோவிச்சுக்க மாட்டார் தான். என்னன்னா போன வருஷம் பழங்கள் தானே நிவேதனம் செய்யும்படி இருந்தது. இந்த வருஷம் பண்டிகை உண்டே! நல்லபடியாக் கொண்டாடணும்னு ஓர் ஆசை.
Deleteகணபதி புராணம் அருமை..
ReplyDeleteபதிவின் முடிவில் நெகிழச் செய்து விட்டீர்கள் அக்கா!...
எல்லாரையும் காப்பாற்றி
கைகொடுக்க வேணும் பிள்ளையாரப்பா!..
வாங்க துரை! எல்லோரையும் காத்து அருள வேண்டும் விநாயகன். விக்னங்களைக் களைய வேண்டும்.
Deleteபிள்ளையார் சதுர்த்தி விழாவை சிறப்பாக செய்ய மனபலம் கொடுத்து விட்டார்.
ReplyDeleteஉடல்பலமும் சேர்த்து கொடுத்து இருக்கிறார். மேலும் சிறப்பாக பிராசதங்களை வாங்கி கொள்வார் அடுத்த வருடம். படங்கள் எல்லாம் நன்றாக இருந்தது. பூஜையை கண்டு தரிசனம் செய்து வணங்கி கொண்டேன்.
வாங்க கோமதி! எப்படியோ பிள்ளையார் சதுர்த்தியை ஒப்பேத்தினேன். காலம்பரக் கொழுக்கட்டை சரியா வரலைனு கொஞ்சம் வருத்தம் தான்.
Deleteநாலைந்து நாட்களாக வலைத்தளங்களின் பக்கம் வர முடியவில்லை. அதற்குள் கால் வலி முழுவதும் சரியாகி விட்டதா? இத்தனை சுறுசுறுப்பாக இத்தனை பட்சணங்கள் செய்து அசத்தியிருக்கிறீர்கள்! பாராட்டுக்கள்! வாழ்த்துக்கள்!!
ReplyDeleteவாங்க மனோ. அதெல்லாம் முழுசும் சரியாகலை. வேலை செய்கையில் பல்லைக் கடித்துக்கொண்டு செய்துட்டுப் பின்னர் ஒரே அவதி! பிள்ளையாருக்குக் குறைக்க வேண்டாம்னு தான். போன வருஷமும் பண்டிகை இல்லை என்பதால் இந்த வருஷம் கட்டாயம் செய்யணும்னு ஓர் உறுதி!
Deleteஅன்பின் கீதாமா,
Deleteஇதே உறுதி எப்பொழுதும் கை கொடுக்கும்.
மிக அருமையான படங்கள்.
இத்தனை முடியாத போதும் அருமையாகக் கொழுக்கட்டை, வடை, அதிரசம் என்று அசத்தி விட்டீர்கள்.
பிள்ளையார் கைவிட மாட்டார்.
பூஜைப் பிள்ளையாரைப் பார்த்து சேவித்துக் கொண்டேன்.
இங்கே இரண்டு கொழுக்கட்டையும் அப்பமும் மட்டுமே செய்தேன்.
அன்றே உடம்புக்கு முடியாமல்
போனது.
ஆனை முகன் அருளால் உடம்பு நல்ல குணம் அடையும்.
கண்ணுக்கும் கருத்துக்கும் நிறைவான பதிவு.
பிரசாதங்களுடன் பிள்ளையார் சதுர்த்தி சிறப்பு.
ReplyDelete