எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, July 14, 2022

குஞ்சுலு வரப் போகிறதே!

குட்டிக் குஞ்சுலு அவ அம்மாவோட இந்தியாவுக்கு/சென்னைக்கு வந்திருக்கு! ஒரு மாதம் முன்னாடியே பையர் குஞ்சுலுவின் பள்ளி விடுமுறையில் இந்தியா வருவோம் என்றிருந்தார். பின்னர் பயணச்சீட்டு வாங்கி குஞ்சுலுவையும் அவ அம்மாவையும் முன்னாடி அனுப்பி வைச்சிருக்கார். ஒரு மாதமாக அது தன் பயணத்தைப் பற்றிக் கொஞ்சம் கொஞ்சம் சொன்னது எனில் அவங்க அப்பா/அம்மாவும் கூடியவரை அதற்குச் சொல்லிப் புரிய வைச்சிருக்காங்க. திங்களன்று பார்த்தப்போ அதுகிட்டே நாளை இந்தியா கிளம்பணுமே தெரியுமானு தாத்தா கேட்டதுக்குத் தலையை ஆட்டிவிட்டு எங்களைச் சுட்டிக்காட்டி உங்களையும் பார்க்க வருவேன்னு சொன்னது. அவ அப்பாவிடம் இதெல்லாம் புரிஞ்சுக்கறதானு கேட்டதுக்கு முதலில் மடிப்பாக்கம் தாத்தா வீட்டுக்குப் போயிட்டு அப்புறமா ஶ்ரீரங்கம் வரப்போறோம்னு தெரிஞ்சு வைச்சுருக்குனு பையர் சொன்னார்.

உடனேயே என்ன நினைச்சதோ ஓடிப் போய் அங்கே இஸ்திரி போட்டு வைக்கப்பட்டிருந்த ஒரு உடையை எடுத்து எங்களிடம் காட்டியது. ஆரஞ்சு நிற உடை. இதைத் தான் தான் நாளை பயணத்தின் போது போட்டுக்கப் போவதாகவும் சொன்னது. மறுநாள் கிளம்பும் சமயம் பையர் எங்களைக் குழந்தையைப் பார்க்கக்  கூப்பிட்டப்போ ஜம்முனு டிரஸ் பண்ணிண்டு ரெடியா இருந்தது. எங்களைப் பார்த்ததுமே டிரஸ்ஸைக் காட்டி ஒரு தட்டாமாலை ஆடிட்டு உடனே ஓடிப் போய்த் தன்னோட பாக்பேக்கைக் காட்டி அதில் மேலே வைச்சிருந்த பேபியையும் எடுத்துக் காட்டியது. இந்த பேபி தான் அது கூட விமானப் பயணத்துக்கு வரப் போகிறது. மற்றவை எல்லாம் பெட்டிக்குள்ளாக. குஞ்சுலு  இந்த மாதிரி வெளியே போகும்போதெல்லாம் தன்னோட பேபீஸில் இருந்து ஏதேனும் ஒண்ணை மட்டும் தேர்ந்தெடுத்துக் கொண்டு தன்னோடு எடுத்துப் போகும். இன்னிக்கு எந்த பேபினு நாங்க கேட்போம். எடுத்துக் காட்டும்.  தேர்ந்தெடுத்து முடிச்சதும் மத்த பேபீஸைப் படுக்க வைச்சுச் சமாதானப் படுத்திவிடும். 

ராத்திரி படுத்துக்கும்போது எல்லா பேபீஸும் சுத்திப் போட்டுக்கொண்டு கிட்டத்தட்ட அவற்றின் மேலேயே படுத்துக்கும். ஒரு நாள் ராத்திரி ஒரு பேபியைக் காணோம்னு அழுத அழுகை! பின்னர் அங்கேயே இருப்பதை எடுத்துக் காட்டினப்புறமா அந்த பேபியை வாங்கிக் கட்டி அணைத்த வண்ணம் தூங்கினது. 

பையருக்கு இப்போ லீவ் கிடைக்கலை. கிடைச்சாலும் மாசக் கடைசியில் கிளம்பறாப்போல் இருக்கும். குழந்தைக்கு செப்டெம்பரில் தான் பள்ளி துவக்கம். அவங்க நைஜீரியாப் பள்ளியில் எல்லாமே  இங்கிலாந்து வழக்கப்படிக் கல்வி ஆண்டை வைச்சிருக்காங்க. பள்ளியும் ஆங்கிலப் பள்ளி தான்/ ஆகவே பையர் ஆகஸ்டில் லீவ் எடுத்துக்கொண்டோ அல்லது வீட்டிலிருந்து வேலை செய்யுமாறோ ஏற்பாடு பண்ணிக் கொண்டு வருவார். அப்போது அவங்க மூணு பேரும் ஶ்ரீரங்கம் வருவாங்க. பின்னர் மாசக்கடைசியில், "பழைய குருடி! கதவைத் திறடி!" கதை தான். எப்படியோ ஒரு மாசம் கொஞ்சம் வாழ்க்கையில் ருசி இருக்கும்.  எல்லாமே ஓர் அழகான கலைதலில் இருக்கும். சாப்பிடவும்/பால் குடிக்கவும் அமர்க்களம் பண்ணாமல் இருக்கும்னு நம்பறேன். வந்தால் தான் தெரியும். 

31 comments:

  1. குஞ்சுலுவைப் பார்த்துண்டு இருக்கோம்.

    ReplyDelete
    Replies
    1. பிரயாணக் களைப்பு இன்னமும் தீரலை, அம்மா/பெண் இருவருக்கும். சிறிது நேரமே பேசினோம். அதுக்குள்ளே அணில் விளையாட்டு ரொம்பவே மோசமா இருந்ததால் எனக்கு இணையம் இல்லை!: ஒரு வாரமா அணில் மத்தியானங்களில் ஒரே விளையாட்டுத் தான். தொந்திரவு தாங்கலை! :(

      Delete
  2. நல்லா பொழுது போகும் உங்களுக்கு...  பேத்தியும் உங்களை எல்லாம் பார்க்க ஆவலாய் இருப்பார்கள். 

    என்ஜாய்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், இந்தக் கருத்தை இங்கே பார்த்த அடுத்த நிமிடமே காணாமல் போனது! எப்படி? ஏதேனும் ஆவி, பேய் வந்திருக்கோ?

      Delete
  3. சிறுவயதில் வீட்டுக்கு உறவினர்கள் / விருந்தினர்கள் வருகிறார்கள் என்று சொல்லும்போதே ஒரு சந்தோஷம் ஒட்டிக்கொள்ளும் அதே நேரம் 'ஆனால் எத்தனை நாள், கிளம்பி விடுவார்களே'  என்கிற கிலேசமும் சேர, உடனே அம்மாவிடம் 'அவங்க எப்போ கிளம்புவாங்க" என்று கேட்க வைக்கும்!  நான் எதற்குக் கேட்கிறேன் என்று அம்மாவுக்குத் தெரியும் என்றாலும் "அவர்களுக்கு எதிரில் அப்படி கேட்காதே..  தப்பாப்படும்" என்பார்கள்!

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான். ஶ்ரீராம், நானெல்லாம் அசட்டுத்தனமாக அவங்களையே போய்க் கேட்பேன். இதனால் "கீதாவுக்கு அவங்க வீட்டுக்கு யாரானும் வந்தால் உடனே எப்போப் போறீங்க? என்று கேட்பாள். மனசே ஆகாது!" என்பார்கள். புரிய வைக்கவும் தெரியாது. புரிய வைக்கத் தெரிந்தப்போச் சொன்னாலும் ஒத்துக்க மாட்டாங்க.

      Delete
  4. பெண்குழந்தைகள் இயல்பிலேயே பொம்மையை வைத்து தாய்மை உணர்வுடன் விளையாடுகிறார்கள் (ஒரு போமாமி தொலைந்தாலும் அழுகை)  எனபது வியப்பு.  ஆண் குழந்தைகள் எதை வைத்து விளையாடுவார்கள்?

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், சில சமயங்கள் அழுது அழுது முகம் சிவந்து வீங்கிடும். நமக்கோ வயிற்றையே ஏதோ பண்ணும்! கிட்டத்தட்டப் பிள்ளையாருக்கு வேண்டிக்கும்படி இருக்கும். :)

      Delete
  5. எனவே செப்டம்பர் வரை உங்களை வலைத் தளங்கள் பக்கமா தினம் பார்க்க முடியாது... இல்லையா?

    ReplyDelete
    Replies
    1. அப்படி எல்லாம் இருக்காது. மத்தியானங்களில் கொஞ்ச நேரம் வருவேன். அதோடு 25 நாட்கள் தானே இருக்கப் போறாங்க. அதில் வெளியே போகவேண்டிய நாட்கள் பத்து நாட்களாவது இருக்கும். நான் இம்முறை குலதெய்வம் கோயில் தவிர்த்து வேறே எங்கேயும் அவங்களோடு போய் அலைய வேண்டாம்னு இருக்கேன். பார்ப்போம்.

      Delete
  6. குஞ்சுலுவோடு தற்போது அலைபேசியிலும், பிறகு நேரிலும் மகிழ்ச்சியாக இருக்க எமது பிரார்த்தனைகள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி கில்லர்ஜி!

      Delete
    2. வீடியோ காலில் பார்த்தப்போவும் சரி, அப்புறமாப் பார்த்தப்போவும் சரி, குழந்தை ரொம்பவே சோர்ந்து போயிருந்தாள். :( பிரயாணக் களைப்பு, ஜெட்லாக் எல்லாமும் சேர்ந்திருக்கும் போல!

      Delete
  7. வணக்கம் சகோதரி

    தங்கள் பேத்தி வரப்போவதாக கூறியது ரொம்ப சந்தோஷமாக உள்ளது. பேத்தியுடன் பொழுதை மனதில் நிறைவாக சந்தோஷமாக செலவழியுங்கள். பதிவிலேயே உங்கள் சந்தோஷம் புரிகிறது. இப்போது ஒரளவு ஏதேனும் சாப்பிட தொடங்கி விட்டாளா? ஒரு வேளை அங்கிருக்கும் சாப்பாட்டு முறைகள் மாறுதலாக இருக்குமோ? நல்ல ஆரோக்கியத்தோடு, நீண்ட ஆயுளுடன் குழந்தை வளர என் அன்பான ஆசிகள். குழந்தைக்கும், குழந்தையோடு மகிழ்வாக நாட்களை களிக்கப் போகும் தங்களுக்கும் என் மனம் நிறைந்த என் வாழ்த்துகளும். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கமலா. போனமுறை வந்தப்போவே இங்கே உய்யக்கொண்டான் திருமலையின் உஜ்ஜீவனநாதர்./அஞ்சனாக்ஷி அம்மை கோயிலில் பாலாம்பிகை தனியாக் குடி கொண்டிருக்கிறாள் என்கிறார்கள். அங்கே அம்மன் சந்நிதியில் ஜபம் மந்திரித்துக் குருக்கள் கயிறு கட்டுகிறார். குழந்தைகளுக்கென விசேஷமாகச் சொல்கிறார்கள். போனமுறை வந்தப்போவே குஞ்சுலு தன் அப்பா/அம்மாவுடன் அங்கே போய்க் கயிறு கட்டிக்கொண்டு வந்தது. இப்போக் கொஞ்சம் சாப்பாடு பரவாயில்லை என்றே நினைக்கிறேன். சாப்பாடு முறைகள் எதுவும் மாறுதல் எல்லாம் இல்லை. மாட்டுப் பெண் தென்னிந்தியச் சமையல் தான் அதிகம் சமைப்பாள். பிள்ளைக்குத் தான் சப்பாத்தி/சப்ஜி வேணும். அது தனியாகப் பண்ணிடுவாங்க. குழந்தைக்குச் சாதமும் கொடுப்பாங்க.

      Delete
  8. பேரக்குழந்தையை பார்க்கப்போகும் பரவசமும் பரபரப்பும் எழுத்திலேயே தெரிகிறது. இயந்திரமாகக் கழியும் நாட்களில் திடீரென்று மழைச்சாரல் அடிப்பது போல! [ அனுபவம் தான்!!] ஒரு 25 நாட்களை மகிழ்வுடன் கழியுங்கள்!

    ReplyDelete
    Replies
    1. நன்றி மனோ. இந்த வருஷம் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்ந்ததில் இருந்தே யாரானும் வந்து கொண்டு இருக்காங்க. ஆகவே அவ்வளவு சலிப்புத் தெரியலை. ஆனாலும் குழந்தை வருவது தனி மகிழ்ச்சி தான்.கொஞ்சம் உயிரோட்டம் இருக்குமே!

      Delete
  9. குஞ்சுலு வரட்டும்.. குதூகலம் பெருகட்டும்...

    மகிழ்ச்சி..

    ReplyDelete
  10. பேத்தியின் வரவு மகிழ்ச்சி. நாட்கள் நிமிஷமாக பறந்து விடும். இன்னும் நாட்கள் நீடிக்க வேண்டும் என்றும் உள்ளம் சொல்லும்.
    துர்கா உங்களை அவள் பின்னால் ஓடி வர வைப்பாள். கால்வலி எல்லாம் பறந்து போகும்.
    வாழ்த்துகள் துர்கா பாட்டிக்கு.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கோமதி. குழந்தை அப்படி எல்லாம் ஓடுவதில்லை. சொன்னால் கேட்டுக்கும். அவங்க அப்பா/அம்மா பாட்டியைப் படுத்தக் கூடாதுனு சொல்லி வைச்சிருக்காங்க. ஆகவே ரொம்பவெல்லாம் ஆட்டம் காட்டாது. சமர்த்தாக இருக்கும்.

      Delete
  11. குஞ்சுலு உங்களுக்கு மொனாடனஸ் வாழ்க்கையிலிருந்து விடுதலை. குதூகலமாக நாட்கள் செல்ல வாழ்த்துகள்

    ReplyDelete
  12. குஞ்சுலுவின் வருகை உங்களுக்கு மிக்க மகிழ்ச்சியாக இருக்கும் . மகிழ்ந்திருங்கள்.

    ReplyDelete
  13. பேத்தி வருவது பார்த்து மிகவும் சந்தோஷம் அந்த சங்தோஷம் உங்கள் பதிவிலும் அருவி போல் கொட்டுகிறது. உங்களுக்கு வழக்கமான ஒரு வாழ்க்கையிலிருந்து நல்ல மாறுதல். பேத்தி வீடியோவில் பேசியதை வாசிக்கும் எங்களுக்கே மகிழ்ச்சியாக இருக்கிறது எனும் போது உங்களுக்கு எப்படி இருந்திருக்கும் என்று புரிகிறது. சந்தோஷமான பொக்கிஷமான பொன்னான நாட்கள். அனுபவித்திட இறைவன் துணை.வாழ்த்துகள் சகோதரி.

    துளசிதரன்

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், செக்கு மாடு போல் ஒரே பக்கமாகச் சுழன்று கொண்டிருக்கோம். குழந்தை வந்தாளானால் மாறுதலாக இருக்கும். வாழ்த்துகளுக்கு நன்றி.

      Delete
  14. ஆஹா கீதாக்கா எஞ்சாய் எஞ்சாய்!! மாடி! குஞ்சுலு வந்தாச்சே. Count down started! ஸ்ரீரங்கம் வருவதற்கு....அக்கா இப்போவே பர பர ந்னு இருப்பீங்களே குஞ்சுலுவுக்கு என்ன பண்ணித் தரலாம் அவளுக்கு தேங்குழல் பிடித்திருக்குன்னு சொல்லியிருந்தீங்களே போன முறை பண்ணி கொடுத்துவ்ம் விட்டீங்களே. கால் பர பர ந்னு இருக்கும் அக்காவுக்கு. எழுத்தில் நீங்கள் ஓடுவது போல உற்சாகம் கொப்பளிக்கிறது பின்னே இருக்காதா!!!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. ஆமாம்! இம்முறை இதுவரைக்கும் பக்ஷணம் ஏதும் பண்ணலை வீட்டில். நிற்க முடியலை. குழந்தை வரச்சே ஏதேனும் பண்ண முடியுதானு பார்க்கணும். :( மனதில் இருக்கும் உற்சாகம் உடலுக்கும் வரணும்.

      Delete
  15. அக்கா பிசி!!! அது நல்லது. குஞ்சுலுவோடு கதை பேசி பொம்மைகள் பத்தி இங்கு பதிவு வந்து தினம் என்ன செய்கிறது என்று எல்லாம் போடுங்க கீதாக்கா. போன முறையே பொம்மை எதை வெளியில் கொண்டு செல்வது என்றெல்லாம் திட்டமிட்டது மூட் அவுட் வந்தால் எதை கொண்டு செல்லாது என்றும் சொல்லியிருந்தீங்க....நினைவு இருக்கு
    வீடியோ நிகழ்வு பத்தி சொன்னது எல்லாம் ரொம்ப ரசித்தேன் கீதாக்கா...

    எனக்கே வாசிக்க வாசிக்க அத்தனை சந்தோஷம் வருது உங்களுக்கும் மாமாவுக்கும் எப்படி இருக்கும் என்று நினைத்துப் பார்க்கிறேன். உங்கள் கால்வலி போச்!!

    கீதாக்கா...குஞ்சுலுவுக்கும் சந்தோஷமாக இருக்கும்.

    குஞ்சுலூ போகும் வரை நன்றாக அதோடு இருங்கள் வலைப்பக்கம் வர முடியவில்லை என்றாலும் பரவாயில்லை. அவளுடனான பொன்னான நேரத்தை எஞ்சாய்!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. குழந்தை இங்கு வரும்போது உடல் நலத்தோடு இருக்கணும்னு வேண்டிக்கொண்டிருக்கேன். சமைச்சுப் போடணும். இப்போவும் நான் தான் சமைக்கிறேன் என்றாலும் குழந்தை வரும்போது நல்லபடியாகப் பொழுது கழியணும். வலைப்பக்கம் மத்தியானங்களில் எட்டிப் பார்க்கலாம்னு நினைக்கிறேன். .

      Delete