எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, September 11, 2021

மஹாகவிக்கு அஞ்சலி!

 



அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே

இச்சகத்து ளோரெலாம் எதிர்த்து நின்ற போதினும்,

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே

துச்சமாக எண்ணி நம்மைச் தூறுசெய்த போதினும்

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே

பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்று விட்ட போதிலும்

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே

இச்சைகொண்டே பொருளெலாம் இழந்துவிட்ட போதிலும்,

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே


௨)

கச்சணிந்த கொங்கை மாதர் கண்கள்வீசு போதினும்,

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே

நச்சைவாயி லே கொணர்ந்து நண்ப ரூட்டு போதினும்,

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே

பச்சையூ னியைந்த வேற் படைகள் வந்த போதினும்,

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே

உச்சிமீது வானிடிந்து வீழு கின்ற போதினும்,

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே

15 comments:

  1. நெஞ்சுக்கு நீதியும் தோளுக்கு வாளும்      நிறைந்த சுடர்மணிப்பூண் பஞ்சுக்கு நேர்பல துன்பங்க ளாம் இவள்      பார்வைக்கு நேர்பெருந்தீ. வஞ்சனை இன்றிப் பகையின்றிச் சூதின்றி      வையக மாந்தரெல்லாம் தஞ்சமென்றே யுரைப் பீர் அவள் பேர் சக்தி      ஓம் சக்தி , ஓம்சக்தி, ஓம்   

    நல்லதும் தீயதுஞ் செய்திடும் சக்தி       நலத்தை நமக்கிழைப்பாள்; அல்லது நீங்கும்" என்றேயுல கேழும்       அறைந்திடு வாய்முரசே சொல்லத்தகுந்த பொருளன்று காண் இங்குச்       சொல்லு மவர்தமையே அல்லல் கெடுத்தம ரர்க்கினை யாக்கிடும்      ஓம்சக்தி, ஓம்சக்தி, ஓம். 

    நம்புவதேவழி என்ற மறைதன்னை        நாமின்று நம்பிவிட்டோம்    கும்பி ட்டேந நேரமும் "சக்தி" யென்றாலுனைக்         கும்பிடுவேன் மனமே .     அன்புக்குந தீக்கும் விடத்துக்கும் நோவுக்கும்          அச்சமில்லாதபடி .     உம்பர்க்கும் மிமபர்க்கும் வாழ்வு தரும்           ஓம்சக்தி, ஓம்சக்தி, ஓம். 

    வெள்ளை மலர்மிசை வேதக் கருப்பொரு            ளாக விளங்கிடுவாய்!      தெள்ளு கலைதமிழ் வாணி நினக்கொரு             விண்ணப்பம் செய்துடுவேன் .      எள்ளத் தனைபபோழு துமபய னின்றி              யிராதென்றன் நாவினிலே       வெள்ள மெனப்பொழி வாய்சக்தி , வேல்சக்தி,              வேல்சக்தி வேல்சக்தி வேல்!

    ReplyDelete
  2. அருமை. அன்புடன்

    ReplyDelete
  3. கீதாக்கா மஹாகவியின் நல்ல பாடல்..இன்றைய தினத்திற்கு!!

    ஸ்ரீராம் கொடுத்திருக்கும் பாடல் மிக மிகப் பிடித்த பாடல். எம் எஸ் பாடியிருப்பதும் மிகவும் ரசித்துக் கேட்பதுண்டு...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வாங்க தி/கீதா! என்னோட மனோநிலைக்கு ஏற்ற பாடலைத் தேர்ந்தெடுத்தேன். :)

      Delete
  4. முண்டாசுக் கவிஞருக்கு அவர் பாடல் சொல்லி அஞ்சலி. சிறப்பு.

    ReplyDelete
  5. மஹாகவியை போற்றுவோம்.
    நல்ல பாடல் தேர்வு.

    ReplyDelete
  6. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. நல்ல பாடலுடன் மஹாகவிக்கு அஞ்சலி செலுத்தியது சிறப்பு. பாரதியாரை மறக்க முடியுமா? நம் நினைவுகளோடு என்றும் தீர்க்கதரிசியாக வாழ்பவர். அவரை எந்நாளும் நாமும் போற்றி வணங்குவோம்.

    தங்கள் உடல் நலம் இப்போது எப்படி உள்ளது.? அதிகம் சிரமமெடுத்து வேலைகள் செய்யாமல் உடல்நலம் பார்த்துக் கொள்ளுங்கள். எனக்கும் இப்போது வலிகள் குறைந்து முக்கால்வாசி குணமாகி வருகிறது. ஆண்டவன் அருளால் முழுவதும் குணமாகி இயல்பாக இருக்க வேண்டிக் கொண்டேயிருக்கிறேன்.தாங்கள் என்னை அன்புடன் அடிக்கடி விசாரித்தமைக்கும், நான் நலமாகி வருவதற்கு பிரார்த்தனைகள் செய்ததற்கு என் மனம் நிறைந்த நன்றிகள். பரஸ்பரம் இந்த அன்பின் வலிமையில், நம் உடல் உபாதை தொந்தரவுகள் நீங்கி, வீட்டிலுள்ளவர்களுக்கு எவ்வித தொந்தரவுகள் தராதபடிக்கு நம் உடல் நலம் தேறி ஆரோக்கியமாக இருந்தால்,அதுவே இறைவன் தரும் ஒரு வரம் இல்லையா.? மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி கமலா. வல்லிக்கு மட்டும் இந்தப் பதிவு அப்டேட் ஆகலை போல. வாட்சப்பில் கேட்டிருந்தாங்க, ஏன் பாரதி நினைவு நாள் பதிவு இல்லைனு. நான் 2 நாட்கள் முன்னரே இன்று காலை ஐந்து மணிக்கு வெளிவராப்போல் ஷெட்யூல் செய்திருந்தேன். கரெக்டா வந்திருந்தது.

      உங்கள் உடல்நிலை குணமடைந்து வருவது பற்றி மகிழ்ச்சி கமலா. தொடர்ந்து பூரண குணம் அடையப் பிரார்த்திக்கிறேன். நீங்க சொல்வது உண்மை தான். இணையத்து நட்புகள் சொந்தம் பாராட்டுவது மன நிம்மதியையும் தைரியத்தையும் அளிக்கிறது. உடல் உபாதைகள் நீங்கினால் நல்லது தான்.

      Delete
  7. அன்பின் கீதாமா,
    மஹாகவியைப் பற்றி நீங்கள் எழுதியது
    என் கண்ணில் படவில்லை.
    என் பிழை தான்.

    எல்லோருக்கும் பாரதி புத்துணர்ச்சி கொடுக்கட்டும். எல்லா நாட்களும் நினைக்க வேண்டியவரை இரண்டு நாட்களுக்கு மட்டும்
    நினைக்கிறேன்.

    நீங்கள் பதிந்திருக்கும் பாடலின் உணர்ச்சி வேகம்
    பள்ளி நாட்களில் சீனப் படஒயெடுப்பின் போது
    மனப்பாடமாகச் சொல்ல வைத்தார்கள்.

    போற்றுவோம் என்னாளும்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வல்லி, உங்களுக்கு இந்தப் பதிவு அப்டேட் ஆகி இருக்காது. அதனால் என்ன, பரவாயில்லை. ரொம்ப தாமதமெல்லாம் இல்லை. இந்தப் பாடல் இப்போதைய கலக்கமான மனோநிலைக்குத் தெம்பு அளிப்பதால் இதைப்பகிர்ந்தேன். வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

      Delete
    2. அடுத்துப் பிள்ளையார் போட்டுட்டேன். முடிஞ்சாப் பாருங்க. அவசரமெல்லாம் இல்லை. :)

      Delete